காதல் -8

Sweety Novel's | 14 Apr 2026 | Share

மதி இசையையும் காரையும் காணாமல் அதிர்ந்தவள் “இசை எங்க போயிட்டா…”என தன்னையே கேட்டுக்கொள்ள 

“ம்ம் அவ உன்னை விட்டுட்டு ஸ்கூல் போயிட்டா…”என்று அவளுக்கு நெருக்கமாய் ஒரு குரல் கேட்கவும் அந்த குரலில் அதிர்ந்து திரும்பி பார்த்தாள்.. 

அவளுக்கு பக்கத்தில் மித்ரன் நின்றிருக்க அதில் அதிர்ந்தவள் பின்னாடி நகர பார்த்து தடுக்கி விழ போக மித்ரன் கரம் அவள் இடையில் கைவைத்து தாங்கி பிடித்தது.. 

சற்று தள்ளி பைக்கில் சாய்ந்து நின்றபடி அமர்ந்திருந்த நந்தா அதை பார்த்துவிட்டு அதிர்ச்சியில் வாயை பிளந்தான்… (என்னடா நடக்குது இங்க…) 

“ரெண்டு பேரும் என்ன மூவில வர்ற மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்காங்க… ஒன்னுமே புரியலயே…”என சொல்லிக்கொண்ட நந்தா போன் வரவும் எடுத்து பார்த்தவன் அவர்களின் பிரண்ட்தான் அழைத்து இருக்கவும் “இவன் எதுக்கு இப்போ போன் பன்றான்…”என அட்டன் செய்து பேசியபடி அப்படியே பைக் விட்டு நகர்ந்து சென்றான்..

இங்கு மதியை விழாமல் பூப்போல் தாங்கி பிடித்திருந்த மித்ரனின் விழிகளும் மதியின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவ மதி விழுந்துவிடும் பதட்டத்தில் அவனுடைய சர்ட் பற்றி இருந்தாள்.. 

இவ்வளவு நெருக்கத்தில் அவனைப் பார்க்கும் பொழுது அவளுள் ஒரு பதட்டம் தோன்ற மித்ரனின் விழிகள்  மெல்ல அவள் கயல் விழிகளை தாண்டி கீழே பயணித்தது.. 

ஆரஞ்சு சுளை போன்ற அவளின் இதழில் அவனுடைய பார்வை பதிய ஒரு நொடி தான் மீண்டும் அவனின் பார்வை அவளுடைய கண்களிலேயே நிலைத்தது.. 

மித்ரன் அவளை நேராக நிற்க வைக்க மதியும் விலகி கொண்டவள் மித்ரன் “என்ன இசையை தேடிட்டு இருந்தியா?…”என கேட்க மதி தலையாட்டினாள்.. 

“எக்ஸாமுக்கு டைம் ஆச்சு அவ உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாளா அவ கிளம்பிட்டா.. 

” அது எப்படி இசை போயிருப்பா எனக்காக வெயிட் பண்றேன்னு சொன்னாலே… ” என தனக்கு சொல்லிக் கொண்ட மதி கையை உயர்த்தி வாட்சில் டைம் பார்த்தவள் ” டைமாச்சு சைக்கிள்ல போனா கூட எக்ஸாம் ஸ்டார்ட் பண்ணிடுவாங்களே… இப்ப என்ன பண்றது… ” என்று யோசித்தவள் மித்ரன் அங்கிருந்து செல்ல போகவும் அவன் கரம் பற்றி தடுத்தாள். 

மித்ரன் திரும்பியவன் தன்னுடைய கரத்தை பிடித்திருந்த அவளுடைய கரத்தையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன் “கையை விடுடி…” என்றான் அடிக்குரலில் மிரட்டலாக அவன் குரலில் இருந்த அழுத்தத்தில் மதியின் கரங்கள் தானாக அவன் கரத்தை விடுவிக்க “மித்து ப்ளீஸ் என்னை ஸ்கூல்ல கொண்டு போய் விடுறியா… டைமாச்சு லாஸ்ட் எக்ஸாம்…ப்ளீஸ்…”என்றாள் கெஞ்சளாக.. 

அவள் கெஞ்சுவதை பார்த்து எல்லாம் மித்ரன் அவளுக்கு பாவம் பார்க்கவில்லை.. 

