காதல் தீ -28

Chellammal Bharathi | 07 Dec 2025 | Share

             தூரிக்கைக்காக கூட்டிய பஞ்சாயத்தில் மகியின் ஒழுக்கத்தை சந்தேகப்படும்படியான விவாதத்தை புதிதாய் ஒருவன் முன் வைக்க…அனைவரின் கவனமும் மகி மற்றும் தீரனை நோக்கி சென்றது. 

              பஞ்சாயத்தில் ஆளாளுக்கு அவர்கள் இஷ்டத்திற்கு மகியையும் தீரனையும் இணைத்து பேசிக்கொண்டே செல்ல….”ஆமா… தீரனும் மகியும் கல்லியாணம் பண்ணிக்க போறாங்க… அதனால தான் மகியோட அப்பா அம்மா இங்க வந்து இருக்காங்க….அவங்க சேந்து பேசுனா என்ன தப்பு? ” என ஓங்கி குரல் குடுத்தவாறு பஞ்சாயத்தினுள் வந்தான். 

               “என்னடா இவன இன்னும் காணோமே னு பாத்தேன்… வந்துட்டான்…” ஊர் பெரியவர். 

             “சும்மா எதாவது சொல்லி சமாளிக்காத… ” என உதியனைப் பார்த்து கூறினான் மகியை பற்றி தவறாக பேசிய புதியவன். 

              உதியன் கூறியதை கேட்ட மகி, சற்று அதிர்ந்தாலும் சூழ்நிலை காரணமாக தான் இவ்வாறு கூறுகிறான் என புரிந்து அமைதியாக அப்புதியவனை ஆராய்ந்தாள். 

               உதியன் கூறியதை கண்டுகொள்ளாமல் அவனை கேள்வியாக பார்த்தான் தீரன். தீரனின் கண்களில் இருந்த கேள்வியை புரிந்து கொண்ட உதியன், தன் கண்களை அழுந்த மூடி திறந்து தீரனுக்கு வேண்டிய பதிலை தன் கண்களாலயே அளித்தான் உதியன். 

               உதியனின் கண்களில் இருந்த பதிலை கண்டவன், இனி என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் என்ற தைரியத்துடன் சற்று இறுமாப்புடன் நிமிர்ந்து நின்றான் தீரன். 

               பஞ்சாயத்தில் அதுவரை சற்று தவிப்புடனும் கோபத்துடன் நின்றிருந்த தீரன், உதியனும் தீரனும் கண்களால் பேசிக்கொண்டதும் தீரனின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தையும் அவன் முகத்தில் தோன்றிய கர்வப்புன்னகையையும் கண்டவள், தீரனும் உதியனும் இரவு சென்ற காரியம் அவர்கள் நினைத்தபடி முடிந்து விட்டது என ஊகித்த மகி, தனது சொல் சாட்டையை சுழற்ற ஆரம்பித்தாள். 

                “உனக்கு வேண்டிய தகவல் கிடைச்சுருச்சா ?” என கூரிய பார்வையுடன் பஞ்சாயத்தில் தோன்றிய அப்புதியவனை பார்த்துக் கேட்டாள் மகி. 

                 “என் ப்ரண்ட்ட பத்தி பேசுறதுக்கு நீ யாரு டா? ” என  அப்புதியவனை பார்த்து கேள்வி கேட்டான் உதியன்.

                 “ஒரு பொண்ணுக்கு நடந்த அநியாயத்த பத்தி பேசிட்டு இருக்கையில இன்னொரு பொண்ண பத்தி தப்பா பேசுற நீ யாரு டா? ” என தீரனும் அப்புதியவனை கேள்வி கேட்டான். 

                இந்த மும்முனை தாக்குதலை சமாளிக்க முடியாமல் அப்புதியவன் பஞ்சாயத்து பெரியவர்களிடம் சரணடைந்தான். 

               “பாருங்க ஐயா…பெரியவங்களான உங்க முன்னாடியே என் ஒரு ஆள மூணு பேரும் சேர்ந்து அடிக்கிற மாதிரி கேள்வி கேக்குறாங்க….” புதியவன். 

                “நீ கேட்ட கேள்விக்கு அவங்க பதில் சொல்லிட்டாங்க…. அவங்க கேக்குற கேள்விக்கு நீ பதில் சொல்லு….அதான முறை? ” ஊர் பெரியவர். 

                அனைவரின் பார்வையும் அப்புதியவனின் மேல் இருக்க…..சற்று தடுமாறினான் அவன். 

