“ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்…. ஒருவன்…. அய்யோ … இதுக்கு மேல டையலாக் வர மாட்டேன்ங்குதே…. யோவ் தெய்வமே… நீ என் கையில சிக்குன, நான் வைக்கிற தக்காளி சட்னி ஆகிருவ…. இப்பிடியா கோத்து விடுவ ? அய்யோ… இவனுக நம்மள சட்னி ஆக்கிருவானுக போலயே…. ” என மனதினுள் திணறிக்கொண்டு தீரனையும் மனோரஞ்சனையும் மாற்றி மாற்றி பார்த்தப்படி இருந்தாள் மகி.
நான் அவளுடைய கணவன் என தீரன் கூறியதற்கு மனோரஞ்சனிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. திரும்பி மகியை ஆழ்ந்து நோக்கினான் மனோரஞ்சன்.
“அய்யோ… இந்த வெள்ளப்பன்னி எதுக்கு இப்ப நம்மள உத்து பாக்குது? ” என மகி மனதினுள் பதைபதைத்தவாறு திரும்பி தீரனை பார்க்க, அவன் மகியை பார்த்து, “இப்ப பதில் சொல்லுடி வெண்ண… ” என கண்களால் சவால் விட்டு நக்கலாக புன்னகைத்தான்.
“இந்த பீலா மண்டையன் வேற நம்மள பாத்து நக்கலா சிரிக்கிறானே…. மகி… கமான் மகி… நீ எந்த தப்பும் பண்ணல… தைரியமா நிமிர்ந்து நில்லு… ” என தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மனோரஞ்சனின் குற்றம் சாட்டும் பார்வையை தைரியமாக எதிர்கொண்டாள் மகி.
“இப்ப என்ன தெரியனும் உங்களுக்கு? “மனோரஞ்சனின் பார்வையை நேருக்கு நேர் பார்த்தாள் மகிழ்விழி.
“இவர் சொல்லுறது உண்மையா மகிழ்? ” மனோரஞ்சன்.
“அத ஏன் என்கிட்ட கேக்குறீங்க மிஸ்டர் மனோரஞ்சன்? சொன்னது மிஸ்டர் தீரன் ஸார் தான? அவங்க கிட்டயே கேளுங்க… ” என மனோரஞ்சனையும் தீரனையும் சேர்த்து ஒரு பொதுவான பார்வை பார்த்தவாறு கூறினாள் மகி.
“ஆகா…. அம்மு ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டா… நாம இங்க இருந்தா நம்ம மானத்தையும் சேத்து காத்துல பறக்க விட்டுருவா…. அப்பிடியே நைசா நழுவிருவோம்… ” என நினைத்தவாறு தூரிகையை எழச் சொல்லி கண்ணால் சைகை செய்தபடி மற்ற மூவரின் கவனத்தையும் கவறாமல் எழுந்தான் உதியன்.
அவனை தொடர்ந்து தூரிகையும் எழ, அதை சரியாக பார்த்த மகி, “நீங்க ரெண்டு பேரும் எங்க கிளம்புறீங்க? ” என்றாள்.
“ஆங்…. அது…. அம்மு… நீங்க பேமிலியா பேசுறீங்க… நாங்க பேமிலி ஆகுறத பத்தி பேச வேண்டாமா? அதான் நாங்க அப்பிடி தனியா போய் பேசுறோம்… நீங்க எந்த தொல்லையும் இல்லாம பேசுங்க… ” என மகியின் பதிலை கூட எதிர்பார்க்காமல் தூரிகையை இழுத்துக்கொண்டு அங்கிருந்த ஒரு கடையினுள் நுழைந்தான் உதியன்.
“தப்பிச்சா ஓடுற…. அப்புறம் இருக்கு டா உனக்கு… ” என பற்களை கடித்தவாறு இருக்கையை விட்டு எழுந்தாள் மகி.
