இளங்காலை வெயில் சுள்ளென்று முகத்தில் அறைய, அதை உணராமல்… உணரும் சக்தி இல்லாமல் வயலின் வரப்பின் மீது மல்லாக்க படுத்திருந்தான் தீரன்.
கம்பீர களையான முகம் போய் பஞ்சடைந்த கண்களாய் சவரம் செய்யப்படாமல் வளர்ந்திருந்த முடியும் தீரனை பரதேசியாக காட்சிப்படுத்தியது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் கரங்களில் சிக்கி இருந்த மஞ்சள் கயிற்றை பார்த்தவாறு உலகத்தை மறந்து வயல் வெளியின் நடுவே படுத்திருந்தான் தீரன்.
கண்ணின் இமையோரம் சூடான கண்ணீர்த்துளி அரும்பி இருக்க …தன் சிந்தனையின் நாயகியான மகியின் நினைவுகளில் மூழ்கி இருந்தான் தீரன்.
தன்னை மீறி தன்னவளின் நினைவில் தன்னை மறந்து இருந்த தீரனின் முகத்தில் நிழல் படிய கண்ணை சுருக்கி யாரென நிமிர்ந்து பார்த்தான் தீரன்.
தீரனின் முன்னே சிதம்பரம் கோபமாக நின்றிருந்தார். கண்ணீர் கோடுகள் படிந்த தன் மகனின் முகத்தை கண்ட சிதம்பரம், “என்னடா இது? ” என அதட்டினார்.
“என்ன? “என விட்டேத்தியாக பதில் கேள்வி கேட்டான் தீரன்.
“என்ன என்னவா? பண்ணுனதெல்லாம் பண்ணிட்டு இப்பிடி அழுதுக்கும் திரிஞ்சா எல்லாம் சரி ஆகிருமா? ” சிதம்பரம்.
” என்னைய வேற என்ன பண்ண சொல்லுறீங்க? அவ தான் என்னைய விட்டுட்டு போய்ட்டாளே… அந்த உதி பய கூட இந்த பக்கம் வர்றது இல்லையே… ” தீரன்.
“பின்ன நீ பண்ணுன காரியத்துக்கு உன்னைய எல்லாரும் கொஞ்சிட்டு இருப்பாங்களா? ” சிதம்பரம்.
“நான் நல்லது தான பண்ணுனேன்? ” என கண் கலங்கினான் தீரன்.
“கிருக்கு மாதிரி உலராத தீரா…..நீ என்ன பண்ணுன…அந்த காரியத்தோட வீரியமும் உனக்கு நல்லா தெரியும்….தெரிஞ்சும் உன் மனச மறைச்சு நீ இத பண்ணி இருக்க….நீ ஏன் அப்பிடி பண்ணுன னு மகிக்கு தெரியுமா என்ன? எனக்குமே நீ உண்மைய சொன்னதுக்கு அப்புறம் தான தெரியும்… அதே போல நீ மகிக்கும் புரிய வச்சு இருக்கனும்….இல்ல நீ பண்ணுறதுக்கு முன்னாடி மகிக்கிட்ட ஒரு தடவ சொல்லி இருக்கனும்….உன் இஷ்ட்டத்துக்கு பண்ணிட்டு இப்பிடி பைத்தியக்காரன் மாதிரி நீ பாட்டுக்கும் திரிஞ்சா எல்லாம் சரி ஆகிருமா? ” சிதம்பரம்.
“என்னைய என்னப்பா பண்ண சொல்லுறீங்க? அவ முகத்துல முழிக்க கூட எனக்கு தகுதி இல்லையே….” என கரத்தில் முகம் புதைத்து குலுங்கி அழுதான் தீரன்.
தன் மகன் கண்ணீர் சிந்துவதை காண சகிக்காமல், “டேய்…இங்க பாரு…” என வரப்பில் தீரனின் அருகே அமர்ந்தார் சிதம்பரம்.
தன் அருகில் தந்தை அமர்ந்ததும் அவர் மடியில் முகம் புதைத்து சிறு மழலையென தேம்பி தேம்பி அழுதான் தீரன்.
