மதி வேகமாய் கதவை திறந்து அறைக்குள் செல்ல அறை முழுவதும் இருளில் மூழ்கி இருந்தது..
வேகமாய் சென்று சூரிய வெளிச்சத்தை மறைத்து இருந்த கர்ட்டன்ஸை விலகியவள் பெட்டை பார்க்க அதுவோ காலியாக இருந்தது…
அறைக்குள் அவனை காணாமல் “எங்க போயிட்டான்…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் திரும்ப இப்பொழுது அவள் எதிரில் வந்து நின்றான் மித்ரன்..
அவனை பார்த்ததும் மதிக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டது…
ஆறடிக்கும் மேல் வளர்ந்து இருந்தவனை மெல்ல விழிகள் உயர்த்தி நிமிர்ந்து பார்த்தாள்..
பூனை விழிகள் அவளை கோபத்துடன் பார்க்க வாஞ்சை இல்லாமல் நெடுநெடுவென வளர்ந்து இருந்தவன் இருபது வயதில் யவரையும் வசீகரிக்கும் அழகுடன் இருந்தான்..
எக்ஸர்சைஸ் செய்து உடலை கட்டுகோப்பாய் வைத்து இருந்தவன் ஷர்ட் போடாமல் இருந்ததில் அவனுடைய சிக்ஸ் பேக் தெரிந்தது…
“மித்து…”என்றவள் வார்த்தைகள் வெளிவரவில்லை…கண்களாலயே வெட்டி கூறுபோட்டு விடுவது போல் மித்ரன் அவளை பார்த்தான்..
ஆளை கிறங்கடிக்கும் அவளின் அழகு அவ்வளவு நெருக்கத்தில் நின்றிருக்கும் பொழுதும் அவனை எதுவும் செய்யவில்லை…அவளை வெறுப்புடன் பார்த்தாள்…அதுபோல்தான் காலேஜில் பெண்கள் அவன் தன்னிடம் பேசமாட்டானா என்று அவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின்னாடியே சென்று சைட் அடிக்க இவளோ ஒரு இன்ச் கேப்பில் தனக்கு பக்கத்தில் நின்றிருந்தவனை ஏதோ ராட்சனை பார்ப்பது போல் பார்த்தாள்..
மித்ரன் முகம் கோபத்தில் இறுக அவள் கரத்தை அழுத்தம்மாய் பிடித்தான்..
அவன் அழுத்தி பிடித்தது வலிக்க வலியில் முகம் சிவந்தவள் “வலிக்குது விடு மித்து…”என்றாள்… அவனோ “என் பேரை சொல்லாத…”என கத்தியவன் “ஏய் வேலைக்காரி நான் கூப்பிட்டா அடுத்த செகண்ட் என் முன்னாடி வந்து நிக்கனும்ன்னு சொல்லி இருக்கேன்ல…”என மிரட்டலாக சொல்ல
அவன் கொடுத்த வலியை பல்லை கடித்துகொண்டு பொறுத்து கொண்டவள் “கூப்பிட்டவுடனே வந்துட்டேன்….”என சொல்ல
“நோ… ஒரு செகண்ட் எக்ஸ்ட்ராவா எடுத்துகிட்ட…”என்றவன் பிடித்திருந்த அவள் கரத்தை உதற அதில் மதி கீழே விழுந்தாள்..
விழும் பொழுது அவள் கைகளில் அடிபட்டது…”ஆ…”வலியில் முனகியவளை கண்டுகொள்ளாமல் “இனி நான் கூப்பிட்ட உடனே வர்ற இல்லன்னா உனக்கு நான் என்ன பனிஷ்மென்ட் கொடுப்பேன்னு தெரியும்ல…”என மிரட்டலாக சொன்னவன் அவள் தட்டு தடுமாறி எழுந்து நிற்க “போய் கிளீன் பண்ணு…”என்று பால்கனியை சுட்டி காட்டிவிட்டு கப்போர்ட் அருகில் சென்றவன் டவல் ஒன்றை எடுத்துகொண்டு குளிக்க சென்றான்..
அவன் இப்படிதான் என்று மதி நன்றாகவே தெரியும்… அவனுடைய கோபத்தையும் வெறுப்பையும் இத்தனை வருடமாக தாங்கி கொண்டிருக்கிறாளே…
பால்கனிக்கு சென்று பார்த்தவள் அங்கு கீழே கிடந்த மது பாட்டில்களை பார்த்து ஷாக்காகவில்லை…
வழக்கம்மாய் அவள் பார்க்கும் வேலைதான்…தாவணி முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியவள் மடமடவென வேலை பார்க்க தொடங்கினாள்..