“நீ எங்க கிளம்புற மகிழ்? ” மனோரஞ்சன்.
“ஏன்? எங்க போனாலும் உங்க கிட்ட பர்மிஷன் வாங்கனுமா என்ன? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க? வீட்ல மாப்பிள்ளை பாத்தா எனக்கு அதுல விருப்பம் இருக்கா இல்லையா னு தெரிஞ்சுக்காம நீங்க பாட்டுக்கும் கண்டவங்க கிட்டலாம் நான் உங்க பியான்ஸி னு விளம்பரம் பண்ணிட்டு இருக்கீங்க? ” என உச்ச கட்ட கோபத்தில் வெடித்தாள் மகி.
“நான் உனக்கு கண்டவனா டி ? ” என கோபத்தில் மேசையின் மீது ஓங்கி ஒரு குத்து குத்தியவாறு எழுந்து நின்றான் தீரன்.
தீரனின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவனை அலட்ச்சியப்படுத்தியவாறு உதட்டை சுழித்தவாறு திரும்பி நின்றாள் மகி.
மகியின் கோபத்தை கண்ட மனோரஞ்சன், ” ஐ ஆம் ஸாரி மகிழ்… நான் உங்க மேல கொஞ்சம் அதிகமாவே உரிமை எடுத்துக்கிட்டேன்… உங்கள பத்தி யாரு என்ன சொன்னாலும் அத நான் நம்ப மாட்டேன்… ஜஸ்ட் க்ளாரிபை பண்ணிக்கத்தான் கேட்டேன்… ” என்றான்.
“நிறுத்துறீங்களா? க்ளாரிபை பண்ணிக்க நீங்க யாரு? நான் உங்க பியான்ஸி னு நீங்க நினைக்கிறதுக்கு முன்னாடி என் கிட்ட என்னோட விருப்பத்த கேக்கனும் னு ஒரு அடிப்படை அறிவு கூட இல்லை உங்களுக்கு? ” என அமைதியான குரலில் சிறுத்தையென சீறினாள் மகி.
“ஓஓ… ஸாரி… ஸாரி… மகிழ்… எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சு இருக்கு… உங்கள மிஸ் பண்ணிற கூடாது னு உறுதியா இருக்கேன்… அதான் இப்பிடி பேசிட்டேன்… மன்னிச்சுரு மகிழ் … ” என தாழ்மையான குரலில் கூறினான் மனோரஞ்சன்.
அவனின் அந்த தாழ்மையான குரலில் சற்று சீற்றம் தணிந்த மகி, “இட்ஸ் ஓகே… ” என்றாள்.
“ஓகே… ப்ரண்ட்ஸ்? ” என புன்னகையுடன் கை நீட்டினான் மனோரஞ்சன்.
“இவன் ப்ரண்ட்ஷிப் உனக்கு தேவை இல்லை மகி… ” என கோபத்தில் மகியை தன் பக்கம் இழுத்தான் தீரன்.
திடீரென தீரன் இழுக்கவும் அதை எதிர்பார்க்காத மகி, அவன் இழுத்த இழுப்பிற்கு அடிபணிந்து அவனருகில் வந்து நின்றாள் மகி.
மகியை தன் கை வளைவில் நிறுத்தி தன் தோளோடு தோள் நிறுத்தி ,” இவ என்னோட பொண்டாட்டி… இவ சம்பந்தப்பட்ட எல்லா முடிவும் நான் தான் எடுப்பேன்… இவளுக்கு உன்னோட ப்ரண்ட்ஷிப் தேவை இல்லை… ” என மனோரஞ்சனை பார்த்து சீறினான் தீரன்.
தீரன் கூறியதைக்கேட்டு திகைத்து நின்றான் மனோரஞ்சன் . தீரன் பேசியதை கேட்ட மகி, அவனின் கையை உதறி விட்டு தீரனை தீப்பார்வை பார்க்க அப்பார்வையை அசராமல் எதிர்கொண்டான் தீரன்.
