டெவில் -6

Sweety Novel's | 11 Feb 2026 | Share

வேதாந்த் பார்வை ருத்விகா மீது அழுத்தம்மாய் பதிய அவளோ அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் இருந்தவள் “வாட் டிட் யூ ஸே… ஸே அகைன்….”என கேட்க 

வேதாந்த் சிரஞ்சீவியை பார்த்து “எனக்கும் உங்க செகண்ட் டாட்டர்க்கும் அன்னவுன்ஸ் பண்ண டேட்ல மேரேஜ் நடக்கணும்….”என்றான் மிரட்டலாக. 

திமிராய் இதழ் சுழித்து சிரித்த ருத்விகா “நான் உன்னை மேரேஜ் பண்ணிக்கனுமா… முடியாது… என்ன பண்ணுவ?…”என்று கேட்க 

வேதாந்த்தும் திமிராய் அவளை பார்த்தவன் “வெல் அப்போ என்கிட்ட இருந்து வாங்குன செவன்ட்டி பைவ் தௌஸன்ட் கோர்ஸ் திரும்ப செட்டில் பண்ணிடு… அதுமட்டும்மில்ல உன் டேட் அகிரிமென்ட் சைன் பண்ணிருக்கார் எல்லா கம்பனி ஷேர்ஸ் அண்ட் என்னை ஏமாத்துனதுக்கு பெனால்ட்டியா எக்ஸ்ட்ராவா ஒரு பிப்ட்டி தௌசன்ட் கோர்ஸ் தரணும்….”என்று அவன் சொன்னதை கேட்டு சிரஞ்சீவிக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது… 

தலையை பிடித்துக்கொண்டு தடுமாறி விழப்போனவரை தாங்கிப்பிடித்த சுகன்யா “என்னங்க பார்த்துங்க….”என்றார் 

அவன் சொன்னதை எல்லாம் கேட்டு ருத்விகா பயப்படவில்லை “நீ கேட்டது தர முடியாது…”என்றாள்.. 

‘தர முடியாதுன்னா உங்களுக்கு சொந்தமான பிராப்பர்ட்டி எல்லாம் நான் எடுத்துப்பேன்…நாயக் குரூப் ஆப் கம்பனி ஓனர் சிரஞ்சீவி நாயக் எதுவும் இல்லாம நடுரோட்டில நிக்க வேண்டியது வரும்… அதுமட்டும்மில்ல நான் நினைச்சது நடக்கலன்னா….”என்றவன் துப்பாக்கியை அவளின் அம்மா அப்பா பக்கம் குறி வைத்தான். 

ருத்விகா அவனையே பார்க்க லட்சுமி “யாருகிட்ட என் பேரன் முன்னாடி யாரா இருந்தாலும் பணிஞ்சு போய் தான் ஆகணும்….”என்று தனக்குள் சொல்லிக்கொண்ட லட்சுமி தன் பேரனை கர்வமாய் பார்த்தார்… 

ருத்விகா வேதாந்த்தை முறைத்து பார்க்க அவனோ இதழ் சுழித்து “நல்லா திங் பண்ணிட்டு ஆன்சர் பண்ணு….பட் உன்னோட ஆன்சர் மேரேஜ்க்கு ஓகேவா மட்டும் தான் இருக்கனும்….”என மிரட்டலாக சொல்ல “ஹேய் உன்னோட த்ரெட் இன்க்கு எல்லாம் பயப்படற ஆள் நான் கிடையாது…. நான் ருத்விகா நாயக் என்னை யாரும் அடிபணிய வைக்க முடியாது….”என்று திமிராய் சொன்னவள் மேற்கொண்டு பேசும் முன் சுகன்யா அவள் அருகில் சென்று கைபிடித்தார்… 

ருத்விகா அவள் பக்கம் திரும்பி பார்க்க “உன்கிட்ட பேசணும்…வா….”என்றவர் 

‘நான் தான் பேசிட்டு இருக்கேன்ல….”என அவள் சொல்லவும் “ப்ளீஸ் ருத்து வா….”என அவர் கெஞ்சலாய் கேட்கவும் வேதாந்த்தும் “போ… அவங்க சொல்றதையும் கேட்டுட்டு முடிவு பண்ணு….”என்றவன் மீண்டும் அமர்ந்து கால் மீது கால் போட்டுக்கொண்டவன் தன்னுடைய பாட்டியையும் “உட்காருங்க பாட்டி… அவங்க பேமலியா டிஸ்கஷன் பண்ணிட்டு வரட்டும்….”என்றான். 

