டெவில் -8

Sweety Novel's | 08 Mar 2026 | Share

வித்யுத் ருத்விகாவின் போட்டோவை கூகுளில் சர்ச் செய்து பார்த்துவிட்டு “நோ ப்ரோ இவங்கள நீங்க மேரேஜ் பண்ணிக்காதீங்க….”என்று அலறினான் 

வேதாந்த் அவன் பக்கம் திரும்பி பார்க்காமலே பஞ்சிங் செய்துகொண்டு ‘ரீசன்?…”என்று கேட்க 

“ரீசன் எல்லாம் சொல்ல முடியாது… இவங்க என்னோட சிஸ்டர் இன் லாவா என்னால அக்சப்ட் பண்ணவே முடியாது…”என்றவன் எழுந்து வந்து அவன் கைபிடித்துகொண்டான்.. 

வேதாந்த் அவன் பக்கம் திரும்பி பார்க்க பிடித்திருந்த அவன் கரத்தை தொட்டில் ஆட்டுவது போல் ஆட்டிக்கொண்டே “நோ ப்ரோ வேண்டாம் ப்ரோ….”என்றான் 

“ரீசன்?…” 

‘நான் உங்க பேபி பிரதர் தான… நான் சொன்னா கேட்க மாட்டிங்களா?… “என்று கேட்க 

“ரீசன்?..” 

“ப்ரோ….” 

“ரீசன்?….” 

“ஓகே சொல்றேன்… தட் கேர்ள்….”என்றதும் வேதாந்த் “ருத்விகா நாயக்….”என்று அழுத்தம்மாய் சொல்ல “ம்ம் ருத்விகா நாயக்…. அவங்கள நான் ஆல்ரெடி டூ டைம்ஸ் மீட் பண்ணிருக்கேன்….என் லைப்ல மறக்க முடியாத கேர்ள் அவங்க….”என சொல்ல வேதாந்த் கண்கள் சுருக்கி பார்த்தான்.. 

“அப்படியே பிளாஷ்பேக் போனா ஒரு ஒன் இயர் முன்னாடி….”என்றவன் அந்த நாளை நினைவுபடுத்தி வேதாந்த்திடம் சொல்ல தொடங்கினான்.. 

அன்று… 

ஹைதராபாத்… 

வித்யுத் வெக்கேஷனுக்காக ஹைதராபாத் போயிருந்தான்.. 

பிரண்ட்ஸ்களுடன் மால் சென்றிருந்தவன் கண்ணில் படும் பெண்களை சைட் அடிக்க தவறவில்லை.. 

சாதாரணமான பெண்களை கூட அவன் பார்க்க அவனுடைய பிரண்ட்ஸ் “ஒரு பொண்ணுகூட விட்டு வைக்க மாட்டியா… மாடல் மாதிரி அழகா இருக்க பார்ன் வித் சில்வர் ஸ்புன் ம்ம்ஹும் கோல்ட் ஸ்புன்னு சொல்லலாம் அந்த அளவுக்கு பணக்காரன்…. பொண்ணுங்க உன் பின்னாடி சுத்துவாங்க நீ ஏன்டா இன்னும் கமிட்டடா ஆகாம இருக்க….”என்று கேட்க 

வித்யுத் சிரித்தவன் “கமிட்டட் ஆனா ஒரு கேர்ள் மட்டுமே லவ் பண்ணும் சிங்கிளா இருந்தா கண்ல படற எல்லா கேர்ள்சையும் சைட் அடிக்கலாம்ல….”என்றவன் தன்னை கடந்து சென்ற பெண்ணை பார்க்க 

“டேய் அந்த கேர்ள் அவரேஜ் தான்டா….”என அவன் பிரண்ட் சொல்லவும் 

“சோ வாட்… ஒவ்வொரு கேர்ள்ஸ்ம் டிப்ரன்ட் பியூட்டிஸ்….”என்றவன் அப்பொழுது தான் கவனித்தான்…ஒரு இளைஞன் பரபரப்பாய் ஓடிவந்து ஒரு பெண்ணை இடித்தான்… 

“ஸாரி..”என சொல்லிவிட்டு அவன் சொல்ல அந்த பெண்ணும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து சென்றுவிட்டாள்… 

வித்யுத்தும் அவனுடைய பிரண்ட்ஸும் பேசியபடி அப்படியே நின்று விட அந்த இளைஞன் மறுபடியும் வேறு ஒரு பெண்ணிடம் அதுபோலவே செய்தான். 