அவன் குடித்துவிட்டு போட்டிருந்த பாட்டில்களை எல்லாம் அப்புறப்படுத்தியவள் அறைக்கு வந்து அறையையும் கிளீன் செய்துவிட்டு மித்ரனுக்கு டிரஸ் எடுத்து பெட்டில் வைத்துவிட்டு டேபிளில் கலைந்து கிடந்த அவனுடைய புக் எல்லாம் எடுத்து பேக்கில் வைத்தவள் பின் எல்லாம் சரியாக கிளீனாக இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினாள்..
அவனுடைய எல்லா வேலையும் அவள்தான் பார்க்க வேண்டும்…அவளும் முகம் சுழிக்காமல் அவன் என்ன திட்டினாலும் வெறுப்பை காட்டினாலும் அவனுக்கு தேவையான எல்லாம் செய்து கொடுப்பாள்..
அவள் சென்றதும் மித்ரன் பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தான்..
வந்தவன் அவள் எதாவது செய்யாமல் விட்டு சென்றிருக்கிறாளா என்று செக் செய்தவன் பின் ரெடியாக தொடங்கினான்..
மதி மித்ரன் அறையில் இருந்து வந்து கொண்டிருக்க ஒரு அறையை கடந்து செல்லும் பொழுது ஒரு மென்கரம் அவள் கரம் பிடித்து அறைக்குள் இழுத்தது..
மதி திரும்பி பார்க்க அவள் முன்னாள் முறைத்தபடி நின்றிருந்தாள் இசை..
அவளை பார்த்ததும் மதி இதழில் புன்னகை தோன்றியது..
ஆனால் இசையோ கோபம்மாய் “சிரிக்காத…”என சொல்ல அவள் அப்பொழுதும் “என்ன கோபமா இருக்கியா?…”என சிரித்தபடி கேட்டாள்..
“ஆமா கோபமாதான் இருக்கேன்…”
“என்னோட இசைக்கு என்ன கோபம்…”என்றவள் இசையின் தாடை பற்றி செல்லம் கொஞ்சி கேட்க இசை அவள் கரத்தை தட்டிவிட்டவள் “டைம் என்னாச்சு இன்னிக்கு நீ அந்த தடியனுக்கு சேவை பண்ணிட்டு இருக்கியா… பாரு நான் ரெடியே ஆகிட்டேன்…”என சொல்ல பள்ளி சீருடையில் இருந்தவளை பார்த்த மதி “அவ்வளவுதான் நான் போய் சீக்கரம் ரெடியாகி வந்திடறேன்… நீ அதுக்குள்ள எக்ஸாமுக்கு ரிவைஸ் பண்ணு…”என்றவள் இசை “சீக்கரம் வா…”என சொன்னதற்கு “அவ்வளவுதான் வந்திடுவேன்…”என சொல்லிவிட்டு ஜமின் வீட்டை விட்டு வெளியில் செல்லபோக “மதி நில்லு…”என்றவர் குரல் அவளை தடுத்தது..
ஆளவந்தான்தான் அவளை தடுத்து இருந்தார்.. அவரை பார்த்ததும் பவ்யம்மாய் அருகில் சென்றவள் “சொல்லுங்க ஐயா…”என சொல்ல அவரோ தன் கையில் இருந்த பைலை அவளிடம் கொடுக்க அவளும் வாங்கிக்கொண்டாள்
“இது புது பிராஜக்ட் பைல் கொண்டு போய் கோவில்ல கொடுத்து சாமி கும்பிட்டு வாங்கிட்டு வா…”என சொல்ல அவளுக்கு ஸ்கூலுக்கு லேட்டான போதிலும் மறுக்காமல் “சரிங்க ஐயா…”என்று தலையாட்டியவள் அங்கிருந்து சென்றாள்..
அவள் அந்த பக்கம் சென்றதும் அசோகன் தன் அப்பா அருகில் சென்று நின்றவர் “அப்பா உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்… எந்த புது பிராஜக்ட்டா இருந்தாலும் அது என்ன அந்த வேலைக்காரிகிட்ட கொடுத்து கோவில்ல சாமி கும்பிட்டு வாங்கிட்டு வர சொல்றிங்க?…”என கேட்க
ஆளவந்தான் திரும்பி தன் மகனை முறைத்து பார்த்தவர் “என்னை கேள்வி கேட்கிற அளவுக்கு உனக்கு தைரியம் வந்திடுச்சா?…”என கேட்க அவ்வளவுதான் அசோகன் “மன்னிச்சுடுங்கப்பா…”என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்..
