காதல் -10

Sweety Novel's | 14 Apr 2026 | Share

குட்டியாய் டிரஸ் போட்டிருப்பதே தெரியாதது போல் தன் உடல் அழகை காட்டியபடி டேன்ஸ் ஆடிகொண்டிருந்த பெண்ணை பார்த்ததும் அதிர்ந்த மதி மித்ரன் பக்கம் திரும்பி முறைத்தவள் 

“நான் அந்தமாதிரி டிரஸ் போடணுமா….”என்றாள்.. 

அவள் கோபத்தை பார்த்து கண்கள் சுருக்கிய மித்ரன் “நீ போட்டா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சேன்… இப்போ நீ போட்டே ஆகணும்…”என சொல்ல மதி அதிர்ந்தாள்.. 

“வேண்டாம் மித்து…”என்று அவள் சொன்னதை எல்லாம் மித்ரன் காதில் வாங்கவில்லை.. 

சொடக்கிட்டு ஒரு பெண்ணை அழைக்க அந்த பெண்ணும் மித்ரன் அருகில் வந்தவள் மித்ரனை நெருங்கி சென்று அணைத்து விலகியவள் குழைந்தபடி “வாட் யூ வாண்ட் பேபி?…”என கேட்டாள்.. 

மதியை சுட்டிகாட்டி மித்ரன் அவள் காதில் ஏதோ சொல்ல அந்த பெண்ணும் மதியை திரும்பி பார்த்தாள்.. 

மதி அழகில் விழிகள் விரித்து பார்த்தவள் பின் அலட்சியம்மாய் இதழ் சுழித்து அவள் அருகில் சென்று “கம்…”என்று சொல்லி அழைக்க மதி அப்படியே நின்றாள்.. 

“ஏய் உன்னைதான்… வா…”என்றவள் மதி கைபிடித்து இழுக்க அடுத்தநொடி மதியின் கரம் அவள் கன்னத்தில் பதிந்தது. 

அடிவாங்கியவள் கன்னத்தில் கைவைத்துகொண்டு அதிர்ந்து அவளை பார்க்க மதியோ விழிகளில் அனலை தேக்கி எரிப்பது போல் பார்த்தாள்.. 

அவள் பார்த்ததில் அந்தபெண் பயத்தில் மிடரு விழுங்கியவள் “மித்துதான் உன்னை மார்டன் டிரஸ் போட்டு கூட்டிட்டு வர சொன்னான்..”என்றாள்.. 

மதி இப்பொழுது மித்ரனை பார்த்தவள் “எனக்கு பிடிக்காத டிரஸ் எல்லாம் நான் போடமாட்டேன்… அதுவும் மார்டன் டிரஸ் என்னால போடவே முடியாது…”என்றாள்.. 

அவளை அழுத்தம்மாய் பார்த்தவன் “நான் சொன்னா கேட்கணும்…”என சொல்ல 

“ப்ளீஸ் மித்து இந்த விசயத்துல என்னை போர்ஸ் பண்ணாத…” 

அவள் கோபத்தை விடுத்து அவனிடம் கெஞ்சலாய் கேட்க மித்ரன் அவள் அதைதான் செய்ய வேண்டும் மிரட்டவில்லை அவன் அமைதியாய் கையில் இருந்த கிளாஸை வாயில் வைத்து குடித்தவன் பின் இதழ் சுழித்து அவளை பார்த்தான் 

அவன் பார்வை அடுத்து அவளுக்கு பிடிக்காத எதையோ செய்ய சொல்ல போகிறான் என்று சொல்ல மித்ரன் “ஓகே உனக்கு டிரஸ் போட பிடிக்கலன்னா நான் சொல்ற இன்னொரு விசியத்தை நீ செய்யணும்…”என்றவன் நிறுத்தி “செய்வியா?…”என்றான். 

அவன் குரலில் இருந்த அழுத்தம் அவள் செய்தே ஆகவேண்டும் என்று சொல்ல மதி தலையாட்டினாள்.. 

மித்ரன் எழுந்தவன் அவள் கரம் பற்றி டேன்ஸ் ஆடிகொண்டிருந்தவர்கள் அருகில் இழுத்தான்… 

அவன் அழுத்தி பிடித்தது வலிக்கவும் “மித்து வலிக்குது விடு…”என்றாள்… ஆனால் மித்ரன் அவள் சொன்னதை கேட்கவில்லை.. 

சுற்றி இருந்தவர்களை காட்டியவன் “அவங்கள மாதிரி நீயும் டேன்ஸ் ஆடணும்… லெட்ஸ் ஸ்டார்ட்…”என்றவன் அவள் கரத்தை விடுவிக்க மதி அதிர்ந்தாள்.. 

