டிக் டிக் டிக் என கடிகார ஒலியின் ஓசையை தவிர ஹாலில் வேறு எந்த ஓசையும் இல்லை. தூரிகையின் அனலான பார்வையும் மகியின் உஷ்ணமான மூச்சுக்காற்றும் அவ்விடத்தை எரிமலையாய் மாற்றிக் கொண்டிருந்தது.
“இவன் எதுக்கு இப்ப இங்க வந்து இருக்கான்? என்னமோ மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்து இருக்குற மாதிரி ஹாய்யா உக்காந்து இருக்குறத பாரு… ” என எரிமலை குழம்பாய் மகியின் மனம் கொதித்துக்கொண்டிருந்தது.
மகியின் மனதை அவளின் விழியின் மொழியை கொண்டே அறிந்த தீரன், “வீட்டுக்கு வந்தவங்கள வாங்க னு சொல்ல மாட்டியா மகி? ” என ஒற்றை புருவத்தை உயர்த்தி கேலியாக கேட்டான் தீரன்.
அவனது கேள்வியில் சிலிர்த்தெழுந்த மகி ,”யார் நீ? ” என தன் செப்புவாய் திறந்தருளினாள்.
” என் பொண்டாட்டியோட பொறந்த வீடு இது… அப்பிடி பாத்தா என்னோட மாமியார் வீடு…. இப்ப நான் கேக்குறேன்… என் மாமியார் வீட்ல நீ யாரு? “தீரன்.
தீரனின் கேள்வியில், “ஆஆஆ… ” என வாய் பிளந்தாள் தூரிகை. அதை ஓரக்கண்ணால் கவனித்த தீரன், “என்ன? நீ யாரு இங்க கொசுறா இருக்க? ” என தூரிகையை பார்த்துக் கேட்டான்.
வீட்டிற்குள் வரும் பொழுது யார் நீங்க? என தான் கேட்டதற்கான பதிலடி இது என புரிந்து தவிப்புடன் மகியை பார்த்தாள் தூரிகை.
எதற்கும் அசராமல் மெதுவாக நடந்து தீரனுக்கு எதிர்புறம் இருந்த இருக்கையில் நிமிர்வுடன் அமர்ந்தாள் மகி.
“ஓஓ… அப்பிடியா? இது எங்களோட வீடு… இவ என் தங்கச்சி… உங்க பொண்டாட்டி பேரு என்ன? “மகி.
“முன்ன பின்ன தெரியாத உன் கிட்ட என் பொண்டாட்டி பேர சொல்ல எனக்கு விருப்பம் இல்லை… ” என மகியை பார்த்து முறைப்புடன் கூறி விட்டு , “ராங்கிக்காரி… அடியேய்…ராங்கிக்காரி…. ” என வீட்டின் உள்ளே பார்த்து அழுத்தமாக குரல் கொடுத்தான் தீரன்.
தீரனின் அவ்வார்த்தையில் பழைய ஞாபகங்கள் அனைத்தும் மகியின் நெஞ்சில் முட்டி மோத… சிரிப்பு, கோபம் ,அழுகை என பலவிதமான உணர்வுகளுக்கு உள்ளானாள் மகிழ்விழி.
“கோயிலுக்கு போன அப்பாவும் அம்மாவும் வந்தா இவன என்ன பேசுவாங்கன்னே தெரியலயே…. அவங்க கண்ணுல இவன பட விடக்கூடாது… ஒரு வேளை இவன் மேல கோபப்பட்டாலும் படலாம்…. இல்ல… இவன் கூட நம்மள அனுப்பி வச்சாலும் வைக்கலாம்… இவன முதல்ல இங்க இருந்து பேக் பண்ணனும்…. ” என நினைத்து.. “கொஞ்சம் வெளிப்படையா பேசுறீங்களா தீரன்? அதான் பஞ்சாயத்துல வச்சு எல்லாத்தையும் முடிச்சுட்டீங்களே? இன்னும் என் கிட்ட பழிவாங்க என்ன இருக்கு? ” என நிமிர்வுடன் ஆரம்பித்து குரல் தழுதழுக்க முடித்தாள் மகி.
“இப்பிடி வந்த உடனே நேரா கேட்டு சண்டை போட்டு இருக்க வேண்டியது தான? அத விட்டுட்டு அக்காளும் தங்கச்சியுமா யார் நீ னு மாத்தி மாத்தி கேக்க வேண்டியது… ” தீரன்.
“நீங்க பண்ணுன காரியம் அப்பிடி…. இதுவே வேற பொண்ணா இருந்தா வீட்டுக்குள்ள விட்டு இப்பிடி உக்கார வச்சு பேசிட்டு இருக்க மாட்டா…. உங்களுக்கு என்ன வேணுமோ அத நேரா கேளுங்க… ” மகி.
