டெவில் -3

Sweety Novel's | 05 Feb 2026 | Share

ஹைதராபாத்…. 

கார் நாயக் பங்களாவினுள் நுழைய வெளியில் வெயிட் செய்து கொண்டிருந்த மீடியாவினர் பரப்பரப்பானார்கள்.. 

காரில் இருந்து ருத்விகா இறங்கினாள்… கண்களில் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்டைல்ளாய் இறங்கியவளை கேமராக்கள் போட்டோ எடுக்க அவளோ எல்லாரையும் அலட்சியம்மாய் பார்த்தபடி வீட்டிற்குள் சென்றாள்.. 

உறவினர்கள் குளோஸ் பிரண்ட்ஸ் எல்லாம் இருக்க ஹால் நடுவில் கண்ணாடி பெட்டிக்குள் அஞ்சலியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. 

கண்ணாடி பெட்டி மீது சாய்ந்து அவள் அம்மா சுகன்யா அழுதுகொண்டிருந்தார்… பாவம் அழுது அழுது அவர் மயங்கி விழும் நிலையில் இருக்க ருத்விகா கண்ணாடியை கழட்டியவள் தன்னுடைய அக்காவின் உடலை பார்த்தபடி முன்னாடி செல்ல ஹை ஹீல்ஸ் சத்தத்தில் சுகன்யா நிமிர்ந்து பார்த்தவருக்கு தன் இளைய மகளை பார்த்ததும் உதடு துடிக்க எழுந்தவர் “ருத்து… நம்ம அஞ்சலியை பாரு….”என்றார் அழுதபடி… 

ருத்விகா அழவில்லை அருகில் சென்றவள் கரம் கண்ணாடி பெட்டியை வருடியது.. 

சில நிமிடங்கள் அப்படியே நின்றவள் பின் தன் அம்மா பக்கம் திரும்பி பார்த்து “டேட் எங்க?….”என்று கேட்க சுகன்யா மேலே கைகாட்டினர். 

அவ்வளவு தான் தன்னை பார்த்ததும் துக்கம் விசாரிக்க வந்தவர்களை கண்டுகொள்ளாமல் மூன்றாம் தளத்திற்கு சென்றாள்.. 

அந்த தளத்தில் யாரும் தென்படவில்லை அமைதியாக இருந்தது… வேகவேகமாய் அவள் நடக்கும் பொழுது அவளுடைய ஹீல்ஸ் சத்தம் தான் கேட்க ஒவ்வொரு அறையாக பார்த்துக்கொண்டு ஒரு அறைக்கு செல்ல அந்த அறையில் தான் அவளுடைய அப்போ சிரஞ்சீவி நாயக் இருந்தார்.. 

மகள் இறந்து உடல் வீட்டிற்குள் இருக்க அவரோ துக்கத்தை மறக்க மதுவை நாடி இருந்தார்.. 

கையில் கிளாஸ் வைத்துகொண்டு போதையில் இருந்தவர் உள்ளே வந்தவளை பார்த்ததும் “வந்துட்டியா மை பேபி டைகர்….”என்று உளறலாக சொல்ல அவளோ மறைத்து வைத்திருந்த தன்னுடைய துப்பாக்கியை எடுத்தவள் ஷூட் செய்ய முதல் புல்லட்டில் அவர் கையில் இருந்த கிளாஸ் சுக்கு நூறாக உடைந்தது.. 

அடுத்த புல்லட் டேபிள் மீது இருந்த பிளவர் வாஷ் உடைந்தது… மூன்றாவது முறையாக ஷூட் செய்வதற்கு துப்பாக்கியை அப்பா என்று கூட பார்க்காமால் சிரஞ்சீவி நெற்றியில் வைத்திருந்தாள்.. 

