டெவில் -5

Sweety Novel's | 07 Feb 2026 | Share

இரண்டு வருடங்களுக்கு முன்… 

பெங்கலூர்…. 

வேதாந்த் கார் பப் முன் நிற்க அதிலிருந்து இறங்கினர் வேதாந்த்தும் வித்யுத்தும்… 

வேதாந்த் ஸ்டைல்லாய் டிரஸ் செய்திருந்தவன் தன் தம்பி பக்கம் திரும்பி பார்த்து “என்னை இங்க எதுக்குடா கூட்டிட்டு வந்த?…”என்று கேட்க 

அவனோ மார்டன் என்ற பெயரில் கிளாமராக டிரஸ் செய்து தன்னை கடந்து சென்ற பெண்களை பார்த்துகொண்டிருந்தவன் “ப்ரோ எப்பவும் கம்பனி மீட்டிங்ன்னு இருந்தா எப்படி அப்பப்போ இந்த மாதிரி பப் டிஸ்க்கோன்னு வந்து என்ஜாய் பண்ணனும்….”என்றான் சிரித்துகொண்டே… 

“நான் இங்க வந்திருக்கேன்னு யாரவது போட்டோ எடுத்து சோசியல் மீடியால லீக் பண்ணுனா தெரியும்…..” 

“அதெல்லாம் நடக்காது ப்ரோ….எல்லாம் டேன்ஸ் ட்ரிங்ஸ் கேர்ள்ஸ்ன்னு இருப்பாங்க நம்பள நோட் பண்ண மாட்டாங்க… கமான் ப்ரோ மீட்டிங் முடிஞ்சதும் என்கூட டைம் ஸ்பென்ட் பன்றதா சொல்லிருக்கீங்க….கமான்….”என்றவன் வேதாந்த் கைபிடித்து உள்ளே சென்றவன் தான் டேன்ஸ் ஆடிகொண்டிருந்த கேர்ள்ஸ் பார்த்ததும் தன் அண்ணன் கரத்தை விட்டுவிட்டு டேன்ஸ் ஆட சென்றுவிட்டான். 

மார்டன் கேர்ள்ஸ் மத்தியில் கிருஷ்ணனாய் அவன் வைப் செய்தபடி டேன்ஸ் ஆட வேதாந்த் இதழில் மென்னகை சிந்தியது.. 

“இவன் என்ஜாய் பண்ணதான் என்னை கூட்டிட்டு வந்திருக்கான்….”என தனக்குள் சொல்லிக்கொண்டவன் பார் கவுண்டருக்கு பக்கத்தில் சென்று அமர்ந்த “ஒன் லார்ஜ் விஸ்கி…..”என சொல்லிவிட்டு திரும்பி பார்த்தான்.. 

திடீரென மெல்லிய லைட் வெளிச்சம் ஒரு இடத்தில் மட்டும் போகஸாக எல்லாரும் வேதாந்த் திரும்பி பார்த்தான்… வேதாந்த் மட்டுமில்லை டேன்ஸ் ஆடிகொண்டிருந்த வித்யுத் லைட் வெளிச்சம் பட்ட பக்கம் பார்த்தான்..

இப்பொழுது டேபிள் மீது அழகு தேவதையாய் அவள் தோன்றினாள்…. பிளாக் கலர் ஸ்லீவ்லஸ் ஸ்கர்ட் அணிந்து கையில் மது பாட்டிலுடன் டேபிள் மீது ஏறி நின்ற ருத்விகா “கவிர்… ஹாப்பி பர்த்டே திஸ் இஸ் பார் யூ ….”என்றவள் டேன்ஸ் ஆட தொடங்கினாள்.. 

வேதாந்த் சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தவன் அவளையே பார்த்தான்… பேரர் “ஸார் யுவர் ஆர்டர்….”என்று சொல்லி கிளாஸ் நீட்ட அதை வாங்கிக்கொண்டவன் சேரில் நன்றாக சாய்ந்துகொண்டு டேன்ஸ் ஆடிக்கொண்டிருந்தவளையே பார்க்க வித்யுத் அவன் அருகில் வந்தான்… 

“அந்த கேர்ள் சூப்பரா டேன்ஸ் ஆடறாங்கல்ல ப்ரோ…”என்றவன் தனக்கு ஒரு லார்ஜ் சொல்லிவிட்டு போனில் ருத்விகா டேன்ஸ் ஆடுவதை போட்டோ எடுத்தவன் அதை வேதாந்த்க்கு காட்ட அவனும் வாங்கி பார்த்தான்.. 