தாடியை தேய்த்தவன் “உனக்கெல்லாம் நான் ஹெல்ப் பண்ணனுமா…”என்றவன் “நீ நடந்து போவியோ இல்ல மேல பறந்து போவியோ அது உன்னோட ப்ராப்ளம்…எக்ஸாமுக்கு லேட்டாச்சுன்னா உன்னை யாரு கோவிலுக்கு எல்லாம் போக சொன்னா…. அந்த ஹிட்லர் சொன்னாருன்னு போனல்ல இப்போ அதுக்கான பனிஷ்மென்ட் அனுபவி…உனக்கெல்லாம் நான் ஹெல்ப் பண்ண முடியாது…” என சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல அவனை விட்டால் தனக்கு இப்பொழுது வேறு வழி இல்லை என்று உணர்ந்த மதி “ப்ளீஸ் மித்து… ப்ளீஸ்…”என்று கெஞ்சியபடியே அவன் பின்னால் சென்றாள்.. 

மித்ரன் திடீரென நின்றுவிட அவன் பின்னாடியே வந்தவள் அதை எதிர்பாராமல் அவன் முதுகில் மோதி நின்றவள் அவன் வேகமாய் திரும்பவும் திட்டுவான் என்று நகர்ந்து கொண்டாள்.. 

அவள் நினைத்தது போலவே “ஏய் லூசு இப்படியே பின்னாடியே வருவியா…”திட்டினான்.. 

மதி கண்களில் கண்ணீர் தேங்கி நின்றுவிட “ப்ளீஸ் மித்து… லாஸ்ட் எக்ஸாம்.. நான் இந்த எக்ஸாம் நல்லா எழுதனும்… ப்ளீஸ்…”என்றவள் கையெடுத்து கும்பிட அவனை அவளையே பார்த்தான்.. 

சில நொடிகள் அவளையே பார்த்தவன் பின் என்ன நினைத்தானோ “ஓகே நான் உனக்கு ஹெல்ப் பன்றேன்…”என சொல்ல மதி முகம் சந்தோசத்தில் மலர்ந்தது.. 

“உடனே ஹாப்பியாகாத… நான் ஹெல்ப் பண்ணனும்ன்னா ஒரு கண்டிஷன் இருக்கு அதுக்கு நீ ஓகே சொன்னா மட்டும்தான் நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்…” 

அதில் அதிர்ந்த மதி “கண்டிஷனா என்ன கண்டிஷன்?…”என்று கேட்க “பெருசா எதுவும் இல்ல நைட் நீ என்கூட வெளிய வரணும்…”என்றான் 

“வெளிலயா…”என்ற மதி அவன் எங்கு அழைத்து செல்வான் என்று யோசிக்க மித்ரன் அவள் முகத்திற்கு நேராக சொடக்கிட்டவன் “என்ன யோசிக்கிற… உனக்கு என்னோட ஹெல்ப் வேணுமா வேண்டாமா?…”என்றான். 

“என்னை எங்க கூட்டிட்டு போவ?…” 

“ஏன் எங்கன்னு சொன்னாதான் வருவியா…இங்க உனக்குதான் ஹெல்ப் வேணும் என்னை கொஸ்டின் பண்ணாத…” 

“இப்போ நமக்கு இவனோட ஹெல்ப் வேணும்… எக்ஸாம்தான் முக்கியம்…”என்று தனக்குள் சொல்லிக்கொண்ட மதி அவன் தனக்கு வலை விரித்து இருப்பது தெரியாமல் “ஓகே நீ எங்க கூப்பிட்டாலும் வர்றேன்…இப்போ நான் எக்ஸாம் எழுதனும் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போ…”என சொல்ல 

மித்ரன் “நல்லா என்கிட்ட மாட்டிகிட்டயா இன்னிக்கு உனக்கு இருக்குடி….”என தனக்குள் சொல்லிக்கொண்டவன் “சரி வா…”என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அழைத்து பைக் நோக்கி சென்றான். 

மித்ரன் பைக் ஸ்டார்ட் செய்தவன் “ஏய் வேலைக்காரி என்னை டச் பண்ணக்கூடாது தள்ளியேதான் உட்காரனும்…”என சொல்ல மதி தலையசைத்தவள் இருவருக்கும் இடையில் இடைவெளி விட்டே பின்னாடி அமர்ந்துகொண்டாள்.. 

நந்தா போன் பேசிகொண்டிருந்தவன் பைக் கிளம்பும் சத்தத்தில்தான் திரும்பி பார்த்தான்.. 

“ஏய் மித்து… என்னை விட்டு எங்கடா போற…மித்து…”என்று கத்தியபடி கொஞ்சதூரம் பின்னாடியே ஓடியவன் மூச்சு வாங்கவும் நின்றுவிட்டான்.. 

