காடவனின் மயக்கம் தெளியாதிருக்க…. மயக்கத்திலிருந்து அவனை தெளிவிக்கும் வேலையில் உதியன் ஈடுபட்டிருக்க…. மனோரஞ்சன் சிறிது தொலைவில் நின்று ஃபோனில் பேசியபடி நின்றிருந்தான்.
“ஸாரி பாப்பா….அன்னைக்கி நான் அப்பிடி செஞ்சு இருக்க கூடாது….நான் உன் கிட்ட பேசி இருக்கனும்… ” என தலைகுனிந்து மகியிடம் மன்னிப்பு கோரும் குரலில் தயங்கி தயங்கி நெஞ்சில் ஏற்பட்ட வலியுடன் பேசினான் தீரன்.
“உள்ளுக்குள்ள காதல வச்சுட்டு வெளிய புடிக்காத மாதிரி நடிக்கிறது எவ்ளோ கஷ்டம் னு எனக்கு தெரியும்….அந்த நேரத்துல நீங்க எப்பிடி வலிய அனுபவிச்சு இருப்பீங்க… ” என்றவாறு கண் கலங்கினாள் மகி.
தன்னவள் கண்ணீர் சிந்துவதை காண சகிக்காமல் தன் நெஞ்சில் பத்திரமாக அணைத்துக்கொண்டான் தீரன். தீரனின் நெஞ்சில் சாய்ந்தவாறு அவனது சட்டையிலேயே தனது கண்ணீரை துடைத்தபடி மகி எதார்த்தமாக தூரிகையை பார்க்க…அவள் காடவனின் ஃபோனை பார்த்து திகைத்தவாறு நின்றிருந்தாள்.
“என்ன ஆச்சு தூரி? “என தன்னவனின் அணைப்பில் இருந்து விலகியபடி கேட்டாள் மகி.
மகியின் குரலில் தீரனும் உதயனும் தூரியை கவனிக்க… அதை எதுவும் உணராமல் காடவனின் ஃபோனையே அதிர்ச்சியுடன் பார்த்தவாறு இருந்தாள் தூரிகை.
மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்து விட்டு மகி மெதுவாக தூரிகையை நெருங்கினாள். தூரிகையின் தோளை மெதுவாக மகி அசைக்க…அதில் உணர்வடைந்த தூரிகை, குளமாக பெருகி இருந்த கண்ணீருடன் மகியை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் விழிகளில் பெருகி இருந்த கண்ணீரைக் கண்டு பதறி, “என்ன ஆச்சு தூரி? ” என்றாள் மகி.
மகி கேட்ட அடுத்த நொடி கண்ணீர் குளம் உடைப்பெடுக்க…..ஆறாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓட…, “அக்கா…. ” எனக் கேவியவாறு மகியை இறுக்க அணைத்துக்கொண்டாள் தூரிகை.
” இப்ப என்ன ஆச்சு? அந்த ஃபோனுல இன்னும் என்ன இருக்கு? ” என தூரியை தேற்றியபடி கேட்டாள் மகி.
“நான் இன்னும் எவ்வளவ தான்க்கா தாங்கனும்? ” என சத்தமாக கேவியபடி மகியின் நெஞ்சில் பத்திரமாக அழுதாள் தூரிகை.
தூரிகையின் கையில் இருந்த ஃபோனை வாங்கி அவள் பார்த்திருந்ததை தானும் எடுத்து பார்க்க…அதில் தாங்கள் தேடிக்கொண்டிருக்கும் நபரின் நம்பர் இருக்க….யோசனையாக நெற்றியை சுழித்தாள் மகி.
அப்போனை தீரனிடம் மகி அளிக்க… அதை வாங்கிய தீரன் அந்த எண்ணை பார்த்து உதினையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “தூரி… இந்த நம்பர் யாரோடது னு உனக்கு தெரியுமா? ” என்றான்.
மகியின் நெஞ்சில் கேவியபடியே, “ஆமாம்… ” என்பதற்கு அடையாளமாய் தலையை அசைத்தாள் தூரிகை.
