சர்கார் ஹவுஸ்…
ருத்விகா கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்க அவளையே பார்த்தனர் எல்லாரும்..
அவந்திகா குறுகுறுவென அவளையே பார்த்தவள் “இந்த கேர்ள் தான் வேதாந்த் மேரேஜ் பண்ணிக்க போறானா… ரொம்ப ஆட்டிடுயுட் காட்டறா வேதாந்த்கு டப் கொடுப்பா போல….”என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
ருத்விகா வாயில் சுவிங்கம்மை மென்றபடி முடியை ஸ்டைல்லாய் காதோரம் ஒதுக்கிவிட்டவள் எல்லாரையும் அலட்சியம்மாய் ஒரு பார்வை பார்த்து விட்டு “இப்போ எதுக்கு எல்லாரும் இப்படி பாக்கறீங்க….. “என்றாள்..
“எங்க வேதாந்த் மேரேஜ் பண்ணிக்க போற பொண்ணு எப்படி இருக்கான்னு பார்த்துட்டு இருக்கோம்….”என்று லட்சுமி பாட்டி சொல்ல
“நீங்க பார்க்கல ஸ்கேனிங் பன்றிங்க….”
லட்சுமி பாட்டியிடமே சரிக்கு சமமாய் பேசுபவளை ஆச்சிரியம்மாய் பார்த்த அவந்திகா “இந்த கேர்ள் ரொம்ப டேஞ்சர் போல… நாம எல்லாம் பக்கத்திலயே போக கூடாது அதுதான் நமக்கு நல்லது….”என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்..
அமர்நாத் தொண்டையை செரும்பியவர் “நான் வேதாந்த் டேட்….”என்று சொல்ல “ம்ம் தெரியும்… நீங்க வேதாந்த் டேட் இவங்க பாட்டி அப்பறம் அவர் சித்தப்பா இவங்க அவரோட எக்ஸு அந்த கேர்ள் அவரோட பிரஸன்ட்….”என்று ருத்விகா சொல்ல ஜாணவி முகம் இறுகியது.
“உனக்கு ரெஸ்பெக்ட் கொடுத்து பேச தெரியாதா?…”என்று கேட்க
இதழ் சுழித்து சிரித்தவள் “ரெஸ்பெக்ட் எல்லாம் என்கிட்ட நீங்க எக்ஸ்பக்ட் பண்ண கூடாது… அண்ட் நான் சொன்னதும் ஒன்னும் பொய் இல்லையே நீங்க அவரோட எக்ஸ் தான….”என்றவள் ஆதிநாத் பார்த்து “எப்படி அங்கிள் ஒரே வீட்ல எக்ஸ் வொய்ப் அண்ட் பிரஸன்ட் வொய்ப்பை மெயின்டைன் பன்றிங்க?…”என்றாள்..
அப்பொழுது “ஷெட் அப்….”என்று கத்தும் சத்தம் கேட்க ருத்விகா திரும்பி பார்த்தாள்…
ஷூ சத்தம் அழுத்தமாய் கேட்க மேல் தளத்தில் இருந்து வேதாந்த் தான் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்..
அவனை பார்த்ததும் ருத்விகா இதழ் சுழித்தவள் அருகில் வந்ததும் “நீ என்ன வேணும்ன்னாலும் பேசலாம்ன்னு நினைக்காத…அடுத்தவங்க ப்ரைவைஸியில இன்வால்வ் ஆகக்கூடாது….”என்றான்..
ருத்விகா எழுந்து நின்றவள் அவன் விழியோடு விழிகலந்து பார்த்தவள் “இது அட்வைஸா இல்ல வார்னிங்கா?…”என்றாள் புருவம் உயர்த்தி..
“அட்வைஸ் எல்லாம் சொன்னா கேட்கிறவங்களுக்கு தான் பண்ணுவாங்க… ‘
‘”வெல்… அப்போ இது வார்னிங் தான்….”
“நெக்ஸ்ட் டைம் நீ இந்த தப்பை பண்ணுனா பனிஷ்மென்ட் தான் தருவேன்…”என வேதாந்த் சொல்ல ருத்விகா ஜோக் கேட்டது போல் சிரிக்க தொடங்கினாள்..
