டெவில் -2

Sweety Novel's | 04 Feb 2026 | Share

இல்லீகலாய் பெட்டிங் நடைபெறும் இடம்…. சென்னையாக இருந்தாலும் அந்த இடத்தில் நிறைய வெளிநாட்டவர்கள் தான் இருந்தனர்.. 

அங்கு தான் தற்போழுது வித்யுத் சர்கார் மாட்டியிருந்தான்… 

அவனுடைய பிரண்ட்ஸ் தான் இந்த இடத்திற்கு அழைத்து வந்திருந்தனர்….பத்து பேரை கண்ட்டினியூஸகாக பாக்ஸிங்கில் தோற்கடிக்க வேண்டும் என்பது தான் பெட்டிங்… 

தான் வேதாந்த்தின் தம்பி என்று நிரூபிக்கும் வகையில் ஒன்பது பேரை அடித்து வீழ்த்தியவனால் இந்த மலைமாடை சாமாளிக்க முடியவில்லை…. 

பாடி பில்டர் போல் ஒர்க் அவுட் செய்து உடலை வைத்திருந்தாலும் அந்த பாக்ஸர் அவனுக்கும் மேல் இருந்தான்… 

“ப்ரோ வர்ற வரைக்கும் எப்படியாவது இவனை சமாளிக்கனும்….”என தனக்குள் சொல்லிக்கொண்டவன் உதடு எரியவும் தொட்டு பார்க்க இதழ் ஓரத்தில் ரத்தம் கசிந்து இருந்தது.. 

பிளட்டை பார்த்ததும் “ஓ மை காட் மம்மி….”என்றவனுக்கு மயக்கம் வருவது போல் இருக்க அந்த பாக்ஸர் அப்பொழுதும் அவனை விடாமல் அவனை பிடித்து இழுத்தவன் ஓங்கி தன்னுடைய மொட்டை தலையால் ஓங்கி அடிக்க வித்யூத்க்கு தலையை சுற்றி குருவி பறந்தது.. 

கண்னை மூடி திறந்தவன் “ப்ரோ….”என முனுமுனுத்தபடி விழபோக அவனை ஒரு வலியகரம் தாங்கி பிடித்தது.. 

தன்னை தாங்கி பிடித்தது யாரென்று உணர்ந்தவன் இதழில் மென்னகை தோன்ற நிமிர்ந்து பார்த்தான்… 

வேதாந்த் அவனை பார்த்து கண்ணடித்தவன் “கரெக்ட் டைமுக்கு வந்துட்டனா….”என்று கேட்க 

‘லேட்டா வந்துட்டு கரெக்ட்டா வந்துட்டனான்னா கேட்கறீங்க… அவன் என்னை போர் டைம்ஸ் அடிச்சுட்டான் தெரியுமா ரிவேஞ்சா அவன் த்ரீ ஹண்ட்ரட் டைம் அடிவாங்கணும்….”என்றான் சின்ன குழந்தை போல்… 

வேதாந்த்க்கு எப்பொழுதும் அவன் சின்ன குழந்தை தான்….”டோன்ட் வொர்ரி….”செல்லம்மாய் அவன் கன்னம் தட்டியவன் தன்னுடைய கோர்ட்டை கழட்டி அவனிடம் கொடுத்து விட்டு ஹாண்ட் ஷர்டை மேலேற்றி விட்டவன் வித்யுத்தை அடித்த அந்த பாக்ஸருடன் சண்டை போட தொடங்கினான்… 

வேதாந்த்திடம் அந்த பாக்ஸரால் ஒரு நிமிடம் கூட தாக்கு பிடிக்கலமுடியவில்லை… அவனை தூக்கி அப்படியே திருப்பி போட்டதில் அவனுடைய மொட்டை மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.. 

அதை பார்த்து சிரித்த வித்யுத் “சூப்பர் ப்ரோ….”என்று சொல்ல வேதாந்த் திரும்பி பார்த்து சிரித்தவன் பின் கீழே சரிந்து விழுந்திருந்தவனை பார்த்தான்.. 

