டெவில் -12

Sweety Novel's | 15 Mar 2026 | Share

வேதாந்த் “ஆர் யூ ஸ்கேர்ட்?…”என்று கேட்க வித்யுத் சிரித்தவன் “பயமா எனக்கா… நான் வித்யுத் சர்கார் அதுவும் என்னோட பிக் பிரதர் கூட இருக்கும் போது நான் எதுக்கு பயப்பட போறேன்….”என்றான். 

“தட்ஸ் மை பாய்….”என்று கர்வம்மாய் அவனை பார்த்தவன் “நீ கார் ஸ்பீட் ரைஸ் பண்ணு….”என்றவன் தன்னுடைய துப்பாக்கியை எடுத்தான்.. 

அவர்கள் எல்லாம் யாருடைய ஆட்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும் “நியத் நீ உன் வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டல்ல இப்போ என்னோட பினிஷிங் எப்படி இருக்கும்ன்னு பாரு….”என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் புல்லட் பில் செய்ததும் “வித்து நீ இந்த சைட் வா….”என்று சொல்ல இருவரும் இடம் மாறினர்… 

வேதாந்த் காரை ஓட்டிக்கொண்டே துப்பாக்கியால் முன்னாடி சென்று கொண்டிருந்த இரண்டு கார்களையும் ஷூட் செய்தவன் டையர் வெடித்து இரண்டு கார்களும் மோதும் நேரம் மின்னல் வேகத்தில் கார்களுக்கு இடையில் புகுந்து கடந்து சென்றுவிட்டான்.. 

அவனை பாலோவ் செய்த கார்கள் பாதி நின்று விட மீதி கார்கள் விடாமல் அவர்கள் காரை பின் தொடர்ந்தன.. 

திடீரென காரின் வேகத்தை குறைத்தவன் இடிக்க வந்த காரை அவன் இடித்து தள்ளிவிட்டு மறுபடியும் காரில் வேகத்தையும் அதிகரித்தவன் கொஞ்சதூரம் சென்றதும் காரை நிறுத்திவிட்டு வித்யுத்திடம் “காருக்குள்ளயே இருந்து வேடிக்கை பாரு….”என்றவன் காரில் பின்னால் இருந்து அவனுக்கு வேண்டியதை எடுத்துகொண்டு தள்ளாடியபடி சென்று முன்னாடி நின்றவன் சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்துக்கொண்டு ஸ்டைல்லாய் காரில் சாய்ந்து நின்றான்… 

மரணமே வந்தாலும் கூட அவன் இப்படிதான் கெத்தாய் நிற்பான் போல…அந்த அளவுக்கு அவனை பார்க்கும் பொழுது கெத்தாக இருந்தது.. 

அவனை பாலோவ் செய்து வந்த கார்களில் இருந்து அடியாட்கள் இறங்க சிகரெட் பிடித்துக்கொண்டே அவர்களை பார்த்து “ஹாய்…..”என்று கையாட்டியவன் “இன்னிக்கு உன்னை கொல்லை பண்ணாம விடப்போறது இல்ல எங்ககிட்ட இருந்து நீ எப்படி தப்பிக்கிறன்னு பார்க்கலாம்….”என்று ஒருவன் கத்தி சொல்ல 

“ரியலி இந்த வேதாந்த் சர்காரை கொலை பண்ண போறிங்களா….”என்றவன் சிரித்துக்கொண்டே சிகரெட் எடுத்து கீழே போட்டு ஷூ காலால் மிதித்தவன் சிரிப்பு அப்படியே மறைந்து போய் முகம் இறுக “இந்த வேதாந்த் நிழலை கூட யாரும் டச் பண்ண முடியாது…”என சொன்னவன் காரின் மேலிருந்து பெரிய துப்பாக்கியை எடுக்க எல்லாரின் முகமும் பயத்தில் தெரிந்தது. 

