மதி வேக வேகமாய் சைக்கிளை மிதித்தவள் அந்த ஊரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்றாள்..
பூசாரி அவளை பார்த்ததும் முகம் மலர்ந்தவர் “மதி வாம்மா…”என்று சொல்ல
அவளோ “பூசாரி ஐயா சீக்கிரம் இந்த பைலை சாமிகிட்ட வச்சு கொடுங்க…”என்றாள்..
அவரும் வாங்கி செல்ல விழிமூடியவள் “சாமி ஐயா தொடங்கற பிராஜக்ட் அவருக்கு லாபத்தை கொடுக்கணும்… இன்னிக்கு எனக்கு லாஸ்ட் எக்ஸாம் எல்லா எக்ஸாமையும் நான் நல்லா எழுதி இருக்கேன் இந்த எக்ஸாமையும் நான் நல்லா எழுதனும்…”என்று வேண்டிக்கொண்டவள் பூசாரி வரவும் அவரிடமிருந்து பைலை வாங்கிக்கொண்டவள் வழக்கம்மாய் கோவிலுக்கு வந்தாள் அவரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு செல்பவள் இன்று டைமாகவும் “ஸ்கூலுக்கு லேட்டாச்சு… நான் வர்றேன்…”என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்..
ஆளவந்தான் சாப்பிட்டு முடித்ததும் அசோகனிடம் ” நான் கலெக்டர பாக்க போக வேண்டியது இருக்கு நீ நேரா கம்பெனிக்கு போயிடு… “என சொல்ல அவரும் தலையாட்டினார்..
அர்ச்சனா மதி வருகிறாளா என்று வெளியிலேயே பார்த்துக் கொண்டிருக்க அதை கவனித்த ஆளவந்தான் “அர்ச்சனா அங்க என்ன பார்த்துட்டு இருக்க?…”என கேட்க
“அது வந்து மாமா…”என்று திணறியவர் அப்பொழுது மித்ரன் மேலிருந்து வரவும் அவனைப் பார்த்ததும் பேச்சை மாற்றும் விதமாக “வா மித்து காலேஜ் கிளம்பிட்டியா….”என்றார்..
மித்து என்றதும் ஆளவந்தான் முகம் இறுக திரும்பிப் பார்க்க மித்ரனும் தன்னுடைய தாத்தாவைப் பார்த்தான்..
ஆளவந்தான் திமிரின் மொத்த உருவமாக நின்றிருந்த தன்னுடைய பேரனை முறைத்து பார்க்க மித்ரன் தன்னுடைய தாத்தாவை எதிரியை போல் பார்த்தான்..
இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து பார்ப்பதை பார்த்த அர்ச்சனாவுக்கு சந்தோஷமாக இருந்தது…பின்ன இத்தனை வருடங்களாக பார்த்துக் கொள்ளும்போது எல்லாம் சண்டை போட வைத்து ஆளவந்தான் மனதில் மித்ரனை பற்றி தவறாக புரிய வைத்து மித்ரன் மனதில் ஆளவந்தானை எதிரியைப் போல அல்லவா சித்தரித்து வைத்திருக்கிறார்…
“இவங்க இப்படி சண்டை போட்டுட்டு இருக்குறதுதான் எனக்கும் என் பையனுக்கும் நல்லது…”என தனக்குள் சொல்லிக் கொண்டவர் மித்ரன் அருகில் சென்று அவன் மேல் பாசமாக இருப்பது போல் “என்ன மித்து கண்ணா காலேஜ் கிளம்பிட்டியா?…” என கேட்க
அதற்கு அவன் பதில் சொல்லும் முன்னே ஆளவந்தான் கோபமாய் “அவன் எங்க காலேஜ் போகப் போறான் நேரா பாருக்கோ இல்ல கிளப்புக்கோதான் போகப் போறான்… இந்த ஜமீன் மானத்தை வாங்கறதுக்காகவே வந்து பிறந்து இருக்கான்….”என சொல்ல அவருடைய சத்தம் கேட்டு ரத்தினதேவி, நந்தா லேகா எல்லாரும் வந்தனர்..
நந்தா விழியசைவில் மித்ரனிடம் “என்ன டியூட்.. மார்னிங் பஞ்சாயத்தா?..என்று கேட்க அவனோ தன்னுடைய தாத்தாவை முறைத்து பார்த்தான்..
