கண்ணாடி முன் ரெடியாகி கொண்டிருந்தாள் ருத்விகா… வொய்ட் கலர் ஸ்லிவ்லஸ் லாங் லெஹாங்காவை அணிந்து இருந்தாள்… அதில் மிரர் வொர்க் செய்திருக்க அவள் அழகுக்கு அந்த டிரஸ் இன்னும் அழகு சேர்த்தது..
மேக்கப் போட்டு முடித்ததும் கண்ணாடியில் தன்னை பார்த்துக்கொண்டவள் “இன்னிக்கு யாரு அஞ்சலி அக்காவை கொலை பண்ண ஆள் அனுப்புனதுன்னு கண்டுபிடிக்கணும்….”என்று தனக்குள் சொல்லிக்கொண்டவள் வெளியில் சென்றாள்.
வேதாந்த் ரெடியாகி வெளியில் கார்டனுக்கு செல்ல கெஸ்ட் எல்லாம் வந்திருந்தனர்…
அதில் புதிதாக அவர்கள் கம்பனியுடன் டையப் செய்திருக்கும் ஸ்ரீ குரூப் ஆப் கம்பனி எம்டியுடன் அமர்நாத் பேசிகொண்டிருக்க அதை பார்த்ததும் அவர் அருகில் செல்ல போனவன் முன்னாள் வேகமாய் ஓடிவந்து நின்றான் வித்யுத்…
பின்னாடியே விக்ராந்த்தும் ஓடிவந்தவன் மூச்சு வாங்க “ஏன்டா ஓடிவந்த?…”என்று கேட்க வித்யுத் ஸ்டைல்லாய் கண்ணாடி அணிந்து இருந்தவன் அதை தலைக்கு மேலே ஏற்றி விட்டு அவனை பார்த்து குறும்பாய் கண்ணடித்து விட்டு “ப்ரோ நீ எதுக்காக வந்தியோ நானும் அதுக்காக தான் வந்தேன்….”என்றவன் இப்பொழுது வேதாந்த் பக்கம் திரும்பி பார்த்தான்
வேதாந்த் புரிந்துகொண்டவன் “நோ வித்து….”என்று சொல்ல
“ஸாரி ப்ரோ…டுடே நீங்க சொல்றதை கேட்க மாட்டேன்….”என்றவன் கையில் அள்ளி எடுத்து வந்திருந்த கலரை வேதாந்த் கன்னத்தில் அப்பினான்..
“ஹேய் நான் தான் பர்ஸ்ட்டு….”என்று சின்ன பிள்ளை போல் சந்தோசமாய் துள்ளி குதித்தவனை பார்க்க இருவருக்கும் சிரிப்பு தான் வந்தது…
“வித்யுத் யூ ஆர் பிக்கேவிங் லைக் கிட்….”விக்ராந்த் கிண்டல் செய்ய
“ஓட்ஸ் ஓகே வேதாந்த் ப்ரோக்கு எப்பவும் நான்….”என்று முடிக்கவில்லை இருவரும் டைமிங்கில் “பேபி பிரதர் அதான….”என்றனர்.
“கரெக்ட்….”என்றவன் வீட்டிற்குள் இருந்து வந்தவளை பார்த்து விட்டு “ஏஞ்சல் என்ன டெவில் மாதிரி டிரஸ் பண்ணிட்டு வராங்க….”என்று சொல்ல
“நீ யாரை சொல்ற?…”என்ற விக்ராந்த் திரும்பி ருத்விகாவை பார்த்தவன் “ப்ரோ உன்னோட பியான்சி வர்றாங்க….”என்றான்..
வேதாந்த் திரும்பி பார்க்கவில்லை “சோ வாட்….”என்றான் அலட்சியம்மாய்.
“தட்ஸ் மை ப்ரோ…”என்ற வித்யுத் “ப்ரோக்கு அவங்க மேல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல….”என்று சொல்லிகொண்டிருக்கும் போதே ருத்விகா அருகில் வந்திருந்தவள் அவன் சொன்னதை கேட்டுவிட்டாள்…
“யாருக்கு என்மேல இன்ட்ரெஸ்ட் இல்ல….”என்று கேட்க அதில் மூவரும் திரும்பி பார்த்தனர்..
