டெவில் -11

Sweety Novel's | 14 Mar 2026 | Share

சென்னை ஏர்போர்ட்… 

பார்க்கிங்கில் கார் சென்று கார் நிற்க அதிலிருந்து இறங்கினான் வித்யுத்… 

வொய்ட் கலர் டிரைவர் யூனிபார்மில் தலையில் தொப்பி எல்லாம் போட்டிருந்தான்.. 

“என்னை கண்டுபிடிச்சிருவாங்களோ….”தனக்குள் சொல்லிக்கொண்டவன் போன் எடுத்து இப்படியும் அப்படியுமாய் திரும்பி நின்று போட்டோ எடுத்துக்கொண்டான். 

எடுத்த செல்பியை பார்த்தவன் “எந்த ஆங்கில்ல பார்த்தாலும் டிரைவர் மாதிரி தெரியலயே….பேஸ்ல ரிச்னஸ் தெரியுது…வர்றது வேற ரொம்ப டேஞ்சரான ஆளு கண்டுபிடிச்சிட்டா என்ன பன்றது….”யோசித்தவன் பின் “நாம எல்லாம் வருவோம்ன்னு எக்ஸ்பக்ட் பண்ணிருக்க மாட்டாங்க… பார்த்துக்கலாம்…”என இதழ் சுழித்து அசால்ட்டாக சொல்லிக்கொண்டவன் ஏர்போர்ட்க்குள் சென்றான்.. 

அவன் பார்வை ஜீன்சில் கடந்து சென்ற இளம்பெண்களின் மீது பதிந்தது… 

“வாவ் அழகா இருக்காங்களே இந்த டிரைவர் யுனிபார்ம்ல யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டாங்க….”என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டு ருத்விகாவுகாக வெயிட் செய்துகொண்டிருந்த நேரத்தில் “எக்ஸ்கியூஸ்மீ….”என்ற ஒரு காந்தக் குரல் கேட்க திரும்பி பார்த்தான். 

தேவதை போல் பெண்னொருத்தி அவன் பக்கத்தில் நின்றிருந்தாள்…. அவளுடைய குரல் மட்டுமில்லை கண்களும் ஈர்த்தது.. 

வித்யுத் விழியிமைக்க மறந்தவனாய் அவளையே பார்க்க அவளோ ஏதோ சொன்னவள் அவன் தலையாட்டி கேட்கவும் “ஓகே தாங்க….”என்று சொல்லி கையை நீட்டினாள்.. 

கனவில் இருந்து கண் விழிப்பவன் போல “என்ன?….”என்று கேட்க 

சிரித்தவள் “பெண் தாங்க….”என்றாள்.. 

வித்யுத் துழாவும் சிரித்தவள் அவன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்த பெண்ணை அவளே எடுத்துக்கொண்டு வேகமாய் அங்கிருந்து சென்றாள். 

போகும் அவளையே பார்த்தவன் ஹார்ட் வேகமாய் துடிக்கவும் நெஞ்சில் கைவைத்துகொண்டான்… 

“வித்து ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டியா என்ன…”என தன்னை தானே கேட்டுக்கொண்டவன் செக்கிங் முடித்து விட்டு எல்லாரும் வெளியில் வர அவர்கள் பக்கம் திரும்பி பார்த்தான்.. 

ருத்விகாவும் செக்கிங் எல்லாம் முடித்து விட்டு வர அவன் பின்னே உதய் தோளில் தன்னுடைய பேக் மாட்டிக்கொண்டு அவளுடைய ட்ராலியையும் தள்ளிக்கொண்டு வந்தான்.. 

கண்ணில் போட்டிருந்த கண்ணாடியை தலைக்கு மேலே ஏற்றிவிட்டவள் “உதய் சர்கார் ஹவுஸ்க்கு எப்படி போறது கார் அரேஞ் பண்ணிட்டியா?….”என்று கேட்க 

“அவங்க டிரைவர் அனுப்பி பிக்கப் பன்றதா சொன்னாங்க மேடம்….”என உதய் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வித்யுத் அவர்கள் அருகில் சென்றவன் “போலாமா மேடம்….”என்றான்.. 

