விக்ராந்த் ருத்விகா போட்டோவை பார்த்ததும் “நோ இந்த கேர்ள் வேண்டாம்….”என்றான்.
வேதாந்த் ஏதோ சொல்ல வரவும் வித்யுத் புரிந்துகொண்டவனாய் “ப்ரோ அந்த டைலாக் தான நானே கேட்கறேன்….”என சொன்னவன் விக்ராந்த் பார்த்து “ரீசன்?…”என்று கேட்டான்
“அந்த கேர்ள் வேண்டாம்…”
“ரீசன்?…”
“செட் ஆகமாட்டா?…”
“ரீசன்?….”
“ஆல்ரெடி நான் மீட் பண்ணிருக்கேன்….”என சொல்ல வித்யுத் “இன்ட்ரெஸ்ட்டிங் எங்க உன் பிளாஸ்பேக் சொல்லு பாப்போம்…”என்றான்.
“வெல் நான் ஹைத்ராபாத்க்கு நம்ம கம்பனி கேஸ் விஷயம்மா போயிருந்தப்ப கோர்ட்ல….”என்றவன் அன்று நடந்ததை அவர்களிடம் சொல்ல தொடங்கினான்…
அன்று…
விக்ராந்த் அவர்களுடைய கம்பனிக்கு அகைண்ஸ்ட்டாக கோர்ட்டில் ஒரு கேஸ் பைல் செய்திருக்கவும் அது சம்மந்தம்மாக ஹைதராபாத் கோர்ட் சென்றிருந்தவன் வந்த வேலை முடிந்தது அவன் வந்திருப்பதை கேள்வி பட்டு அங்கிருந்த லாயர்ஸ் அவர்களுடைய ஜூனியர்ஸ் எல்லாம் மீட் செய்து பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தான் கோர்ட் வாசலில் திடீரென மீடியாவினர் கையில் கேமராவுடன் சூழ்ந்து கொண்டனர்..
அதை கவனித்த விக்ராந்த் தன் பக்கத்தில் நின்றிருந்தவனிடம் “எதாவது சென்சேஷ்னல் கேஸா?….”என்று கேட்க
“இல்ல ஸார் லேண்ட் அப்யூஸ் கேஸ் தான்….”
விக்ராந்த் சிரித்தவன் “நார்மல் கேஸ் தான…. எதுக்கு இவ்வளவு இம்போர்ட்டண்ட்ஸ்… செலபிரட்டி வர்றாங்களா?….”என்று கேட்க
“இல்ல ஸார் நாயக் பேமலிக்கு அகைன்ஸ்ட்டா இந்த கேஸ் பைல் பண்ணிருக்காங்க….”என ஒரு அட்வகேட் சொல்லிகொண்டிருக்கும் போதே காஸ்ட்லி கார் ஒன்று வந்து நிற்க உடனே இனிப்பை மொய்க்கும் எறும்புகள் போல மீடியாவினர் அந்த காரை சூழ்ந்து கொண்டனர்.
அதிலிருந்து ஸ்டைல்லாய் இறங்கினாள் ருத்விகா நாயக்…. ரெட் கலர் கோர்ட் அணிந்து ஸ்டைல்ளாய் அதேசமயம் கெத்தாய் தெரிந்தவள் கண்ணில் மாட்டியிருந்த கூலரை தலைக்கு மேலே ஏற்றிவிட்டு காரில் சாய்ந்து நின்று போஸ் கொடுத்தாள்..
பிளாஸ்லைட் வெளிச்சம் அவள் கண்களை டிஸ்டர்ப் செய்யவில்லை…. எல்லா பக்கமும் திரும்பி நின்று போஸ் கொடுத்தவள் கேமராக்கள் போட்டோ எடுத்ததும்
“இட்ஸ் இன்னாப்… எல்லாரும் என் போட்டோ கிடைச்சதுல்ல… ட்ரோல்லிங் பண்ண சோசியல் மீடியால என்னை ட்ரெண்டிங் பண்ண இந்த போட்டோஸ் போதும்ல… “என சிரித்துகொண்டு கேட்டவள் முகம் அப்படியே இறுக “இடியட்ஸ்….”என்று திட்டி விட்டு மீண்டும் கண்ணாடியை அணிந்து கொண்டவள் வேக வேகமாய் அதேசமயம் தன்னுடைய ஆட்டிடுயுட்டையும் காட்டும் விதமாய் அவள் நடந்து செல்ல அவள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியமால் உதய் தான் ஓடினான்.