வித்யுத் இதழ் சுழித்தவன் “என் ப்ரோக்கு தான் உங்கமேல இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொன்னேன்… எப்படி இன்ட்ரெஸ்ட் வரும் நீங்க என்ன அழகாவா இருக்கீங்க…”என்றான்
“ஓ… அப்போ நான் அழகா இல்லையா?…”ருத்விகா கேட்க
அவளை பற்றி தெரியாமல் வித்யுத் “மிரர்ல உங்களை நீங்க பார்த்து இருக்கீங்களா இல்லையா… என் பிரதர்க்கு முன்னாடி நீங்க அவரேஜ் ம்ம்ஹும் பிலோவ் அவரேஜ் தான்….”என்றான்.
“வித்யுத் ஷெட்அப்….”என்று விக்ராந்த் எச்சரிக்க அப்பொழுதும் அவன் கேட்கவில்லை…
“நான் அவரேஜ் அதுவும் பிலோவ் அவரேஜ்…அப்போ உன் அண்ணா ஹாண்ட்ஸம்மா?….”
“ஹாண்ட்ஸம் மட்டுமில்ல ஸ்மார்ட்டும் கூட அவரை எல்லாம் மேரேஜ் பண்ணிக்கணும்ன்னா வேற லெவல்ல இருக்கனும்….”
“அப்படியா ஸார்… எந்த லெவல்ல இருக்கனும்….”
“என்ன கிண்டல் பன்றிங்களா….”
“இங்க வா….”என்று ருத்விகா விரல் அசைத்து கூப்பிட ஒரு அடி அவளை நோக்கி எடுத்து வைத்தவனுக்கு அவளிடம் அடிவாங்கியது நியாபகம் வந்தது..
“நோ வித்யுத்… திஸ் கேர்ள் வெரி டெஞ்சரஸ் போக கூடாது….”மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொண்டவன் “என்ன?…”என்றான்..
“நான் அழகா இல்லன்னு சொன்னல்ல உன் அண்ணாவை கன்டிணியுஸா பைவ் மினிட்ஸ் என்னையே பார்க்க வைக்கிறேன்….நான் எவ்வளவு அழகுன்னு உன் அண்ணா சொல்லாம சொல்வான்….””என்று அவள் சொல்லவும் வித்யுத் சிரித்தவன் ‘என்ன சேலஞ்சா….என் ப்ரோ பைவ் மினிட்ஸ் என்ன ஒன் மினிட் கூட பார்க்க மாட்டாரு….”என்றான்..
“சேலஞ் அக்சப்டட்….”என்றவள் வேதாந்த் நோக்கி செல்ல விக்ராந்த் “ஏன்டா….”என்றான்.
“ப்ரோ பத்தி எனக்கு தெரியாதா…”என்று சொன்ன வித்யுத் ருத்விகா அருகில் சென்றதும் வேதாந்த் அவள் பக்கம் பார்க்கவும் அதிர்ந்தான்…
“ப்ரோ நம்பி சேலஞ் பண்ணுனது தப்பா… நான் தான் பல்பு வாங்க போறனோ…”
வித்யுத் மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொள்ள விக்ராந்த் “இதை சேலஞ் பன்றதுக்கு முன்னாடி நீ யோசிச்சு இருக்கனும்…”என்றான்..
ருத்விகா வேதாந்த் இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவியது… வேதாந்த் ஒரு செகண்ட் அவளை பார்த்துவிட்டு வேறு பக்கம் பார்வையை திருப்ப ருத்விகா சொடக்கிட்டு மீண்டும் தன்னை பார்க்க செய்தாள்..
“நோ ப்ரோ… பார்க்காதீங்க…”வித்யுத் கத்த
ருத்விகா அவன் பக்கம் திரும்பியவள் “உஷ்… சைலன்ட்டா இருக்கனும்….”என்றவள் மறுபடியும் வேதாந்த்தை பார்த்தாள்..