அதைப்பார்த்து மூவரும் அதிர்ச்சி அடைய… “யாரோடது தூரி? “என மெல்லிய குரலில் கேட்டான் உதியன்.
“அந்த நம்பர்… அது…என் அப்பாவோடது க்கா… ” என மகியின் நெஞ்சில் குலுங்கி குலுங்கி அழுதாள் தூரிகை.
“நல்லா தெரியுமா தூரி? ஒழுங்கா பாத்து சொல்லு… ” என தூரியை அவசரப்படுத்தினான் தீரன்.
“எத்தனை தடவ பாத்தாலும் அது எனக்கு நல்லா தெரியும்… அது என் அப்பாவோட நம்பர் தான்…. ” என தன் அழுகையை தொடர்ந்தாள் தூரிகை.
அதே நேரம் ஃபோன் பேசிவிட்டு உள்ளே நுழைந்த மனோரஞ்சன், அனைவரும் உறைந்து நிற்பதையும் தூரிகை அழுது கொண்டு இருப்பதையும் பார்த்து, “என்ன ஆச்சு? ” என்றான்.
துளியாக ஒட்டிக்கொண்டிருக்கும் நம்பிக்கையுடன், “அந்த நம்பர் யாரோடது னு தெரிஞ்சதா மனோ? ” என்றான் தீரன்.
“நான் என்ன கேக்குறேன்? நீ என்ன சொல்லுற? ” மனோரஞ்சன்.
“கேட்டதுக்கு பதில்? ” என ஒரு வித எதிர்பார்ப்புடன் இறுகிய குரலில் கேட்டான் தீரன்.
உதியனும் மகியும் அவன் கூறப்போகும் பதிலுக்காக அவன் முகத்தையே ஆவலுடன் பார்த்திருக்க… அனைவரையும் புரியாமல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஆமா.. இப்பதான் டிபார்ட்மெண்ட் ல இருந்து ஃபோன் வந்துச்சு… அந்த நம்பர பத்துன டீட்டைல்ஸ் மெயிலுக்கு அனுப்புறேன் னு சொல்லி இருக்காங்க தீரா…. அந்த நம்பர் கலியமூர்த்தி ங்கிற பேருல இருக்காம் டா..” என்றான் மனோரஞ்சன்.
அவன் கூறிய பதிலில் தீரன் கோபமடைய… மகியும் உதியனும் அவஸ்த்தையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“சரி தூரி எதுக்கு அழுகுறா மகிழ்? ” மனோரஞ்சன்.
“இப்ப நீ சொன்னது தான் காரணம் மனோ… ” என்றவாறு தூரிகையை அமர வைத்து தண்ணீர் கொடுத்தாள் மகி.
“இப்ப நான் என்ன சொன்னேன்? அந்த நம்பர் கலியமூர்த்தி ங்கிற பேருல இருக்கு… இது தான சொன்னேன்… ” மனோரஞ்சன்.
“அது யாரு தெரியுமா? ” மகி.
“ப்ரைம் மினிஸ்ட்டராவா இருக்க போறான்? எவனாவது ஒரு கேடு கெட்ட பொறுக்கியா தான் இருப்பான்… யாரு அவன்? அதுக்கு ஏன் உன் தங்கச்சி அழுகனும்? உன் தங்கச்சிக்கு தெரிஞ்சவனா? ” மனோரஞ்சன்.
“ம்ம்… ” என முகத்தில் அறுவெறுப்பைக் காட்டினாள் மகி.
” அவருக்கும் உன் தங்கச்சிக்கும் என்ன சம்பந்தம்? ” மனோரஞ்சன்.
” இரத்த சம்பந்தம்… “என பேரமைதியான குரலில் கூறினாள் தூரிகை.
” ங்கே… ” என விழித்தான் மனோரஞ்சன்.
” இத சொல்ல அசிங்கமா தான் இருக்கு…. இருந்தாலும் இந்த ஜென்மத்துல இதான் உண்மை…அவரு தான் என்னைய பெத்தாரு…. ” என ஆழ்கடலின் அமைதியுடன் கூறினாள் தூரிகை.
