காதல் தீ -61

Chellammal Bharathi | 16 Jan 2026 | Share

    ஆதவன் அவன் உறக்க கலக்கத்தில் லேசாக அரைக் கண்ணை திறந்து பார்க்க… சிங்கம்புணரியில் தீரனின் வீடு பரபரப்பு நிறைந்து காணப்பட்டது. “நாம எந்திரிச்சு வர்றதுக்குள்ள இவங்கலாம் எந்திரிச்சு என்ன பண்றாங்க?” என்ற யோசனையுடன் மெதுவாக எழுந்து தன் ஒளியைக் கொண்டு அதிகாலை இருட்டை விலக்கியவாறே வெளி வந்தது சூரியன். 

     “சூரியன் கிழக்க உதிச்சுருச்சு… என்ன எல்லாரும் இவ்ளோ மெதுவா வேலை பாக்குறீங்க? வேகமா வேலைய பாருங்க… என்னங்க… என்னங்க… அங்க என்ன வெட்டியா கதை பேசிட்டு இருக்கீங்க?” என தன் கணவனை அதட்டியபடி கணவனிடம் வந்தார் கருப்பாயி. 

      “இப்ப எதுக்கு இவ்ளோ பதட்டபடுற? வேலை தான… மெதுவா பாக்கலாம்… இன்னும் உன் புள்ளையும் மருமகளும் எந்திரிக்கவே இல்ல… மொதல்ல போய் அவங்கள எழுப்பு… அத விட்டுட்டு வந்துட்டா என்னய வேலை வாங்க…” சிதம்பரம். 

     “இன்னும் இவங்க ரெண்டு பேருமே எந்திரிக்கலயா? கடவுளே…” என புலம்பியபடி தீரனின் அறையை தட்டினார் கருப்பாயி. 

      “தீரா… யய்யா தீரா… சீக்கிரம் எந்திரிச்சு கிளம்புங்கய்யா… விஷேசத்துக்கு நேரம் ஆகிருச்சு…” கருப்பாயி. 

      “நா எந்திரிச்சுட்டேன் ம்மா… உன் மருமக தான் இன்னும் தூங்கிட்டு இருக்கா…” என கதவை திறந்து மகியை போட்டுக் குடுத்தான் தீரன். 

      “புள்ளதாச்சி புள்ள அப்பிடித்தான் அசந்து உறங்குவா… நீதான் பக்குவமா எழுப்பி கூட்டியாரனும்… அத விட்டுட்டு வந்து புறணி சொல்லிட்டு இருக்க. போ போ… போய் என் மருமகள கிளப்புற வேலைய பாரு…” என அங்கிருந்து நகர்ந்தார் கருப்பாயி. 

      “வர வர இந்த வீட்ல எனக்கு மரியாதை இல்லாம போயிருச்சு… நா புறணி பேசுறேனா?” என புலம்பியபடி “அடியேய்… இந்தாடி… நீ முழிச்சுட்டு தான் இருக்க னு எனக்குத் தெரியும்… எந்திரிடி மொதல்ல. அங்க என் அம்மா என்னய பேசிட்டு போகுது…” என உறங்கும் மகியிடம் வந்து கத்தினான் தீரன். 

      “ப்ச்… ஏன்டா இப்பிடி கத்துற? பாப்பா பயந்துற போறா…” என எழ முயற்ச்சித்தாள் மகி. 

      “ஹேய் ஹேய்… பாத்துடி…” என மகியின் கை பிடித்து அவளை எழுந்து அமர வைத்தான் தீரன். 

       “இவ்ளோ நேரம் எகிருன… பாப்பானதும் பம்முற?” என நக்கலாக சிரித்தாள் மகி. 

       ஏழு மாத வயிற்றுடன்… கர்ப்பிணி பெண்களுக்கு உரிய பூரிப்புடன் அதிகாலையில் அழகாக சிரிக்கும் தன் மனையாளைக் கண்டு மயங்கிய தீரன், “ஏன்டி நீ இவ்ளோ அழகா இருக்க?” என அவளின் கன்னத்தில் அழுத்தமாக தன் முத்திரையைப் பதித்தான் தீரன். 

       “நா என்ன கேக்குறேன்? நீ என்ன டா பண்ற?” என தீரனின் மீசை ஏற்படுத்திய குறுகுறுப்பில் வெட்கத்துடன் நெளிந்தாள் மகி. 

      “நா என்ன பண்றேன்? நா என் பொண்டாட்டிய கொஞ்சுறேன்…” என மகியின் கன்னத்தில் தன் இதழ்களால் கோலமிட்டான் தீரன். 