அதை கவனித்தவன் அவனை நோக்கி செல்ல அவனோ வேறு ஒரு பெண்ணை பார்த்துவிட்டு தன்னுடைய கைவரிசையை காட்ட அவள் அருகில் சென்றவன் பரபரப்பாய் ஓடிவந்து இடிப்பது போல் இடித்து விட்டு “ஸாரி… ஸாரி…”என்று சொல்ல அவன் பக்கம் திரும்பி பார்த்தாள் ருத்விகா.. 

கண்கள் சுருக்கி பார்த்தவள் “எதுக்கு ஸாரி?…”என்று கேட்க 

“அது உங்க மேல மோதிட்டேன்ல….” 

“தெரிஞ்சு பண்ணுனியா?…” 

“நோ நோ…அவசரத்துல….” 

ருத்விகா சிரித்தவள் “ஹேய் பொய் சொல்லாத தெரிஞ்சு தான இடிச்ச…”என்று கேட்க அவள் சிரித்துக்கொண்டு பேசவும் அவனும் சிரித்தபடி “எஸ்…”என்று தலையாட்டிடி விட 

“ஓகே கமான் அகைன் ட்ரை பண்ணு….” 

“மேடம்…. உங்களுக்கு ஓகேவா….” 

“ட்ரை பண்ணு… ஹக் கூட பண்ணு… ஐ டோன்ட் மைண்ட்….”என அவள் சிரித்துகொண்டே சொல்ல வித்யுத் இதழ் சுழித்தவன் “டிஸ்கஸ்ட்டிங்… என்ன மாதிரியான கேர்ள் இந்த பொண்ணு….”என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன் தன்னுடைய பிரண்ட்ஸிடம் “போலாம்…”என்றான் 

வித்யுத் அங்கிருந்து செல்ல ஒரு அடி முன்னாடி எடுத்து வைத்திருப்பான் ஓங்கி அறையும் சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தான். 

ருத்விகா அடித்த அடியில் அவளை அனைக்கலாம் என்று ஆசையாக சென்றவன் தரையில் விழுந்திருந்தான் . 

“இவளா அடிச்சது….”என்று வித்யுத் வாயை பிளந்து கொண்டு ஆச்சிரியம்மாய் பார்க்க மாலில் எல்லாரும் அவளை தான் பார்த்தனர்…. 

கீழே விழுந்தவனை விரல் அசைத்து ருத்விகா எழ சொன்னவள் “ஹவ் டேர் யூ… என்னையே இடிக்கறியா….”என்றவள் மறுகன்னத்திலும் அறைந்து “அழகா இருந்தா சைட் அடிக்கலாம் பட் டச் பண்ணுனணும் நினைச்சா….”என்று அழுத்தம்மாய் சொல்லி நிறுத்தியவள் ஹீல்ஸ் காலால் அவன் காலை மிதிக்க வலியில் அவன் கத்தும் சத்தம் அந்த மால் எங்கும் எதிரொலித்தது… அவளை வித்யுத் அதிர்ந்து பார்த்துகொண்டிருந்தான். 

அப்பொழுது எப்படி ஷாக்கானானோ இப்பொழுதும் அதை நியாபகப்படுத்தி பார்த்துவிட்டு அதிர்ச்சியுடன் “அந்த கேர்ள் பயர் மாதிரி ப்ரோ…. வேண்டாம்….”என்றான் 

வேதாந்த் அவன் பக்கம் திரும்பி பார்த்து “டூ டைம்ஸ் பார்த்திருக்கேன்னு சொன்ன இன்னொரு இன்சிடென்ட்?…”என்று கேட்க 

“மறந்துட்டீங்களா ஒன்ஸ் நாம ரெண்டு பேரும் பப்ல மீட் பண்ணுனமே….” 

‘பப்லயா… ஆல்ரெடி மீட் பன்னிருக்கனா என்ன…. “என சொன்னவன் டவல் எடுத்து வியர்வையை துடைக்க “ப்ரோ உங்களுக்கு நியாபகம் இல்லையா?…”என்றான்.. 

