தூரிகையை காணாமல் உதியன், தீரன் மற்றும் மகி ஆகிய மூவரும் எங்கு சென்று தேடுவது என தெரியாமல் குழம்பி தவிக்க….. தீரன் தனது போலீஸ் நண்பனை தொடர்பு கொண்டு உதவி கேட்க …மகி, தனக்கும் உதியனுக்கும் கல்லூரியில் விடுப்பு சொல்ல கல்லூரியின் உள்ளே சென்றாள்.
உதியனுக்கும் தனக்கும் விடுப்பு கூறி விட்டு வெளியே வருகையில் தன்னை யாரோ அழைப்பது போல் தோன்ற, திரும்பி பார்த்தாள் மகி. அவள் பின்னே சிரிய புன்னகையை அழகாக சிந்தியபடி மனோரஞ்சன் நின்றிருந்தான்.
அவனைப் பார்த்ததும் அன்று மாலில் நடைபெற்றது நினைவிற்கு வர, “ஹாய் ஸார்….. என்ன இந்த பக்கம்? ” என தயக்கமாக உரைத்தாள் மகி.
“ஒரு சின்ன வேலையா உங்க பிரின்ஸ்பல் ஸார பாக்க வந்தேன்… அப்பிடியே உங்களையும் பாத்துட்டு போலாம் னு நினைச்சேன்…. பாத்தா நீங்களே என் கண்ணுல பட்டுட்டீங்க…. ” என புன்னகை மாறாமல் பதிலளித்தான் மனோரஞ்சன்.
” அது….. அன்னக்கி மால்ல நடந்ததுக்கு ஸாரி ங்க ஸார்…. நீங்க பர்ஸ்ட் டைம் என்னைய பாக்க வந்தப்பவே நான் மிஸ்டர் தீரன பத்தி சொல்லி இருக்கனும்… பட் இட் வாஸ் ஜஸ்ட் ஆக்ஸிடன்ட் னு நினைச்சு விட்டுட்டேன்…. அது அன்னக்கி உங்க மனச காயப்படுத்தும் னு நினைக்கல…. ஸாரி ஸார்…. ” மகி.
“ஆக்ஸிடன்ட்டா? அப்போ உங்களுக்கு தீரன் ஸார் மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லையா? ” என ஆராய்ச்சியாக கேட்டான் மனோரஞ்சன்.
சிறிது தயங்கியபடி, “இல்லை… ” என்றாள் மகி.
“அப்புறம் அன்னக்கி மால்ல??? ” என மகியை உற்று நோக்கியபடி கேட்டான் மனோரஞ்சன்.
அவன் எதை குறித்து கேட்கிறான் என்பதை நன்கு உணர்ந்த மகி, “ஸார் ப்ளீஸ்…. நாம அத பத்தி இன்னொரு நாள் பேசலாம்…. இப்போ எனக்கு முக்கியமான வேலை இருக்கு…. வெளில எனக்காக தீரனும் உதியும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க…. ” என பதட்டமாக மொழிந்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.
மகியின் முகத்தில் தெரிந்த பதட்டத்தை கண்ட மனோரஞ்சன், “என்ன ஆச்சு? எனி ப்ராப்ளம்? நான் உதவி பண்ணலாமா.. ஒரு ப்ரண்ட்டா? ” என தயக்கமாக ஆனால் உறுதியாக கேட்டான்.
சிறிது நொடி தயங்கியவள் மடை திறந்த வெள்ளம் போல் தூரியைப் பற்றி அனைத்தையும் கூறி தற்போது அவளை காணவில்லை என்பது வரை கூறி முடித்தாள் மகி.
