காதல் தீ -29

Chellammal Bharathi | 08 Dec 2025 | Share

              எரிமலையின் சீற்றத்துடன் வீட்டிற்குள் நுழைந்த தீரன் அனைத்துப் பொருட்களையும் தூக்கி போட்டு உடைத்தான். தன் மகனின் அடங்க மாட்டாத கோபத்தை கண்ட கருப்பாயி அஞ்சி நின்றார். 

               வீட்டிற்கு வெளியே செருப்பை கழட்டுகையில் வீட்டிற்கு உள்ளே தீரன் பொருட்களை உடைக்கும் சத்தம் கேட்டு அவசர அவசரமாக உள்ளே நுழைந்தார் சிதம்பரம். 

              “என்ன பண்ணிட்டு இருக்க தீரா? “சிதம்பரம். 

              “தெரியல… எல்லாத்தையும் உடைச்சுட்டு இருக்கேன்… உங்க மண்டைய என்னால உடைக்க முடியல… அதான்… ” என கோபம் தாங்காமல் மற்றொரு பொருளை எடுத்து உடைத்தான் தீரன். 

              “தீரா… என்ன இது? ” என தன் மகனை அதட்டினார் சிதம்பரம். 

            அவர் கேள்விக்கு பதில் கூற வாய் திறந்த தீரன், வாயிலில் உதியனுடன் அவனை ஒட்டியவாறு நுழைந்த மகியை கண்டவன் ,”இதோ… வர்றாளே… மகராசி… தான் நினைக்கிறது.. செய்யிறது மட்டும் தான் சரி னு நினைச்சுட்டு இருக்காளே…எல்லாம் இவளால தான்….” என கோபத்துடன் சீறினான் தீரன். 

              “ஏன்? நான் என்ன பண்ணேன்? அங்க அவங்க கேக்குறப்ப முடியாது னு சொல்ல வேண்டியது தான? இதுக்கு நான் மட்டுமா காரணம்? ” என மெதுவாக கூறினாள் மகி. 

             “பேசாத…வாய தொறந்த….அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்…..”தீரன். 

            “இப்ப மட்டும் என்ன? மனுஷனவா நடந்துக்குறீங்க? “என வாய்க்குள் முனுமுனுத்தாள் மகி. 

            “நான் அத்தனை தடவ சொன்னேன்…எங்காவது கேட்டியா நீ? இப்ப பாரு எதுல வந்து நிக்கிது னு… அறிவில்ல…திமிர்…திமிர்… அவ்வளவும் திமிர்…பேசுறதுக்கு எல்லாம் எதிர் பேச்சு பேச வேண்டியது…இஷ்ட்டத்துக்கு ஆட வேண்டியது… உன்னையலாம்… ” என கோபம் தாங்காமல் மகியை இழுத்து அறைந்தான் தீரன். 

             அதை சற்றும் எதிர்பார்க்காத மகி அதிர்ந்து நின்றாள். மகியின் முகத்தை பார்த்த கருப்பாயிக்கும் சிதம்பரத்திற்கும் வருத்தத்தை அளிக்க தீரனிடம் பேச முன்னாடி வந்தார் கருப்பாயி. 

                   “தீரா….” என சிதம்பரம் அதட்ட….”மிருகமா நீ? ” என கருப்பாயியும் தீரனை அதட்டினர். 

                    “புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும்….நீங்க யாரு குறுக்க வர ?அதான் ஊர் முன்னாடியே எனக்கு இவள கல்லியாணம் பண்ண வச்சுட்டீங்களே…அங்க ஊர் முன்னாடி பூம் பூம் மாடு மாதிரி தலைய ஆட்டிட்டு இங்க வந்து என்னைய எதுக்கு அதட்டுறீங்க? ” என நக்கலாக தனது பெற்றோரைப் பார்த்து கேட்டான் தீரன். 

                   “ஓஓ….அவங்க மட்டும் தான் பூம் பூம் மாடு மாதிரி நின்னாங்களா? நீங்க அங்க வாய தொறந்து சொல்லி இருக்க வேண்டியது தான? தப்ப உங்க மேல வச்சுக்கிட்டு அவங்க மேல கோபப்பட உங்களுக்கு வெக்கமா இல்ல? “மகி. 