வேதாந்த் “இல்ல….”என்பது போல் தலையசைக்கவும் “என்ன ப்ரோ… எப்படி உங்களை கிஸ் பண்ணுன அந்த கேர்ள் மறந்திங்க?…”என்று கேட்க “அந்த மொமன்ட் நான் நியாபகம் வச்சுக்குற அளவுக்கு இம்போர்ட்டண்ட் கிடையாது…”என்றான் 

“ஓகே விடுங்க.. இப்போ நான் சொல்றதை கேளுங்க ருத்விகா நாயக் வேண்டாம்…”என வித்யுத் சொல்ல… 

வேதாந்த் அவன் தோளில் கைவத்தவன் “வித்யுத் ஆக்சுலி ஐ லைக் திஸ் கைண்ட்டாப் ஆட்டிடுயூட் போல்ட் கேர்ள்ஸ்….”என்றவன் தன் தம்பி ஷாக்காவதை கவனித்தும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் குளிக்க சென்றான்.. 

“என்ன ப்ரோ இப்படி சொல்லிட்டு போறாரு….”தலையை சொரிந்தவன் பின் திரும்பி பார்த்து “பட் ப்ரோ ஐ வாண்ட் சாப்ட் அண்ட் ஸ்வீட் சிஸ்டர் இன் லா….”என்று கத்த வேதாந்த் அவன் பக்கம் திரும்பி பார்த்தவன் “அவுட்…”என்று சொல்லி வெளியில் கைகாட்டி விட்டு குளிக்க சென்றுவிட்டான்… 

நிலாமகள் வானில் உலா வந்து கொண்டிருந்த இரவு நேரம்.. 

வீட்டிற்குள்ளயே இருந்த பார் கவுண்ட்டரில் அமர்ந்து ட்ரிங்ஸ் செய்து கொண்டிருந்தான் விக்ராந்த்.. 

அவனை தேடி வந்தனர வேதாந்த்தும் வித்யுத்தும்…. 

“என்ன ப்ரோ எங்களுக்கு முன்னாடியே வந்துட்ட….”என்று விக்ராந்த் பார்த்து கேட்ட வித்யுத் வேதாந்த் தன்னுடைய பேவரைட் ஒயின் பாட்டில் எடுக்கவும் “ப்ரோ எனக்கும்…. “என்றான். 

வேதாந்த் இரண்டு கிளாஸிலும் ஊற்றியவன் ஒன்றை வித்யுத்க்கு கொடுத்து விட்டு இன்னொன்றை அவன் எடுத்துக்கொண்டவன் சேரில் அமர்ந்து விக்ராந்த் பார்த்தான்… 

அவன் குடிப்பதை பார்க்கும் பொழுதே தெரிந்தது ரொம்பவே அப்சட்டாக இருக்கிறான் என்று… 

“விக்ராந்த் ஏன் அப்சட்டா இருக்க?…”என்று கேட்க நிமிர்ந்து அவனை பார்த்தவன் வெற்று புன்னகை சிந்தி “ஏன் உனக்கு தெரியாதா ப்ரோ…”என்றான் 

“ம்ம் தெரியும்…” 

“தென் வொய் ஆர் யூ ஆஸ்கிங்மீ….” 

வித்யுத் இருவரையும் மாறி மாறி பார்த்தவன் பின் கிளாஸில் இருந்த ஒயினை ஒரே மடக்கில் குடித்தவன் “இப்போ ரெண்டு பேரும் எதுக்கு லவர்ஸ் மாதிரி பேசிக்கறீங்க….”என்றான்.. 

அதில் விக்ராந்த் சிரித்தவன் “வித்யுத் இங்க வா….”என்று கூப்பிட அவனும் அருகில் சென்று “என்ன?…”என்று கேட்க அவன் தலையிலேயே அடித்தவன் “நான் அப்சட்டா இருக்கேன் நீ கிண்டல் பன்றியா….”என்றான். 

