தீரனை திரும்பி கூட பார்க்காமல் மகிழ்விழி மருத்துவமனைக்குள் நுழைய… ,”சரித்தான் போடி…..பெரிய இவ… உன் வாய அடக்க தெரிஞ்ச எனக்கு உன் திமிரையும் அடக்க தெரியும் டி… நாளைக்கி பாருடி இந்த தீரன… ” என மனதினுள் புகைந்தவாறு அவளை பின் தொடர்ந்து மெதுவாக உள்ளே நுழைந்தான் தீரன்.
தீரன் உள்ளே வருவதற்குள் மகி தீரன் திருமண விசயத்தை உதியன் செண்பகத்திடமும் பல்லவியிடமும் கூறி முடித்தான்.
தன் எதிரே பல்லவியை பார்த்த தீரன், ” நாம செஞ்ச காரியத்துக்கு இவங்க என்ன சொல்ல போறாங்களோ னு தெரியலயே…. ” என மனதினுள் நினைத்தவாறு அவர்களை நோக்கி சென்றான்.
அப்பொழுது வேறொரு அறையில் இருந்து கைக்குழந்தையுடன் வெளி வந்த மகியை கண்டு ஒரு நிமிடம் உள்ளம் ஆடிப்போய்விட்டான் தீரன்.
குழந்தையை கொஞ்சியபடி தூரிகையின் அறைக்குள் மகி நுழைந்த பிறகும் அவளது பிம்பம் தீரனின் கண்களை விட்டு அகலவில்லை.
தான் கட்டிய மஞ்சள் கயிறு இவள் என்னவள் என்ற உரிமை நெஞ்சினில் பரவ… ” இதே போல எங்க ரெண்டு பேருக்கும் பொறக்கும் குழந்தைய அவ இப்பிடித்தான் நெஞ்சோட சேத்து அணைச்சுக்கனும்….அப்பிடியே என்னையயும்…” என தீரனின் எண்ணம் காதலில் மூழ்கி முத்தெடுக்க, அவனை செண்பகம் உலுக்கி எடுக்க தன் கனவுலகில் இருந்து வெளிவந்தான் தீரன்.
“ஆங்….சொல்லுங்க சித்தி…” என ஒருவித மயக்கத்தில் தத்தளித்தபடி கேட்டான் தீரன்.
“என்ன காரியம் பண்ணி வச்சு இருக்க தீரா? ” செண்பகம்.
“நான் என்ன பண்ணேன் சித்தி? ” தீரன்.
“நீ என்ன பண்ணல? மகிய அடிச்சு இருக்க… அவ அனுமதி இல்லாம அவ விருப்பம் என்ன னு தெரிஞ்சுக்காம அவளுக்கு தாலி கட்டி இருக்க தீரா நீ.. இது உனக்கு தப்பு னு தெரியலயா? ” செண்பகம்.
“அவளும் தான் என்னைய அடிச்சா… என்னமோ நான் அடிக்கிறத மட்டும் பெருசா சொல்லுறீங்க? அவள விட வயசுல பெரியவன் நானு…..ஒரு ஆம்பள புள்ளைய கை நீட்டி அடிச்சு இருக்கா னு அவள கேக்காம என்னையவே கேக்குறீங்க? ” தீரன்.
“அப்ப உன்னைய அடிச்சுட்டா னு பழிவாங்க தான் அவளுக்கு தாலி கட்டுனியா தீரா?” செண்பகம்.
“அய்யோ… இவங்க என்ன நம்ம மனசுல உள்ளத புட்டு புட்டு வைக்கிறாங்க…இப்பிடியே போனா நம்ம ப்ளான கண்டுபுடிச்சுருவாங்களே…” என மனதினுள் கிலி பரவ அருகில் நின்ற பல்லவியை பார்த்தான் தீரன்.
பல்லவியும் முகத்தில் அதே சந்தேகம் கலந்த பயத்துடன் தீரனையே பார்த்தவாறு நின்றிருந்தார். உதியனும் முகத்தில் சந்தேகம் பரவ தீரனை பார்த்தான்.
அனைவரின் பார்வையையும் கவனித்தவன், “இப்ப ஏதாவது சமாளிச்சு ஆகனுமே…” என அவசரமாக தனது முக பாவனையை மாற்றி, “என்ன அத்தை உங்க மருமகன சந்தேகபடுறாங்க நீங்க அமைதியா நிக்கிறீங்க? இந்நேரம் மருமகனுக்கு சப்போர்ட்டுக்கு வர வேண்டாமா? ” என சிரித்தபடி பல்லவியிடம் வினவினான் தீரன்.