               “ஏய்….அவ்ளோதான் உனக்கு மரியாதை…என்னோட சொந்த விஷயத்துல பேசக்கூடாது னு நான் என் அப்பா அம்மாக்கிட்ட சொல்லுறேன்… உனக்கு என்ன? ” என உள்ளே செல்ல திரும்பினான் தீரன். 

            “அவங்க கேக்க கூடாது… சரி…இந்த விஷயத்துல நானும் தான் சம்பந்தப்பட்டு இருக்கேன்…அப்ப நான் கேக்கலாம் ல…” என்ற மகியின் கடின குரலை கேட்டு திரும்பிய தீரனின் கன்னத்தில் பலமாக இறங்கியது மகியின் கரம். 

             மகி தன்னை அடித்ததும் மூச்சில் அனல் காற்று வீச….மகியை உறுத்து விழித்தான் தீரன். 

                   “என்ன முறைக்கிற? நீ கை நீட்டி அடிப்ப… அத நான் வாங்கிட்டு சும்மா இருக்கனுமா? இதுல அதிகமா பாதிக்கப்பட்டது நாந்தான்…நானே அமைதியா இருக்கேன்…நீ எதுக்கு குதிக்கிற? பெரியவங்க கிட்ட மரியாதை குறைவா பேசக்கூடாது னு உனக்கு தெரியாதா? இதுல ஊருக்குள்ள நீ பெரிய இவன்னு இமேஜ் வேற…” மகி. 

                     “பேச்ச பாத்தீங்களா…  எனக்கே பாடம் நடத்துறா… பொண்ணா இவ? ராங்கிக்காரி….ஊருல சொல்லிட்டாங்கனு இவளலாம் என்னால கல்லியாணம் பண்ணிக்க முடியாது…அதுனால என்ன பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்கிறேன்… ” தீரன். 

                      “ஓஓ… நான் ராங்கிக்காரியா? இருந்துட்டு போகட்டும்.. அத பத்தி எனக்கு கவலை இல்லை… நான் இப்பிடித்தான்….சிதம்பரம் மாமாவுக்காகவும் கருப்பாயி அத்தைக்காகவும் தான் இவ்ளோ நேரம் பொறுமையா இருந்தேன்….இப்ப சொல்லுறேன்… நல்லா கேட்டுக்கோ… நீ என்ன டா என்னைய வேண்டாம் னு சொல்லுறது? நான் சொல்லுறேன்… நீ எனக்கு வேண்டாம்… உன்னையலாம் , நான் மட்டும் இல்ல….எவளும் கல்லியாணம் பண்ணிக்க மாட்டா….இன்னக்கி நைட்டே தூரிய கூட்டிட்டு நான் என் வீட்டுக்கு போறேன்…” என தீரனை முறைத்தபடி ஆக்ரோஷமாய் கூறினாள் மகி. 

                இருவரும் பேசுவதை கேட்ட சிதம்பரமும் கருப்பாயியும் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றனர். 

                தீர்க்கமாக பேசிய  மகியை பார்வையால் பொசுக்கியபடி தீரன் முறைத்து நின்றான். மகி, தீரனின் பார்வையை மின்னல் வெட்டும் பார்வையுடன் அசராமல் எதிர்கொண்டாள். 

               இருவரும் எதிரெதிரே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் ஒருவர் மற்றவரை பார்வையால் எரித்துக்கொண்டு நின்றனர். 

              

               அப்பொழுது உள்ளே நுழைந்த ராசேந்திரனும் இந்திரனும் மகியும் தீரனும் நின்றிருந்த நிலையை பார்த்து அதிர்ந்து நின்றனர்.

                “இவங்க ரெண்டு பேரும் என்ன இப்பிடி முறைச்சுட்டு நிக்கிறாங்க? இப்ப நாம என்ன பண்றது? “என மெதுவாக ராசேந்திரனிடம் வினவினார் இந்திரன். 