அவளின் காந்த விழிகள் ஈர்க்க”சொல்லு நான் அழகா இல்லையா….”என்றவள் வேதாந்த் சொல்ல வரவும் அவன் இதழில் விரல் வைத்து தடுத்தவள் “நீ சொல்ல வேண்டாம் பைவ் மினிட்ஸ் என்னையே பார்த்துட்டு இரு போதும்….”என்றவள் அவன் விழிகளை பார்த்துக்கொண்டே பக்கத்தில் இருந்த தட்டில் இருந்து கலர் பொடியை கையில் எடுத்தவள் அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அதை தன்னுடைய கன்னத்தில் பூசிக்கொண்டவள் அவனை நெருங்கி செல்ல வித்யுத் ஹார்ட் பீட் அதிகரித்தது..
நெஞ்சில் கைவைத்துகொண்டவன் “என்ன எனக்கு ஹார்ட் பீட் ரைஸாகுது ஒருவேளை சேலஞ்ல நான் பல்பு வாங்கிடுவன்னா…”புலம்பலாக சொல்லிக்கொள்ள விக்ராந்த் சிரித்தான்..
அதில் கடுப்பானவன் “சிரிக்காத ப்ரோ…”என்று அவனை இடித்து தள்ளிவிட விக்ராந்த் வாட்ச் பார்த்தவள் விசிலடித்து “ஆல்ரெடி த்ரீ மினிட்ஸ் பினிஷ்….”என்றான்.
“ப்ரோ…”பதறியவன் வேதாந்த் பார்க்க அவன் ருத்விகா விழிகளில் மூழ்கி இருந்தான்..
“போர் மினிட்ஸ் டன்….”விக்ராந்த் சொல்ல
“ப்ரோ நீ வேற….”
ருத்விகா இதழில் வெற்றி புன்னகை தோன்ற கையில் இருந்த கலர் பொடியை வேதாந்த் முகத்தில் பூச பார்க்க அவனோ அவள் கரம் பிடித்து தடுத்தவன் இப்பொழுது சிரித்தான்.
பிடித்திருந்த அவள் கரத்தை பிடித்து வளைத்து திருப்பியவன் “வின் பன்றதுக்கு முன்னாடி செலபிரேட் பண்ணக்கூடாது பியான்ஸி….”என்றவன் வித்யுத் பார்த்து கண்ணடித்தான்..
வித்யுத் சந்தோசத்தில் கைகள் மடக்கி காற்றில் குத்தியவன் “யாருகிட்ட…. ப்ரோ ஐ லவ் யூ…”என்றவன் வேதாந்த்தை நோக்கி முத்தத்தை பறக்கவிட்டான்.
ருத்விகா கோபமானவள் “என்னை விடு….”என்று சொல்ல “ஹோலி செலபரேட் பண்ண வேண்டாமா?….”என்றவன் அவள் அதிர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே பின்னாடி இருந்து அவளை அணைத்தபடி கன்னதோடு கன்னம் உரச இப்பொழுது வித்யுத் விக்ராந்த் இருவரும் அதிர்ந்து பார்த்தனர்..
“என்னோட ப்ரோவா இது?…”
வேதாந்த் அவள் கன்னதோடு கன்னம் உரச அவன் கன்னத்தில் இருந்த கலர் அவள் முகத்தில் பட்டது…. ருத்விகா அவளையும் அறியாமல் அவன் நெருக்கத்தில் விழிமூடினாள்..
யாழோ மூரலோ
தேனோ பேசும் நேரமோ
பாலோ… பாதமோ…
ஆடை காலின் நிகலோ
கரைகளில் கரையும் வெண்ணுறை
கடைத்திடும் மொழிகளா
விழிகளின் வளையல் வானவில்
நிறங்களே காதலே
நீ இன்றி மூடுமே
என் வானம் நீதானே
காதலே என்னாளும்
உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே….