“ப்பா… அவ என்னைய மன்னிக்க மாட்டாளா ப்பா? என்னைய எப்பிடி அவ மன்னிப்பா? மன்னிக்க நான் என்ன தப்பா பண்ணி இருக்கேன்? பாவம் ல பண்ணி இருக்கேன்… ” என கேள்வியும் அவனே கேட்டு பதிலும் அவனே கூறிக்கொண்டு கதறி அழுதான் தீரன்.
அன்று மகி பஞ்சாயத்தில் அழுது கொண்டே ஊரை விட்டு சென்றதில் இருந்து இப்பிடித்தான் கடந்த வருடங்களாக அழுது கொண்டே இருக்கிறான் தீரன்.
அன்றைய இரவு தினம் படம் போல சிதம்பரத்தின் கலங்கிய கண் முன்னே விரிய தொடங்கியது.
பஞ்சாயத்து முடிந்த பிறகு தீரனை பார்க்க முடியாமல் தேடி தேடி ஏமாற்றம் அடைந்து மகிழ்விழியிடம் கெஞ்சினார் சிதம்பரம்.
“அம்மாடி மகி… என்னைய மன்னிச்சுருமா… என் பையன் இப்பிடி பண்ணக்கூடியவன் இல்ல மா… கொஞ்சம் யோசி மா… ” சிதம்பரம்.
“இல்ல ஸார்… உங்க பையன் பண்ணுனது சரி தான்… அவருக்கு ஆரம்பத்துல இருந்தே என்னைய புடிக்காது… இதுல நான் அவர ரெண்டு தடவ அடிச்சு இருக்கேன்… எந்த ஆம்பளைக்கும் கோபம் தான வரும்… அதான் இப்பிடி பழி வாங்கி இருக்காரு… நான் இந்த தண்டனைய ஏத்துக்கிறேன் ஸார்… ” என கண்களில் கண்ணீர் தழும்ப புன்னகைக்க முயன்றாள் மகி.
“என்னமா ஸாரு மோரு னுலாம் சொல்லுற….மாமா னு சொல்லுமா… ” என சிதம்பரமும் கண் கலங்கினார்.
“ஸார் ப்ளீஸ்….என்னைய வற்புறுத்தாதீங்க… நான் என்னோட எல்லையிலயே இருந்துக்கிறேன்… ” என தன் பையை எடுத்துக் கொண்டு தன் பெற்றோருடன் நடக்க ஆரம்பித்தாள் மகி.
மகியுடன் தூரிகையும் உதியனும் செல்வதை கண்டு அதை தடுக்க முடியாத நிலையில் தான் இருப்பதை எண்ணி மிகுந்த வேதனை அடைந்தார் சிதம்பரம்.
“அம்மாடி… என்னைய மன்னிச்சுருமா… ” என மானசீகமாக தன்னுள்ளே செல்லும் மகியின் உருவத்தை பார்த்து மன்னிப்பு கேட்டார் சிதம்பரம்.
பேருந்தில் ஏறி அனைவரும் ஊரை விட்டு சென்ற பிறகு கோபத்துடன் தனது வீட்டிற்கு நுழைந்த சிதம்பரம், தனது மனைவியின் நிலையை கண்டு திகைத்து நின்றார்.
தன் மகன் செய்த காரியத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் பேச்சு மூச்சின்றி மயங்கி கிடந்தார் கருப்பாயி. தன் ஒரே மகன் தன் கண் எதிரே செய்த செயலால் மன அழுத்தத்துடன் வீட்டிற்குள் நுழைந்த கருப்பாயின் உடல் ஒத்துழைக்க மறுக்க அப்படியே மயங்கி சரிந்து இருந்தார் கருப்பாயி.
மனைவியை அந்த நிலையில் கண்டதும் பதறி கருப்பாயின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார் சிதம்பரம்.
தண்ணீரின் உபயத்தால் கண் விழித்த கருப்பாயி கேட்ட முதல் கேள்வி, “எங்க உங்க மகன்? ” என்பது தான்.
“உங்க மகன்… ” என மனைவி கூறியதில் இருந்தே தன் சரிபாதியின் கோபத்தை உணர்ந்த சிதம்பரம், “அவன்… தெரியல… அவன காணோம்… ” என பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.
