டெவில் -10

Sweety Novel's | 08 Mar 2026 | Share

ருத்விகா நிமிர்ந்து பார்த்தவள் சுகன்யாவிடம் “என்ன மாம்?…”என்று கேட்க 

சிரித்தவர் “ருத்விகா பிஸியா இருக்கியா?…”என்றார் 

“உங்களுக்கு பார்க்கும் போது எப்படி தெரியுது?….” 

“இப்போ என்ன சொன்னாலும் அப்போஸிட்டா தான் பேசுவா….”என தனக்குள் சொல்லிக்கொண்டவர் திரும்பி தன் கணவரை பார்க்க சிரஞ்சீவியோ “என் கஷ்டம் புரியுதா….”என்பது போல் பார்த்தார் 

“என் டைம் வேஸ்ட் பண்ணாம என்ன சொல்லணுமோ சொல்லுங்க….”என்ற ருத்விகா “உன்கிட்ட பேசணும்….”என சுகன்யா சொல்ல “பேசுங்க…”என்றவள் லேப்டாப் தான் பார்த்தாள். 

இப்பொழுது சிரஞ்சீவி பேச தொடங்கினார்…”அமர்நாத் போன் பண்ணிருந்தாரு….”என்றதும் ருத்விகா “அமர்நாத் அது யாரு?…”என்று கேட்டாள் 

“என்னடி தெரியாத மாதிரி கேட்கிற?…”என்று சுகன்யா சொல்லவும் 

நிமிர்ந்து அவரை முறைத்து பார்த்தவள் “அவர் பத்தி தெரிஞ்சு வச்சுக்க அவர் என்ன இந்தியாவோட பிரதமரா இல்ல ப்ரைம் மினிஸ்டரா?… “என்றாள் திமிராய் 

“பிரதமர் ப்ரைம் மினிஸ்டர் இல்லம்மா இந்தியாவோட டாப் ஒன் ரிச்சஸ்ட் மேன்….”என்று சிரஞ்சீவி சொல்லவும் இதழ் சுழித்தவள் “ஓ அந்த சர்கார் பேமலியா?…”என்றாள். 

“ம்ம் அமர்நாத் சர்கார் வேதாந்த்தோட அப்பா உங்க மேரேஜ் அனவுன்ஸ் பத்தி பேசதான் கால் பண்ணிருந்தாரு….” 

“அதான் ஓகே சொல்லிட்டேன்ல….” 

“மீடியா முன்னாடி ஒரு அனவுன்ஸ்மென்ட் பண்ணணும்ன்னு சொன்னாரு….”

“எதுக்கு நான் தான் அந்த வேதாந்த்தை மேரேஜ் பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சு என்னை யாராவது போட்டு தள்ளவா….” 

“ருத்விகா இப்படியெல்லாம் பேசாத… ஏற்கனவே நாங்க அஞ்சலியை இழந்துட்டோம்…”என்று சுகன்யா சொல்ல 

‘ச்சு ச்சு அடிக்கடி எமோஷனலாகிடுறீங்க…. ஓகே இப்போ என்ன பண்ணணும்….”என ருத்விகா கேட்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு “சென்னை போகணும்… ஹோலி பங்ஷனுக்கு நம்பள அவங்க வர சொல்லிருக்காங்க….”என்றனர். 

சென்னை… 

ஜாணவி ஹாலுக்கு வர அமர்நாத்தும் ஆதிநாத்தும் வேதாந்த் திருமணம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.. 

“எப்படி இருக்க ஆதி…”என்ற குரலில் நிமிர்ந்து பார்த்த ஆதிநாத் தன்னுடைய முன்னாள் மனைவியை பார்த்ததும் கால் மேல் கால் போட்டுகொண்டார். 

“யா ஐயம் பைன்… நீ இங்க என்ன பன்ற?….”என்று கேட்க 

“ஏன் வரக்கூடாதா என்ன…. எனக்கு இந்த ரைட்ஸ் இருக்குல்ல….”என்றவர் சென்று அவர்களுக்கு எதிரில் இருந்து சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவர் அமர்நாத் பார்த்து “நான் இங்க வீட்டுக்குள்ள மட்டும் இல்ல மாமா இனி கம்பனிக்கும் வர போறேன்….நானும் ஒன் ஆப் த டைரக்ட்டர் தான நான் போஸ்டிங்கை கண்டினியு பண்லாம்ன்னு டிசைட் பண்ணிருக்கேன்….”என்றார். 

