டெவில் -16

Sweety Novel's | 19 Mar 2026 | Share

வேதாந்த் போன் பேசிவிட்டு திரும்பியவன் ருத்விகாவை காணாமல் “எங்க அவ?….”என்று விக்ராந்த் பார்த்து கேட்க 

“அது… தெரியல..” 

“தெரியலயா?….” 

“ஹாங்… பாட்டி கூப்பிட்டாங்கன்னு போயிருக்காங்க….” 

“பிரஸ்க்கு இன்பார்ம் பண்ணனும்ன்னு சொன்னேன் இந்த டைம்ல தான் போகணுமா….”என்ற வேதாந்த் முகத்தில் கோபம் எட்டிப்பார்த்தது… விக்ராந்த் தான் “மீடியா எங்கையும் போக மாட்டாங்க…. அவங்க வரட்டும்….”என்றவன் “ப்ரோ உன்கிட்ட ஒரு முக்கியமான ஒருத்தர இன்ட்ருடியூஸ் பண்ணனும்….”என்றவன் அங்கிருந்து அழைத்து சென்றனர்.. 

லட்சுமி பாட்டியும் ஜாணவியும் ஒன்றாக சேர்ந்து வந்த விருந்தினர்களை பார்த்து பேசிகொண்டிருக்க அதை பார்த்தபடி நின்றிருந்தாள் அவந்திகா.. 

“இவங்க மருமக நான் அது இவங்களுக்கு நியாபகம் இருக்கா இல்ல மறந்துட்டாங்களா…. இங்க எனக்கு எந்த ரைட்ஸ்ம் இல்ல ரெஸ்பெக்ட்டும் இல்ல….”என்று தனக்குள் திட்டிக்கொண்டவள் ஆதிநாத் அருகில் வந்து “ஏன் தனியா இருக்க?…”என்று கேட்க நிமிர்ந்து கோபம்மாய் பார்த்தாள். 

அவள் கோபம்மாய் இருப்பதது அவருக்கு புரியவில்லை “என்ன?…”என்றவர் அவந்திகா “இந்த வீட்டு மருமக நானா இல்ல அவங்களா….”என்று தூரத்தில் நின்றிருந்த ஜானவியை காட்டியவள் 

“இங்க எனக்கு எந்த ரெஸ்பெக்ட்டும் இல்ல நான் எதுக்கு இங்க இருக்கேங்கறதே எனக்கு தெரியல….” 

“அவந்திகா… ஜாணவி இங்க இருக்க போறது கொஞ்சநாள் தான்….”என்றவர் அவள் தோளில் கைப்போடவும் வேகமாய் அவர் கரத்தை தட்டிவிட்டவள் “டோன்ட் டச் மீ…..பர்ஸ்ட் அவங்கள இங்கிருந்து வெளில போக சொல்லுங்க அவங்க இங்க இருக்கிறது எனக்கு சுத்தம்மா பிடிக்கல….”என்றவள் கோபம்மாய் அங்கிருந்து சென்றாள். 

ஆதிநாத் முகம் இறுக தன் அம்மாவுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்த முதல் மனைவியை பார்த்தவர் “ஜாணவி நீ திரும்பவும் ப்ராப்லம் கிரியேட் பன்ற உன்னோட வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டல்ல இதுக்கு மேல உன்னை விட்டு வைக்க முடியாது….”என்று கோபம்மாய் தனக்குள் சொல்லிக்கொண்டார்.. 

“வாங்க வாங்க டெவில் இன் லா…”என்று வித்யுத் ருத்விகா கைபிடித்து அழைத்து சென்றுகொண்டிருந்தான்.. 

ஒரு கட்டத்தில் ருத்விகா பொறுமை இழந்தவலாய் “ஹேய் விடு….’அவன் கரத்தை உதறியவள் “என்னை என்ன சொன்ன?…”என்று கேட்க 

“டெவில் இன் லா….” 

உளறியவன் அவள் கண்கள் சுருக்கி முறைத்து பார்த்ததில் “சிஸ்டர் இன் லா….”என்றான். 