“இன்னொரு தடவ இது மாதிரி பைத்தியக்காரத்தனமா பேசுனீங்க… அப்புறம் நீங்க வேற மகிய பாப்பீங்க… ஜாக்கிரதை… ” என தீரனின் எதிர் நின்று அவனை விரல் நீட்டி எச்சரித்தாள் மகி.
தீரனின் உயரத்திற்கு அவனின் நெஞ்சு உயரத்திற்கே இருந்த மகி அவனை விரல் நீட்டி எச்சரிக்கை செய்வதை விளையாட்டு குழந்தை ஒன்று பாட்டு பாடுவது போல் தீரனிற்கு தோன்ற.. மகியை சிரிப்புடன் ரசித்து பார்த்தான் தீரன்.
தீரன் சிரிப்பதை கண்டு அதிகமாக கோபமாக தன்னிலை மறந்தாள் மகி.
“யோவ் …முட்டைக்கோஸ் மூஞ்சி… உனக்கு சூடு சொரணை ஏதாச்சும் இருக்கா என்ன? உன்னைய நான் திட்டிட்டு இருக்கேன் நீ என்னமோ நான் காமெடி பண்ணுற மாதிரி பல்ல காட்டிட்டு நிக்கிற? ஒரு நாளைக்கு மூணு வேளைய பத்து வேளை சாப்பாட்ட தின்னுட்டு நல்லா பனைமரம் மாதிரி வளந்து இருக்க… அதுல இத்துனூட்டு அளவுக்கு கூட அறிவில்லை உனக்கு? பனங்காட்டு மண்டை… பிஞ்ச தேங்காநாறு… போடாங்க் அழுகுன கத்திரிக்கா…. ” என மூச்சு விடாமல் மகி திட்டிக்கொண்டிருக்க… பேசும் அவளது இதழ்களையே காதல் மயக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த தீரன் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காமல் மகியை இழுத்து அவளது இதழ்களுடன் தன் இதழ்களை இணைத்திருந்தான் தீரன்.
தீரனின் இந்த திடீர் செய்கையில் அதிர்ந்து விழி விரித்து மூளை வேலை செய்யாமல் பனி சிலையென உருகி நின்றாள் மகி.
அந்த ஃபுட் கோர்டில் உள்ள மற்றவர்கள் மகியையும் தீரனையும் பார்த்து வெட்கச்சிரிப்புடன் கடந்து சென்றனர். தீரனின் செய்கையில் அதிகமாக அதிர்ந்து நின்றது மனோரஞ்சன்தான்.
சில நிமிடங்களில் மகியை விடுவித்தவன், மயங்கி விழ இருந்த தன்னவளை தன் கை வளைவில் தன்னுடன் இறுக்கி கொண்டு “பெட்டர் மாஸ் லைட்டே தான் வேணுமா? ” என நக்கலாக மனோரஞ்சனைப் பார்த்து கேட்டான் தீரன்.
செந்தூரமாய் சிவந்து இருந்த மகியின் முகத்தையும் உரிமையில் பொங்கி சந்தோஷத்தில் மிளிர்ந்து இருந்த தீரனின் முகத்தையும் மாறி மாறி பார்த்த மனோரஞ்சனுக்கு ஏதோ புரிவது போல் இருக்க, “ஸாரி… ” என முனுமுனுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
மனோரஞ்சன் புறப்பட்டு சென்றதை கூட உணராமல் மாய வலையில் சிக்கி இருந்த மகியின் இடுப்பில் கிள்ளினான் தீரன். அதில் துள்ளி விலகி, “ஏன்டா எரும… அறிவு கெட்ட முண்டம்…. பப்ளிக் ப்ளேஸ் ல என்ன வேலை பாக்குற? உனக்கு கொஞ்சமாச்சும் வெக்கம் மானம் ஏதாவது இருக்கா? ” என கோபத்திலும் வெட்கத்திலும் சிவந்த முகத்துடன் தீரனை திட்டினாள் மகி.