வேதாநந் ருத்விகா இருவரையும் வித்யுத் வாயை பிளந்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தவன் விக்ராந்த் தலையில் தட்டவும் “நீ ஏன் ப்ரோ அடிக்கிற….”என்றான்..
“ம்ம் அவங்க ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காங்க அதை பார்த்துட்டு இருக்க….”
“இதுக்கு பேர் ரொமான்ஸா….”
“பின்ன இல்லையா… ஸ்டார்ட்டிங் இப்படிதான் ஆரமிக்கும் போய் பிரிச்சு விடு….’
விக்ராந்த் சொல்லவும் வித்யுத் வேதாந்த் அருகில் சென்றவன் “ப்ரோ அந்த டெவிலை விடுங்க….”என்று சொல்லி வேதாந்த் கைபிடித்து இழுக்க அவனும் ருத்விகாவை விடுவித்தான்…
சவாலில் தோற்றத்தில் கோபமான ருத்விகா அவனிடமிருந்து விலகியதும் “ஹவ் டேர் யூ… என் கன்னத்துலயே கலர் பூசறியா உன்னை….”என்றவன் அவனை அடிக்க கையை இந்த முறை வித்யுத் அவள் கரத்தை தடுத்து பிடித்தான்..
இவ்வளவு நேரம் விளையாட்டு பையனாக இருந்தவனா இவன் என்று யோசிக்கும் அளவுக்கு அவன் முகத்தில் அவ்வளவு கோபம்….
“என் முன்னாடியே ப்ரோவை அடிக்க பாக்கறீங்க….”
ருத்விகா விழிவிரித்து பார்த்தவள் “ஓ உன் பிரதர் மேல அவ்வளவு பாசமா….”என்றவள் இப்பொழுது வேதாந்த் பார்க்க அவனோ வித்யுத் தோளில் கைவைத்து “அவளை விடு…”என்றான்..
அவன் சொன்னதும் வித்யுத் கையை விடுவிக்க வேதாந்த் ருத்விகாவிடம் “என் பிரதர் என்மேல ரொம்ப பாசம் வச்சிருக்கான்…. பி கேர்புல் அகைன் இந்த தப்பை பண்ணக்கூடாது….”என்றவன் “கமான்….”என அவன் கைபிடித்து நேராக மீடியா இருந்த பக்கம் அழைத்து சென்றான்..
வித்யுத் போகும் அவர்களையே பார்த்தவன் “அவ்வளவு தான் ப்ரோ மீடியா முன்னாடி இன்ட்ருடியூஸ் பண்ண போறாரு…. இப்போ என்ன பன்றது….”என்று சொல்ல
“நான் வேதாந்த் ப்ரோவை ஸ்டாப் பன்றேன் நீ ருத்விகா அங்கிருந்து கூட்டிட்டு போ….”என்ற விக்ராந்த் வித்யுத் காதில் ஏதோ சொல்ல முகம் மலர்ந்தவன் “சூப்பர் ஐடியா ப்ரோ….”என்றான்…
“டைம் வேஸ்ட் பண்ணாத சொன்னதை செய்… கமான்….”என்றவன் முன்னாடி செல்ல பின்னாடியே வித்யுத் சென்றான்.
வேதாந்த் போன் வரவும் எடுத்து பேச “என் கையை விடு….”என்றவள் அவன் கரத்தில் இருந்து தன் கரத்தை உருவிக்கொண்டாள்..
விக்ராந்த் வித்யுத் அவர்கள் அருகில் வந்தவர்கள் “ருத்விகா உங்களை பாட்டி கூப்பிடராங்க….”என்று சொல்ல
“பாட்டியா…”அவள் கண்கள் சுருக்கி பார்க்கவும்
“வாங்க டெவில் இன் லா… உங்களுக்கு என் பாட்டி அவங்க பிரண்ட்ஸ் எல்லாம் இன்ட்ருடியூஸ் பண்ணி வைக்கறாங்களாம்….”என்ற வித்யுத் ருத்விகா கரம் பிடித்து அங்கிருந்து அழைத்து சென்றான்… ( என்னடா பிளான் பன்றிங்க…)
No comments yet.