       “நைட் எல்லாம் இப்பிடி கொஞ்சி தான் காலையில லேட் எந்திரிக்க லேட் ஆகிருச்சு. இப்பவும் இப்பிடி கொஞ்சுனா என்ன மாமா பண்றது?” என தீரனின் கை வளைவில் சிணுங்கினாள் மகி.

      “என்ன வேணுனாலும் பண்ணலாமே…” என்ற தீரனின் கை மகியின் உடலில் அத்து மீற ஆரம்பிக்கும் நேரத்தில் தீரனின் அறைக் கதவு மீண்டும் தட்டப்பட்டது.

      “எவன்டா அவன்? பூஜை வேளையில கரடி?” என சலித்தபடி மகியை விடுவித்தான் தீரன். 

     “வேற யாரு? மனோ வா தான் இருக்கும்…” என சிரிப்புடன் மெத்தையை விட்டு எழுந்தாள் மகி. 

     “என்னய பாத்தா உனக்கு சிரிப்பா இருக்கு?” என மகியை செல்லமாக முறைத்து அவளின் கன்னத்தை கடித்து வைத்துவிட்டே அறைக் கதவைத் திறந்தான் தீரன். 

      அறையின் வெளியே, “ஏன்டா எவ்ளோ நேரமா கதவ தட்றது? அப்பிடி உள்ள என்ன தான் பண்ணிட்டு இருந்த?” என்ற கத்தலுடன் மகி கூறியது போல் மனோ நின்றிருந்தான். 

      “ம்ம்… பூஜை பண்ணிட்டு இருந்தேன்…” தீரன். 

      “நீ என்ன பூஜை பண்ணுவ னு எனக்குத் தெரியும்… வெளில வாடா மொதல்ல…” மனோ.

     “டேய்… நா இன்னும் குளிக்கல டா…” தீரன். 

      “வேற ரூம்ல போய் குளிச்சு கிளம்பிக்கலாம்… நீ வாடா மொதல்ல… மகிழ்… நீ எந்த தொந்தரவும் இல்லாம குளிச்சுட்டு கிளம்பி வா…” என தீரனை இழுத்துக் கொண்டு சென்றான் மனோ. 

      “போடா நா வர மாட்டேன்… மகி… நில்லு நானும் வர்றேன்…” என மனோவின் கரத்தை உதறி விட்டு மீண்டும் அறைக்குள் நுழைய முயன்றான் தீரன். அப்பொழுது நான்கு கரங்கள் தீரனை அலேக்காக தூக்கி மற்றொரு அறைக்கு கொண்டு சென்றன. 

     “டேய் டேய் என்னடா பண்றீங்க? என் பொண்டாட்டிய பாக்க விடாம இப்பிடி கொடுமைப் படுத்துறானுங்களே… உங்களுக்குலாம் நா கல்லியாணமே பண்ணி வச்சு இருக்க கூடாது டா…” தீரன். 

      “கல்லியாணம் பண்ணி ஒரு மாசமே ஆன புது ஜோடியே நாங்க அமைதியா வால சுருட்டிட்டு இருக்கோம். உனக்கு குழந்தையே பொறக்க போகுது… நீ என்ன இப்பிடி துள்ளுற? நீ இன்னும் கிளம்பல னு கருப்பாயி எங்க எல்லாரையும் திட்டுது. நீ மகிழ குளிக்க விடாம பண்ணிட்டு இருக்க…” மனோ. 

      “எங்க ரெண்டு பேருக்கும் கல்லியாணம் பண்ணி வச்சியே நம்ம பொன்ராசுக்கு கல்லியாணம் பண்ணி வச்சியா? இப்ப அவன் நம்மூர் கண்ணகிய லவ் பண்றேன் னு வந்து நிக்கிறான்… நீலாம் என்ன அண்ண?” என தீரனை தூக்கிய நான்கு கரங்களில் இரண்டு கரங்களுக்கு சொந்தக்காரனான உதியன் கத்தினான். 

      “ஆமா… நீலாம் என்ன அண்ண?” என மற்ற இரண்டு கரங்களுக்கு உரியவனான பொன்ராசு மூக்கை உறிஞ்சினான். 

      “சரி சரி… அழுவாத… இன்னைக்கே உன் கல்லியாணத்துக்கு தேதி குறிக்கிறேன்…” தீரன். 

      “மொதல்ல போய் குளி… இல்லனா கருப்பாயி என்னய கொன்ரும்…” என தீரனை பாத்ரூமிற்குள் தள்ளி விட்டான் மனோ. 

