டெவில் -4

Sweety Novel's | 06 Feb 2026 | Share

அந்த இருட்டு அறையின் அமைதியில் அவன் கத்தும் சத்தம் எல்லா பக்கமும் எதிரொலிக்க ருத்விகா இதழ் சுழித்து சிரித்தவள் “வலிக்குதா…. ஆசிட் மேல பட்டா இப்படிதான் இருக்கும்…. இப்போ நீ யார் உன்னை அஞ்சலியை கொலை பண்ண சொன்னதுன்ணு உன்மையை சொல்லுலன்னா இந்த ஆசிட் புல்லா உன் பேஸ்ல ஸ்பிரட் பண்ணுவேன்… முகத்துல நெருப்பு வச்ச மாதிரி எரியும் தோள் உரியும் ரத்தம் வரும் உடனே ட்ரீட்மென்ட் பார்க்கலன்னா….”என்று ஒவ்வொன்றாக அவள் சொல்ல சொல்ல கீழே வலியில் அலறி துடித்தவன் முகத்தில் மரண பயம் தெரிந்தது. 

உதய் அவள் சொன்னதை கேட்டு தலையை உலுக்கி கொண்டவன் “இவங்க பொண்ணே இல்ல…. டெவில்….’என மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொண்டான்.. 

“என்ன உண்மையை சொல்லிடரியா…”என ருத்விகா கேட்க 

“சொல்லிடறேன்… சொல்லிடறேன் என்னை விட்ருங்க…ப்ளீஸ்….” 

அவன் அழறவும் அவன் கழுத்தில் இருந்து காலை எடுத்துகொண்டவள் கார்ட்ஸ் பார்க்க அவள் பார்வையிலேயே புரிந்துகொண்டவன் கீழே விழுந்துகிடந்தவனை தூக்கி நிறுத்தினான்.. 

ருத்விகா “சொல்லு அஞ்சலி கொலை பண்ண சொல்லி உன்கிட்ட சொன்னது யாரு?….”என கேட்க 

“சர்கார் பேமலில இருந்து யாரோ ஒருத்தர் தான் எனக்கு போன் பண்ணி பேசுனாங்க… அது யார்ன்ணு எல்லாம் எனக்கு தெரியல…. ஆன்லைன் பேமன்ட் நேர்ல நான் மீட் பண்ணவே இல்ல….” 

அவனை அழுத்தம்மாய் பார்த்தவள் “பொய் சொல்லனும்ன்ணு நினைச்சா கொன்னுடுவேன்…. உண்மையை சொல்லிடு….”என சொல்ல பதறியவன் “நான் சொல்றது உண்மை தான் மேடம்… அந்த நம்பர் வேணும்ன்னாலும் நான் தர்றேன்….”என சொல்ல ருத்விகா உதய் பார்த்தாள்.. 

அவனும் “நம்பர் சொல்லு….”என சொன்னவன் நம்பரை நோட் செய்துகொண்டான்.. 

“மேடம் இவனை என்ன பன்றது….”என கார்ட்ஸ் கேட்க ருத்விகா அசால்ட்டாய் “விட்ரு….”என்றாள்.. 

அதில் அதிர்ந்த கார்ட்ஸ் “மேடம் கஷ்டப்பட்டு பிடிச்சிருக்கோம்….”என சொல்ல அவளோ அழுத்தம்மாய் பார்த்து “விடுன்ணு சொன்னேன்….”என்றாள். 

அதன் பின் பாடிகார்ட் எதுவும் பேசவில்லை அவனை விட்டுவிட இவ்வளவு நேரம் அடிவாங்கியதில் அவனால் நிற்க கூட முடியவில்லை… அப்படியே சரிந்து விழுந்தான். 

கையசைத்து பாடிகார்டை பின்னாடி போக சொன்னவள் கையில் இருந்த ஆசிட்டை கீழே விழுந்தவன் முகத்தில் கொட்டினாள் அவன் வலியில் அலறி துடிக்க அவள் முகமோ கோபத்தில் இறுகியது.. 