“பப்ளிக் ப்ளேஸா? இது என் சொந்த இடம்டி…. மூணு வருஷத்துக்கு முன்னாடியே பட்டா போட்டு ரிஜிஸ்ட்ர் பண்ணிட்டேன்…. எவனாவது பப்ளிக் ப்ளேஸ் னு சொன்னா அவன செருப்பால அடி…. ” என சிரித்தான் தீரன்.
“இவன் கிட்ட பேசுறதுக்கு பேசாமலே இருக்கலாம்… கட்டையன் நான் என்ன கேக்குறேன்…. இவன் என்ன பேசிட்டு இருக்கான்…. ” என நினைத்தவாறு உதியனை தன் கண்களால் தேடினாள் மகி.
“என்ன பாப்பா பேசாம இருக்க? ஆமா… யார தேடுற? ” தீரன்.
” உதியையும் தூரியையும் காணோம்… ” என தீரனிடம் கூறியபடி தேடிய மகியின் விழிகளில் தொலைவில் உதியனும் தூரியும் ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.
உடனே அவர்களை நோக்கி சென்ற மகி இருவரையும் நெருங்கி,” என்ன ஆச்சு உதி? தூரி ஏன் இவ்ளோ படபடப்பா இருக்கா? ” என்றாள்.
மகியின் பின்னே வந்த தீரனும், “என்ன ஆச்சு டா? ” என்றான்.
மகியை கண்ட தூரி, “அக்கா…. ” என தேம்பியபடி கட்டிக்கொண்டாள்.
“இப்பிடி எதுக்கெடுத்தாலும் அழுகுற முதல்ல நிறுத்து தூரி… பொம்புள புள்ளைங்க அழுக கூடாது தூரி…. ” என தூரியை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்தினாள் மகி.
” பொம்பள புள்ளைங்க அழ கூடாதா? ஆம்பள புள்ளைங்க தான அழக்கூடாது னு சொல்லுவாங்க? இதென்னடி புதுசா இருக்கு? ” என மகியின் காதில் கிசுகிசுத்தான் தீரன்.
“அது பழமொழி… இது புதுமொழி… போடா வெளக்கெண்ணை…. ” என அதே குரலில் தீரனுக்கு மறுமொழி அளித்த மகி, “இப்ப என்ன ஆச்சு னு இப்பிடி மூக்க சிந்திட்டு இருக்க? ” என தூரியை அதட்டினாள்.
“இந்தா… இத படி… ” என கடுகடுத்தவாறு ஒரு சிறிய பேப்பரை மகியின் கைகளில் அளித்தான் உதியன்.
“என்ன பேப்பர் இது? ” என்றவாறு அதைப்பிரித்து படித்த மகி, “டிஸ்கஸ்டிங்….அவன…. ” என அப்பேப்பரை கசக்கினாள்.
“ஏய்..என்னடி? ” என்றவாறு அப்பேப்பரை வாங்கி தன் கண்களை அதில் ஓட விட்டான் தீரன்.
“உன்னோட வீடியோ என் கிட்ட பத்ரமா இருக்கு….உனக்கு ஒரு காப்பி வேணுமா? ” என்றிருந்தது. அதைப்படித்த தீரனின் முகம் கலவரமாகியது.
“உன்னைய….. இப்ப என்ன டேஷ்க்கு இப்பிடி அழுது வடியுற? இந்த பேப்பர கிழிச்சு போட்டுட்டு உன் வேலைய பாரு…. இன்னொரு தடவ இப்பிடி அழுதுட்டு இருந்த… வெளுத்துப்புடுவேன்… ” என தூரியை அதட்டினாள் மகி.
