காதல் தீ -54

Chellammal Bharathi | 11 Jan 2026 | Share

            இயற்கை தன் மிஞ்சும் அழகை தேவைக்கு அதிகமாகவே அக்குக்கிராமத்தில் கொட்டியிருந்தது. தென்னைமரங்களும் தென்னைபிள்ளைகளும் தங்களது கரங்களான கீற்றுகளில் தங்களுள்ளே உரசி மெல்லிய இன்னிசை கச்சேரியை அக்காலைப் பொழுதில் நடத்திக் கொண்டிருந்தாலும் அதை எதையும் கண்டுகொள்ளாமல் மனோரஞ்சன் பித்து பிடித்தவன் போல் வந்த வழியே ஓடிக் கொண்டிருந்தான். 

          “மனோ அண்ணா…. ” என்ற தூரிகையின் நக்கல் கலந்த கீச்சுக் குரல் கேட்டு சட்டென நின்று தூரிகையை திரும்பி பார்த்தான் மனோரஞ்சன். 

          “தூரி…. இங்க என்ன பண்ற?  ” என ஆசுவாச மூச்சுடன் தூரிகையை சுற்றி உள்ளவர்களைப் பார்த்தான் மனோரஞ்சன். 

          “நான் பண்றது இருக்கட்டும்….நீங்க ரெண்டு பேரும் என்ன பண்றீங்க? ” என சிறுவர் கூட்டம் புடை சூழ நின்று வாய் பொத்தி சிரித்தபடி கேட்டாள் தூரிகை. 

           “ரெண்டு பேரா? ” எனப் புரியாமல் மூச்சு வாங்கியபடி தன் பின்னே திரும்பி பார்த்தான் மனோரஞ்சன். அங்கு அவனின் பின்னே ஓடி வந்ததால் பெரிய பெரிய மூச்சை இழுத்து விட்டபடி வியர்த்து வழிந்தபடி நின்றிருந்தாள் மஞ்சு. 

           “என்ன ரெண்டு பேரும் ஓடிப்புடிச்சு விளையாடுறீங்களா? ” என மனோரஞ்சனைப் பார்த்து வாய் பொத்தி நக்கலாக சிரித்தாள் தூரிகை. 

           “அப்பிடியே ஒன்னு போட்டேனா தெரியும்… நீ சத்த உன் அனகோண்டா வாய க்ளோஸ் பண்றியா? ” என தூரியைப் பார்த்து மிரட்டிவிட்டு, ” இப்ப நீ ஏன் என் பின்னாடி ஓடி வர்ற? ” என கோபத்தில் பன்மையில் இருந்து ஒருமைக்கு தாவி மஞ்சுவை அதட்டிக் கேட்டான் மனோரஞ்சன். 

           “இப்ப ஏன் கோப படுறீங்க ஸார்? நான் குடுத்த கம்ப்ளைண்ட விசாரிப்பீங்க தான ஸார்? ” என பாவமா கேட்டாள் மஞ்சு. 

            மஞ்சு கேட்ட முக பாவனையில் மயங்கி அவள் நாசிக்கும் மேல் இதழுக்கும் இடையே துளிர்த்திருந்த வியர்வை முத்துக்களை சுவைக்க தாபம் ஊற்றெடுக்க வெடுக்கென தன் தலையை குலுக்கி நிதானத்திற்கு வந்தான் மனோரஞ்சன். 

          “ஐயோ…இதென்ன இந்த பொண்ண பாத்து முழுசா ஒரு நாள் தான் ஆகி இருக்கு….அதுக்குள்ளயும் இந்த பொண்ண பத்தி இப்பிடி நினைக்கிறேன்…மகிழ் கிட்ட கூட இப்படி தோணலயே….என்ன ஆச்சு எனக்கு ?” என தன் மனதிடம் விவாதித்து கொண்டு, “இது தப்பு டா மனோ… ரொம்ப தப்பு….” என தலையை இட வலமாக ஆட்டிக்கொண்டு சத்தமாக முனுமுனுத்தான் மனோரஞ்சன். 

           தான் கேட்ட கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் மனோரஞ்சன் வேறு ஏதோ கூறவும் குழப்பத்துடன், “என்ன ங்க ஸார்? ” என புரியாமல் வினவினாள் மஞ்சு. 