“கொன்னுடுவேன் உன்னை…”விரல் நீட்டி எச்சரித்தவள் சுற்றி முற்றியும் பார்த்து விட்டு “எங்க உன் பாட்டி?…”என்று கேட்க 

“பாட்டி… பாட்டி எங்க போனாங்க….ஹான் அங்க பாருங்க அந்த பாட்டி தான் கூப்பிட்டாங்க….”என்றவள் அவளை அழைத்துகொண்டு ஒரு பெண் அருகில் சென்றான் 

“இவ உனக்கு பாட்டியா?…”ருத்விகா மெல்லிய குரலில் கேட்க அவனோ அந்த பெண்ணை பார்க்காமலே “ஆமா பாட்டி தான….”என்றான்.. 

அவன் வெயிட்டர் யாராவது கண்ணில் படுகிறார்களா என்று பார்த்துகொண்டிருக்க அவன் முகத்திற்கு நேராக சொடக்கிடவும் “என்ன டெவில் இன் லா…”சலித்துகொண்டே திரும்பியவன் அவனுக்கு முன்னாள் நின்றிருந்த பெண் தான் சொடக்கிட்டு அழைத்து இருக்கவும் கீழிருந்த மேல் வரை பார்த்தான்.. 

மார்டன் உடையில் ஸ்டைலிஷாக இருந்தவள் “வித்து என்னை என்ன சொன்ன?….”என்று கேட்க 

அவளை பார்த்து மிடரு விழுங்கியவன் “மிரு சிஸ் ….நீங்களா?….”என்றான்.. 

“சிஸ் சொல்லாதடா….”எச்சரித்த மிருதுளா ருத்விகா பார்த்து “ஹாய் ஐயம் மிருதுளா… குளோபல் என்டர்டையின்மென்ட் சேர்மன் டாட்டர்….”என்று தன்னை அறிமுகப்படுத்திகொள்ள 

“ஆல்சோ விக்ராந்த் ரூமர் கேர்ள் பிரண்ட்… ஐயம் ரைட்….’ருத்விகா கேட்க மிருதுளா முகம் மாறியது.. 

“நைஸ் டூ மீட் யூ மிருதுளா….”என்றவள் ருத்விகா கைநீட்ட அவள் கரம் பிடித்து ஹாண்ட் ஷேக் செய்த மிருதுளா “விக்ராந்த் சொன்னது கரெக்ட்தான் உங்களுக்கு ஹெட் வெயிட் அண்ட் ஆட்டிடுயுட் அதிகம் தான்….”என்றாள் 

ருத்விகா காற்றில் பறந்த முடியை ஸ்டைல்லாய் ஒதுக்கவிட்டவள் “நீ ரொம்ப ஸ்ட்ரைட் பார்வேர்ட் போல…”என்றாள் 

“எஸ்… மனசுல என்ன தோணுதோ அதை சொல்லிடுவேன்…’ 

இருவரும் பேசிகொண்டிருந்த கேப்பில் வித்யுத் பாங்க் பால் எடுத்து வந்திருந்தான்… 

“டெவில் இன் லா….”என்று கூப்பிட வந்தவன் ருத்விகா பார்த்த பார்வையில் “பியூட்சர் சிஸ்டர் இன் லா….இந்தாங்க ட்ரிங்ஸ் எடுத்துக்கோங்க….”என்றான்.. 

ருத்விகா புருவம் உயர்த்தியவள் “என்ன இது?…”என்று கேட்க 

“பாங்க் பால்…ஹோலில இது இல்லாம இருக்குமா… ஹாவிட்….”என்றவன் கிளாஸ் நீட்ட 

“எனக்கு இல்லையா….”என்ற மிருதுளா அதை வாங்க பார்க்க கையை பின்னாடி இழுத்துக்கொண்டவன் “இது ஒன்லி என்னோட சிஸ்டர் இன் லாக்கு மட்டும் தான்….”என்றாள்.. 

“ஏன் அவங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா?…”என்று மிருதுளா கேட்க வித்யுத்தும் சிரித்துக்கொண்டே “பிகாஸ் அவங்க என் பிக் பிரதரை மேரேஜ் பண்ணிக்க போறாங்கல்ல அதனால தான்….”என்று சமாளித்தான்.. 

