டெவில் -1

Sweety Novel's | 03 Feb 2026 | Share

வாழ்க்கை எல்லாருக்கும் அழகாய் அமைவதில்லை…. சிலரிடம் பணம் இருக்காது சிலருக்கு பணம் இருந்தாலும் நிம்மதி இருக்காது… சிலருக்கு இந்த இரண்டும் இருந்தாலும் குணம் இருக்காது… ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் ஒருமாதிரி…ஆனால் இன்றைய காலத்தில் கீழ்தட்டு மக்கள் நடத்தர வர்க்க மக்கள் அரசியல்வாதிகள் எல்லாரையும் இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஆட்டிவைப்பது பணக்காரர்கள்… அந்த பணக்காரர்களில் முதல் மூன்று இடத்தில் இந்தியாவையே ஆட்டிபடைக்கும் மூன்று குடும்பங்களில் ஒன்று தான் நாயக் குடும்பம்… 

ஹைதராபாத்… 

நாயக்க ஹவுஸ்… 

நேரம் 11.45 pm 

பிரமாண்டம்மாய் அரண்மனை போல் பறந்து விரிந்திருந்தது அந்த பங்களா… 

இப்பொழுது அந்த பங்களா அமைதியில் மூழ்கி இருந்தது… அதில் நான்காம் தளத்தில் தன்னுடைய அறையின் பால்கனியில் நின்றிருந்தாள் அவள்.. 

வெள்ளை நிற லாங் மேக்சியை அவள் அணிந்து இருந்தாள்… லட்சனமான முகம் ஆனால் அவள் கண்களில் சோகம்… 

அவள் நினைவில் ஏதேதோ தோன்ற சட்டென திரும்பி பார்த்தாள்….அவள் இதழில் வெற்று புன்னகை தோன்றியது.. 

“என்ன பாக்கறீங்க நான் ஏன் சோகமா இருக்கன்னா… இன்னும் கொஞ்சநேரத்துல நான் சாகப்போறேன்….ஏன் சாகப்போற நீ என்ன முட்டாளான்னு கேட்கலாம்…. எனக்கு வேற வழி தெரியல…. எனக்கு என்னாச்சுன்னு கேட்கறீங்களா… சொல்றேன்….”என்றவள் காற்றில் பறந்த முடியை காதோரம் ஒதுக்கி விட்டு அப்படியே சாய்ந்து நின்றாள்… 

“நான் அஞ்சலி நாயக்…. நாயக் பேமலி ஒன் ஆப் த ரிச்சஸ்ட் பேமலியோட முதல் வாரிசு… ஆனா நான் அவங்க சொந்த பொண்ணு இல்ல என்னை அவங்க அடாப்ட் பண்ணிக்கிட்டாங்க…. சொந்த பொண்ணு மாதிரி தான் அவங்க என்கிட்ட பாசம் காட்டுனாங்க… அவங்களுக்காக நான் என்ன வேணும்ன்னாலும் பண்ணுவேன்….”என்றவள் கண்கள் அப்படியே கலங்க “ஆனா அவங்க சொல்ற அந்த அரக்கனை என்னால மேரேஜ் பண்ணிக்க முடியாது…. பிஸ்னஸ்ல ப்ராப்லம் அதனால என்னை டீல் பேசியிருக்காங்க…. இன்னும் ஒன் வீக்ல எனக்கு அந்த அரக்கனோட மேரேஜ்… அந்த அரக்கனோட நான் வாழறதுக்கு சாகறதே மேல்ன்னு முடிவு பண்ணிட்டேன்…சூசைட் பண்ணிக்க போறேன் உள்ள பாய்ஸன் பாட்டில் ரெடியா இருக்கு….”என்றவள் நிறுத்தி “அந்த அரக்கன் யாரா இருக்கும்ன்னு நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுது சொல்றேன்….” 