“பாய்….”கையசைத்தவன் அவர்கள் அதிர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே ட்ரிக்கரை அழுத்த வெளியேறிய தோட்டக்கள் அவனை கொல்ல வேண்டும் என்று வந்தவர்கள் நெஞ்சில் துளைத்தது…. சில நிமிடங்கள் அந்த இடத்தில் துப்பாக்கி சத்தம் மட்டும் தான் கேட்டது… 

எல்லாரின் உயிரும் அடங்கியபின் வேதாந்த் வித்யுத் பக்கம் திரும்பி பார்த்தவன் “ஹீரோ யாரு?…”என்று கேட்க 

வித்யுத் சிரித்தவன் “அப்கோர்ஸ்… ஒன் அண்ட் ஒன்லி வேதாந்த் சர்கார்….”என்று சொல்ல வேதாந்த் அழகாய் கண்ணடித்தான்… 

வித்யுத் தனக்கு நடந்ததை அப்படியே கொஞ்சம் மாற்றி சொல்ல ருத்விகா கேட்டவள் “ஸ்டாப் த கார்….”என்றாள். 

“மேடம்….” 

“ஐ செட் ஸ்டாப் த கார்….”என்று அவள் மறுபடியும் சொல்ல உதய்”காரை ஸ்டாப் பண்ணுங்க இல்லன்னா எங்க மேடம் துப்பாக்கியை எடுத்திருவாங்க….”என்று வார்ன் செய்து முடிக்கவில்லை ருத்விகா தன்னுடைய பெண்னை எடுத்தவள் முன்னாடி வந்து வித்யுத் கழுத்தில் வைத்தாள்.. 

“இது பெண் தேவைபட்டா கத்தியா கூட யூஸ் பண்ணலாம்….” 

அதில் அதிர்ந்த வித்யுத் அதிர்ந்தவன் காரை ஓரமாக நிறுத்த ருத்விகா அவனை காரில் இருந்து இறங்க சொன்னாள். 

அவனும் காரில் இருந்து இறங்க அவள் முன்னாடி வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்தவள் ” ஹேய் ஓவர் ஸ்மார்ட் டிரைவர் டிரஸ்ல வந்த நீ என்னை கூகுள்ல சர்ச் பண்ணி பார்திருக்கும் போதே நான் உங்க சர்கார் பேமலில இருக்கவங்கள அதுவும் அந்த வேதாந்த் பிரதர்ஸ் பத்தி தெரிஞ்சுக்காம இருந்திருப்பனா… ஓகே பாய் ரங்கசாமி….. “என்று அவனுக்கு கையை காட்டியவள் காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினாள் 

அவள் பக்கத்தில் அமர்ந்து இருந்த உதய் அதிர்ந்து “என்ன மேடம் அவரை அங்கையே விட்டுட்டு வந்துட்டிங்க?….”என்று கேட்க 

“ஏன் உன்னையும் இறக்கி விடணுமா…. காரை ஸ்டாப் பண்ணட்டுமா?….”என்றவள் அவன் பக்கம் திரும்பி பார்க்க மறுத்து தலையசைத்தவன் “வேண்டாம் மேடம்…. நான் எதுவும் கேட்க மாட்டேன்….”என்றான். 

சிரித்தவள் “குட் பாய்….”என்று பாராட்டியவள் “சர்கார் ஹவுஸ்க்கு வழி சொல்லு….”என்று சொல்ல உதய்யும் உடனே தன்னுடைய போனில் லொக்கேஷன் செக் செய்தவன் அவளுக்கு வழி சொல்ல ருத்விகா டிரைவ் செய்தாள்.. 