               “பின்ன பஞ்சாயத்துல நடந்ததுக்கு ரெண்டு பேரும் கொஞ்சிட்டு இருப்பாங்க னு நினைச்சீங்களா? இதெல்லாம் எதிர் பாத்தது தான? வாங்க… சமாளிப்போம்… ” ராசேந்திரன். 

               “ஐயோ… நம்ம புள்ளைங்க முகத்த பாக்க எனக்கே பயமா இருக்கே… ” என எச்சில் முழுங்கியவாறு உள்ளே சென்றார் இந்திரன். அவரின் பின்னே ராசேந்திரனும் வீட்டிற்குள் நுழைந்தார். 

               “ஓஓ… தூரிய கூட்டிட்டு போவீங்களோ….எங்க… போய் பாரேன்… அவ இனி என் பொறுப்பு….அவ மேல உனக்கு எந்த உரிமையும் இல்லை….” தீரன். 

               “அவ என்னோட தங்கச்சி… நான் கூட்டிட்டு போவேன்….” மகி. 

               “உன்னால முடிஞ்சத பாத்துக்கடி… ” தீரன். 

                “உன்னால முடிஞ்சா தடுத்து பாருடா…” மகி. 

                 இவர்கள் இருவரின் சண்டையை பார்த்த இருவரின் பெற்றவர்கள், “ஹைய்யோ…இப்பிடி முட்டிக்கிட்டு நிக்கிறவங்கள எப்பிடி ஒன்னு சேக்குறது? “என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டனர்.  

               அதுவரை அமைதியாக இருந்த உதியன், இவர்களின் சண்டையை பொறுக்க முடியாமல், “ரெண்டு பேரும் சண்டை போடுறத கொஞ்சம் நிறுத்துறீங்களா? ” எனக் கத்தினான். 

              “நீ எதுக்குடா நிறுத்த சொல்லுற? நீதான பஞ்சாயத்துல சொன்னது? எங்க ரெண்டு பேருக்கும் கல்லியாணம் ஆக போகுது னு… உன்னையலாம் என் கூட பொறந்தவன் மாதிரி நினைச்சேனே… ச்சே… ” தீரன். 

             “என்னைய எவ்ளோ வேணும்னாலும் திட்டுங்க… உதிய பத்தி ஏதாவது பேசுனீங்க… மரியாதை கெட்டுரும்… ” என தீரனிடம் எகிறினாள் மகி. 

            “ஏன்? அவன் தான இதுக்கெல்லாம் காரணம்? நான் ஏன் அவன பேசக்கூடாது ? அவன் அப்பிடி சொன்னதுனால தான என் வாழ்க்கை இப்பிடி நாசமா போச்சு… உன்னைய போய்.. ச்சை… ” என கோபத்தில் வார்த்தையை விட்டான் தீரன். 

            “என்னது? நாசமா போச்சா? “என மனதில் அடி வாங்கியவளாக கலங்கி நின்றாள் மகி. 

            “ஆமா டி… உன் கூடலாம் மனுஷன் வாழுவானா? ஓஓ… இப்ப புரியுதுடி… நீங்க ரெண்டு பேருமா சேந்து ப்ளான் பண்ணி இப்பிடி பண்ணி இருக்கீங்களோ? வார்ரே வாவ்… சூப்பர்.. ” என இஷ்ட்டத்திற்கு கோபத்தில் தாறுமாறாக பேசினான் தீரன். 

            “மிஸ்டர் அனழேந்தி தீரன்… இது கடைசி எச்சரிக்கை… கொஞ்சம் பாத்து பேசுங்க… உங்கள ப்ளான் கல்லியாணம் பண்ணனும் னு எனக்கு எந்த ஆசையும் இல்ல… உங்க மேல எனக்கு துளி கூட விருப்பம் இல்லை…. இந்த கயிறுதான உங்கள இப்பிடி பேச வைக்குது? இந்தாங்க… இனி என் ப்ரண்ட்ட பத்தி ஒரு வார்த்தை பேசக்கூடாது… பேசுனா…. அப்புறம் நடக்குற விபரீதத்துக்கு நான் பொறுப்பாக முடியாது… ” என பஞ்சாயத்தில் தீரன் தன் கையில் கட்டிய மஞ்சள் கயிற்றை கழட்டி தீரனின் கையில் கொடுத்தாள் மகி. 