“எல்லாம் இந்த மகராசனால…. அன்னக்கி பஞ்சாயத்துல வச்சு அவன செஞ்சு விடாம இப்பிடி நடமாட விட்டு இப்ப இவ்ளோ தூரம் வந்து இருக்கு…. கடைசி நேரத்துல பஞ்சாயத்துல உங்க நொண்ணன் ஏதோ ரகசியம் பேசுனாங்களே அது என்ன னு கேளு உதி… ” மகி.
“நானும் கேக்கனும் னு நினைச்சேன்… அன்னைக்கி பஞ்சாயத்துல தண்டனை குடுக்க போறப்ப நீங்க ஏதோ அந்த பெருசுங்க கிட்ட சொன்னீங்க… உடனே அதுங்களும் சரின்னு மண்டைய மண்டைய ஆட்டுனுச்சுங்க… அப்புறம் அவன ஆம்புலன்ஸ் ல வந்து ஏத்திட்டு போனாங்க… என்ன பண்ணீங்க அவன? ” உதியன்.
“அது…. அவனுக்கு காய் அடிச்சு விட்டோம் உதி… ” தீரன்.
” என்ன??? ” என உதியனும் தூரிகையும் நிம்மதி கலந்த அதிர்ச்சியில் ஒன்றாக கேட்க… ” காய் அடிக்கிறதுனா என்ன? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்களேன் ப்ளீஸ்… ” என தலையை சொறிந்தாள் மகி.
“இவ ஒருத்தி… சத்த நீ சும்மா இரு… அண்ணே… நீங்க சொல்லுங்க… நிஜமாவா? ” என்றான் உதியன்.
“ஆமா… ஆனா அவனுக்கே அந்த விஷயம் தெரியாது…” தீரன்.
“என்ன சொல்லுறீங்க? அவனுக்கே தெரியாதா? இன்னும் அவனுக்கு அது தெரியாதா? ” என ஆச்சரியமாக வினவினான் உதியன்.
“இல்ல… இப்ப வரைக்கும் அவனுக்கு அது தெரியாது…. ” தீரன்.
” அவனுக்கு கொஞ்சங்கூட சந்தேகம் வராமலா போய் இருக்கும்? அவன ஏன் இப்படி இரகசியமா தண்டிச்சீங்க? ” உதியன்.
” எல்லாம் ஒரு காரணமா தான்….” என மகியை பார்த்தவாறு கூறினான் தீரன்.
“இவரு என்ன மகிய பாத்துட்டே சொல்லுறாரு….அப்ப மகிக்கும் பிரச்சினை இருக்கா? அதனால தான் அன்னக்கி அப்பிடி பண்ணுனாரா? ஒன்னும் புரியலயே…இவள வச்சுக்கிட்டு ஒன்னும் வெளிப்படையா பேச முடியாது….தனியா கேக்க வேண்டியது தான்….” என மனதினுள் நினைத்தவாறு மகியையும் தூரியையும் பார்த்து விட்டு தீரனை பார்த்தான் உதியன்.
உதியனின் பார்வையின் பொருளை உணர்ந்த தீரன், கண்களாலயே “ஆமாம்…” என பதிலளித்தான்.
அதைப்பார்த்த உதியன், “அய்யோ…மகி தூரி ரெண்டு பேருக்கும் பிரச்சனையா? நமக்கு தெரியாம நிறைய நடந்து இருக்கு போலயே…” என கலக்கமாக மகியை பார்த்தான்.
“எரும… எரும….காய் அடிக்கிறதுனா என்னடா மலைமாடு? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம ரெண்டும் பேரும் கண்ணாலயே லவ்ஸ் விட்டுட்டு நிக்கிறீங்க? காய் அடிக்கிறதுனா என்ன? எனக்கு இப்ப தெரிஞ்சே ஆகனும்….” என பிடிவாதமாய் நின்றாள் மகி.