“என் அக்காவும் லாஸ்ட் மினிட்ஸ்ல இப்படிதான துடிச்சிருப்பா….”என்றவளுக்கு அவன் துடிப்பதை பார்த்தும் கோபம் அடங்கவில்லை தன்னுடைய துப்பாக்கியை எடுத்தவள் புல்லட் தீரும் வரை ஷூட் செய்ய உதய் தான் பாவம் ஒவ்வொரு முறை துப்பாக்கி சத்தம் கேட்கும் போதும் பயந்து காதை மூடிக்கொண்டான்… 

ருத்விகா ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தவனை பார்த்தவள் “இது ஸ்டார்ட்டிங் தான்….இதே நிலைமை தான் அஞ்சலி டெத்ல சம்மந்தப்பட்ட ஒவ்வொருத்தருக்கும்….”என சொல்லிக்கொண்டவள் முகத்தில் அவ்வளவு கோபம்… 

சென்னை… 

சர்கார் ஹவுஸ்… 

விக்ராந்த் கேரளாவில் இருந்து வந்தவன் வீட்டிற்கு வந்ததும் வேதாந்த்தை தான் தேட அவனை காணவில்லை… லட்சுமி பாட்டியும் இல்லாததால் நேராக வித்யுத் அறைக்கு சென்றான்.. 

வித்யுத் அறையே தனியாக ஒரு பெரிய வீடு போல் இருந்தது…. ஹாலை கடந்து அவன் உள்ளே அறைக்குள் சென்று பார்க்க வித்யுத் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.. 

விக்ராந்த் கதவில் சாய்ந்து அவனை பார்க்க அவன் வந்ததை கூட வித்யுத் கவனிக்கவில்லை… கேமில் தான் அவன் கவனம் எல்லாம் இருந்தது.. 

“வித்யுத்…”என்று கூப்பிட அதில் திரும்பி பார்க்காமலே “என்ன விக்ராந்த்….”என்றான். 

“வேதந்த்  எங்க?….”என கேட்க இப்பொழுது அவன் பக்கம் திரும்பி பார்த்த வித்யுத் “ஹைதராபாத் போயிருக்கார் அவரோட பியான்சி பியூனரலுக்கு….”என்றான். 

விக்ராந்த் கண்கள் சுருக்கியவன் “ஏற்கனவே சோசியல் மீடியால அஞ்சலி டெத் நீயூஸ் வைரலாகிட்டு இருக்கு இந்த டைம்ல ப்ரோ அங்க போயிருக்காரா?…”என்று கேட்க 

“சோ வாட்… ப்ரோக்கு என்ன பயமா….பாட்டியும் ப்ரோவும் போயிருக்காங்க….”என்றவன் கேம் விளையாடுவதை நிறுத்திவிட்டு “பட் நான் அவங்களுக்கும் ப்ரோக்கும் மேரேஜ் ஆகும்ன்ணு நினைச்சேன் ஷி இஸ் வெரி ஸ்வீட்….”என்றான் வருத்தம்மாய் 

“ஓவர் ஸ்வீட் வேதாந்த் ப்ரோக்கு செட் ஆகமாட்டா….அட்லீஸ்ட் உயிரோட இருந்து இருக்கலாம்….இந்த மேரேஜ் வச்சு நிறைய பிளான் பண்ணிருந்தாங்க இனி என்ன பண்ண போறாங்களோ….” 

வித்யுத் “மேரேஜ் பிளான் எல்லாம் ஸ்டாப் ஆகல….ப்ரோ மேரேஜ் கண்டிப்பா நடக்கும்….”என சொல்ல 

விக்ராந்த் கண்கள் சுருக்கியவன் ‘”அதுக்குள்ள வேற பொண்ணு பார்த்துட்டாங்கல்ல பட் நாயக் டாட்டர்கூட தான மேரேஜ்ன்னு அனவுன்ஸ் பண்ணிருக்காங்க….”என்றான். 

இப்பொழுது வித்யுத் கன்பியூஸாக ‘எனக்கும் அதுதான் புரியல….கன்பியூஸிங்கா இருக்கு….”என்றான். 

“மேரேஜ் நடக்கும்ன்ணு உனக்கு எப்படி தெரியும்….” 