அவன் இப்படி சொல்வான் என்று மதி எதிர்பார்க்கவில்லை…மறுத்து தலையசைத்தவள் “என்னால முடியாது…”என சொல்ல 

“நான் சொல்றதை செய்வன்னு சொன்ன… டேன்ஸ் ஆடு…”என்று மிரட்டலாக சொன்னவன் மீண்டும் சென்று பார் பக்கத்தில் தளர்வாய் சாய்ந்து அமர்ந்தான்.. 

மதி சுற்றி இருந்தவர்களை பார்க்க எல்லாரும் அவளைதான் பார்த்து கொண்டிருந்தனர். 

அதுவும் அங்கிருந்த ஆண்களின் பார்வை அவள் மேல் அழுத்தம்மாய் துகிலுரிப்பது போல் பதிந்தது.. 

அதில் உடல் கூசியவளுக்கு அப்படியே ஓடிவிடலாமா என்று தோன்றியது… மித்ரன் தன்னை மிரட்டியதை நினைத்து பார்த்தவள் நிமிர்ந்து மித்ரனை பார்த்தாள்.. 

மித்ரன் அவள் அழுகையை ரசித்து பார்க்க அவள் அவமானப்படுவதை ரசித்து பார்க்க ஆர்வம்மாய் அமர்ந்து இருந்தான். 

அவன் திட்டம் அவளுக்கு புரிந்தது… தன்னை அவமானப்படுத்தவே இங்கு அழைத்து வந்துருக்கிறான் என்பதை புரிந்துகொண்டவள் அவனையே பார்த்தாள்.. 

“மித்து நீ என்ன எதிர்பார்த்து என்னை இங்க கூட்டிட்டு வந்தேன்னு எனக்கு புரிஞ்சிருச்சு… என்னை இங்க இவங்க முன்னாடி அவமானப்படத்தனும் அங்க உங்க குடும்பத்து முன்னாடி ஐயாகிட்ட தப்பானவளா காட்டனும் அதான உன் எண்ணம்… நான் இப்போ வரைக்கும் நீ சொல்றதை எல்லாம் கேட்கிறதுக்கு காரணம் உன் மேல இருக்க பயம் கிடையாது மித்து ஜமீன் மேல நான் வச்சிருக்க விசுவாசம்… அடுத்த வாரிசு நீங்கறதால நான் கொடுக்கிற மரியாதை… அம்மா அப்பா இழந்த எனக்கு இப்போ வரைக்கும் எனக்கு தேவையானது எல்லாம் பண்ணி அடைக்கலம் கொடுக்கிறது ஜமீன்ங்கறதால அந்த நன்றிகடன்.. அதை நீ உன்மேல வச்சிருக்க பயம்ன்னு நீ நினைச்சா நான் எவ்வளவு உறுதியானவன்னு உனக்கு காட்டுவேன்…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் விழிகள் மூடினாள்… 

“மதி பதட்டப்படாத இந்த இடத்தில யாருமே இல்லன்னு நினைச்சுக்கோ…”என தனக்குள் சொல்லிக்கொண்டவள் விழிதிறந்து பார்க்க அவள் கண்களுக்கு மித்ரனை தவிர வேற யாரும் தெரியவில்லை.. 

அவனை பார்த்துகொண்டே டேன்ஸ் ஆட தொடங்கினாள்… 

சுற்றி இருந்தவர்கள் எல்லாம் மெய்மறந்து பார்க்க மித்ரன் பார்வை கொஞ்சம் கூட அவளை விட்டு விலகவில்லை… 

மதி டேன்ஸ் ஆட இந்த பக்கம் அமர்ந்து இருந்த மித்ரனோ அவளை பார்த்துகொண்டே கையில் இருந்த கிளாஸை காலி செய்தான்.. 

மதி டேன்ஸ் ஆடி முடித்ததும் ஒருவன் கைத்தட்டியபடி அவள் அருகில் சென்றவன் “வாவ்… சூப்பரா டேன்ஸ் ஆடுன… கம் ரெண்டு பேரும் கப்பிலா டேன்ஸ் ஆடலாம்….”என்றவன் அவள் அனுமதி இல்லாமல் அவள் கரத்தை பிடிக்க செல்ல இப்பொழுது இடையில் ஒரு வலிய கரம் அவன் கரத்தை பிடித்து தடுத்தது..

மதி திரும்பி பார்க்க மித்ரன்தான் நின்றிருந்தான்.. அவன் கண்கள் கோபத்தில் சிவந்து இருந்தது.. 