          மனோரஞ்சனை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த தூரிகை, அவனின் பார்வை சென்ற திசையை பார்த்து மனோவின் மனதை அழகாக வாசித்தவள் நமட்டு சிரிப்புடன், “அது ஒன்னும் இல்லை மஞ்சு… என் அண்ணனுக்கு அப்ப அப்ப பைத்தியம் புடிச்சுரும்… இப்பிடித்தான் நாம ஒன்னு கேட்டா அதுக்கு சம்பந்தமே இல்லாம வேற ஒரு ரியாக்ஸன் குடுப்பாரு… இல்லையா ண்ணா? ” என கலகல வென நகைத்தபடி கூறினாள் தூரிகை. 

           “பைத்தியமா? ” என தூரிகையிடம் கேட்டவாறு மனோரஞ்சனை பயமுடன் பார்த்தாள் மஞ்சு. 

            “பைத்தியம் னா சாதாரண பைத்தியம் இல்லை… காதல் பைத்தியம்… ” என்றவாறு மனோவின் முறைப்பின் வெப்பத்தை தாங்க முடியாமல் மஞ்சுவின் பின்னே வந்து நின்றாள் தூரிகை. 

           “யாருக்கு காதல் பைத்தியம்? உனக்கா? எனக்கா? ” என அதுவரை தூரிகையை முறைத்த மனோ அவளின் பின்னே தொலைவில் பார்த்துவிட்டு சிரிப்புடன் கேட்டான். 

            “எனக்கு என்ன காதல் பைத்தியம்? ” என மனோவின் பார்வையை தொடர்ந்து தன் பின்னே திரும்பி பார்த்தாள் தூரிகை. 

             அவள் பின்னே உதியன் தன் பைக்கில் மெதுவாக வந்து கொண்டிருந்தான். அவனை பார்த்த தூரி, “இம்சை வந்துருச்சு டா….” என சிரிப்புடன் தன் நெற்றியில் அடித்துக் கொண்டாள். 

            “இம்சையா? இரு…வரட்டும் சொல்றேன்….” என சிரித்தான் மனோரஞ்சன். 

             இருவரும் பேசுவதை மாறி மாறி பார்த்தவாறு எதுவும் பேசாமல் தவிப்புடன் தாவணி முந்தானையை ஒற்றை விரலில் சுற்றியபடி நின்றிருந்தாள் மஞ்சு. 

            அவர்களை நெருங்கி வந்த உதியன், “என்ன மச்சான் தோப்புக்குள்ள மாரத்தான் நடத்துனீங்க போல? யாரு ஜெயிச்சது? ” என ஆர்பாட்டத்துடன் கேட்டான். 

           அதைக்கேட்ட தூரிகை குபீரென சிரித்தாள். அவளை முறைத்தபடியே, ” என்னடா ரெண்டு பேரும் ஜோடி போட்டு என்னைய கிண்டல் பண்றீங்களா? நான் டி. எஸ். பி டா….” என்றான் மனோரஞ்சன். 

            ” சிரிப்பு போலீஸ் தான? ” உதியன். 

            “டேய் நா சீரியஸ் போலீஸ் டா…” மனோரஞ்சன். 

            ” நம்ப முடியலயே…” தூரிகை. 

            “எதேய்…நம்ப முடியலயா? அன்னக்கி காடவன அடிச்ச அடிய பாத்துமா இப்பிடி கேக்குறீங்க ரெண்டு பேரும்? ” மனோரஞ்சன். 

            “காடவன உங்களுக்கு எப்பிடித் தெரியும்? ” என அவர்களின் இடையில் புகுந்தாள் மஞ்சு.

             “அவன எப்பிடி உனக்கு தெரியும்? “என ஆச்சரியமுடன் வினவினான் உதியன். 

              “அவளுக்கு எல்லாம் தெரியும் உதி…” என எந்த ஆச்சரியமும் இல்லாமல் சாதாரணமாக கூறினான் மனோரஞ்சன். 

               “எல்லாம் னா? ” தூரிகை. 

               “எல்லாமே…” மனோரஞ்சன். 

               “என் அப்பா அந்த காடவன பத்தி அடிக்கடி பேசிட்டு இருப்பாரு….” என தலை குனிந்தபடி பதிலளித்தாள் மஞ்சு. 