வித்யுத் இடையில் கைவைத்துகொண்டு வெயிலில் மூச்சு வாங்க நின்றிருந்தவன் “டெவில் கேர்ள்….. என்னையே வேதாந்த் சர்கார் பிரதரையே ஏமாத்திட்டு கார் எடுத்துட்டு போய்ட்டாங்க….விடமாட்டேன்…கண்டிப்பா என் பிரதர் லைப்ல இந்த டெவில்ல என்ட்ரியாக விடவே மாட்டேன்… எனக்கு பிடிக்காத யாரும் என்னோட சிஸ்டர் இன் லாவா நான் அக்சப்ட் பண்ணவே மாட்டேன்….”என்று கோபமாய் சொல்லிக்கொண்டவன் அடுத்தநொடியே “இப்போ நான் எப்படி வீட்டுக்கு போறது…. என் போன் வேற கார்லயே மிஸ் ஆகிடுச்சு….இந்த கேட்டப்ல நான் சர்கார்ன்னு சொன்னா ஒருத்தரும் நம்ப மாட்டாங்க….”என்று முனுமுனுத்துக்கொண்டவன் என்ன செய்வது என்று யோசித்துகொண்டிருந்த நேரத்தில் தான் எர்ப்போர்ட்டில் அவன் பார்த்த பெண் ஸ்கூட்டியில் வந்தவள் அவன் பக்கத்தில் வந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு திரும்பி பார்த்தவள் அழகாய் சிரித்தாள்.. 

அவளை பார்த்ததும் “ஹாய்….”என்று கையை உயர்த்தியவன் “வித்து என்ன பன்ற நீ பொண்ணுங்க தான் உன்னை பார்த்து சிரிக்கணும் உன் பின்னாடி வரனும் நீ யாரையும் பார்த்து சிரிக்க கூடாது…. உன் இமேஜ் என்னாகறது….”என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன் அவள் “ஹாய் ஏர்போர்ட்ல பார்த்தோமே….”என்று சொல்லவும் 

“ம்ம் பார்த்தோம்…. சோ வாட்….” 

அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள் “நீங்க டிரைவர் தான?…”என்று கேட்க 

“ஏன் பார்த்தா அப்படி தெரியலயா….”என்றவனே ஒருமாதிரி சந்தேகம்மாய் தன்னை பார்த்துக்கொண்டான்.. 

“இல்ல ஸ்டைல்லா இங்கிலிஷ் பேசறீங்களே….” 

“சோ வாட்ன்னு சொன்னது ஸ்டைலா இங்கிலிஷ் பேசறதா?….”என்றவன் அவள் சிரித்தவள் “டிரைவர் மாதிரி தெரியல அதான் கேட்டேன்… ஓகே இந்தாங்க உங்க பெண்…. “என்றவள் பத்திரமாக எடுத்து வைத்திருந்ததை அவனிடமே திருப்பி கொடுத்தாள். 

பெண்ணை இப்படியும் அப்படியுமாய் வித்யுத் திருப்பி பார்க்க அதில் “உங்க பெண் தான் ஏன் சந்தேகம்மா பாக்கறீங்க….”என்றாள்.. 

“இந்த பெண்னை நீங்களே வச்சுக்கலாமே… ஏன் என்கிட்ட கொடுத்துட்டீங்க….” 

‘பார்க்கும் போதே தெரியுதுங்க ரொம்ப காஸ்ட்லி பெண்னு….’ 

“ம்ம் காஸ்ட்லி தான் எப்படியும் டென் லேக்ஸ் இருக்கும்….”என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன் “இது காஸ்ட்லி எல்லாம் இல்ல ஜஸ்ட் நார்மல் பெண் தான்….என்னை மாதிரி ஒரு டிரைவர்கிட்ட எப்படிங்க காஸ்டலி பெண் எல்லாம் இருக்கும்….”என்றான்.. 

“ஓகே பட் எனக்கு அடுத்தவங்க திங்ஸ் வச்சுக்கிறது பிடிக்காது…. பெண் யூஸ் பண்ணிட்டு உங்ககிட்ட கொடுக்க தேடுனேன் ஆனா உங்களை காணோம் இப்போ வழில பார்த்துட்டேன் உங்ககிட்ட கொடுத்துட்டேன்….” 

அவள் சிரித்து பேசும் பொழுது கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.. 

அவன் தன்னையே பார்ப்பதை பார்த்து “என்ன அப்படி பாக்கறீங்க?….”என்று அவள் கேட்கவும் 

“நத்திங்….”என்பது போல் தலையசைத்தவன் “ஏன் இங்க நிக்கறீங்க….”என்று கேட்டதற்கு “என் ஓனர் என்னை விட்டுட்டு போட்டாரு அதான் எப்படி வீட்டுக்கு போறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்…”என்றான். 

