நந்தாவனம் ஜமீன்…
பங்களா முன் செழியன் காரை நிறுத்தியவன் மதியை பார்க்க அவளோ ஏதோ யோசித்தபடி அமர்ந்திருந்தாள்..
வண்டி நின்றதுகூட உணராதவளாய் அவள் அமர்ந்து இருக்க செழியன் “ஓய் மதி..”கூப்பிட
தன்னிலை உணர்ந்தவள் அவன் பக்கம் திரும்பி பார்த்தாள்.
“என்ன செழியா?…”
“என்னாச்சு உனக்கு… என்ன யோசிச்சுட்டு இருக்க?…”
“அது கிளப்ல நடந்தது…”என்றவள் ஆளவந்தானுக்கு மட்டும் தான் அங்கு சென்று வந்தது தெரிந்தால் என்னாகும் என்று பயப்பட அதை உணர்ந்த செழியன் “பயப்பாடாத தாத்தாவுக்கு எதுவும் தெரியாது டைம் பாரு தாத்தா இன்னும் வீட்டுக்கே வந்திருக்க மாட்டாரு…”என்றவன் அவளை காரை விட்டு இறங்க சொல்ல மதியும் இறங்கினாள்..
“அவுட் ஹவுஸ் போ… நடந்ததையே நினைச்சுட்டு இருக்காத…”
மதி அவனை நன்றியோடு பார்த்தவள் “ரொம்ப தேங்க்ஸ் செழியா…”என சொல்ல
கண்கள் உருட்டியவன் “பாப்பு எனக்கு தேங்க்ஸ் சொல்வியா… போ…”என்று அவன் சொல்லிகொண்டிருக்கும் போதே ஆளவந்தானின் கார் வந்து நிற்கவும் இருவருள்ளும் பதட்டம் தோன்றியது.
ஆளவந்தான் காரை விட்டு இறங்கியவர் அவர்கள் இருவரும் நின்றிருப்பதை பார்த்து அருகில் சென்றார்
“ரெண்டு பேரும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?…”என கோபமாய் கேட்க
“அது வந்து…”என்ற செழியனுக்கு தன்னுடைய தாத்தாவை பார்த்ததும் முகத்தில் பயம் ஒட்டிக்கொண்டது.
“அது இப்போதான் ஐயா வேலை எல்லாம் முடிச்சுட்டு வந்தேன்…”என்ற மதி தன்னை திடப்படுத்திகொண்டு பொய் சொல்ல ஆளவந்தான் நம்பியவர் இப்பொழுது செழியனை பார்த்தார்..
“நானும் இப்போதான் வந்தேன் தாத்தா…”என்றவன் அவர் “இந்த நேரத்தில எங்க போயிட்டு வர்ற?…”என்றார்..
“அது தாத்தா…பிரண்ட்ஸ் பார்த்துட்டு…”என்றவன் அவர் கவனத்தை திசை திருப்பும் விதமாய் “தாத்தா இன்னும் மித்ரன் வரல….”என்றான்.
அதில் ஆளவந்தான் முகம் கோபத்தில் “அவன் எப்போ நேரமா வீட்டுக்கு வந்து இருக்கான்..இந்த நேரத்தில கிளப் பப்ன்னு சுத்திட்டு இருப்பான்… ராஸ்கல்…”என்று திட்டியவர் மதியை பார்த்து “வேலை முடிஞ்சுதுன்னா நேராக அவுட் ஹவுஸ் போயிடணும் இங்க எல்லாம் நின்னுட்டு இருக்ககூடாது…”என்று மிரட்டலாக சொன்னவர் அவள் தலையாட்டவும் வீட்டிற்குள் சென்றார்
அவர் தலை மறைந்ததும் மதி “எதுக்கு மித்ரனை மாட்டிவிட்ட?…”என்று கேட்க
செழியன் தலையை அழுந்தகோதியபடி “அது தாத்தாவை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம மித்ரனை சொல்லிட்டேன்…”என்றவன் “சரி விடு… நீ போய் தூங்கு… குட் நைட்…”என்றவன் வீட்டிற்குள் செல்ல
மதி பெருமூச்சு இழுத்துவிட்டவள் “நல்லவேளை செழியன் வந்து மித்ரன்கிட்ட இருந்து என்னை காப்பாத்திட்டான்…”என சொல்லிக்கொண்டவள் கோபத்தில் மித்ரன் இனி தன்னை என்னல்லாம் பண்ண போகிறானோ என யோசித்தவள் “என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்….”என அவுட் ஹவுஸ் நோக்கி சென்றாள்..
