ஜனனி… ஜனனி… ஜகம் நீ… அகம் நீ…
ஜனனி… ஜனனி… ஜகம் நீ… அகம் நீ…
ஜகத் காரணி நீ …பரிபூரணி நீ…
ஜகத் காரணி நீ…பரிபூரணி நீ…
ஜகத் காரணி நீ …பரிபூரணி நீ…
ஜனனி… ஜனனி.. ஜகம் நீ… அகம் நீ..
ஜனனி… ஜனனி.. ஜனனி… ஜனனி…
சதுர் வேதங்களும்… பஞ்ச பூதங்களும்…
ஷன் மார்க்கங்களும்… சப்த தீர்த்தங்களும்…
ஷன் மார்க்கங்களும்.. சப்த தீர்த்தங்களும்…
அஷ்ட யோகங்களும்… நவ யாகங்களும்…
தொழும் பூங்கழலே… மலை மாமகளே…
தொழும் பூங்கழலே… மலை மாமகளே…
அலை மா மகள் நீ ….கலை மா மகள் நீ…
அலை மா மகள் நீ… கலை மா மகள் நீ….
அலை மா மகள் நீ… கலை மா மகள் நீ…
ஜனனி… ஜனனி… ஜகம் நீ… அகம் நீ…
ஜகத் காரணி நீ… பரிபூரணி நீ….
என்ற பாடல் அதிகாலையில் செவி வழியே நுழைந்து பாதி உறக்கத்தில் இருந்த மகிழ்விழியை விழிப்புற செய்ய …மெதுவாக அசைந்து படுக்கையில் இருந்து எழுந்து வந்தாள் மகி.
“என்ன ம்மா இன்னைக்கி நம்ம வீட்ல எதுவும் பஜனையா? ” என கண்ணை கசக்கியபடி மகி கேட்ட அடுத்த நொடி அவளது காலடியில் சமையலறையில் இருந்து தோசைக்கரண்டி பறந்து வந்து விழுந்தது.
அதில் துள்ளி விலகிய மகி, “தாயா நீ? பேய்… ” எனக் கத்தியபடி கண்களால் தூரியை தேடினாள்.
“பொம்பள புள்ளையா நீ? அங்க பாரு…. உன்னைய விட சின்ன பொண்ணு… காலையிலே எந்திரிச்சு குளிச்சு…. எவ்ளோ அழகா சாமி கும்பிடுது… நீயும் தான் இருக்கியே…. இன்னும் குளிக்காம கொள்ளாம…. ” என சமையல் அறையில் இருந்து பல்லவி கத்தினார்.
“அதனால இப்ப என்ன பல்லூஸ்…. எனக்கும் சேத்து என் தங்கச்சியே சாமி கும்பிடுவா. நீ அந்த கழனி தண்ணிய இந்த பக்கம் தள்ளு… ” என சட்டமாக சமையல் மேடையில் ஏறி அமர்ந்து பல்லவி நறுக்கி கொண்டிருந்த பீன்ஸை எடுத்து கடித்தாள் மகி.
“விளக்கமாறு பிஞ்சுரும்…. பல்லு விளக்காம குளிக்காம சமையக்கட்டு பக்கம் வராத னு எத்தனை தடவ சொல்லுறது? நான் போடுற காபி ய ஒரு சொட்டு வைக்காம சப்புக்கொட்டி குடிப்ப… அது உனக்கு கழனித்தண்ணியாடி? முதல்ல அந்த பீன்ஸ குடு… ” என மகி சாப்பிட்டு கொண்டிருந்த பீன்ஸை பிடுங்கி ஜன்னல் வழியே தூர வீசினார் பல்லவி.
“அடியேய் பல்லூஸ்…. நான் சாப்பிட்ட பீன்ஸ யா பறிச்சு தூக்கி வீசுற… இப்ப சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ… உனக்கு மாமியார் நான் தான்டி பல்லூ… உன் மனசு கஷ்ட்டப்பட கூடாது னு அந்த கழனித்தண்ணிய குடிச்சா ரொம்ப பேசுற…. இந்திரன்… மிஸ்டர் இந்திரன்… வேர் ஆர் யூ? ” என தன் தாயிடம் விரல் நீட்டி சவால் விட்டவள் அங்கிருந்து தன் தந்தையின் பக்கம் திரும்பினாள் மகி.