“எனக்கு தெரியும்….” 

“ஹவ் டூ யூ நோ?….” 

“பிகாஸ் ஐயம் ஹிஸ் பேவரைட் பேபி பிரதர்….”என்றான் வித்யுத் சிரித்துக்கொண்டே… 

விக்ராந்த்தும் சிரித்தவன் அவன் அருகில் நெருங்கி வந்து “வாட் டிட் யூ ஸே… ஸே அகைன்….”என சொல்ல 

“என்ன ஜலஸா… பட் ட்ருத் இதுதான ஐயம் ஹிஸ் பேபி பிரதர்…ஐ நோ ஹிம் வெரி வெல்…”என முடிக்கவில்லை அவன் தலையில் அடித்தான் விக்ராந்த்.. 

“அவுச்…”வலியில் முகம் சுழித்த வித்யுத் “எதுக்கு அடிச்ச?….”என்று கேட்க 

“அனவுன்ஸ் பண்ண மாதிரி வேதாந்த் ப்ரோ மேரேஜ் நடக்க போகுதுன்னு உனக்கு யார் சொன்னது….” 

வித்யுத் திருத்திருவென விழித்தவன் “அவந்திகா தான் சொன்னாங்க….”என்றான். 

“அஞ்சலி செத்துட்டான்…மேரேஜ் எப்படி நடக்கும் இடியட்….”என்றவன் அங்கிருந்து செல்ல வித்யுத் ஸ்டைல்ளாய் கலைந்த முடியை சரி செய்தவன் “கரெக்ட் தான… ப்ரோ மேரேஜ் எப்படி நடக்கும்….ஒரே கன்பியூசிங்கா இருக்கே….”என சொல்லிக்கொண்டான். 

ஹைதராபாத்… 

ருத்விகா முன் உதய் லேப்டாப் வைத்துகொண்டு “மேடம் இதுதான் சர்கார் பேலஸ்… “என சர்கார் இல்லத்தை காட்ட அவளோ டென்ஷனாகிவிட்டாள்.. 

சோபாவில் இருந்த பில்லோவை எடுத்து அவன் மீது தூக்கி போட்டவள் “இடியட் எனக்கு அவன் வீடு இல்ல அவனை பத்தி தெரிஞ்சுக்கணும்….”என சொல்ல 

“ஓகே ஓகே மேடம் நீங்க டென்ஷன் ஆகாதீங்க… ரிலாக்ஸ்….”என்றவன் டீபாய் மீது இருந்த ஜூஸ் கிளாஸ் எடுத்து கொடுத்து “டென்ஷனா இருக்கீங்க மேடம்… ஜூஸ் குடிங்க கூலாகிடுவீங்க….”என சொல்ல அவளோ வாங்காமல் அவனை கண்கள் சுருக்கி பார்த்தாள்.. 

அவள் பார்த்த பார்வையில் மிடரு விழுங்கியவன் ‘என்னாச்சு மேடம்….’என்று கேட்க 

‘ஸ்ட்ரா யாரு போட்டு கொடுப்பா….” 

“ஓ ஸாரி மறந்துட்டேன் மேடம்… இதோ எடுத்துட்டு வர்றேன்….”என சொன்னவன் எழ “ஹேய் எனக்கு பசிக்குது… வரும் போது அப்படியே ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வா….”என்றவள் அப்படியே சோபாவில் சாய்ந்து கொண்டாள். 

உதய் ஸ்ட்ரா அவளுக்கு ஸ்னாக்ஸ் என்று எல்லாம் எடுத்து கொண்டு வரும் பொழுது ருத்விகா சோபாவில் படுத்து தூங்கியிருந்தாள்.. 