                மஞ்சு அவ்வாறு கூறியதிலேயே அனைத்தும் புரிந்து கொண்ட உதியன், ” உனக்கு என்னெல்லாம் தெரியும்? ” என்றான். 

               “இவங்க கிட்ட சொல்ல லாமா ஸார் ?” என மனோரஞ்சனைப் பார்த்து கேட்டாள் மஞ்சு. 

                “அப்ப உங்க கிட்ட ஏற்கனவே சொல்லிட்டாங்களா ண்ணே? ” தூரிகை. 

                “ம்ம்.. அத தீரன் கிட்ட சொல்ல தான் இவ்ளோ அவசரமா வந்தேன்… “என தூரிகையை பார்த்துக் கூறி விட்டு, “உன் அப்பாவால பாதிக்கப்பட்டவங்கள இவனும் ஒரு ஆளு தான்… தாராளமா சொல்லலாம்… இன்னும் சொல்லப் போனா உன் அப்பாவ புடிக்க தான் இத்தனை வருஷமா ஊருக்கு வராதவன் இப்ப வந்து இருக்கான்….” என மஞ்சுவைப் பார்த்துக் கூறினான் மனோரஞ்சன். 

             “என் அப்பா….ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் ரொம்ப சோகமா அளவுக்கு அதிகமா குடிச்சுட்டு அழுது உருண்டு வந்தாரு…..நான் என்ன ஆச்சு னு கேட்டேன்… அவரு வாயவே தொறக்கல… ஆனா அடுத்த நாளே ரொம்ப சந்தோஷமா இருந்தாரு… நானும் அத அப்பிடியே விட்டுட்டேன்… அன்னக்கித்தான் தீரன் அண்ணே பஞ்சாயத்துல மகி அண்ணிய….. ” என அதற்கு மேல் கூற முடியாமல் முந்தானையில் வாய் பொற்றி அழுதாள் மஞ்சு. 

              மஞ்சுவை தன்னோடு  அணைக்க வந்த தூரியை தன் கை நீட்டி தடுத்துவிட்டு தன் தோளில் ஆதரவாக அணைத்துக் கொண்டான் மனோரஞ்சன். 

             தான் மனோரஞ்சனின் தோளில் சாய்ந்து இருப்பதை உணராமலயே ஆதரவாக அவன் வாகாக அவன் தோளில் சாய்த்தவாறு மேலும் கூற ஆரம்பித்தாள் மஞ்சு. 

           ” அன்னக்கி அதுக்கு காரணம் என் அப்பா தான்னு தெரியாது… ஒரு பொண்ணா… அண்ணியோட நிலைமையா பாத்து ரொம்ப கஷ்ட்டப்பட்டேன்… என் அண்ணனும் தீரன் அண்ணே இப்பிடி பண்ணுனதுக்காக அவர ரொம்ப திட்டுனுச்சு…. அன்னக்கி மட்டும் அதுக்கு காரணம் என் அப்பா தான்னு தெரிஞ்சு இருந்தா அப்பவே சோத்துல விசத்த வச்சு அவர கொன்னு இருப்பேன்… ” என உக்கிரத்துடன் மனோவின் தோளில் இருந்து துள்ளி நிமிர்ந்தவாறு கூறினாள் மஞ்சு. 

          “சரி…. போனது போகட்டும்… எப்ப உனக்கு தெரிஞ்சது? ” என மஞ்சுவின் கரத்தைப் பற்றியவாறு மென்மையாக வினவினாள் தூரிகை.

