ஆளவந்தான் அனுப்பிய ஆட்கள் நந்தினியையும் அவர்களிடம் வேலை பார்க்கும் மேனேஜரை தேட அவர்கள் கிடைக்கவில்லை..
அவர்கள் ஜமீனுக்கு வந்து ஆளவந்தானிடம் சொல்ல கோபத்தின் உச்சநிலைக்கு சென்றார்..
“ரத்தினதேவி…”என்று அவர் கத்திய சத்தத்தில் வீட்டில் எல்லாரும் வந்தனர்..
மித்ரன் கீழே வரவில்லை மேல் தளத்தில் இருந்தபடி பார்த்தான்..
ரத்தினதேவி கோபத்தில் எரிமலையாய் நின்றிருந்த கணவனை புரியாமல் பார்த்தவர் அவர் “அந்த ஓடுகாலியோட பொருள் எதுவும் இங்க இருக்ககூடாது…. எல்லாத்தையும் எடுத்துட்டு வர சொல்லு…”என்று சொல்லவும் அதிர்ந்தார்..
“என்னங்க…”
“நான் சொன்னதை செய்…”என்றவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தன் மகள் மருமகளை பார்த்து “பூபதியோட அவ இருக்க போட்டோகூட இருக்ககூடாது… எல்லாமே எடுத்துட்டு வாங்க…”என மிரட்டலாக சொல்ல அவர்களும் அவருடைய கோபத்தை பார்த்து அங்கிருந்து நந்தினி அறைக்கு சென்றனர்.
நந்தினி பயன்படுத்திய பொருட்கள் அவருடைய துணி அவர் பூபதி மித்ரனுடன் எடுத்துகொண்ட போட்டோக்கள் என எல்லாத்தையும் வீட்டிற்கு வெளியே ஆளவந்தான் சொன்னது போல் கொண்டு வந்து போட்டனர்.
“இன்னும் எதாவது இருக்கா?…”என ஆளவந்தான் கேட்க அர்ச்சனா மறுத்து தலையசைத்தவள் “அவ்வளவுதான் மாமா…”என்றாள்..
குவியலாய் கிடந்த பொருட்கள் அருகில் சென்றவர் லைட்டரை கையில் எடுத்தார்.
அவர் என்ன செய்ய போகிறார் என்று எல்லாருக்கும் புரிய மேலே இருந்து மித்ரன் வேகமாய் ஓடிவந்தான்..
அர்ச்சனா அசோகனுக்கு கண்னை காட்ட அவனும் மித்ரன் ஆளவந்தான் அருகில் செல்லாதபடி அவன் கரத்தை பிடித்து தடுத்துவிட்டான்.
“என்னை விடுங்க… என் அம்மாவோட திங்ஸ் எல்லாம் எதுவும் பண்ணாதீங்க தாத்தா…”என்றவன் அசோகன் கரத்தில் இருந்து தன்னை விடுவித்துகொள்ள போராடியவன் “விடுங்க சித்தப்பா…”என்று கத்தினான்..
ஆளவந்தான் திரும்பி அவனை பார்த்தவர் “உன் அம்மா எப்போ இந்த ஜமீன அவமானபடுத்தி ஓடிப்போனாளோ அப்போவே செத்து போயிட்டா…செத்தவங்க பொருளை எல்லாம் வீட்டுல வச்சிருக்க கூடாது…”என்றவர் அவன் “வேண்டாம்… வேண்டாம்…”என்று கத்தியதை பொருட்படுத்தாமல் எல்லா பொருட்களையும் தீயில் போட்டு கொளுத்தினார்..
“வேண்டாம்…’கத்தி கதறிய மித்ரனை எல்லா பொருளும் முழுவதும் எறிந்த பின்தான் அசோகன் விடுவித்தான்..
அவன் கையை விடுவித்ததும் மித்ரன் தன் அம்மாவின் பொருளை காப்பாத்த தீ அருகில் செல்ல ஆளவந்தான் அவன் கைபிடித்து பின்னாடி இழுத்தார்..
