காலை நேர பரபரப்புக்கு இணையாக தீரனும் உதியனும் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டனர். தீரன் காட்டிய வீடியோவை கண்டு அதிர்ந்த மகி, “இதெல்லாம் எப்ப நடந்துச்சு? எனக்கு தெரியாம நீங்க ரெண்டு என்ன தான் மறைக்கிறீங்க? ” என ஆக்ரோஷமாக தீரனின் சட்டையை பிடித்து வினவினாள்.
“கொஞ்சம் அமைதியா இரு அம்மு…சொல்லுறோம்…..” உதியன்.
“நீ பேசாத….எந்த பிரச்சனையா இருந்தாலும் இதுதான் பிரச்சனை னு உடைச்சு சொன்னா உங்க தலையில உள்ள மகுடம் கீழ இறங்கிருமா மிஸ்டர் உதியன்? ” மகி.
“அப்பிடிலாம் ஒன்னும் இல்ல மகி… நீயும் தூரியும் நேத்து மால் ல விட்டு கிளம்புறப்ப நாங்க ரெண்டு பேரும் வேலை இருக்கு னு சொன்னோம் ல… ” என ஆரம்பித்து நேற்று இரவு தாங்கள் செய்ததை கூற ஆரம்பித்தான் தீரன்.
தூரியும் மகியும் ஆட்டோவில் வீட்டிற்கு புறப்படுவதை பார்த்துவிட்டு இருவரும் தங்கள் பைக்கில் ஏறி எதிர் திசையில் பறந்தனர்.
“இந்த குரு பயல சும்மா விடக்கூடாது ண்ணே….எவ்வளவு தைரியம் இருந்தா நம்ம முன்னாடியே தூரியே பாப்பான்? ” என பைக்கில் பயணித்துக்கொண்டே தீரனிடம் தன் ஆத்திரத்தை கொட்டினான் உதியன்.
“விடுடா… இப்ப அதுக்குத்தான போய்ட்டு இருக்கோம்…..” என ஏற்கனவே உதியன் கண்டு பிடித்து இருந்த குரு தங்கி இருந்த இடத்திற்கு முன்னே பைக்கை நிறுத்தினான் தீரன்.
பைக்கை விட்டு இருவரும் வேக வேகமாக இறங்கி ஆத்திரத்துடன் குரு தங்கி இருந்த வீட்டின் கதவை தட்டினர். சிறிது நேரத்தில் உள்ளே இருந்த குரு வந்து அறைக் கதவை திறந்த அடுத்த நொடி உதியன் விட்ட உதையில் உள்ளே பறந்து சென்று விழுந்தான்.
“அய்யோ… அம்மா…” எனக் கத்தியபடி வலி தாங்காமல் தரையில் இருந்து மெதுவாக எழுந்தான் குரு.
“எவ்ளோ தைரியம் டா உனக்கு பேடி பயலே… ” என கத்தியவாறு அருகில் இருந்த பூ ஜாடியை எடுத்து குருவின் மண்டையை உடைத்தான் உதியன்.
உதியனின் செயல் எதிலும் கலந்து கொள்ளாமல் கதவை பூட்டி தாழ் போட்டு விட்டு ஒவ்வொரு இடமாக ஆராயத்தொடங்கினான் தீரன்.
“நான் என்ன டா பண்ணேன்? ” என தலையில் இருந்து வழிந்த குருதியை துடைத்தபடி தடுமாறி எழுந்தான் குரு.
“நீ என்ன பண்ணியா? “என மீண்டும் அவன் மண்டையில் ஓங்கி அடித்தான் உதியன்.
உதியனின் அடி தாங்காமல் மீண்டும் எழ முடியாமல் கீழே விழுந்தான் குரு.
“வலிக்குதா? இப்ப வலிக்குதா? ” என்றபடி மீண்டும் குருவின் வயிற்றில் எட்டி உதைத்தான் உதியன்.
“நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க? நீ எதுக்கு என்னைய அடிக்கிறனு எனக்கு சத்தியமா தெரியலடா உதியா… சொல்லிட்டு அடிடா….” என குருதியை சிந்தியபடி திக்கி திணறி கூறினான் குரு.
“எதுக்கு னு தெரியலயா? ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி ஊருல நீயும் உன் கூட்டாளியும் கலியமூர்த்தி பொண்ண என்னடா பண்ணீங்க? ” என்றவாறு குருவின் தாடையில் ஒரு குத்து விட்டான் உதியன்.
இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற ரீதியில் குருவின் உடைமைகளை எடுத்து அதில் எதையோ தேடிக்கொண்டிருந்தான் தீரன்.
” டேய்….அதுக்குத்தான் ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடியே தீரன் பய என் உயிர் நாடில கைய வச்சுட்டானே… இப்ப எதுக்கு திரும்ப என்னைய தொல்லை பண்றீங்க? ” என கடைவாயில் ஒழுகிய குருதியுடன் பேசினான் குரு.
“ஓஓ… உனக்கு விஷயம் தெரிஞ்சு போச்சா? நீ பண்ணுன கீழ்த்தரமான வேலைக்கு அத விட பெருசா ஏதாவது செஞ்சு இருக்கனும்… உன் கூட்டாளிய அடிச்சு காட்டுக்குள்ள தூக்கி போட்டது மாதிரி பெருசா பண்ணி இருக்கனும்டா… ” உதியன்.
“என்னையும் அவன போல காட்டுக்குள்ள தூக்கி வீசி இருக்கலாம் டா…. அத விட பெரிய தண்டனையா ல தீரன் எனக்கு குடுத்து இருக்கான்….. பஞ்சாயத்துல எனக்கு குடும்ப கட்டுப்பாடு பண்றதா தான் சொல்லி இருக்கான்… ஆனா, எனக்கு ஹெச் ஐ வி ஊசியும் எனக்கு போட்டு விட்டு இருக்கான் டா…. சாகுறத விட இது கொடுமை டா உதியா…. பேசாம என்னைய அடிச்சு இப்பவே கொன்னுரு உதியா…. ப்ளீஸ்… நான் பண்ணுன குத்ததுக்கு இது எனக்கு தேவை தான்…. போதும் போதும் ங்கிற அளவுக்கு அனுபவிச்சுட்டேன் உதியா…. ” என கண்ணீர் சிந்தினான் குரு.
“அட பாவி அண்ணா…. இது வேற பண்ணி இருக்கியா? “என மனதினுள் நினைத்தவாறு தீரனை ஒரு முறை திரும்பி பார்த்தான் உதியன். கருமமே கண்ணாக தீரன் எதையோ தேடிக்கொண்டிருப்பதை கண்ட உதியன், “இந்த மனுஷன் எத தான் முழுசா சொல்லி இருக்காரு… ” என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு குருவிடம் திரும்பினான்.
“அப்புறம் என்ன புண்ணாக்கு க்குடா தூரிய பாலோ பண்ணிட்டு இருக்க? அன்னைக்கி நான் வந்து பேசனப்பவும் திமிரா பேசுன? “உதியன்.
“அன்னைக்கி ஏதோ கோபத்துல உன் கிட்ட பேசிட்டேன்… மத்தபடி அந்த பொண்ண பாலோ பண்ணுனது அவ கிட்ட மன்னிப்பு கேக்க தான்… ” குரு.
“இத எவனாவது காதுல பூ வச்சு இருப்பான்…. அவன் கிட்ட போய் சொல்லு…..” என மீண்டும் அவனை அடிக்க ஏதுவாக ஏதாவது கிடைக்குமா என தேடினான் உதியன்.