          ” அது… நேத்து தான்…. நேத்து அண்ண வீட்டுக்கு வந்து அண்ணிய உங்க எல்லாரையும் பாத்து பேசுனது பத்தி என் அண்ணக்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்… அத கேட்டுட்டு இருந்த அப்பா ரொம்ப கோபப்பட்டாரு…. என்னைய திட்டிட்டு அவரு ஃபோன எடுத்துட்டு தனியா கொல்லைப் பக்கம் போனாரு… நான் அவர சமாதானம் பண்ண அவர் பின்னாடியே போனேன்…. அவர் யாருக்கோ ஃபோன் பண்ணி பாத்துட்டு லைன் கிடைக்கலனு கோபமா ஃபோன தூக்கி உடைச்சுட்டாரு…. அப்போ அவரு பின்னாடி நின்ன  என்னைய பாத்துட்டு இங்க எதுக்கு வந்த னு என்னய அதட்டிட்டு அவரு சிம் அ எடுத்து வேற ஃபோன் ல போட்டு தர சொல்லிட்டு வெளிய போய்ட்டாரு…. நான் என் ஃபோன் ல போட்டு ஆன் பண்ணி பாத்தேன்…. அப்ப தான் அதுல உள்ள வீடியோலாம் தெரிஞ்சது…. ஸாரி தூரி…. ” என அடங்கமாட்டாமல் தூரியை இழுத்து அணைத்து கதறினாள் மஞ்சு. 

           “நீ ஏன் ஸாரி கேக்குற மஞ்சு? விடு…. எங்களுக்கு உன் அப்பா தான் இதெல்லாம் பண்ணது னு முன்னமே தெரியும்…. ஆனா எதுக்கு னு தான் தெரியல… அதுக்குத் தான் உன்னைய நேத்து அண்ணே வீட்டுக்கு நீதான் தங்கச்சி முறையில ஆரத்தி எடுக்கனும் வர வைக்க சொன்னேன் அம்மா கிட்ட…. ” என மென்மையாக புன்னகைத்தான் உதியன். 

          “அதான் எனக்கும் தெரியல…. நைட் அப்பாவோட ஃபோன் ல எல்லாம் பாத்துட்டு எனக்கு ஒன்னும் புரியல…. என் அண்ணனுக்கு இது தெரியுமா னு தெரியல….ஒருவேளை அவனும் இதுல சம்பந்தப்பட்டு இருந்தா என்ன பண்றது னு நைட் ஃபுல்லா யோசிச்சுட்டே இருந்தேன்… நைட் வெளில போன அப்பா விடியக்காலையில நான் ஸார பாக்க வர்ற வரைக்கும் வீட்டுக்கு வரல… விடிஞ்சதும் தீரன் அண்ணன பாத்து எல்லாம் சொல்லிறனும் னு அவசர அவசரமா அண்ணங்கிட்ட கோவிலுக்கு போறேன் னு சொல்லிட்டு வந்தேன்…. வர்ற வழியில தான் மனோ ஸார பாத்தேன்…. அவரு ஃபோலீஸா இருக்காரு னு நேத்து நீங்களாம் பேசிக்கிட்டதா ஞாபகம்…. அதான் அவருக்கிட்ட என் அப்பாவ பத்தி கம்ளைண்ட் பண்ணனும் னு அவரு கிட்ட எல்லாம் சொன்னேன்….. ” என கூனி குறுகியபடி கூறி முடித்தாள் மஞ்சு. 

             “இப்ப அந்த சிம் உள்ள ஃபோன் எங்க? ” என அவசரமாக கேட்டான் உதியன். 

              “என் கிட்ட தான் இருக்கு… ” என தன் கண்ணீர் விழிகளை துடைத்தபடி கூறினாள் மஞ்சு. 

               “அந்த சனியன மொதல்ல குடு… “என கை நீட்டினாள் தூரிகை.

               “இல்ல…. அத நான் தீரன் அண்ணங்கிட்ட தான் குடுப்பேன்… ” என உறுதியாக மறுத்தாள் மஞ்சு. 

                “சரி… நீயே பத்ரமா வச்சுக்க… இப்ப என்ன பண்ணலாம் உதி? ” மனோரஞ்சன். 

                 “அண்ணே எங்க? ” உதி. 

                 “அதான் எனக்கும் தெரியல… விடிஞ்சதுல இருந்து அவனையும் மகிழையும் காணோமாம்… அம்மா சொன்னாங்க…. ” மனோரஞ்சன். 

              “ஒருவேளை மஞ்சு வீட்டுக்கு போய் இருப்பாங்களோ? ” தூரிகை. 

              “விடியிறதுக்கு முன்னாடியேவா அங்க போவாங்க ரெண்டு பேரும்? இரு நான் ஃபோன் பண்ணி பாக்குறேன்…. ” என தீரனுக்கும் மகிக்கும் ஃபோனில் அழைப்பு விடுத்தான். 