அந்நேரம் சரியாக வீட்டிற்குள் நுழைந்த தீரன், தன் தாய் இருந்த நிலையை பார்த்து விட்டு,” அம்மா… என்ன ஆச்சு? ” என பதறினான்.
“அவன் வாயால என்னைய அம்மா னு கூப்பிட கூடாது னு சொல்லுங்க… ” என உறுதியான குரலில் தன் கணவரிடம் கூறினார் கருப்பாயி.
தன் தாயின் கூற்றில் அதிர்ந்து உறைந்து நின்றான் தீரன்.
“இனி அவன் என் முகத்துலயே முழிக்க கூடாது… எனக்கு ஏதாவது ஆனா கூட அவன் கொள்ளி வைக்க கூடாது…..இனி நான் அவனுக்கு அம்மா இல்ல… ” என ஆவேசமாக கூறி விட்டு அறைக்குள் நுழைந்தார் கருப்பாயி.
அதைக்கேட்ட தீரன் தலைகுனிவுடன் தனது அறைக்குள் நுழைந்தான். இருவரையும் கவனித்த சிதம்பரம் தீரனின் பின்னே கோபத்துடன் சென்றார்.
அறைக்குள் நுழைந்த தீரனின் தோள் பிடித்து திருப்பி அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார் சிதம்பரம். அறை வாங்கியும் அமைதியாக தலை குனிந்து நின்றிருந்தான் தீரன்.
“வாய தொறந்து பேசு டா… உன் அம்மா பேசுனத கேட்டியா? ஏன்டா இப்பிடி பண்ணுன? ” என மற்றொரு முறை அறைந்தார் சிதம்பரம்.
அப்பொழுதும் எதுவும் பேசாமல் அமைதியாக தலை குனிந்து நின்றான் தீரன்.
“சொல்லுடா… ஏன் இப்பிடி பண்ணுன? மகிய உனக்கு புடிக்கல னு அழுத்தமா என் கிட்ட சொல்லி இருந்தா நாங்க கல்லியாணத்த நிறுத்தி இருப்போமே… ஏன் தீரா இப்பிடி பண்ணுன? ரெண்டு பொண்ணோட சாபத்த வாங்கிட்டியேடா…. பெண் பாவம் பொல்லாதது தீரா… ஐயோ…. ” என ஆக்ரோஷமாக ஆரம்பித்து தன் தலையில் அடித்துக் கொண்டு அழுகையில் முடித்தார் சிதம்பரம்.
தன் தந்தை தன் முன்னே அழுவதை காண பொறுக்காமல் மிக மெல்லிய குரலில் தனக்கு மட்டுமே தெரிந்த தான் செய்த காரியத்திற்கான காரணத்தை கூறினான் தீரன்.
அதை முழுவதுமாக கேட்ட சிதம்பரம், “அடப்பாவி மகனே…. இப்ப சிலுவைய நீ சுமந்துட்டு இருக்கியேடா… இத ஒரு வார்த்தை மகி கிட்ட சொல்லி இருக்கலாமே டா… ” எனக் கதறினார் சிதம்பரம்.
“விடுங்கப்பா… தூரியும் மகியும் பாதுகாப்பா இருப்பாங்க… அது போதும்… ” என பெருமிதத்துடன் புன்னகைத்தான் தீரன்.
“எப்பிடி டா? ” என மகனின் மனதை நினைத்து கலங்கி வினவினார் சிதம்பரம் .
“காதலிச்சா எல்லாம் முடியும் ப்பா… ” என மகியின் கழுத்தில் தான் கட்டிய மஞ்சள் கயிற்றை தன் கையில் இறுக்க பற்றினான் தீரன்.
அன்று இறுக்க பற்றியவன் தான் இரண்டரை வருடங்களாக இன்னும் தளர விடவில்லை. மகியை சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை தீரன்.
உண்மையை தாயிடம் மட்டுமன்றி வேறு யாரிடமும் கூறக்கூடாது என தீரன் உறுதி வாங்கி விட கருப்பாயி இன்னும் தீரன் மீது கோபமுடன் தான் இருந்து வருகிறார். தன் மகனின் மன நிலையை நன்கு அறிந்த சிதம்பரம், மகியை சென்று காணுமாறு கடந்த சில மாதங்களாக தீரனை வற்புறுத்தி வருகிறார்.