அனைத்தையும் கேட்டவன், “என்னங்க இவ்ளோ சீரியஸனா பிரச்சனை போய்ட்டு இருக்கு…. நீங்க இன்னும் ஸ்கூல் பசங்க மாதிரி லீவ் சொல்லிட்டு கிளம்பனும் னு சொல்லுறீங்க? உங்க காலேஜ் ல இன்பார்ம் பண்ணுங்க… போலீஸ் ல கம்ப்ளைண்ட் குடுங்க… நீங்க என்ன இவ்ளோ மெதுவா மூவ் பண்றீங்க? ” என்றான் மனோரஞ்சன்.
“வெளில நிக்கிற ரெண்டு தண்டஞ்சோறுங்க தான் லீவ் சொல்லிட்டு வர சொன்னுஞ்சுங்க…இது கொஞ்சம் பர்ஸ்னலான மேட்டர்… ஸோ காலேஜ் ல லாம் சொல்ல விரும்பல…. தீரனோட ப்ரண்ட் போலீஸ் தானாம்… பர்ஸனலா கம்ப்ளைண்ட் குடுத்து இருக்கோம்…. அவர் வந்ததும் நெக்ஸ்ட் மூவ் பண்ணனும்… ” மகி.
“சரி..வாங்க… நானும் கூட வர்றேன்… ” என்றவாறு மகியுடன் நடக்க ஆரம்பித்தான் மனோரஞ்சன்.
“தேங்க்யூ ஸார்…. ” என்றவாறு வெளியே நிற்கும் உதியனை நோக்கி நடந்தாள் மகி.
“இந்த ஸார் மோர் லாம் வேண்டாம்… கால் மீ மனோ ஆர் ரஞ்சன்… நாம தான் இப்ப ப்ரண்ட்ஸ் ஆகிட்டோமே… ” மனோரஞ்சன்.
“ஓகே மனோ… ” என பேசியபடி உதியனும் தீரனும் நின்றிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.
மகிக்கும் பிரச்சினை உள்ளது என உதியனிடம் கூறி கொண்டிருந்த தீரன், மகியுடன் மனோரஞ்சனும் வருவதை கண்டு தான் பேசுவதை நிறுத்தி விட்டு அவர்களை பார்த்தவாறே உதியனுக்கு அவர்களை பார்க்குமாறு கண்களை காட்டினான் .
“இவர் எப்பிடி இவ கூட வர்றாரு? ” என தீரனிடம் உதியன் முனுமுனுக்க… “அதை உன் தோஸ்த்து க்கிட்டயே கேளு… ” என அவர்கள் இருவரையும் வெறித்தபடி கூறினான் தீரன்.
உதியனையும் தீரனையும் நெருங்கி வந்த மகி, “மனோவும் நமக்கு ஹெல்ப் பண்றேன் னு சொல்லுறாரு…. உங்க போலீஸ் ப்ரண்ட் வந்தாச்சா தீரன்? ” என்றாள் .
” இவர எங்க பாத்த? ” உதியன்
“இவர் எப்ப உனக்கு மனோ ஆனாரு? ” தீரன்.
“இப்ப என்னைய பத்துன டீட்டைல்ஸ் முக்கியமா? இல்ல… காணாம போன பொண்ணு முக்கியமா? ” என எரிச்சலுடன் வினவினான் மனோரஞ்சன்.
” அவ ஒன்னும் காணாம போகல… ஒருத்தன் கிட்ட வேணும்னே சிக்கிக்க போய் இருக்கா…. அவள தடுக்கனும்… ” என மனோரஞ்சனுக்கு மேலாக எரிச்சலுடன் கூறினான் தீரன்.
“மகிழ்… அந்த பொண்ணு ஃபோன் நம்பர் குடு… ” மனோரஞ்சன்.
“நோ யூஸ் மனோ…. சுவிட்ச் ஆப்… ” என்றபடி தூரியின் நம்பரை அளிக்க தனது ஃபோனை எடுத்தாள் மகி.
அப்பொழுது சரியாக தூரிகையிடம் இருந்து குறுஞ்செய்தி வர…. அதை ஆச்சரியமாக பார்த்தவள், உடனே அதை மற்ற அனைவரிடமும் காட்டினாள் மகி.