ருத்விகா அவன் பக்கம் திரும்பி பார்க்க உதய் அவனை பார்த்ததும் “மேடம் இவர்…”என்று சொல்ல வர அவளோ விழியசைவில் “எதுவும் பேசாத….”என்பது போல் தடுத்தாள். 

ஸ்டைல்லாய் தலைமுடியை ஒதுக்கிவிட்டவள் “நீ?….”என்று வித்யுத் பார்த்து கேட்க 

“டிரைவர் மேடம்…. அமர்நாத் ஸார் உங்களை பிக்கப் பண்ண சொன்னாரு…” 

“நான் தான் ருத்விகான்னு உனக்கு எப்படி தெரியும்?…”என்று ருத்விகா கேட்க “அது….”நெற்றியை தேய்த்தவன் “டவுட்டு வந்திடுச்சா என்ன ஸ்டார்ட்டிங்லயே கொஸ்டின் பன்றாங்க….”என தனக்குள் சொல்லிக்கொண்டவன் “கூகுள்ல சர்ச் பண்ணுனேன் மேடம்…. ருத்விகா நாயக்ன்னு டைப் பண்ணுனா அப்படியே கண்ணாடி எல்லாம் போட்டுட்டு ஸ்டைல்லா நீங்க நடந்து வர்ற மாதிரி போட்டோ எல்லாம் வந்துச்சு….”என்றான். 

“ஸ்மார்ட்….”பாராட்டியவள் “வாங்க மேடம்….”என்று சொல்லிவிட்டு அவன் முன்னாடி செல்லவும் சொடக்கிட்டு அழைத்தாள். 

வித்யுத் திரும்பி பார்க்க “இந்த லக்கேஜ் எல்லாம் யார் எடுத்துட்டு வருவா….”திமிராய் கேட்க “அதான் உங்க அசிஸ்ட்டன்ட் இருக்கான்ல….”என முனுமுனுத்துக்கொண்டவன் “நான் எடுத்துட்டு வர்றேன் மேடம்….”என்று சொல்லு உதய்யிடமிருந்து ட்ராலியை வாங்கிக்கொண்டான் 

“ப்ரோ மேரேஜ் கெடுத்து விட என்ன எல்லாம் பண்ண வேண்டியது இருக்கு….”மைண்ட் வாய்ஸில் புலம்பலாக சொல்லிக்கொண்டவன் டிராலியை தள்ளிக்கொண்டு காருக்கு செல்ல ருத்விகாவும் சென்றாள். 

“இவர் வேதாந்த் சர்கார் தம்பி தான… ஏன் டிரைவர் வேஷம் போட்ருக்காரு….என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல….”புலம்பலாக சொல்லிக்கொண்டவன் ருத்விகா திரும்பி பார்த்து “வா…”என்று கூப்பிட அவர்கள் பின்னாடி சென்றான்.. 

கார் சாலையில் சீரான வேகத்தில் செல்ல வித்யுத் காரை ஓட்டிக்கொண்டே மிரர் வழியாக ருத்விகாவை பார்த்தான். 

“அழகா இருக்காங்க… ப்ரோக்கு மேட்சிங் தான் பட் கேரக்கர் தான் பிடிக்கல… நோ வித்யுத் இந்த டெவில்ல ப்ரோ லைப்ல என்ட்ரியாக விடவே கூடாது….”என தனக்குள் சொல்லிக்கொண்டவன் “மேடம்….”என்று கூப்பிட ருத்விகா “வாட்?…”என்றாள். 

“நீங்க வேதாந்த் ஸாரை மேரேஜ் பண்ணிக்க போறிங்களா?…”என்று கேட்க 

“ம்ம்…அந்த டெவிலை தான் மேரேஜ் பண்ணிக்க போறேன்….”திமிராய் சொல்ல வித்யுத் முகம் இறுக கோபத்தில் அவன் வேண்டும் என்றே காரை வளைத்து திருப்பியதில் சீட் பெல்ட் போடாதிருந்த ருத்விகா விழுவது போல் சென்று சுதாரித்து கொண்டாள்… 

“போச்சு அடிவாங்க போறான்…”என்று உதய் அவள் பக்கம் பார்க்க ருத்விகா தன்னுடைய கோபத்தை கட்டுபடுத்தியவள் “பார்த்து டிரைவ் பண்ணு….”என்றாள்.. 

