காதல் தீ -47

Chellammal Bharathi | 04 Jan 2026 | Share

             தூவானத்தின் சிதறல்கள் போல் தண்ணீர் கண்ணிமைகளிலும் நாசியிலும் பன்னீர்த்துளிகளாய் விழ…கண்ணிமைகளை மெல்ல மெல்ல திறந்தான் உதியன். விழிகளை திறந்தவன் அசதியுடன் தலையை உயர்த்தி பார்த்தவன், தூரிகையின் மடியில் மெத்தென்று படுத்திருப்பதை உணர்ந்து, மீண்டும் நன்றாக படுத்தான் உதியன். 

           “நடிக்காம எந்திரிடா வெண்ண… ” என்றவாறு உதியனின் தோளில் பட்டென்று அடித்தாள் மகி. 

           “நான்லாம் ரொமான்ஸ் பண்ணிறக் கூடாதே…..” என சலிப்புடன் எழுந்து அமர்ந்தான் உதியன். 

           “ஆமாடா…. சுத்தி இத்தன தடியன்கள வச்சுக்கிட்டு ரொமான்ஸ் பண்ணுடா…. செமயா இருக்கும்…. ” மகி. 

            “அண்ணே…. அந்த ரெண்டு லூசுங்களும் அப்பிடித்தான்…. நேரங்காலம் தெரியாம காமெடி பண்ணிட்டு இருக்குங்க….நீங்க சொல்லுங்க… நீங்க நிஜமாலுமே போலீஸா? ” என தூரிகை மனோரஞ்சனிடம் கேட்க….அதைக்கேட்ட மனோ, லேசாக சிரித்தான். 

            “டேய்… நாம ரெண்டு பேரும் லூசுங்களாம்டா….” என மகி உதியனை பார்த்து கூற….”அவ கிடக்குறா பயந்தாங்கொள்ளி… ” என மகியின் தோள் மீது கை போட்டு நின்றான் உதியன். 

           “இந்த மாதிரி நேரத்துலயும் உங்க ரெண்டு பேரால மட்டும் தான் சீரியஸே இல்லாம பேசி சிரிக்க முடியும்… ” தீரன். 

           “அத நீ சொல்லாத நாடகக்காரா…. என்ன ஒரு நடிப்பு…. ” மகி. 

           “அப்பிடி நான் என்ன நடிச்சுட்டேன்? ” என முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு கேட்டான் தீரன். 

           “அய்யோ ப்பே…. சிவாஜி தோத்தாரு டா…. எப்பிடி ?எப்பிடி? அன்னக்கி மால்ல? அயாம் தீரன்… மகிழ்விழியோட ஹஸ்பெண்ட்…. ” என தீரனைப் போல மகி நடித்துக்காட்ட அதைப்பாரத்த மனோ ,வாய்விட்டு நகைத்தான். 

           “சிரிக்காத நீ… அம்மில வைச்சு அரைச்சுப்புடுவேன்… ” என மனோவைப் பார்த்து மகி எகிறினாள். 

           “ஹேய்… பாப்பா….. என் மேல உள்ள கோபத்துல அத்தையும் மாமாவும் உனக்கு கண்டிப்பா வேற மாப்பிள்ளை பாப்பாங்க… என் மேல உள்ள கோபத்துல அதுக்கு நீ ஓகே சொன்னாலும் சொல்லுவ னு பயந்து… அத்தோட என்னைய பத்தி என்ன நினைச்சுட்டு இருக்க னு தெரிஞ்சுக்கத்தான் மனோவ உங்க வீட்டுக்கு பொண்ணு கேக்குற மாதிரி அனுப்புனேன். அத்தோட ஊருல நடந்த பிரச்சனை இன்னும் முடியாததால கண்டிப்பா உங்களுக்கு எதுவும் நடந்துறக்கூடாது னு தான் போலீஸான மனோவ உங்க கூட பழக விட்டேன்….ஆனா….அவன்….துரோகி…உன் கையலாம் புடிக்கிறான்….” என மகியிடம் கெஞ்சலில் ஆரம்பித்து பொறாமையில் முடித்தான் தீரன். 