“எதேய்… ” என்றவாறு மகியின் முதுகில் கரண்டியால் ஓங்கி ஒரு அடி அடித்தார் பல்லவி.
“அய்யோ….. போடி பல்லூ…. ” என தன் தாய்க்கு பழிப்பு காட்டிவிட்டு அங்கிருந்து ஓடி தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் மகி. பின்னே அங்கிருந்து பல்லவியின் ருத்ரதாண்டவத்தை யார் பார்ப்பது?
இந்த கலவரம் எதற்கும் அசைந்து கொடுக்காமல் செய்தித்தாளே தன் உலகம் என அதில் ஆழ மூழ்கி இருந்தார் இந்திரன். அவரைப் பார்த்த பல்லவி, “ஒரு நாள் அந்த நியூஸ் பேப்பர புடிச்சு பத்த வச்சு விடுறேன்.. ” என தலையில் அடித்துக் கொண்டு தன் சமையல் வேலையை தொடர்ந்தார்.
மகி குளித்து விட்டு வரவும் தூரிகை தன் பூஜையை முடித்து விட்டு வரவும் சரியாக இருந்தது.
குளித்து விட்டு வந்த தன் முன்னே ஆரத்தி தட்டை நீட்டிய தூரிகையை அமைதியாக ஆழ நோக்கினாள் மகி.
“விபூதி எடுத்துக்க க்கா… ” என மகி முகத்திற்கு முன்னே நீட்டினாள் தூரிகை.
“வீட்ல சொல்லிறலாமா தூரி? ” என ஆரத்தியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டே மெதுவாக கேட்டாள் மகி.
“அவங்கள எதுக்கு க்கா பயமுறுத்தனும்? வேண்டாம்… ” என மிக மெதுவாக கூறி விட்டு ஆரத்தி தட்டை எடுத்து கொண்டு பல்லவியை நோக்கி நகர்ந்தாள் தூரிகை.
“இவள நம்பவே முடியலயே…. “என தனக்குள் பேசிக்கொண்டே அறைக்குள் நுழைந்து யோசனையுடன் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தாள் மகி.
சிறிது நேரத்தில் உள்ளே வந்த தூரிகை, “காலேஜ்க்கு கிளம்பலயா க்கா? ” என வினவினாள்.
“காலேஜ்க்கா? நேத்து வந்த மெஸேஜ்க்கு என்ன செய்ய போற? ” மகி.
“அதுக்கு பதில் நைட்டே அனுப்பிட்டேனே…. ” தூரிகை.
“என்ன தூரி சொல்லுற? என் கிட்ட சொல்லவே இல்ல நீ? ” மகி.
“இதோ…இதான் க்கா… “என்றபடி தனது ஃபோனை காட்டினாள் தூரிகை.
“உன்னால முடிஞ்சத பண்ணிக்கடா காந்தா மவனே…. ” என தூரிகை அவனுக்கு பதில் அனுப்பி இருந்தாள். அதைப்பார்த்த மகி, “என்ன தூரி இப்பிடி அனுப்பி இருக்க? “என்றாள்.
“நீதான க்கா நைட் அவ்ளோ பேசுன…. என்ன பண்ணனும் னு என்னைய தான கேட்ட… அதான் நான் பண்ணிட்டேன்…. அவ்ளோதான்…. நீ வா காலேஜ்க்கு கிளம்புவோம்… ” தூரிகை.
“அது சரி…. ஆனா இது சரி வருமா? “மகி.
“அதெல்லாம் சரி வரும்…. அவன பாத்து எனக்கு பயம் இல்லை…. காலேஜ்க்கு டைம் ஆச்சு… கிளம்பு… இல்ல… அம்மா கிட்ட இருந்து தோசை கரண்டி இல்லை… சப்பாத்திக்கட்டை தான் பறந்து வரும்… என்ன ஓகே யா? ” என சிரித்து கண்ணடித்தாள் தூரிகை.
“அடேங்கப்பா… ஒரு நைட்டுக்குள்ள இவ்ளோ மாற்றமா? ” என சிரித்தாள் மகி.
” வளர்ற புள்ளைய பாத்து கண்ணு வைக்காத க்கா… “தூரிகை.
“இருந்தாலும் இது அசுர வளர்ச்சி தூரி….” என வெளியே சிரித்தபடி உள்ளே யோசனையுடனே கல்லூரிக்கு கிளம்பினாள் மகி.
