காதல் தீ -44

Chellammal Bharathi | 29 Dec 2025 | Share

            நகர சூழ்நிலையின் பரபரப்பான சாலையில் சீரான வேகத்தில் செல்லும் ஆட்டோவில் இதயம் கலங்கி இருந்தாலும் ஏதோ ஒரு குருட்டு தைரியத்துடன் பயணித்துக்கொண்டிருந்தாள் தூரிகை. 

          கடந்த பத்து நிமிடங்களில் நூறாவது முறையாக தனக்கு இறுதியாக வந்து குறுஞ்செய்தியை எடுத்து வாசித்துப் பார்த்தாள் . 

           மகியையும் உதியனையும் வகுப்பிற்கு அனுப்பி விட்டு தன் வகுப்பிற்குள் நுழைந்த தூரிகையின் அலைபேசி குறுஞ்செய்தி வந்ததற்கான அடையாளமாய் செல்லமாய் சிணுங்கியது . ஒருவித நடுக்கத்துடனே தனது அலைபேசியை எடுத்து பார்த்தவள், அதில் வந்திருந்த செய்தியை கண்டவள் நிற்கும் உறுதி இல்லாமல் உடம்பில் உள்ள சக்தி அனைத்தும் வடிந்தது போல தொப்பென்று அமர்ந்தாள் தூரிகை. 

            “என்ன பதிலே காணோம்? உன் கூட இருக்குறவங்களோட நிம்மதியும் என் கிட்ட உள்ள வீடியோல தான் இருக்கு…. சந்தேகமா இருந்தா இன்னும் அரை மணி நேரத்துல ***காபி ஷாப் க்கு வந்தா ஒரு சின்ன முன்னோட்டம் காமிக்கிறேன்…..தனியா….நீ மட்டும்… ” என்ற செய்தி அவனிடம் இருந்து வந்திருந்தது.

              சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தவள் தன் உள்ள படபடப்பை ஒருவாறு சமாளித்து ,” என்ன தான் சொல்லுறான் னு பாத்துறலாமே…. ” என்ற தைரிய முடிவுடன் வகுப்பை விட்டு வெளியே வந்தாள் தூரிகை. 

            தொலைவில் மகியும் உதியனும் ஏதோ பேசிக்கொண்டிருப்பது தெரிய….அவர்களுக்கு தெரியாமல் கல்லூரியை விட்டு வெளியே வந்து எதிரே வந்த ஆட்டோவை நிறுத்தி *** காபி ஷாப்பை நோக்கி பயணிக்கத் தொடங்கினாள் தூரிகை. 

             ஆட்டோவில் பயணித்துக் கொண்டே மீண்டும் அந்த குறுஞ்செய்தியை எடுத்து பார்த்தவள், ஒரு பெருமூச்சுடன் தனது அலைபேசியை செயல் இழக்க வைத்தாள் தூரிகை. 

             சிறிது நேரத்தில் *** காபி ஷாப்பின் முன்னே நின்ற ஆட்டோவில் இருந்து  வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் இறங்கி அந்த காபி ஷாப்பிற்குள் நுழைந்தாள் தூரிகை. பொது மக்கள் அதிமாக அந்த கடையில் இருப்பதை சுற்றும் முற்றும் பார்த்து தனது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு நிம்மதியாக மூச்சு விட்டபடி அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழிகளில் குருவை தேடியபடி அருகில் உள்ள மேசையின்  அருகே போடப்பட்டிருந்த இருக்கையை இழுத்து அதில் அமர்ந்தாள் தூரிகை. 

             கண்களில் குருவை தேடியபடி அமர்ந்து இருந்த தூரிகையின் முன்னே முரட்டு உருவம் உள்ள ஒருவன் நிதானமாக வந்து அமர்ந்தான். குருவின் வரவை எதிர்பார்த்து இருந்தவளின் முன்னே யாரோ ஒருவன் அமரவும் அது வரை இழுத்து பிடித்து இருந்து தைரியம் காற்றில் பறக்க… மிரண்டு விழித்தாள் தூரிகை. 

