காதல் -16

Sweety Novel's | 14 Apr 2026 | Share

ஆளவந்தான் “மித்ரனுக்கும் மதிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறேன்…”என சொல்ல அதை கேட்ட ரத்தினதேவி அதிர்ந்தவர் “என்னது கல்யாணம்மா?…”என்றார் 

அவருக்கு அவர்களுக்கு கல்யாணம் என்பதை விட ஜமீன் குடும்பத்தினர் மற்றொரு ஜமீன் குடும்பத்தில்தான் பெண் எடுக்கவோ கொடுத்தோ திருமணம் செய்ய வேண்டும் என்று பழக்க வழக்கங்களை மாற்றி சாதாரண பெண்ணான மதியை தன்னுடைய பேரனுக்கு அதுவும் அடுத்து வாரிசாக போறவனுக்கு திருமணம் செய்து வைக்க போகிறேன்  என சொல்வதுதான் அதிக அதிர்ச்சியாய் இருந்தது. 

“என்னங்க சொல்றிங்க மதிக்கும் மித்ரனுக்கும் கல்யாணம்மா… அதெப்படி நடக்கும்?…” 

“நடக்கும் நான் நடத்துவேன்…” 

ஆளவந்தான் தீர்மானம்மாய் சொல்ல “என்னால நம்பவே முடியலங்க நீங்களா இப்படி பேசறீங்க?…”என்றார் ரத்தினதேவி.. 

“ஜமீன்னோட அடுத்த வாரிசு மித்ரன் அவனோட உயிருக்கு ஆபத்துன்னா நான் என்ன வேணும்ன்னாலும் செய்வேன்….” 

“மித்ரன் ஒத்துப்பான மத்தவங்க ஒத்துப்பாங்களா?…”என ரத்தினதேவி கேட்க 

“மதிக்கும் மித்ரனுக்கும் நடக்க போற கல்யாணம் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிக்க போற அவங்களுக்கும் தெரிஞ்சா போதும் மத்தவங்களுக்கு தெரிய தேவையில்ல….”என்றவர் ரத்தினதேவி “ஏங்க?…”என்று கேட்டதற்கு 

“மித்ரனுக்கு வயசு இன்னும் இருபது ஆகல அதேமாதிரிதான் மதிக்கும் இன்னும் பதினெட்டு வயசு…. இப்போவே அவங்களுக்கு கல்யாணம்ன்னா எல்லாரும் தப்பா நினைப்பாங்க கொஞ்ச வருஷம் போகட்டும் சொல்லிக்கலாம்….”என்று சொல்ல அதை ரத்தினதேவியும் நம்பினார்.. 

“ம்ம் நீங்க சொல்றதும் சரிதான்…மத்தவங்களுக்கு தெரிஞ்சா தேவையில்லாம பிரச்சனைதான் வரும்…லேகா இசையை மித்ரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு நினைச்சுட்டு இருக்கா..”என்றார் 

‘நானும் அதைதான் பண்ண போறேன் ரத்தின… மித்ரனோட மரணகண்டம் முடியற வரைக்கும்தான் மதி அவனோட பொண்டாட்டியா இருப்பா அதுக்கு அப்பறம் இசையை என் பேரனுக்கு நான் ஊறரிய பிரமான்டம்மா கல்யாணம் பண்ணி வைப்பேன்…. ஒரு வேலைக்காரி ஜமினோட மருமகங்கறது கடைசி வரைக்கும் யாருக்கும் தெரியாது…”என தனக்குள் சொல்லிக்கொண்ட ஆளவந்தான் தன் பேரன் உயிரை காப்பாற்ற மதி வாழ்க்கையை பழிகொடுக்க முடிவெடுத்தார்.. 

மதியை ரத்தின தேவிக்கு ரொம்பவே பிடிக்கும்… அதுவும் அவளின் நல்ல குணத்திற்கு அவளுக்கு கிடைக்க போகும் ஜமீன் வாழ்க்கை சந்தோசமாக அமையும் என்று நினைத்தவர் 

“மித்ரன் மதி கல்யாணத்தை எப்போங்க நடத்த போறோம்?…”என்று ஆர்வம்மாய் கேட்க 

‘மித்ரனோட இருபதாவது பிறந்தநாளுக்குள் நடத்தணும்…” 

“அதுக்கு இன்னும் ஒரு மாசம்தான இருக்கு….’ 

‘அதுக்குள்ள நடத்தணும்…”என்றவர் யோசிக்க ரத்தினதேவியும் தன்னுடைய பேரன் திருமணத்தை எப்படியெல்லாம் மற்றவர்களுக்கு தெரியாமல் சிறப்பாக நடத்தலாம் என்று யோசிக்க தொடங்கினார்… 

            **************** 

மறுநாள்…. 