            தீரன் கூறியதை கேட்ட மனோ வெடித்து சிரித்தான். “டேய் லூசு… நான் ஒன்னும் மகிழ என் தங்கச்சி னு சொல்ல லயே…. அவ என் ப்ரண்ட்…அதுவும் இன்னக்கி மகிழோட தைரியத்த பாத்துட்டு மெர்சலாகிட்டேன்…..என்னோட க்ரஷ் மகிழ்…” என மகியைப் பார்த்து கண்ணடித்தான் மனோரஞ்சன். 

            “பாரு…பாரு….என் முன்னாடியே உன்னையப் பாத்து கண்ணடிக்கிறான்….பொறுக்கி….” என மனோரஞ்சனை ஓங்கி குத்து விட்டான் தீரன். 

            “அய்யோஓஓஓஓஓஓஓ……

நிறுத்துங்க கொஞ்சம்… ” என அவர்களின் இடையில் புகுந்து கத்தினாள் தூரிகை. 

           “பொறுத்தது போதும்… பொங்கி எழு என் தேவதையே…..” என தூரிகையைப் பார்த்து சிரிப்புடன் கிண்டல் செய்தான் உதியன். 

           “அடச்சை… நீ முதல்ல வாய மூடு… ” என உதியனை பார்த்து கத்திவிட்டு, “இங்க எதுக்கு வந்து இருக்கோம்… அவனுங்கள அடிச்சு போட்டுட்டு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இப்பிடி பேசி விளையாடிட்டு இருக்கீங்க? இன்னும் அந்த தம்பி யாருனு தெரியல… அங்க காருல ஒருத்தன் கிடக்குறான்… இதெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? ” என கோபமாக கத்தினாள் தூரிகை. 

           “என்ன தூரி இவ்ளோ சீரியஸா பேசுற? ” மகி. 

           “அக்கா ப்ளீஸ்….நமக்கு நேரம் இல்லை…. இப்ப என்ன? மனோ அண்ணா போலீஸ்… அவரு உங்க ஆளோட ப்ரண்ட்…. அவ்ளோதானா? இப்ப….இந்த செகண்ட் நமக்கு தெரிய வேண்டிய விஷயம் நிறைய இருக்கு…..அத்தோட வில்லன் யாருனு தெரிஞ்சுக்க ஒரு கூட்டமே காத்துட்டு இருக்கு….இந்த ஆத்தர் புள்ள பாவம்… வில்லன் யாருனு சொல்லலனா அந்த புள்ளைய அடிச்சே கொன்னுரும் ஒரு கூட்டம்….ஸோ ப்ளீஸ்…..” தூரிகை. 

           “யாரு? அந்த புள்ள பாவமா? நம்ம ரெண்டு பேரையும் ரெண்டு நிமிஷம் கூட ரொமான்ஸ் பண்ண விட மாட்டேன் ங்குது…..ரீடர்ஸ் கிட்ட அடி வாங்கியே சாவட்டும்…..” உதியன். 

           (மீ : 🙄இருடா…உனக்கு மொத்தமா சூனியம் வைக்கிறேன்….😎)

           ” நம்ம பிரச்சினை ய பத்தி பேசிட்டு இருக்குறப்ப எதுக்கு தேவை இல்லாத ஆணிய பத்திலாம் பேசிட்டு இருக்கீங்க? இதுக்கெல்லாம் காரணம் யாருனு தெரிஞ்சதுக்கு அப்புறம் இருக்கு உங்க ரெண்டு பேருக்கும்…..” என தீரனையும் மனோவையும் பார்த்து மிரட்டினாள் மகி. 

        (மீ : தேவை இல்லாத ஆணியா நானு? 😤)

          “உங்க பஞ்சாயத்த தனியா வச்சுக்கங்க… தனியா ரூம் போட்டு கூட தாரேன்… மூணு பேரும் அடிச்சுக்கிட்டு கிடங்க…..இப்ப நம்ம முன்னாடி உள்ள பிரச்சனை ய கவனிப்போம்…” தூரிகை. 

          ஐவரும் திரும்பி கட்டிப்போட்டிருந்த ஐவரையும் காண, அவர்கள் ஐவரும் மயக்கம் தெளிந்து இவர்களை வேற்றுகிரகவாசிகளைப் பார்ப்பது போல் பார்த்தபடி இருந்தனர். 