மறுநாள்…
செழியன் தன்னுடைய அறையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவன் தூக்கத்திலேயே புரண்டு படுத்தவன் மெல்ல கண் விழிக்க பக்கத்தில் எப்பொழுதும் அவன் கடுப்புடன் அழைக்கும் ரவுடி படுத்திருந்தாள்..
அவனை பார்த்து குறும்பாய் கண் சிமிட்டி அவள் சிரிக்க செழியன் தூக்கம் எல்லாம் பறந்து போனது..
வேகமாய் எழுந்து அமர்ந்தவன் கண்களை தேய்த்துவிட்டு பார்க்க இசை மறையவில்லை அவனை பார்த்து புருவம் உயர்த்தியவள் “கனவு எல்லாம் இல்ல செழியா நான் நிஜமாவே உன் ரூமுக்கு வந்திருக்கேன்…”என்றாள்..
செழியன் முகம் கோபத்தில் சிவக்க “என் ரூமுக்கு எதுக்குடி வந்த?…”என்று கேட்க எழுந்தவள் “என்னடா உன் ரூம் என்னோட ரூம்ன்னு பிரிச்சு பேசற…இது நம்ம ரூம்…”என்றாள்..
“நம்ம ரூமா… ஹேய் என்ன ஓவரா பேசற….”
இதழ் சுழித்தவள் “நான் ஓவரா எல்லாம் பேசல பின்னாடி என்ன நடக்க போகுதோ அதைதான் சொல்றேன்…”என்றாள்..
“பின்னாடி என்ன நடக்கும்?…”
“என்ன நடக்குமா…”என்றவள் அவன் டீஷர்ட்டை பற்றி இழுத்து அதை திருகியபடி “நமக்கு மேரேஜ் நடக்கும் நான் உன்னோட வொய்ப் ஆவேன் அப்பறம் நமக்கு பர்ஸ்ட் நைட் நடக்கும் அதுக்கு அப்பறம்…”அவள் வாயில் கைவைத்து அடைத்தவன் அதிர்ச்சியுடன் “ஏய் சின்ன பொண்ணு மாதிரியா பேசற….”என்றான்..
அவன் கரத்தை தட்டிவிட்டவள் “சின்ன பொண்ணா யாரு சின்ன பொண்ணு… ஓய் மாமா இன்னும் கொஞ்சநாள்ல எனக்கு பதினெட்டு வயசு ஆகப்போகுது… கல்யாண வயசு தெரியும்ல…”என்றாள்..
“ரொம்ப அதிகமா பேசறடி… முதல்ல வாயை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு….”
இசை சிரித்தவள் “நீ எதுவும் பேச மாட்டேங்குறியே அதான் உனக்கும் சேர்த்து நானே பேசறேன்….”என்றவள் அப்படியே அவனை நெருங்கி சென்று நெஞ்சில் சாய்ந்துகொள்ள செழியன் அதிர்ந்தான்.
“ஹேய் என்னை விடுடி…”என அவன் சொல்ல மறுத்து தலையசைத்தவள் “முடியாது…”என்றவள் இன்னும் இறுக்கம்மாய் அவனை அணைத்துகொண்டாள்.
“ஏய் சொன்னா கேளுடி என்னை விடு….”
மெல்ல தலையை மட்டும் நிமிர்த்தி அவனை பார்த்தவள் “விடணும்ன்னா ஒரு முத்தம் கொடு விட்டுடறேன்…”என்று டீல் பேச செழியன் முறைத்தான்..
அதில் சிரித்தவள் “டேய் மாமா முறைக்கும் போதுகூட அழகா இருக்கடா…”என்றாள்..
அவள் கரத்தை தட்டிவிட்டவன் “விடுடி யாராவது வந்திடப்போறாங்க…”என சொல்ல
‘நீ ஏன் எல்லாத்துக்கும் பயந்துட்டே இருக்க உன்னை வச்சுட்டு நான் என்னதான் பண்ண போறனோ…”சலித்துகொன்டவள் அணைப்பை தளர்த்தாமல் “சரி சொல்லு முத்தம் கொடுப்பியா மாட்டியா?…”என்று கேட்க
செழியன் விழிகளை உருட்டியவன் “முடியாது…”என தலையாட்டினான்..