“அடப்பாவி மித்து…எனக்கு கிளப் போலாம்ன்னு ஆசையை கிளப்பிவிட்டுட்டு இப்போ நீ மதியை கூட்டிட்டு கிளம்பிட்ட…இவனை நம்பி இருந்தனே பேசாம காலேஜே கிளம்பி போயிருக்கலாம்…”என புலம்பலாக சொல்லிக்கொண்டான்.. ( இந்த ஹீரோக்களே இப்படிதான்டா நந்தா…) 

மித்ரன் வேகமாய் வண்டியை ஓட்ட அவன் ஓட்டிய வேகத்திற்கு மதி தன்னையும் அறியாமல் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து அவன் பக்கத்தில் வந்திருந்தவள் ஸ்பீட் பிரேக்கரில் பைக்கை ஏற்றி இருக்கும் பொழுது பிடிமானத்திற்கு அவன் தோளில் கைவைத்துவிட்டாள்.. 

அதில் பிரேக் போட்டு நிறுத்தினான் மித்து…. 

“ஹேய் என்னடி பன்ற…” 

“நான் என்ன பண்ணுனேன் மித்து…” 

“இந்த ஆக்டிங் எல்லாம் என்கிட்ட வேண்டாம் நான் உன்கிட்ட என்ன சொன்னேன் என்னை டச் பண்ணக்கூடாதுன்னு சொன்னேன்ல….” 

உடனே அவன் தோளில் இருந்த கை எடுத்துகொண்டவள் “சாரி… வேகமா போகவும் பயத்தில பிடிச்சுட்டேன்…ஸ்லோவா போ மித்து…”என்றாள்.. 

“ஸ்லோவா போகணுமா இன்னும் பைவ்  மினிட்ஸ்தான் இருக்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆக… ஓகே நீயே ஸ்லோவா போகணும்ன்னு சொல்லும் போது எனக்கென்ன….”என்றவன் வண்டியின் வேகத்தை குறைத்து ஆமை வேகத்தில் பைக்கை ஓட்டினான். 

“வேணும்ன்னே இந்தமாதிரி பன்றான்.. ஓட்டுனா பிளைட் வேகத்தில ஓட்டுவான் இல்லன்னா இப்படி பண்ணுவான்…”என முனுமுனுத்துகொண்டவள் “மித்து கொஞ்சம் பாஸ்ட்டா போ…”என்றாள். 

“ஹேய் என்ன நீ ஸ்லோவா போ பாஸ்ட்டா போன்னு எனக்கே ஆர்டர் போடற…நீதான் எனக்கு வேலைக்காரி அதை மறந்திடாத…”என்றான்.. 

“சாரி…”என்றவள் அமைதியாகிவிட மித்ரன் அவளை திட்டினாலும் வண்டியின் வேகத்தை அதிகரித்தான். 

அரைமணி நேரத்தில் வர வேண்டிய தூரத்திற்கு பத்தே நிமிடத்தில் அவளை அழைத்து சென்றுவிட்டான். 

ஸ்கூள் முன் வண்டியை நிறுத்தியவன் “ஏய் இறங்கு…”என சொல்ல மதி இறங்கிக்கொண்டவள் “தேங்க்ஸ் மித்து…”என்று சொல்ல அவனோ இதழ் சுழித்து திமிராய் “உன் தேங்க்ஸ் எல்லாம் யாருக்கு வேணும்… நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும்…”என்றவன் அவளை எக்ஸாம் நன்றாக எழுது என்று ஒரு வார்த்தைகூட சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.. 

மித்ரன் கண்னை விட்டு மறையும்வரை பார்த்து கொண்டிருந்த மதி “ம்ம் ஒரு ஆல் த பெஸ்ட் சொல்லிட்டு போயிருக்கலாம்… அதுசரி இவன்கிட்ட நான் அதையெல்லாம் எதிர்பார்க்கலாமா?…”என தன்னையே திட்டிக்கொண்டவள் திரும்ப அவளுக்கு பக்கத்தில் இசை நின்றிருந்தாள்.. 

“ஹேய் இசை…” 

“ஏண்டி இப்போதான் வர்ற… பேசாம என்கூடவே நீ வந்திருக்கலாம்ல…என்னை எதுக்கு முன்னாடியே போக சொன்ன?…”என இசை சொல்ல 

“நான் உன்னை போக சொன்னேன்னா நீ என்னை விட்டுட்டு வந்திட்டு…”என்றவள் சரியாய் பெல் அடிக்கவும் “ஓகே நாம அப்பறம் பேசலாம்… எக்ஸாம் நல்லா பண்ணு ஆல் த பெஸ்ட்..”என சொன்னவர்கள் எக்ஸாம் எழுத சென்றனர்.. 