தீரன் தன்னை அத்தை எனக்கூறியதும் மனதில் இருந்த சந்தேகம் காணாமல் போக தெளிவடைந்தார் பல்லவி. ” இருந்தாலும் கொஞ்சம் நிதானிச்சு இருக்கலாம் மாப்ள நீங்க….” என குறைபட்டார் பல்லவி.
“என்ன பண்றது அத்தை? ரெண்டு நாளுல என் பொண்டாட்டி க்கு காலேஜ் ஓப்பன் ஆகிருமாம்….அவ வேற போறேன் போறேன் னு சொல்லிட்டு நின்னா…அதான்…” என முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூறினான் தீரன்.
மகிக்கும் தீரனுக்கும் இடையே நடந்த விவாதங்கள் எதுவும் தெரியாத செண்பகமும் பல்லவியும் தீரன் கூறியதை அப்படியே நம்பி சிரித்தனர்.
இருவருக்கும் இடையே நடந்த பூசல்கள் அனைத்தும் தெளிவாக தெரிந்த உதியன், தீரனை சந்தேகத்துடன் பார்த்தான்.
“மகிய புடிக்கல னு தான அண்ணே சொன்னாங்க….அது எப்படி அடுத்த அஞ்சு நிமிஷத்துக்குள்ள மகிய புடிச்சு இருக்கும்… அண்ணே என்ன இப்பிடி அந்தர் பல்டி அடிக்கிறாங்க? ஒன்னும் புரியலயே…” என யோசிக்க யோசிக்க உதியனுக்கு தலை வெடிப்பது போல் இருக்க அமைதியாக மருத்துவமனையின் வெளியே சென்று அமர்ந்தான் உதியன்.
“அண்ணே இப்பிடிலாம் பேசுறவர் இல்லையே….அவங்க முகத்துல தெரியுற சிரிப்பு பொய்யால இருக்கு…அம்முவ இவரு ஒரு தடவ கூட காதலோட பாத்து நான் பாத்தது இல்லையே…அது எப்படி அஞ்சு நிமிஷத்துக்குள்ள தான் வாழ்க்கைய முடிவு பண்ண முடியும்? ” என யோசிக்க யோசிக்க வலித்த தலையை தன் இரு கைகளால் தாங்கியபடி அமர்ந்து இருந்தான் உதியன்.
அப்பொழுது மெல்லிய கரம் ஒன்று உதியனின் தோளை தொட….அக்கரத்திற்கான முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் யாரென உணர்ந்து தன் தோளில் பதிந்த கையை அழுத்தமாக பற்றினான் உதியன்.
“என்ன ஆச்சு உதி? ” என மெல்லிய குரலில் வினவினாள் மகி.
தூரியிடம் பேசிக்கொண்டிருந்த மகி, செண்பகத்தையும் பல்லவியையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு அறைக்குள் நுழைந்த தீரனை கண்டதும் அமைதியானாள்.
“என்ன தூரி? நான் உள்ள வர்ற வரைக்கும் பேச்சு சத்தம் பலமா கேட்டுச்சு.. இப்ப ஒன்னத்தையும் காணோம்….” என புன்னகையுடன் மகியை ஆராய்ந்தவாறு தூரிகையிடம் கேள்வி எழுப்பினான் தீரன்.
“வாழ்த்துக்கள் அண்ணா….” என சிரித்தாள் தூரிகை.
“ஹா….ஹா… என்ன சொல்லுறா என் பொண்டாட்டி? ” என மகியை நெருங்கி நின்றான் தீரன்.
நெஞ்சினில் அனல் காற்று வீச…, “எப்பிடி இவனால இப்பிடி பச்சோந்தி மாதிரி மாற முடியுது? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் என்னைய புடிக்கல னு கத்திட்டு கிடந்தவன்….இப்ப பொண்டாட்டியாம்லோ… ” என மனதினுள் வெந்தாள் மகி.
மகியின் எண்ணப்போக்கை அவள் முகத்தில் இருந்து உணர்ந்த தீரன், “நல்லா குழம்புடி…..இத விட நாளைக்கி இருக்கு உனக்கு… ” என மனதினுள் நினைத்தவாறு நின்றான்.
“என் அக்காவ நீங்க அப்புறம் தனியா சைட் அடிச்சுக்கங்க அண்ணா… என்னைய பக்கத்துல வச்சுட்டு என்ன காரியம் பண்றீங்க? ” என தன் கவலையை மறந்து சிரித்தாள் தூரிகை.