      தீரன் கிளம்ப மனோ, உதி, பொன்ராசு உதவி செய்ய… மகியை மஞ்சுவும் தூரியும் அலங்கரித்தனர். ஊரில் இருந்து இந்திரனும் பல்லவியும் சரியான நேரத்திற்கு வந்துவிட… விழாவிற்கு வந்தவர்களை உதியனின் பெற்றோர்களும் மனோவின் பெற்றோர்களும் வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தனர். 

     சிவப்பு வண்ண பட்டு உடுத்தி அசையும் தேரென மகிழ்விழி நடந்து வர… அவளின் இருபுறமும் தூரியும் மஞ்சுவும் மகியின் கை பிடித்து சபைக்கு அழைத்து வந்தனர். 

      சபை நடுவே போடப்பட்டிருந்த இருக்கையில் மகி அமர வைக்கப்பட… அவளுக்கு அருகே உள்ள இருக்கை காலியாக இருக்க… தன்னவனை தேடினாள் மகி. 

     மகியின் நாயகன் பட்டு வேட்டி சட்டை அணிந்து கம்பீரமாக நடந்து வந்து மகியின் அருகே அமர்ந்தான் தீரன். கருப்பாயி அளித்த மாலையை தீரன் மகி கழுத்தில் இட… சிதம்பரம் அளித்த மாலையை தீரனின் கழுத்தில் போட்டு புன்னகைத்தாள் மகி. அவளின் புன்னகையைக் கண்டு இதமாக அவளின் நெற்றியில் முத்தமிட்டான் தீரன். 

    இருவரின் ஜோடிப் பொருத்தத்தைக் கண்டு அனைவரும் அகம் மகிழ்ந்து போயினர். தீரனின் அருகே மனோ, உதி, பொன்ராசு ஆகிய மூவரும் கம்பீரமாக நிற்க… மகியின் அருகில் நின்ற மஞ்சுவும் தூரியும் வெளிப்படையாகவே தங்கள் கணவன்களை ரசித்தனர். கூட்டத்தில் தன் ஜோடியான கண்ணகியை பொன்ராசு தேட… அவள் தாயின் பின்னால் மறைந்து நின்று அவனை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளின் கள்ளப் பார்வையை கண்டறிந்த பொன்ராசு வெட்கப்புன்னகை சிந்தினான். 

      முதலில் மகிக்கும் தீரனுக்கும் பெரியவர்கள் அனைவரும் சந்தனம் குங்குமம் இட்டு ஆசிர்வாதம் செய்ய… முதல் வளையாலான நாத்தனார் வளையலை மஞ்சு வந்து மகிக்கு அணிவித்து பொட்டு வைத்தாள். 

     அடுத்து தூரி வந்து வளையலிட… அடுத்தடுத்து அனைத்து பெண்மணிகளும் வந்து வளையலிட்டனர். கை நிறைய கண்ணாடி வளையல்கள் மின்ன… மேடிட்ட வயிற்றுடன் முழு அலங்காரத்தில் தாய்மையின் மெழுகில் பேரழகாக மிளிர்ந்தாள் மகி. புன்னகை முகமாக அமர்ந்திருக்கும் மகிக்கு அடுத்ததாக வளையலிட இரு பெண்மணிகள் சிரிப்புடன் முன்னே வந்தனர். 

     “உங்க ரெண்டு பேரையும் நா எங்கயோ பாத்து இருக்கேனே…” என யோசித்தாள் மகி. 

      “என்னோட வளைகாப்புக்கு வந்து தான் உன் ஆள பட்டுனு அறைஞ்ச… ஞாபகம் இல்லையா?” என சிரித்தாள் ஒரு பெண். 

      “அட ஆமால்ல… என்ன குழந்தைக்கா உங்களுக்கு?” மகி. 

       “பொண் குழந்தை மகி… என் அக்காக்கு ஆம்புள புள்ள… உன் கிட்ட காட்டியே ஆகனும் னு தூக்கிட்டு வந்து இருக்கா… இங்க பாரு…” என அருகில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்மணியை கைகாட்டினாள் முதலாம் பெண். 

       “அய்… என இரண்டாம் பெண்ணிடம் இருந்து குழந்தையை வாங்கி முத்தம் கொஞ்சினாள் மகி. அதை பார்த்த அனைவருக்கும் தெவிட்டாத இன்பக்காட்சியாக தெரிந்தது. 