“நீ சரியான…”ஏதோ சொல்ல வந்து நிறுத்த செழியன் “ஹேய் என்னடி சொல்ல வந்த?… ம்ம் சொல்லு என்ன சொல்ல வந்த?…”என கேட்க “ம்ம் என்ன சொல்ல வந்தன்னா…”என்றவள் அப்படியே அவனை தள்ளிவிட்டு அவன் மேல் சாய்ந்தவள் அவன் இதழில் அழுத்தம்மாய் முத்தமிட செழியன் அதிர்ச்சியில் விழிகள் விரித்தான்.. ( என்னடா நடக்குது இங்க…)
அர்ச்சனா ஆளவந்தான் பூஜை அறையில் நின்று சாமி கும்பிட்டு வர அவரிடம் “மாமா…”என்று சொல்லி அவரிடம் ஒரு பத்திரத்தை கொடுத்து “அத்தை கொடுக்க சொன்னாங்க…”என்றார்.
வாங்கிகொண்டவர் அங்கிருந்து செல்லபோக “மாமா ஒரு நிமிஷம்…”தடுத்தார்.
ஆளவந்தான் திரும்பி பார்த்தவர் “என்ன?…”என்பது போல் பார்க்க “அது செழியன் நம்ம பிஸ்னஸ் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறான்…காலேஜ் விட்டு வந்ததும் ஈவினிங் அவன் பிரீயாதான இருக்கான் ஆபிஸ் வர்றேன்னு சொல்றான்…”என்றார்.
ஆளவந்தான் முகம் தளர்ந்தவர் “ம்ம் நல்ல விஷயம்தான் இப்போ இருந்தே எல்லாம் கத்துகிட்டும் அப்போதான் பின்னாடி அவன் மித்ரனுக்கு உதவியா இருப்பான்…”என சொல்ல அர்ச்சனா முகம் இறுகியது.
“உதவியா என் பையன்தான் எல்லாத்தையும் ராஜ்ஜியம் பண்ண போறான்…”என அழுத்தம்மாய் தனக்குள் சொல்லிக்கொண்டவர் வெளியில் முகத்தை பவ்யம்மாக வைத்துகொண்டு “நீங்க சொல்றதும் சரிதான் மாமா…செழியன் ரொம்ப பொறுப்பான பையன் நீங்களே அவனை பார்த்துட்டு இருக்கீங்கல்ல… மித்ரன்கூட அவன் இருந்தாதான் நம்ம ஜமீன் சொத்து எல்லாம் காப்பாத்த முடியும்…”என்றார்.
அப்பொழுது அங்கு வந்த லேகா அவர் சொன்னதை கேட்டவராய் “அர்ச்சனா நீ உன் பையனை புகழ்ந்து பேசறியா இல்ல மித்ரன் பொறுப்பு இல்லாதவன்னு தாழ்த்தி பேசறியா?…”என்றார் அர்ச்சனா எந்த உள்நோக்கத்துடன் அப்படி சொன்னார் என்று சரியாக கண்டுபிடித்து…
“இவ என்னை விட ஏமகாதகி எப்படி கரெக்ட்டா கண்டுபிடிக்கறா பாரு…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் லேகா சொன்னதை கேட்டு ஆளவந்தான் தன்னை சந்தேகம்மாய் பார்ப்பதை பார்த்தவள் “ஐயோ மாமா லேகா சொல்ற மாதிரி எல்லாம் இல்ல…”என்றார்.
“இந்த ஜமீன் வாரிசு சரியா இருக்கனும்… அப்படி இல்லாத பட்சத்தில உதவி செய்யறவங்களாவது…”என்று முடிக்கவில்லை மேலே மித்ரன் “ஏய் வேலைக்காரி…”என கத்தும் சத்தம் கேட்டது…
உடனே ஐவரும் கிட்சன் பக்கம் பார்த்து “மதி….”கூப்பிட உடனே அரக்க பறக்க ஓடிவந்தாள்..
“மித்ரன் கூப்பிடறான் சீக்கிரம் போய் அவனோட ரூம் கிளீன் பண்ணு…”என சொல்ல அவளும் தலையாட்டிவிட்டு மேலே சென்றாள்..