“என்ன தூங்கிட்டாங்க…. இப்போ என்ன பன்றது….எழுப்பலாமா ம்ம்ஹும் திட்டுவாங்க… எழுப்பலன்னா ஏன் தூங்கவிட்டன்னு அடிப்பாங்க…”என யோசித்தவன் அடியை விட திட்டு வாங்குவதே பரவாயில்லை என்று முடிவு செய்தவன் டீபாய் மீது அவளுக்கு எடுத்து வந்ததை எல்லாம் வைத்து விட்டு அருகில் சென்று அவளை எழுப்ப தொடங்கினான்… 

மெல்ல கண் விழித்த ருத்விகா “இடியட் தூங்கும் போது எதுக்கு டிஸ்டர்ப் பண்ணுன….”என திட்டியவள் தூக்க கலக்கம் போய் எழவே சில நிமிடங்கள் ஆனது.. பின் தான் என்ன வேலையாக இருந்தோம் என்பதே நியாபகம் வர “இடியட் எதுக்கு என்னை தூங்கவிட்ட….”என்று உதய்யை அதற்கும் திட்டியவள் பசிக்கவும் அவன் எடுத்து வந்த கேக் சாப்பிட தொடங்கினாள்.. 

“இவங்க என்ன டிசைன்னே தெரியல….”மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொண்ட உதய் “மேடம் சர்கார் பேமலி பத்தின டீடெயில்ஸ்….”என சொல்ல அவளும் தலையசைத்து காட்ட சொன்னாள்..

அவள் கேக் சாப்பிட உதய் டேப்பில் “மேடம் இவங்க தான் லட்சுமி சர்கார் இவங்களுக்கு ரெண்டு பசங்க அமர்நாத் சர்கார் ஆதிநாத் சர்கார்…. அமர்நாத் வொய்ப் இறந்துட்டாங்க ஆதிநாத் பர்ஸ்ட் வொய்ப் ஜானவி ஸ்ரீகாந்த் பியூ இயர்ஸ் முன்னாடி ரெண்டு பேரும் டிவோர்ஸ் பண்ணிட்டாங்க….”என சொல்ல 

ருத்விகா கேக் க்ரீமை மட்டும் தனியா விரலில் எடுத்து சாப்பிட்டவள் “ஏன் டிவோர்ஸ் பண்ணிட்டாங்க?….”என கேட்க 

‘”எனக்கு எப்படி மேடம் தெரியும்…” 

“டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணுனா ஒழுங்கா கலெக்ட் பண்ண மாட்டியா….”என்றவள் மேல சொல்லு என்பது போல் கண்னை காட்ட உதய் “டிவோர்ஸ்க்கு அப்பறம் அமர்நாத் இவங்கள மேரேஜ் பண்ணிட்டாங்க…”என்றவன் அவந்திகாவின் போட்டோவை காட்டினான்.. 

“வாட்…. ஷிஸ் இஸ் லைக் ஹிஸ் டாட்டர்… இந்த கேர்ளயா மேரேஜ் பண்ணிருக்காரு?…”என்று கேட்க 

“எஸ் மேடம்….இவங்களுக்கு போர் இயர்ஸ்ல ஒரு சன் கூட இருக்கு….” 

‘அங்கிள் ரொம்ப ரொமான்டிக் போல…. “என சிரித்தவள் “இவர் விக்ராந்த் சர்கார் ஆதிநாத் சர்கார் பர்ஸ்ட் சன் அட்வகேட்… தனியா ஒரு கம்பனி ரன் பண்ணிட்டு இருக்கார் அதுமட்டும் இல்லாம சர்கார் குரூப் ஆப் கம்பனியில லீகல் அட்வைஸர்…”என்றான். 

“நெக்ஸ்ட்….” 

“ஆதிநாத் செகண்ட் சன்… நேம் வித்யுத் சர்கார்….”என சொல்ல விரலில் ஒட்டியிருந்த க்ரீம்மை லிக் செய்துகொண்டே பார்த்தவள் திரையில் அழகாய் சிரித்படி போஸ் கொடுத்து இருந்தவனை பார்த்து அதிர்ந்தாள்.. 

“இவன்….”என்று அவள் யோசிப்பதற்குள் உதய் “மேடம் இவர் தான் வேதாந்த் சர்கார் பில்லர் ஆப் த பேமலி….”என்று சொல்ல போட்டோவை பார்த்தவள் அதிர்ந்து விழிமூட அந்த நாள் அவளுக்கு நியாபகம் வந்தது..

    No comments yet.