விக்ராந்த் ருத்விகாவை பார்க்கும் பொழுது இன்ட்ரெஸ்ட்டிங்காக இருக்க அவளுடைய கேஸ் தான் அடுத்தது என்று தெரிந்ததும் தன்னுடைய வேலை முடிந்ததும் கிளம்பாமல் மீண்டும் கோர்ட்டுக்குள் சென்றான்..
ருத்விகா கால் மேல் கால் போட்டு தளர்வாய் சாய்ந்து அமர்ந்து இருந்தவள் ஜட்ஜ் வரும் போது கூட எல்லாரும் எழுந்து அவருக்கு ரெஸ்பெக்ட் கொடுக்க அவள் அப்படியே திமிராய் தான் அமர்ந்து இருந்தாள்… எழுந்திரிக்கவில்லை…
ஜட்ஜ் அவளை ஒரு பார்வை பார்த்தவர் டவாலியிடம் “டுடே இந்த பொண்ணோட கேஸ் தானா?….”என்றார்
“ஆமா ஸார்…. ஜட்ஜ்மெண்ட் மட்டும் அவங்களுக்கு சாதகமா வரலன்னா உங்க இடத்துக்கு இன்னொருத்தர் வருவாங்க….”என டவாலி அவருக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் சொல்லவும் ஜட்ஜ் அதிர்ந்து பார்க்க “நான் சொல்லுல ஸார் ஆல்ரெடி ரெண்டு ஜட்ஜ் அவங்க மிரட்டல்ல தான் வேற கோர்ட்க்கு மாறுனாங்க…. நீங்க தேர்ட்…”என்று தனக்கு தெரிந்ததை சொன்னான்..
அதில் ஜட்ஜ் முகம் மாற விசாரிக்க தொடங்கினர்… இரண்டு பக்க தரப்பினர் வக்கீலும் வாதாடினர்..
ருத்விகா கம்பனி நிலத்தை மோசடி செய்தது தெளிவாக தெரிந்தது.. ஆனால் அவளுடைய தரப்பு அட்வகேட் எவிடென்ஸ் எல்லாம் பக்காவா ரெடி செய்து அவள் ஏமாற்றவில்லை என்று வாதடினார்.
எதிர்தரப்பிலும் ஏமாந்தற்கான எவிடேன்ஸ் எல்லாம் கொடுக்க ஜட்ஜ் திமிராய் அமர்ந்து இருந்த ருத்விகாவை பார்த்தார்..
அவள் அவர் பார்வைக்கு எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அமர்ந்து இருக்க அந்த ஜட்ஜ் அவளை விட ஈகோ பர்ஸன் போல “என்னை இந்த பொசிஷன்ல இருந்து தூக்கிடுவியா நீ….எவ்வளவு பெரிய ஆளா வேணா இருக்கலாம் அண்ணா ஆனா இந்த கோர்ட்டுக்குள்ள இல்ல…”என தனக்குள் சொல்லிக்கொண்டவர் தீர்ப்பை ருத்விகாவிற்கு எதிராக மாற்றி எழுதினார்..
அதில் கோபமானவள் ஜட்ஜ் எழுந்து வெளியில் செல்லும் பொழுது “ஹேய் மிஸ்டர்…”என்று கூப்பிட அதில் அவர் திரும்பி பார்க்கும் பொழுது கொஞ்சம் கூட யோசிக்காமல் காலில் போட்டிருந்த ஹீல்சை கழட்டியவள் ஓங்கி அவரை நோக்கி வீச நல்லவேளை அவர் நகர்ந்து கொண்டதில் அவர் பக்கத்தில் இருந்த கண்ணாடி ஜன்னல் மீது பட அவள் வீசிய வேகத்தில் ஹீல்ஸ்ம் பெரியதாக இருக்க கண்ணாடி உடைந்து விழுந்தது.