பயத்தில் மிடரு விழுங்கியவர் “ருத்து என்ன பன்ற நீ….விடு….”என்று சொல்ல அவளோ “என் அக்காவை கொன்னுட்டிங்கல்ல… நான் இல்லாத டைம்ல அவசர அவசரமாக அவளுக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணி கொன்னுட்டிங்க…உங்களை எப்படி விடமுடியும்….பேசாம நீங்களும் அக்காகிட்டயே போய்டுங்க….”என்றவள் ட்ரிக்கரை அழுத்தும் நேரம் “ருத்விகா…”என்ற குரல் கேட்கவும் திரும்பி பார்த்தாள்… 

சுகன்யா தான் வந்திருந்தவர் “ருத்விகா நீ என்ன பண்ணிட்டு இருக்க அவர் உன் டேடி….”என்று சொல்ல 

“எனக்கு கோபம் வந்தா அப்பான்னு எல்லாம் பார்க்க மாட்டேன்…. எனக்கு என் அக்கா வேணும் அவ இப்போ இல்லாததுக்கு இவர் தான காரணம்…. இவரை எப்படி விடமுடியும்….” 

அவள் கோபத்தில் இருக்கிறாள் என்று சுகன்யாவால் புரிந்துகொள்ள முடிந்தது….”அஞ்சலி இறந்ததுக்கு இவர் இல்ல அந்த வேதாந்த் தான் காரணம் ருத்து… இவரை விட்ரு…. “என்று கெஞ்ச. 

கண்கள் சுருக்கியவள் “என்ன சொல்றிங்க?….”என்று கேட்க 

‘அவனோட எதிரிங்க தான் அஞ்சலியை கொலை பண்ணிருக்காங்க….”என்று சுகன்யா சொல்ல ருத்விகா இப்பொழுது தன்னுடைய அப்பாவை பார்த்தார்.. 

அவரும் “அஞ்சலியை ஷூட் பன்னுனவன கார்ட்ஸ் பிடிச்சிட்டாங்க…”என்றார்…”ஓகே… அப்போ எல்லாத்துக்கும் அந்த வேதாந்த் தான் காரணம்…..”என்றவள் அவர் நெற்றியை துப்பாக்கியில் எடுக்க சிரஞ்சீவி நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் ஓங்கி துப்பாக்கியால் அவர் நெற்றியில் அடிக்க காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது.. 

“ருத்து….”என்று கத்திய சுகன்யா வேகமாய் சென்று தன்னுடைய கணவரை தாங்கிப்பிடிக்க ருத்விகாவோ கோபம்மாய் தன்னுடைய அப்பாவை பார்த்தவள் “இது எதுக்கு தெரியுமா அந்த வேதாந்த்தை அஞ்சலி அக்கா லைப்ல கொண்டு வந்ததுக்கு…. என் அப்பான்னு கூட பார்க்காம உங்களுக்கு பனிஷ்மென்ட் கொடுத்து இருக்கேன் அந்த வேதாந்த் மட்டும் என் கண்ல பட்டான் அது தான் அவனுக்கு லாஸ்ட் டே….”என்று கோபம்மாய் சொன்னவள் அந்த அறையை விட்டு வெளியேறினாள்… 

அஞ்சலியில் இறுதி சடங்குக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது… சிரஞ்சீவி நெற்றியில் பட்ட காயத்திற்கு கட்டு போட்டிருந்தவர் அஞ்சலிக்காக சடங்கு எல்லாம் செய்தார். 

அஞ்சலியின் உடல் எடுத்து செல்லும் பொழுது ருத்விகா விழிமூடிகொண்டவள் சில நிமிடங்களுக்கு பின் கண் திறக்கும் பொழுது அவள் கண்கள் இரண்டும் கோபத்தில் சிவந்திருந்தது…. 

சென்னை… 

சர்கார் இல்லம்.. 

ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் பாட்டி லட்சுமி சர்காரும் அவருடைய மூத்த மகன் அமர்நாத் சர்காரும்… 

அப்பொழுது வெளியில் இருந்து உள்ளே வந்த லட்சுமியின் இரண்டாவது மகன் ஆதிநாத் சர்கார் “அண்ணா உன் பையன் என்ன பண்ணிட்டு இருக்கான்… சோசியல் மீடியால நம்ம பேமலி பத்தின நீயூஸ் தான் ட்ரெண்டிங்ல இருக்கு….அந்த கேர்ள் அஞ்சலி செத்ததுக்கு நம்ம பேமலியை தான் ட்ரோல் பண்ணிட்டு இருக்காங்க… எப்படி சால்வ் பண்ண போறான் இந்த இஷுவ….”என்றார் கோபம்மாய்.. 

