டெவில் -17

Sweety Novel's | 21 Mar 2026 | Share

வேதாந்த்தை தன்னை அறைக்குள் இழுத்தவளை திரும்பி பார்க்க ருத்விகா போதையில் தள்ளாடிக்கொண்டு நின்றிருந்தாள்.. 

“ஹேய் என்னாச்சு உனக்கு….” 

அவனை நெருங்கி வந்தவள் கண்களை அழுத்தம்மாய் மூடி மூடி திறந்து “எனக்கு உன் தம்பி ட்ரக்ஸ் கொடுத்து இருக்கான்…”என சொல்ல வேதாந்த் முகம் இறுகியது.. 

கொஞ்சம்கூட அவன் யோசிக்கவில்லை அவள் கழுத்தில் கைவைத்தவன் தரதரவென பின்னாடி இழுத்து சென்று சுவரில் சாய்த்தவன் அப்படியே மேலே தூக்கினான். 

“லீவ் மீ….”ருத்விகா அவன் கைகளில் அடிக்க “என் பிரதர் பத்தி தப்பா எதாவது சொன்னா கேட்டுட்டு எல்லாம் இருக்க மாட்டேன் என் ரியாக்ஷன் இப்படி தான் இருக்கும்….”என்றான் எச்சரிக்கும் விதமாய். 

ஏற்கனவே போதையின் பிடியில் இருந்தவள் இப்பொழுது அவன் கழுத்தை நெரித்ததில் மூச்சு விடவே சிரமப்பட்டாள்… 

வேதாந்த் அவள் தேவை இருந்ததால் கரத்தை எடுத்துகொண்டவன் துவண்டு விழப்போனவளை தாங்கிப்பிடித்தான். 

இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவ “ஐயம் சீரியஸ்….எனக்கு ட்ரக்ஸ் கொடுத்து இருக்காங்க….”என்று ருத்விகா மெல்லிய குரலில் சொல்ல அதன் பின் வேதாந்த் அவளை நன்றாக கவனித்தான்.. 

அவள் சொன்னது உண்மை தான்… அவள் உடலெங்கும் ஆங்காங்கே சிவந்து இருந்தது… ட்ரக்ஸ் ஒத்துக்கொள்ளாத உடலில் இதுபோல் தான் மாற்றம் ஏற்படும்… 

அவள் தோளில் கைவத்து அழுத்தி பிடித்தவன் “யார் உனக்கு ட்ரக்ஸ் கொடுத்தா?…”என்று கேட்க 

“உன் தம்பி வித்யுத்….”என்றவள் உடல் சூடாகியது… மூச்சு காற்றில் கூட அனல் வீசியது.

“அவன் பண்ணிருக்க மாட்டான்….” 

“அவன் தான் எனக்கு பாங்கு கொடுத்தான்…. அதுல தான்….”என்றவள் தலையை பிடித்துகொள்ள அவளை உலுக்கியவன் “அவன் இல்ல வேற… வேற யாரோ…. நல்லா யோசிச்சு பாரு….”என்று சொல்ல ருத்விகாவும் யோசித்து பார்த்தாள்.. 

அவள் ரெடியாகி வெளியில் வரும் பொழுது யாரோ அவள் மீது மோதியது நியாபகம் வந்தது… 

“ம்ம் ஒரு பொண்ணு….”என்றவளால் யார் அந்த பெண் என்று சொல்ல முடியவில்லை… முகம் சரியாக நியாபகம் வரவில்லை…ட்ரக்ஸ் தன்னுடைய வேலையை காட்ட தொடங்க ருத்விகா உடல் வியர்க்க தொடங்கியது.. 

தனக்குள் நிகழும் மாற்றங்களை உணர்ந்தவள் தன்னை காப்பாற்றிக்கொள்ள வேறு வழியில்லாமல் அவன் கரத்தை தட்டி விட்டு வேதாந்த் ஷர்ட்டை பிடித்தவள் ‘சேவ் மீ….”என்றாள்.. 