“அப்புறம் இன்னும் ஏன் வெயிட் பண்றீங்க? கிளம்புங்க போலாம்… ” என தன் காரை எடுத்து வந்தான் மனோரஞ்சன்.
மகிழ்விழியும் மனோரஞ்சனும் காரில் புறப்பட… அவர்களை முறைத்தபடியே தனது பைக்கில் உதியனை ஏற்றியபடி தூரி குறிப்பிட்டு இருந்த காபி ஷாப்பிற்கு புறப்பட்டான் தீரன்.
குரு அன்றி தூரிக்கு குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டியவன் யாரென பார்க்க நால்வரும் விரைவாக தூரி குறிப்பிட்டு இருந்த *** காபி ஷாபிற்கு வந்து சேர்ந்தனர். உள்ளே நுழைந்த நால்வரில் மகி முதலில் தூரியை பார்க்க…. விரைவாக நால்வரும் காபி ஷாபில் உள்ள மற்றவரின் கவனத்தை கவராமல் தூரியிடம் பேசிக்கொண்டிருந்தவனை வளைத்தனர்.
தூரியை மிரட்டிக்கொண்டிருந்த காடவனை பார்த்ததும் உதியன், தீரன் மற்றும் மகி மூவரும், “அட நீயா? ” என ஆச்சரியப்பட…. தூரிகை மட்டும் அவன் யாரென தெரியாமல் குழம்பினாள்.
தீரன், உதியன் மற்றும் மகியை கண்டு சிறிதும் பதறாமல் அலட்சியம் கலந்த திமிருடன் மகியிடம் தனது ஃபோனில் உள்ள ஒரு வீடியோவை காட்ட… அதைப்பார்த்த உதியன், தீரன் மற்றும் மனோரஞ்சன் ஆகிய மூவரும் பதட்டத்துடன் மகிழ்விழியை பார்க்க… தூரிகை அழுதே விட்டாள்.
ஆனால் அந்த வீடியோவை பார்த்து விட்டு, “ப்ச் என்னடா? வீடியோ குவாலிட்டியாவே இல்ல? ஓவர் ஷேக் ஆகி இருக்கு…” என உதட்டை பிதுக்கினாள் மகி.
அக்கேள்வியை காதில் வாங்கிய காடவனை தவிர மற்ற மூவரின் முகத்திலும் ,”ஹப்பாடா… ” என்ற நிம்மதி தெரிந்தது. ஆனால் காடவனின் முகத்தில், “இவ பொண்ணு தானா? ” என்ற கேள்வி வெளிப்படையாக தெரிந்து அவனது முகம் விளக்கெண்ணை குடித்தது போல் ஆனது.
ஏனெனில் அவ்வீடியோ மகி குளிக்கும் வீடியோ. அதைக்கண்டும் சற்றும் அசராமல் கேள்வி நக்கலாக கேள்வி கேட்ட மகியை மனோரஞ்சன், பிரமிப்பாக பார்த்தான் என்றால், தீரனும் உதியனும் பெருமையாக பார்க்க… தூரிகை ஓடி வந்து மகியை அணைத்துக்கொண்டாள்.
தூரியை சற்று விலக்கி விட்டு, “என்ன இத பாத்ததும் ஓஓஓ னு அழுவேன் னு நினைச்சியா? ” என காடவனை நோக்கி இகழ்வாக இதழை வளைத்துவிட்டு, “இவன இங்க இருந்து பேக் பண்ணுங்க… ” என உதியனை நோக்கி கூறி விட்டு தூரியை தோளோடு அணைத்துக்கொண்டு அந்த காபி ஷாப்பை விட்டு வெளியே வந்தாள் மகிழ்விழி.