டேன்ஸ் ஆடி முடித்ததும் ருத்விகா பார் கவுண்டர்க்கு வந்தவள் “ஒன் சிஎம்….”என சொல்லிவிட்டு சாய்ந்து நின்றுகொண்டாள்.

வேதாந்த் அவள் பக்கம் திரும்பி பார்த்தவன் எதுவும் பேசவில்லை வித்யுத் தான் “ரொம்ப நல்லா டேன்ஸ் பண்ணுன….”என சொல்ல 

அவன் பக்கம் பார்த்தவள் மது போதையில் “வாட்?….”என கேட்க வேதாந்திடமிருந்து தன்னுடைய போனை வாங்கி அதில் இருந்த அவளுடைய டேன்ஸ் போட்டோவை காட்டினான் 

வாங்கி பார்த்தவள் “நீதான் என்னை போட்டோ எடுத்தியா?….”என்று கோபம்மாய் கேட்க அவள் கோபத்தில் மிடரு விழுங்கியவன் எங்கு அடித்து விடுவாளோ என்று நினைத்து வேதாந்த்தை கைகாட்டியவன் “இவர் தான் போட்டோ எடுத்தது….”என்றான் 

“வாட்… நானா….”வேதாந்த் தன் தம்பியை பார்க்க 

“ஸாரி ப்ரோ….”என்று விழியசைவில் தன் அண்ணனிடம் சொன்னான்… 

ருத்விகா கண்கள் சுருக்கி வேதாந்த்தை பார்த்தவள் சட்டென அவன் ஷர்ட் பிடித்து தன் பக்கம் இழுத்தவள் அவன் விழியோடு விழிகலந்து பார்த்தாள்.. 

அவன் கத்தி போன்ற அவன் விழிகளும் அவளின் லேசர் விழிகளும் மோதிக்கொண்டது.. 

“நீதான் என்னை போட்டோ எடுத்ததா….”என்று கேட்க வேதாந்த் தன்னுடைய ஷர்ட்டையே பிடித்து இழுத்து தைரியம்மாய் கேள்வி கேட்டவளை அழுத்தம்மாய் பார்க்க அவன் எதிர்பார்க்காதவிதமாய் சட்டென அவன் கன்னத்தில் அழுத்தம்மாய் முத்தம் கொடுக்க வித்யுத் அதிர்ச்சியில் வாயை பிளந்தான். 

“நைஸ் போட்டோஸ்….”என்றவள் தன்னுடைய கிளாஸ் எடுத்துகொண்டு “என் பாய் பிரண்ட் அங்க இருக்கான்… டுடே ஹிஸ் பர்த்டே…. பாய்….”என வாய் குளரலாக சொல்லிவிட்டு மறுபடியும் டேன்ஸ் ஆட சென்றுவிட்டாள்… 

அந்த முத்தத்தில் தான் அவளுக்கு பிரேக்கப் ஆனது… அதனால் அவளுக்கு அவர்கள் இருவரின் முகமும் நன்றாகவே நியாபகத்தில் இருந்தது… 

அவள் ஷாக்கில் உறைந்து இருப்பதை கவனிக்காமல் உதய் பாட்டுக்கு வேதாந்த் பற்றி சொல்லிகொண்டிருந்தான்.. 

“ஹிஸ் இஸ் லைக் டெவில் மேடம்…. அவனுக்கு வேணுங்கறது கிடைக்கலன்னா அதை அழிக்க பார்ப்பான்…ஒன் டே பிவோர் கேரளால பிருந்தவனம் சச் எ பியூட்டபுல் பிளேஸ் இவனுக்கு கிடைக்கலங்கறதுக்காக அழிச்சுட்டான்… அதுல மட்டும் டுவெண்ட்டி பேர் டெத் ஆகியிருக்காங்க….”என அவன் சொல்லிக்கொண்டே போக ருத்விகா “இவனா வேதாந்த் சர்கார்…..”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் உதய்யிடம் “ஆர் யூ ஷுர் இவன் தான் அந்த டெவில்லா….”என்று கேட்க 

அவள் பக்கம் திரும்பி பார்த்தவன் “எஸ் மேடம்….”என்றான். 