                “மகி…என்ன செய்யுற நீ? ” என பதறி கண் கலங்கினார் கருப்பாயி. 

                 “மகி… ” என  தீரனை தவிர அங்குள்ள அனைவரும் பதறினர். 

                 “பெரியவங்க எல்லாரும் என்னைய மன்னிச்சுருங்க… எனக்கு என்னைய விட என் ப்ரண்ட் தான் முக்கியம்…. அவன யாரும் ஒரு வார்த்தை கூட தப்பா பேசக்கூடாது…. அதுக்கு எனக்கு இத தவிற வேற வழி தெரியல… வா உதி நாம போகலாம்… இனி நமக்கு இங்க எந்த வேலையும் இல்ல…. ” என பெரியவர்களிடம் பொதுவாக கூறிவிட்டு உறைந்து நின்ற உதியனின் கையைப் பற்றினாள் மகி. 

                மகி கழற்றி அளித்த மஞ்சள் கயிறை உள்ளங்கையில் வைத்து மடக்கியப்படி, “ஓஓ… உனக்கு என்னைய விட அவன் தான் முக்கியமா? “என தன்னை அறியாமலே பொறைமையுடன் கோபப்பட்டான் தீரன். 

                அதற்கு மேல் பொறுக்க முடியாத கருப்பாயி, “உன்னைய நான் இப்பிடித்தான் வளத்தேனா? ச்சே… எனக்கே அருவெறுப்பா இருக்கு…. உனக்கு மகிய கல்லியாணம் பண்ண என்ன கசக்குது? இப்ப சொல்லுறேன்… நல்லா கேட்டுக்கோ தீரா… உனக்கும் மகிக்கும் கல்லியாணம் பண்ண பெரியவங்க நாங்க எப்பவோ முடிவு எடுத்துட்டோம்… கல்லியாண விசயம் பேசத்தான் மகியோட அப்பாவும் அம்மாவும் இந்த ஊருக்கே வந்தாங்க…. பஞ்சாயத்துல இது நடக்கலனாலும் நாங்களே உங்களுக்கு கல்லியாணம் பண்ணி வச்சு இருப்போம்… இதுல மகியோ உதியோட தப்போ எதுவும் இல்லை… ” என தன் உள்ளக்குமுறுலை கொட்டினார். 

               கருப்பாயி கூறுயதை கேட்ட, மகி, உதி மற்றும் தீரன் மூவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

              “என்ன அத்தை சொல்லுறீங்க? அப்பா… இது உண்மையா? ” என மெல்லிய குரலில் கேட்டாள் மகி. 

             “ஆமா மகி…. இது நானும் உன் அம்மாவும் முடிவு பண்ணுனது… தீரனுக்கு என்னடா குறைச்சல்? அவன கல்லியாணம் பண்ணுனா நீ நல்லா இருப்படா…. ப்ளீஸ் மகி… இதுவரைக்கும் உன் கிட்ட நான் எதுவும் கேட்டது இல்ல… ப்ளீஸ் அம்மு… அப்பாக்காக…. ” இந்திரன். 

            தனது தந்தை தன்னிடம் கெஞ்சுவது பொறுக்காமல்… “ஏன்ப்பா ப்ளீஸ் லாம் சொல்லுறீங்க? நீங்க எப்போதும் எனக்கு கெடுதல் செய்ய நினைக்க மாட்டீங்க ப்பா…. நான் முன்னாடியே சொல்லி இருக்கேன்… நீங்க கை காட்டுற மாப்பிள்ளைக்கு கண்ண மூடிட்டு கழுத்த நீட்டுவேன் னு… அதே தான் இப்பவும் சொல்லுறேன் ப்பா… நீங்க தீரன் தான் எனக்கு மாப்பிள்ளை னு முடிவு பண்ணுனா எனக்கு ஓகே தான் ப்பா… ” என அமைதியாக கூறினாள் மகி. 