வழக்கம் போல் இருவரும் கல்லூரிக்கு செல்ல பேருந்தில் ஏறி புறப்பட்டனர். இருக்கையில் அமர்ந்ததும் மகி தனது ஹெட் செட்டில் பாட்டை ஒலிக்க விட்டு அதை கேட்டாலும் உள்ளே தூரியை பற்றி சிந்தித்து கொண்டே இருந்தாள். தனது யோசனையில் உழன்றபடி தூரிகையை திரும்பி பார்க்க… அவள் தன் ஃபோனை பார்த்து புருவத்தை சுழித்தபடி இருந்தாள்.
“என்ன ஆச்சு தூரி? ” மகி.
“திரும்ப அவன் கிட்ட இருந்து மெஸேஜ் வந்து இருக்கு க்கா…. ” எனக் கூறியவாறு ஃபோனை மகியிடம் காண்பித்தாள் தூரிகை.
“நல்லா யோசிச்சு பாத்துட்டு நல்ல முடிவா எடு….இந்த இடத்துல நான் உனக்காக காத்துட்டு இருப்பேன்….நீ வருவ… வந்து தான ஆகனும்….இந்த வீடியோ மட்டும் இல்ல….இன்னொன்னும் என் கிட்ட இருக்கு…ஹ ஹா….வந்து நேராவே அத பாத்துக்க…உன் வாழ்க்கை மட்டும் இல்ல… உனக்கு புடிச்சவங்களோட வாழ்க்கையும் என் கையில தான் இருக்கு…. நல்ல முடிவா எடுப்ப னு நம்புறேன்… ” என அவனிடம் இருந்து அட்ரெஸ் உடன் செய்தி வந்திருந்தது.
அதைப்பார்த்த மகி, “இதுக்கு என்ன பண்ண போற? ” என்றாள்.
“காலேஜ் ஸ்டாப் வந்துருச்சுக்கா… இத பத்தி நாம அப்புறம் பேசிக்கலாம்… இப்ப இத அந்த குரங்கு கிட்ட சொல்ல வேண்டாம்…. ” என்றவாறு இருக்கையை விட்டு எழுந்தாள் தூரிகை.
“ஏன் இத அவன் கிட்ட சொல்ல வேண்டாம் னு சொல்லுற? அவனுக்கு இதுல தெரிய கூடாதது னு என்ன இருக்கு? ” மகி.
” காலையிலயே அவங்க கிட்ட சொல்லி அவங்கள டென்ஷன் பண்ண வேண்டாம்… ” தூரிகை.
“என்ன விளையாடுறியா? இது என்ன சின்ன விசயமா? ” மகி.
“உங்கள எதித்து பேசுறேன் னு தப்பா நினைச்சுக்காதீங்க க்கா… நீங்க சொன்ன மாதிரி தான்… இது என்னோட பிரச்சனை… இத நான் தான் ஃபேஸ் பண்ணனும்…. தேவை இல்லாம மத்தவங்க கிட்ட சொல்லி ஸீன் க்ரியேட் பண்ண விரும்பல நான்… என்னைய பாத்துக்க எனக்கு தெரியும் க்கா… ” என உறுதியான குரலில் தூரிகை கூற… அதில் சற்று அதிர்ந்து போனாள் மகி.
“சரி… இப்போதைக்கு உதி கிட்ட நான் சொல்ல ல… ” என உள்ளே போன குரலில் கூறிவிட்டு பேருந்தை விட்டு இறங்கினாள் மகி. அவள் பின்னே இறங்கிய தூரிகையின் முகத்தில் இருந்து அவள் என்ன சிந்திக்கிறாள் என்பதை கண்டறிய முடியாமல் திணறினாள் மகி.
அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு, அவர்களுக்காக காத்திருந்த உதியன் ,”என்ன அம்மு தீவிர சிந்தனை ?” என மகியிடம் கேள்வி கேட்டு விட்டு தூரிகையின் முகத்தையும் ஆராய்ந்தான்.
“என்ன இங்க பார்வை? என் முகத்துல என்ன படமா ஓடுது? ” என நக்கலாக கேட்டாள் தூரிகை.
“இதென்ன உலக அதிசயமா இருக்கு? அம்மு கிட்ட கேள்வி கேட்டா இந்த புள்ளபூச்சி கிட்ட இருந்து பதில் வருது… ” உதியன்.