உதியனும் தீரனும் காடவனை மற்றவரின் கவனத்தை ஈர்க்காமல் வெளியே தள்ளிக்கொண்டு வர…அவர்கள் பின்னே செல்லாமல் அந்த காபி ஷாபின் சிசிடிவி புட்டேஜில் இருந்து அதுவரை நடந்த அத்தனையையும் அழித்துவிட்டு வெளியே வந்தான் மனோரஞ்சன்.
மனோரஞ்சன் வருவதற்குள் காடவனை காரில் தள்ளி அவனது வாய் மற்றும் கை கால்களை கட்டிப்போட்டிருந்தனர் தீரனும் உதியனும். தாமதமாக வந்த மனோரஞ்சனை கண்டு, “இவ்ளோ நேரம் உள்ள என்ன பண்ணீங்க ஸார்? ” என பதட்டமாக வினவினான் உதியன்.
“நாம இவன தூக்குன தடயம் இருக்க கூடாது ல…. அதான் சிசிடிவி ய க்ளியர் பண்ணிட்டு வந்தேன்…. ” என காரில் ஏறி அமர்ந்தான் மனோரஞ்சன்.
தீரனும் தனது பைக்கை உதியனை எடுத்துக்கொண்டு காரின் பின்னே வருமாறு பணித்துவிட்டு காரில் ஏறி அமர்ந்தான்.
“சிசிடிவிய க்ளியர் பண்ணிட்டு வந்தாரா? எவ்ளோ பெரிய வேலைய எப்பிடி இவரால ஈஸியா செய்ய முடிஞ்சது? ஒரு ஹோட்டல் சிசிடிவி புட்டேஜ அழிக்கிறதுங்கிறது சும்மாவா? எப்பிடி? ” என தன் மண்டையை போட்டு உருட்டுக்கொண்டே தீரன் கூறியது போல் பைக்கில் மனோரஞ்சனின் காரை பின்தொடர்ந்தான் உதியன்.
காடவன் தான் இத்தனை வேலைகளையும் செய்து இருக்கிறான் என தவறாக புரிந்து கொண்ட தீரனும் மகியும் காடவனை அடித்து அவனது இருப்பிடத்தை தெரிந்து கொண்டு காரை காடவனின் இருப்பிடத்தை நோக்கி செலுத்தினான் மனோரஞ்சன்.
செல்லும் வழியில் தான் காடவனை சந்தித்து பேசிய அனைத்தையும் தூரி கூற…அதில் காடவனுக்கு மேல் இன்னொருவன் இருப்பது தெரிய….மனோ, தீரன் மற்றும் மகி ஆகிய மூவரும் ஆச்சரியமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
தீரன் அடித்த அடியில் காடவன் மயங்கி கிடக்க… அவனை அருவெறுப்புடன் பார்த்தவாறே, “யாருக்கா இவன்? நான் இவன பாத்து இருக்கேனா? ” என்றாள் தூரிகை.
“இவன ஞாபகம் இல்லையா தூரி? ஊருல இவன் கூட சேத்து நாலு பேர கல்லால அடிச்சோமே…. ” மகி.
“அந்த ஆத்து மணல திருடுனாங்க னு பஞ்சாயத்து நடந்துச்சே…அதுல ஒருத்தனா இவன் ?” என ஆச்சரியமாக வினவினாள் தூரிகை.
“ம்ம்… ஆமா…. ஆனா அந்த தம்பி நாலுபேருல ஒருத்தனா? இல்ல… வேற ஒருத்தனா னு தெரியலயே…. ” என சிந்தனைவயப்பட்டாள் மகி.
“அதெல்லாம் போற இடத்துல தெரிஞ்சுரும்… அமைதியா இரு… ” தீரன்.
“மகிழ்….நீ நிஜமாலும் செம போல்ட்…. உன்னைய நினைச்சா ரொம்ப ஆச்சரியமா இருக்கு…..இப்பிடி ஒரு பொண்ணா னு…..எப்பிடி மகிழ்? ” மனோரஞ்சன்.