              “எனக்கு விருப்பம் இல்லை….” என விரைப்பாக கூறினான் தீரன். 

               “எனக்கு மருமகனு ஒருத்தி வந்தா….அது மகி தான்…” என தீரனின் உறுதியான குரலுக்கு சற்றும் குறையாமல்  தீர்மானத்துடன் கூறினார் கருப்பாயி. 

               “அவர் கிடக்காரு அத்தை….விடுங்க…இந்த பிரச்சனைய இத்தோட விடுங்க… இப்ப நாம தூரிய தான் பாக்கனும்…ஆமா உதி… கேக்க மறந்துட்டேன்…அவன என்ன பண்ணீங்க? ” மகி. 

             “அதுவா? ” என ஒரு திருப்தியான புன்னகையுடன் தீரனும் உதயனும் இரவு சென்று பார்த்த வேலையை விரிவாக கூறினான் உதியன். 

              உதியன் கூறுவதை கேட்ட அனைவருக்கும் ஒரு வித திருப்தி மனதில் தோன்றியது. 

             “பரவாயில்லை டா…இந்த மாதிரி செய்றவனுக்குலாம் இது தேவை தான்…” மகி. 

            “எல்லாம் அண்ணே ஐடியா தான்….”என தீரனை பார்த்து புன்னகைத்தான் உதியன். 

             தான் திட்டியும் தன்னிடம் பழையபடி பேசும் உதியனை பாசத்துடன் அணைத்துக்கொண்டான் தீரன். 

                அதைக்கண்ட மகி, “ம்ஹூக்கும்….இதுக்குலாம் ஒன்னும் குறைச்சல் இல்லை…..சரி…. உதி… நமக்கு ரெண்டு நாளுல லீவ் முடியுதுல…ரெண்டு நாள் கழிச்சு தூரிய நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்…” மகி. 

            “உன் வீடா? அது எங்க இருக்கு? இதான் உன் வீடு…” என அழுத்தமாக உரைத்தான் தீரன். 

            தீரன் கூறியதை கேட்ட அனைவரும் ,”ஆஆஆ….”என்றவாறு தீரனை பார்த்தனர். 

             “இவன் என்ன அந்நியன் மாதிரி மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கான்… ஒரு வேளை மண்டையில பலமா அடிபட்டு இருக்குமோ? ” என யோசித்தவாறு ,”இது ஒன்னும் என் வீடு இல்ல…இந்த வீட்டுல இருக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை… ” என தீரனை சீண்டும் விதமாக கூறினாள் மகி. 

            “ஓஓஓ…அப்ப என்னைய விட்டு அவ்ளோ சீக்கிரமா நீ போயிருவியா? உனக்கு இந்த வீட்டுல எல்லா உரிமையும் இருக்கு… ” என தன் ஆழ்மனதின் உணர்வுகளை வார்த்தைகளாக கூறினான் தீரன். 

              “கன்பார்ம்..இவனுக்கு மண்டையில எங்கேயோ பலமா அடி பட்டு இருக்கு…..” என நினைத்தவாறு, “இந்த வீட்டுல உரிமை எடுத்துக்க நான் ஒன்னும் இந்த வீட்டு பொண்ணு இல்ல…” என்றாள் மகி. 

             “நீ இந்த வீட்டு பொண்ணு தான்…என் அனுமதி இல்லாம உன்னால எங்கேயும் போக முடியாது… ” தீரன். 

             “நீ சொல்லுறத கேட்டுக்கும் இருக்க நான் ஒன்னும் உன் பொண்டாட்டி இல்ல…” என சற்று குரலை உயர்த்தினாள் மகி. 

           “ஆமா…நீ என் பொண்டாட்டி தான்…” எனக்கூறியவாறு தீரன் செய்த செயலில் அங்குள்ள அனைவரும் மயக்கம் வரும் நிலைக்கு சென்றனர். 

                                  (காதல் தீ பரவும்…)

                             -செல்லம்மாள்பாரதி 

             

    No comments yet.