ஆளவந்தான் கைத்தடியை ஒரு கையால் ஊன்றியபடி மற்றொரு கையால் நரைத்த மீசையை நீவிகொண்டவர் “வேலைக்காரியா இருந்தாலும் அவகிட்ட அதிர்ஷ்டம் அதிகமா இருக்கே… அவ கையால பூஜை பண்ணி வாங்கிட்டு வர்ற எந்த ஒரு பிராஜக்ட்டும் நஷ்டம்மானதே கிடையாதே அதனாலதான் மதியை இந்த தங்கக்கூண்டுக்குள்ள அடைச்சு வச்சிருக்கேன்…”என சொல்லிக்கொண்டவர் முற்றிலும் சுயநலவாதியாக மட்டுமே தெரிந்தார்..
மதி வெளியில் சென்றவள் கார் இருக்க டிரைவரை காணாமல் அவரை தேடினாள்.. ம்ம்ஹும் அவர் எங்கு போனாரோ ஆளை காணோம்..
“இந்த டிரைவர் அண்ணா எங்க போயிட்டாரு… அவருக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தா அப்பறம் நான் கோவிலுக்கு போயிட்டு வந்து ஸ்கூல் போறதுக்கு லேட்டாகிடும் இன்னிக்கு வேற லாஸ்ட் எக்ஸாம்…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..
ஒரு ஓரமாய் நிறுத்தி வைத்திருந்த தன்னுடைய சைக்கிள் அருகில் சென்று அதை எடுத்தவள் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்..
அதை தன்னுடைய அறையின் பால்கனியில் இருந்து பார்த்து கொண்டிருந்தான் மித்ரன்…
**************
அசோகன் அறைக்கு வர அர்ச்சனா கண்ணாடி முன் அமர்ந்து மேக்கப் போட்டு கொண்டிருந்தார் ..
அவர் அருகில் சென்றவன் “அர்ச்சனா அழகா இருக்க…”என சொல்ல அசோகன் பக்கம் திரும்பியவர் சிரிக்கவில்லை மாறாக அழுத்தம்மாய் பார்த்து “நான் அழகுதான்னு எனக்கே தெரியும்…”என்றார்
“என்ன அர்ச்சனா இப்படி கோபமா பேசற…’என்றவர் சிணுங்கியபடி அவர் கைபிடிக்க போக வேகமாய் அவர் கரத்தை உதறி “என் அழகை ரசிச்சது எல்லாம் போதும் பிராஜக்ட் விஷயம் என்னாச்சு?…”என கேட்க
“புது மெடிசின் பிராஜக்ட்தான… அப்பா அதை மதிகிட்ட கொடுத்து கோவில்ல வச்சு பூஜை எடுத்துட்டு வர சொல்லிருக்காரு வந்ததும் அதுல சைன் பண்ணிடுவாரு… அப்பறம் என்ன அப்பா சைன் பண்ணுனதும் அந்த கம்பனிகாரன் நாம டீல் பேசுன மாதிரி டென் பர்ஸன் ஷேர் அதாவது பத்து கோடி நம்ம அக்கவுண்ட்க்கு அனுப்பிடுவான்…”என்றார்..
பணத்தை பத்தி பேசியதும் அர்ச்சனா முகம் பிரகாசம்மானது..
“அப்போ டீல் ஓகே ஆகிடும்ல?…”
“அதெல்லாம்.. ஆனா…”என்றவர் இழுக்க அர்ச்சனா கண்கள் சுருக்கியவள் “ஆனா என்ன?…”என்று கேட்க
“அது இப்போ அப்பா சேல்ஸ் பண்ண போற டேப்லெட் மருந்து எல்லாம் பல நாடுகள்ல ஏன் இந்தியாவில சில ஸ்டேட்ல எல்லாம் தடை பண்ணிருக்காங்க இந்த விஷயம் அப்பாக்கு தெரியாது ஆனா நமக்கு தெரியும்ல… அந்த வெளிநாட்டு கம்பனிக்காரங்க கொடுக்கிற கமிஷன் பணத்துக்காக நாம சரின்னு சொல்லி அப்பா வரைக்கும் இந்த பிராஜக்ட்டை கொண்டு போய் ஓகேவும் பண்ண வச்சுட்டோம்…இந்த விஷயம் அப்பாவுக்கு தெரிய வந்துச்சுன்னா என்னாகுமோன்னு பயமாவும் இருக்கு அர்ச்சனா…”என்றார்.