          அப்பொழுது மற்றவரின் கவனத்தை கவராமல், “என்னடி பயந்தாங்கொள்ளி? ரொம்ப பொறுப்பா பேசுற திடீருனு? ” என ரகசியமாக தூரிகையின் காதில் உதியன் கேட்க, “ரீடர்ஸ விட எனக்குத்தான்டா அந்த **** யாருனு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு… அதான்… என்னைய எவ்ளோ பயமுறுத்தி இருக்கான் ப்ளடி ****” என மெல்லிய குரலிலேயே உதியனுக்கு மறுமொழி அளித்தாள் தூரிகை. 

           தூரிகையின் கோவத்தைக்கண்டு கப்சிப் என வாயை மூடிக் கொண்டான் உதியன். 

           தீரன் மெதுவாக அந்த ஐவரை நெருங்கி, அதில் தன்னை கொல்ல வந்தவனின் கட்டை மெதுவாக தளர்த்தினான். அவன் அச்சத்தில் மிரண்டு விளிக்க, அவனது அச்ச விழிகளை பார்த்தவாறு அவன் எதிரே நாற்காலியில் அமர்ந்தான் தீரன். 

           தீரன் செய்யப்போவதை, விழி எடுக்காமல் மற்றவர் அனைவரும் உற்றுநோக்க, “மகி, நீயே கேளு… ” என அமைதியாக மகியை அழைத்தான் தீரன். 

           “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி… ” என்ற உதியனின் நக்கல் குரல் காதில் விழுந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தீரனின் அருகே விரைந்தாள் மகி. 

          தீரனின் அருகே வந்தவள், தீரனை கொல்ல வந்தவனின் எதிரே முழந்தாழிட்டு அமர்ந்து, “உன் பேரு என்ன? ” என மெல்லிய குரலில் கேட்டாள் மகி. 

           அவன் தொடர்ந்து அமைதியாக இருக்கவும், “உன் பேரு என்ன? ” என மீண்டும் கேட்டாள் மகி. 

          ” கா….காத்தவராயன்…..”  என தயங்கி தயங்கி கூறினான் அவன். 

           “நல்லது… நான் நேரா விசயத்துக்கு வாரேன்… யாரு அவன்? ” மகி. 

           “யா… யாரு? ” காத்தவராயன். 

           ” நீதான தீரன கொல்ல வந்தது? ” மகி. 

           “ஆமா…. ” காத்தவராயன். 

           “எதுக்கு கொல்ல வந்த? ” மகி. 

           “அது…… ” காத்தவராயன் .

           “சொல்லுடா நாயே…. ” என அதிரடியாக அவனது கன்னத்தில் பளார் என அறைந்தாள் மகி. 

           மகி அறைந்த அறையில் காத்தவராயன் கீழே விழுந்து உதடு கிழிந்து இரத்தம் வந்தது. அதைப்பார்த்த மனோ, “யப்பா…. என்னா அடி…. தீரா …. உடம்ப தேத்திக்கடா…..” என தீரனின் அருகே வந்து அவனது தோளை தட்டியவாறு மெல்லிய குரலில் கூற, “ஆல்ரெடி அடிலாம் வாங்கி உடம்ப இரும்பாக்கி வச்சு இருக்கேன்டா என் டொமேட்டோ….. ” என மனதினுள் நினைத்தவாறு வெளியே சிரித்து வைத்தான் தீரன். 

           ” அது… தீரன பழிவாங்க….நாங்க அஞ்சு பேரும் அண்ணந்தம்பிங்க…. ஒரு வயித்துல பொறக்கலனாலும் அண்ணந்தம்பியா பழகிட்டோம்…. மணல திருட்டிட்டோம் னு இவன் அன்னைக்கி எங்க ஆளுங்க நாலு பேர அடிச்சு ஊர் முன்னாடி நிறுத்தி அவமானப்படுத்திட்டான். அதான் அவன பழிவாங்க அன்னக்கி கொல்ல வந்தோம்…. ” காத்தவராயன். 

          “சரி…. அதுக்காக அவன பழிவாங்க நினைச்சது ஓகே…. என்னைய ஏன்டா கொல்ல வந்தீங்க? ” என்றவாறு திரும்ப ஒரு அறை அறைந்தாள் மகி. 

             ஏற்கனவே மனோரஞ்சனிடமும் தீரனிடமும் அடி வாங்கி இப்பொழுது மீண்டும் மகியிடம் அடி வாங்க…. மயங்கி சரிந்தான் காத்தவராயன். 