அமர்நாத்தும் லட்சுமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள தன் கணவனின் பேச்சு சத்தம் கேட்டு வந்தார் அவந்திகா… 

வீட்டில் இருக்கும் போதுகூட புல் மேக்கப் போட்டுக்கொண்டு டைமன்ட் நெக்லஸ் சகிதமாய் வந்தவள் “என்னாச்சுங்க ஏன் கோபம்மா கத்திட்டு இருக்கீங்க?….”என்று கேட்க 

“எங்க பேமலி பத்தி பேசிட்டு இருக்கோம்… நீ உள்ள போறியா….”என்றார் லட்சுமி… அதில் அவள் முகம் கருத்தது.. 

அவந்திகா ஆதிநாத்தின் இரண்டாவது மனைவி…முதல் மனைவியை டிவோர்ஸ் செய்து விட்டு ஐந்து வருடங்களுக்கு முன் தான் இவளை திருமணம் செய்திருந்தார்… இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் கூட இருக்கிறான் ஆனால் லட்சுமி எப்பொழுதும் அவளை அந்த குடும்பத்தில் ஒருத்தராக பார்த்ததில்லை..

தன்னை அவமானபடுத்துவதை கூட கண்டுகொள்ளாமல் நின்றிருந்த ஆதிநாத்தை முறைத்து பார்த்தாள்.. 

“இங்க பாரு ஆதி வேதாந்த்க்கு என்ன பண்ணணும்ன்னு தெரியும் அவன் பார்த்துப்பான்…. நீ இதை பத்தி ரொம்ப யோசிக்காத….”என அமர்நாத் சொல்ல 

“அண்ணா… இந்த சீரியஸ்னஸ் தெரியுமா பேசாதீங்க…. சரி நீயூஸ் பத்தி கூட விடுங்க நாளைக்கே வேற எதாவது எக்ஸ்கிளுஸிவ் நீயூஸ் கிடைச்சா இந்த விஷயத்தை மறந்திடுவாங்க பட் கம்மிங் நவம்பர் 3 வேதாந்த்க்கும் சிரஞ்சீவி டாட்டர்க்கும் மேரேஜ்ன்னு சொல்லிருக்கோம்….நம்ம எல்லா பார்ட்னர்ஸ்க்கும் தெரியும் இந்த மேரேஜ் வச்சி எவ்வளவு பிளான் போட்ருந்தோம்ன்ணு மறந்துபோய்டுச்சா….”என சொல்ல 

அவமானப்படுத்தினாலும் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு அவந்திகாவால் அமைதியாக இருந்த முடியவில்லை… 

“அந்த பொண்ணுதான் செத்துட்டாளே…. அவகூட வேதாந்த்க்கு எப்படி மேரேஜ் நடக்கும்….”என்று கேட்க 

அப்பொழுது அழுத்தம்மான ஷூ சத்தம் கேட்கவும் எல்லாரும் திரும்பி பார்த்தனர்…மேல் தளத்தில் இருந்து வந்த லிப்ட் நிற்க அதிலிருந்து வேதாந்த் தான் வந்தான். 

கம்பீரமாய் ஆளுமையுடம் நடந்து வந்த தன்னுடைய பேரனை கர்வம்மாய் பார்த்தார் லட்சுமி… தன்னுடைய எதிரியை பயமுறுத்த அவனுக்கு கத்தி தேவையில்லை கத்தி போன்ற அவனுடைய பார்வை போதும்….அவனுடைய கண்கள் அப்டியே அவரை போல்… அதில் ஒரு பெருமை அவருக்கு… 

வேதாந்த் அருகில் வந்தவன் ஒன்றை சோபாவில் அமர்ந்தவன் சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தவன் தன்னுடைய சித்தப்பாவை பார்த்து “என்னோட மேரேஜ் அனவுன்ஸ் மாதிரி சொன்ன டேட்ல நாயக் டாட்டர் கூட நடக்கும்…. என்னோட பிளான் எப்பவும் மிஸ் ஆகாது….”என சொல்ல எல்லாரும் அதிர்ந்தனர்.. 