துப்பாக்கியை ஸ்டைல்லாய் சுழற்றியபடி விசிலடித்தவனையே பார்த்த உதய் “நம்ம மேடம் பத்தி தெரியாம மேரேஜ் பண்ணிக்க டீல் பேசிட்டு இருக்கார்… ம்ம் இவரும் சாதாரண ஆள் கிடையாது…. ரெண்டு டெவில்லும் பர்பெக்ட் மேட்சிங் தான்….”என மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொண்டான். 

ருத்விகாவை தனியாக அழைத்து சென்றனர் சுகன்யாவும் சிரஞ்சீவியும்… அறைக்குள் சென்றதும் ருத்விகா சுகன்யாவிடமிருந்து தன்னுடைய கரத்தை உருவிக்கொண்டவள் “இப்போ எதுக்கு என்னை அங்கிருந்து கூட்டிட்டு வந்திங்க…. அவன் சொல்றதை எல்லாம் நான் கேட்கணுமா….”என்றாள் கோபம்மாய்.. 

“கேட்டுதான் ஆகணும் ருத்து நமக்கு இப்போ வேற வழியில்ல…”என சிரஞ்சீவி சொல்ல இப்பொழுது அவர் பக்கம் திரும்பி பார்த்து முறைத்தாள்.. 

‘கோபபடாத ருத்து நான் சொல்றதை கேளு நான் அவன்கிட்ட செவண்டி பைவ் தௌஸன்ட் கோர்ஸ் கடன் வாங்கியிருக்கேன் டீல் போட்ருக்கோம்… பிஸ்னஸ்ல இப்போ அவன் உதவி இல்லாம நாம எதுவும் பண்ண முடியாது….” 

“அஞ்சலி அக்காவை பணத்துக்காக டீல் பேசியிருக்கீங்க… இப்போ அக்கா இல்லாததால என்னை சேல்ஸ் பண்ண போறிங்களா…” 

அவள் பேசிய வார்த்தைகள் தாங்க முடியாமல் சுகன்யா கோபம்மாய் “ருத்விகா….”என்று கோபமாய் கத்த அவளோ அவருக்கும் அதிகமான கோபத்துடன் “ஷெட்அப்…”என்று கத்தினாள்… 

அவளுடைய கோபத்தை பார்க்கும் பொழுது அவர்களுக்கு பயமாக இருந்தது ஆனால் வேறு வழியில்லாமல் அவளிடம் கெஞ்சினர்.. 

“ருத்து ப்ளீஸ் பணம், பிஸ்னஸ் அதெல்லாம் விடு அந்த வேதாந்த் இந்த மேரேஜ் வச்சு நிறைய பிளான் பண்ணிருக்கான் அதெல்லாம் நடக்கலன்னா அவன் கோபத்துல என்ன வேணும்ன்னாலும் பண்ணுவான்…”என சிரஞ்சீவி சொல்ல 

சுகன்யா அருகில் சென்று அவள் கைபிடித்துக்கொண்டவர் “எங்களுக்கு என்ன ஆனாலும் பரவால்ல ஆனா உன்னை எதாவது பண்ணிட்டா எங்களால தாங்க முடியாது… ஆல்ரெடி நாங்க அஞ்சலியை இழந்துட்டோம் உன்னையும் இழக்க நாங்க தயாரா இல்ல….”என சொல்ல ருத்விகா யோசித்தாள்… 

“அஞ்சலியை கொலை பண்ண சொல்லி சொன்னது சர்கார் பேமலில இருக்கவங்க தான்… எனக்கு அது யாருன்னு தெரியாது….”என அஞ்சலியை கொலை செய்தவன் சொன்னதை யோசித்து பார்த்தவள் பின் தன்னுடைய அப்பா அம்மாவை பார்க்க இருவரும் நம்பிக்கையாய் அவளை பார்த்தனர்.. 