அவன் பார்க்க சாதாரணமாய் பிடித்து இருப்பது போல் தெரிந்தாலும் எதிரில் இருந்தவன் முகமோ வலியை பிரதிபலித்தது. 

“மித்ரன்.. விடு…” 

“டேன்ஸ் ஆட அத்தனை கேர்ள்ஸ் இருக்காங்க உனக்கு நான் கூட்டிட்டு வந்த பொண்ணுகூடதான் டேன்ஸ் ஆடணுமா…”என்றவன் பிடித்திருந்த கரத்தை அப்படியே வளைத்து முறுக்க வலிதாங்க முடியாமல் கத்தினான்.. 

அதை பார்த்து மற்ற ஆண்கள் எல்லாரும் இரண்டடி பின்னாடி நகர்ந்து கொண்டனர். 

மித்ரன் கையை விடுவிக்க விட்டால் போதுமென அங்கிருந்து ஓடினான்… 

எல்லாரும் அவர்களையே பார்க்க மித்ரன் “வாட்…என்ஜாய் த நைட் கைஸ்…”என சொல்ல எல்லாரும் மறுபடியும் டேன்ஸ் ஆடுவது ட்ரிங்ஸ் செய்வது என்று தங்களின் கவனத்தை திசை திருப்பினர்.. 

மித்ரன் பார் பக்கம் திரும்பி “ஒன் மோர்…”என சொன்னவன் அங்கிருந்து செல்லபோக மதி அவன் கரம் பற்றி தடுத்தாள்.. 

தன் கரம் பற்றி இருந்த அவள் கரத்தையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன் கையை உதற மதி “என்னை எல்லார் முன்னாடியும் இன்சல்ட் பண்ணனும்ன்னுதான இங்க கூட்டிட்டு வந்த… இப்போ நீயே எதுக்கு அவனை என்கூட டேன்ஸ் ஆடக்கூடாதுன்னு தடுத்த?…”என கேட்டாள்.. 

“உன் கொஸ்டினுக்கு எல்லாம் நான் ஆன்சர் பண்ணனும்ன்னு இல்ல…” 

மதி மென்னகை சிந்தியவள் “நீ என்னை வெறுக்கிறன்னு சொல்றது எல்லாம் பொய் மித்து…உண்மையில உனக்கு என்மேல அக்கறைதான் இருக்கு… அதை நீ காட்டகூடாதுன்னு நினைச்சாலும் உன்னால முடியல… இன்னிக்கு எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சிருச்சு உனக்கு என்மேல இருக்கிறது கோபம்தான் வெறுப்பு இல்ல…”என்றாள்.. 

அவளையே அழுத்தம்மாய் பார்த்தவன் ஒரு அடி முன்னாடி எடுத்து வைத்து அவளை நெருங்கியவன் “என்ன சொன்ன எனக்கு உன்மேல வெறுப்பு இல்லையே… நான் உன்னை எந்த அளவுக்கு வெறுக்கறேங்கறதை இப்போ நீ தெரிஞ்சுப்ப…”என்றவன் கைகள் உயர்த்தி சொடக்கிட்டு “டி.ஜே…”என்று கத்த டே.ஜே புரிந்துகொண்டவன் பாடலை ஒலிக்க விட்டான்.. 

பாடல் ரொமான்டிக்காக இருக்க மித்ரன் புரியாமல் பார்த்து கொண்டிருந்தவள் இடையில் கைவைத்து தன் பக்கம் இழுத்தான். 

மதி விழிகள் விரித்து அதிர்ந்து பார்க்க அவனோ முகம் இறுக அவளை சுழற்றி விட்டு டேன்ஸ் ஆடினான்.. 

மதியால் பொறுத்துகொள்ள முடியவில்லை…அவனிடமிருந்து விலக பார்க்க மித்ரன் “உன்னை அவ்வளவு ஈஸியா நான் விட்ருவனா…”என்பது போல் அவள் கரத்தை இறுக பற்றி இருந்தான். 

மித்ரன் அவளை சுழற்றி விட்டு டேன்ஸ் ஆடியவன் இடையில் பேரர் அவனை கடந்து செல்லும் பொழுது தட்டில் இருந்த கிளாஸ் எடுத்து குடித்தான். 

அந்த போதை அவனுக்கு போதவில்லை…”ஏய்…’என்று அவன் கத்தி கூப்பிட பெண்கள் போல் கழுத்து வரை முடி வைத்துகொண்டு ஒருவன் வந்தவன் அவனிடம் குட்டியாய் ஒரு பாக்கெட்டை கொடுத்துவிட்டு அதிர்ந்தான் 

மதி அது என்ன என்று தெரியாமல் பார்க்க மித்ரன் பாக்கெட்யை வாயில் வைத்து கடித்தவன் இப்பொழுது மதியை தனக்கு முன்னாடி கொண்டு வந்து அவள் கரத்தை திருப்பி பிடித்து அதில் பாக்கெட்டில் இருந்ததை கொட்டினான்.. 