“என்ன பேசறீங்க பயந்துட்டு இருந்தா நமக்கு பத்து கோடி கிடைக்குமா… இந்த ஒரு தடவை மட்டும்மில்ல ஒவ்வொரு தடவையும் மருந்து வரும்போது எல்லாம் கமிஷனா நமக்கு பத்து கோடி கிடைக்கும்… நமக்கு வர்ற லாபத்தை மட்டும்தான் நாம பார்க்கணும்… மாமாவும் பணத்துக்காக ஆசைபட்டுதான பிராஜக்ட் ஓகே பண்ணுனாரு…”என அர்ச்சனா கொஞ்சம்கூட மற்றவர்கள் மேல் அக்கறை இல்லாமல் பேசினார்.
“ஆனா அர்ச்சனா இது உயிர் போற விஷயம்… அப்பாவுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சிருந்தா கண்டிப்பா பிராஜக்ட்க்கு ஓகே சொல்லிருக்க மாட்டாரு…”
அர்ச்சனா முகம் இறுக “அப்போ கடைசி வரைக்கும் நாம அவருக்கு தெரியாம பார்த்துக்கலாம்….”என சொல்ல அசோகன் அவர் நம்பிக்கையாய் பேசியதிலும் பணத்தின் மீது இருந்த ஆசையிலும் அதற்கு மேல் யோசிக்காமல் “ம்ம் நீ சொல்றதும் சரிதான் நாம நமக்கு வர்ற லாபத்தை மட்டும்தான்
பார்க்கணும்…”என்றார்..( புருஷனும் பொண்டாட்டியும் ஒரேமாதிரி இருக்கீங்களே…)
இசை ரெடியாகி அவளுடைய அறையில் இருந்து வந்தவள் மதி அறைக்கு செல்லபோக எதிரில் வந்த மித்ரன் அவள் போனி டைல் முடியை பிடித்து பின்னாடி இழுத்தான்
“ஆ…”அந்த பங்களாவே அதிரும் வண்ணம் கத்திய இசை “விடுடா…”என்றாள்.
“என்ன சொன்ன விடுடாவா…”அவள் தலையில் கொட்டிய மித்ரன் அவள் மறுபடியும் கத்தும் போனிடைலை விடுவித்து “எங்க போற?…”என கேட்டான்..
இசை அவனை முறைத்து பார்த்தபடி அவன் கொட்டிய இடத்தை தேய்த்து விட்டு கொண்டவள் “மதியை பார்க்கிறதுக்கு…ஸ்கூலுக்கு டைமாச்சு…என்றாள்..
“அவ இன்னும் ரெடியாகல… இன்னிக்கு எக்ஸாம் இருக்குல்ல நீ கிளம்பு…”
“நான் போயிட்டா அவ எப்படி வருவா…”என இசை கேட்க
கண்கள் சுருக்கி அழுத்தம்மாய் பார்த்தவன் “டெய்லியும் அந்த வேலைக்காரியை நீதான் கூட்டிட்டு போறியா.. அதான் அவகிட்ட சைக்கிள் இருக்குல்ல அவ அதுல வந்திடுவா…”என்றவன் இசை அப்பொழுதும் யோசிப்பதை பார்த்து “இப்போ நீ போறியா இல்ல உன் அம்மாவை கூப்பிடட்டுமா…”என மிரட்டினான்.
லேகா வந்தால் அவ்வளவுதான் அவளை திட்டி ஒரு வழி செய்துவிடுவார்…
அவருக்கு பயந்து “ஓகே நான் போறேன் அவளை சீக்கிரம் வர சொல்லு…”என சொல்லிவிட்டு இசை வெளியில் செல்ல இவ்வளவு நேரம் காணாமல் போயிருந்த டிரைவர் இப்பொழுது வந்தவர் அவளை பார்த்ததும் “போலாமா?…”என கேட்டார்.
இசை காரில் ஏற கார் அங்கிருந்து கிளம்பியதே… அதேநேரம் வேர்க்க வியர்க்க கோவிலுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தாள் மதி..
No comments yet.