டெவில் -7

Sweety Novel's | 13 Feb 2026 | Share

வித்யுத் உள்ளே வந்தவரை பார்த்து அதிர்ந்தவன் அப்படியே நின்றுவிட அவந்திகாவும் திரும்பி பார்த்தவள் “இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க….”என தனக்குள் சொல்லிக்கொண்டாள்.. 

நாற்பெத்தெட்டு வயதில் கம்பீரமாய் ஸ்டைல்லாய் உள்ளே வந்துகொண்டிருந்தார் ஜானவி ஸ்ரீகாந்த்.. 

ஸ்லீவ்லஸ் சாரீயில் தூக்கி போட்ட கொண்டையுடன் கண்ணில் கூலிங் கிளாஸ் வேறு விக்ராந்த் சாயல் அவரிடம் இருந்தது… ம்ம்ஹும் அவரை போல தான் விக்ராந்த் பிறந்திருக்கிறான் என்று சொல்லும் அளவுக்கு இருந்தார்… 

டிவோர்ஸ் வாங்கியப்பின் இந்த வீட்டிற்கு வராதவர் இப்பொழுது எதற்கு வந்துருக்கிறார் என்று இருவரும் அதிர்ந்து பார்த்தனர்.. 

ஜாணவி உள்ளே வந்தவர் அவந்திகாவை முறைத்து பார்த்து விட்டு சென்று சோபாவில் அமர்ந்தவர் கால் மேல் கால் போட்டுக்கொண்டார்.. 

அவர் பார்வை இப்பொழுது தன்னுடைய இளைய மகன் வித்யுத் மீது பதிந்தது…தன்னை பார்த்ததும் சந்தோசபடாமல் ஷாக்கில் உறைந்து இருப்பவனை பார்த்து அவர் இதழில் வெற்று புன்னகை தோன்றியது.. 

ஆனால் அடுத்த நொடியே முகம் இறுக “மரியம்….”என்று அவர் கத்திய சத்தத்தில் பணிப்பெண்களின் ஹெட் மரியம் வேகமாய் வந்து அவர் முன்னாள் நின்றார்.. 

ஜானவி முகத்தை பார்த்ததும் அவர் முகம் மாறியது… பயத்துடம் அவரை பார்த்தவர் “மேடம்….”என சொல்ல 

“கெஸ்ட் வந்தா அவங்கள கவனிக்கணும்ன்னு தெரியாதா…”என்று திட்ட மரியம் தலைகுனிந்தவர் “ஸாரி மேடம்…”என்றவர் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். 

அந்த கேப்பில் அவந்திகா வித்யுத்திடம் “இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க?….”என்று கேட்க 

அவனோ தன் அம்மாவையே பார்த்தபடி நின்றிருந்தவன் “தெரியல….”என்றான்.. 

தண்ணீர் குடித்ததும் ஜானவி வீட்டை பார்வையால் அளந்தவர் பின் தன் மகனிடம் “எப்படி இருக்க வித்யுத்… விக்ராந்த் எங்க?…”என்று கேட்க 

அவனோ அவர் கேட்டதற்கு பதில் சொல்லாமல் “மாம் நீங்க எதுக்கு இங்க வந்திருக்கீங்க?…”என்று கேட்க 

“உன்னோட மாம் நான் எதுக்காக வந்திருக்கீங்கன்னு கேட்கற….” 

வித்யுத் அவந்திகாவை ஒரு பார்வை பார்த்தவன் பின் ஜானவியை பார்த்து “மாம் டிவோர்ஸ்க்கு அப்பறம் நீங்க வரவே இல்ல… இப்போ வந்திருக்கீங்க… எதாவது ப்ராப்லம்மா?…”என்றான் 

“ஏன் எதாவது ப்ராப்லம் இருந்தா தான் நான் இங்க வரனுமா என்ன…. ஓகே எப்படி இருக்க…”என்று கேட்க 

“ஐயம் பைன்….”என்றவன் அவர் கேட்ட கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் பதில் சொன்னான். 