ரத்தினதேவிக்கு தன்னுடைய பேரனையும் கணவனையும் பார்த்ததுமே புரிந்து போனது…”இவங்க மாறவே மாட்டாங்களா…”என்று பெருமூச்சு இழுத்து விட்டவர் “ரெண்டு பேரும் காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா?…என கேட்டவர் மித்ரனை பார்க்க இவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றவன் இப்பொழுது ஒவ்வொரு அடியையும் அழுத்தமாய் எடுத்து வைத்து ஆளவந்தான் முன்னாடி சென்று நின்றான்..
தாத்தாவும் பேரனும் எதிர் எதிரே நிற்க பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது என்ன நடக்கப்போகிறதோ என்று பயமாக இருந்தது..
“போச்சு மித்து ஏதோ பெரிய சம்பவமா பண்ண போறான்னு நினைக்கறேன்…மித்து ப்ராப்ளம் பண்றதுக்குள்ள நான் அவனை இங்கிருந்து கூட்டிட்டு போகணும்…”என நந்தா தனக்குள் சொல்லிக்கொண்டவன் மித்ரன் அருகில் சென்று “மித்து காலேஜுக்கு டைம்மாச்சு நீ வா நாம போலாம் என்று சொல்லி அவன் கை பிடித்து இழுத்தான்..
தன்னுடைய தாத்தாவை அழுத்தமாய் பார்த்தபடி நின்று நின்றிருந்த மித்ரனோ கோபமாய் நந்தா கரத்தை உதறினான்..
“மித்து…”என்ற ஆளவந்தான் கோபத்தில் கத்த அவனோ ” நீங்க எதுவும் பேசக்கூடாது… ஜஸ்ட் ஷெட்அப்… “என்று விரல் நீட்டியவன் “ஹிட்லர் நீங்க எந்த ஜமீனுக்கு வேணும்ன்னா ஹெட்டா இருக்கலாம் எனக்கு இல்ல உங்களை பார்த்து மத்தவங்க பயப்படலாம் பட் நான் பயப்பட மாட்டேன்…நான் எங்க வேணும்ன்னாலும் போவேன் அது என்னோட சாய்ஸ் அதைப்பத்தி பேசறதுக்கு உங்களுக்கு எந்த ரைட்சும் இல்ல புரியுதா…” என்றான் அழுத்தமாய்..
அந்த ஜமீனையும் ஊரையும் தன்னுடைய கட்டுக்கோப்பில் வைத்திருக்கும் ஆளவந்தான் தன்னுடைய பேரன் அவமதிப்பது போல் பேசவும் கோபத்தில் முகம் சிவந்தவர் “மித்து…”என்று அவனை அடிக்க கை ஓங்க மித்திரன் கரம் அவர் அடிக்கும் முன் தடுத்து பிடித்தது…
அவர்கள் சண்டையை பார்க்கும் போது எல்லோருக்கும் படபடப்பாக இருந்தது அர்ச்சனா அசோகனைத் தவிர..
மித்ரன் பிடித்திருந்த ஆளவந்தான் கரத்தை உதறியவன் “என்ன பத்தி பேசவே உங்களுக்கு ரைட்ஸ் இல்லன்னு சொல்லிட்டு இருக்கேன் இதுல நீங்க என்னை அடிக்க கை ஓங்கறீங்களா… நோ நோ ஹிட்லர் இட்ஸ் நாட் ரைட்… வயசான காலத்தில அமைதியா இருக்கனும் அதுதான் உங்களுக்கு நல்லது…”என்றவன் குரலில் இப்பொழுது கிண்டல் தான் தெரிந்தது..
ரத்தினதேவி மித்ரன் அருகில் சென்றவர் “தாத்தாகிட்ட இப்படியா பேசுவாங்க மித்து… “என்றவர் இருவரையும் சமாதானம் செய்ய பார்க்க ஆளவந்தான் “நீ செல்லம் கொடுத்துதான் உன் பேரன் இப்படி இருக்கான்… ஜமீன்ல பொறந்துட்டு பொறுப்பில்லாம சுத்திட்டு இருக்க ஒருத்தன் இவன் மட்டும் தான்…”என்று மேற்கொண்டு அவன் மித்ரனை திட்டுவதற்குள் அங்கு வந்தாள் மதி..