“அது என்ன என்னைய அண்ணன் ங்கிற… என் பொண்டாட்டிய அக்காங்கிற? ” தீரன்.
“அப்ப நான் அண்ணினு சொல்லவா? ” தூரிகை.
“வேண்டாம் வேண்டாம்… என்னைய அக்கா னே கூப்பிடு… அவர வேணுனா மாமா னு கூப்பிட்டுக்க…..” என உதியனை மனதில் நினைத்து அவசர அவசரமாக கூறினாள் மகி.
“அய்…இதுவும் நல்லா தான் இருக்கு….”என சிரித்தாள் தூரிகை.
மகி கூறியதை கேட்ட தீரன், அவளை கூர்ந்து நோக்க….தீரனின் பார்வையை உணர்ந்த மகி, “நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க….நான் குழந்தைய அவங்க அம்மா கிட்ட குடுத்துட்டு வர்றேன்… ” என கூறி விட்டு யார் பதிலையும் எதிர்பாராமல் அறையை விட்டு வெளியே வந்தாள் மகி.
அறையை விட்டு வெளியே வந்ததும் மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தினாள் மகி. “என்ன இது அவன் கிட்ட எனக்கு இப்பிடி மூச்சு முட்டுது… ” என நினைத்தவாறு குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைத்தவள் தீரனின் சுவாசம் தன்னை தொடர்வது போல் உணர….மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள் மகி.
அப்பொழுது வெளியே கையால் தலையை தாங்கியபடி அமர்ந்திருக்கும் உதியனை கண்ட மகி, அவனை நோக்கி நடந்தாள்.
உதியனின் அருகில் நின்று, “என்ன ஆச்சு உதி? ” எனக் கேட்க…அது உதியனின் செவியில் விழாமல் போனது.
மெதுவாக தன் நண்பனின் தோளை தொட்டதும் அதில் உணர்வடைந்த உதியன், அது தன் தோழியின் கரம் என்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்காமலேயே அக்கரத்தை அழுந்த பற்றினான் உதியன்.
” என்ன ஆச்சு உதி? ” என மீண்டும் மெல்லிய குரலில் வினவினாள் மகி.
“பயமா இருக்கு அம்மு…” என கண் கலங்கினான் உதியன்.
“ஹேய்….இப்ப எதுக்கு கண் கலங்குற? நீ கண் கலங்குற அளவுக்கு என்ன நடந்துச்சு? ” மகி.
“ஒன்னுமே நடக்கலயா அம்மு? இவ்ளோ நடந்தும் எப்பிடி நீ இவ்ளோ சாதாரணமா இருக்க? “உதியன்.
” ஓஓ… நீ தீரன நினைச்சு குழம்புறியா? அவன நான் சரி பண்ணிருவேன் உதி… ” மகி.
“அப்ப உனக்கு அண்ணன புடிச்சு இருக்கா? ” உதியன்
“எனக்கு புடிச்சு இருக்கு….புடிக்கல… அது வேற விஷயம் உதி… தீரன் என் அப்பா அம்மா பாத்த மாப்ள… தீரன புடிக்க எனக்கு அந்த ஒரு காரணம் போதும்…..அத்தோட அவன ஒரு பொண்ணு வேண்டாம் னு சொல்ல எந்த காரணமும் இல்லையே…..சமுதாய அக்கறை இருக்குறவன்…. நல்லா படிச்சு இருக்கான்… பாக்கவும் நல்லா இருக்கான்… தப்புனா அப்பவே தட்டி கேக்குறான்… நல்ல குடும்பம்… இத விட ஒரு பொண்ணுக்கு என்ன வேணும்? அத்தோட இப்பலாம் அவன பாத்தாலே என் மனசு படபடனு அடிச்சுக்குது… அப்பிடினா என் மனசுக்கு அவன புடிச்சு இருக்கு னு தான அர்த்தம்? என்ன அவன் தாலி கட்டுன முறை வேணுனா தப்பா இருக்கலாம்…. ஆனா என்னைக்கும் என் நம்பிக்கைய உடைக்க மாட்டான் னு நம்புறேன் உதி… ” என தன் மனதில் உள்ளவற்றை கூறினாள் மகி.
” என்னமோ நீ சொல்லுற… ஆனா அண்ணன என்னால நம்ப முடியல… அவரு ஏதோ ப்ளான் பண்றாரு… ஆனா எந்த பொண்ணோட வாழ்க்கை விசயத்துலயும் விளையாட மாட்டாரு னு நம்புறேன்… ” உதி.