             “தப்பு பண்றத தட்டிக்கேட்டா கொல்ல வருவியாடா பொறம்போக்கு? ” என கோபம் தாளாமல் மயங்கி விழுந்து இருந்த காத்தவராயனை தன் காலால் மிதித்து எடுத்தாள் மகி. 

           ஆக்ரோஷமாக தன்னிலை மறந்து கோபத்தை வெளிப்படுத்தும் மகியை உதியன் ஒருபுறமும் மனோ ஒருபுறமும் பிடித்து இழுக்க…. அவர்களை பொருட்படுத்தாமல் காத்தவராயனை திரும்ப திரும்ப மிதித்தாள் மகி. 

           மகி தன் ஆள் ஒருவனை அடிப்பதை பார்த்து பொறுக்காமல் மகியை கொல்ல வந்தவன், “ச்சீ….பொட்டச்சிறுக்கி….. எல்லாம் உன்னால தான்டி…. உன்னால தான்…. அன்னக்கி பொடிப் பயலுகள வச்சு கல்லால அடிச்சு எங்க கூட்டாளிகள அவமானப்படுத்துனல…. அதுக்காகத்தான்டி உன்னைய துடிக்க துடிக்க கொல்ல நினைச்சோம்…. ****சிறுக்கி…. ” என தீரன் அடித்ததில் உடைந்திருந்த தன் பல்லை துப்பியபடி கத்தினான். 

             “என்னடா சொன்ன? ” என தீரன் கோபத்துடன் நாற்காலியை தள்ளி விட்டு எழுந்து அவனை அடிக்க வர….அவன் வருவதற்குள்  அக்கயவனை அடித்து அவன் முடியை கொத்தாக பிடித்து மேலே தூக்கி இருந்தான் உதியன். 

            முடியைப்பற்றி தூக்கிய கையோடு  ஊர் எல்லையில் நிற்கும் அய்யனாரின் ஆக்ரோஷத்துடன் உதியன் அக்கயவனை  சுவற்றில் தூக்கி அடிக்க…. மண்டை உடைந்து அவனும் மயங்கி விழுந்தான். 

             அதுவரை தீரன் மற்றும் மனோரஞ்சனின் கோபத்தையும் அடியையும் பார்த்து கதி கலங்கி போய் இருந்த மணல் திருடிய மூவரும் உதியனின் கோபத்தைக் கண்டு குளிர் காய்ச்சல் வந்தது போல் நடுங்க ஆரம்பித்தனர். 

           அன்று வரை உதியனை விளையாட்டுத்தனமாக பார்த்திருந்து ,அன்று உக்கிரமூர்த்தியென காணப்படும் உதியனைப் பார்த்து உடல் வெடவெடத்து பயத்தில் அடுத்து மயங்கி விழ தயாரானாள் தூரிகை. அதை சரியாக உணர்ந்த உதியன், கீழே விழப்போன அவளை தன் கரத்தில் ஏந்தியபடி, “மயங்கி விழுந்து தொலைச்சுறாதடி….” என தூரிகையின் தோள்களை இறுக்கப் பற்றினான். 

             உதியனின் அழுத்தமான பிடியில் தன் உணர்வுக்கு வந்து சரியாக எழுந்து நின்றாள் தூரிகை. உதியன் அவளை காதலுடன் நோக்க….அதைப்பார்த்த தூரி, விழி விரித்து உதியை நோக்க…..இருவருக்கும் இடையில் வந்து உதியை மகியின் புறம் திருப்பினான் மனோரஞ்சன். 

            அங்கு மகி, அக்கயவன் கூறிய வார்த்தைகளில் ஏற்பட்ட அடங்காத கோபத்தை அடக்க முடியாமல், உடல் இரும்பாக இறுகி ….கை விரல்களை இறுக்க மடக்கி, உதடு கடித்து கண்கள் சிவந்து முகம் சிவக்க படிப்படியாக காளியாக உருமாறிக் கொண்டிருந்தாள். 