அவன் அடித்தது வலித்தது போலவே ரியாக்ஷன் கொடுத்த வித்யுத் “ப்ரோ இந்த விக்ராந்த் என்னை அடுச்சுட்டான்….”என்று கண்ணீரே வராமல் அழுதபடி சென்று வேதாந்த்திடம் கம்பளைண்ட் செய்தவன் அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டான்… 

வேதாந்த் ட்ரிங்ஸ் செய்தவன் தன் மேல் சாய்ந்து இருந்தவன் தலையை வருடிகொடுத்தபடி விக்ராந்த் பார்த்து “அவங்க வந்தது எனக்கும் பிடிக்கல தான்… நீ பார்த்தியா?….”என்று கேட்க 

“ம்ம்ஹும் அவங்க வந்திருக்காங்கன்னு பாட்டி சொன்னதும் இங்க வந்துட்டேன்…”என்ற விக்ராந்த் பாட்டில் காலியாகி விடவும் மற்றொரு பாட்டிலை கையில் எடுத்தவன் கிளாஸில் ஊற்றி குடிக்க தொடங்கினான்.. 

வித்யுத் வேதாந்த் தோளில் இருந்து தலையை மட்டும் நிமிர்த்தி திரும்பி பார்த்தவன் “நீங்க யாரை பத்தி பேசறீங்க?…”என்று கேட்க 

இப்பொழுது இருவரும் அவனை முறைப்பது போல் பார்க்கவும் “ஓகே நான் எதுவும் கேட்கல….”என்றவன் மறுபடியும் வேதாந்த் தோளில் சாய்ந்து கொண்டான்.. 

வேதாந்த் அவனை விலகி விட்டு “விக்ராந்த்கிட்ட பேசணும்…”என சொல்ல அவனும் புரிந்துகொண்டவனாய் பார் கவுண்ட்ருக்கு பக்கத்திலேயே பிரிட்ஜ் இருக்க அதில் பியர் இருக்கிறதா என்று பார்க்க சென்றான். 

“விக்ராந்த் அவங்க இப்போ எதுக்காக வந்திருக்காங்கன்னு தெரியல பட் பாட்டி வித்யுத்க்கு அவங்கள இங்கிருந்து போக சொல்றதுக்கு விருப்பம் இல்ல….கொஞ்சநாள் இருக்கட்டும்…. நீ அப்சட் ஆகாத….”என்றான்.. 

“அவங்க இங்க இருக்கிறது எனக்கு பிடிக்கல கோபம் வருதுங்கறதை விட அவங்கள எப்படி எனக்கு பேஸ் பன்றதுன்னு தெரியல ப்ரோ….” 

“நீ எதுக்கு அவங்ககிட்ட பேசணும்.. இக்னோர் பண்ணிடு…”சாதாரணமாய் சொல்ல விக்ராந்த் சிரித்தவன் “ப்ரோ நான் விக்ராந்த் வேதாந்த் கிடையாது எந்த எமோஷ்னல் பாண்டிங்கும் இல்லாம இருக்கிறதுக்கு….”என சொல்ல வேதாந்த் முகம் இறுகியது.. 

வித்யுத் கோபம்மாய் பியர் பாட்டிலை டேபிளில் மீது வைத்தவன் “ப்ரோக்கு எந்த எமோஷனல் பாண்டிங்கும் இல்லன்னு நீ எப்படி சொல்லலாம்… ப்ரோக்கு என்மேல பாசம் அதிகம் அவரோட எமோஷனல் பாண்டிங் நான் தான்…. டோன்ட் சே அகைன்… “என்றான் மிரட்டுவது போல்.. 

விக்ராந்த் அவன் தலையில் தட்டியவன் “ஓகே இந்த டாபிக் பத்தி பேச வேண்டாம்…”என்றவன் பின் நியாபகம் வந்தவனாய் வேதாந்த் மேரேஜ் பற்றி பேச வித்யுத் தன்னுடைய போனில் ருத்விகா போட்டோவை காட்டி “ப்ரோ இவங்கள தான் மேரேஜ் பண்ணிக்க போறாரு…”என சொல்ல அவனோ போட்டோவை பார்த்து விட்டு அதிர்ச்சியுடன் “நோ இந்த கேர்ள் வேண்டாம்….”என்றான்.. ( என்னடா எல்லாரும் ருத்விகாவை பார்த்து வேண்டாம்ன்னு சொல்றிங்க…)

    No comments yet.