அவன் மறுபடியும் தீயை நோக்கி செல்ல போகவும் சிறுவன் என்று பாராமல் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தவர் “மித்ரன்…உன் அம்மா உன்னைபத்தி கவலைபடமா அவ வாழ்க்கைதான் முக்கியம்ன்னு போயிட்டா… நீ இந்த ஜமீன் வாரிசு எனக்கு அப்பறம் இந்த ஜமீனோட பொறுப்பை எடுத்துக்க போறவன் நான் சொல்றதைதான் நீ கேட்கணும்…”என்றார் மிரட்டலாக..
பத்து வயது சிறுவனுக்கு திடீரென எங்கிருந்து அவ்வளவு பலம் வந்ததோ வேகமாய் ஆளவந்தானை பிடித்து தள்ளிவிட்டவன் “கேட்க மாட்டேன்… நீங்க சொல்ற எதையும் நான் கேட்க மாட்டேன்…என் அம்மா பொருள் எல்லாம் எரிச்சுட்டிங்கல்ல உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கல….”என கோபத்தில் கத்தி சொன்னவன் பின் அழுதுகொண்டே வேகமாய் அங்கிருந்து மேலே தன்னுடைய அறைக்கு ஓடினான்..
அர்ச்சனா இதைதான் எதிர்பார்த்தவள் முகம் சந்தோசத்தில் மலர்ந்தது..
“இதைதான் நான் எதிர்பார்த்தேன் மித்து… உன் தாத்தாவுக்கு உன் அம்மா மேல இருக்க கோபம் உன் தாத்தா மேல உனக்கு இருக்க கோபம் இதை நான் கடைசி வரைக்கும் குறையாம பார்த்துப்பேன்… இனி யாரு நினைச்சாலும் என் பையன் செழியன் இந்த ஜமீனோட வாரிசு ஆகறதை தடுக்க முடியாது…”என சொல்லிக்கொண்டாள்…
அதன் பின் வந்த நாட்களில் மித்ரன் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம்… யார்கூடவும் அவன் பேசவில்லை ரொம்பவே கோபத்துடன் எல்லாரையும் எதிர்கொண்டான்..
ரத்தினதேவிக்கு தன்னுடைய பேரனை பார்க்கும் பொழுது ரொம்பவே கஷ்டமாக இருந்தது..
மதி குணமாகி வீட்டிற்கு வர மித்ரனின் மொத்த கோபமும் அவள் மேல் திரும்பியது…
தலையில் கட்டபோட்டு பயந்த விழிகளுடன் அடியெடுத்து உள்ளே வந்தவளை மேல் தளத்தில் நின்றபடி விழியிமைக்காமல் பார்த்தான் மித்ரன்..
அவன் நினைவில் “அவங்க மேனேஜர்கூட போயிட்டாங்க… நான் பார்த்தேன்…”என்று மதி எல்லார் முன்னாடியும் சொன்னது நியாபகம் வந்தது..
“மதி… என் அம்மாவை அசிங்கபடுத்திட்ட உன்னை விடமாட்டேன்…. டார்ச்சர் பண்ணுவேன்…”என தனக்குள் சொல்லிக்கொண்டவன் கண்ணில் மதி மீது அவ்வளவு வெறுப்பு…
அவன் தனக்குள் சொல்லிக்கொண்டதற்கு ஏற்பதான் அடுத்து வந்த நாட்களில் எல்லாம் மதியிடம் நடந்துகொண்டான்.
மதியை டார்ச்சர் செய்யும் கொடுமைக்காரனாக அவன் மாற முதலில் பயந்த மதி பின் கொஞ்சம் கொஞ்சம்மாய் அவன் தரும் வலிகளை எல்லாம் அந்த சிறு வயதிலேயே பழகிக்கொண்டாள்..
அர்ச்சனா மித்ரனை முழுமையாக ஆளவந்தானுக்கு எதிராக மாற்றியவள் தாத்தாவையும் பேரனையும் எதிரியாக்கினாள்…
பத்து வருடங்களுக்கு பின்..
நந்தவனம் ஜமீன்…
ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்….
கண்னை மூடி கணீர் குரலில் பாடிகொண்டிருந்தாள் மதி…
பால் நிறத்தில் பருவ மங்கையாக அழகோவியம்மாய் இருந்தவள் மெல்ல தன் கயல்விழி கண்களை திறந்தாள்..
அவள் இதழில் புன்னகை தோன்றியது…. அந்த சிரிப்பு ஒன்றே போதும் அவள் அழகை சொல்ல தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல் இருந்தாள்..