அவன் சிரிப்பு அப்படியே மறைந்து முகம் இறுகியது… ஷூ காலால் அவன் முகத்தை திருப்பியவன் “இந்த வேதாந்த் சர்கார் பிரதர் மேல கைவைச்ச யாரையும் உயிரோடு விட்டு வச்சது இல்ல…நீ யார் கூட மோதறோம்ன்னு யோசிச்சுருக்கலாம்….”என்றவன் கீழே விழுந்தவன் “விட்ருங்க ஸார்…”என்பது போல் கையெடுத்து கும்பிட அதை பார்த்து எல்லாம் இரக்கம் காட்டவில்லை… 

ஷூ காலை கீழே இறக்கியவன் அப்படியே அவன் கழுத்தை நெரிக்க வித்யுத் வேகமாய் அவன் அருகில் வந்தவன் “இட்ஸ் ஓகே ப்ரோ விட்ருங்க….”என சொல்ல வேதாந்த் தன்னுடைய காலை எடுத்துகொள்ள அந்த பாக்ஸரும் மரணம் அருகில் சென்று விட்டு திரும்பி உயிர் பிழைத்தான்.. 

வேதாந்த் தன் தம்பியின் இதழ் ஓரத்தில் துளிர்த்து இருந்த ரத்தத்தை கர்ச்சீப் எடுத்து துடைத்தவன் “கமான்….”என்று சொல்லி கைபிடித்தவன் அங்கிருந்து அழைத்து செல்ல “ப்ரோ ஒன் செகண்ட்….”என்றான். 

“வாட்….” 

“பெட்டிங் அமவுண்ட்….”என்றவன் வேதாந்த் கரத்தை எடுத்து விட்டு தன்னுடைய பிரண்ட்ஸ் அமர்ந்து இருந்த டேபிள் அருகில் சென்றவன் டேபிள் மீது கட்டு கட்டாய் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டவன் மீண்டும் தன் அண்ணன் அருகில் சென்று “போலாம் ப்ரோ…..”என்றான்.. 

இருவரும் வெளியில் சென்று காரில் ஏற வேதாந்த் காரை ஸ்டார்ட் செய்யாமல் தன் தம்பி பக்கம் பார்த்தான். 

அவனும் திரும்பி பார்த்து “வாட் ஹாப்பன்ட் ப்ரோ….”என்று முடிக்கவில்லை வேதாந்த் அவன் கன்னத்தில் அறைந்து இருந்தான்.. 

அதில் அவன் “மம்மி….’என்று கண்ணீரே வராமல் அழதொடங்கிவிட “ஷெட்அப் வித்து….”என்று கோபமாய் கத்திய வேதாந்த் “யூ ஆர் நாட் எ கிட்… இந்த மாதிரி லோகிளாஸ் பிரண்ட்ஷிப் பெட்டிங் எல்லாம் வச்சுக்க கூடாதுன்னு ஆல்ரெடி வார்ன் பண்ணிருக்கேன்ல….”என்று திட்ட 

“லாஸ்ட்டா ஒன்ஸ்….”என்றவன் வேதாந்த் பார்த்த பார்வையில் தலைகுனிந்து “ஓகே இனி இந்த மாதிரி பண்ண மாட்டேன்….”என்றான். 

“யூ ஆர் நாட் எ நார்மல் மேன் வித்யுத்… ஒன் ஆப் த டாப் ரிச்சஸ்ட் மேன் சன்….” 

“ரிச்சஸ்ட் மேனோட பேபி பிரதர் கூட….”என்று வித்யுத் திட்டு வாங்கியும் சிரித்துக்கொண்டே சொல்ல வேதாந்த் கோபம் பறந்து போனது… 

“ப்ரோ நான் யாரு என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும் பட் சம்டைம்ஸ் எனக்கு இந்த லக்சுரியஸ் லைப் போர் அடிக்குது அதனால தான் இந்த மாதிரி லோக்கல் பாய்ஸ்கூட பிரண்ட்ஸானேன்…..”என சொல்ல அவன் நிலை வேதாந்த்க்கும் புரிந்தது.. 