அவள் கையில் இருந்த பைலை பார்த்ததும் அர்ச்சனா முகம் மலர “மாமா மித்ரன் சின்ன பையன் விளையாட்டுத்தனமா இருக்கான் போக போக அவன் மாறிடுவான்…அவனுக்கு நான் எல்லாம் சொல்லி புரிய வைக்கிறேன்…”என்றவர் ஆளவந்தானை பைலை வாங்கிக்கொண்டு அங்கிருந்து அனுப்ப பார்க்க
மித்ரன் “என்ன புரிய வைக்க போறீங்க?…”என்று திமிராக கேட்கவும் தன்னிடமே திமிராக பேசுபவனை பார்க்கும் போது அர்ச்சனாவுக்கு கோபம் எழுந்தாலும் தற்போது அதை அவனிடம் காட்டாமல் இருப்பது தான் தனக்கு நல்லது என்பதால் உள்ளுக்குள் தோன்றிய கோபத்தை அப்படியே அடக்கியவர் அவனிடம் “மித்து கண்ணா நான் சொன்னா கேட்பல்ல நீ வா…”என்றவர் அவன் கரம் பிடித்து தள்ளி அழைத்து சென்றார்..
போகும்பொழுது அசோகனுக்கு கண்ணை காட்டிவிட்டு செல்ல அசோகனும் விழிமூடி திறந்து தான் பார்த்துக் கொள்வதாக சொன்னார்..
ரத்தினதேவி கோபத்தில் நின்றிருந்த ஆளவந்தனை பார்த்து “என்னங்க அவன் பேசினது எல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க…அவன் நம்ம பேரன் நம்ம வாரிசு… நமக்கு அவன்கிட்ட உரிமை இல்லாம போயிடுமா அவன் ஏதோ கோபத்துல சொல்றான்…”என்றார்..
“இங்க பாரு ரத்னா இந்த ஜமீன்ல எனக்கு அப்புறம் எல்லாத்தையும் பார்க்கப் போறவன் அவன்தான்… இன்னும் ஒரு வருஷம்தான் இருக்கு அவனை ஒழுங்கா படிப்பு முடிச்சிட்டு கம்பெனி பொறுப்பை எல்லாம் எடுத்து பார்த்துக்கிற மாதிரி அவன தயார்படுத்திக்க சொல்லு…. என சொன்னவர் ரத்தினதேவி தலையாட்டவும் மதி பக்கம் திரும்பி பார்த்தார்.
மதிய அவர் பார்த்ததும் அருகில் சென்றவள் பைலை கொடுத்தாள்..
அசோகன் “அப்பா உங்களுக்கு லேட்டாச்சுல்ல…”என சொல்லவும் ஆளவந்தான் அந்த பைலில் கையெழுத்து போட்டவர் அசோகனிடம் “அந்த மருந்து கம்பெனிக்காரன்கிட்ட கொடுத்துடு…”என சொல்லி பைலை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்
பத்துகோடி ஆசையில் அசோகனும் உடனே அந்த பைலை கொடுக்க அங்கிருந்து கிளம்பினார்..
லேகா வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தன் மகன் நந்தா தலையில் தட்டியவர் “உனக்கு காலேஜ் லேட்டாகலயா…”என்றார்.
“அம்மா…”சிணுங்கியவன் மித்ரனை தேடி அங்கிருந்து செல்ல மதி வழக்கம்மாய் நடைபெறும் தாத்தா பேரன் சண்டைதான் என்று புரிந்துகொண்டவள் ஸ்கூல் செல்ல லேட்டாகவும் ஜமீன் பங்களா விட்டு வெளியில் சென்றவள் தான் தங்கி இருக்கும் அவுட் ஹவுஸ் சென்றாள்..
அர்ச்சனா கோபத்தில் எரிமலையாய் நின்றிருந்த மித்ரன் தோளில் கைவைத்து “இங்க பாரு மித்து கண்ணா சித்தி சொன்னா கேட்பல்ல அவர் பேசினதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்காத… ” என சொன்னவர் அவன் கோபத்தை தனிப்பது போல் பாசமாய் பேசினார்..