“இங்க பாரு… உன் கிட்ட மன்னிப்பு கேக்கவோ… உன் கிட்ட கெஞ்சவோ நான் வரல….நான் என்ன செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்…என் மனசுல இருந்து முழு விருப்பத்தோட தான் உனக்கு தாலி கட்டுனேன். என்னைய பொறுத்த வரைக்கும் நீ தான் என் பொண்டாட்டி…. நீ மட்டும் தான் இந்த தீரனோட பொண்டாட்டி…. அதுல எந்த மாற்றமும் இல்லை… ஆனா பஞ்சாயத்துல ஏன் அப்பிடி பண்ணுனேன் னு விளக்கம் சொல்லி தான் நீ என் கூட வாழனும் னு அவசியம் இல்லை…. உனக்கு கண்ணு காது மூளை சரியா இருந்தா நீயே இந்நேரம் கண்டுபுடிச்சு இருப்ப…. சரி…. இப்ப நான் இதெல்லாம் பேச வரல…. எனக்கு தூரி வேணும்… அவளுக்கு இங்க பாதுகாப்பு இல்ல…. அவளுக்காகத்தான் வந்து இருக்கேன்… அவளோட தான் போவேன்…. நீ விருப்ப பட்டா உன் புருஷன் கூட வரலாம்… ” தீரன்.
தீரனின் கண்களில் தெரிந்த உண்மையும் உறுதியும் கண்டு மகியை சற்று யோசிக்க வைத்தது. பின் மனம் மீண்டும் தன் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றை அறுத்து எடுத்த நிகழ்வு நினைவுக்கு வர… மீண்டும் இறுகினாள் மகி.
“அவளுக்கு என்ன பிரச்சனை? ” என மரத்துப்போன குரலில் கேட்டாள் மகி.
“ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி உள்ள பிரச்சனை எதுவும் இன்னும் முடியல மகி… ” என அதே குரலில் கூறினான் தீரன்.
“என்ன? சரி… அப்பிடியே இருந்தாலும் இங்க அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்ல…. இங்க அவ பாதுகாப்பா தான் இருக்கா…. ” மகி.
“அப்பிடியா தூரி? உன் அக்கா சொல்லுறது உண்மையா? ” என தூரிகையை தீர்க்கமாக பார்த்தான் தீரன்.
“அது…. அது…. எனக்கு என்ன பிரச்சனை? எனக்கு ஒன்னும் இல்லை… ” என்ற தூரிகையின் கண் முன்னே நேற்று கண்ட அவனின் முகம் வந்து சென்றது.
“அப்பிடியா? உன் குரலும் உன் முகமும் உண்மைய சொல்லுதே தூரி… ” தீரன்.
“என்ன ஆச்சு தூரி? இவங்க என்னென்னமோ சொல்லுறாங்க…. ” மகி.
இதற்கு மேல் தாங்காது என, “அக்கா…. ” எனக்கூவிக்கொண்டு மகியின் தோளில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள் தூரிகை.
“என்னனு சொன்னா தான தெரியும்? ” மகி.
“நான் அவன பாத்தேன் க்கா… நேத்து…. நம்மள மொறைச்சு பாத்துட்டு இருந்தான்… ” தூரிகை.
“அதான் நேத்து மயக்கம் போட்டு விழுந்துட்டியா? ஆனா… யார் அவன்? அவன் யாரா இருந்தாலும் உன்னைய என்ன பண்ணிற போறான் ?அப்பவே என் கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தான? இப்ப பாரு யார் யாரோ வந்து சொல்லி நான் தெரிஞ்சுக்கிற மாதிரி இருக்கு…. ” மகி.
“தூரி…. போதும்… அழாத… அழறத முதல்ல நிறுத்து… எதுவும் ஆகாது…. நாங்க இருக்கோம் உனக்கு… அழாம போய் மாமாக்கு டிபன் எடுத்துட்டு வா… செம பசி… ” தீரன்.
அதைக்கேட்ட மகி தீரனை தீப்பார்வை பார்க்க… அதை பார்த்து சிரித்துக்கொண்டு தூரிகையின் கண்ணீரை துடைத்து, “போ…. மாமா சொல்லுறேன் ல… உன் அக்கா கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்… ” என தூரிகையை உள்ளே அனுப்பினான் தீரன்.
என்ன தான் கோபம் இருந்தாலும் தீரனைக்கண்டதும் ஏதோ ஒரு புது நம்பிக்கை உருவாக …மூவருக்கும் டிபன் செய்ய உள்ளே சென்றாள் தூரிகை.
தூரிகை உள்ளே சென்றதும், “உங்க கிட்ட பேச ஒன்னும் இல்லை… ” என வெடுக்கென கூறினாள் மகி.