ருத்விகாவுக்கு அந்த நேரம் பார்த்து விக்கல் எடுக்கவும் “வாட்டர் வேணும்….”என சொல்ல 

“நான் போய் எடுத்துட்டு வர்றேன்… நீங்க இதை குடிங்க….”என்றவன் கிளாஸை அவளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றான். 

சில நிமிடங்களுக்கு பின்.. 

வேதாந்த் ருத்விகாவை காணாமல் வாட்சில் டைம் பார்த்தவன் “இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கா….வேணும்ன்னே பன்றாளா… ம்ம் அவளுக்கு தான் ஹெட் வெயிட் அதிகமாச்சே…..”என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன் முகம் இறுக சற்று தள்ளி நின்றிருந்த கண்ணாவை அருகில் அழைத்தான்.. 

அவனும் அருகில் வந்தவன் “ஸார்….”என்று கூப்பிட 

“மீடியாவை ஒரு ஹாப்பனர் வெயிட் பண்ண சொல்லு… அண்ட் அவங்களுக்கு தேவையான அரேஞ்மெண்ட்ஸ் எல்லாம் பண்ணிக்கொடு….”என்று அவனுக்கு சொல்லிவிட்டு வித்யுத் தேடி செல்ல வித்யுத் இரண்டு மூன்று பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து அவர்களுடன் சிரித்து பேசியபடி பாங்க் குடித்து கொண்டிருந்தான்.. 

அவன் அருகில் சென்ற வேதாந்த் “வித்து…”என்று கூப்பிட அவன் பக்கம் திரும்பி பார்த்த வித்யுத் “ப்ரோ….”என்றான் வாய் குளரலாக.. 

“வேர் இஸ் ருத்விகா?…” 

‘ருத்விகாவா…எந்த ருத்விகா… எனக்கு ருத்ரா தெரியும் தேவிகா தெரியும்…. “என்றவன் கண்கள் சுருக்கி கியூட்டாக “ருத்விகா தெரியாதே ப்ரோ….”என்றான்.. 

“உனக்கு பாங்கு ஓவர் ஆகிடுச்சு….ருத்விகா எங்க?…வா என்கூட….”என்றவன் வித்யுத் குர்தா காலர் பிடித்து தூக்க அவனோ தன் பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண்களிடம் கைநீட்டி “கேர்ள்ஸ் ஹெல்ப் மீ… ஹெல்ப் மீ….”என்று கத்தினான்.. 

வேதாந்த் முகம் இறுக ‘ஷெட்அப் வித்து….”என்றவன் தூக்க எழுந்து நின்றதும் “நீதான ருத்விகாவை கூட்டிட்டு வந்த… எங்க அவ?….”என்று கேட்க 

“அங்க?…”என்றவன் வீட்டை கைகாட்டினான்… 

“வா…”என்றவன் அவனையும் இழுத்து செல்ல ஸ்டெப்ஸில் ஏறும் பொழுது வித்யுத் தடுமாறி கீழே விழுந்தவன் கைகளை ஊன்றி விட அதில் அவன் கரங்கள் சிவந்துவிட்டது. 

அவ்வளவு தான் அப்படியே கீழே அமர்ந்தவன் இரண்டு கைகளையும் பார்த்து விட்டு உடனே சிறுபிள்ளை போல் உதடு பிதுக்கி அழ தொடங்கிவிட்டான். 

வேதாந்த் பெருமூச்சு இழுத்துவிட்டவன் நெற்றியை தேய்த்து “வித்யுத் உன் ட்ராமா ஓவரா இருக்கு….”என்று சொல்ல 

அவனோ கைகள் நீட்டி “பாருங்க ப்ரோ… அடிபட்ருச்சு….”என்று வராத கண்ணீருடன் சொல்ல 

“ஓகே நீ இங்கையே இரு நானே ருத்விகா எங்க இருக்கான்னு பாக்கறேன்….”என்றவன் வீட்டிற்குள் சென்றான்…

ஹோலி செலபிரேஷன் பார்ட்டி எல்லாம் கார்டனில் தான் நடக்கவும் வீட்டிற்குள் யாருமில்லை…ஒவ்வொரு அறையாக ருத்விகா இருக்கிறாளா என்று பார்த்தபடி நடந்த வேதாந்த் ஒரு அறையை கடந்து செல்லும் பொழுது ஒரு கரம் அவனை உள்ளே இழுத்து ரூம் கதவை லாக் செய்து கொண்டது.. 