அதைக்கூற அவள் எவ்வளவு கூனி குறுகி இருப்பாள் என உணர்ந்து, தூரிகையின் முதுகை ஆதரவாக தட்டிக் கொடுத்தாள் மகி.
“அப்பாவா? ” என ஆச்சரியப்பட்டான் மனோரஞ்சன்.
“அப்பாவா? அந்த உறவுக்கு துளி கூட தகுதி இல்லாதவன் அவன்….” என கசப்பாக புன்னகைத்தாள் தூரிகை.
ஒன்றும் புரியாமல் அனைவரையும் மனோரஞ்சன் பார்க்க… மகி தூரிக்கு ஆதரவாக அவளருகில் நிற்க….தீரன் எங்கோ வெறித்தபடி நிற்க…..கடலளவு வேதனையை முகத்தில் தாங்கியபடி நின்றிருந்தான் உதியன்.
“என்ன பாக்குறீங்க மனோ அண்ணா? பெத்துட்டா மட்டும் அவன் அப்பன் ஆகிற முடியுமா? பெத்த புள்ளை மானத்த கடனுக்காக அடுத்தவனுக்கிட்ட விக்கிறவனலாம் உங்க ஊருல அப்பா னு சொல்லுவீங்களா? ” என நிர்சலனமான முகத்துடன் மனோரஞ்சனை ஏறிட்டாள் தூரிகை.
யாரென்று தெரியாத ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள் என்று மட்டும் தான் தூரிகையை பற்றி கூறுகையில் மனோரஞ்சனிடம் மகி கூறி இருந்தாள். இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்காத மனோரஞ்சன் என்ன கூறுவது என தெரியாமல் திகைத்து நின்றான்.
“பெத்தவங்க கடன புள்ளைங்க தான் அடைக்கனும் னு என் உடம்ப ஒருத்தனுக்கு வித்துட்டான் இந்த கலியமூர்த்தி…. வந்தவன் என் உடம்ப சித்திரவதை செஞ்சத விட…. அப்பா னு நான் நினைச்ச மனுஷன் செஞ்சது தான் இப்ப வரைக்கும் என் நெஞ்ச அறுத்துட்டு இருக்கு…. அக்கா மட்டும் இல்லனா இந்நேரம் என்னைய புதைச்ச இடத்துல புல்லு மொளைச்சு இருக்கும்….. தேங்க்ஸ் க்கா…. ” என மகியை பார்த்து லேசாக இதழ் வளைத்தாள் தூரிகை .
அதைக்கேட்டு கோபமடைந்த மகி, “அறைஞ்சேனா பல்லு கழன்டுரும்…. என்ன பேச்சு பேசுற? ” என கையை ஓங்கி விட்டு தாய்ப்பாசத்துடன் தூரியை வாரி அணைத்துக் கொண்டாள்.
தூரிகை கூறியதைக்கேட்டு மனோரஞ்சனின் இதயமும் கண்களும் இணைந்து கலங்க…, ” மகிழ் உனக்கு அக்காவா இருக்குற மாதிரி இனி நான் உனக்கு அண்ணனா இருப்பேன் மா…. ” என அளவுக்கடந்த பாசத்துடன் தூரியின் தலையை வருடினான் மனோரஞ்சன்.
அங்கிருந்த சோக சூழ்நிலையை மாற்ற எண்ணி ,”எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு ஆகனும் சாமி ….” என்றான் உதியன்.
மற்றவர்களும் உதியனின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு, “என்ன உண்மை? ” என புருவத்தை உயர்த்தினாள் மகி.
“இல்ல…. மகி தூரிக்கு அக்கா…. தீரன் அண்ணா தூரிக்கு மாமா…. நானும் தீரன் அண்ணனும் அண்ணந்தம்பி…. அப்போ….. ” என இழுத்தான் உதியன்.
“டேய் அடங்குடா… நீ எங்க வர்ற னு நல்லா தெரியுது…. ” என சிரித்தான் மனோரஞ்சன்.