“என்னோட ப்ரோவையா சொல்றீங்க….”என்று சொல்லிக்கொண்டவன் மிரர் வழியாக ருத்விகாவை பார்த்து “ஸாரி மேடம்….”என சொல்ல 

“இட்ஸ் ஓகே…” 

“மேடம் நீங்க தப்பா நினைக்கலன்னா உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா….” 

ருத்விகா போனை ஆப் செய்தவள் “என்ன பேசணும்?….”என்று கேட்க 

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க….” 

“உன்கிட்ட நான் அழகா இருக்கனா இல்லையான்னு கேட்டனா… என்ன சொல்லணுமோ அதைமட்டும் சொல்லு மேன்…. “என்றாள் திமிராய். 

“இல்ல மேடம் ரொம்ப அழகா இருக்கீங்க பார்க்க நல்ல பொண்ணாவும் இருக்கீங்க….” 

“யாரு இவங்க நல்ல பொண்ணா…சரியா ராட்சசி, டெவில்….”உதய் மைண்ட் வாய்ஸில் சொல்லிக்கொள்ள 

“என்ன உதய் மைண்ட் வாய்ஸ்ல என்னை பத்தி எதாவது சொன்னியா என்ன….”என்று கேட்டாள் ருத்விகா. 

“ஸ்ட்ரைட்டா தான் எதையும் சொல்ல முடியாதுன்னா மைண்ட் வாய்ஸ்ல நினைக்கிறது கூட கேட்ச் பன்றாங்களே….”முனுமுனுத்துக்கொண்டவன் “நோ மேடம்…”என்றான்.. 

“நீ சொல்லு….” 

அவள் வித்யுத் பார்த்து சொல்லவும் “அதான் மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க நல்ல பொண்ணாவும் இருக்கீங்க நீங்க எதுக்கு மேடம் இந்த சரகார் பேமலிக்குள்ள வர ஆசைப்படறீங்க ரொம்ப டெஞ்சரான பேமலி மேடம் அதுவும் அந்த வேதாந்த் சரியான ராட்சன், டெவில் கொலை எல்லாம் சர்வ சாதாரணமா பண்ணுவாரு…”என்று அவன் வேதாந்த் பற்றி அவளிடம் தப்பு தப்பாக சொல்ல ருத்விகாவும் “அப்படியா…”என்றவள் அவன் சொல்வதை எல்லாம் ஸ்டோரி கேட்பது போல் கேட்டாள். 

“அவர் கூட இருக்கிறது உங்களுக்கு தான் மேடம் ஆபத்து… ஒரு செம்பிள் சொல்லட்டுமா….”என்று சொல்ல 

“செம்பிளா….” 

“எஸ் மேடம் இப்படிதான் ஒருநாள் நான் அவர்கூட கார்ல போயிட்டு இருந்தேன்….’ 

“என்ன?….” 

“ஐயோ உளறிட்டனே….”முனுமுனுத்துக்கொண்டவன் “அது அவர் சொன்ன இடத்துக்கு கார்ல கூட்டிட்டு போய்ட்டு இருந்தேன் மேடம்….”என்று திருத்தினான். 

ருத்விகா தளர்வாய் சாய்ந்து கொண்டவள் “ம்ம் மேல சொல்லு ரங்கசாமி….”என்றாள். 

“ரங்கசாமியா….”முழித்தவன் தன்னுடைய டிரஸில் இருந்த பேட்ஜ் பார்க்க அதில் அந்த பெயர் தான் போட்டிருந்தது. 

“நேம் பேட்ஜ் எல்லாம் பார்த்திருக்காங்களா….”என சொல்லிக்கொண்டவன் தான் ஒருமுறை வேதாந்த்தோடு சென்ற பொழுது என்ன நடந்தது என்பதை அவளிடம் சொன்னான்.. 

நிலாமகள் ஊர்வலம் வந்துகொண்டிருந்த நள்ளிரவு நேரம்…. 

யாரும்மில்லா சாலையில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது கார்.. 

வித்யுத் தான் தனக்கு பிடித்த கொரியன் பாடலை வால்யூம் அதிகம் வைத்து அதற்கு ஏற்றார் போல் வைப் செய்தபடி அவ்வளவு வேகமாய் காரை டிரைவ் செய்துகொண்டிருந்தான்… 

பக்கத்தில் வேதாந்த் விழிமூடி சாய்ந்து இருந்தான்…. ட்ரிங்ஸ் செய்திருந்தவன் புல் போதையில் இருக்க வித்யுத் தான் லாங் டிரைவ் செல்லலாம் என்று கம்பல் செய்து அழைத்து வந்திருந்தான்.. 