“இந்த முதலாளிங்களே இப்படிதான் சர்வண்ட்ஸ் எல்லாம் அடிமை மாதிரி நடந்தரது இந்த வெயில்லயா இறக்கிவிட்டுட்டு போவாங்க… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல….”அவள் திட்டவும் 

“ம்ம் ஆமாங்க கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல….”என்றவன் அவள் “நான் வேணா உங்களை ட்ராப் பண்ணட்டுமா?…”என்று கேட்கவும் விழிவிரித்து ஆச்சிரியம்மாய் பார்த்தவன் “வாட்… நீங்க என்னை ட்ராப் பன்றிங்களா?….”என்றான்.. 

“ட்ராப் பன்றேன்னு தான சொன்னேன் அதுக்கு ஏங்க ஷாக் ஆகறீங்க….வாங்க….” 

“ஓகே….”என்றவன் அவள் பின்னாடி அமர்ந்து கொள்ள ஹெல்மேட் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தாள்… 

“சேபட்டி ரொம்ப முக்கியம்ல….”என சொல்லவும் “எஸ் எஸ் சேப்டி ரொம்ப முக்கியம் தான்….”என்றவன் ஹெல்மேட் போட்டுகொள்ள வண்டியை ஸ்டார்ட் செய்தவள் வழிநெடுகிலும் அவனுடன் பேசிக்கொண்டே வந்தாள். 

வித்யுத்க்கு அவளை ரொம்பவே பிடித்து போனது….டிராபிக் சிக்னலில் அவள் வண்டியை நிறுத்த வித்யுத் சுற்றி முற்றியும் வேடிக்கை பார்த்தவன் அவர்களுக்கு சற்று தள்ளி இருந்த காரை பார்த்து அதிர்ந்தான். 

“இது விக்ராந்த் கார்ல… இவன் மட்டும் பார்த்தான் பிக் ப்ரோகிட்ட மாட்டிவிட்ருவான்….என்ன பன்றது… அதான் ஹெல்மெட் போட்ருக்கேன்ல அவனுக்கு தெரியாது….”என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன் அவளிடம் “ஏங்க சீக்கிரம் போங்க….”என்றான். 

“சிக்னல் போட்டா தான போக முடியும்….”என்றவள் க்ரீன் சிக்னல் விழுந்ததும் அங்கிருந்து கிளம்பியதும் தான் நிம்மதியானாள்… 

சர்கார் ஹவுஸ் தான் அவன் ட்ராப் செய்ய சொல்லிருக்க அவன் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவள் வீட்டை பார்த்து விட்டு “இவ்வளவு பெரிய இடத்துலயா நீங்க வேலை பாக்கறீங்க….”என்றாள். 

“ம்ம் ஆமா…. சர்கார் பேமலி பத்தி கேள்வி படருக்கீங்களா?….”வித்யுத் கேட்க 

“ம்ம் கொஞ்சம் தெரியும்…பெரிய பணக்காரங்களா இருந்தாலும் அவங்க மனசு ரொம்ப சின்னதா தான இருக்கு…. ஓகே….”என்றவள் அவன் நேம் பேட்ஜ் பார்த்து விட்டு “ரங்கசாமியா….”என்றாள். 

“எஸ்….”அவன் தலையாட்டவும் “ஓகே ரங்கா… பாய்….”என சொன்னவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய அவனோ தடுத்தான்.. 

“என்ன?….” 

“என்னை ட்ராப் பண்ணிருக்கீங்க உங்க நேம் சொல்லுலயே?…” 

அழகாய் சிரித்தவள் “தன்வி….”என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல “தன்வி… தன்வி வேதாந்த் சர்கார் நேம் நல்லா இருக்கே….”என்று சொல்லி பார்த்துக்கொண்டவன் இதழில் மென்னகை தோன்றியது.. ( அப்போ நீ உனக்கு பொண்ணு பார்க்கலயாடா….)

    No comments yet.