தீரனும் தனக்குள்ளே மறுகி மறுகி அதை தவிர்த்து வருகிறான். கடந்த கால நினைவுகளில் இருந்து விடுபட்ட சிதம்பரம், “தீரா… இப்பிடியே இருக்காதடா… ஏதாவது பண்ணுனா தான வழி பொறக்கும்? ” என தன் மடியில் கிடந்த தீரனை உசுப்பினார்.
“பயமா இருக்கு ப்பா… நான் போய் மகிய பாத்தா எதுக்காக இத பண்ணுனேனோ அது நடந்துருமோ னு பயமா இருக்கு ப்பா… ” தீரன்.
“என் மகனா நீ? என் மகன் தீரன் இந்த மாதிரி விஷயத்துக்குலாம் பயப்பட மாட்டானே… அப்பிடியே பிரச்சனை வந்தாலும் அத சுலபமா சமாளிப்பானே…. எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு இல்லையா? ” என லேசாக சிரித்தார் சிதம்பரம்.
“இப்ப நான் என்னப்பா பண்ணட்டும்? ” தீரன்.
“என் கிட்ட ஏன்டா கேக்குற? ஊரு உலகத்துல லவ்வுக்காக என்னென்னமோ பண்ணுறான்… நீ என் கிட்ட கேட்டுட்டு இருக்க… ” சிதம்பரம்.
“அவ முகத்த எப்பிடி பாக்க போறேன் னு தெரியலயே…” தீரன்.
“ரொம்ப காலத்த வீணாக்கிட்ட தீரா… நீ செஞ்ச காரியத்தால பிரச்சனைய தள்ளி தான் போட்டு இருக்க …பிரச்சனைய முடிக்கல…. இவ்ளோ காலம் இத யோசிக்காம விட்டுட்டு அழுது காலத்த வீணாக்கிட்டியே தீரா….” சிதம்பரம்.
“ஆமா ப்பா….யோசிக்கிறேன்….இதுக்கெல்லாம் காரணகர்த்தா இன்னும் வெளில தான் சுத்துது….” என பழைய தீரனாக மாறி தாடையை தடவினான் தீரன்.
“இரண்டரை வருஷமா யோசிச்சிட்டு தான் இருக்க… யோசிச்சதெல்லாம் போதும்…. நாளைக்கே என் மருமகள பாக்க கிளம்புற….அவள சமாதானம் பண்ணுற வழிய பாரு…” சிதம்பரம்.
“சரி ப்பா…” என மீசையை முறுக்கியவாறு எழுந்து நின்றான் தீரன்.
“முதல்ல இந்த சாமியார் வேஷத்த மாத்து….” என கூறி விட்டு எழுந்து வீட்டை நோக்கி நடந்தார் சிதம்பரம்.
தன் அப்பா கூறிய விஷயத்தில் தான் இன்னும் பிரச்சனையை முடிக்கவில்லை என்ற செய்தி தீரனின் செவிப்பறையை அடித்து கிழிக்க… தீவிரமாக சிந்தித்தான் தீரன்.
தனக்குள் தீர யோசித்து ஒரு தீர்க்க முடிவுக்கு வந்த தீரன், ” அடியேய் ராங்கிக்காரி…மாமன் வர்றேன்டி …” என கூறி நீண்ட இடைவெளிக்கு பிறகு முழுமையான புன்னகை புரிந்தான்.
அங்கு கல்லூரியில் வகுப்பில் பாடத்தை கவனிப்பது போல் தீரனின் நினைவில் மூழ்கி இருந்த மகிழ்விழியை சந்திக்க விசிட்டர் வந்துள்ளதாக ப்யூன் வந்து கூற அசுவாரஸ்யத்துடன் எழுந்து வெளியே சென்றாள் மகி.
கல்லூரி வளாகத்தில் மரத்தடியில் வாட்ட சாட்டமாக சினிமா ஹீரோ போல் மகிழ்விழிக்காக காத்திருத்தான் ஒருவன்.