“ஏன் அழுது வடியனுமா என்ன? ஈனத்தனமான செயல செய்ய அவன் வெக்கப்படல… எந்த தப்பும் செய்யாத நான் ஏன் பயப்படனும்? இவன….. அந்த தம்பி யாருனு தெரியட்டும்….அப்புறம் இந்த மகி யாருனு அவனுங்களுக்கு தெரியும்…” என ரௌத்திரத்துடன் முகத்தை வெளியே திருப்பிக்கொண்டாள் மகிழ்விழி.
தன்னவளின் உள்ளக்கொதிப்பை கண்டு காடவனுடன் பின்னே இருந்த தீரன், ஆதரவாக மகியின் தோளை அழுத்த…அதே நேரத்தில் காரை ஓட்டிக்கொண்டிருந்த மனோரஞ்சன், தீரனை போன்று தன் அருகே முன் இருக்கையில் அமர்ந்து இருந்த மகியின் கரத்தை பற்றி லேசாக அழுத்தினான்.
இருவரையும் உணர்ந்த மகி, மனோரஞ்சன் புறம் திரும்பி லேசாக இதழ் வளைத்து… தனது மற்றொரு கரத்தால் தன் தோளில் பதிந்து இருந்த தீரனின் கரத்தை தட்டிக்கொடுத்தாள்.
மனோரஞ்சன் தன்னவளின் கரத்தை பற்றி இருப்பதை பார்த்த தீரன், “அவ கைய விட்டுட்டு ரோட்ட பாத்து ஒழுங்கா ஓட்டுறீங்களா கொஞ்சம்? ” என பல்லை கடித்தபடி கூறினான்.
தீரனுக்கு மறுமொழி எதுவும் கூறாமல் விரைவாக காடவனின் இருப்பிடத்தை அடைந்தான் மனோரஞ்சன். ஊரின் ஒதுக்குபுறத்தில் இருந்த அவ் ஒற்றை வீட்டிற்குள் செல்ல சுற்றும் முற்றும் பார்த்தபடி மெதுவாக தூரியை தவிர மற்ற மூவரும் காரில் இருந்து இறங்கினர். அவர்கள் பின்னாலயே உதியனும் வந்து சேர்ந்தான்.
காடவன் இன்னும் மயக்கத்திலேயே இருக்க….அவனை உள்ளே வைத்து காரை பூட்டி விட்டு ஐவரும் அவ்வீட்டை வெளியே சுற்றி வந்தனர். உள்ளே ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பது தெரிய வர… இப்பொழுது என்ன செய்வது என யோசித்தனர் தீரன் குழுவினர்.
“இப்பிடி யோசிச்சுட்டே இருந்தா என்ன ஆகுறது? மகிழும் மிஸ் தூரிகையும் வெளியே நிக்கட்டும் நாம மூணு பேரும் உள்ள போகலாம்….” மனோரஞ்சன்.
“இல்ல… நானும் உள்ள வருவேன்… ” மகி.
“அக்கா உள்ள வந்தா நானும் வருவேன்… ” தூரிகை.
“மகிழ்… சொல்லுற கேளு… “மனோரஞ்சன்.
“நீ எப்பிடி என் மகிய வர வேண்டாம்னு சொல்லலாம்? அவ வருவா …நீ வா மகி…. ” தீரன்.
“நீ சொன்னா நான் கேக்கனுமா ?நான் வரல… மனோ சொன்ன மாதிரி நான் வெளியவே இருக்கேன்… ” மகி.
“அப்ப நானும் வெளிய நிக்கிறேன்… ” தூரிகை.