            “என்ன குரு வருவான் னு பாத்துட்டு இருக்கியா? ” என தன் முரட்டு குரலில் கேலியாக வினவினான் அந்த முரடன். 

             “நீங்க யாரு? நீங்க தப்பான டேபுள்ள வந்து உக்காந்து இருக்கீங்க…. ” என நடுங்கிய குரலில் கூறினாள் தூரிகை. 

             “நான் சரியா தான் வந்து இருக்கேன்… ஹா ஹா ஹா….இங்க பாரு… ” என உரக்க சிரித்தபடி தனது அலைபேசியில் இருந்து தூரிகைக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை அவள் முன்னே காட்டினான் அம்முரடன். 

            “அப்போ மெஸேஜ் அனுப்பி என்னைய மிரட்டுனது குரு இல்லையா ?நீ தானா? யார் நீ? உன்னைய நான் பாத்ததே இல்லையே… எதுக்கு என்னைய இப்படி மிரட்டுற? ” என படபடப்புடன் பயத்தில் வியர்த்து வழிந்த வியர்வையை துடைத்தபடி தட்டுத்தடுமாறி வினவினாள் தூரிகை. 

             “என்னைய நீ பாத்தது இல்லையா? ஹா ஹா ஹா….நல்லா ஞாபகப்படுத்தி பாரு… என்னைய நீ பாத்து இருக்க… ” முரடன். 

            அவன் கூறியதை கேட்ட தூரிகை, அம்முரடனை நன்கு ஊன்றி கவனித்துப் பார்த்தாள். அப்பொழுதும் அவளால் அவனை இனம் காண முடியாமல் குழம்பி தவித்தாள். 

            “ப்ளீஸ்……எதுக்காக இப்பிடி பண்ற? உன்னைய எனக்கு யாருன்னே தெரியல….என்னைய எதுக்கு இப்பிடி டார்ச்சர் பண்ற? உனக்கு என்ன தான் வேணும்? ” தூரிகை. 

          “ஹா…ஹா… ஹா… என்னைய தெரியலயா? சரி அத விடு… எனக்கு என்ன வேணும் ங்கிறத நான் ஆரம்பத்துலயே சொல்லிட்டேன்…. ஒரு நைட் என் கூட இருக்கனும்… அவ்ளோதான்… ” முரடன். 

            “ச்சீ… இப்பிடி கேக்க உனக்கு வெக்கமா இல்ல? அசிங்கம் புடிச்சவனே… ” தூரிகை. 

            “வெக்கப்பட்டா  சுகத்த அனுபவிக்க முடியுமா? ஏற்கனவே ஒருத்தன் முன்னாடி இன்னொருத்தன் கூட இருந்தவ தான நீ? வெக்கத்த பத்தி நீ பேசுறது தான் சிரிப்பா வருது…. ” முரடன். 

           அதைக்கேட்ட தூரிகைக்கு அந்த நேரத்தில் தான் அனுபவித்த வலி ,வேதனை, அவமானம், துரோகம் என அனைத்தும் நினைவில் வந்து பலமாக முகத்தில் அறைய…. சிலிர்த்து எழுந்தாள். 

           “அது உன்னைய மாதிரி மூணு மிருகம் என்னைய தாக்குனது…..அத உன் கிட்ட விளக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை….இப்ப கடைசியா என்ன தான் சொல்ல வர்ற? “தூரிகை. 

           “பார்ரா… இத்தனை வருஷத்துல நல்லா பேச கத்துக்கிட்ட….இந்த காடவன் கிட்ட சிக்குனதுக்கு அப்புறம் எந்த பச்சக்கிளியும் பறந்ததா சரித்திரமே இல்லை… ” என ஆணவமாக சிரித்தான் காடவன் எனும் அம்முரடன். 

            அதைக்கேட்ட தூரிகைக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தாலும் அதை வெளிக்காட்டாமல், “உன் மிரட்டலுக்கு அடிபணியுற ஆள் நான் கிடையாது… உன்னால முடிஞ்சத பாத்துக்கடா…. ” என தைரியமாக உரைத்தாள். 