இப்பொழுது ஜாணவி அவந்திகாவை பார்த்தவர் “நீ எப்படி இருக்க…”என்று கேட்க இதழ் 

சுழித்தவள் வேண்டா வெறுப்பாய் பதில் சொல்வது போல ‘”நல்லா இருக்கேன்….”என்றாள்.. 

அவர்கள் பேசிகொண்டிருந்த நேரத்தில் வெளியில் கார் சத்தம் கேட்க சில நொடிகளில் வேதாந்த் லட்சுமி இருவரும் உள்ளே வந்தனர். 

உள்ளே வந்தவர்கள் ஜாணவியை பார்த்ததும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.. 

வேதாந்த் “இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க?….”என யோசனையாய் நெற்றியை தேய்த்தவன் வித்யுத் பார்த்து விழியசைவில் கேட்க அவனோ இதழ் சுழித்து கியூட்டாக ரியாக்ஷன் கொடுத்தவன் “எனக்கு தெரியல ப்ரோ….”என்றான் சைகையில்.. 

லட்சுமி ஜாணவியை பார்த்ததும் முகம் மலர்ந்தவர் அருகில் செல்ல ஜாணவி கால் மேல் கால் போட்டு திமிராய் அமர்ந்து இருந்தவர் இப்பொழுது எழுந்து நின்று லட்சுமி பாட்டியை பார்த்து மென்னகை சிந்தியவர் 

“எப்படி இருக்கீங்க அத்தை…”என்றவர் அவரை அனைத்துகொண்டார்… 

அவரும் அவரை அணைத்து விடுவித்தவர் “நான் நல்லா இருக்கேன் ஜாணவி நீ எப்படி இருக்க….”என்று கேட்க “நல்லா இருக்கேன்….”என்றவர் இப்பொழுது வேதாந்த்தை பார்த்தார்.. 

கோர்டை கழட்டிய வேதாந்த் சோபாவில் சாய்ந்து அமர்ந்தவன் ஜாணவி ‘எப்படி இருக்க வேதாந்த்…. வெல் கம்பனி எப்படி ரன்னாகிட்டு இருக்கு?….”என்று கேட்க 

இதழ் சுழித்து தனைக்கே உண்டான திமிருடன் சிரித்தவன் “ஐயம் குட்.. கம்பனியை மட்டுமில்ல என் பிரதர்ஸ்கூட நான் நல்லாவே பார்த்துக்கறேன்….”என்றான்.. 

அவன் சொன்னத்தில் அவர் முகம் இறுக வேதாந்த் அவந்திகாவை பார்த்தவன் “என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க…. நீங்க போலாம்….”என சொல்ல 

“அது… இவங்க…”என அவள் முடிக்கவில்லை “நான் போலாம்ன்னு சொன்னேன்….”என்று அவன் அழுத்தி சொல்லவும் அவந்திகா “இந்த வீட்ல எனக்கு எந்த ஒரு ரெஸ்பெக்ட்டும் இல்ல….”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் அங்கிருந்து தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டாள்.. 

அவள் சென்றதும் வேதாந்த் “உங்களுக்கும் சர்கார் பேமலிக்கும் எந்த சம்மந்தமும் இல்ல இப்போ எதுக்காக வந்திருக்கீங்க?….”என்று கேட்க 

“என்ன பேசற வேதாந்த் அதெப்படி எனக்கும் சர்கார் பேமலிக்கும் எந்த சம்மந்தமும் இல்லன்னு சொல்வ இந்த சர்கார் பேமலில டுவேன்ட்டி பைவ் இயர்ஸ் என்னோட ஜர்னி இருக்கு… இந்த பேமலிக்கு ரெண்டு வாரிசு கொடுத்து இருக்கேன்…. என் லைப்பையே இங்க தொலைச்சு இருக்கேன்….”என்றார் கோபமாய்.. 

“தேவையில்லாம பேசாதீங்க…. எதுக்காக இப்போ இங்க வந்திருக்கீங்க….” 

“எனக்கு எல்லா ரைட்ஸ்ம் இருக்கு….சர்கார் குரூப் ஆப் கம்பனில ஒன் ஆப் த ஷேர் ஹோல்டர்…..’ 