கண்கள் சுருக்கி பார்த்தவன் ‘சேவ் பண்ணனுமா… எந்த வழில சேவ் பண்ணனும்ன்னு சொல்ற….”என்றவன் பார்வையில் வித்தியாசம் தெரிய அவன் விரல் அவள் முகத்தில் கோடிழுத்தது… 

உடல் சூடாக கண்கள் சிவக்கவும் ருத்விகா அவனை இறுக்கமாய் அணைத்துகொண்டவள் “உனக்கு தெரியும்…. என்னால முடியல….”என்றாள்.. 

அவள் தன்னிடம் இப்படி கெஞ்சுவது அவனுக்கு பிடித்திருந்தது…ஆனாலும் அவன் மனமிறங்கவில்லை “உன்னை இப்போ சேவ் பன்றதுல எனக்கு என்ன பெனிபிட்ஸ் இருக்கு….”என்று கேட்க ருத்விகா நிமிர்ந்து அவனை பார்த்தாள்… 

“இந்தியாவோட ரிச்சஸ்ட் மேன் உன்னை டச் பண்ணனும்ன்னா அதுக்கு….”என்று அவன் முடிக்கவில்லை வேகமாய் அவனை பிடித்து பின்னாடி தள்ளிவிட்டவள் சுற்றி முற்றியும் பார்த்துவிட்டு ப்ரூட்ஸ் பாஸ்கட் இருக்க அதிலிருந்து பழம் நறுக்கும் கத்தியை எடுத்துகொண்டவள் அதை கொண்டு தன் கரத்தை வெட்டிக்கொள்ள பார்க்க வேதாந்த் தடுத்து பிடித்தவன் அதேவேகத்தில் அவள் கரம் பிடித்து தன் பக்கம் இழுத்தவன் இழுத்த வேகத்தில் அவளோடு பெட்டில் சரிந்தான். 

ட்ரக்ஸ் பிடியில் இருந்த ருத்விகா அவனை அணைத்து இதழில் முத்தமிட்டவள் அவன் ஷர்ட் பட்டன் கழட்ட வேதாந்த் அவள் கரத்தை தடுத்து பிடித்தான். 

சில நிமிடங்களுக்கு பின்… 

டாக்டர் ருத்விகாவை செக் செய்துவிட்டு இன்ஜெக்ஷன் போட்டு விட வேதாந்த் “ட்ரக்ஸோட எப்பக்ட் இன்னும் எவ்வளவு நேரம் இருக்கும்?….”என்று வேதாந்த் கேட்கவும் அவன் பக்கம் திரும்பி பார்த்தார்.. 

“இவங்களுக்கு இன்னும் ஹாப்பனவர் அந்த அப்பக்ட் இருக்கும்…. இன்ஜெக்ஷன் போட்ருக்கேன்ல சரியாகிடும்….”என்றவர் ருத்விகாவை பார்த்து “உங்களுக்கு ட்ரக்ஸ் ஒத்துக்கல இனி நீங்க எப்பவும் ட்ரக்ஸ் எடுத்துக்கவே கூடாது…. கொஞ்சம் டோஸ் ஹெவியா இருந்தாலும் அது உங்க உயிருக்கே ஆபத்தாகிடும்….”என்று சொல்ல 

“ஏதோ நானே ட்ரக்ஸ் எடுத்துக்கிட்ட மாதிரி பேசறீங்க….”முனுமுனுத்தவள் விழிகள் மூடிக்கொண்டாள்.. 

“கேர்புலா பார்த்துக்கோங்க….”என்று வேதாந்த்திடம் சொல்லிவிட்டு டாக்டர் அங்கிருந்து செல்ல வேதாந்த் ருத்விகாவை பார்த்தான்.. 

அவளும் அவனை பார்க்க “ஸே தேங்க்ஸ்….”என்று வேதாந்த் சொல்ல கண்கள் சுருக்கியவள் “நான் எதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்?….”என்றாள்.. 

“ஒருத்தர் ஹெல்ப் பண்ணுனா தேங்க்ஸ் சொல்லணும்…. நான் இப்போ உன் உயிரையே காப்பாத்தி இருக்கேன்….’ 