“அய்யோ அக்கா….அது…” என கூற வந்த தூரியை தடுத்து ,”நான் சொல்லுறேன்….” என்றான் உதியன்.
“சொல்லித்தொலைடா….” மகி.
“அது …காளை மாட்டுக்கு கிராமத்துல காய் அடிப்போம்… அதே போல இவனுக்கும் அடிச்சு விட்டுருக்காங்க…..” உதியன்.
“காளை மாட்டுக்கு என்ன பண்ணுவீங்க? ” என சந்தேகம் தெளியாமல் மீண்டும் வினவினாள் மகி.
“மாடுகளுக்கு காய் அடிக்கிறது ங்கிறது… அதவாது மாட்டோட விதை பை ய (TESTECLES) எந்த வித மருத்துவர் உதவியும் இல்லாம கொறடு கட்டையெல்லாம் வைச்சு நசுக்கி விட்டுருவோம்… அதே போல தான் குருவுக்கும்… ” உதியன்.
அதைக்கேட்ட மகி, “ங்கே…” என முழித்தப்படி நின்றாள் .
அவள் அவ்வாறு நிற்பதை பார்த்த உதியனுக்கும் தீரனுக்கும் சிரிப்பு பீறிட்டு கொண்டு வர….சட்டென மகியை இழுத்து அவளது காதில் இரகசியமாக சில விஷயங்களை கூறவும், அதைக்கேட்ட மகி, “ஏன்டா லூசுகளா…அவனுக்கு பேமிலி ப்ளானிங் பண்ணி விட்டாச்சுனு தெளிவா சொல்ல வேண்டியது தான? அத விட்டுட்டு காய் அடிச்சாச்சு பழம் அடிச்சாச்சு னு சொல்ல வேண்டியது… ” என இதழை சுளித்தாள்.
அதே நேரம் பல்லவி தூரியை ஃபோனில் அழைத்து, “உங்களுக்கு திங்கிற எண்ணம் இருக்கா? இல்லையா? ” என கத்த… அடுத்த நொடியே தூரியும் மகியும் வீட்டை நோக்கி புறப்பட்டு இருந்தனர்.
உதியனையும் தீரனையும் வீட்டிற்கு அழைத்ததற்கு, “எங்க ரெண்டு பேருக்கும் முக்கியமான வேலை இருக்கு… ” என இருவரும் ஒன்றாக மறுத்துவிட.. “போங்கடா பைத்தியக்காரனுங்களா…”என திட்டிவிட்டு தூரியுடன் வீட்டிற்கு புறப்பட்டு இருந்தாள் மகி.
இருவரும் வீட்டிற்கு வந்து உணவு உண்டு விட்டு பல்லவியுடன் சேர்ந்து சிறிது நேரம் சினிமா பார்த்துவிட்டு உறங்க செல்லுகையில் தூரியின் ஃபோனிற்கு ஒரு வீடியோ ஒன்று வர….அதை எடுத்து பார்த்தவள் பயத்தில் ஃபோனை கீழே தவறவிட்டாள் தூரிகை.
தொடர்ந்து தூரியின் ஃபோனிற்கு மெஸேஜ் வர….அதை எடுத்து பார்த்தவள் உச்சக்கட்ட பயத்தில் மயங்கி சரிந்தாள் தூரிகை.
தூரி மயங்கி விழுவதை கண்ட மகி, பதறி தூரியை ஒரு கையால் தாங்கி கொண்டு அவளது ஃபோனில் வந்த செய்தியை பார்த்தவள் உச்சக்கட்ட கோபத்தில் ஃபோனை சுக்கு நூறாக உடைத்தெறிந்தாள்.
“நீ நாளைக்கி நைட் என் கூட தங்கலனா இந்த வீடியோவ நெட் ல போட்டுருவேன்….” என தூரிகைக்கு வீடியோவுடன் மெஸேஜ் அனுப்பி இருந்தான் குரு.
(காதல் தீ பரவும்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.