ஆளவந்தான் “என்ன கிளீன் பண்ணனும்?…”என்று கேட்க
லேகா “அது நார்மல் கிளினிங்தான் அப்பா…நீங்க வாங்க சாப்பிடலாம் உங்களுக்கு லேட் ஆகிடும்ல…”என்று மித்ரன் நைட் குடித்ததை மறைக்க பார்க்க அர்ச்சனா “ஓ உன் மருமகனை காப்பத்தறியா…”என தனக்குள் சொல்லிக்கொண்டவர் “லேகா பசங்க தப்பு பண்ணுனா அம்மாங்க நாமதான் கண்டிக்கனும் செல்லம் கொடுத்து கெடுக்க கூடாது… மித்ரனுக்கு நான் அம்மா இல்ல ஆனாலும் ஒவ்வொரு விஷயத்தில நான் சொல்றதை கேட்டுக்கறான் ஓரளவுக்கு மேலதான் என்னால அவனை கண்ட்ரோல் பண்ண முடியல ஆனா நீ நந்தாவோட அம்மா அவன் ட்ரிங்ஸ் பன்றதை எங்கரேஜ் பண்ணுனற மாதிரி காப்பாத்தற….”என்றார்
அர்ச்சனா சொன்னதை கேட்டு லேகா அதிர்ந்து பார்க்க ஆளவந்தான் முகம் கோபத்தில் சிவந்தது..
“என் பையனைபத்தி என்ன பேசிட்டு இருக்க லேகா…”
அர்ச்சனா “அவனைப்பத்தி தெரிஞ்சதாலதான் சொல்றேன் லேகா… உன் பையன்தான் மித்ரனை கெடுக்கிறதே நைட் மித்ரனும் நந்தாவும் ட்ரிங்ஸ் பண்ணிருக்காங்க…’என்று ஆளவந்தான் முன்னால் போட்டு கொடுத்தார்.
இந்த விஷயம் லேகாவுக்கு தெரியவில்லை தன் மகன் மேல் இருந்த நம்பிக்கையில் ஆளவந்தான் பார்க்கவும் “அப்பா இவ பொய் சொல்றா…நந்தா அப்படியெல்லாம் இல்ல….”என்றார்
“அப்போ அவன் ரூமுக்கு போனா தெரியப்போகுது… வாங்க…”என்ற அர்ச்சனா நேராக இருவரையும் நந்தா அறைக்கு அழைத்து சென்றார்
நந்தா கையில் பியர் பாட்டிலை பிடித்தபடி தூங்கிகொண்டிருந்தான்.. அதை பார்த்ததும் லேகா ஷாக்காக
அர்ச்சனா எழுந்த சிரிப்பை இதழுக்குள் மறைத்துகொண்டவர் “என்ன லேகா உன் பையன் அப்படியில்லன்ணு சொன்ன பாரு உன் பையன் எப்படி தூங்கிட்டு இருக்கான்னு… அதுசரி அப்பாவோட கண்டிப்புல வளராத பசங்க இப்படித்தான இருப்பாங்க…”என்று சொல்ல அது லேகா இதயத்தை ஊசியாய் குத்தியது..
லேகா சில வருடங்களுக்காக தன்னுடைய கணவனை பிரிந்து தன்னுடைய அப்பா வீட்டில்தான் இருக்கிறார்..
அர்ச்சனா அடிக்கடி இப்படிதான் அவரை காயப்படுத்துவதுபோல் பேசுவார்…
ஆளவந்தான் “இதுதான் நீ பையனை வளர்த்து இருக்க லட்சனம்மா லேகா…”என்று திட்டியவர் இருவரையும் பார்த்து “இன்னும் அரைமணி நேரத்தில இந்த நந்தாவும் மித்ரனும் என் முன்னாடி இருக்கனும்…”என கட்டளை போல் சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாய் சென்றார்
அவர் சென்றதும் லேகா அர்ச்சனா இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்து கொண்டனர்.
“என் பையனை அப்பாகிட்ட மாட்டிவிட்டுட்டல்ல…”என லேகா கோபமாய் கேட்க
அர்ச்சனா இதழ் சுழித்தவர் “நீ தேவையில்லாம் என் விஷயத்துல மூக்கை நுழைக்காம இருந்திருந்தா நான் எதுக்கு உன் பையனை மாட்டி விடப்போறேன்… மாமா சொன்னதை கேட்டல்ல சீக்கிரம் உன் பையனை தூக்கிவிடு எப்படி படுத்திருக்கான் பாரு….”என சொல்லிக்கொண்டவர் மித்ரனிடம் ஆளவந்தான் சொன்னதை சொல்ல அவனுடைய அறைக்கு சென்றார்
அறைபக்கத்தில் சென்றதும் “மித்து கண்ணா…”என்று பாசமாய் அழைத்தபடி உள்ளே சென்றவர் அங்கு மித்ரனும் மதியும் இருந்த நிலையை பார்த்து அதிர்ச்சியில் நெஞ்சில் கைவைத்து கொண்டார்..
No comments yet.