“என் கிட்ட பேசாம வேற யாருக்கிட்ட டி பேசுவ? ” என கோபம் சுறுசுறுவென ஏற அதை அடக்கியபடி, “தூரிகைய பத்தி கூடவா பேச ஒன்னும் இல்லை? “.என நிதானமாக வினவினான் தீரன்.
“சரி… சொல்லுங்க… ” மகி.
“லவ் யூ… “என சற்றும் தாமதம் இல்லாமல் கூறினான் தீரன்.
அவன் கூறிய பதிலில் சட்டென நிமிர்ந்து தீரனைப்பார்த்தாள் மகி.
“என்னடி அப்பிடி பாக்குற? உனக்கு மட்டும் தான் கண்ணீர் வந்து என் மேல உள்ள காதல உணர்த்துச்சாடி? அன்னக்கி எனக்காக நீ சிந்துன கண்ணீர பாத்து தான்டி உன் மேல எனக்கு காதல் இருக்கு னு தெரிஞ்சுக்கிட்டேன். உன் மடியில அவ்ளோ ஆசையா படுத்து இருந்தேன்டி…. என் அம்மாவ தவிர வேற எந்த பொண்ணு வாசனையையும் என் கிட்ட நெருங்க விடாதவன்டி நானு…. ஆனா உன் மடியில என்னைய மறந்து படுத்து இருந்தேன்டி…. வாழ் நாள் முழுக்க இந்த மடி எனக்கு… எனக்கு மட்டுமே உரிமையாகனும் னு அந்த நொடியே முடிவு பண்ணிட்டேன்…. அத வச்சு தான் நான் உன்னைய லவ் பண்றத உதி கண்டு புடிச்சான்… ” தீரன்.
தீரன் கூறுவதை வியப்புடன் பார்த்தாள் மகி.
“என்ன பாக்குற? உதிக்கு எல்லாம் தெரியும்…. நான் உன்னைய எவ்ளோ காதலிக்கிறேன் னு அவனுக்கு ரொம்ப நல்லாவே தெரியும்… ஆனா கடைசியா நான் பண்ணுன காரியம் தான் அவன கோப படுத்திருச்சு…..” தீரன்.
“உதிக்கு எல்லாம் தெரியுமா? இவன இங்க அனுப்புனது கூட அவன் தானோ? அப்ப தூரி மயங்கி விழுந்ததுக்கு காரணம் அவனுக்கு தெரிஞ்சு இருக்குமா? ” என யோசித்தவாறே, “இப்ப அதுக்கு என்ன? ” என்றாள் மகி.
“அடிப்பாவி…. நான் எவ்ளோ ப்லீங்கோட சொல்லிட்டு இருக்கேன்… அதுக்கு என்ன னு சர்வ சாதாரணமா கேக்குற? “தீரன்.
“பின்ன என்ன பண்ண சொல்லுறீங்க? நீங்க வந்து இப்பிடிலாம் பேசுனதும் நாங்க உடனே பிராணநாதா… னு உங்க பின்னாடியே வந்துறனுமா? உண்மையாவே என்னைய உங்க சரிபாதியா நினைச்சு இருந்தா என்ன பிரச்சனைனாலும் என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருப்பீங்க…அப்பிடி ஒரு எண்ணமே உங்க மனசுல இல்ல… ஊர் முன்னாடி….நீங்க கட்டுன தாலிய….நீங்களே….உங்க கையாலே அறுத்துட்டீங்களே….” என கோபமாக பேச ஆரம்பித்தவள் முடிவில் மனதின் ரணம் தாங்காமல் வெடித்து அழுக ஆரம்பித்தாள் மகி.
“அப்பிடிலாம் இல்லடி….” என கலங்கியபடி மகியை அணைக்க அருகில் சென்றான் தீரன்.
“என்னைய தொடாதீங்க….என் கிட்ட வர்றதுக்கான அருகதை கூட உங்களுக்கு இல்ல….மீறி என்னைய தொட்டீங்கன்னா என்னைய நானே அழிச்சுப்பேன்… ” என பேயை போல கத்தினாள் மகி.
அதைக்கேட்ட தீரன் தவிப்புடன் மகியை பார்த்தான். “நான் செஞ்சது பாவம் தான்டி…. அதுக்கு ஒரு பிராயச்சித்தம் சொல்ல மாட்டியா? ” என உடைந்து கலங்கினான் தீரன்.
தன்னவன் கம்பீரம் குன்றி தன் முன்னே கூட மண்டியிட்டு கதறக்கூடாது என தன் மனதை தேற்றியவாறு, “இப்ப தூரிய தான பாக்க வந்து இருக்கீங்க? அவளோட பிரச்சனைய பாப்போம்…. நீங்க போய்ட்டு அப்பா அம்மா இருக்குறப்ப வாங்க… இப்ப கிளம்புங்க….” என்றாள் மகி.