அவள் சிரிப்பதையே வேதாந்த் பார்க்க சில நொடிகளில் அவள் சிரிப்பு அப்படியே மறைந்து முகம் இறுக “எனக்கு வார்னிங் பனிஷ்மென்ட் தர்றதுக்கு நீ யாரு… உன்னை பார்த்து பயப்பட பொண்ணு நான் கிடையாது….”என்றாள் அழுத்தம்மாய்..
எல்லாரும் வேதாந்த்திடமே திமிராக பேசுபவளை ஆச்சிரியம்மாய் பார்த்தனர்…இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி நின்றிருக்க அமர்நாத் தான் “ருத்விகா உன்னை பத்தி நாங்க நிறைய கேள்வி பட்ருக்கோம் நேர்ல பார்க்கும் போது அதெல்லாம் உண்மைதான்னு தோணுது… இந்த தைரியம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…. மேரேஜ் நடந்ததுக்கு அப்பறம் இந்த வீட்டுக்கு ஏத்த மாதிரி அட்ஜஸ்ட் ஆகிப்பேன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு…”என்றார்..
இப்பொழுது அவர் பக்கம் திரும்பி பார்த்தவள் “வாட்… என்ன சொன்னிங்க நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணுமா… எனக்கு அட்ஜஸ்ட் பண்ணி எல்லாம் பழக்கம் இல்ல எப்பவும் எனக்கு ஏத்த மாதிரி எல்லாரையும் அடஜஸ்ட் பண்ணி போக வச்சு தான் பழக்கம்….”என்றாள்.
லட்சுமி பாட்டி முகம் இறுக “இங்க நீ அட்ஜஸ்ட் பண்ணிதான் ஆகணும்….”என்று அழுத்தம்மாய் சொன்னவர் சர்வண்ட் அழைக்கவும் ஜாணவி எழுந்து “அத்தை நானே கூட்டிட்டு போறேன்….”என்றார்.
“நீங்க எதுக்கு?….”என்று வேதாந்த் கண்கள் சுருக்கி அவரை சந்தேகம்மாய் பார்த்து கேட்க “ஏன் வேதாந்த் உன்னோட பியான்ஸியை நான் எதாவது பண்ணிடுவேன்னு பயப்படறியா….”என்றார்
“பயம்ங்கறது இந்த வேதாந்த் கிடையாது….”என அவன் சொல்லவும்
“அப்பறம் என்ன நான் கூட்டிட்டு போறேன்….”என்றவர் ருத்விகாவை பார்த்து “வா….”என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல ருத்விகா உதய்யிடம் “என்னோட லக்கேஜ் எல்லாம் அனுப்பிடு…”என்றவள் அவர் பின்னாடி சென்றாள்..
உதய் அவளுடைய ட்ராலி பேக்கை பணியாளிடம் கொடுத்து விட்டவன் “இப்போ நான் எங்க ஸ்டே பன்றது….”என்று யோசிக்க
வேதாந்த் பணியாளை அழைத்து “கெஸ்ட் ஹவுஸ் கூட்டிட்டு போ….”என்றான்
“தேங்க்ஸ் ஸார்….”என்றவன் தனக்குள் “நிம்மதியா அங்க தனியா இருக்கலாம்….”என சொல்லிக்கொண்டவன் வெளியில் கெஸ்ட் ஹவுஸ் சென்றான்..