நந்தா பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு கொண்டிருக்க பரிமாற யாரும் இல்லை.. 

மதி அந்த பக்கமாக வந்தவள் அவனே எடுத்து சாப்பிடுவதை பார்த்து அருகில் சென்றவள் “யாரையாவது கூப்பிட்ருக்கலாம்ல….”என சொல்ல 

சாப்பிட்டு கொண்டே நிமிர்ந்து பார்த்த நந்தா “ஏன் எனக்கு கை இல்லயா?…”என்றான். 

மதி கண்கள் சுருக்கி பார்க்க புருவம் உயர்த்தியவன் “என்ன லுக்கு?…”என்றான்.. 

“இல்ல இந்த ஜமீன்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருக்கீங்க….”என்றவள் அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு பரிமாறினாள்.. 

நந்தாவும் சாப்பிட்டு கொண்டே “எப்படி இருக்கோம்?…”என கேட்க 

“டிப்பரன்ட் டிப்பரன்ட்டா இருக்கீங்க…”என்றவள் அவன் ஏதோ சொல்ல வர “காமடியா எதுவும் சொல்ல வேண்டாம்… நான் கேரக்டர சொன்னேன்…”என்றாள்.. 

“என்னை யாரும் பேச விடமாட்டிங்களே…”என்றவன் மித்ரன் வரவும் அவன் பக்கம் திரும்பி பார்த்து “வா மித்து சாப்பிடலாம்…”என்றான். 

மித்ரன் மதியை பார்த்தவன் பின் வந்து உட்கார மதி அவனுக்கு பிளேட் எடுத்து வைக்கவில்லை… மாறாக கிளாஸில் தண்ணீர் ஊற்றி அவன் பக்கம் நகர்த்தி வைத்தாள்.. மித்ரனும் கிளாஸ் எடுத்து கொண்டான்.. 

அதை கவனித்த நந்தா “மதி அவனுக்கு பரிமாறாம தண்ணி கொடுக்கற?…”என கேட்க 

“மித்ரன் இந்த டைம்ல சாப்பிட மாட்டான்…” 

“அப்போ மித்து ப்ரூட்ஸ் சாப்பிடு…”என்றவன் ஆப்பிள் எடுக்க மதி அதை வாங்கியவள் “மித்துக்கு ஆப்பிள் பிடிக்காது….”என்றவள் மித்ரன் கேட்காமலே ப்ரூட்ஸ் பாஸ்கெட்டில் இருந்து ஆரஞ்சு ஒன்றை எடுத்து தோள் எடுத்து அதை தட்டில் வைத்து மித்ரனிடம் கொடுத்தாள்.. 

அவனும் வாங்கியவன் சாப்பிட நந்தா இருவரையும் மாறி மாறி பார்த்தவன் “இந்த ரெண்டு பேரும் என்ன கேரக்டர்ன்னே தெரியலயே….”என தனக்குள் சொல்லிக்கொண்டான். 

அவன் மைண்ட் வாய்ஸ் தெரியாமல் மித்ரன் “ஹேய் சீக்கிரம் சாப்பிடுடா…”என்றவன் மதி பக்கம் பார்த்தான்.. 

தலைக்கு குளித்துவிட்டு தாவணி பாவாடையில் மல்லிகைப்பூ வைத்து தேவதை போல் இருந்தாள்… 

அவளை ரசித்து எல்லாம் பார்க்கவில்லை ஆனால் அவளையே பார்த்தான்… 

அப்பொழுது அந்த பக்கமாய் வந்த ரத்தினதேவி அதை பார்த்துவிட்டார்…மித்ரன் மதியை ரசித்து பார்க்கிறான் என நினைத்துகொண்டவருக்கு சந்தோசமாக இருந்தது.. 

“நாம எதாவது பண்ணனுமே…”என தனக்குள் சொல்லிக்கொண்டவர் அவர்கள் அருகில் சென்றார் 

“மித்து கண்ணா…”என்றவர் குரலில் மூவரும் திரும்பி பார்த்தனர்.. 

மித்ரன் அருகில் சென்றவர் வாஞ்சையுடன் அவன் தலையை வருடி கொடுத்து “என்ன ப்ருட்ஸ் சாப்பிட்டுட்டு இருக்க பிரேக்பாஸ்ட் சாப்பிடலயா?…”என்று கேட்க “பசிக்கல பாட்டி….”என்றான். 