“ஓ காட்..”அவள் டென்ஷனாய் நெற்றியை பிடித்துக்கொள்ள உதய் “என்னாச்சு மேடம்?….”என்றான். 

“இவனால ஆல்ரெடி என் லைப்ல ப்ராப்லம் வந்திருக்கு….” 

“ப்ராப்லம்மா… இவங்க தான் எல்லாருக்கும் ப்ராப்லம்மா இருப்பாங்க இவங்க லைப்ல என்ன ப்ராப்லம் வந்திருக்கும்….”என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன் அதைப்பற்றி அவளிடம் கேட்க பயந்து வாயை மூடிக்கொண்டான்… 

ருத்விகா யோசிக்க அப்பொழுது அவளை பார்க்க வந்தார் சிரஞ்சீவி…

அவள் இப்பொழுது என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று தெரியாமல் தயங்கிகொண்டே அவர் “ருத்து….”என்று கூப்பிட 

கோபத்தில் அவர் மண்டையை உடைத்தவள் தான் இப்பொழுது பாசமாய் “கேக் சாப்பிடறீங்களா டேடி….”என்று கேட்டாள்.. 

‘”பாசம் வந்தா கேக் அதுவே கோபம் வந்தா பாய்ஸன் கொடுத்து கொலை கூட பண்ணுவா….”என தன் மகளை பற்றி தனக்குள் சொல்லிக்கொண்டவர் “ருத்து பிஸியா இருக்கியா?….”என்று கேட்க 

ஜூஸ் கிளாஸ் எடுத்தவள் “ம்ம் அக்கா டெத்க்கு காரணமான அந்த சர்கார் பேமலி டீட்டையில்ஸ் தான் பார்த்துட்டு இருக்கேன்…..”என்றவள் உதய் பார்த்து “நெக்ஸ்ட்….”என சொல்ல “அவ்வளவு தான் மேடம்….சர்கார் பேமலி மொத்தம் இவ்வளவு பேர் தான் இருக்காங்க….”என்றான். 

“ருத்து கோபப்படாம அப்பா சொல்றதை கேளும்மா….” 

“நான் கோபபடாத மாதிரி நீங்க சொல்லுங்க….”என்றவள் அவர் “வேதாந்த் சர்காரும் அவரோட பாட்டியும் வந்திருக்காங்க….”என சொல்ல அவள் முகம் இறுகியது… 

“ஹவ் டேர் ஹிம்…. என் அக்காவை கொன்னுட்டு இங்க வந்திருக்கானா….”என்றவள் டீபாய் மீதிருந்த தன்னுடைய கன்னை எடுத்துகொண்டு அங்கிருந்து செல்ல சிரஞ்சீவி அதிர்ந்தார்.. 

“என்ன ஸார் நீங்க….”என்ற உதய் அவள் பின்னாடியே ஓட “ஓ காட் டுடே நீதான் என்னை காப்பாத்தணும்…. ஆல்ரெடி இப்போ தான் ஒரு பியூனரல் முடிஞ்சிருக்கு….”என சொல்லி பெருமூச்சு இழுத்துவிட்டவர் பின்னாடியே சென்றார் 

வேதாந்த் கால் மேல் கால் போட்டு கம்பீரமாய் சாய்ந்து அமர்ந்து இருந்தவன் ஹீல்ஸ் சத்தத்தில் திரும்பி பார்த்தான். 

ருத்விகா வந்தவள் கொஞ்சம் கூட அவனை பார்த்து பயப்படவில்லை… அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்தாள்.. 

இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவியது… ம்ம்ஹும் கோபம்மாய் மோதிக்கொண்டது…. அவள் விழிகளில் அவனை கொல்லும் அளவுக்கு கோபம் அதை பார்த்த வேதாந்த் இதழ் சுழித்து சிரித்தான்… அவன் சிரிப்பில் கூட ஒரு திமிரு தெரிந்தது… 

🎶அடியே … திமிரழகி …

அடங்காத சதிரழகி 

என்… வம்பழகி …

எண்ண கொள்ளும் சிரிப்பழகி 

வயசத்தான் மின்னல் வெட்டா 

மனசுல அடமழை பேயுதா …

திசையெல்லாம் கண்ணுல பட்டா 

கம்மங்கறுத்தா காயுதே … 

அட தமிழே… தமிழே 

நிறைஞ்சு வழிஞ்சியே …

நெஞ்சில தீயா எரிஞ்ச…. 🎶 

தன் பேரன் நெற்றியிலேயே தைரியம்மாய் துப்பாக்கியை வைத்திருப்பதை பார்த்த லட்சுமி அதிர்ந்தவர் கோபம்மாய் “சுகன்யா என்ன இதெல்லாம்…. யார் இந்த பொண்ணு…..”என்று கேட்க 

“எங்களோட செகண்ட் டாட்டர்… ஸாரி… மன்னிச்சிடுங்க….”என்றவர் தன் மகளிடம் “ருத்து கன்னை எடு….”என சொல்ல 

அவளோ வேதாந்த்தை முறைத்து பார்த்தவள் ‘நோ மாம்….”என்று மறுத்து தலையசைத்தாள்.. 

சிரஞ்சீவி வந்தவர் தன் மகளை பார்த்து விட்டு அதிர்ந்து அவரும் “ருத்து வேண்டாம்….”என சொல்ல அவர் பக்கம் திரும்பி பார்த்தவள் “டேட் யூ ஜஸ்ட் ஷெட்அப்….”என்றாள் கோபம்மாய். 

“இவனால தான் அஞ்சலி அக்கா இப்போ இல்ல… இவனை சும்மா விட சொல்றிங்களா….”என்றவள் வேதாந்த்திடம் “ஹவ் டேர் யூ…. எவ்வளவு தைரியம் இருந்தா என் அக்காவை கொன்னுட்டு என் வீட்டுக்கே வந்திருப்ப…..”என்றாள்.. 

லட்சுமி நெற்றியில் துப்பாக்கியை வைத்தும் அமைதியாய் அமர்ந்து இருந்த பேரனை ஆச்சிரியம்மாய் பார்த்தவர் போன் எடுத்து வெளியில் நின்றிருக்கும் தங்களுடைய கார்ட்ஸை உள்ளே வர சொன்னார்.. 

உள்ளே வந்தவர்கள் வேதாந்த் நெற்றியில் துப்பாக்கியை வைத்திருப்பவளை பார்த்து விட்டு எல்லாரும் தங்களுடைய துப்பாக்கியை எடுத்து அவளை ஷூட் செய்ய குறிவைக்க வேதாந்த் “டவுன் த கன்….”என்றான்.. 

‘ஸார்….’ 

“ஷி இஸ் யுவர்ஸ் பியூட்சர் பாஸ்….”என அவன் சொல்ல அவர்கள் துப்பாக்கியை கீழே இறக்கிகொள்ளவும் அவன் சொன்னதில் அதிர்ந்த ருத்விகா அசந்த நேரம் அவள் கரத்தில் இருந்து துப்பாக்கியை பறித்த வேதாந்த் ஸ்டைல்லாய் அதை சுழற்றிவிட்டபடி “நம்ம டீல் படி உங்க டாட்டர்க்கும் எனக்கும் அனவுன்ஸ் பண்ண டேட்ல மேரேஜ் நடக்கணும்….”என சொல்ல 

சிரஞ்சீவி சுகன்யா இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். 

“மேரேஜ் எப்படி நடக்கும்…அஞ்சலி தான் இறந்துட்டாளே….”என சிரஞ்சீவி சொல்ல 

வேதாந்த் “உங்களுக்கு தான் இன்னொரு டாட்டர் இருக்கால்ல…”என்றவன் இப்பொழுது ருத்விகாவை பார்த்தான்..

    No comments yet.