இதழ் சுழித்தவள் “என்னோட தேவை உனக்கு இருக்கு அதனால நீ என்னை சேவ் பண்ணிருக்க…. நான் எதுக்கு உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்….”என்றாள் திமிராய்.. 

வேதாந்த் அதற்கு எதுவும் சொல்லாமல் அவளையே பார்க்க ருத்விகா “ஏன் அப்படி பாக்கிற?….”என்று கேட்க 

“ம்ம் டாக்டர வர வச்சிருக்கனுமான்னு திங்க் பன்றேன்….” 

டாக்டர் வருவதற்கு முன் தானும் அவனும் எப்படி இருந்தோம் என்பது அவளுக்கு நியாபகம் வர முகம் இறுக “ஓவரா திங் பண்ணாத நான் உன்கிட்ட அந்த மாதிரி நடந்துகிட்டது எல்லாம் டிரக்ஸ் எப்பக்ட்டால….”என்றாள்.. 

“ஒ ரியலி….”என்றவன் வாட்ச்சில் டைம் பார்த்துவிட்டு “டாக்டர் ஹாப்பனவர் சொல்லிருக்கார் ஸோ நானும் உனக்கு ஹாப்பனவர் டைம் தர்றேன்… நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ மீடியாவை மீட் பண்ணி நம்ம மேரேஜ் அனவுன்ஸ் பண்ணனும்….”என சொல்ல ருத்விகா விழிமூடியவள் வித்யுத் இல்லையென்றால் தனக்கு டிரக்ஸ் கொடுத்தது யாராக இருக்கும்…”என்று யோசித்தாள்… அவள் நியாபகபடுத்தி பார்த்தாலும் அவள் மேல் மோதிய பெண் முகம் அவளுக்கு நியாபகம் வரவில்லை… அப்பொழுது அவள் மேல் லைட்டாக ஏதோ குத்தியது போல் இருந்த… அந்த பெண்ணின் டிரஸாக இருக்கும் என்று நினைத்து ருத்விகா சாதாரணமாக விட்டுவிட்டாள். 

வேதாந்த்தும் யார் ருத்விகாவுக்கு ட்ரக்ஸ் கொடுத்து இருப்பார்கள் என்று யோசித்தவன் கண்ணாவுக்கு போன் செய்து “செக்யூரிட்டிஸ் டைட் பண்ணு….செக் பண்ணாம யாராவது உள்ள வந்திருக்காங்களான்னு பாரு…. சந்தேகப்படற மாதிரி யாரா இருந்தாலும் சரி அவங்கள உன்னோட இடத்துக்கு கூட்டிட்டு போ நான் வர்றேன்….”என்று சொல்லிவிட்டு கட் செய்தவன் ருத்விகாவை பார்த்தான். 

“உனக்கு அந்த கேர்ள் பேஸ் நியாபகம் இருக்கா?….”என்று கேட்க 

விழிதிறந்தவள் “நோ நியாபகம் வரல… பட் யல்லோ அண்ட் வொய்ட் கலர்ல டிரஸ் வியர் பண்ணிருந்தா…..”என்றாள். 

“ஓகே….”என்றவன் மறுபடியும் கண்ணாவுக்கு போன் செய்து அவள் சொன்ன கலரில் டிரஸ் போட்டிருக்கும் பெண்ணை செக் செய்ய சொல்லிவிட்டு கட் செய்யும் நேரம் வித்யுத் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தான்.. 

போதை இப்பொழுது அவனுக்கு கொஞ்சம் தெளிந்து இருந்தது… அப்பொழுதும் நடந்து வரும் பொழுது அவனிடம் ஒரு தடுமாற்றம் தெரிந்தது. 

