காதல் -4

Sweety Novel's | 14 Apr 2026 | Share

மதி ஏழு வயதில் அழகாய் கவுன் அணிந்து துருதுருவென அங்கும் இங்கும் ஓடி தன்னை வளர்த்த பாட்டிக்கு கூட மாட உதவி செய்து கொண்டிருந்தாள்.. 

ஆம் தன்னை வளர்த்த வேலைக்கார பெண்மணியை அவள் தன்னுடைய பாட்டியாகதான் நினைக்கிறாள்.. 

இப்பொழுது அவளுக்கு விவரம் தெரிந்து இருக்கு தான் யார் என்று புரிந்துகொண்டவள் தானும் இந்த வீட்டில் ஒரு வேலைக்காரி என்று நினைத்துகொண்டவள் அதற்கு ஏற்பதான் நடந்துகொள்வாள்… 

அது அவள் மனதில் ஆழமாய் பதியகாரணம் அர்ச்சனா… ஒவ்வொரு முறையும் அவள் கூப்பிடுவதே “ஏய் வேலைக்காரி மதி…”என்றுதான்.. 

அர்ச்சனா நன்றாக அவளிடம் வேலை வாங்குவாள்.. அவள் மட்டுமில்லை ஆளவந்தான், அசோகன் அர்ச்சனா நன்றாக மித்ரன் மனதில் வன்மத்தை வளர்த்து இருந்ததால் அவனும் நன்றாக விவரம் தெரிந்ததும் அவளை விட்டு விலகியவன் அவளிடம் தனக்கு தேவையானது எல்லாம் செய்ய சொல்லி வேலை வாங்குவான்.. 

மதியை நன்றாக நடத்தி பாசம் காட்டுபவர்கள் என்றால் அது ரத்தினதேவி செழியன் இசை மட்டும்தான்… 

இசைக்கும் மதிக்கும் ஒரே வயதுதான்… எப்பொழுதும் பணக்கார வீட்டு பெண்கள் தன்னுடைய வயதில் இருக்கும் தங்கள் வீட்டில் வேலைபார்க்கும் பெண்ணை மதிக்க மாட்டார் ஆனால் இசை அதற்கு அப்படியே நேர் எதிர்… 

அவளுக்கு மதியை ரொம்ப பிடிக்கும்… எப்பொழுதும் அவளுடன்தான் விளையாடுவாள்.. 

செழியன் ஒன்பது வயதாகிறது இப்பொழுதும் தன்னுடைய அம்மாவுக்கு தெரியாமல் அவள் இல்லாத நேரங்களில்தான் அவளிடம் பேசுவான் விளையாடுவான்.. 

மற்றவர்கள் அவளை கண்டுகொள்ள மாட்டார்கள்…அவள் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி அது அவர்களுக்கு ஒரு பிரச்சனை இல்லை… 

வேலை பார்த்து கொண்டிருந்தவளை ஒரு கரம் பிடித்து இழுக்க மதி வேகமாய் திரும்பி பார்த்தவள் முகம் மலர்ந்தது 

அவளுக்கு எதிரில் நின்றிருந்தாள் இசை… 

இருவருக்கும் ஒரே வயதுதான் ஆனால் தோற்றத்தில் இருவரிடமும் நிறைய வித்தியாசம் தெரிந்தது.. 

மதி பார்க்க சாதாரணமான உடையில் இருக்க இசை மார்டன் கவுனில் இருந்தாள்… 

மதி வெறும் பாசி பிளாஸ்டிக் வளையல் அணிந்து இருக்க அவள் கழுத்தில் கைகளில் எல்லாம் தங்கம்… 

ஆனால் மதி இதழில் தோன்றும் சிரிப்புக்கு முன் தங்கம் வைரநகை எல்லாம் தேவையே இல்லை… அதுவே அவளின் அழகை எடுத்துகாட்டும்.. 

இசையை பார்த்ததும் சிரித்தவள் “என்ன இசை?…”என்று கேட்க 

அவளோ அவளை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு “மதி நான் உனக்காக என்ன கொண்டு வந்திருக்கேன் தெரியுமா…”என்றவள் பின் பின்னாடி மறைத்து வைத்திருந்த கரத்தை முன்னாடி கொண்டு வந்து கைகள் விரித்து காட்ட அதில் லட்டு இருந்தது. 