“சர்கார் பேமலி தான் இப்போ டாப் ஒன் ரிச்சஸ்ட் பேமலியா இருக்காங்க…. சர்கார் குரூப் ஆப் கம்பனி சியிஓ வேதாந்த் சர்கார் தான் நான் சொன்ன அரக்கன் டெவில்ன்னு எப்படி வேணும்ன்னாலும் சொல்லலாம்… அவனுக்கு இரக்கம் கிடையாது அடுத்தவங்கள பத்தி கவலை கிடையாது…. தான் நினைச்சது தான் நடக்கணும் தனக்கு கீழ தான் எல்லாரும் இருக்கனும்ன்னு நினைக்கிற மனுஷன் கிடையாது மாப்பியா… இல்லீகலா நிறைய பிஸ்னஸ் பன்றான்….இரக்கமே இல்லாம கொலை பண்ணுவான்..ஒன் லைன்ல சொல்லனும்ன்னா ஹி இஸ் வால்கிங் நைப்…அவனை மேரேஜ் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்ல அதுக்கு செத்து போறது பெட்டர் ஆப்ஷன்னு எனக்கு தோணுது…என் வாழ்க்கை முடிய போகுது அந்த அரக்கன்கிட்ட எந்த பொண்ணு மாட்ட போறான்னு தெரியல… இதுக்கு மேல பேசறதுக்கு எதுவும் இல்ல….”என சொல்லிவிட்டு அஞ்சலி உள்ளே செல்லலாம் என்று ஒரு அடி எடுத்து வைக்கும் பொழுது வேகமாய் ஒரு புல்லட் அவளுடை பின்பக்க தலையை உரசி முன் நெற்றியை துளைத்துகொண்டு வெளியில் வந்து விழ அஞ்சலி உயிர் அந்த நொடியே பிரியவும் அவள் உடல் அப்படியே சரிந்து கீழே விழுந்தது.. 

கேரளா… 

பிருந்தாவனம்… 

பல ஏக்கரில் பறந்து விரிந்திருந்தது அந்த பங்களா… எழில் கொஞ்சும் அந்த அழகான இடத்தில் அவ்வளவு அழகாய் அந்த பங்களா இருக்க டெரஸில் தான் அமர்ந்து ட்ரிங்ஸ் செய்துகொண்டிருந்தார் பிஸ்னஸ்மேன் மோகன்லால்… 

அவரை சுற்றி நிறைய பாடிகார்ட்ஸ் நின்றிருந்தனர்…. அந்த பங்களா சுற்றியும் பல ஏக்கரில் அழகான பூந்தோட்டம் தான் இருந்தது… கண்ணுக்கு எட்டும் தூரம் வரை எந்த வீடும் கிடையாது… 

மோகன்லால் குடித்துக்கொண்டிருக்க அவர் அருகில் வந்த அவனுடைய பாடிகார்ட் “ஸார் உங்களை பார்க்க சர்கார் தம்பி வந்திருக்காரு…..”என சொல்ல 

சிரித்தவர் “வர சொல்லு….”என்று கையசைத்து சொல்ல அந்த பாடிகார்ட் அங்கிருந்து நகர்ந்தான்… 

சில நொடிகளில் ஆறடி உயரத்தில் கம்பீரமாய் ஒருவன் வந்தான்… அவனை பார்த்து கண்கள் சுருக்கிய மோகன்லால் “நீ…”என்றதும் வந்தவன் அவரிடம் கையை நீட்டி “ஹலோ ஸார் ஐயம் விக்ராந்த்  சர்கார்….”என்று சொல்ல அவர் ஹாண்ட்ஷேக் செய்யவில்லை.. 

உடனே கரத்தை மடக்கி கொண்டவன் தன்னுடைய காதில் இருந்த ப்ளூ டூத்தை ஆன் செய்துவிட்டு அவர் எதிரில் இருந்த சேரில் அமர்ந்தவன் எடுத்து வந்த பைலை அவரிடம் நீட்டி “சைன் பண்ணுங்க….”என்றான். 