ஜட்ஜ் நெஞ்சில் கைவைத்துகொண்டார்… அவருடைய ஹார்ட் வேகமாய் துடித்தது…. இதுபோல் அவருக்கு ஒருநாளும் நடந்தது கிடையாது..
அவர் அதிர்ந்து பார்க்க சுற்றி இருந்த எல்லார் முகத்திலும் அதே அதிர்ச்சி தெரிந்தது…
ருத்விகா பொறுமையாக அவர் அருகில் நடந்து சென்றவள் “ஜட்ஜ்ன்னா காட்ன்னு நினைப்பா நீ தீர்ப்பு கொடுத்துட்டா அதை மாத்த முடியாதா….”என்றவள் சொடக்கிட்டு “அந்த லேண்ட் திரும்பவும் என் கைக்கு வரும்…. அண்ட் யூ குளோஸ்….”என்று கையை காற்றில் வெட்டுவது போல் காட்டியவள் திரும்பி உதய் பார்க்க அவன் பார்வையிலேயே புரிந்துகொண்டவன் அருகில் வந்து அவள் எரிந்த ஹீல்ஸ் எடுத்து அவள் கால் பக்கத்தில் வைக்க போட்டுகொண்டவள் அந்த ஜட்ஜை அழுத்தம்மாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள்..
தன்னை கடந்து செல்லும் போது ஸ்டைல்ளாய் முடியை ஒதுக்கிவிட்டு சென்றவளை விக்ராந்த் அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்..
அன்றைய நாளை நினைவுபடுத்தி விக்ராந்த் சொல்லிக்கொண்டிருக்க வேதாந்த் தளர்வாய் சேரில் சாய்ந்து கொண்டவன் “இன்ட்ரெஸ்ட்டிங் அப்பறம் என்னாச்சு?….”என்று கேட்க
“நான் ஸ்டோரி சொல்லுல… ப்ரோ அந்த கேர்ள் உனக்கு செட் ஆகமாட்டா… ரெண்டு பேரும் பயர் டைப்….”என்றான்.
“ம்ம் இதே பாயிண்ட் தான் நானும் சொல்றேன்…”என்ற வித்யுத் வேதாந்த் தோளில் கைவைத்து ‘”ப்ரோ நீங்க கொஞ்சம் இல்ல ரொம்பவே ரஃப் கேரக்டர் உங்களுக்கு ஸ்வீட்டான சைலன்ட் கேர்ள் தான் மேட்சிங்கா இருக்கும்…. எனக்கும் அந்த மாதிரி சிஸ்டர் இன் லா தான் வேணும்….”என்றான்
விக்ராந்த்தும் “மாம் டேட் அவங்க லைப்ல எப்படி இருந்தாங்கன்னு பார்த்துட்டு தான் சொல்றேன்…. உன் கேரக்டர்க்கு அந்த கேர்ள் செட் ஆகமாட்டா….”என்றான்
“ரெண்டு பேரும் பேசிட்டிங்களா….”
“ப்ரோ…..”
“கைஸ் நான் ஒன்னும் அவங்க கூட சேர்ந்து வாழ மேரேஜ் பண்ணிக்க போறது கிடையாது….”என வேதாந்த் சொல்ல இருவரும் அதிர்ந்தனர்.
“சேர்ந்து வாழ மேரேஜ் பண்ணிக்க போறது இல்லன்னா அப்பறம் எதுக்கு மேரேஜ் பண்ணிக்க போற ப்ரோ….”என்று விக்ராந்த் கேட்க
“இட்ஸ் ஜஸ்ட் டீல்….”என வேதாந்த் சொல்லவும் வித்யுத் திருத்திருவென விழித்தவன் “டீலா ப்ரோ என்ன சொல்றிங்க நீங்க…”என்றான்..