“அய்யோ…..நம்ம குலசாமி மேல சத்தியமா நான் சொல்லுறது தான் உண்மை… நான் அந்த பொண்ணுக்கு பண்ணுனது பெரிய இழுக்கு…..எல்லாம் காலம் கடந்து தான் என் புத்தியில உறைச்சு இருக்கு…எப்பிடியும் நான் சாக போறேன்…..எனக்கு இந்த தண்டனை அவசியம் தான்….நான் சாகுறதுக்கு முன்னாடி அந்த புள்ள காலுல விழுந்து மன்னிப்பு கேக்கலாம் னு தான் வந்தேன்…ஆனா அந்த புள்ள கூட எப்போதும் டவுன்க்கார புள்ளையும் சுத்திட்டு திரியுறதுனால தயங்கி தயங்கி திரியுறேன் உதியா….இதான் உண்மை…..நீங்க நினைக்கிற மாதிரி நான் பழிவாங்கலாம் நினைக்கல …அத்தோட இந்த ஊருல உள்ள ஆஸ்பத்திரி ல தான் நான் வைத்தியத்துக்கு போய்ட்டு இருக்கேன்…என்னைய நம்பு டா…..நம்ம குலசாமி மேல சத்தியம் டா…” என குரு கதறுவதை நம்ப முடியாமல் எதற்கும் இருக்கட்டும் என வீடியோ எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான் உதியன்.
“நீ சொல்லுறதெல்லாம் நம்பலாமா? ” என அப்பொழுதும் தன் சந்தேகம் தீராமலும் இனி எந்த பிரச்சனையும் இல்லை என்ற நிம்மதியை உறுதி செய்து கொள்ள மீண்டும் வினவினான் உதியன்.
“அவன விடு உதி…..அவன் சொல்லுறது உண்மை தான்… ” என்றபடி குருவின் மெடிக்கல் ரிப்போட் அடங்கிய பைலை உதியனிடம் நீட்டினான் தீரன்.
அதை வாங்கி புரட்டி பார்த்த உதியன், குரு கூறுவது உண்மை என புரிந்து, “ஹப்பாடா…. ” என நிம்மதியாக மூச்சு விட்டான். ஆனால் அடுத்ததாக தீரன் குருவிடம் கேட்ட கேள்வியில் உதியனின் அந்த நிம்மதி பெருமூச்சு பாதியிலேயே அந்தரத்தில் நின்றது.
“சரி… நீ மன்னிப்பு கேக்க தான் வந்த… நான் நம்புறேன்… ஆனா என்னோட கேள்விக்கு சரியா பதில சொல்லிரு… இல்ல… நான் என்ன பண்ணுவேன் னு உனக்கே தெரியும்… ” என நிதானமாக குருவிடம் கூறினான் தீரன்.
“அய்யோ… தீரா… நீ கேளு நான் சொல்லுறேன்… ” என்ற குருவை தூக்கி நாற்காலியில் அமர வைத்து அவனின் கைகளை முதுகு புறமாக வளைத்து நின்றான் உதியன்.
அவனின் முன்னே வேட்டையாடும் சிங்கத்தின் சீற்றத்துடன் நடைபயின்றபடி, “அந்த வீடியோவ என்ன பண்ணுன? ” என்றான் தீரன்.
“நான் அத டெலிட் பண்ணிட்டேன் தீரா…. “குரு.
“கடைசியா பஞ்சாயத்து நடக்குற நாளுக்கு மொத நாளு என் கிட்ட பேசுனது நீயா? ” தீரன்.
“நான் எப்பிடி உன் கிட்ட பேசி இருக்க முடியும்? நான் தான் ஊரு முன்னாடி கட்டி கிடந்தேனே… ” குரு.
அதைக்கேட்ட தீரன் யோசனையுடன் தன் தாடையை தடவியவாறு, “அப்போ…. அது நீ இல்லை…. ??” என குருவிடம் கேட்டு விட்டு, “ச்சே… எவ்ளோ முட்டாளா இருந்து இருக்கேன்… ” என தன் பின் மண்டையில் அடித்துக்கொண்டு தனக்குள்ளே பேசிக்கொண்டான் தீரன்.
தீரன் பேசுவது ஒன்றும் புரியாமல், “உங்க கிட்ட யாரு என்ன பேசுனாங்க அண்ணே? ” எனக் கேட்டான் உதியன் .