            “சரி… அப்ப உன் வீடியோவ நெட் ல விட்டுறலாம் னு சொல்லுற? ” காடவன். 

           “ஹேய்… என்னடா? ஓவரா துள்ளுற? வீடியோ தான? போட்டா போட்டுக்க…. அதுனால வர்ற பிரச்சனைய எப்பிடி பேஸ் பண்ணனும் னு எனக்குத் தெரியும்…. இதே போல எத்தனை நாளைக்கு உங்கள மாதிரி ஈனப்பிறவிலாம் என்னைய மாதிரி அப்பாவி பொண்ணுங்கள மிரட்ட முடியும்? திருப்பி நாங்க உங்கள எதிர்க்க ஆரம்பிச்சோம்… தாங்க மாட்டீங்க…இந்த கேவலமான ப்ளான் ல நீ மட்டும் தான் இருக்கியா? இல்ல இன்னும் எத்தனை பேரு இருக்கீங்க? எத்தனை பேர் இருந்தாலும் என்னைய உங்க மிரட்டலுக்கு அடிபணிய வைக்க முடியாதுடா பேடி பயலுகளா…. ” என நிமிர்ந்து அமர்ந்தாள் தூரிகை. 

            “ஏய் என்னடி ஓவரா பேசுற? ஓங்கி ஒரு அறை விட்டேன்… இந்த இடத்துலயே சுருண்டு விழுந்துருவ…. பொட்டச்சிறுக்கி…. ஒழுங்கா நான் சொல்லுறதுக்கு ஒத்துக்கோ…. இல்ல… பின்விளைவு ரொம்ப மோசமா இருக்கும்…. “காடவன். 

           “என்னது?? அறைவியா?? அறைஞ்சு தான் பாரேன்….. பொண்ணுங்க நாங்க உங்கள விட உடல் வலிமையில கம்மியானவங்க தான்… ஆனா நாங்க வலிமையா மாறுனோம்…. உலகம் தாங்காது…. பொறுமையா இருக்குற வரைக்கும் தான் நாங்க பொண்ணுங்க…. பொங்கி எழுந்தோம் உங்க ரத்தத்த ஒரு சொட்டு விடாம உறிஞ்சி குடிச்சுருவோம்…. ஜாக்கிரதை…. எதுக்கும் ஒரு அடி தள்ளியே இரு…. இப்ப நான் இருக்குற வெறிக்கு உன் உடம்புல ஒரு துளி கூட ரத்தம் மிச்சம் இருக்காது…. அதான் முதல்லயே சொல்லிட்டேனே… உன் மிரட்டல் லாம் என் கிட்ட பலிக்காது…. போய் வேற வேலை இருந்தா பாரு…. ” என இருக்கையை விட்டு எழுந்தாள் தூரிகை. 

             “அப்பிடியா? உன் வீடியோவ பாத்துட்டு பயப்படாம இந்த பேச்சு பேசுற….. அப்பிடியே இதையும் பாரு…. இத பாத்துட்டும் இதே போல திமிரா பேசுவியானு பாப்போம்….. ” என நக்கலாக கூறியபடி தனது அலைபேசியில் ஒரு வீடியோவை ஓட விட்டு தூரிகையின் முன்னே திருப்பினான் காடவன். 

           அதைக்கேட்டு அலட்சியமாக காடவனின் அலைபேசியில் பார்வையை பதியவிட்டவள் அதில் ஒளிர்ந்ததை கண்டதும் அதிர்ந்து பயத்தில் விழி விரித்தபடி மீண்டும் இருக்கையில் அமர்ந்தாள் தூரிகை. 

           “இது…. இது….. ” என பயத்தில் தூரிகையின் நாக்கு உலர்ந்து மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. 

             தூரிகையின் பயத்தை கண்டு ரசித்தவன், “இந்தா…. தண்ணிய குடிச்சுட்டு பொறுமையா நிதானமா பாரு…. ” என மேசையின் மீது உள்ள தண்ணீர் குவளையை அவள் புறம் தள்ளினான் காடவன். 