“ஐ லட்டு…” 

“உனக்கு பிடிக்கும்ல அதான் கொண்டு வந்தேன்… வாங்கிக்கோ…” 

மதி வாங்கும் நேரம் ஒரு கரம் அதை தட்டிவிட இருவரும் அதிர்ந்து திரும்பி பார்த்தனர். 

மித்ரன்தான் நின்றிருந்தான்…பத்து வயதுதான் ஆனால் அந்த வயதிலேயே ரொம்ப நெடுநெடுவென வளர்ந்து இருந்தான்.. 

ஜமின் வாரிசு என்று சொல்லும்படி தோற்றத்தில் இளவரசனை போல் இருந்தவன் முகத்தில் மட்டும் சிரிப்பில்லை.. 

அவனின் பூனை விழிகள் மதியை முறைத்து பார்க்க மதி மிடரு விழுங்கியவள் “எதுக்கு மித்து தட்டிவிட்ட…”என்றாள். 

அவள் மித்து என்று கூப்பிட்டதில் கோபம்மானவன் “என்னை மித்துன்னு கூப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல…”என்றவன் அவள் தலையிலேயே கொட்டினான்.. 

அதில் கண்களில் கண்ணீர் தேங்கிவிட மதி தலையை தேய்த்துவிட்டு கொண்டே அவன் பார்த்தவள் “ஏன் கொட்டுன?…”என்று கேட்க 

“ம்ம் என் பேர் சொன்னல்ல அதுக்காகதான்…போ போய் வேலை பாரு…”என்று துரத்திவிட்டவன் “மித்து கண்ணா…”என்றவள் குரலில் திரும்பி பார்த்தான்.. 

மேலே இருந்து அவன் அம்மா நந்தினிதான் அழைத்து இருந்தாள்.. 

“அம்மா…”என்றபடி அவள் அருகில் ஓடினான்… 

தன் பக்கத்தில் வந்தவனை அனைத்துகொண்ட நந்தினி பாசமாய் அவன் கன்னம் வருடி “பிறந்தநாள் வாழ்த்துக்கள் மித்து கண்ணா…”என சொல்ல 

“தேங்க்ஸ்ம்மா…”என்றவன் அழகாய் சிரித்தபடி அவள் கரத்தை பிடித்து கொண்டான்.. 

“மித்து கண்ணா இப்போ நீ பெரிய பையன்… இன்னிக்கு உன் அப்பா ஆசைப்படி நீ இந்த ஜமீன் வாரிசாக போற உனக்கு நிறைய பொறுப்பு இருக்கு அதை நீ சரியா பண்ணும்…”என சொல்ல மித்ரன் தலையாட்டியவன் மீண்டும் அவளை அணைத்துகொண்டு “நீங்க என்கூட பேசுனது எனக்கு ஹாப்பியா இருக்கும்மா.. எப்பவும் என்கூட இந்த மாதிரியே இருங்க….”என சொல்ல நந்தினியின் கண்கள் கலங்கியது.. 

கணவனை இழந்த துக்கத்தில் தன் மகனை கவனிக்க தவறிவிட்டோமே என்ற தவறு இப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது.. 

“என்னை மன்னிச்சுடு மித்து கண்ணா…”என்றவர் சரிந்து அவன் உச்சந்தலையில் மென்மையாய் முத்தமிட்டார்.. 

சில நிமிடங்களுக்கு பின்… 

பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க ஆளவந்தான் பூஜையில் வந்து அமர்ந்தவர் “ரத்தினா…”என்று கூப்பிட 

அவர் எதற்கு கூப்பிடுகிறார் என்று புரிந்துகொண்ட ரத்தினதேவியும் “மித்ரன வர சொல்லு அர்ச்சனா…”என்றார். 

அர்ச்சனா “சரிங்க அத்தை…”என்றவள் மித்ரன் அழைத்து வர சென்றாள்.. 

மித்ரன் ஜமீன்தார்கள் அணியும் உடையை அணிந்து கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்து கொண்டிருந்தான்.. 

அவனை பார்த்ததும் அர்ச்சனா முகம் இறுகியது…”நீ அடுத்த வாரிசா அது நான் இருக்க வரைக்கும் நடக்காது…இந்த நாளை உன் வாழ்க்கையில நீ எப்பவுமே மறக்க மாட்ட மித்து…”என சொல்லிக்கொண்டவள் இதழில் சிறு புன்னகை தோன்ற அவன் அருகில் சென்றாள்.. 