ஜோக் கேட்டது போல் சிரித்தவர் “என்ன நினைச்சுட்டு இருக்கான் அந்த சர்கார்…. அவன் கேட்டா நான் என் கம்பனியை கொடுத்திருவேனா டுவென்ட்டி தௌஸன்ட் லேக்ஸ் மில்லியன் ஒர்த் கம்பனி…. உன் அண்ணன்கிட்ட போய் சொல்லு அவன் போடற பிஸ்கட்க்கு வாலாட்டற டாக் நான் இல்லன்னு….”என்றார்.. 

விக்ராந்த்  மென்னகை சிந்தியவன் “நீங்க சொல்றதை அவர் கேட்டுட்டு தான் இருக்கார்…. சைன் பண்ண முடியுமா முடியாதா….”என கேட்க 

அவர் முகம் இறுக “முடியாது… இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க இருந்தாலும் உயிரோடு இங்கிருந்து போக முடியாது….”என்றார் எச்சரிப்பது போல்… 

விக்ராந்த் காதில் மாட்டியிருந்த ப்ளூ டூத்தில் ஒரு கம்பீரக்குரல் “இனி நீ எதுவும் பேச வேண்டாம் அங்கிருந்து கிளம்பிடு….”என்று சொல்ல 

“ஓகே ப்ரோ….”என்று சொல்லிவிட்டு காதில் இருந்த ப்ளூ டூத்தை கழட்டியவன் தன்னுடைய போனில் அவரை ஒரு போட்டோ எடுத்தான் 

“ஸ்மைல் பண்ணுங்க அப்போ தான் போட்டோ நல்லா இருக்கும்….” 

‘எதுக்கு?… ” 

“மார்னிங் டுவிட்டர்ல ரெஸ்ட் இன் பீஸ்ன்னு போஸ்ட் போட ஒரு நல்ல போட்டோ வேணும்ல….”என விக்ராந்த் சொல்ல மோகன்லால் “என்ன மிரட்டறியா பயந்துட்டேன்….”என்று சிரித்தார்.. 

அவர் சிரிக்கும் போதே போட்டோ எடுத்துகொண்டவன் “சர்கார் தனக்கு விலைபோகாத யாரையும் விட்டு வச்சது கிடையாது… டெத் கன்பார்ம்…. எனிவே குட் பாய்….”என்றவன் பைல் எடுத்துகொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்… 

“என்னை அந்த வேதாந்த் சர்கார் கொள்வானா…. இத்தனை பாடிகார்ட்ஸ் என்னை சுத்தி இருக்கும் போது அவனால என்னை டச் கூட பண்ண முடியாது….”என்று ஆணவத்தில் சொல்லிக்கொண்டவர் எழுந்து சென்று கீழே பார்க்க விக்ராந்த் தன்னுடைய காரில் அந்த பங்களாவை விட்டு செல்வது தெரிந்தது.. 

விக்ராந்த் கார் அந்த பங்களாவை விட்டு சென்று சென்ற அடுத்த நொடி வானத்தில் இரண்டு பிளைட் காற்றை கிழித்து கொண்டு வந்தது…அவருடைய பங்களா சுற்றி இருந்த பிருந்தாவணத்தை சுற்றியும் பறந்து எதையோ தெளிக்க மோகன்லால் அதிர்ந்து பார்த்தார்.. 

அவர் மீதும் தண்ணீர் போல ஏதோ கசியவும் தொட்டு பார்த்து முகர்ந்தவர் முகம் பயத்தில் வெளிரியது…. 