ருத்விகா இதழ் சுழித்து சிரித்தவள் “இப்போ என்ன நான் அந்த வேதாந்த் சர்காரை மேரேஜ் பண்ணனும் அதான….”என்று கேட்க இருவரும் தலையசைத்தனர் 

எதுவும் பேசாமல் அவள் பாட்டுக்கு அங்கிருந்து செல்ல சுகன்யா தன் கணவரிடம் “என்னங்க எதுவும் பேசாம போறா….”என கேட்க ‘அவ புத்திசாலி புரிஞ்சுப்பா… வா…”என்ற சிரஞ்சீவி ருத்விகா பின்னாடியே சென்றார். 

ருத்விகா ஹாலுக்கு செல்ல அவளை பார்த்ததும் வேதாந்த் “என்ன யோசிச்சுட்டியா?….”என கேட்க 

திமிராய் பார்த்தவள் “உன்னை பார்த்த அடுத்த செகண்ட்டே கொல்லனும்ன்னு நினைச்சேன்…இனி ஒவ்வொரு செகண்ட்டும் உன்னை டார்ச்சர் பன்ற சான்ஸ நீ எனக்கு தரும் போது நான் எதுக்கு அதை வேஸ்ட் பண்ணனும்…. நான் உன்னை மேரேஜ் பண்ணிக்கறேன்…”என்றாள். 

அவள் சம்மதம் சொன்னதும் தான் சிரஞ்சீவி சுகன்யா இருவரும் நிம்மதியானார்கள்…. இல்லையென்றால் வேதாந்த் அவர்களை அழித்துவிடுவான் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்… 

வேதாந்த் எழுந்தவன் “நீ ஓகே சொல்லிடுவன்னு எனக்கு தெரியும் உனக்கும் வேற சாய்ஸ் இல்ல…. ஓகே பியான்ஸி மேரேஜ் டேட்க்காக வெயிட் பண்ணிட்டு இரு…. நவ் யூ ஆர் மைன்….”என சொன்னவன் பார்வை அவள் மேல் உரிமையாய் பதிந்தது… 

ருத்விகா இதழ் சுழித்து சிரித்தவள் ‘மேரேஜ் பண்ணிக்கிட்டு உன்கூட சந்தோசமா லைப் ஸ்டார்ட் பண்ணுவேன்னு நினைக்காத…. ஒவ்வொரு டேவும் ஒவ்வொரு செகன்ட்டும் நான் உனக்கு நரகத்தை காட்டுவேண்…”என்றாள்… 

வேதாந்த் ஜோக் கேட்டது போல் சிரித்தவன் “ஓ ரியலி… ஆல் த பெஸ்ட்…”என்றான்.. 

சென்னை… 

சர்கார் பேமலி… 

அவந்திகா ஹாலில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தவள் அடிக்கடி வெளியில் பார்த்துக்கொண்டிருந்தாள்… 

சோபாவில் அமர்ந்தவள் அடுத்த நிமிடமே எழுந்து சென்று வெளியில் பார்க்க திடீரென அவள் பக்கத்தில் “அங்க என்ன பார்த்துட்டு இருக்கீங்க?…”என்ற குரல் கேட்க திடீரென கேட்ட குரலில் அதிர்ந்தவள் திரும்பி பார்க்க வித்யுத் தான் வந்திருந்தவன் அவளை பார்த்து சிரித்தான் 

“பயந்துட்டீங்களா….”அவன் சிரிக்க கண்கள் சுருக்கி முறைத்து பார்த்தவள் “வித்யுத் நீதானா… இப்படியா வந்து பயமுறுத்துவ… பயந்துட்டேன்….”என்றாள். 