உதியனின் அக்கேள்வியை கிடப்பில் போட்டு விட்டு, “இந்த வீடியோ விசயம் வேற யாருக்கு தெரியும்? ” என குருவிடம் கேட்டான் தீரன்.
“எங்க மூணு பேருக்கு மட்டும் தான் தெரியும்… அதுல ஒருத்தன கொன்னுட்டீங்க…..உயிரோட இருக்குறது நானும் கலியமூர்த்தியும் தான்…. அதுவும் என் ஃபோன் ல மட்டும் தான் இருந்துச்சு… நானே அத டெலிட் பண்ணிட்டேன்… அத நான் யாருக்கும் ஷேர் பண்ணல… ” குரு.
குரு பேசுவதை கேட்டு உதியன் தெளிவானான் என்றால், தீரன் மீள முடியாத குழப்பத்தில் ஆழ்ந்தான்.
பிறகு குருவை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு உதியனின் அறைக்கு வந்து சேர்ந்தனர்.
நடந்ததை தீரன் கூறி முடிக்க…. அதைக்கேட்ட மகி ஆணி அடித்தது போல் நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றாள்.
“இதான் மகி நடந்துச்சு… குருவ நான் வீடியோ எடுத்தத தான் அண்ணே உன் கிட்ட காட்டுனாங்க… குரு இப்ப ஹாஸ்பிட்டல்ல பெட் ல இருக்கான்…. நேத்து நைட் ஃபுல்லா குரு எங்க கண்ணு முன்னாடி தான் இருந்தான்… அவன் எப்பிடி உங்களுக்கு மெஸேஜ் அனுப்பி இருக்க முடியும்? ” உதியன்.
அனைத்தையும் கேட்டு அதீத குழப்பத்துடன் தலையில் கை வைத்தபடி யோசனையில் மூழ்கி இருந்தாள் மகிழ்விழி. நேற்று இரவு நடந்தவற்றை ஒருமுறை திரும்ப வரிசையாக நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள்.
“எங்க நான் மிஸ் பண்ணேன்? தூரிக்கு மெஸேஜ் அனுப்புனது குரு இல்லனா வேற யாரு? வேற யாருக்கு அவ மேல வன்மம் இருக்கு? ” என தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தாள் மகி.
“அம்மு… நீ போய் அவ க்ளாஸ் ல தெளிவா விசாரிச்சுட்டு வாயேன்… ” உதியன்.
“திரும்பவுமா? ” மகி.
“போய்ட்டு வா…. அடுத்து என்ன பண்ணனும் னு முடிவு பண்ணனும் ல… ” தீரன்.
” சரி… இருங்க வர்றேன்… ” என மீண்டும் தூரிகையின் வகுப்பை நோக்கி நடந்தபடி சற்று முன் தீரன் காட்டிய வீடியோவை தொடர்ந்து அவன் பேசியதையும் நினைத்துப் பார்த்தாள் மகிழ்விழி.
“அப்ப அன்னைக்கி தீரன் கிட்ட யாரோ எதையோ சொல்லி மிரட்டி இருக்காங்க….அதனால தான் என் கிட்ட அப்பிடி நடந்துக்கிட்டு இருக்கான்….என்னைய கண்ணீர் விட வைக்கிறதுல அந்த ஊருல யாருக்கு லாபம்? என்னைய கொல்ல வேற பாத்து இருக்கானுக….அய்யோ….மண்டை சூடாகுதே…..” என புலம்பியவாறு தூரியின் வகுப்பில் சென்று விசாரித்தாள் மகி.
தூரியின் வகுப்பு தோழர்கள் கூறியவற்றை கேட்டு திரும்ப வந்த மகியிடம், “என்ன சொன்னாங்க தூரி க்ளாஸ் ல? ” எனக் கேட்டான் உதியன்.