“அட அதில்லை…. நீங்க தூரிக்கு அண்ணன் னா….. மகிக்கும் நீங்க அண்ணன் தான? ” எனக்கூறி கண்ணடித்தான் உதியன்.
“அப்பிடி சொல்லுடா என் தம்பி… ” தீரன்.
“அதெப்படி? மகிழ் க்கு நான் அண்ணன் லாம் இல்ல… மகிழ் என் க்ரஷ்… ” என முறுக்கி கொண்டு நின்றான் மனோரஞ்சன்.
“எடு செருப்ப நாயே…. ” என மனோரஞ்சனின் காதை பிடித்து திருகினான் தீரன்.
“ஹே… போடா நாயே…. ” மனோரஞ்சன்.
“நீ போடா பேயே… ” தீரன்.
இருவரின் சண்டையை பார்த்து தன் வலியை மறந்து சிரித்தாள் தூரிகை. அவள் சிரிப்பதைப் பார்த்து மற்ற நால்வரும் நிறைவாக புன்னகைத்தனர். அப்பொழுது காடவன் மயக்கம் தெளிந்து லேசாக அசையும் சத்தம் கேட்கவும் அனைவரின் கவனமும் காடவனின் புறம் திரும்பியது.
“அப்போ…. அந்த கலியமூர்த்தி தான் எல்லாத்துக்கும் காரணமா தீரா? ” என அசையும் காடவனைப் பார்த்தவாறு கேட்டான் மனோரஞ்சன்.
“ஃபோன் நம்பர் அவனோடது தான? அப்ப இதுல அவனுக்கு சம்பந்தம் இல்லாமலா இருக்கும்? ” உதியன்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க… இப்பவே கடைசி முடிவ எடுத்துறாதீங்க… ” என்றபடி மயக்கம் தெளிந்து விழிகளை திறக்கும் காடவனின் முன் சென்று நின்றான் தீரன்.
“இன்னும் என்ன தீரா? ” மகி.
“கொஞ்சம் இரு…. ” என்றபடி தனது ஃபோனில் இருந்து தனது தந்தை சிதம்பரத்திற்கு அழைத்தான் தீரன்.
” ஹலோ…. அப்பா…. ” தீரன்.
“சொல்லுய்யா தீரா…. என் மருமக எப்பிடி இருக்கா? ” சிதம்பரம்.
“ஃபோன் பண்ணுனது நானு… என்னைய…பெத்த மகன… ஒரு வார்த்தை நல்லா இருக்கியா னு கேக்குறீங்களா நீங்க ? சரி சரி… நம்ம சண்டைய அப்புறம் வச்சுக்கலாம்… எனக்கு இப்ப முக்கியமான தகவல் வேணும்… ” தீரன்.
. “என்னய்யா வேணும்? ” சிதம்பரம்.
“அந்த கலியமூர்த்தியோட ஃபோட்டோ ஏதாவது இருக்கா? கிடைக்குமா? ” தீரன்.
“ம்ம்…. ” என சற்று யோசித்தவர், “இருய்யா…. நம்ம கோவில் திருவிழால முன்னாடி எடுத்த ஃபோட்டோலாம் ஊர் பஞ்சாயத்துல இருக்கும்…. பாத்துட்டு உனக்கு அனுப்புறேன்…. ” சிதம்பரம்.
“கொஞ்சம் சீக்கிரம் ப்பா…. ” தீரன்.
“இந்தா கிளம்பிட்டேன்… அஞ்சு நிமிஷத்துல அனுப்புறேன் தீரா…. ரொம்ப பெரிய பிரச்சனையா? ” சிதம்பரம்.
“அதெல்லாம் நான் அப்புறம் சொல்லுறேன்… நீங்க ஃபோட்டோவ சீக்கிரம் அனுப்புங்க… ” என அழைப்பை துண்டித்தான் தீரன்.
“இப்ப எதுக்கு தீரா ஃபோட்டோ லாம்… ” மகி.