“ஸ்மூத் லைக் பட்டர்….”என்ற பாடலை பாடிக்கொண்டே தன் அண்ணன் பக்கம் திரும்பி பார்த்தவன் “ப்ரோ… ப்ரோ…”என்று கூப்பிட வேதாந்த் கண் திறக்கவில்லை. 

“பிளாட் ஆகிட்டாரு போல… இந்த டைம்ல இவரோட எனிமிஸ் எல்லாம் ரவுண்டப் பண்ணுனா என்ன பண்ணுவாரு… ம்ம் நாம தான் ஹீரோ மாதிரி பைட் எல்லாம் பண்ணி காப்பாத்தணும்….”என அவன் பெருமூச்சு இழுத்துவிட்டு சொன்னது விழிமூடி சாய்ந்திருந்த வேதாந்த்க்கு நன்றாகவே கேட்க அவன் இதழில் சிரிப்பு தோன்றியது… 

வித்யுத் அவன் தூங்குகிறான் என்று நினைத்துகொண்டு மியூசிக் சத்தம் அவனுக்கு டிஸ்டர்ப்பாக இருக்கும் என வால்யூமை குறைத்தவன் இப்பொழுது காரின் வேகத்தையும் குறைத்தான்.. 

அவனுக்கு இதுபோல் நைட் டைமில் வேதாந்த்துடன் லாங் டிரைவ் செய்வது ரொம்ப பிடிக்கும்… 

வித்யுத் அந்த தருணத்தை என்ஜாய் செய்தபடி காரை ஓட்ட திடீரென வேகாமாய் வந்த கார் ஒன்று அவர்களுடைய காரை கடந்து சென்று முன்னாடி அவனுக்கு வழிவிடாமல் செல்ல “எப்படி டிரைவ் பன்றான் பாரு….”என திட்டிகொண்டவன் அடுத்துடுத்த கார்கள் முன்னாடியும் சைடிலும் வரவும் தான் அவனுக்கு புரிந்தது சுற்றி வளைத்துவிட்டார்கள்… 

மிரர் வழியாக பின்னாடியும் நிறைய கார்கள் வருவதை பார்த்தவன் அதிர்ந்து “ப்ரோ… ப்ரோ வேக்கப்….”என்றவன் ஒரு கரத்தால் கார் டிரைவ் செய்துகொண்டே வேதாந்த்தை எழுப்ப அவனோ விழித்திறந்து பார்க்காமல் “என்னாச்சு ஹீரோ ஸார் சுத்தி வளைச்சுட்டாங்களா?….”என்று கேட்க 

“எஸ் ப்ரோ பிரண்ட்ல டூ கார்ஸ் சைட்ல பின்னாடின்னு நம்பள பாலோவ் பண்ணிதான் வர்றாங்க….”என்று முடிக்கவில்லை ரைட்ஸ் சைடில் சென்று கொண்டிருந்த கார் அவர்கள் காரில் மோதியது… 

“ப்ரோ…”வித்யுத் கத்தியவன் ஸ்டியரிங்கை வளைத்து திருப்ப வேதாந்த் கண் திறந்து பார்த்தவன் கைகள் உயர்த்தி சோம்பல் முறித்துவிட்டு “ஹீரோ மாதிரி பைட் பண்ணி என்னை காப்பாத்திடுவேன்னு சொன்ன….”என்று கேட்க 

“ப்ரோ ஆர் யூ கிரேஸி… என்னை பைட் பண்ண சொல்றிங்களா….” 

வேதாந்த் சிரித்தவன் “டோன்ட் வர்ரி பேபி பிரதர்…. நான் இருக்கேன்ல….”என்றவன் கண்களை கூர்மையாக்கி கார் எல்லாம் எந்த பொசிஷனில் வருகிறது என்று பார்த்து விட்டு வித்யுத்திடம் “ஆர் யூ ஸ்கேர்ட்?….”என்று கேட்க அவனோ சிரித்தான்..

    No comments yet.