“ஷெட் ஹோல்டர்ன்னா நீங்க கம்பனிக்கு தான் வரணும்… இங்க எதுக்காக வந்திங்க….”வேதாந்த் கேட்க லட்சுமி “வேதாந்த் ஜாணவி விக்ராந்த் வித்யுத்தோட அம்மா அவளுக்கு இங்க இருக்க எல்லா ரைட்ஸ்ம் இருக்கு….”என்றார். 

“பாட்டி…” 

“வேதாந்த் இங்க எனக்கும் முடிவு எடுக்கிற ரைட்ஸ் இருக்குல்ல….”என்றவர் ஜாணவியை பார்த்து “நீ எப்போ வேணும்ன்னாலும் இங்க வரலாம் ஜாணவி….”என்றார்.. 

“எப்போ வேணும்ன்னாலும் இல்ல அத்தை இனி நான் இங்க தான் இருக்க போறேன்…. என்னை இங்கிருந்து யாரும் வெளில போன்னு சொல்ல முடியாது….”என்றவர் தான் எடுத்து வந்திருந்த டாக்குமென்ட்டை காட்டி “மிஸ்டர் ஆதிநாத் டிவோர்ஸ் பண்ணும் போது அவரோட பிராப்பர்ட்டிஸ் எல்லாத்துலயும் எனக்கு டுவெண்ட்டி பர்ஸ்ன்டேஜ் கொடுத்து இருக்கார் சோ நான் இங்க இருக்க எனக்கு எல்லா ரைட்ஸ்ம் இருக்கு….”என்றார். 

வேதாந்த் “ஓ ரியலி….”என்றவன் ஜாணவி திரும்பி பார்த்து “அப்கோர்ஸ்….”என்றான். 

“பட் நீங்க இங்க இருக்க….”என்றவன் மேற்கொண்டு பேசும் முன் வித்யுத் அவன் அருகில் சென்று கைபிடித்து “ப்ரோ ப்ளீஸ்….”என்றான். 

வேதாந்த் அவனை பார்க்க விழியசைவில் “எனக்காக….ப்ளீஸ்….”அவன் கெஞ்சலாய் சொல்ல கோபத்தில் கைகள் மடக்கி சோபாவில் அழுந்த குத்தியவன் அங்கிருந்து செல்ல வித்யுத் தன்னுடைய அம்மாவை ஒரு பார்வை பார்த்தவன் தன் அண்ணனை பின் தொடர்ந்து சென்றான். 

அவர்கள் சென்றதும் லட்சுமி ஜானவி “என்னாச்சு?….”என்று கேட்க அவரோ இவ்வளவு நேரம் திமிராய் பேசிகொண்டிருந்தவர் இப்பொழுது பதட்டத்துடன் “எனக்கு என் பசங்கள காப்பாத்த வேற வழி தெரியல அத்தை… அதான் திரும்பவும் இங்க வந்திருக்கேன்….”என சொல்ல லட்சுமி அதிர்ந்து பார்த்தார்.. 

வேதாந்த் அறைக்குள் சென்ற வித்யுத் அவன் ஷர்ட்டை கழட்டி விட்டு கோபத்தை குறைக்க பால்கனியில் இருந்த பஞ்சிங் பேக்கில் பஞ்சிங் செய்ய தொடங்கி இருக்கவும் அவன் அருகில் சென்றான். 

“ப்ரோ நீங்க ஏன் மாம் இங்க இருக்க வேண்டாம்ன்னு நினைக்கறீங்கன்னு எனக்கு புரியுது…”என்று வித்யுத் சொல்ல அவன் பக்கம் திரும்பி பார்த்தவன் “அப்பறம் எதுக்கு என்னை அங்க ஸ்டாப் பண்ணுன…. விக்ராந்த் அவங்கள இங்க பார்த்தா அப்பக்ட்டாவான்னு உனக்கு தெரியும்ல….”என்றான் 

“ஐ நோ ப்ரோ… என்னால அவங்கள இங்கிருந்து அனுப்ப முடியாது…. அவங்க என்னோட மாம்…..’ 