“ப்ரோ…என்னாச்சு?….”என்று அவன் கேட்கவும் 

வேதாந்த் “நீ அவளுக்கு பாங்கு கொடுத்தியா?….”என்று அழுத்தம்மாய் கேட்க “ப்ரோ….”இழுத்தவன் “கொடுத்தியா?….”என்று மறுபடியும் கேட்க தலையசைத்தான்… 

வேதாந்த் ருத்விகாவுக்கு ட்ரக்ஸ் கொடுத்திருந்ததை பற்றி சொல்ல பதறியவன் “பட் ப்ரோ நான் ட்ரக்ஸ் எல்லாம் கொடுக்கல….இவங்கள ட்ரங்ஸ் பண்ண வச்சு மீடியா முன்னாடி உங்க மேரேஜ் அன்னவுன்ஸ் பண்ணக்கூடாதுன்னு தான் நானும் விக்ராந்த் ப்ரோவும் பிளான் பண்ணுனோம்….”என்றவன் ருத்விகாவை பார்க்க அவளோ முறைத்து பார்த்தாள் 

“இங்க பாருங்க நான் உங்களுக்கு ட்ரக்ஸ் கொடுக்கல…. எனக்கு உங்களை பிடிக்கல தான் அதுக்காக ட்ரக்ஸ் எல்லாம் கொடுக்கல….”என்றவன் இப்பொழுது வேதாந்த் பார்த்து “ட்ரஸ்ட் மீ ப்ரோ.. நான் பண்ணல….”என்றான். 

“ஐ நோ நீ பண்ணிருக்க மாட்ட….” 

ருத்விகா “எனக்கு உன்மேல தான் டவுட்டா இருக்கு….என்னை தான் உனக்கு பிடிக்கலயே….எனக்கு அலர்ஜி இருக்கறது தெரிஞ்சுக்கிட்டு நீதான் இந்த மாதிரி பண்ணிருக்க….”என்று சொல்ல 

“நோ நான் தான் இல்லன்னு சொல்றேன்ல….” 

“எனக்கு நம்பிக்கை இல்ல….” 

“நீங்க நம்பனும்ன்னா நான் என்ன பண்ணனும்….” 

“வெல் என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லு…. உன்னோட சிஸ்டர் இன் லாவா என்னை அக்சப்ட் பண்ணிக்கறேன்னு சொல்லு….” 

வித்யுத் மறுத்து தலையசைத்தவன் “நோ எனக்கு உங்களை பிடிக்கல….. டெவில் இன் லா உங்களை என்னோட சிஸ்டர் இன் லாவா என்னால அக்சப்ட் பண்ணவே முடியாது….”என்று சொல்லி முடிக்கவில்லை ருத்விகா பில்லோவை எடுத்து அவன் மீது வீசியிருந்தாள்.. 

“கெட் அவுட்….” 

“ப்ரோ இப்போவும் சொல்றேன் இந்த டெவில் கேர்ள் உங்களுக்கு வேண்டாம்….”என்று தன் அண்ணனை பார்த்து சொன்ன வித்யுத் மறுபடியும் பில்லோ பறந்து வரவும் கேட்ச் பிடித்தவன் ருத்விகாவிடம் “ஸாரி டெவில் இன் லா….”என்று சொன்னவன் அங்கிருந்து செல்ல ருத்விகா இதழில் அவளையும் அறியாமல் மென்னகை தோன்றியது… 

கண்ணா ஹோலி பார்ட்டியில் சந்தேகத்துடன் தெரிந்தவர்களை எல்லாம் கார்ட்ஸ் ஹெட் அறைக்கு அழைத்து சென்றான்.. 

வேதாந்த் சொன்னது போல் யல்லோ அண்ட் வொய்ட் கலரில் யாரும் டிரஸ் செய்யவில்லை… 

அவனும் ஒவ்வொரு இடமாக சென்று செக் செய்தவன் பார்வையில் தூரத்தில் சென்று கொண்டிருந்த பெண் விழுந்தாள்… வேதாந்த் சொன்னது போல் எல்லோ அண்ட் வொய்ட் கலரில் தான் அவள் டிரஸ் செய்திருந்தாள்… 

யார் கண்ணிலும் படக்கூடாது என்று வேக வேகமாய் நடந்து கொண்டிருந்தாள் அவள்…திடீரென ஒரு வலிய கரம் அவள் கரம் பிடித்து இழுத்து இழுக்கவும் அதிர்ந்தவள் திரும்பி பார்க்க வித்யுத் நின்றிருந்தான்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.