           தூரிகைக்கு தண்ணீர் அவசியம் தேவைப்பட்டதால் மறுக்காமல் எடுத்து கடகடவென அருந்திவிட்டு பயத்தில் முகம் வெளிறி அந்த வீடியோவையும் காடவனின் முகத்தையும் மாறி மாறி பார்த்தபடி அவனுக்கு தெரியாமல் மேசையின் கீழே தன் அலைபேசியை மறைத்தபடி மகிக்கு செய்தி அனுப்பத்தொடங்கினாள் தூரிகை. 

           “Sis.. I’m in trouble.. ***coffee shop.. Come fast… ” என காடவனுக்கு தெரியாமல் குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு மகி வருவதற்காக பேச்சை வளர்த்து நேரத்தை கடத்த எண்ணி, “இத எடுத்தது யாரு? ” என நடுக்கத்துடன் வினவினாள் தூரிகை. 

           அதைக்கேட்ட காடவன் திமிராக ,இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி தூரிகைக்கு பதில் சொல்ல முயன்ற நொடி அவனது மற்றொரு அலைபேசி சத்தமிட்டது. அதை எடுத்துக் காதில் வைத்தவன் மிகவும் பவ்யமாக, “இப்பதான் தம்பி பேசிட்டு இருக்கேன்…..அதெல்லாம் ஒத்துவருவா தம்பி…. “

        “……..” 

         “இல்ல தம்பி.. .இனித்தான் அத பத்தி சொல்லனும்… “

           “……” 

           “சரிங்க தம்பி… “

           “…….”

            “அதெல்லாம் நீங்க நினைச்சது கண்டிப்பா நடக்கும் தம்பி…. “

             “…….”

              “கொஞ்சம் வீராப்பா பேசுனா….இப்பத்தான் நம்ம முத ஆயுதத்த எடுத்து காமிச்சு இருக்கேன்…..திகைச்சு போய் இருக்கா….ஹா ஹா ஹா ஹா….”

             “…….”

             “கண்டிப்பா தம்பி…. அடுத்து அதான்…. “

             “…….”

              “சரிங்க தம்பி….” என மிகவும் பணிவுடன் பேசி விட்டு தூரிகையை இகழ்வாக பார்த்தான் காடவன். 

            காடவன் அலைபேசியில் யாருடனோ பேசுவதை விழி அகலாமல் தீவிர சிந்தனையுடன் கவனித்தபடி இருந்தாள் தூரிகை. அவன் தன்னை பார்த்து இகழ்வாக புன்னகைக்கவும் தனது பயத்தை ஆழ புதைக்கொண்டு ,”சரி… இத வச்சு என்ன பண்ண போற? இதையும் நெட்ல போட போறியா? நல்லா போடு…. இத பாத்ததும் என்னைய விட்டுரு னு உன் கிட்ட கெஞ்சுவேன்னு நினைச்சியா? ” என பயத்தை மறைத்தபடி தைரியமாக இருப்பது போல் திறம்பட நடித்தாள் தூரிகை. 

            “அப்பிடியா? அப்ப அடுத்தத பாரு… “என சிரித்தான் காடவன். 

            “இன்னும் என்னென்ன வச்சு இருக்கானோ இந்த இழவெடுத்தவன்… அய்யோ அக்கா… சீக்கிரம் வாங்களேன்… “என மனதினுள் வேண்டியபடி கைகள் நடுங்க அடுத்த வீடியோவை பார்த்த அடுத்த நொடி, “ஐயோ… அக்கா….. ” என தன்னையும் மீறி கூவினாள் தூரிகை. 

            “டேய்…. என் அக்கா டா…. அவள என்னடா பண்ணி வச்சு இருக்கீங்க? நீங்களாம் நல்லாவே இருக்க மாட்டீங்க…. “என ஆக்ரோஷமாக கத்தியதில் சுற்றி உள்ள சிலர் தூரியை கவனிக்க ….அதைப் பார்த்த காடவன், “என்னடி ஷோ காட்டுறியா? ஒழுங்கா அடங்கி உக்காரு….இல்ல….”என பல்லை கடித்தான். 