         மகியின் முகத்தைப் பார்த்து பயந்து சற்று விலகி சுவற்றோடு ஒட்டி நின்றாள் தூரிகை. மனோவும் அடிநெஞ்சில் கிலி பிறக்க மகியை நெருங்காமல் விலகியே நின்றான். தன் தோழியை பார்த்த உதி, திரும்பி தீரனைப் பார்க்க, அவன் “நான் பாத்துக்கிறேன்….” என கண்களால் உதியனுக்கு கூறிவிட்டு மெதுவாக மகியை நெருங்கினான் தீரன். 

            உதியனும் மனோரஞ்சனும் மீதம் இருந்த மூவரை நெருங்க, தூரிகை தனியே விடப்பட்டாள். 

             மகியை நெருங்கிய தீரன், கடித்து மடித்து வைத்து இருந்த தன்னவளின் இதழ்களை தன் கரங்களை கொண்டு மெதுவாக விடுவித்தான். அதில் விழித்தெழுந்த மகி, தீரனை ஒரு வெட்டும் பார்வை பார்க்க…அப்பார்வையில் ஒரு நொடி பயந்து பின் நகர்ந்தாலும் பாசத்துடன் காற்றில் பறந்த அவளது குழல்களை காதோரம் ஒதுக்க…..தீரனின் அவ்வருடலில் அதீதமான கோபம் அழுகையாய் மாற….”தீரா…” என்றபடி கோபத்தில் இறுக்க மடக்கி இருந்த கைவிரல்களால் தீரனை இறுக்க அணைத்து கண்ணீரால் கரைய ஆரம்பித்தாள் மகி. 

                       “ஒன்னுல்ல பாப்பா…..அழாத….” என்றவாறு மகியின் முதுகை தீரன் தட்டிக்கொடுக்க …காமமில்லா அப்பழுக்கில்லா அவ்வணைப்பின் சாரலில் மகியின் கோபத்தீ மெதுவாக அணைந்தது. 

           “அவங்க ரெண்டு பேரும் உங்கள அவமானப்படுத்துனதுக்காக கொல்ல வந்தீங்க சரி…. இதுல தூரிய ஏன்டா இழுத்தீங்க? இதுல ரெண்டு பொண்ணுங்கள தப்பா வீடியோ எடுத்து வச்சு ஏன்டா மிரட்டுனீங்க? ” என மீதம் இருக்கும் மூவரிடத்தில் உதியன் கேட்க… அவர்கள் மூவரும் பயத்தில் எச்சில் விழுங்கினர். 

           உதியனின் கேள்வியில் அவர்கள் புறம் திரும்பினர் தீரனும் மகியும். தீரனும் மகியும் தங்களைப் பார்ப்பதை கண்டு இன்னும் அதிகமாக பயந்தனர் அம்மூவரும். 

          “அந்த வீடியோ வச்சு மிரட்டுறது எங்க ஐடியா இல்ல…. நாங்க உங்க ரெண்டு பேரையும் கொல்ல தான் நினைச்சோம்…. ” என எச்சில் விழுங்கியபடி அம்மூவரில் ஒருவன் கூற…..”உங்கள அப்பிடி மிரட்ட சொன்னது யாரு? ” என தன் இடி போன்ற குரலில் கேட்டான் தீரன். 

           அதற்கு அம்மூவரும் மௌனத்தையே பதிலாக அளிக்க…, “இப்ப சொல்லப் போறீங்களா? இல்லையா? ” என அதட்டியபடி அவர்களை அடிக்க மகி நெருங்க… அதில் அவர்கள் மூவரும் நடுங்க… மகியைப் பிடித்து தன்னிடம் நிறுத்தினான் தீரன். 

            “அது….. அவன் யாருனு தெரியாது…. ” என மென்று முழுங்கிய குரலில் கூறினான் அம்மூவரில் ஒருவன். 

            “என்ன விளையாடுறீங்களா? ” என அவனை அடிக்க உதியன் செல்ல…. “நிஜமாலுமே அவன் யாருனு எங்களுக்குத் தெரியாது….” என்ற புதுக்குரல் அறையின் வெளிப்புறம் கேட்டது. 

            அக்குரலில் அனைவரும் அறையின் வாயிற்புறத்தை பார்க்க… அங்கு , தூரிகையின் கழுத்தில் கத்தியை வைத்தபடி நின்றிருந்தான் காடவன். 

                                  (காதல் தீ பரவும்….) 

                            -செல்லம்மாள்பாரதி 

           

    No comments yet.