“விடு உதி… எனக்கு துணையா நீங்க எல்லாம் இருக்குறப்ப எனக்கு என்ன கவலை? அத்தோட அன்னக்கி தீரனுக்கு ஒன்னுனதும் பல வருஷமா வராத கண்ணீர் எனக்கு கொட்டுனுச்சே…. அப்ப அவன் என் உணர்வோட கலந்து இருக்குறதுனால தான அது நடந்து இருக்க முடியும்? காரணம் காரியம் இல்லாம இங்க எதுவும் நடக்குறது இல்ல உதி… இனி என்ன நடந்தாலும் நான் ஜாலியா தீரன லவ் பண்ண போறேன் ….” மகி.
மகி கூறியதை கேட்ட உதியன், நிம்மதியாக புன்னகை புரிந்தான். அப்பொழுது தூரிகையை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளியபடி இவர்களை நோக்கி வந்த தீரனின் காதில் மகி இறுதியாக கூறிய வரிகள் மட்டும் விழ, “என்னைய அடிச்சு அவமானபடுத்தி…என் அப்பா அம்மாவ லாம் மயக்கி எனக்கு எதிரா திருப்பி திமிரா திரிஞ்சுட்டு நீ என்னைய லவ் பண்ணுறியா? ” என பொறுமியபடி அவர்களை நோக்கி தூரிகையுடன் வந்தான் தீரன்.
“என்னைய பாக்க வந்துட்டு நீங்க ரெண்டு பேரும் என்ன பண்றீங்க? ” என சிரித்தபடி கேட்டாள் தூரிகை.
தூரிகையின் கேள்வியில் திரும்பி தீரனையும் தூரிகையையும் கண்டவர்கள் பிறகு சிரித்து நால்வருமாக பேச ஆரம்பித்தனர். அனைவரும் பேச பேச நேரம் கடந்ததை அறியாமல் இருக்க….சிதம்பரம் வந்து அனைவருக்கும் நினைவுபடுத்தினார்.
“தூரி….நல்லா தூங்கி எந்திரி….நாளைக்கி பஞ்சாயத்து இருக்கு….அங்க வந்து பயப்படாம உண்மைய சொல்லனும்….சரியா? ” என்றவாறு தூரிகையை அவளது அறையில் விட்டுவிட்டு சிதம்பரத்தை மருத்துவமனையில் விட்டு விட்டு அனைவரும் புறப்பட்டனர்.
மகி, தூரியை ஆதரவாக அணைத்து விடுவித்துவிட்டு உதியனுடன் அவனது இல்லத்திற்கு கிளம்பினாள்.
நாளை பஞ்சாயத்தில் வைத்து முறையாக ஊருக்கு மகி தீரனின் திருமணத்தை அறிவித்து விட்டு பிறகு மகியை தங்களது வீட்டிற்கு அழைத்து செல்லலாம்…அதுவரை மகி எப்போதும் போல் உதியனின் வீட்டிலேயே இருக்கட்டும் என பெரியவர்கள் அனைவரும் முடிவு செய்து விட மகி உதியனுடன் இல்லத்திற்கு திரும்பினாள்.
மகியின் களைப்பை அவளது முகத்தில் பார்த்த பல்லவி அவளிடம் எதுவும் கேட்காமல் உறங்க கூறினார்.
“என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்….” என்ற மனநிலையுடன் நிம்மதியாக உறங்கினாள் மகிழ்விழி.
“நாளைக்கி ஊரு முன்னாடி ராங்கிக்காரி அவமானப்பட்டு நிக்க போறா….” என நினைத்து சந்தோஷப்பட்டவாறே உறங்கினான் தீரன்.
மறுநாள் விடியலில் இருந்தே உதியனின் மனம் ஒரு நிலையில் இல்லை. ” அம்மு.. நீ பஞ்சாயத்துக்கு வந்தே ஆகனுமா? ” என நூறாவது முறையாக மகியிடம் உதியன் கேட்க…. அமைதியாக புன்னகைத்தாள் மகி.
“புரிஞ்சுக்கோ உதி… இன்னக்கி தூரி பக்கத்துல நான் இருந்தே ஆகனும்…அது எவ்ளோ முக்கியம் னு உனக்கு தெரியும் தான? அத்தோட நேத்து எனக்கு நடந்த அவசர கல்லியாணத்த பத்தி பேசுவாங்கல்ல…அப்ப நான் அவசியம் ல? ” மகி.
“என்னவோ போ….எனக்கு ஒரு மாதிரி இருக்கு…” என்றவாறு தூரிகையை அழைத்துக்கொண்டு வர மருத்துவமனைக்கு கிளம்பினான் உதியன்.
(காதல் தீ பரவும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.