“இவன் என்ன சொல்றான்….செத்துப்போன பொண்ணு கூட இவனுக்கு எப்படி மேரேஜ் நடக்கும்….”என முனுமுனுத்துக்கொண்ட அவந்திகா அதை பற்றி கேட்க வாயெடுத்தவள் வேதாந்த் பார்த்த பார்வையில் பயந்து அப்டியே வாயை மூடிக்கொண்டாள்.. 

ஹைதராபாத்… 

ருத்விகாவும் உதய்யும் கெஸ்ட் கெஸ்ட் ஹவுஸ் செல்ல அங்கு அவர்களுக்காக வெயிட் செய்து கொண்டிருந்த பாடிகார்ட்ஸ்களின் ஹெட் “அந்த ரூம்ல தான் அடைச்சு வச்சிருக்கோம் மேடம்… போலீஸ்கிட்ட கூட ஹாண்ட் ஓவர் பண்ணல….”என்றான். 

ருத்விகா அவன் கைகாட்டிய அறைக்குள் செல்ல பின்னாடியே உதய் சென்றான்.. 

இருட்டு அறையில் வெறும் பேண்ட் மட்டும் போட்டிருக்க அடிவாங்கியதற்குள் அடையாளம்மாய் உடலில் ஏராளமான காயத்துடன் ஒருவன் சேரில் கட்டிவைக்கப்பட்டிருந்தான் 

அவனை பார்த்ததும் ருத்விகா ‘”யார் சொல்லி பண்ணுனான்னு சொல்லிட்டானா?…”என்று கேட்க 

“இல்ல மேடம் எவ்வளவு அடிச்சும் சொல்ல மாட்டேங்குறான்….” 

ருத்விகா அவன் அருகில் சென்றவள் “உண்மையை சொன்னா உன்னை விட்டுடறேன் சொல்லு அஞ்சலியை கொலை பண்ண சொல்லி உன்கிட்ட யார் சொன்னா?…”என கேட்க 

அவனோ சிரித்தவன் “அவங்க அடிச்சு கேட்டே நான் சொல்லுல… ஒரு பொண்ணு நீ கேட்டா சொல்லிடுவனா….”என சொல்ல ருத்விகா சிரித்தவள் “பொண்ணு… சாதாரண பொண்ணு தான…உனக்கு எப்படி என்மேல பயம் வரும்…”என்றவள் திரும்பி கார்ட்ஸ் பார்த்து “கட்டை ரிமூவ் பண்ணு….”என்றாள்.. 

“மேடம்…”அவன் தயங்கவும் 

“சொன்னதை செய்….”என்றாள் அழுத்தம்மாய்… 

உடனே அவள் சொன்னது போல் அவனும் அஞ்சலியை ஷூட் செய்தவன் கட்டை அவிழ்த்துவிட்டான்… 

ருத்விகா அவனை எழ சொல்ல அவனும் எழ கொஞ்சம் கூட தாமதிக்கவில்லை தன்னுடை ஹீல்ஸ் காலால் அவன் நெஞ்சில் உதைக்க சேரோடு சேர்த்து தள்ளி சென்று விழுந்தவன் கத்திய சத்தம் அந்த இடமெங்கும் எதிரொலித்தது… 

அவன் அருகில் சென்று கழுத்தில் காலை வைத்தவள் முகத்தில் கொஞ்சம் கூட அவனை பார்த்து இரக்கம் வரவில்லை.. 

“சொல்லு யார் உன்னை அனுப்புனது….”என்று கேட்க அவன் அப்பொழுதும் சொல்லமாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தான்… 

ருத்விகா ஹீல்ஸால் அவன் கழுத்தை நெரித்தவள் திரும்பி உதய் பார்க்க அவன் ஒரு குட்டி பாட்டில் எடுத்து அவளிடம் கொடுக்க அதை வாங்கியவள் அதை அவன் மீது தெளிக்க ஆசிட் ஒரு சொட்டு கை மேல் விழுந்தற்கே அவன் அலறி துடிக்க அவள் இதழில் புன்னகை தோன்றியது…

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.