“நீங்க என்னை பார்த்து பயந்துட்டீங்களா… குட் ஜோக்….” 

‘வித்யுத்…. ” 

கையில் இருந்த ஜுஸ் கிளாஸில் இருந்து ஒரு சிப் குடித்தவன் “வெளில என்ன பார்த்துட்டு இருக்கீங்க….”என்று கேட்க 

அவளோ சுற்றி முற்றியும் பார்த்தவள் பின் ரகசியம் பேசும் குரலில் “அதுவா….”என சொல்ல வர வித்யுத் கையை உயர்த்தி செக் செய்தவன் “இப்போ எதுக்கு நீங்க இந்த பக்கமும் அந்த பக்கமும் பார்த்தீங்க யாரும் கேட்ககூடாதுன்னா… அங்க பாருங்க….”என சொல்ல அவந்திகாவும் அவன் கைகாட்டிய திசையில் பார்த்தாள்.. 

சிசிடிவி கேமரா அவர்களை தான் ஜூம் செய்து கொண்டிருக்கவும் மிடரு விழுங்கியவள் “இது இருக்கிறதை மறந்துட்டனே….”என்றாள். 

அவள் சொன்ன மாடுலேஷனில் சிரித்தவன் ‘”ஓகே சொல்லுங்க என்ன பார்த்துட்டு இருந்தீங்க?…”என்று கேட்க 

“அதுவா உன் அண்ணாவும் பாட்டியும் வர்றாங்களான்னு தான் பார்த்துட்டு இருக்கேன்….’ 

“அவங்க இன்னும் வரலயா…”என்றவன் பின் “அங்க என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க ரொம்ப எக்ஸைட்டா இருக்கீங்க போல…”என கேட்க அவந்திகா அவனை பார்த்து சிரித்து வைத்தாள்.. 

“எஸ் உன் அண்ணா மேரேஜ் எப்படி நடக்கும்ன்னு ரொம்ப கன்பியூஸிங்கா இருக்கு….” 

“அவர் வேதாந்த் சர்கார்… அவர் நினைச்சா என்ன வேணும்ன்னாலும் நடக்கும்….”என வித்யுத் சொல்லிகொண்டிருக்கும் போதே கார் சத்தம் கேட்கவும் இருவரும் டைமிங்கில் “அவங்க தான் வந்துட்டாங்க….”என சொல்லிகொண்டனர்… 

“நான் போய் பாக்கறேன்….”என்ற அவந்திகா பின் தலையில் தட்டிக்கொன்டவள் பின் “ம்ம்ஹும் நோ… என்னை பார்த்தா அவங்க திட்டுவாங்க….’என்றாள். 

“ஓவரா எக்சைட் ஆகாத்தீங்க உள்ள தான வர போறாங்க…”என்றவன் அவந்திகா “நீ போய் பாரு அவங்க தான் வந்துட்டாங்களான்னு…நீதான் வேதாந்த் பேவரைட் ஆச்சே நீ கேட்டா அங்க என்ன நடந்துச்சுன்னு சொல்வாங்க…”என சொல்லவும் 

வித்யுத் டீஷர்ட் காலரை கெத்தாக தூக்கிவிட்டு கொண்டவன் “அப்கோர்ஸ் நான் ப்ரோவோட பேபி பிரதராச்சே அவர் என்கிட்ட எதையும் மறைக்க மாட்டாரு….”என்றவன் அவந்திகா “அப்போ போய் பார்த்து என்ன நடந்துச்சுன்னு கேளு….”என சொல்லவும் 

“ஓகே போறேன் உங்களுக்கு வேணும்ங்கற டீடெயில்ஸ் கேட்டுட்டு வர்றேன்….”என்றவன் அங்கிருந்து செல்ல ஒரு அடி எடுத்து வைத்திருப்பான் வெளியில் இருந்து வந்தவரை பார்த்து அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டான்.. 

யாரா இருக்கும் 🤔

    No comments yet.