“வரட்டும் சொல்லுறேன்டி… ” என்றபடி மயக்கத்தில் இருந்து நன்றாக விழித்து இருக்கும் காடவனை நெருங்கினான் தீரன்.
“அவனோட உருவம் உனக்கு நல்லா தெரியுமா காடவா? அதாவது அவனோட உயரம்… அளவு…. உடம்பு அமைப்பு…. இதெல்லாம்? ” தீரன்.
“ம்ம்… தெரியும்… ” காடவன்.
“அவன் இல்ல னு உனக்கு சந்தேகமா இருக்கா தீரா? ” மனோரஞ்சன்.
“ஆமா…. ” தீரா.
“லூசா நீ? அதான் அவனோட ஃபோன் நம்பர் இருக்கே? அத்தோட அவன் பண்ணுன வேலைக்கு இதெல்லாம் சாதாரணம்…. ” மகி.
” இல்ல மகி…..என் மனசு என்னமோ அவன் இல்ல னு சொல்லுது…. அத்தோட அன்னக்கி நானும் உதியும் குருவோட கூட்டாளிய அடிக்கிறப்ப பயந்து தெறிச்சு ஓடுனவனா இவ்ளோ தைரியமா எல்லாம் செய்வான்? ” தீரன்.
“அந்த மாதிரி ஆளுகளால தான் இப்பிடி மறைஞ்சு இருந்து குழி பறிக்க முடியும்….” என மரத்துப் போன குரலில் கூறினாள் தூரிகை.
தூரிகைக்கு மறுமொழி கூறப்போன தீரனை அவனது ஃபோன் குறுஞ்செய்தி வந்ததற்கான அடையாளமாய் சிணுங்கி அவனது கவனத்தை திருப்ப….அதை எடுத்து பார்த்து தனது தந்தை அனுப்பிய ஃபோட்டோவை தூரிகையிடம் காட்டினான் தீரன்.
“இதுல அந்த கலியமூர்த்தி எங்க இருக்கான் ? ” என தூரிகையிடம் காட்டி கேட்டான் தீரன்.
அப்போட்டோவில் சிங்கம்புணரி கிராமத்தில் உள்ள ஒரு சிலருடன் கலியமூர்த்தியும் ஒரிடத்தில் நிற்க… கலியமூர்த்தியை சரியாக கை காட்டினாள் தூரிகை.
அப்போட்டோவை காடவனிடம் காட்டி, “இவனா னு பாரு….” என்றான் தீரன்.
தீரன் கைவைத்து காட்டிய கலியமூர்த்தியை உற்று நோக்கிய காடவன், “இவனா? இவன் தான் செத்துட்டானே? ” என்றான் காடவன்.
“என்ன? செத்துட்டானா? இவனா னு நல்லா பாத்து சொல்லு…..” என கலியமூர்த்தியை நன்றாக காட்டினான் தீரன்.
“இவன் தான்…..நாங்க பாத்தோம்… அன்னைக்கி பஞ்சாயத்து நடக்குற நாளுக்கு முன்னாடி தான் செத்துக்கிடந்தான் காட்டுக்குள்ள…..மொசப்புடிக்க போன நாங்க பாத்தோம்….” காடவன்.
காடவன் கூறிய பதிலில் குழம்பியபடி தீரன் மற்ற அனைவரையும் பார்த்தான்.
தீரன் காட்டிய ஃபோட்டோவை பார்த்து கொண்டிருந்த காடவன், கலியமூர்த்திக்கு அருகில் நின்றிருக்கும் ஒருவனைப் பார்த்து, “இவன்…. இவன் தான்…. அதே உயரம்…. அதே கை நீளம்… அவனுக்கு கையில இருந்த அதே பச்சை…. ” என்றான்.
காடவன் கூறியதைக்கேட்டு அனைவரும் பரபரப்பாக….காடவன் கை காட்டியவனை பார்த்து, “இவரா???? ” என ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தான் தீரன்.
அப்போட்டோவை பார்த்து, “அண்ணே….. இவரு…….. ” என அதிர்ச்சியுடன் தீரனைப் பார்த்தான் உதியன்.
(காதல் தீ பரவும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.