வேதாந்த் அவனை அழுத்தம்மாய் பார்த்தவன் “அவங்க என்னை விட உனக்கு இம்போர்ட்டண்ட்டா வித்து…”என்று கேட்க கொஞ்சம் கூட வித்யுத் யோசிக்கவில்லை மறுத்து தலையசைத்தவன் “எனக்கு உங்களை விட யாரும் இம்போர்ட்டண்ட் இல்ல ப்ரோ….”என்றான். 

அதில் வேதாந்த் கோபம் குறைய மென்னகை சிந்தியவன் கையில் இருந்த பாக்ஸிங் கிளவுசை கழட்டி விட்டு ‘”ரியலி…”என்று கேட்க 

“ட்ருலி….”என்ற சொன்னவன் வேகமாய் சென்று தன் அண்ணனை அணைத்துக்கொண்டவன் “ஐயம் யுவர் பேபி பிரதர் அண்ட் யூ மை பிக் பிரதர்… அண்ட் மை ஹீரோ….”என சொல்ல வேதாந்த் கோபம் குறைந்து இதழில் மென்னகை தோன்றியது… 

“ஓகே விடு….”, 

“முடியாது….” 

“அடிவாங்குவ….” 

“நீங்க என்னை அடிக்கமாட்டிங்க… ஐ நோ யூ வெரி வெல்….” 

‘விடுடா….”என்று சொல்லி அவனை விட்டு விலகியவன் “அவங்க இனி இங்க இருக்க போறாங்கன்னா ப்ராப்லம் வரும்…. “என சொல்ல “இட்ஸ் ஓகே ப்ரோ….நாம மேனேஜ் பண்ணிக்கலாம்….”என்றான் வித்யுத்… அவனுக்கென்ன வேதாந்த் இருக்கிறான் அவன் பார்த்துக்கொள்வான் என்ற தைரியம்… 

“ஓகே….அவங்க இருக்கட்டும்…ப்ராப்லம் பண்ணுனா நான் என் ஸ்டைல்ல டீல் பண்ணிக்கறேன்….”என சொல்ல வித்யுத் முகம் மலர்ந்தவன் “தேங்க்ஸ் ப்ரோ தேங்க்யூ சோ மச்….”என்றவன் மறுபடியும் வேதாந்த்தை அணைத்துக்கொண்டான்.. 

சில நிமிடங்களுக்கு பின்… 

வேதாந்த் பஞ்சிங் செய்ய வித்யுத் ஸ்டைல்லாய் சோபாவில் சாய்ந்துகொண்டவன் போன் பார்த்துகொண்டே “ப்ரோ எனக்கு ட்ருட் ரிவில் பண்ணுங்க….”என்று கேட்க 

“வாட்?….” 

“டெத்தாகி இப்போ ஏஞ்சலா மாறிட்ட அஞ்சலி நாயக்கை நீங்க எப்படி மேரேஜ் பண்ணிப்பீங்க…”என்றவன் இப்பொழுது வேதாந்த் பக்கம் திரும்பி பார்த்து “டெல் மீ ஹவ் இசிட் பாஸிபில்?….”என்று கேட்டான்.. 

வேதாந்த் இதழ் சுழித்தவன் ‘வித்து நீ வேதாந்த் பிரதர்….”என சொல்ல 

“ம்ம்… எஸ்…”அவனும் தலையாட்டவும் 

“யூஸ் பண்ணு….”என்று நெற்றியை தொட்டு காட்டியவன் “நான் எனக்கும் நாயக் டாட்டருக்கும் அனவுன்ஸ் பண்ண மாதிரி மேரேஜ் நடக்கும்ன்னு தான் சொன்னேன் அஞ்சலி கூட இல்ல….நான் மேரேஜ் பண்ணிக்க போறது அவரோட செகண்ட் டாட்டரை…”என்றான். 

“ஓ அவருக்கு இன்னொரு டாட்டர் இருக்கா?….” 

“ம்ம் ருத்விகா நாயக்….” 

“ருத்விகா நைஸ் நேம்….”என்றவன் கூளில் சர்ச் செய்து பார்த்து விட்டு “நோ…. இவங்க என்னோட சிஸ்டர் இன் லாவா… ப்ரோ நீ மேரேஜ் பண்ணிக்காதீங்க….”என்று அலறினான்..

    No comments yet.