மிருதுளா பார்ட்டியை என்ஜாய் செய்துகொண்டிருந்தவள் ஒரு வெயிட்டர் ட்ரெயில் எடுத்து சென்ற ட்ரிங்ஸ் எல்லாம் கீழே விழுவது போல் இருக்கவும் அதை கவனித்தவள் தன்னை கடந்து செல்லும் பொழுது அவரை தடுத்தாள்.. 

“ஒன் செகண்ட்….” 

வெயிட்டர் நிற்கவும் கிளாஸ் எல்லாம் நகர்த்தி வைத்தவள் அந்த வெயிட்டர் மென்னகை சிந்தி ”தேங்க்ஸ் மேம்…. “என சொல்ல பதிலுக்கு அவளும் சிரித்தவள் “கேர்புல்….”என்றாள்.. 

அதை தள்ளி நின்று பார்த்துகொண்டிருந்த விக்ராந்த் முகத்தில் சிறு பொறாமை தெரிந்தது.. 

அவள் அருகில் சென்றவன் “என்ன மேடம்…. வெயிட்டர்க்கு ஹெல்ப் எல்லாம் பண்ணியாச்சா?….”என்று கேட்க அதில் அவள் பக்கம் திரும்பி பார்த்தவள் இதழில் மென்னகை தோன்றியது.. 

“விக்ராந்த்….” 

வேகமாய் வந்து அவனை அணைத்துவிடுவித்தவள் கரத்தை இறுக பிடித்துகொண்டான். 

“ஸார் ரொம்ப பிஸியா இருக்கீங்க போல….உன்னை பார்க்கவே முடியல….”என கேட்க 

“பிஸியா எல்லாம் இல்ல….”என சொல்ல வந்தவன் அவள் கண்கள் சுருக்கி பார்க்கவும் “யா வேதாந்த் ப்ரோகிட்ட மீடியா இன்ட்ரேக்ஷன் பத்தி பேசிட்டு இருந்தேன் அதான் உன்னை பார்க்கல…”என்றான். 

“ஓகே….அந்த கேர்ள் தான் உன் ப்ரோ மேரேஜ் பண்ணிக்க போறாரா…. ஹெட் வெயிட் அதிகமா இருக்கு….. பட் உன் ப்ரோக்கு பர்பெக்ட் மேட்சிங் தான்….”என்றவள் இதழ் சுழித்து “அவ என்ன சொன்னா தெரியுமா?….”என்று கேட்க “என்ன?…”என்றான்.. 

“இன்ட்ருடியூஸ் ஆகும் போது நீ விக்ராந்த் ரூமர் கேர்ள் பிரண்ட் தானன்னு கேட்டா….” 

விக்ராந்த் சிரிப்பை இதழுக்குள் மறைத்துகொண்டவன் “நீ என்ன ஆன்சர் பண்ணுன?….”என்று கேட்க 

“நான் எதுவும் சொல்லுல….” 

“சொல்ல வேண்டியது தான….” 

“என்ன சொல்லிருக்கனும்….” 

“நான் ரூமர் கேர்ள் பிரண்ட் எல்லாம் இல்ல ஒரிஜினல் கேர்ள் பிரண்ட் தான்… நாங்க லவ் பன்றோம் சூன் மேரேஜ் பண்ணிக்க போறோம்ன்னு….”என்று விக்ராந்த் சொல்ல மிருதுளா முகம் மாறியது.. 

“விக்ராந்த் உன்கிட்ட நான்….”என்று அவள் ஏதோ சொல்ல வர சரியாய் பாட்டி “விக்ராந்த் இங்க வா….”என்று கூப்பிடவும் “பாட்டி கூப்பிடறாங்க….”என்றவன் அங்கிருந்து செல்ல போய் “ஹேய் நீ பாட்டியை மீட் பண்ணி பேசிட்டியா?….”என்று கேட்க அவள் “இல்ல….”என்பது போல் தலையாட்டவும் “ஓகே வா….”என்றவன் அவளை பாட்டியிடம் அழைத்து சென்றான்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.