பின் “ஓகே உனக்கு காலேஜ்க்கு லேட்டாச்சுல்ல நீ கிளம்பு… அப்பறம் உன் தாத்தா அதுக்கும் கோபப்படுவாரு…”என சொல்ல
அதில் மித்ரன் முகம் இறுக “அவர் கோபப்படுவாருங்கறதுக்காக எல்லாம் என்னால காலேஜ் போக முடியாது…”என்றவன் நந்தா அருகில் வந்து “மித்து கிளம்பலாமா?…”என கேட்க
“நான் கிளப் போறேன்…”என்றவன் அங்கிருந்து செல்ல “மார்னிங்கேவா…”என்ற நந்தா பின் “ஓகே நானும் வர்றேன்…”என்றவன் அவன் பின்னாடியே சென்றான்..
அர்ச்சனா இதழில் வெற்றி புன்னகை தோன்ற “ம்ம் இதைதான் மித்து நான் உன்கிட்ட எதிர்பார்த்தது… உன்னை எப்படி நான் நினைக்கிறதை செய்ய வைக்கிறவனா மாத்தறதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்… உன் தாத்தா உன்னை இந்த ஜமீனுக்கும் சொத்துக்கும் வாரிசாக்கி கம்பனி பொறுப்பை எல்லாம் உன்கிட்ட கொடுக்கலாம்ன்னு நினைச்சுட்டு இருக்கார்ல அதுக்கு அப்படியே அப்போசிட்டா உன்னை அதுக்கெல்லாம் தகுதி இல்லாதவனா நான் மாத்திட்டு இருக்கேன்…அதேசமயம் என் பையன் செழியன் மாமா எப்படி எல்லாம் நீ இருக்கனும்ன்னு ஆசைப்படறாரோ அந்தமாதிரி இருக்கான்… நீ நல்லா கிளப் பப்ன்னு சுத்து…”என சொல்லிக்கொண்டார்…
மித்ரன் வெளியில் சென்றவன் தன்னுடைய பைக் எடுத்தான்.. அந்த பைக் காரை விட இரண்டு மடங்கு விலை அதிகம்…
வெளிநாட்டில் தயாரித்த பலகோடி மதிப்புடைய பைக் அதுதான் வேண்டும் என்று மித்ரன் வாங்கி இருந்தான்…
“மித்து என்னை விட்டுட்டு போயிடாத…”என கத்தியபடி வந்த நந்தா பைகில் ஏறும்பொழுது நாய்குட்டி குறைத்தபடி ஓடிவந்து பைக்கை சுற்றி சுற்றி வர மித்ரனிடம் இவ்வளவு நேரம் இருந்த கோபம் காணாமல் போனது..
“சாக்கி என்றபடி பைக் நிறுத்திவிட்டு இறங்கியவன் நாய்க்குட்டியை தூக்கி கொஞ்சனான்.
கருப்பும் வெள்ளையும் கலந்தது போல் இருந்த நாய்க்குட்டி தன்னுடைய நாவால் மித்ரன் கரத்தை நக்கி தன்னுடைய பாசத்தை காட்ட மித்ரன் அதன் அன்பில் நெகிழ்ந்தான்..
இரண்டு வருடங்களாக மித்ரன் அந்த நாய்க்குட்டியை வளர்த்துக் கொண்டிருக்கிறான்… அந்த நாய்க்குட்டி வளர்க்கிறேன் என்று கொண்டு வந்தவன்தான் ஆனால் அதை பார்த்துக் கொள்வது பராமரிப்பது எல்லாமே மதி தான்..
நந்தா கிளப் போகலாம் என்று ஆர்வம்மாக இருந்தவன் அவன் நாய்க்குட்டி கொஞ்சம்வதை பார்த்து “மித்து இன்னும் எவ்வளவு நேரம்…போலாம்…’ என்று சொல்ல உடனே நாய்க்குட்டி அவன் பக்கம் திரும்பி பார்த்து குறைத்தது..
அதில் நந்தா கண்கள் சுருக்கியவன் “என்ன என்னை பார்தது குறைகிற அப்பறம் உன் வால கட் பண்ணிடுவேன் பாத்துக்கோ…”என சொல்ல அதற்கு என்ன புரிந்ததோ இன்னும் சத்தமாய் அவனை பார்த்து குறைத்தது..
அதில் சிரித்த மித்ரன் சாக்கியை கொஞ்ச அதற்குள் மதி ரெடியாகி வந்தவள் இசையை காணாமல் அதிர்ந்தாள்..
No comments yet.