“இவ ஒருத்தி நேரங்காலம் தெரியாம ஜால்ரா போட்டுக்கிட்டு…. ” என தூரியை முறைத்துவிட்டு, “இங்க என்ன போட்டா போட்டியா நடக்குது? இப்ப நாம உள்ள போகல… அவனுகளே கொஞ்ச நேரத்துல வெளிய வந்துருவானுக… ” என மற்ற மூவரையும் பார்த்து திட்டினான் உதியன்.
“சரி நீ உள்ள வா மகிழ்…உன்னைய நான் பாத்துக்கிறேன்….” என மகியின் கரத்தைப் பற்றினான் மனோரஞ்சன்.
“அவ கைய விடுடா மொதல்ல…” என மனோரஞ்சனிற்கு முன்னே வந்து நின்றான் தீரன்.
“என் ப்ரண்ட் கைய நான் புடிப்பேன்…. உனக்கு என்ன? ” மனோரஞ்சன்.
மல்லுக்கு நின்ற இருவரையும் பார்த்த உதி, “ஐயோ…. இந்த சக்காளத்தனுக சண்டை தாங்க முடியலயே…. ” என தலையில் கை வைத்தான்.
“என்னது? சக்காளத்தனுங்களா? அப்பிடினா என்ன? ” என தன் அரிய பெரிய சந்தேகத்தை இக்கட்டான அந்நிலையில் வினவினாள் தூரிகை.
“பொண்ணுங்கனா சக்காளத்தி….பசங்கனா சக்காளத்தன்… தட்ஸ் ஆல்… ” என தன் விளக்க உரையை தூரிகைக்கு கூறினான் உதியன்.
இருவர் பேசுவதையும் கேட்ட மகி, உதியனுக்கு ஓங்கி ஒரு உதை விட்டாள். மகியிடம் உதை வாங்கிய உதியன், “ராட்சசி… என்னைய ஏன்டி உதைச்ச? என வலியில் கத்தினான்.
“இங்க எதுக்கு வந்து இருக்கோம் ங்கிற நினைப்பே இல்லாம ஆளாளுக்கு சண்டை போட்டுட்டு இருக்கீங்க? யாரும் வர வேண்டாம்…. நானே உள்ள போறேன்… போங்கடா வாழைப்பழங்களா… ” என மனோரஞ்சனிடம் இருந்து தன் கையை உருவியபடி முன் நோக்கி நடந்தாள் மகி.
“எதேய்… வாழைப்பழமா? நாங்களா? ” என பல்லை கடித்தபடி மகியின் பின்னே சென்றான் தீரன். அவன் பின்னே மனோரஞ்சன் செல்ல…..தூரிகையின் கரத்தை பற்றியபடி அவர்களின் பின்னே சென்றான் உதியன்.
கதவு உள்புறம் பூட்டி இருப்பதை கண்டு மகி யோசனையுடன் தேங்கி நிற்க….அவளை விலக்கிவிட்டு தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சாவியை எடுத்து சர்வ சாதாரணமாக கதவை திறந்தான் மனோரஞ்சன்.
அதை மற்ற நால்வரும் வியப்பாக பார்க்க… தீரன் மட்டும் சந்தேகத்துடன் பார்த்தான். எவ்வித சலனமும் இல்லாமல் கதவை திறந்த மனோரஞ்சன், மகியின் கரம் பற்றி, “வா மகிழ் உள்ள போகலாம்… ” என தன் சொந்த வீட்டிற்குள் நுழைவது போல் மகியுடன் நுழைந்தான்.
அதை தன் கூரிய கண்களால் பார்த்த தீரன், சட்டென மகியின் மற்றொரு கரத்தை பற்றி அவளை நிறுத்தினான்.
மனோரஞ்சன் தீரனை கேள்வியாக பார்க்க… ,”நீ யாருனு இப்பத்தான்டா எனக்குத் தெரியுது …துரோகி…” என விழிகளில் உஷ்ணத்துடன் மனோரஞ்சனைப் பார்த்து கூறினான் தீரன் .
(காதல் தீ பரவும்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.