             “ரெண்டு பேருமே ஃபோன எடுக்கல…. இப்ப என்ன பண்ணலாம்? ” உதியன். 

              “காலையில அப்பா கூட ஏதோ தீரனும் மகிழும் எடுத்த காரியத்தை முடிக்காம விட மாட்டாங்க னு சொன்னாங்க….” என நெற்றியை தேய்த்தான் மனோரஞ்சன். 

              “எதுக்கும் நாம என் வீட்டுக்குப் போய் பாக்கலாமே? என் அப்பா நைட் எங்க போனாரு னு தெரியல….என் அண்ணங்கிட்ட விசாரிச்சு பாக்கலாமே…” மஞ்சு. 

               “அதுவும் சரிதான்….நீயும் தூரியும் வீட்டுக்கு போங்க… நானும் உதியும் போய் பாத்துட்டு வர்றோம்… ” மனோரஞ்சன். 

               “ஏன்? நாங்க வர்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? ” தூரிகை. 

               “இல்ல…. அங்க நிலைமை எப்பிடியோ? இதுல ரெண்டு பேரும் அங்க இல்லனா? அத்தோட எப்பிடி போறது? நானும் உதியும் அவன் பைக்ல போயிருவோம்… ” மனோரஞ்சன். 

                “டேய் அண்ணா…. நாங்க எப்பிடி வேணுனாலும் வருவோம்…. நீங்க ரெண்டு பைக்ல வந்து சேர்றதுக்கு முன்னாடி நாங்க ரெண்டு அங்க இருப்போம்…. ” என தன் துப்பட்டாவை இழுத்துக் கட்டிக் கொண்டாள் தூரிகை.

              தூரிகையின் செயலைப் பார்த்து வியந்து பயந்து நின்றாள் மஞ்சு. 

           “ஆகான்….அப்பிடியா? அப்பிடி என்ன உனக்கு ஆர்வம்? ” என்றபடி பைக்கை ஸ்டார்ட் பண்ணி அதில் ஏறி அமர்ந்தான் உதியன்.

           “என் அக்காவோட ஆக்சன பாக்க கண் கோடி வேண்டுமடா அற்ப பதரே….அத எப்பிடி நான் மிஸ் பண்ணுவேன்…..எனக்கென்னமோ இந்நேரம் பாதி ஆக்சன் முடிஞ்சு இருக்கும் னு நினைக்கிறேன்… நாம டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்…. மஞ்சு… உன் வீட்டுக்கு பக்கத்துல உள்ள குட்டி பசங்க பேரு சொல்லு….” தூரிகை. 

          ” விளங்கிரும்…இனித்தான் வீட்டுக்கு வழிய விசாரிக்கனுமா? நீ விசாரிச்சு மெதுவா வந்து சேரு… நாங்க கிளம்புறோம்… ” என்றபடி உதியனின் பைக்கில் பின்னே ஏறி அமர்ந்தான் மனோரஞ்சன். 

          “எப்பிடியும் நாளைக்கி வந்து சேரு தூரி…” என உதியன் நக்கலுடன் கூறிவிட்டு இருவரும் பைக்கில் பறந்தனர் .

           “அவனுக போறானுக பிலாக்கா பசங்க… நீ சொல்லு… உன் வீட்டுக்கு பக்கத்துல உள்ள ஏதாவது ஒரு சின்ன பையன் பேர சொல்லு…” தூரிகை. 

          “ம்ம்….ராஜேஷ் னு ஒரு பையன் இருக்கான்… ஏழாவது படிக்கிறான்… ஏன்  கேக்குற? நீ வா என் வீட்டுக்கு நான் கூட்டிட்டு போறேன்…” என தூரிகையின் கைப்பிடித்து வேகமாக நடக்க ஆரம்பித்தாள் மஞ்சு. 

          “ஓஓ… ராஜேஷ் வீட்டுக்கும் பக்கத்துலயா? அவனுகளுக்கு முன்னாடி நாம போக வேண்டாமா ?அத்தோட நீ மகி அக்காவோட ஆக்சன பாத்தது இல்லையே? சும்மா வேற லெவல் ல இருக்கும்….என் கூட வா… உன் வீட்டுக்கு நான் உன்னைய கூட்டிட்டு போறேன்… இந்த ஊருல உள்ள எல்லா குறுக்கு சந்து வழியும் எனக்குத் தெரியும்….” என மஞ்சுவின் கைப் பிடித்து ஒரு சந்துக்குள் ஓட ஆரம்பித்தாள் தூரிகை. 