வெள்ளையாய் மாவுபோல் ஏதோ அவள் கொட்டவும் அதை அப்படியே முகர்ந்து பார்த்தவன் தன்னையே மறந்தான். 

அதன்பின் டேன்ஸில் அவனுடைய வேகம் அதிகரித்தது.. அவன் கைகள் அவள் உடலில் அத்து மீறி பதிந்தது.. 

மித்ரன் ஒருநாள் இந்தளவு அவளிடம் நடந்துகொண்டது இல்லை… அவளால் இதை தாங்கவே முடியவில்லை.. 

விழியோரத்தில் கண்ணீர் கோர்க்க “மித்து நீயா இப்படி…”என தனக்குள் சொல்லிக்கொண்டாள்.. 

மித்ரன் அவளை இப்படியும் அப்படியுமாய் வேகமாய் சுழற்றிவிட்டவன் ஒரு கட்டத்தில் அவள் கரத்தை விடுவிக்க மதி கிறுகிறுவென வரவும் அவன் கரத்தை விடுவித்த வேகத்தில் கீழே விழுந்தாள்.. 

கீழே விழுந்தவளை பார்த்து எல்லாரும் சிரிக்க மதிக்கு அவமானம்மாக இருந்தது. 

மதி நிமிர்ந்து மித்ரனை பார்க்க அவனோ இதழ் சுழித்து “உனக்கு இது தேவைதான்…”என்பது போல் பார்த்தான்.. 

கண்களில் இருந்த இப்பொழுது நன்றாகவே கண்ணீர் வெளியேற மதி எழ பார்த்தவள் அது முடியாமல் போகவும் மீண்டும் கீழே விழுந்தாள்.. 

அப்பொழுது ஒரு கரம் அவள் எழுவதற்கு கைகொடுக்கவும் மதி நிமிர்ந்து பார்க்க அவள் முன் இதழில் மென்னகை தோன்ற நின்றிருந்தான் செழியன்… 

ஆறடி உயர்த்தி மாநிறத்தில் சாக்லேட் பாய் போல் இருந்தவனுக்கு அழகே அவன் இதழில் மலர்ந்து இருந்த புன்னகைதான்… 

பார்க்க அர்ச்சனா சாயலில் இருந்தவன் குணம் மட்டும் தன்னுடைய அப்பா அம்மா போல் இல்லை.. அப்படியே தன்னுடைய பாட்டி ரத்தினதேவியின் குணத்தை பெற்றிருந்தான்.. 

அவனை பார்த்ததும் இவ்வளவு நேரம் தான் அனுபவித்த கொடுமை எல்லாம் மதிக்கு மறந்து போக அவள் உதடுகள் “செழியா…”என்று முனுமுனுத்தது… 

“பாப்பு…”என்றவன் உரிமையாய் அவள் தோளில் கைவைத்து தூக்கிவிட மதி அழுதுகொண்டே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.. 

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த மித்ரன் முகம் இறுக கையில் இருந்த கிளாஸை அழுத்தி பிடித்தான்… அதில் கிளாஸ் உடைந்து அவன் கைகளில் ரத்தம் கொட்டியது 

செழியன் “பாப்பு அழாத அதான் நான் வந்துட்டேன்ல…”என அவளை சமாதானம் செய்தவன் மதியை தன்னிடமிருந்து விலகி அவள் கண்ணீரை துடைத்துவிட்டான்.. 

மதி “செழியா நான் இங்க இருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்?…”என கேட்க 

“வீட்டுக்கு நான் வரும்போது நீ இல்ல…அந்த ரவுடிகிட்ட ( இசை ) கேட்டேன் அவ தெரியாதுன்னு சொன்னா இவனும் வீட்டுல இல்ல சோ இப்படிதான் இருக்கும்ன்னு கால்குலேட் பண்ணி வந்துட்டேன்… எப்படி…”என சொன்னவன் வாட்சில் டைம் பார்த்துவிட்டு 

“இது நீ இருக்க வேண்டிய இடமில்ல…”என்றவன் அவளை அங்கிருந்து அழைத்து செல்ல மித்ரன் தடுக்கவில்லை ஆனால் அவள் கண்னை விட்டு மறையும்வரை அவளையே பார்த்து கொண்டிருந்தான்..

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.