“நல்லா தான் க்ளாஸ் கவனிச்சுட்டு இருந்தாளாம்… திடீருனு எக்ஸ்க்யூஸ் கேட்டுட்டு வெளிய போய்ட்டாளாம்…. கன்பார்மா அந்த அட்ரெஸ் க்கு தான் போய் இருக்கா… காலையில கூட உன் வாழ்க்கை மட்டும் இல்ல… உன் கூட இருக்குறவங்க வாழ்க்கையும் அவன் கையில தான் இருக்கு னு மெஸேஜ் வந்து இருந்துச்சு… இப்ப அவ ஃபோன் சுவிட்ச் ஆப் னு வருது… ” மகி.
“என்னது கூட இருக்குறவங்க வாழ்க்கையுமா? ” உதியன்.
“ம்ம்… ஆமா… அப்பிடித்தான் வந்து இருந்துச்சு… பேசாம நாம போலீஸ் கிட்ட போயிறலாமா ?நாம இப்பிடி சும்மா நிக்கிற ஒவ்வொரு செகண்ட்டும் அங்க தூரிக்கு ஆபத்து அதிகமாகிட்டே இருக்கு… ப்ளீஸ்… ” மகி.
“அதான் அண்ணே… மகி சொல்லுறதும் கரக்ட் தான்… நாம போலீஸ் கிட்ட போயிறலாம்… ” உதியன்.
“என் ப்ரண்ட் போலீஸா தான் இருக்கான்…அவன் அன் அபீஸியலா ஹெல்ப் கேப்போம்… ” என கூறி விட்டு தன் ஃபோனில் இருந்து யாரிடமோ தள்ளி நின்று பேசினான் தீரன்.
தன் நண்பனிடம் பேசி முடித்து விட்டு, “பக்கத்துல தான் இருக்கானாம்… அஞ்சு நிமிஷத்துல வந்துர்றேன் னு சொல்லி இருக்கான்… நீங்க ரெண்டு பேரும் போய் காலேஜ் ல லீவ் சொல்லிட்டு வந்துருங்க…ஆளுக்கு ஒரு பக்கமா போய் தேடி பாக்கலாம்….” என்றான் தீரன்.
“நீ போய் ரெண்டு பேருக்கும் சேத்து லீவ் சொல்லிட்டு வா மகி… நான் இங்க அண்ணங்கூட இருக்கேன்… ” என மகியை மட்டும் கல்லூரியின் உள்ளே அனுப்பினான் உதியன்.
“ம்ம்… சரி… ” என்றவாறு வேகமாக கல்லூரியின் உள்ளே நுழைந்தாள் மகி.
மகி தங்களை விட்டு நன்றாக தள்ளி சென்றதும், “என் கிட்ட என்ன கேக்கனும் உதி? ” என வினவினான் தீரன்.
“அன்னக்கி உங்க கிட்ட யாரு என்ன பேசுனாங்க அண்ணே? “என மீண்டும் அக்கேள்வியை கேட்டான் உதியன்.
“ஆபத்து தூரிக்கு மட்டும் இல்ல உதி…. மகிக்கும் தான்… மகிக்கு தான் ஆபத்தே… அவளுக்கு வைச்ச எலிப்பொறி தான் நானும் தூரியும்… ” தீரன்.
“அண்ணே… புரியல…. ” உதியன்.
“மகி சம்பந்தப்பட்ட வீடியோ ஏதோ அவன் கிட்ட இருக்கு…. ” என மெல்லிய குரலில் எங்கோ வெறித்தபடி கூறினான் தீரன்.
“அப்போ…. மகிய…. அன்னைக்கி காப்பாத்தி இருக்கீங்க ?” என அதிர்ந்து நம்ப முடியாமல் சந்தேகத்தை உறுதி செய்ய கேட்டான் உதியன்.
உதியனின் கேள்விக்கு பதிலாக கசந்த புன்னகையை சிந்தினான் தீரன். மேலும் ஏதோ பேச வாய் திறந்த உதியை தடுத்து தொலைவில் மகி வருவதை கை காட்டினான் தீரன்.
அங்கு மகி மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள். கூடவே அவள் அருகில் மனோரஞ்சனும் வந்து கொண்டிருந்தான்.
(காதல் தீ பரவும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.