           “ஐயோ…. அக்கா…..”என மனதினுள் அரற்றியப்படி கையில் வைத்திருந்த அவனது ஃபோனை தரையில் தூக்கி போட்டு உடைத்தாள் தூரிகை. 

           அதைக்கண்டு சற்றும் அசராமல், “நல்லா உடைச்சுக்கோ…. மெயின் வீடியோ  இருக்க வேண்டிய இடத்துல பத்ரமா இருக்கு…. ” என அசுரனாக நகைத்தான் காடவன். 

           “ஐயோ…. இவன் சிரிக்கிறதே பயமா இருக்கே….” என புலம்பியபடி காடவனை பார்க்க…. அவனின் பின்னே பரபரப்புடன் மகி உள்ளே வந்து கொண்டிருப்பதை கவனித்தாள் தூரிகை. 

           “சீக்கிரம் வா க்கா….”என மனதினுள் நினைத்த அடுத்த நொடி காடவனின் அருகே அவனை நெருக்கியபடி வந்து அமர்ந்தான் உதியன். அதே நொடி காடவனின் மற்றொரு பக்கத்தில் அவனை நெருக்கியபடி அமர்ந்தான் தீரன். அதே நேரத்தில் காடவனின் பின்னே மகி வந்து நின்றாள். 

            அவர்களை பார்த்து சிறிதும் பயப்படாமல் சாதரணமாக அமர்ந்து இருந்தான் காடவன். 

            காடவனை பார்த்த தீரன், “யாருனு பாத்தா… கடைசியில நீதானா? ” என நிதானமாக புன்னகைத்தான். 

          “யாருண்ணே இது? அட…. இவன் அவன் ல? ” என நக்கலாக புன்னகைத்தான் உதியன். 

          “அப்பிடி எவன்டா அது? ” என காடவனின் பின்புறம் இருந்த மகி முன்புறம் வந்து அவன் முகத்தை பார்த்தாள். 

            “அடடே…. நீயா? என்ன? வாங்குனது பத்தலயோ? ” என நக்கலாக கேட்டபடி காடவனின் தோளில் இடித்தாள் மகி. 

             அவர்கள் பேசுவதை பார்த்த தூரி, “அக்காக்கே இவன தெரிஞ்சு இருக்கு…யார் இவன்? ” என தீவிர யோசனையில் ஆழ்ந்தாள் .

             “ஏன்டா…. வசமா எங்க கிட்ட மாட்டுனதுக்கு அப்புறமும் எப்பிடி இப்பிடி தைரியமா இருக்க? ” உதியன். 

              “எல்லாம் இந்த தைரியத்துல தான்… “என தூரியிடம் காட்டிய வீடியோவை தனது மற்றொரு அலைபேசியில் திமிராக அனைவருக்கும் பொதுவாக காட்டினான். 

              அதைப்பார்த்த உதியன், தீரன் மற்றும் மகியின் அருகில் நின்றிருந்த மனோரஞ்சன் என அனைவரும் திகைத்து மகியை பார்த்தனர். அவர்களின் திகைத்த பார்வையை கண்டு திமிராக ஆணவத்துடன் நகைத்தான் காடவன். 

              ஆனால், அந்த வீடியோவை கண்ட அடுத்த நொடி மகி கேட்ட ஒற்றைக்கேள்வியில் மற்றவர்களின் முகம் நிம்மதியை அள்ளி எடுத்து கூடவே இதழோரம் லேசாக வளைந்தது . அந்த கேள்வியில் காடவனின் முகம் பேயறைந்தது போல் இருண்டது. அவனின் மனம், “இவ பொண்ணுதானா ?” என்ற கேள்வி பெரிதாக வளர்ந்து நின்றது. 

               அப்பிடி என்ன கேள்வி கேட்டு இருப்பா மகி? 🤔

                                   (காதல் தீ பரவும்…)

                          -செல்லம்மாள்பாரதி 

           

            

             

         

    No comments yet.