அப்பொழுது தான் வித்யுத் வரவும் உதய் அவனை பார்த்துவிட்டு அருகில் சென்றவன் “என்ன ஸார் எப்படி வந்திங்க?….”என்று கேட்க
வித்யுத் புருவம் உயர்த்தி பார்த்தவன் “என்ன கிண்டல் பன்றியா?…”என்றான்
பதறியவன் “நோ நோ ஸார்… நான் மேடம்கிட்ட வேண்டாம்ன்னு தான் சொன்னேன் அவங்க தான் கேட்கல… ஆக்சுலி அவங்க உங்களை ஏர்போர்ட்லயே கண்டுபிடிச்சிட்டாங்க….”என்று சொல்ல
“தெரிஞ்சும் தெரியாத மாதிரி ஆகட்டிங் பண்ணிருக்காங்க… உங்க மேடம் ஓவரா பன்றாங்க…”
“ஓவரா இல்ல ஸார் ரொம்ப ஓவரா பண்ணுவாங்க… இங்க பாருங்க ஸார் பார்க்க இன்னசன்ட்டா இருக்கீங்க அதனால தான் சொல்றேன் அவங்கள டீல் பன்றது ரொம்ப கஷ்டம்… உங்க அண்ணா லைப்பை சேவ் பண்ணணும்ன்னு நினைச்சீங்கன்னா எப்படியாவது நடக்கபோற மேரேஜை ஸ்டாப் பண்ணிடுங்க….”என்றவன் போற போக்கில் “நான் உங்களோட நல்லதுக்காகவும் தான் சொல்றேன்….”என சொல்லிவிட்டு சென்றான்.
“நான் பண்ணனும்ன்னு நினைச்சதை இவன் எனக்கு பண்ணிட்டு போறான்… பட் ஐயம் ஷுர் அந்த டெவில் கேர்ள்ல நான் என்னோட சிஸ்டர் இன் லாவா எப்பவும் அக்சப்ட் பண்ணமாட்டேன்….”என சொல்லிக்கொண்டவன் வீட்டிற்குள் சென்றான்..
ஜாணவி ருத்விகாவிடம் சில கேள்விகள் கேட்க அவளும் பதில் சொன்னவள் அவர் “லாஸ்ட் கொஸ்டின் எதுக்காக நீ வேதாந்த்தை மேரேஜ் பண்ணிக்கனும்ன்னு நினைக்கிற?…”என்று கேட்க
“அவனை கொலை பண்ண….”என்றவள் அவர் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிடவும் பக்கத்தில் இருந்த அறையை பார்த்தவள் “இதுதான் என்னோட ரூம்மா….”என்று கேட்டவள் அந்த அறைக்குள் செல்ல போய் பின் கதவு அருகில் சென்றதும் திரும்பி பார்த்தவள்
“என்னை இன்வெஸ்டிகேஷன் பன்ற மாதிரி கொஸ்டின் மேல கொஸ்டின் பண்ணுணிங்கல்ல இப்போ நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா?….’என்று கேட்க
அவர் “என்ன?….”என்பது போல் பார்க்கவும் “இன்னும் இந்த வீட்ல நீங்க எதுக்கு இருக்கீங்க?….”என்றாள்.
“அது….”
“நீங்க ஆன்சர் பண்ண வேண்டாம்… நானே கண்டுபிடிப்பேன்….”என்று சொல்லி சிரித்தவள் “பாய்…”என்பது போல் விரல் அசைத்து சிரித்துவிட்டு உள்ளே சென்றாள்.
அறைக்குள் சென்றதும் கதவை லாக் செய்துகொண்டவள் தலையை அழுத்தக்கோதிவிட்டு சென்று தளர்வாய் பெட்டில் அமர்ந்தவள் “இப்போ என்னோட பிரடிக்ஷன்படி வித்யுத் சர்கார், ஜாணவி ஸ்ரீகாந்த்க்கு நான் வேதாந்த்தை மேரேஜ் பன்றது பிடிக்கல….ஒருவேளை இவங்க தான் அஞ்சலி அக்காவை கொலை. பண்ண சொன்னதா இருக்குமா….”என்று தனக்குள் சொல்லிக்கொண்டவள் பெருமூச்சு இழுத்துவிட்டு “அந்த கல்ப்ரிட் யாரா இருந்தாலும் நான் அவங்கள சும்மா விடப்போறது இல்ல….”என்று தனக்குள் சொல்லிக்கொண்டவள் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தாள்…
வேதாந்த் தான் உள்ளே வந்தான்… அவனை அழுத்தம்மாய் பார்த்தவள் “மேனர்ஸ்ன்னா என்னன்னு தெரியாதா?…அடுத்தவங்க ரூம்க்கு பர்மிசன் கேட்டுட்டு தான் உள்ள வரணும்….”என்றாள்.