“யாரு ? நான் புள்ளபூச்சியா? நீதான் வங்குரங்கு… ” தூரிகை.
“நான் வங்குரங்கா? அடியேய் மகிழ்விழி…. உன் ப்ரண்ட இவ திட்டுறா… நீ அமைதியா வர்ற? இன்னைக்கி என்ன மௌன விரதமா? ” உதியன்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை உதி…. ஜஸ்ட் நத்திங்…. க்ளாஸ்க்கு டைம் ஆச்சு… வா… ” என்றபடி முன்னே நடந்தாள் மகி.
“சரி க்கா… நானும் க்ளாஸ்க்கு போறேன்… அப்புறம் பேசலாம்… ” என கண்களால் மகியிடம் சைகை காட்டியவாறு விடைபெற்றாள் தூரிகை.
தூரிகை வகுப்பிற்குள் நுழைவதை பார்த்தபடி மெதுவாக தனது வகுப்பை நோக்கி நடந்தாள் மகி. அவளின் அந்த வித்தியாசமான செய்கையை கண்டு வியந்த உதியன், “அம்மு…. ஏதாவது பிரச்சனையா? ” என வினவினான்.
அவனது கேள்விக்கு பதில் அளிக்காமல், “வா… அந்த பக்கம் போய் பேசலாம்… ” என தூரியின் வகுப்பை விட்டு தள்ளி உதியனை அழைத்துச் சென்றாள் மகி.
“ஏதாவது பெரிய விசயமா? நேத்து நைட் வேற ஃபோன் பண்ணி இருந்த? ” உதியன்.
“குரு, நைட் தூரிக்கு மெஸேஜ் பண்ணி இருந்தான்…. ” மகி.
“குருவா? ” என அதிர்ந்தான் உதியன்.
“ம்ம்… அவன் தான்… ” என்றவாறு நேற்று நடந்த நிகழ்வுகளை விரிவாக தன் நண்பனிடம் கூறினாள் மகி.
அதைக்கேட்ட உதியன், இடிந்து போய் அமர்ந்திருந்தான். அதைப்பார்த்த மகி, “என்ன டா? ஹேய்… ஒன்னும் இல்லை… தூரியே ரொம்ப தைரியமா இருக்கா… நீ ஏன் இப்பிடி பயப்படுற? ” என உதியனை உலுக்கினாள் .
“அண்ணே…. ஐயோ… அண்ண கிட்ட இத உடனே சொல்லனும்…. நீ… நீ ஓடிப்போய் தூரி க்ளாஸ் ல தான் இருக்காளா னு பாத்துட்டு வா…. இல்ல… நீ வேண்டாம்… நானே போய் பாக்குறேன்… “என அளவு கடந்த பதட்டத்தில் கை கால் நடுங்க… தீரனுக்கு ஃபோனில் அழைப்பு விடுத்தவாறு தூரியின் வகுப்பை சென்று பார்த்தான் உதியன்.
தூரிகை வகுப்பில் இருப்பதை உறுதி செய்து கொண்ட உதியன், பதட்டம் குறையாமல் மீண்டும் மகியிடம் வந்து, “இத ஏன்டி அப்பவே என் கிட்ட சொல்ல ல? அய்யோ…. அண்ணே… ஃபோன எடு…. ” என பதறினான் உதியன்.
“இப்ப எதுக்கு நீ இவ்ளோ பயப்படுற? “என உதியனின் பதட்டமான செயல்களுக்கு அர்த்தம் புரியாமல் குழப்பமாக வினவினாள் மகி.
“அது…. “என மகியிடம் கூற முயலுகையில் அந்த பக்கம் தீரன், உதியனின் அழைப்பை ஏற்று விட… “ஆ.. அண்ணே… இங்க எல்லாம் கை மீறி போயிருச்சு… இங்க எங்க காலேஜ்க்கு வர்றியா? உடனே… ” என்றான் உதியன்.
அந்த பக்கம் தீரன் கூறிய பதிலில், ஃபோனை அணைத்துவிட்டு மகியின் கை பிடித்து இழுத்தவாறு கல்லூரியின் வெளியே அழைத்துச் சென்றான் உதியன்.
“ஏன்டா? ஏன் இப்பிடி பயப்படுற? ” என வினவியவாறு உதியனுடன் நடந்தாள் மகி.