       “எங்க அந்த அம்மா? இந்த அக்காவ அந்த பேச்சு பேசுனாங்க?” என இந்த ஊருக்கு வந்த புதிதில் தன்னையும் தன் எதிரே நிற்கும் பெண்மணியையும் பேசிய நபரை தேடினாள் மகி. 

      “இங்க தான் இருக்கேன்…” என மெல்லிய குரலுடன் முன்னே வந்தார் அந்த கணீர் குரல் பெண்மணி. 

      அவரைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள் மகி. “என்னய மன்னிச்சுரு மகி… அன்னக்கி நா உன்னய தப்பா பேசிட்டேன். நானும் ஒரு பொண்ணா இருந்துட்டே என் மருமகள ரொம்ப காயப்படுத்திட்டேன்…” என்றார் அந்த கணீர் குரல் பெண்மணி. 

     “அட விடுங்கம்மா… புரிஞ்சிக்கிட்டா சந்தோஷம் தான். இந்தாங்க உங்க பேரப்புள்ளயோட விளையாடுங்க…” என குழந்தையை அப்பெண்ணிடம் கொடுத்தாள் மகி. 

    “ரொம்ப நல்ல பொண்ணு மா நீ…” என மகியை நெட்டி முறித்துவிட்டு குழந்தையை வாங்கி கொண்டார் அப்பெண்மணி. 

    “ரொம்ப ரொம்ப நன்றி மா… அன்னக்கி எல்லார் முன்னாடியும் நீ எனக்காக பேசுனதுக்கு…” என மகிக்கு வளையலிட்டு மகியின் நெற்றியில் ஆசையாக முத்தமிட்டாள் இரண்டாம் பெண்மணி. 

     “இதுல என்ன க்கா இருக்கு? உண்மைய தான பேசுனேன் அன்னைக்கி? இதுக்குப் போய் நன்றிலாம் சொல்ல லாமா?” மகி. 

     “சரி நன்றி சொல்ல ல… ஆளுக்கொரு முத்தம் குடுக்குறோம்…” என்றவாறு முதல் பெண் மகியின் இடக் கன்னத்தில் முத்தமிட… அதே நேரத்தில் இரண்டாம் பெண், மகியின் வலக் கன்னத்தில் முத்தமிட்டாள். அதைக் கண்ட பல்லவிக்கும் செண்பகத்திற்கும் ஆனந்தத்தில் கண்கள் பனித்தது. 

     அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தீரன், “என்ன பொண்ணு இவ? அடிக்க வேண்டிய இடத்துல யாரா இருந்தாலும் அடிக்கிறா… அணைக்க வேண்டிய இடத்துல என்ன தப்பு செஞ்சு இருந்தாலும் அரவணைச்சுக்கிறா… மை ஸ்வீட் ஏஞ்சல் மகி குட்டி…” என மனதினுள் தன் மனையாளை கொஞ்சினான் தீரன். 

      தீரன் மனதினுள் கொஞ்சி கொண்டிருக்க… அப்பெண்மணிகள் இருவரும் மகிக்கு முத்தமிடுவதைக் கண்டு  தூரியும் மஞ்சுவும், “நானும்… நானும்…” என மகியின் கன்னங்களில் முத்தமிட்டனர். அதைப் பார்த்த உதியும் மனோவும், “நானும்… நானும்…” என மகியின் கன்னத்தில் முத்தமிட வர… அவர்கள் பலமாக பின்னால் இழுக்கப்பட்டனர். 

      அவர்களின் சட்டையை பிடித்து பின்னால் இழுத்தவாறு, “என் பொண்டாட்டிய என்னடா பண்ண போறீங்க?” என்ற கடுமையான குரலுடன்  நின்றிருந்தான் தீரன். 

      “எல்லாரும் முத்தம் குடுக்குறாங்க… நாங்க குடுக்க கூடாதா?” என உதியனும் மனோவும் பாவமாக தீரனை ஏறிட்டனர்.

      “நோ… நீங்க ரெண்டு பேரும் என் பொண்டாட்டிய விட்டு ரெண்டு அடி தள்ளியே நில்லுங்க… டேய் மனோ… முக்கியமா நீதான்…” என மனோவை எச்சரித்தான் தீரன்.

      “இந்த லூசுப்பய சொல்றதெல்லாம் எவன் கேப்பான்? நீ வா மச்சான்…” என நொடிப் பொழுதில் தீரனிடம் இருந்து விடுபட்டு மகியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான் மனோ. அதே நேரத்தில் மகியின் மறு கன்னத்தில் முத்தமிட்டான் உதியன். 