அமர்நாத்தும் “ஜாணவி சர்கார் குரூப் ஆப் கம்பனி இப்போ இந்த நிலைமையில இருக்க நீயும் ஒரு ரீசன்…. நீயும் உன்னோட எப்பக்ட் போட்ருக்க… அதனால தான் நாங்க எல்லாரும் நீங்க டிவோர்ஸ் பண்ணும் போது உனக்கான ரைட்ஸ் கொடுத்தோம்… ஆல்ரெடி சொன்னது தான் நீ எப்போ வேணும்ன்னாலும் உன்னோட ஜாப் கண்டினியூ பண்ணலாம்…”என்றார் 

அவர்கள் இருவரும் பேச ஆதிநாத் அவர்கள் பேசுவதை கேட்டாரே தவிர இடையில் குறுகிக்கிடவில்லை… 

“வந்துச்சே பீலிங்சு… வந்துச்சே பிலிங்சு….”என்று பாட்டு பாடியபடி ஹெட்போனை காதில் மாட்டியபடி வந்தான் வித்யுத். 

அவன் பார்வையில் மறைந்து நின்று ஹாலில் அமர்ந்து இருந்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் குழப்பத்துடன் பார்த்துகொண்டிருந்த அவந்திகா தெரிந்தாள். 

“இவங்க இங்க என்ன பன்றாங்க….”என தனக்குள் சொல்லிக்கொண்டவன் சத்தம் போடாமல் அவள் அருகில் சென்று தோளில் கைவைக்க அவந்திகா அதிர்ந்தவள் “வேதாந்த் வந்துட்டானோ….”என சொல்லிக்கொண்டவள் திரும்பி பார்க்க வித்யுத் கையசைத்து “ஹாய்….”என்றவன் அழகாய் சிரித்தான்.. 

“நீதானா…நான் வேதாந்த்ன்னு நினைச்சு பயந்துட்டேன்….”என்றவள் நிம்மதி பெருமூச்சு இழுத்துவிட்டவள் அவன் “என்ன பார்த்துட்டு இருக்கீங்க?…”என்று கேட்கவும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களை கைகாட்டினாள்.. 

“மாம் பெரியப்பா டேட் எல்லாம் பேசிட்டு இருக்காங்க…” 

“என்ன பேசிட்டு இருக்காங்கன்னு தெரியல… உன்னோட மாம் எதுக்கு இங்க இருக்காங்க….”என்று அவள் கேட்க வித்யுத் புருவம் உயர்த்தி “உங்களுக்கு என் மாம் இங்க இருக்கிறது பிடிக்கலயா?….”என்று கேட்க அவந்திகா தலையசைத்தவள் “சுத்தமா பிடிக்கல….”என்றாள். 

“எனக்கு பிடிச்சிருக்கு… இப்படி மறைஞ்சு நின்னு ஒட்டுகேட்காம ஹால்ல போய் கேளுங்க…”என்றவன் அவளை கடுப்பேற்றி விட்டு அங்கிருந்து ஹாலுக்கு சென்றான்.. 

“ச்சே..”கோபத்தில் தரையில் காலை உதைத்தவள் கால் வலிக்கவும் “ஓ மை காட்…. எனக்கு டைம்மே சரியில்லை….”என முனுமுனுத்துகொண்டவள் ஹாலுக்கு செல்லலாமா என்று யோசித்துவிட்டு இல்ல வேண்டாம் ரூமுக்கே போலாம் என்று அவள் தன்னுடைய அறைக்கு சென்ற நேரம் விக்ராந்த் எதிரில் வந்தான். 

அவள் காலை ஊன்றி மெதுவாக நடந்து வருவதை பார்த்து “என்னாச்சு?…”என்று கேட்க “ம்ம் என் டைம் சரியில்லை…”என அவள் சொன்னது அவனுக்கு புரியவில்லை… 

“என்ன சொல்றிங்க?….” 