“பியூ மந்த்ஸ் தான காலேஜ் முடிஞ்சதும் நீயும் கம்பனிக்குள்ள வந்திடுவ அதுக்கு அப்பறம் உனக்கு போர் அடிக்காது….”என கம்பனி என்றதும் வித்யுத்க்கு சலிப்பு தோன்றியது… 

“ஓகே போலாம்….”என்ற வேதாந்த் காரை ஸ்டார்ட் செய்யும் நேரம் அவன் போன் இசைக்கவும் எடுத்தவன் அவனுடைய சித்தப்பா ஆதிநாத் தான் அழைத்து இருக்கவும் அட்டன் செய்தவன் எதிர்முனையில் அவர் “வேதா உன்னோட பியான்ஸி டெத் நீயூஸ் சோசியல் மீடியால வைரல் ஆகிட்டு இருக்கு….”என்று சொல்ல வேதாந்த் முகம் இறுகியது.. 

மும்பை… 

“டுமீல்… டுமீல்….” 

துப்பாக்கி சத்தம் கேட்க அதற்கு பயப்படாமல் கண்னை கூட சிமிட்டாமல் கையில் இருந்த துப்பாக்கியால் தூரத்தில் இருந்த போர்டை குறி பார்த்து ஷூட் செய்து கொண்டிருந்தாள் அவள்… 

ஐந்து புல்லட்டில் ஒன்று கூட வேஸ்ட்டாகவில்லை… ஐந்து புல்லட்டும் போர்டில் வட்டமாய் துளைத்து சென்றிருக்க பக்கத்தில் முப்பத்தி ஐந்து வயதில் ஆணழகனாய் இருந்த ஆடவன் அரன்டு போய் நின்றிருந்தான்.. 

தன் காதில் மாட்டியிருந்ததை கழட்டி விட்டு கர்லிங் முடியை ஸ்டைல்ளாய் ஒதுக்கி விட்டு அவன் பக்கம் திரும்பி பார்த்தாள்… 

ருத்விகா நாயக் பிடிவாதத்திற்கும் கோபத்திற்கும் இன்னொரு பெயராய் அவள் பெயரை சொல்லலாம்… 

கண்ணில் திமிர் எதிரியை தன்னுடைய அழகில் மட்டுமில்லை ஆட்டிடுயுடினாலும் வீழ்த்திவிடுவாள்….டெவில் லேடிஸ் வர்ஷன் அவள்…. 

துப்பாக்கியை தன்னிடம் திமிராக பேசியவன் நெஞ்சில் வைத்தவள் “நீ சொன்ன மாதிரி த்ரீ புல்லட்ஸ் இல்ல பைவ் புல்லட்ஸ்ம் எயிம்ல பட்ருக்கு…நவ் யுவர் புட்பால் டீம் இஸ் மைன்… இந்த ருத்விகாகிட்ட சேலஞ் பண்ணக்கூடாது… சேலஞ் பண்ணுனா வின் பன்றது நானா தான் இருப்பேன்….”என்றவள் தன்னுடைய அசிஸ்ட்டன்ட்டை பார்த்து “பைல்ல சைன் வாங்கிக்கோ….”என்றாள்.. 

அவளுடைய அசிஸ்ட்டடும் அவனிடம் பைல் நீட்டி “ஸார் சைன் பண்ணுங்க….”என சொல்ல யோசித்தவன் கிரவுண்ட்டில் விளையாடிகொண்டிருந்த பிளேயர்களை பார்த்துகொண்டிருந்தளிடம் “மேடம் நாம வேணா பார்ட்னர்ஷிப்ல….”என்று முடிக்கவில்லை அவன் பக்கம் திரும்பி தீ பார்வை பார்த்தாள்… 

“நான் தான் மத்தவங்களுக்கு ஆப்பர் கொடுப்பேன் எனக்கு யாரும் கொடுக்க கூடாது… காட் இட்….”சொடக்கிட்டு அவள் ஸ்டைல்ளாய் சொன்னதில் அவன் தலை தானாக ஆடியது.. 