      “டேய்…நீங்க முத்தங்குடுக்க உங்க பொண்டாட்டிங்க இருக்கு டா… ஏன்டா என் பொண்டாட்டியவே வந்து சுத்துறீங்க?” தீரன். 

       “ஏன்னா… மகி… எங்களுக்கு எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல்…” என தூரி, மஞ்சு, உதி, மனோ ஆகிய நால்வரும் ஒன்றாக குரல் கொடுத்தனர். 

       அதைக் கேட்ட மகிக்கும் தீரனுக்கும் உள்ளுக்குள் பெருமிதமாக இருந்தாலும், “எதுல ஒத்துமையா இருக்கீங்களோ… இதுல மட்டும் நாலு பேரும் ஒத்துமையா இருக்கீங்கடா…” என வெளியே சிடுசிடுக்க முயன்று இறுதியில் சிரித்து விட்டான் தீரன். 

         அனைத்து பெண்மணிகளும் மகிக்கு வளையலிட்டு முடிக்க… இறுதியாக தீரன் வந்து மகிக்கு தங்க வளையல் போட்டு காதலுடன் மகியின் நெற்றியிலும் மேடிட்ட வயிற்றிலும் முத்தமிட்டான். அதைக் கண்ட இளவட்டங்கள் அனைவரும், “ஓஓஓ…” என சந்தோஷக் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். அதில் மகிக்கும் தீரனுக்கும் சற்று லேசாக வெட்கம் ஏற்பட, இருவரும் ஒருவரையொருவர் நெற்றியில் இதமாக முட்டிக்கொண்டு தங்களின் வெட்கத்தை மறைத்தனர். 

     இக்காட்சியைக் கண்ட பொன்ராசு, “இதுபோல நாமளும் எப்ப இருப்போம்?” என கண்களாலயே கண்ணகியிடம் வினா எழுப்ப… அவள் முகம் வெட்கத்தில் செவ்வானமாய் சிவந்தது.

     அன்பும்… அளவில்லா காதலும்.. நேசமும்… கணக்கில்லா  சந்தோஷத்துடனும் மகிழ்விழியின் வளையலணி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அடுத்ததாக மகியின் வீட்டில் இருந்து செய்து எடுத்துவரப்பட்ட விதவிதமான உணவு வகைகளை எடுத்து வந்து வரிசையாக தீரன் மகிக்கு ஒவ்வொன்றாக ஊட்ட… காதலாக உணவை வாங்கிக் கொண்டவள் காதலுடன் உணவை மீண்டும் தீரனுக்கு ஊட்டி விட்டாள் மகி. 

      அதைக் கண்ட மஞ்சுவும் தூரியும், “நானும்… நானும்…” என முன்னே வந்து மகிக்கு உணவூட்டினர். சிரிப்புடன் உணவை வாங்கிக் கொண்டவள் தீரனுக்கு போலவே அவர்களுக்கும் உணவூட்டினாள் மகி. அக்காட்சியைக் கண்டு பொறுக்காத உதியனும் மனோவும், “எனக்கும்… எனக்கும்…” என மகியிடம் மண்டியிட்டு உணவுக்காக ஆஆ என வாயைக் காட்டினர். 

     “அது எப்பிடிடா? எனக்கு போட்டியாவே வர்றீங்களே…” என அலுத்துக் கொண்டான் தீரன். 

     “சும்மா இரு தீரா…” என சிரிப்புடன் உதியனுக்கும் மனோவிற்கும் ஊட்டி விட்டாள் மகி. 

     உணவை வாங்கிக் கொண்ட உதி, தன் தோழிக்கு பேரன்புடன் சாதம் ஊட்டி விட்டான். உணவை வாங்கிக் கொண்டவள் அழகாக உதியனைப் பார்த்து புன்னகைத்தாள். 

      “லவ் யூ டி மகி…” என மகியை அணைத்துக் கொண்டான் உதியன். 

      அவன் அணைப்பில் உள்ளம் நெகிழ்ந்து, “லவ் யூ டூ டா உதி எரும…” என்றாள் மகிழ்விழி.

      அவ்விருவரையும் தீரனும் தூரியும் பெருமையுடன் பார்த்து புன்னகைத்தனர்.

      இந்த அழகான காதலும் நட்பும் இவர்களின் வாழ்வில் என்றென்றும் நிலைத்து நிற்க வாழ்த்தி நாமளும் விடைபெறுவோம் வாங்க…

                      சுபம் 🤗

      

                           -செல்லம்மாள்பாரதி 

  • Author
    Ramya Devi
    February 5, 2026

    fantastic

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *