சுற்றிலும் மக்கள் கூட்டம் இருந்தாலும் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் பலா சுளையை மொய்க்கும் ஈயாக தன்னவளின் தர்ப்பூசணிப்பழ உதட்டிலேயே பார்வையை நிலைத்து இருந்தான் தீரன்.
தீரனின் தீவிரமான பார்வையில் செஞ்சாந்து குழம்பென மாறிபோன தன் முகத்தை மறைத்துக்கொள்ள சுற்றுப்புறம் பார்ப்பது போல் தன் பார்வையை திருப்பிக்கொண்டாள் மகிழ்விழி.
“அய்யோ… இவன் என்ன பட்டிக்காட்டான் மிட்டாய பாக்குற மாதிரி இப்பிடி பாக்குறான்….இவன் கன்னத்துல அடிச்சதுலாம் பத்தாது…இவன் மூக்குலயே நாலு குத்து விட்டு இருக்கனும்….டேய் கருவா பயலே…. ஒழுங்கா வேற பக்கம் பாரு…. என்னால மூச்சு விட முடியலடா…. ” என மனதினுள் தீரனை திட்டிக்கொண்டே எம்பி குதித்த தன் இதயத்தை சமன் படுத்த சுற்றிலும் பார்வையை சுழற்ற… சரியாக மகியின் பார்வையில் மீண்டும் அவன் விழுந்தான்.
“இவன தான நாம வீட்டு பக்கத்துலயும் பாத்தோம்… இப்ப இங்கயும் வந்து நம்மள பாத்துட்டே இருக்கான்… ” என ஆராய்ந்தவாறு, “டேய் உதி… யார்ரா அவன்? வீட்ல இருந்து நான் கிளம்புறப்பவும் அவன பாத்தேன்… இப்ப இங்கேயும் நம்மள பாத்துட்டு இருக்கான்… ஆனா இவன நான் எங்கேயோ பாத்து இருக்கேன்…. உனக்கு தெரியுதா னு பாரு… ” என்றாள்.
மகி காட்டிய திசையில் மற்ற மூவரும் பார்க்க… அங்கிருந்தவனை கண்ட தூரி, பயத்தில் முகம் வெளிறி ஐஸ்கிரீமை தவற விட்டாள்.
அதைப்பார்த்த மகி, “இவன பாத்து நீ ஏன் பயப்படுற தூரி? உனக்கு இவன ஏற்கனவே தெரியுமா? ” என வினவினாள்.
“ம்ம்… “என மெலிதாக முனங்கியவாறு மகியின் அருகில் நெருங்கி அமர்ந்தாள் தூரிகை.
“இவன பாத்து நீ ஏன் பயப்படுற? இரு… அவன என்ன னு கேட்டுட்டு வர்றேன்… ” என இருக்கையை விட்டு எழுந்தாள் மகி.
அதைக்கேட்ட தூரிகை, “அய்யோ அக்கா…. ” என பதறினாள் .
“இவுக பெரிய லேடி ஜாக்கிசான் னு நினைப்பு… ஒழுங்கா உக்கார சொல்லு உதி… ” என கடினமான குரலில் கூறினான் தீரன்.
“ஹே… ஆமான்டா… உன்னைய மாதிரி என்னால பிரச்சனைக்கு பயந்து எனக்கு பிடிச்சவங்கள அத்து விட்டுட்டு போகத்தெரியாது… உயிரே போனாலும் அவங்களுக்காக நிப்பேன்… ” என அதுவரை இருந்த இனிமையான மயக்க நிலை மாறி எண்ணெயில் இட்ட கடுகென பொறிந்தாள் மகி.
” உதி… தேவை இல்லாம பேச வேண்டாம் னு சொல்லு… ” என குற்ற உணர்விலும் கோவத்திலும் முகம் சிவந்தான் தீரன்.
“நான் ஒன்னும் தேவை இல்லாம பேசல மிஸ்டர்… உண்மைய தான் பேசுறேன்…. குற்றம் உள்ள நெஞ்சுதான குறுகுறுக்கும்… ” எனக்கூறியபடி இதழை இகழ்வாக வளைத்தாள் மகி.
பெருமுயற்சி எடுத்து தீரன் தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்வது அவனது இறுகி மடித்து வைத்திருக்கும் கைகளிலும் செஞ்சூரியனாய் சிவந்து இருக்கும் விழிகளிலும் நன்றாக தெரிந்தது.
“அம்மு… நீ கொஞ்சம் அமைதியா இரேன்… ப்ளீஸ்… ” உதியன்.
“அக்கா… ப்ளீஸ்… ” என கெஞ்சி மகியை இருக்கையில் அமர வைத்தாள் தூரிகை.
திடீரென நினைவு வந்தவளாக, “தூரி… அன்னைக்கும் நீ இவன பாத்து தான் பயந்தியா? யார் இவன்? ” என்றாள் மகி.
“ம்ம்… ஆமா… ” என இதழ்களை கடித்தபடி தலை குனிந்தாள் தூரிகை. அவளின் விழிகளில் இருந்து இரு சொட்டுக் கண்ணீர் கீழே சிந்தியது .
அதைப் பார்த்த மகி, “இப்ப எதுக்கு நீ அழுகுற? டேய் உதி… என்னடா இதெல்லாம்? எனக்கு ஒன்னும் புரியல… என்னனு கொஞ்சம் நீயாச்சும் சொல்லுறியா? ” என்றபடி உதியனை பார்க்க… அவன் முகம் கற்பாறையென இறுகி இருந்தது.
“இந்த காமெடி ஃபீஸ் எப்பிடி இப்பிடி சீரியஸ் மோடுக்கு போனுச்சு? யப்பா… இதெல்லாம் உலக அதிசயம் ப்பா… இந்த மொமண்ட்ட வரலாறுல பதிச்சு வச்சுக்கனுமே… இத இப்ப வெளில சொன்னா சாணிய வீசி நம்மள துரத்தி அடிப்பானுக… நமக்கேன் வம்பு…. நாம நம்ம ஃபீலா மண்டையன பாப்போம்… இப்போதைக்கு இந்த உதிப்பயல பாத்தா சமய சந்தர்ப்பம் பாக்காம சிரிச்சுப்புடுவோம்…. “என உதியனை கண்டு சிரிப்பை உள்ளடக்கியபடி திகைத்தவாறு தன் முகத்தை வைத்துக் கொண்டு தீரனை நோக்க… தீரன், தகிக்கும் சூரியனாய் அனலாய்… பெயருக்கேற்றவாறு அனழேந்தி தீரனாக காட்சியளித்தான்.
“யாத்தீ… இவன் அதுக்கு மேல ல இருக்கான்…. “என மகி மீண்டும் தூரிகையை பார்க்க , அவள் முள்ளின் மேல் அமர்ந்திருப்பது போல் சங்கடத்துடன் அமர்ந்திருந்தாள்.
ஒன்றும் புரியாமல் மூவரின் முகத்தையும் திரும்பி திரும்பி பார்க்க, அவளை கண்ட உதியன், “உனக்கு இவன ஞாபகம் இல்லையா? ” என்றான்.
“அப்ப நமக்கும் இவன தெரியுமா? இந்த மர கழண்ட கேஸூக்கே ஞாபகம் இருக்கு… நமக்கு எப்பிடி மறந்து போச்சு…. ” என தன் நினைவடுக்கில் அம்முகத்தை தேடி விடையை கண்டறிந்த மகி, “அவனா? ” என அதிர்வுடன் வினவினாள்.
“ஆமா…” என இறுகிப்போனக்குரலில் கூறினான் உதியன்.
“அப்ப… நேத்தும் இவன பாத்து தான் தூரி மயங்கி விழுந்தாளா? ” மகி.
“ம்ம்… ” என உள்ளே போன குரலில் கூறினாள் தூரிகை.
“அடக்கொடுமையே… நேத்து நான் அவன் பின் ஃபோஸ தான் பாத்தேனா… அத பாத்துட்டு நான் இந்த தியாகி தான் வந்து இருக்காரு னு நினைச்சேன்… இந்த நல்லவன பாத்து தூரி ஏன் மயங்கி விழனும் னு நைட் ஃபுல்லா என் மண்டைக்குள்ள ஒரே அடிதடி சண்டை தான்…. ” என தீரனின் கோபத்தை பொருட்படுத்தாமல் மகி கூற…உதியன் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.
“அடிப்பாவி… ” எனும் பொருள்படுமாறு மகியை பார்த்தான் தீரன்.
“அப்ப எனக்கு முன்னாடியே உங்களுக்கு…. அதாவது இவன் தூரிய தேடி வந்த விசயம் தெரியும்? “மகி.
“எனக்கு நேத்து தான் தெரியும்… தூரி மயங்கி விழுந்தப்ப தான் ரோட்டோரத்துல அவன பாத்தேன்…. தூரியையும் உன்னையையும் ஆட்டோல ஏத்தி விட்டுட்டு அவன பாலோ பண்ணி போனேன்…. என்னைய பாத்துட்டு ரொம்ப திமிரா பேசுறான்…. அவனுக்கு நம்ம தூரி வேணுமாம்…. அப்ப தான் உன் வீட்டு அட்ரஸ் கேட்டு அண்ண ஃபோன் பண்ணாங்க…. நான் தான் இவன பாத்தது பத்தி சொல்லி… உன் அட்ரஸையும் குடுத்து வர சொன்னேன்… ” என்றான் உதியன். (பாவம் உதி… தான் தான் தீரன வர சொல்லி இருக்குறதா நினைச்சுட்டு இருக்கான்… அந்த தீரன் கேடி இங்க வந்து இறங்கிட்டு தான் அட்ரஸ் கேட்டான் னு தெரியல… நாமளும் சொல்ல வேண்டாம்…
)
உதியன் கூறியதைக் கேட்ட மகி, இதழ்களில் இளநகையை தவழ விட்டாள். அவளின் சிரிப்பை மற்ற மூவரும் ஆச்சரியமாக பார்க்க…..” என்ன பாக்குறீங்க? இதுக்குத்தான் இந்த ஸார் இங்க வந்து இருக்காங்களா? ” என நக்கலாக தீரனைப் பார்த்து வினவினாள் மகி.
மூவரும் அமைதியாக அவளையே பார்த்திருக்க…” என் தங்கச்சி மேல கைய வச்சுட்டு தைரியமா என் முன்னாடி நடுமாடுறான் ல அவன்…அன்னைக்கே அவன நல்லா கவனிச்சு இருக்கனும்….விட்டாச்சு….தூரியோட அக்காவ பத்தி அவனுக்கு இன்னும் தெரியல…தெரிய வச்சுருவோம்…..” எனக் கூறியபடி அவனை நோக்கி எழுந்து நடக்க முனைந்தாள் மகி.
“என்ன பண்ற மகி? ” உதி.
“என் ஊருக்கு வந்து இருக்கான்…. அவன கவனிக்க வேண்டாமா? ” என அந்த கவனிக்க என்பதில் நன்கு அழுத்தம் குடுத்தாள் மகி.
“இது எடுத்தோம் கவுத்தோம் னு செய்யிற வேலை இல்லை னு உன் ப்ரண்டுக்கு சொல்லு உதி… ” தீரன்.
“நீ சொல்லுறத நான் ஏன் கேக்கனும்? தைரியம் இருந்தா நேரா என் கிட்ட பேச வேண்டியது தான? உன்னால தான் அவன் இவ்ளோ தூரம் தைரியமா வந்து இருக்கான்…..அன்னைக்கி அவன விட்டுட்டு இன்னக்கி என் கிட்ட வந்து என்ன டேஷ்க்கு துள்ளிட்டு இருக்க? ” என பொது இடம் என்று கூட பாராமல் இரண்டரை வருட கோவத்தை சிறிது சிறிதாக வெளிப்படுத்தினாள் மகி.
அவளின் அந்த கோவத்தை ரசித்து பார்த்தான் தீரன். மகி பேசியதை கேட்ட தூரி, “அக்கா… ப்ளீஸ்… எனக்காக நீங்க சண்டை போட்டுக்க வேண்டாம்… ” எனக் கெஞ்சினாள்.
“அம்மு… கன்ட்ரோலா இரு… அவன்… அவன் கிட்ட என்ன இருக்கு னு தெரியல… ஏதோ இருந்து தான இவ்ளோ தைரியமா வந்து இருக்கான்… அதை கொஞ்சம் யோசியேன்… நாம ஒன்னும் அவன சும்மா விட போறது இல்ல… நேரம் பாத்து தான் செய்யனும்… ” என பொறுமையாக மகிக்கு எடுத்துரைத்தான் உதியன்.
உதியனின் கூற்றில் இருந்த உண்மையை உணர்ந்த மகி, நிதானத்திற்கு வந்து திரும்ப அவனை தன் தீப்பார்வையால் சுட்டெரித்தாள் .
மகியின் பார்வையை தாங்க முடியாமல் சட்டென அங்கிருந்து கிளம்பினான் அவன். அவன் அங்கிருந்து புறப்படுவதை கண்ட மகி, “டேய்…..குரு…உனக்கு எமன் நான் தான்டா…பொண்ணுங்க மேல கைவைக்கிற…கைவைக்க நினைக்கிற ஒவ்வொரு ஆம்பளைக்கும் நீ ஒரு பாடமா இருப்படா…..” என மனதினுள் சங்கல்பம் செய்து கொண்டாள்.
“ஓகே… ரிலாக்ஸ்…. நீ இப்பிடி பயந்து நடுங்காத தூரி… உனக்காக நாங்க இத்தன பேரு இருக்கோம்… உனக்கு எதுவும் ஆக விட்டுருவோமா என்ன? ” என தூரியிடம் பொறுப்பான தமக்கையாக பேசினாள் மகி.
மகி கூறியதை கேட்டதும் நேற்று உதியன் கூறியது நினைவுக்கு வர….கலங்கிய கண்களுடன் உதியனை ஏறிட்டாள் தூரிகை.
அப்பார்வையை எதிர்பார்த்திருந்த உதியன், கண்களாலயே தன் காதலையும் அவளுக்கான பாதுகாப்பையும் தூரிகையின் இதயத்தினுள் கடத்தினான்.
அதைக்கண்ட மகி, “ம்க்ஹூம்… நாங்களும் இங்க தான் இருக்கோம்… பப்ளிக்… பப்ளிக்… ” என எங்கோ பார்த்தபடி சிரிப்புடன் கூறினாள் மகி.
“ராட்சசி… நான் கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணிட்டா உனக்கு பொறுக்காதே…” என விளையாட்டாக மகியை அடிக்க கை ஓங்கினான் உதியன்.
“அது ஒன்னுல்ல உதி… பொறாமை… கருகுற வாசனை உனக்கு வரலயா? ” என நக்கலடித்தான் தீரன்.
இவர்களின் பேச்சைக்கேட்ட தூரிகை, அந்த குருவை மறந்து வெட்கத்தில் மகியின் தோளில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
அதைப்பார்த்த மகியும் தீரனும் தங்களை அறியாமலே இருவரும் ஒன்றாக, “ஹூர்ரே… ” எனக் கத்தினார்கள்.
“ஹைய்யோ….ஒன்னு கூடிட்டானுங்கையா….” என உதியன் லேசாக வெட்கப்பட…..அதற்கு மறு மொழி கூற வந்த மகியை….,”ஹாய்….வாட் எ பிளஸண்ட் சர்ப்ரைஸ்…” என்ற உற்சாக குரல் தடுத்து நிறுத்தியது.
“எவன்டா அது? என்னைய பேச விடாம நிறுத்துனது… ” என நினைத்தவாறு தன் பின்புறம் திரும்பி பார்த்தாள் மகி.
அங்கு விரிந்த புன்னகையுடன் மனோரஞ்சன் நின்றிருந்தான். “மகிழ்விழி… உன்னைய நான் இங்க பாப்பேன் னு நினைச்சு கூட பாக்கல…..நானும் உங்க கூட ஜாயிண்ட் பண்ணிக்கலாமா? “என அனுமதி கேட்டு விட்டு அனுமதி இல்லாமலயே மகியின் அருகில் இருக்கையை இழுத்துப் போட்டு கொண்டு அமர்ந்தான் மனோரஞ்சன்.
“வேண்டாம் னு சொன்னா கேக்கவா போறீங்க? ” என மகியிடம் ஒரு ஆடவன் உரிமையாக பேசுவதை பார்த்து எரிச்சலுடன் பதிலுரைத்தான் தீரன்.
உதியனும் தூரிகையும் திகைத்து அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற விதத்தில் மூவரின் முகத்தை பார்த்தவாறு இருந்தனர்.
“ப்யான்ஸிக்கிட்ட பேச யாராவது வெக்க பட முடியுமா ஸார்? ஆமா நீங்க யாரு புதுசா இருக்கீங்க? இது உதியன்… மகிழ்விழியோட க்ளோஸ் ப்ரண்ட்… இது தூரிகை….மகிழ்விழியோட ஸிஸ்டர்… நீங்க யாரு? உங்கள நான் பாத்ததே இல்ல… அத்தை உங்கள பத்தி எதுவும் சொல்ல லயே… ” என நேரடியாக தீரனிடம் வினவினான் மனோரஞ்சன்.
ப்யான்ஸி எனக் கூறியதில் அவன் மீது கோபமான தீரன், அதை மறுத்து மகி எதுவும் கூறாதிருந்தது தீரனின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.
அந்த கோபத்தில் மகியை முறைத்தவாறு, “அதை உங்க ப்யான்ஸி கிட்டயே கேளுங்க… “என அந்த ப்யான்ஸி யில் அழுத்தம் கொடுத்தான் தீரன்.
“யா… கரக்ட்… சொல்லு மகிழ்…ஸார் யாரு? உன் கிட்ட இவ்ளோ உரிமையா பேசுறாங்க? ” என மகியிடம் வினவினான் மனோரஞ்சன்.
“ஆங்… இந்த வெள்ளப்பன்னிய யாரு இங்க வர சொன்னது? இப்ப என்ன பேசுறது? சரி… சமாளிப்போம்… ” என மனதை திடப்படுத்திக்கொண்டு, “அது… ” என கூற ஆரம்பித்த மகியை தடுத்து தான் பேசினான் தீரன்.
“அவங்க என்ன சொல்லுறது… நானே சொல்லுறேன்… அதுக்கு முன்னாடி உங்க பேர தெரிஞ்சுக்கலாமா? ” என மிக பவ்வியமான குரலில் வினவினான் தீரன்.
அதைக்கேட்ட மகி,”அய்யோ… எலி ஏன் ட்ரெஸ் இல்லாம ஓடுது னு தெரியலயே… ” என நினைத்தவாறு தீரனின் முகத்தை பார்த்திருந்தாள்.
“யா… கண்டிப்பா… ஐ ஆம் மனோரஞ்சன்…. மகிழ்விழியோட ப்யான்ஸி… ” என கைகுலுக்க தீரனிடம் கை நீட்டினான் மனோரஞ்சன்.
“வாவ்… சூப்பர்… ஐ ஆம் அனழேந்தி தீரன்… மகிழ்விழியோட ஹஸ்பெண்ட்… ” என புன்னகையுடன் நீட்டிய மனோரஞ்சனின் கைகளை பற்றி குலுக்கினான் தீரன்.
(காதல் தீ பரவும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.