அவன் சைன் செய்ததும் தன்னுடைய அசிஸ்ட்டன்ட்டிடம் “நெக்ஸ்ட் மேட்ச்ல நம்ம டீம் தான் வின் பண்ணனும்…. எனக்கு பிராபிட் தான் வரணும்….பிளைட் ரெடியா இருக்க சொல்லு நான் ஹைதராபாத் போகணும்….”என்றவள் போன் எடுத்து தன்னுடைய அம்மாவிற்கு போன் செய்தாள்.. 

எதிர்முனையில் அவள் அம்மா காவ்யா நாயக் அட்டன் செய்தவர் அழுதபடி “ருத்வி எப்போ நீ வருவ….”என்றார். 

“நான் வந்திடுவேன்ம்மா நான் வர்ற வரைக்கும் அக்காவோட பாடியை எடுக்க கூடாது….”என்று அழுத்தம்மாய் சொன்னவள் நாயக் குடும்பத்தின் இளைய வாரிசு… பெண் சிங்கம் என்று சொல்லலாம்…அவள் பிஸ்னஸ் விஷயம்மாக ஹைத்ராபாத் விட்டு மும்பை வந்த இந்த ஒரு வாரத்தில் தான் வேதாந்த்துடம் அஞ்சலிக்கு அவளுடைய அப்பா மேரேக் பிக்ஸ் செய்திருந்தார்… 

கிரவுண்ட் விட்டு அவள் வெளியில் செல்ல கார் ரெடியாக இருக்கவும் அதில் ஏறிகொண்டவள் அவளுடைய அசிஸ்ட்டன்ட் உதய்யும் ஏறியதும் அவன் பக்கம் திரும்பி பார்த்தவள் “எனக்கு அந்த வேதாந்த் சர்கார் பத்தின டீடெயில்ஸ் வேணும்….”என சொல்லிவிட்டு தளர்வாய் சோபாவில் சாய்ந்து கொண்டவள் நினைவில் சிறுவயது முதல் தன்னிடம் பாசமாக இருந்த அஞ்சலி வந்து போனாள்.. 

விழிமூட அவள் காதில் “ஸாரி ருத்விகா எனக்கு அந்த அரக்கனை மேரேஜ் பண்ணிக்க விருப்பம் இல்ல டேட் எனக்கு அவன்கூட தான் மேரேஜ்ன்னு பிக்ஸ் பண்ணிட்டாரு…. நான் சூசைட் பண்ணிக்க போறேன்….ஐ லவ் யூ…ஐ மிஸ் யூ சோ மச்…”என்று அழுதுகொண்டே வாய்ஸ் நோட்ஸ் அனுப்பி இருந்த அஞ்சலியின் குரல் கேட்க அவள் விழியோரத்தில் ஒரு துளி கண்ணீர் கசிந்தது… 

விழிதிறந்தவள் கண்கள் இரண்டும் கோபத்தில் சிவந்து போயிருக்க “வேதாந்த் சர்கார்…. உன்னை விடமாட்டேன்… வெயிட் பண்ணு உன்னோட டெத் நான் வந்துட்டே இருக்கேன்….”என சொல்லிக்கொண்டவள் முகத்தில் கொலைவெறி தெரிந்தது… 

அஞ்சலி பூ போல் மென்மையானவள் ருத்விகா புயல் போல்… வேதாந்த் பூவை தொட நினைத்து புயலுக்குள் சிக்கிக்கொள்வானா பொறுத்திருந்து பாப்போம்….

    No comments yet.