தென்றல் தழுவும் மாலை நேரம்.. 

ரத்தினதேவி ஹாலில் அமர்ந்து மஹாபாரதம் புக் படித்து கொண்டிருந்தவர் “பாட்டிம்மா…”என்றவர்கள் குரலில் நிமிர்ந்து பார்த்தார் 

டிரஸ் முழுவதும் இங்க் பூசிகொண்டு சிரித்த முகமாய் நின்றிருந்த இசை மதியை பார்த்தவர் “ரெண்டு பேரும் என்ன இப்படி வந்து இருக்கீங்க?…”என கேட்க 

இசை சிரித்தவள் “அது ஒன்னும் இல்ல டார்லிங்… இன்னும் லாஸ்ட் டேல்ல அதான் நாங்க எல்லாம் ஜாலியா விளையாடிட்டு வந்தோம்…”என்றவள் பேசிக்கொண்டே சென்று அவரை அணைக்கபோக ரத்தினதேவி கையை உயர்த்தி “என் பக்கத்தில வராத…”என்றார். 

அதில் முகத்தை உமென்று வைத்து கொண்டவள் “என்ன டார்லிங் ஆசையா கட்டிப்பிடிக்க வந்தா இப்படி சொல்ற…”என்றாள்.. 

“இப்படி அழுக்கா வந்து என்னை கட்டிபிடிப்பியா….”என்றவர் மதியை பார்த்து “எக்ஸாம் எப்படி எழுதி இருக்க?…”என்று கேட்க 

“ம்ம் நல்லா எழுதிருக்கேன் பாட்டி…” 

“நல்ல மார்க் வரும்ல?…” 

“பாட்டி அதெல்லாம் பர்ஸ்ட் மார்க்கே அவதான் எடுக்கபோறா…”என இசை சொல்ல ரத்தினதேவி “அப்போ நீ?…”என்று கேட்க 

‘நான் எப்படியும் பாஸ் ஆகிடுவேன்…” 

“ஏண்டி ஒழுங்கா படிக்கலயா…”என கொஞ்சநேரம் அவளுக்கு அவர் அட்வைஸ் செய்ய இசை காதை குடைந்தவர் “போதும் பாட்டி… அந்த மித்ரன் எல்லாம் காலேஜ்ஜே போறது இல்ல அவனை எல்லாம் யாரும் எதுவும் சொல்றது இல்ல…”என்றாள்.. 

மித்ரனை பற்றி பேசியதும் ரத்தினதேவி முகம் வாடிட மதி “பாட்டி நீங்க ஏன் வருத்தப்படறீங்க?…”என்றாள்.. 

‘இன்னிக்குகூட தாத்தாவும் பேரனும் சண்டை போட்டுகிட்டாங்க… மித்ரன் கிளப் போறதா சொல்லிட்டு போனான் இப்படியே அவன் பண்ணிட்டு இருந்தா எப்படி அவன் காலேஜ் முடிப்பான்னு எனக்கு பயமா இருக்கு…” 

அவர் வருத்தம்மாய் சொல்லவும் “ஐயோ பாட்டி மித்ரன் இன்னிக்கு காலேஜ்தான் போனான்…”என்றாள். 

இசை “உனக்கு எப்படி தெரியும்?…”என கேட்க 

“அதென்னவோ எனக்கு தோணுச்சு இன்னிக்கு காலேஜ்தான் போயிருப்பான்னு …”என்றவள் இன்று அவன் தன்னை ஸ்கூல் அழைத்து சென்றுவிட்டதை நினைத்து பார்த்தாள்.. 

அப்பொழுது வெளியில் இருந்து வந்தான் நந்தா.. 

அவனை பார்த்ததும் இசை “என்ன தடியா நீ மட்டும் தனியா வர்ற எங்க உன்னோட பிரண்ட்டு?…”என கேட்க.. 

நந்தா போனை பார்த்தபடி “மித்ரனா அவன் காலேஜ் போயிட்டான்…”என்றவன் நின்றுகூட பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.. 

இசை “எப்படி மதி அவன் காலேஜ் போயிருப்பான்னு சொன்ன?…”என கேட்க 

மதி மென்னகை சிந்தியவள் “அதான் சொன்னேன்ல தோணுச்சுன்னு… சரி நான் போறேன்…”என்றவள் அங்கிருந்து அவுட் ஹவுஸ் சென்றாள்..

  

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.