“நத்திங் நீ போ… எல்லாரும் பேமலியா ஹால்ல உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க நீயும் போய் ஜாயின் பண்ணிக்கோ….”என்றவள் அங்கிருந்து செல்ல “என்னாச்சு இவங்களுக்கு…”என சொல்லிக்கொண்டவன் பின் தலையை உலுக்கிகொண்டு “வாட் எவர்….”என்றவிட்டு அவனும் ஹாலுக்கு சென்றான். 

அவன் ஜாணவியை பார்த்ததும் அப்படியே நின்று விட ஜாணவி அமர்நாத்திடம் பேசிக்கொண்டிருந்ததில் அவனை பார்க்கவில்லை… அவர் இங்கு வந்தப்பின் இன்னும் இருவரும் பார்த்துக்கொள்ளவில்லை. 

வித்யுத் தான் அவனை பார்த்தவன் “ப்ரோ ஏன் அங்கையே நின்னுட்ட…. வா…”என்று கூப்பிட அதில் தான் ஜாணவி திரும்பி பார்த்தார். 

விக்ராந்தை பார்த்ததும் அவர் கண்கள் கலங்கிவிட எழுந்து நின்றார்…. 

🎶ஆராரிஆராரோ கேட்குதம்மா

நேரில் வந்தது என் நிஜமா

நான் கொண்ட காயங்கள் போகுதம்மா

நாடியும் மெல்லிசை ஆகுதம்மா 

பிள்ளை வாசத்தில் ஆசைகள்

தோரணம் சூடுதம்மா

நெஞ்சம் ஆனந்த மேகத்தில்

ஊஞ்சலும் ஆடுதம்மா 

என் உயிரில் இருந்து

பிரிந்த பகுதி இங்கே

நான் இழந்த சிரிப்பும்

இதய துடிப்பும்

மீண்டும் இங்கே….. 🎶 

ஜாணவி இதயம் வேகமாய் துடிக்க விழியிமைக்காமல் தன் மூத்த மகனையே பார்த்தவர் “விக்ராந்த்….”என்று அவனை நோக்கி ஒரு அடி முன்னாடி எடுத்து வைக்கும் பொழுது விக்ராந்த் வேகமாய் அங்கிருந்து வெளியேறிவிட்டான்… 

அவன் தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் கடந்து சென்றதை ஜாணவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை…அவர் கண்களை மூடிக்கொள்ள விழியோரத்தில் கண்ணீர் கசிந்தது.. 

கலங்கிய கண்களை துடைத்துகொண்டவர் வேகமாய் அங்கிருந்து தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டார். 

போகும் தன் அம்மாவையே பார்த்த வித்யுத் “எதுக்கு விட்டுட்டு போகணும் இப்போ பீல் பண்ணனும்….”என தனக்குள் சொல்லிக்கொண்டவன் அமர்நாத் தன் தம்பியிடம் ருத்விகா பற்றி பேசவும் அவர் பக்கம் திரும்பி பார்த்தான்.. 

“நாயக் பேமலியை ஹோலி பங்ஷனுக்கு இன்வைட் பண்ணிருந்தோம்ல ருத்விகா மட்டும் வர்றதா சொல்லிருக்காங்க ஏர்போர்ட் போய் பிக்கப் பண்ணணும் டிரைவர்கிட்ட சொல்லிடு….”என அமர்நாத் ஆதிநாத்திடம் சொல்ல அவரும் தலையசைத்தார் 

“ஓ அந்த டெவில் ருத்விகா வர்றாங்களா…. ம்ம் பார்த்துக்கறேன்…. அலறவிடறேன் என் ப்ரோ லைப்ல இருந்து ஓடவிடறேன்….”என தனக்குள் சொல்லிக்கொண்டவன் இதழில் மர்ம புன்னகை தோன்றியது.. 