அவனை யாரென தெரியாததால் அவன் அருகே சென்று, “எக்ஸ்க்யூஸ் மீ… நான் தான் மகிழ்விழி… நீங்க? ” என கேள்வியாக அவனை பார்த்தாள் மகிழ்விழி.
தன்னை கேள்வியாக பார்த்த விழிகளைக் கண்ட அப்புதியவன், “வாவ்…. வொன்டர்ஃபுல்… வாட் எ க்ரேஸி ஐஸ்…. ” என வியந்தான்.
அவன் கூறியதில் சற்று கோபமடைந்த மகி, “ஹலோ… யார் நீங்க? ” என்றாள்.
” ஓஓ… ஸாரி… நான் ரஞ்சன்… மனோரஞ்சன்… ” என கை நீட்டி புன்னகைத்தான் அப்புதியவன்.
நீட்டிய அவனது கரத்தை தனது கீழ்க்கண்ணால் கண்டவள் தன் கைகளை இறுக்க கட்டிக்கொண்டு ,”மிஸ்டர் மனோரஞ்சன்… நீங்க எதுக்காக என்னைய பாக்க வந்தீங்க ?” என நிமிர்வுடன் கேட்டாள் மகி.
“வாவ்… உங்க பேருக்கு ஏத்தது போல உங்க கண்ணு செமங்க….சும்மா ஆள கிறங்க அடிக்குது….” என மயங்குவது போல நடித்தான் மனோரஞ்சன்.
“டிஸ்கஸ்டிங்… ” என்றவாறு அங்கிருந்து நகர்ந்தாள் மகி.
“ஓகே ஓகே….ஸாரி…..காம் டவுன் ப்ளீஸ்…” என தன் இரு கைகளையும் உயர்த்தி சரணடைவது போல் உயர்த்தினான் மனோரஞ்சன்.
“யார் நீங்க? என்னைய எதுக்கு பாக்க வந்தீங்க? ” என கடினக்குரலில் வினவினாள் மகி.
“ஆன்டி அங்கிள் எதுவும் உங்க கிட்ட சொல்லலயா? ” என ஆச்சரியமாக வினவினான் மனோரஞ்சன்.
“இல்லையே….” என குழப்பத்துடன் கூறினாள் மகி.
“ஓஓஓ…ஸாரி… நான் சொல்லி இருப்பாங்க னு நினைச்சேன்…” மனோரஞ்சன்.
“அதான் சொல்லலயே… இப்பவாவது சொல்லுறீங்களா? ” மகி.
” நான்…. நம்ம ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ண நம்ம பேரன்ட்ஸ் முடிவு பண்ணி இருக்காங்க… ” மனோரஞ்சன்.
“வாட்? ” என அதிர்ந்தாள் மகி.
“எஸ்….உங்க வீட்ல உங்களுக்காக பாத்து இருக்குற மாப்பிள்ளை நான் தான்… ” என அழகாக புன்னகைத்தான் மனோரஞ்சன்.
அதைக்கேட்ட மகி அதிர்ந்து பேச வார்த்தை வராமல் திகைத்து நின்றாள். திகைத்த அவளது முகத்தை பார்த்த மனோரஞ்சன், “நான் எதார்த்தமா வீட்ல கம்பல் பண்ணுனாங்க னு தான் உங்கள பாக்க வந்தேன்… பட் உங்கள பாத்ததுக்கு அப்புறம் முடிவு பண்ணிட்டேன்… இனி எதுக்காகவும் யாருக்காகவும் உன்னைய விட்டுக்குடுக்க மாட்டேன் மகி….எஸ்…ஐ லவ் யூ மகி…” என ஒரு பறக்கும் முத்தத்தை மகிழ்விழிக்கு பரிசளித்து விட்டு சிரித்தபடி மகியை நீங்கி சென்றான்.
மகிழ்விழியை நெருங்கி வர நினைத்தவனுக்கு சத்தமில்லாமல் ஒரு வில்லன் உருவாகி இருப்பதை அறியாமல் தன் போக்கில் உற்சாகமாக பாட்டு பாடியபடி மகியை சந்திக்க தயாராகி கொண்டிருந்தான் தீரன்.
(காதல் தீ பரவும்…. )
-செல்லம்மாள்பாரதி
No comments yet.