“ரெண்டு பேரும் என்ன காரியம் பண்ணிட்டு இருக்கீங்க? ” என உதியன் கோபப்பட்ட அந்த நேரத்தில் சரியாக அவர்கள் எதிரே பைக்கில் தீரன் வந்து இறங்கினான்.
அவனைப் பார்த்ததும் நக்கலாக, “இதோ வந்துட்டாரு உங்க அண்ண்ண்ணே…. உங்க பாசமிகு அண்ணே மேல இருந்த கோபம் எல்லாம் போயிருச்சு போல… ” என்றாள் மகி.
“மகி…. விசயம் புரியாம பேசாத….” உதியன்.
“அவள விடு உதி…என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ பதட்டமா இருக்க? ” தீரன்.
” அண்ணே…. “என்றவாறு மகி தன்னிடம் கூறியவற்றை தீரனிடம் கூறினான் உதியன்.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட தீரன், தன் அகல நெற்றியை அழுந்த தேய்த்தவாறு ,”போய் தூரிய கூட்டிட்டு வா மகி… ” என்றான்.
“எதுக்கு? அவ க்ளாஸ் கவனிச்சுட்டு இருக்கா… எனக்கு புரியல… அவளே ரொம்ப தைரியமா இருக்கா… நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி பயப்படுறீங்க? ” மகி.
“சொன்னத செய் டி… ” என உதியன் மகி மேல் கோபப்பட… “ரொம்ப தான்டா ரெண்டு பேரும் பண்றீங்க… ” என முனுமுனுத்தவாறு தூரியின் வகுப்பை நோக்கி நடந்தாள் மகி.
சிறிது நேரத்தில் தனியாக நடந்து வந்த மகி, “அவ க்ளாஸ் ல இல்ல… ரெஸ்ட் ரூம்ல..கேண்டீன்.. லைப்ரரி லயும் செக் பண்ணிட்டேன்… அவள காணோம்… எங்க போய் இருப்பா? ” என எவ்வித பதட்டமும் இன்றி சாதரணமாக கேட்டாள் மகி.
“இங்க என்ன நடந்துட்டு இருக்கு… நீ இவ்ளோ சாதாரணமா பேசிட்டு இருக்க? “என பதட்டத்திலும் கோபத்திலும் மகியின் மீது எரிந்து விழுந்தான் உதியன்.
“உதி… அமைதியா இரு…. அவ எங்கேயும் போய் இருக்க மாட்டா…. ” தீரன்.
“எப்பிடி ண்ணே ?அவ… ஒருவேளை… அய்யோ… ” என அதிக அளவு பதட்டத்தில் கண் கலங்கினான் உதியன்.
“இப்ப எதுக்கு நீ இவ்ளோ எமோஷனல் ஆகுற? இங்க என்ன தான் நடக்குது? ” மகி.
அதைக்கேட்ட தீரன், தனது ஃபோனில் உள்ள ஒரு வீடியோவை மகியின் முன்னே காட்டினான். அதைப்பார்த்த மகியின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
“இது….இது….எப்ப எடுத்தது? இது உண்மையா? “என நடுக்கத்துடன் வினவினாள் மகி.
“நேத்து நைட்… ” தீரன்.
“அப்ப…தூரிக்கு மெஸேஜ் அனுப்புனது யாரு?? ” என குழம்பினாள் மகி.
“அதான் எங்களுக்கும் தெரியல…இதுல இருந்து குரு இல்ல னு மட்டும் தெளிவா தெரியுது… ” என கைகளை பிசைந்தான் உதியன்.
“குரு இல்லனா வேற யாரு? நான் அவன் தான் ல நினைச்சு ரொம்ப கேர்லெஸ்ஸா இருந்தேன்… ” மகி.
“இல்ல….இந்த மிரட்டல் வேலைய பாத்தது வேற யாரோ…நம்மள பத்தி நல்லா தெரிஞ்ச வேற எவனோ ஒருத்தன்…” தீரன் .
“அப்ப….தூரி…. அய்யோ ராமா…”என தலையில் கை வைத்தபடி தொப்பென்று அமர்ந்தாள் மகி.
அதே நேரத்தில் தன் ஃபோனிற்கு வந்த அட்ரெஸை நோக்கி ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்தாள் தூரிகை.
(காதல் தீ பரவும்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.