“எஸ் நான் அவளை மேரேஜ் பண்ணிட்டு சந்தோசமா சேர்ந்து வாழபோறது கிடையாது….என்னோட மேரேஜ் இட்ஸ் ஜஸ்ட் எ டீல்…நான் இந்த மேரேஜ்ல நிறைய பிளான் வச்சிருக்கேன் நாயக் பேமலிகூட டீல் போட்டது கூட அதுக்காக தான்… எனக்கு தேவை நாயக்கோட டாட்டர் அவ சைலன்ட் டைப்போ இல்ல வைலன்ட் டைப்போ ஐ டோன்ட் கேர்….”என்றவன் வாட்சில் டைம் பார்த்து விட்டு “இட்ஸ் டைம் டூ ஸ்லீப்… போய் தூங்குங்க… குட் நைட்….”என்றவன் அவ்வளவு போதையிலும் நிதானமாக நடந்து செல்ல விக்ராந்த் “ப்ரோ என்ன சொல்றான் மேரேஜ் பண்ணிக்க போறான் பட் சேர்ந்து வாழ போறது இல்லையா… வெறும் டீல் மேரேஜ் தானா?…”என்று சொல்ல
“அதைத்தான அவரும் சொன்னாரு….”என்ற வித்யுத் வேதாந்த் கொடுத்த ஷாக்கில் அடித்த போதை எல்லாம் இறங்கி விடவும் மறுபடியும் பாட்டில் எடுத்தவன் வாயில் சரித்தான்..
காலை சூரியன் மெல்ல மேகத்தின் போர்வைக்குள் இருந்து வெளியில் வர அந்த நாள் அழகாய் ஆரம்பம் ஆனது…
ஹைதராபாத்…
நாயக் ஹவுஸ்….
கார்டனில் போட்டிருந்த சேரில் அமர்ந்து ருத்விகா லேப்டாப் பார்த்துக்கொண்டிருக்க அவளுடைய காலுக்கு பனிப்பெண் நெயில்பாலிஷ் வைத்துக்கொண்டிருந்தாள்…
அப்பொழுது வீட்டிற்குள் இருந்து சிரஞ்சீவியும் சுகன்யாவும் வந்தனர்….
சுகன்யா “அவ கோபப்பட போறா பொறுமையா பேசுங்க….”என்று சொல்ல
“அவ கோபப்பட்டா நான் பயந்திடுவன்னா… நான் அவளுக்கே அப்பா….”என்று சொன்னவர் அவளை நோக்கி முன்னாடி இரண்டு அடி எடுத்து வைத்திருப்பார் ருத்விகா பணிப்பெண் கன்னத்தில் அறையவும் அதிர்ந்து அப்படியே நின்றிவிட்டார்..
பனிப்பெண் அடிவாங்கியதில் கண்கள் கலங்க கன்னத்தில் கைவைத்து கொண்டு அவளை பார்க்க அவளோ தன்னுடைய கால் நகத்தை பார்த்தாள்..
அவள் காலட்டியதில் பனிப்பெண் தவறுதலாக நெயில் பாலிஷஷை அவள் விரலில் அப்ளை செய்திருந்தார்… அதற்கு தான் கோபத்தில் அவர் கன்னத்தில் அடித்து இருந்தாள்..
“ஒரு சின்ன வேலை அதைகூட ஒழுங்கா செய்ய மாட்டியா… துடைச்சு விடு….”என்று மிரட்டளாய் சொல்ல அவளும் டிஷு பேப்பர் எடுத்து அவள் காலில் துடைத்துவிட்டார்..
“கோபமா இருக்கா போல… இந்த டைம்ல போய் பேசுனா இன்னும் கோபம் அதிகமாகி அப்பான்னு கூட பார்க்க மாட்டாளே….”என தனக்குள் சொல்லிக்கொண்டவர் தன் மனைவியை பார்த்து “நீயே பேசு… “என்றார்
“உங்களை எல்லாம்….”என்றவரே ருத்விகா அருகில் சென்றதும் “ருத்து….”என்று கூப்பிட லேப்டாப் பார்த்துக்கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவரை பார்த்தாள்..
No comments yet.