அவர் என்ன நடக்க போகிறது என்று யூகித்து தப்பிக்க பார்ப்பதற்குள் அவருடைய பங்களாவில் நெருப்பு பிடித்தது… அந்த நெருப்பு சுற்றி இருந்த பூந்தோட்டத்திற்கும் பரவ அவரால் தப்பிக்க முடியாத நிலை… 

மரணம் அவரை நெருங்கும் நேரம் “வேதாந்த் சர்கார்….”என்று அவர் கத்திய சத்தம் அந்த இடமெங்கும் எதிரொலித்தது.. 

விக்ராந்த் காரை ஓட்டிக்கொண்டே மிரர் வழியாக பார்த்தவன் பின்னாடி எல்லா இடமும் தீக்கு இறையாகி இருப்பதை பார்க்க அவன் இதழில் சிரிப்பு தான் தோன்றியது.. 

“கேட்டதும் சைன் பண்ணிருக்கலாம்….”என சொல்லிக்கொண்டவன் காரின் வேகத்தை அதிகபடுத்தினான்… 

சென்னை… 

சர்கார் குரூப் ஆப் கம்பனி… 

பதினொன்றாம் தளத்தில் இருந்த கான்பிரன்ஸ் ஹாலில் புது பிராஜக்ட் பற்றி விவரித்து கொண்டிருக்க சியிஓ சேரில் கம்பீரமாய் அமர்ந்து பார்த்துகொண்டிருந்தான் வேதாந்த் சர்கார்… 

அவன் லேசர் விழிகள் திரையை பார்த்தாலும் அவன் காதில் மாட்டியிருந்த ப்ளூ டூத் வழியாக நொடிக்கு ஒருமுறை அவன் சொன்ன வேலை எல்லாம் எந்த லெவலில் இருக்கிறது என்ற அப்டேட்டை கேட்டுகொண்டிருந்தான்… 

திடீரென அவன் ஸ்டாப் சொல்லவும் திரையை காட்டி விவரித்து கொண்டிருந்தவன் நிறுத்தினான்… 

ப்ளூ டூத்தில் பைலட் “பிருந்தாவனம் பினிஷ் ஸார்….”என சொல்லவும் 

“ஓகே…. நீயூஸ்ல நான் சொன்ன மாதிரி தான் வரணும்….”என சொல்லிவிட்டு கட் செய்தவன் நிமிர்ந்து பார்த்து “ஐ வாண்ட் பெட்டர் பிளான்…..டுவேன்ட்டி ஹவர்ஸ் தான் டைம்….”என்று டெட் லைன் கொடுத்து விட்டு அவன் எழுந்து நேரம் அவன் போன் இசைக்கவும் எடுத்து பார்த்தான்… திரையில் பேபி பிரதர் என்று வந்தது… 

அதை பார்த்ததும் அவன் இதழில் மென்னகை தோன்ற அட்டன் செய்தவன் ‘சொல்லு வித்து….’என்று சொல்ல 

எதிர்முனையில் ஒரு சாக்லேட் பாய்யின் வசீகரிக்கும் குரல் “ப்ரோ எங்க இருக்கீங்க?….”என்று கேட்க 

‘”கம்பனியில… எனி ப்ராப்லம்….” 

“இங்க உங்க பேபி பிரதர் செத்துடுவேன் போல… ஒரு குண்டன் அடிச்சு துவைக்கிறான்…. சீக்கிரம் வந்து காப்பாத்துங்க….” 

வேதாந்த் முகம் இறுக “எங்க இருக்க… பெட்டிங்லயா?….”என்றவன் எதிர்முனையில் அவன் தம்பி வித்யுத் “எஸ் ப்ரோ சீக்கிரம் வாங்க….’என்றவன் மலைமாடு போல் இருந்தவன் ஓங்கி முகத்தை பார்த்து குத்தியதில் தடுமாறி இரும்புகம்பி வலையில் மோதினான்.. 

கைஸ் ஸ்டோரி ஸ்டார்டிங் எப்படி இருக்குன்னு கமன்ட் பண்ணுங்க 😊

    No comments yet.