நந்தா “பாட்டி நானும் உங்க பேரன்தான்… என்னை கண்டுக்கவே மாட்டேங்குறீங்க?…”என கேட்க 

அவன் பக்கம் திரும்பியவர் “நீயும் இங்கதான் இருக்கியா… சாரிடா நந்தா நான் உன்னை கவனிக்கல…”என்றார் 

கரத்தை மடக்கி நெற்றியில் குத்தியவன் “கிரேட் இன்சல்ட்…”என்று சொன்னதில் மூவரும் சிரித்தனர்.. 

“சிரிக்காதீங்க… நான் கோபமா இருக்கேன்…”என்றவன் மதியை இன்னொரு சப்பாத்தி வைக்க சொல்லி வேக வேகமாய் சாப்பிட தொடங்கினான்.. ( இதுதான் உன் கோபமாடா…) 

ரத்தினதேவி சிரித்தவர் மித்ரன் தோளில் கைவைத்து “மித்து கண்ணா பாட்டிக்காக நீ ஒரு விஷயம் பண்ணனும்….”என சொல்ல 

“என்ன பாட்டி சொல்லுங்க?…” 

“கோவிலுக்கு போகணும்.. போயிட்டு வர்றியா….” 

கோவிலுக்கு என்றதும் மித்ரன் முகம் அஷ்டகோணலாக மாறியது.. 

“பாட்டி உங்களுக்குதான் தெரியும்ல எனக்கு கோவிலுக்கு போக பிடிக்காதுன்னு…” 

“உனக்கு கோவிலுக்கு எல்லாம் போக பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் கண்ணா… பாட்டிக்கா போயிட்டு வா… ப்ளீஸ்…”என்றார் 

அவர் கெஞ்சலாய் கேட்கவும் “ஓகே போறேன்… நம்ம ஊருக்குள்ள இருக்க கோவிலுக்குதான?…”என கேட்க பாட்டி தலையசைத்தவர் “ம்ம் அந்த கோவிலுக்குதான்… அப்படியே மதியையும் கூட்டிட்டு போயிட்டு வா…”என்றார் 

மித்ரன் மதியை பார்க்க மதி “நான் எதுக்கு பாட்டி…”என்றாள். 

“தினமும் நீ கோவிலுக்கு போவல்ல மித்ரன் போகும்போது நீயும் போயிட்டு வா…”என்றவர் மித்ரனிடம் “மதியையும் கூட்டிட்டு போயிட்டு வா…”என்றார்.. 

“பாட்டி…”மித்ரன் ஏதோ சொல்ல வர 

“ப்ளீஸ் கண்ணா… பாட்டி சொல்றேன்ல…”. 

சலித்துகொண்ட மித்ரன் மதியை பார்த்து “போய் சீக்கிரம் ரெடியாகி வா…”என சொல்ல மதி பாட்டியை பார்த்தாள். 

அவரும் “போ…”என்றார்.. மதி தலையசைத்தவள் அங்கிருந்து செல்ல நந்தா சாப்பிட்டு முடித்தவன் கைகழுவி கொண்டு “போலாமா…”என்றபடி எழுந்தான். 

பாட்டி “நீ எங்க போற?…”என கேட்க 

“மித்ரன்கூடதான்…” 

‘”அவன் கோவிலுக்கு போறான்… ” 

“நானும் கோவிலுக்கு போறேன்…” 

“நீ கோவிலுக்கு அப்பறம் போலாம்… என்கூட வா…”என்று சொல்லி அவனை ரத்தினதேவி அங்கிருந்து இழுத்துசென்றார். 

மதி சில நிமிடங்களில் அர்ச்சனை கூடையை எடுத்துகொண்டு வர மித்ரன் போன் பார்த்து கொண்டிருந்தவன் நிமிர்ந்து கூட பார்க்காமல் எழுந்தவன் “போலாமா?…”என கேட்க மதி தலையாட்டினாள்.. 

இருவரும் கோவிலுக்கு கிளம்ப மித்ரன் காரை எடுத்தான்.. மதி பின்னாடி உட்கார போக மித்ரன் “நான் என்ன உனக்கு டிரைவராடி வந்து முன்னாடி உட்காரு…”என்று சொல்ல 

மதி முன் பக்க கதவை திறந்து மித்ரன் பக்கத்தில் அமர்ந்தாள்.. 