யாரும் இல்லாத அந்த காட்டிற்கு நடுவே ஒரு மரத்தோடு சேர்த்து கட்டி வைக்கப்பட்டிருந்தான் அவன்… உடலெங்கும் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது… 

வலிதாங்க முடியாமல் “என்னை விட்ருங்க….என்னை விட்ருங்க ப்ளீஸ்….”என்று அவன் கெஞ்சவும் சுற்றி இருந்த கார்ட்ஸ் அவன் பக்கம் திரும்பிகூட பார்க்கவில்லை… 

காரில் ஏறி அமர்ந்து ஸ்டைல்ளாய் சிகரெட் பிடித்துகொண்டிருந்த வேதாந்த் அவன் அலறல் சத்தத்தை சங்கீதம் போல் கேட்டுக்கொண்டிருந்தான் அவனுக்கு இரக்கம் காட்டவில்லை. 

“சர்கார் என்னை விட்ரு… ப்ளீஸ்….” 

“விடணுமா… முடியாது….” 

“ப்ளீஸ் உனக்கு என்ன தேவையோ அதை நான் கொடுத்திடறேன்….என்னை விட்ரு…. நான் உயிரோட இருக்கணும்ன்னு ஆசைப்படறேன்….”கெஞ்ச வேதாந்த் கார்ட்ஸ் பார்த்து கையசைத்தான் 

உடனே கார்ட்ஸ் அவன் அருகில் சென்று கீழே இறக்க வேதாந்த் அவனை பக்கத்தில் அழைத்து வர சொன்னான். 

இருவர் கைதாங்கலாக அவனை அவன் முன்னாடி அழைத்து செல்ல வேதாந்த் இதழ் சுழித்து “அசோக் செல்வன்…. எனக்கு உன்கிட்ட இருந்து என்ன வேணும்ன்னு தெரியுமா?….”என்று கேட்க 

மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தவன் “நீ என்ன கேட்டாலும் கொடுத்திடறேன்….என்னை விட்ரு….”என்றான்… 

வேதாந்த் அதை கேட்டு சிரிக்க அந்த சிரிப்பு அவன் முன்னாடி இருந்தவனுக்கு பயமாக இருந்தது… தன் மரணம் எதிரில் நின்று சிரிப்பது போலவே அவனுக்கு தோன்றவும் மிடரு விழுங்கியவன் “என்னை விட்ரு….”என்றான் கெஞ்சலாய்.. 

“எனக்கு வேணுங்கறதே உன்னோட உயிர் தான்….”என்ற வேதாந்த் சிரிப்பு அப்படியே உறைந்து விட முகம் இறுகியது. 

அசோக் செல்வன் அதிர்ந்து பார்க்க வேதாந்த் தன்னுடைய துப்பாக்கியை எடுத்தவன் “நைஸ் டூ மீட் யூ மிஸ்டர் அசோக் செல்வன்….”என்று சொல்லி அவனை அனைப்பது போல் சென்றவன் அவன் வயிற்றில் துப்பாக்கியை வைத்து ட்ரிகரை அழுத்த மூன்று முறை துப்பாக்கி சத்தம் கேட்டதும் அவன் அப்படியே மயங்கி சரிய அந்த நொடியே அவன் உயிர் பிரிந்தது… 

வேதாந்த் துப்பாக்கியை பத்திரப்படுத்திகொண்டவன் தன்னுடைய அசிஸ்ட்டன்ட் கண்ணாவை பார்க்க அவன் அதற்காகவே காத்திருந்தது போல் பேப்பர்ஸில் அசோக் செல்வணின் கை ரேகையை பதித்து கொண்டான். 

“ஸார் பேங்க் ஆப் பேரடைஸ்ல அசோக் செல்வன் பர்ஸன்டேஜ் வெறும் டூ பர்ஸன்டேஜ் தான்…”என்று கண்ணா சொல்ல வேதாந்த் இதழ் சுழித்தவன் “இன்னும் லிஸ்ட்ல எத்தனை பேர் இருக்காங்க?….”என்று கேட்க 

கண்ணா டேப் எடுத்து செக் செய்தவன் “நியத் விஷ்வா அண்ட் உங்களை தவிர இன்னும் டென் மெம்பர்ஸ் ஷேர்ஸ் வச்சிருக்காங்க ஸார்…”என்றவன் நிறுத்தி “எல்லாரையும் கொலை பண்ணி ஷேர்ஸ் வாங்க முடியாது….”என்று சொல்ல அதற்கு வேதாந்த் வில்லத்தனமாய் சிரித்தான்…

    No comments yet.