சாமி படங்களுக்கு ஆரத்தி எடுத்தவள் தொட்டு வணங்கிவிட்டு வெளியில் வர பணியாள் மெதுவாக ஒவ்வொரு பொருளையும் எடுத்து துடைத்து கொண்டிருந்தான்..
அதை பார்த்தவள் இடுப்பில் கைவைத்து கொண்டு அவனை பார்த்தவள் “அண்ணா ஏன் இவ்வளவு வேகமா துடைக்கறீங்க அதுக்கு வலிக்க போகுது…”என்றவள் அவன் விழிகளை உருட்டி பார்க்க “சீக்கிரம் துடைங்க… துடைச்சுட்டு வெளில தோட்ட வேலை எல்லாம் இருக்குல்ல அதை போய் பாருங்க ஐயா வாக்கிங் போயிட்டு வந்தப்ப என்ன தோட்டத்தை கிளின் பண்ணலயான்னு கேட்டாரு…”என்றவள் அவரை வேலை சொல்லிவிட்டு நகர அவள் முன்னாள் வந்து நின்றார் ரத்தினதேவி..
அவரை பார்த்ததும் கன்னத்தில் குழிவிழ சிரித்தவள் கையில் இருந்த ஆரத்தி தட்டை நீட்டினாள்.
ரத்தினதேவி தொட்டு கும்பிட்டவர் விழியிமைக்காமல் அவளையே பார்த்தார்…
சிவப்பும் பச்சையும் கலந்து தாவணி பாவாடை அணிந்து அழகு தேவதையாய் இருந்தவள் அந்த வீட்டில் வேலை பார்க்கும் பெண் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்… பார்க்க இளவரசி போல் இருந்தாள்..
எல்லாரும் அவளை வேலைக்காரியாக பார்த்தாலும் ரத்தினதேவி அவளை தன்னுடைய பேத்தி மாதிரி தான் பாசம் காட்டினார்..
அவருக்கு மதியை ரொம்பவே பிடிக்கும் மதி இசை இருவரையும் அவர் ஒரே போல் தான் நடத்துவார்… தனக்கு இவ்வளவு பாசம் காட்டும் பாட்டியை மதிக்கும் ரொம்பவே பிடிக்கும் அவர் என்ன சொன்னாலும் அதை மறுக்காமல் செய்வாள்..தன்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு முடிவையும் அவரை கேட்டுதான் எடுப்பாள்…
மதி தன்னையே பார்ப்பவரை பார்த்து சிரித்தவள் “என்ன பாட்டி அப்படி பாக்கறீங்க?..”என கேட்க
ரத்தினதேவி மெல்ல கையை உயர்த்தி அவளுடைய கன்னம் வருடியவர் “ரொம்ப அழகா இருக்க மதி… அப்படியே இளவரசி மாதிரி இருக்க உன்னை எந்த நாட்டு ராஜா வந்து கூட்டிட்டு போக போகிறான்னு தெரியல…”என சொல்ல
அதைக் கேட்டு சிரித்த மதி “என்ன சொன்னிங்க இளவரசி மாதிரி இருக்கனா… பாட்டி இத மித்ரன் கேட்ருக்கனும்…” என சொல்ல ரத்தினதேவி கண்கள் சுருக்கியவர் “ஏன் அவன் கேட்டா என்ன சொல்ல போறான்…”என்றார்..
“என்ன சொல்ல போறானாவா… என்னோட வேலைக்காரி உங்களுக்கு இளவரசி மாதிரி தெரியறளான்னு கேட்பான்…”என மதி தன்னை அவமதிப்பு போல் அவன் சொல்வதையும் சிரித்தபடி சொன்னாள்..
தன்னுடைய பேரன் அப்படி சொல்லக்கூடியவன்தான் என்பதால் ரத்தினதேவி “ம்ம் ஆமா மித்ரன் அப்படி சொல்லக்கூடியவன் தான் என சொன்னவர் பெருமூச்சு இழுத்து விட்டார்..
மித்ரன் அவளை எந்த அளவுக்கு டார்ச்சர் செய்கிறான் என்று அவரும் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறார்..
ஏதாவது சொன்னால் போதும் உடனே மித்ரன் “நான் உன்கிட்ட வேலை சொல்றதுல உனக்கு ஏதாவது பிரச்சனையா இருக்கா…”என மதியை பார்த்து கேட்டால் போதும் மதி உடனே மறுத்து தலையசைத்து “அந்த மாதிரியெல்லாம் இல்ல..” என்று சொல்லிவிடுவாள்..
மதி ரத்தினதேவி பேச்சை கேட்காமல் இருக்கும் ஒரே விஷயம் மித்ரனும் அவளும் சம்பந்தப்பட்ட விஷயமாக மட்டுமே இருக்கும்..
அவரும் “மித்ரன் உன்ன ஏதாவது சொன்னா செய்யாத அவன் உன்கிட்ட கோபப்பட்டா நீயும் அவன்கிட்ட பேசாத…”என்று அவரும் சரி இசையும் சரி பலமுறை சொல்லிவிட்டார்கள் அப்பொழுது அவர்கள் சொல்வதற்கு சரி என்ற தலையாட்டும் மதி மித்ரன் “ஏய் வேலைக்காரி…” என்று ஒரு முறை கூப்பிட்டால் போதும் அடுத்த நொடி அவர்கள் பேசியது எல்லாம் மறந்துவிட்டு அவனிடம் ஓடிவிடுவாள்..
அவளும் அவர்கள் பேச்சைக் கேட்டு மித்திரனிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறாள் ஆனால் அவன் கூப்பிட்ட அடுத்த நொடி அவள் கால்கள் தானாகவே அவனிடம் சென்றுவிடுகிறது..
அவன் என்னதான் திட்டினாலும் கோபப்பட்டாலும் அவளால் அவனை விட்டு விலக முடியவில்லை… அதற்கு காரணம் அவன் மீது இருக்கும் பயமா பாசமா என்று அவளுக்கே தெரியாது..
இப்பொழுது கூட ரத்னாதேவியிடம் பேசிக் கொண்டிருந்தவள் “ஏய் வேலைக்காரி….”என்ற கர்ஜினை குரல் கேட்கவும் “பாட்டிம்மா இத பிடிங்க…” என ஆரத்தி தட்டை அவரிடம் கொடுத்துவிட்டு வேகமாக அங்கிருந்து மேல் தளத்திற்கு ஓடினாள்..
ரத்தினதேவி பெருமூச்சு இழுத்துவிட்டவர் “இந்த பொண்ணு இருக்காளே எத்தனைதடவை சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா….”என சொல்லிக்கொண்டவர் ஆரத்தி தட்டை பூஜை அறையில் வைக்க சென்றார்..
மித்ரன் கூப்பிட்ட அடுத்த நொடி அவன் முன்னாடி நிற்காவிட்டால் அவ்வளவுதான் அவனின் இரண்டு மடங்கு கோபத்தை அவள் தாங்க வேண்டியது இருக்கும்..
அதற்காகவே மதி வேகவேகமாய் அவன் அறையை நோக்கி ஓட எதிரில் போன் பேசியபடி வந்தான் நந்தா..
அவனும் போன் பேசிக்கொண்டு வந்ததால் இவளை கவனிக்கவில்லை இவளும் தலை தெரிக்க அவசரத்தில் ஓடி வந்தவள் அவன் மேல் மோத அதில் நந்தா போனை கீழ தவற விட போய் நல்ல வேலையாக கீழே விழுந்து உடையும் முன் பிடித்துக் கொண்டவன் நிமிர்ந்து பார்க்க அவளோ “சாரி…”என சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடியிருந்தாள்..
“அடிப்பாவி இந்நேரம் என்னோட காஸ்ட்லி ஐபோன் உடைஞ்சிருக்கும்…மதி…”என்று கத்தியவன் அவள் மித்ரன் அறைக்குள் செல்வதை பார்த்து “ஓ சார் கூப்பிட்ருகாரா அதனால தான் மேடம் பி.டி உஷா மாதிரி ஓடிட்டு இருக்காளா…” என தனக்குள் சொல்லிக் கொண்டவன் எப்படியும் மித்ரனிடம் சென்று திட்டு தான் வாங்கப் போகிறாள் என்பதால் மேற்கொண்டு அவளை எதுவும் சொல்லாமல் போனை காதில் வைத்தவன் “ஹலோ பேபி லைன்ல இருக்கியா…”என பேசியபடி அங்கிருந்து நகர்ந்தான்.
No comments yet.