இதை தன்னுடைய அறையின் பால்கனியில் நின்றிருந்த அர்ச்சனா பார்த்துவிட்டார் 

“இவங்க ரெண்டு பேரும் எங்க போறாங்க…வர வர இவங்களுக்குள்ள நெருக்கம் அதிகமா இருக்க மாதிரி இருக்கே… இது நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா….”என குழப்பம்மாய் தனக்குள் சொல்லிக்கொண்டார்.. 

எல்லை அம்மன் கோவில்… 

மித்ரன் காரை நிறுத்த மதி இறங்க போனவள் “ஏய்…”என்றவன் குரலில் திரும்பி பார்த்தாள்… 

“நீ போய் சாமி கும்பிட்டு வா….” 

“அப்போ நீ…” 

அவன் அவள் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை “என்னை கேள்வி கேட்காத…”என்பது போல் அவளை பார்த்தான்.. 

“இப்படி பார்த்தா என்ன அர்த்தம்?.. ” 

“என்னால வர முடியாதுன்னு அர்த்தம்.. நீ போ…”என்றவன் போன் எடுத்து வீடியோ கேம் விளையாட மதி இறங்கி செல்லவில்லை காரில்யே அமர்ந்து இருந்தாள்.. 

அவள் பக்கம் திரும்பி பார்த்தவன் “என்ன போ…”என சொல்ல மறுத்து தலையசைத்தவள் “நீயும் வா…”என்றாள்.. 

மித்ரன் முகம் இறுக “என்னால வர முடியாது.. நீ போறதுன்னா போ இல்லன்னா இப்படியே உட்காரு எனக்கென்ன…’என்றவன் கேம் விளையாட தொடங்கினான்.. 

“சரி நான் இப்படியே இருக்கேன் வீட்டுக்கு போனதும் பாட்டி கேட்டா நான் நீ சாமி கும்பிட வரல அதனால நானும் சாமி கும்பிடலன்னு சொல்வேன்…” 

மித்ரன் அவளை முறைத்தவன் “என்ன என்னை மிரட்டறியா உன் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்…”என்றான். 

“மிரட்டல மித்து.. ப்ளீஸ் வா… பாட்டி ஏதோ வேண்டுதல் வச்சிருக்காங்க போல அதான் கோவிலுக்கு உன்னை கம்பல் பண்ணி அனுப்பி இருக்காங்க… இவ்வளவு தூரம் வந்துட்டு சாமி கும்பிடமா போனா நல்லாருக்குமா சொல்லு… பாட்டிக்காக வாயேன்…”என்றாள்.. 

மித்ரன் பாட்டிக்காக யோசித்தவன் பின் காரில் இருந்து இறங்க மதி முகம் மலர்ந்தது.. 

அவளும் காரில் இருந்து இறங்க இருவரும் கோவிலுக்குள் சென்றனர் 

நேராக சந்நிதானத்திற்குள் செல்லப்போனவனை கரம் பற்றி தடுத்தாள் மதி.. 

மித்ரன் திரும்பியவன் தன் கரம் பற்றி இருந்த அவள் கரத்தையும் மதியையும் மாறி மாறி பார்க்க மதி அவன் பார்வையில் கையை எடுத்துகொண்டவள் “அது வந்து மித்து ஸ்ட்ரைட்டா உள்ள போகக்கூடாது பர்ஸ்ட் பிரகாரத்தை சுத்தி வரணும்…”என சொல்ல 

“இது வேறயா…”சலித்துகொண்டவன் அவளுடன் நடந்தான்.. 

இருவரும் அந்த பெரிய கோவிலை சசுற்றி வலம் வந்தனர்.. 

அப்பொழுது சற்றும் எதிர்பார்க்காதவிதமாய் எங்கிருந்தோ ஒரு பெரிய மாலை அவர்கள் மேல் விழுந்தது. 

பாதி மாலை மித்ரன் கழுத்திலும் மீதி பாதி மாலை மதி கழுத்திலும் விழுந்தது… இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். 

மதி திரும்பி பார்க்க சட்று தள்ளி ஒரு புதிதாக திருமணம் செய்துகொள்ள போகும் தம்பதிதான் ஐயர் சொன்ன சடங்கை செய்வதற்காக கடவுளை வேண்டிக்கொண்டு மாலையை தூக்கி வீசி இருந்தனர். 

மதி மித்ரன் கழுத்தில் மாலை விழுந்திருக்க உள்ளே அம்மனுக்கு பூஜை நடந்தது… 

அந்த பிரபஞ்சம்மே அவர்களை ஆசீர்வாதம் செய்வது போல் மரங்கள் அசைந்து காற்று வீச பூக்கள் பறந்து வந்து அவர்கள் மேல் விழ கோவிலுக்குள் மணியும் அடித்தது…

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.