“அப்பிடிலாம் இல்ல பாப்பா…..” என மேலும் கூற வந்த தீரனை கை நீட்டி தடுத்த மகி, “ப்ளீஸ்…. அப்பா அம்மா இருக்குறப்ப வாங்க…. எனக்கு மாப்பிள்ளை பாத்தாச்சு…. நீங்க இப்படி வீட்ல யாரும் இல்லாதப்ப வந்தா அது தப்பா பரவிரும்… ஸோ… ப்ளீஸ்…. ” என வாயிற்புறத்தை நோக்கி கை காட்டினாள் மகி.
“என் பொண்டாட்டிக்கு மாப்பிள்ளை பாக்குற தைரியம் எவனுக்கு இருக்கு? ” என விழிகளில் ரௌத்திரம் மின்ன கேட்டவன், தன்னவளின் கசங்கிய முகத்தைக் கண்டு, “சரி…. இப்ப போய்ட்டு அப்புறம் வாரேன்…. நாம நிறைய பேசனும்….காலையில எந்திரிச்சதுல இருந்து நீ எதுவும் சாப்பிடல…. போய் சாப்பிடு…. ” என வெளியேறினான் தீரன்.
அவன் பின்னே வந்தவள், “ஒரு நிமிஷம்…. தூரிய தவிர நம்மக்குள்ள பேச எதுவும் இல்லை…. அத ஞாபகம் வச்சுட்டு இனி வாங்க…. ” மகி.
“அப்பிடியா ?” என மகி எதிர்பாராத நேரத்தில் இதழோடு இதழ் பதித்தான் தீரன்.
இதழ் உரசிய நெருக்கத்தில் இருவருக்கும் ஏற்கனவே ஏற்பட்ட இதழ் நெருக்கம் நினைவிற்கு வர…. உள்ளே ஊற்றெடுத்த காதலின் உணர்வால் மயங்கி நிற்க….அவளின் மயக்கத்தை கண்ட தீரன் இன்னும் முன்னேறினான் .
மகியின் இடுப்பை வன்மையாக வளைத்து தன்னவளின் இதழ்களை மேலும் வன்மையாக கையாண்டான் தீரன். அவனின் கரம் தந்த அழுத்தத்தில் தன்னிலை மறந்து தீரனின் கைகளிலேயே துவண்டாள் மகி.
மயங்கி கிறங்கி துவண்ட கொடியென தன் கரத்தில் தவழும் தன்னவளை கண்டவன், தீர்க்கப்படாத விசயங்கள் இன்னும் மீதி இருப்பதை உணர்ந்து மேலும் முன்னேற துடித்த தன் மனதிற்கு கடிவாளமிட்டான் தீரன்.
தன் மனதின் மன்னவனின் தொடுதலில் கிறங்கி கண்களை மூடி இருந்த தன்னவளின் கன்னத்தில் புன்னகையுடன் மெதுவாக தட்டினான் தீரன்.
அதில் சுய உணர்வுக்கு வந்த மகி, தன்னிலை உணர்ந்து துள்ளி விலகி தள்ளி நின்றாள். அவளின் மனநிலையை அறிந்த தீரன், மகியின் முகத்தை பார்த்து, ” இதுக்கு அப்புறமும் தூரிய தவிர நமக்குள்ள பேச வேற எதுவும் இல்லையா மகி? ” என இதமாக வினவி அவளுக்கு தனிமையை தந்து விட்டு அங்கிருந்து கிளம்பினான் தீரன்.
“ச்சே…..அவன் நெருங்கி வந்தா உனக்கு எங்க போச்சு புத்தி? அவன தள்ளி விட்டு இருக்கனும் தான நீ? ” என தன் மனசாட்சியை கடிந்தாள் மகி.
“ஸ்ஆஆஆ…உதடு எரியுதே….கருவாபய….இப்பிடி கடிச்சு வச்சு இருக்கானே….” என செல்லமாக தன்னவனை திட்டியபடி வீட்டிற்குள் நுழைந்தாள் மகி.
தன்னவளின் இதழ் தந்த இன்பத்தில் உல்லாசமாக சிரித்தபடி செல்லும் தீரனையும்….வெட்க புன்னகையுடன் உள்ளே செல்லும் மகியையும் ஒரு ஜோடி கண்கள் தீரா வஞ்சினத்துடன் கவனித்தபடி இருந்தது.
ஆபத்து தங்களின் நெருக்கத்தில் வந்து விட்டதை உணராமல் மகியும் தீரனும் உள்ளத்தில் படர்ந்த காதல் தீயின் வெப்பத்தில் சுகமாக குளிர்காய்ந்தனர்.
(காதல் தீ பரவும்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.