வேதாந்த் கழுத்தில் இருந்த டையை தளர்த்தியவன் அவள் அருகில் சென்று பெட்டில் கால் வைத்து ருத்விகா நோக்கி சரிய அவள் பின்னாடி சாயவில்லை அவன் நெருக்கத்தில் இருக்க அவன் விழியோடு விழிகலந்து பார்த்தாள்
வேதாந்த் இதழ் சுழித்தவன் திமிராய் ‘அடுத்தவங்க ரூம்க்கு தான் நாக் பண்ணிட்டு போகணும்… என்னோட ரூம்க்கு தேவையில்ல….”என்று சொல்ல
“உன்னோட ரூம்மா…இது இப்போ என்னோட ரூம்….”
“நீயே இப்போ எனக்கு சொந்தம்….நீ இருக்க ரூமுக்குள்ள வர நான் ஏன் பர்மிசன் வாங்கணும்?….”என்றவன் விரல் அவள் முகத்தில் கோடிழுக்க ருத்விகா தடுக்கவில்லை..
முகத்தில் இருந்து அவன் விரல்கள் கழுத்தில் கீழே இறங்கவும் தடுத்து பிடித்தவள் “என்ன ட்ரை பன்ற?….”என்றாள்..
அவள் விழிகளை அழுத்தம்மாய் பார்த்தவன் இப்பொழுது அவள் மேல் நன்றாகவே சாய்ந்துவிட்டான்… கழுத்தில் முகம் புதைக்க ருத்விகா பற்களை கடித்து தன்னுடைய கோபத்தை கண்ட்ரோல் செய்தாள்.
மெல்ல கழுத்தில் இருந்து நிமிர்ந்து அவள் காதில் இதழ் பதித்தவன் மெல்லிய குரலில் ‘ஆர் யூ ஷுர்…. தெரிஞ்சுக்கணுமா?….”என்றான்..
ருத்விகா அவனை தன்னிடமிருந்து தள்ளி விடப்பார்க்க அவனே விலகிக்கொண்டவன் “இங்க பாரு….நீ ஒன்னும் என்னை இம்ப்ரெஸ் பன்ற அளவுக்கு எல்லாம் அழகி கிடையாது… எனக்கு தேவை நாயக் டாட்டர்… அஞ்சலி இறந்துட்டா அதனால தான் உன்னை மேரேஜ் பண்ணிக்கனும்ன்னு நினைக்கறேன்… இட்ஸ் ஜஸ்ட் எ டீல் மேரேஜ்… மேரேஜ்க்கு அப்புறம் என்னோட தேவை முடிஞ்சதும் நீ உன் லைப்ல உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணலாம்….”என்றான்
“ஓ அப்போ நீ டிவோர்ஸ் பண்ணிடுவியா?….’என்று ருத்விகா கேட்க மறுத்து தலையசைத்தவன் ஸ்டைல்லாய் பேண்ட் பாக்கெட்க்குள் கைவிட்டபடி “பிக்ஸ் பண்ணிட்டேன் மிஸஸ் வேதாந்த் சர்கார் ஒன் அண்ட் ஒன்லி நீ மட்டும் தான்…. உன்னையும் அந்த நேம்மையும் விட்டு தரமாட்டேன்….”என்றான் அழுத்தம்மாய்.
“நான் உன்னோட பிளானுக்கு கோப்பரேட் பண்ணலன்னா….”என்று ருத்விகா கேட்க
சிரித்தவன் “உனக்கு வேற வழியில்லை… உன் பேரன்ட்ஸ் உயிரோட இருக்கனும்ன்னா நீ நான் சொல்ற மாதிரி தான் நடந்துக்கனும்…. உனக்கு வேற சாய்ஸ் இல்ல…. “என்று சொல்ல ருத்விகா முகம் இறுகியது..
No comments yet.