         ” ஹேய்…இப்பிடிலாம் என் வீட்டுக்குப் போகலாமா? ” என ஆச்சரியத்துடன் வினவியபடி தூரியுடன் ஓடினாள் மஞ்சு. 

         அங்கும் இங்கும் புகுந்து வெளிவந்து ரெண்டே நிமிடத்தில் ராஜேஷின் வீட்டின் முன்னே நின்றாள் தூரிகை. 

          ” எப்பிடி அதுக்குள்ள வந்தோம்? ” என மூச்சு வாங்கியபடி அருகில் இருந்த தன் வீட்டை நோக்கி நடந்தாள் மஞ்சு. 

           அப்பொழுது சரியாக உதியும் மனோவும் பைக்கில் வந்து சேர்ந்தனர். அவர்கள் இருவரையும் தங்களுக்கு முன்னே பார்த்துவிட்டு, “எப்பிடி எங்களுக்கு முன்னாடி வந்தீங்க? மாய மந்திரம் எதுவும் கத்து வச்சு இருக்கியா தூரி? ” என்றபடி பைக்கை நிறுத்திவிட்டு வந்தான் உதியன். 

           ” அதான் தூரி…” என பெருமையாக தனது துப்பட்டாவை பெருமையாக தூக்கி விட்டாள் தூரிகை. 

           “சரி…வாங்க உள்ள போகலாம்… வீடு தொறந்து தான் இருக்கு…என் அண்ணா வீட்ல தான் இருக்கான் போல…..” என்றபடி வாசல்படி ஏறினாள் மஞ்சு. 

          “ஏய்….அங்க பாருங்க தீரன் அண்ணே பல்சர்…அப்ப ரெண்டு பேரும் உள்ள தான் இருக்காங்க….வாங்க… அக்காவோட தரமான அக்சன நான் பாக்கனும்…” என துள்ளிக் குதித்து முதல் ஆளாக வீட்டினுள் நுழைந்தாள் தூரிகை. 

          உள்ளே நுழைந்த தூரிகை ,பேச நா எழாமல் அப்பிடியே விக்கித்து நின்றாள். அவள் பின்னே நுழைந்த உதியனும் மனோவும் யாரை தடுப்பது யாரை காப்பாற்றுவது எனப் புரியாமல் நின்றனர். உள்ளே நுழைந்த மஞ்சு ,  உள்ளே இருந்த நிலையைப் பார்த்து சட்டென  வாயிற்கதவை மூடினாள்.

          அங்கு மஞ்சு வீட்டின் நடுக் கூடத்தில் ஒரு ஓரமாக கை கட்டி அமைதியாக மகியை வேடிக்கை பார்த்து நின்றிருந்தான் தீரன். தன் தந்தையின் உயிருக்காக தீரனின் காலைப் பிடித்து கதறிக் கொண்டிருந்தான் மஞ்சுவின் அண்ணன் பொன்ராசு. ( பொன்ராசு வ ஞாபகம் இருக்கா ரீடர்ஸ்? 🤔🤭)

        தீரனின் ஆக்ரோஷத்தையும் சேர்த்து தன்னுள் வாங்கி… முகத்தில் செங்குருதி வழிய… வலக்கையில் குருதி சொட்டும் அரிவாளுடன்…. உடம்பில் ஆங்காங்கே இரத்தம் சொட்ட சொட்ட விழுந்திருந்தாலும்….  இகழ்ச்சியான புன்னகையுடன் மகியை அலட்சியமாக பார்த்தபடி தரையில் கிடக்கும் பொன்ராசுவின் தந்தை சின்ராசுவின் நெஞ்சின் மேல் தன் வலக்காலை வைத்து சாட்சாத் பத்ரகாளியின் மறு உருவமாக நின்றிருந்தாள் அனழேந்தி தீரனின் மகிழ்விழி. 

                                    (காதல் தீ பரவும்…) 

    

                            -செல்லம்மாள்பாரதி 

           

    No comments yet.