“மித்து கண்ணா…” 

திரும்பியவன் “சித்தி இந்த டிரஸ் எனக்கு எப்படி இருக்கு?…”என கேட்க 

“ரொம்ப அழகா இருக்கு… அப்படியே இளவரசன் மாதிரி இருக்க…” 

“இளவரசன்னா பிரின்ஸ்தான?…” 

“ம்ம்.. நீ பிரின்ஸ் மாதிரிதான் இருக்க…”என்றவள் அவன் கன்னத்தில் தட்டிவிட்டு “உன் பாட்டி கூப்பிட்டாங்க வா போலாம்…”என்றவள் அவனை கீழே அழைத்து சென்றாள். 

மித்ரன் வரவும் அவனை ஆளவந்தான் பக்கத்தில் பூஜையில் உட்கார சொன்னார்கள்… 

அவனும் பூஜையில் உட்கார பூஜை ஆரம்பம் ஆனது…எல்லாரும் சாமி கும்பிட இசை விழிகள் மதியை தேடியது… அவளை காணோம்.. 

அதை கவனித்த அவள் அண்ணன் நந்தா  “யாரை தேடற…”என கேட்டு அவள் கைகளில் அடித்தவன் “சாமி கும்பிடு…”என்றான் 

அவனை முறைத்து பார்த்த இசை அண்ணன் என்று எல்லாம் பார்த்து பயப்படாமல் நறுக்கென அவன் கைகளில் கிள்ளிவிட்டே விழிகள் மூடி சாமி கும்பிட தொடங்கினாள்.. 

“குட்டி பிசாசு.. “என சொல்லிக்கொண்ட நந்தாவும் பூஜையில் கவனம் பதித்தான்.. 

அசோகனுக்கு அமைதியாய் நின்றிருக்கும் அர்ச்சனாவை பார்க்கும் போது சந்தேகம்மாய் இருந்தது.. 

மெல்ல அவள் அருகில் சென்று நின்றவன் தொண்டையை செரும்ப அதில் அவள் அவன் பக்கம் பார்த்தாள்.. 

“எப்படியாவது மித்ரன் வாரிசாகறதை தடுக்கறேன்னு சொன்ன இப்போ இப்படி அமைதியா நிக்கற?…”என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்க 

இதழ் சுழித்து சிரித்தவள் “நான் என்ன பண்ணனுமோ அதெல்லாம் பண்ணிட்டேன்…”என்றாள்… 

அவள் என்ன செய்திருக்கிறாள் என்று அசோகனுக்கு தெரியவில்லை ஆனால் அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து இன்னும் கொஞ்சநேரத்தில் இந்த ஜமீன் முற்றிலும் வேறு ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்பது மட்டும் புரிந்தது.. 

“என்ன பண்ணி வச்சிருக்கான்னு தெரியலயே…”என சொல்லிக்கொண்டவன் அந்த யோசனையுடனே பூஜையில் நின்றான். 

பூஜை நன்றாக முடிய அம்மன் காலடியில் ஆசீர்வாதம் செய்து எடுத்து வந்த ஜமீன் மோதிரத்தை ரத்தினதேவி எடுத்து வந்தார்.. 

ஆளவந்தான் மித்ரன் இருவரும் எழ ரத்தினதேவி பூக்கள் நிறைந்த தட்டுகளுக்கு நடுவில் இருந்த மோதிரத்தை எடுத்து கொடுக்க அதை வாங்கிய ஆளவந்தான் மித்ரன் விரலில் போட்டு விடும் நேரம் “ஐயா…”என்று கத்திகொண்டு ஓடிவந்தாள் மதி.. 

அதில் எல்லாரும் அவள் பக்கம் திரும்பி பார்க்க அர்ச்சனா அவள் தன்னை கடந்து செல்லும் பொழுது அவள் கரம் பற்றி தடுத்தாள்.. 

அவள் அழுத்தி பிடித்ததில் வலியில் முகம் சுழித்த மதி அப்பொழுதும் “விடுங்கம்மா… அவங்க போறாங்க…”என்று சொல்ல 

அர்ச்சனா ஒன்றுமே தெரியாதது போல “யாரு?…”என்று கேட்க 

“மித்ரனோட அம்மா.. அவங்க மேனேஜரோட போறாங்க…”என அவள் சொன்னதை கேட்டு எல்லாரும் அதிர்ந்தனர்.. 

ஆளவந்தான் முகம் கோபத்தில் சிவக்க அர்ச்சனா அதிர்ந்து வாயில் கைவைத்து கொண்டவள் பின் “சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டு இருக்கா…”என்று அதிர்ச்சியில் நின்றிருந்த ரத்தினதேவியை பார்த்து சொன்னவள் மதியிடம் “ஏய் என்ன உளறிட்டு இருக்க நீ சொல்றதுக்கான அர்த்தம் உனக்கு புரியற வயசுகூட உனக்கு இல்ல… மித்ரனோட அம்மா எங்க போறாங்க…”என விசாரிக்க 

மதி ஓடிவந்ததில் மூச்சு வாங்க “அவங்க மேனேஜர்கூட ஓடிப்போயிட்டாங்க…”என்றவள் தன் கையில் இருந்த லெட்டரை கொடுக்க அர்ச்சனா வாங்கியவள் வேகமாய் பிரித்து படித்தாள். 

அசோகன் அவள் அருகில் வந்தவன் “அர்ச்சனா அதில என்ன எழுதி இருக்கு?…”என கேட்க லேகாவும் “எல்லாரும் டென்ஷனா இருக்காங்க… சொல்லு அர்ச்சனா அதில என்ன எழுதி இருக்கு?…”என்றாள். 

அர்ச்சனா திரும்பி ஆளவந்தானை பார்த்தவள் “இந்த பொண்ணு உண்மைதான் மாமா… நந்தினி அப்படித்தான் லெட்டர்ல எழுதி இருக்கா….”என சொல்ல ஆளவந்தான் கோபத்தில் தன் கையில் இருந்த மோதிரத்தை தூக்கி போட்டார்.. 

ரத்தினதேவி “என்னால நம்பவே முடியல…”என சொல்லி நெஞ்சில் கைவைத்துகொள்ள 

மித்ரன் “இல்ல என் அம்மா என்னைவிட்டு எங்கையும் போக மாட்டாங்க.. அவங்க இங்கதான் இருப்பாங்க…”என்று சொல்ல 

“இல்ல அவங்க போயிட்டாங்க.. நான் பார்த்தேன்… நான் பார்த்தேன்…”என மதி சொல்ல மித்ரன் முகத்தில் அவ்வளவு கோபம்.. 

கோபத்தில் கீழே பூஜைக்கு வைத்திருந்த தேங்காய் ஒன்றை எடுத்தவன் அதை மதியை நோக்கி வீச மதி தலையிலேயே அந்த தேங்காய் விழுந்து அவன் வீசிய வேகத்தில் உடைந்து கீழே விழுந்தது.. 

மதி தலையில் ரத்தம் கொட்ட கையால் தொட்டவல் ரத்தத்தை பார்த்ததும் அப்படியே மயங்கி விழுந்துவிட்டாள்…அர்ச்சனாவே அதிர்ந்துவிட்டாள்.. 

ரத்தினதேவி பதறியவர் மதி மயங்கி விழவும் வேகமாய் அவள் அருகில் சென்றவர் “குழந்தையை தூங்குங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க…”என்று சொல்ல 

அவர் மதியை பற்றி யோசித்து பதட்டம்மாக ஆளவந்தான் தன்னுடைய பேரன் செயலில் ஏற்கனவே கோபத்தில் இருந்தவர் மேலும் கோபமாகி ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தார். 

அடிவாங்கியும் மித்ரன் “என் அம்மா யாருக்கூடவும் ஓடிப்போகல… என் அம்மாபத்தி எனக்கு தெரியும்…”என சொன்னவன் ஆளவந்தான் மறுபடியும் அடிக்க கையை உயர்த்தவும் இந்தமுறை அவர் கரத்தை தடுத்து பிடித்தவன் வேகமாய் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து மேலே ஓடினான்.. 

ஒருபக்கம் மதி அடிபட்டு ஹாஸ்பிட்டலுக்கு செல்வதையும் இன்னொரு பக்கம் மித்ரன் மேலே ஓடுவதை பார்த்த அர்ச்சனா தான் நினைத்தது நடந்துவிட்ட சந்தோசத்தில் தனக்குள் சிரித்துகொண்டாள்.. 

மேலே சென்ற மித்ரன் திரும்பி கீழே பார்க்க ஆளவந்தான் அசோகனிடம் “அந்த வெட்கம் கெட்டவ நம்ம ஜமின் மானத்தையே வாங்கிட்டு போயிட்டா… அந்த மேனேஜரும் அவளும் எங்கிருந்தாலும் சரி நம்ம ஆளுங்கள அனுப்பி கண்டுபிடிச்சி இழுத்துட்டு வர சொல்லு….”என கட்டளையிட்டு கொண்டிருந்தார்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.