                 “நான் சொல்லவா? நீ யாருனு? ” என உதியன் முன்னே வந்தான். 

                  அப்புதியவன் அங்கிருந்து நழுவ பார்க்க….அவன் பின்னே சென்று அவனை வழி மறித்து அப்புதியவனைப் பார்த்து சற்று நக்கலாக சிரித்தான் தீரன். 

                 “நீ… தூரிகையோட இந்த நிலைக்கு காரணகர்த்தால நீயும் ஒருத்தன்… ” என அப்புதியவனை நிதானமாக ஊடுருவும் பார்வையுடன் பார்த்தபடி கூறினான் உதியன். 

                   “இதென்ன புதுசா இருக்கு…”என பஞ்சாயத்தார்கள் அனைவரும் தங்களுள் சலசலக்க…..அந்த சலசலப்பை மீறி கம்பீரமாக ஒலித்தது உதியனின் குரல். 

                 “தூரிய… “என கூற ஆரம்பித்த உதியன் சற்று தடுமாறி பிறகு தன்னை நிலைப்படுத்திக்கொண்டு , ” என் தூரிய சீரழிக்க விட்டுட்டு நீ அத ரசிச்சு வேடிக்கை பாத்து இருக்க…. இப்ப இங்க வந்து என் அம்முவையும் என் அண்ணனையும் சேத்து வச்சு தப்பா பேசிறியா? உனக்கு எவ்ளோ திமிரு? ” என பிசிறில்லாமல் பேசினான் உதியன். 

               உதியன் கூறுவதை கேட்க கேட்க… மகியின் நினைவில் நேற்றைய இரவு தீரன் கூறிய அனைத்தும் காட்சிகளாக ஓடத்தொடங்கியது. 

              🌺  அன்று பகலில் வெளியில் தனது தோழர்களான சிறுவர்களுடன் விளையாடிவிட்டு புள்ளிமானாக துள்ளிக்குதித்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள் தூரிகை. 

                எப்பொழுதும் அதிகமாக குடித்து விட்டு சுய நினைவின்றி தள்ளாடியபடி இரவு நேரத்தில் வீட்டிற்கு வரும் தூரிகையின் தந்தையான கலியமூர்த்தி அன்று பகலில் குடிக்காமல் சுய நினைவுடன் வீட்டினில் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்த தூரிகை ,”என்ன ப்பா இன்னக்கி குடிக்காம இருக்க? ” என தன் தந்தையிடம் வினவினாள் தூரிகை. 

                 தன் மகளின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அமைதியாக தூரிகை பார்த்தார் கலியமூர்த்தி. 

                 “என்னப்பா? ஏதாவது பிரச்சனையா? ” தூரிகை. 

                “ஆமா… ” என மெல்லியதாக வாயை திறந்தார் கலியமூர்த்தி. 

                 “என்ன ஆச்சு? ” என தன் தந்தைக்கு ஆதரவாக அவரின் அருகே சென்று அமர்ந்தாள் தூரிகை. 

                  “நிறைய கடன் ஆகிருச்சு….” என சுருக்கமாகவே பதில் அளித்தார் கலியமூர்த்தி. 

                  “விடுப்பா….படிச்சு வேலைக்கு போய் எல்லா கடனையும் நான் அடைக்கிறேன்…” தூரிகை. 

                  “பெத்தவங்க கடன புள்ளைங்க தான அடைக்கனும்? ” கலியமூர்த்தி. 

                   “ஆமா ப்பா…கண்டிப்பா நான் அடைச்சுருவேன்…”தூரிகை. 

                   “அப்ப அடைச்சுரு…” எனக் கூறியபடி எழுந்து வெளியே சென்றார் கலியமூர்த்தி. அவர் வெளியே சென்றதும் புதிதாக இருவர் உள்ளே நுழைந்தனர். 

                உள்ளே நுழைந்த இருவரையும் புரியாத பார்வை பார்த்த தூரிகை, “அப்பா.. .இவங்க யாரு? நீ என்ன சொல்லுற? ” என பயத்துடன் வினவினாள். 

                “அப்பா இவங்க கிட்ட நிறைய கடன் வாங்கி குடிச்சுட்டேன்….அந்த பணத்த இப்ப கேக்குறாங்க….என் கிட்ட எங்க இருக்கு பணம்? பணத்துக்கு பதிலா உன்னைய கேட்டாங்க….நீதான சொன்ன பெத்தவங்க கடன புள்ளைங்க தான் அடைக்கனும் னு… அடைச்சுரு…..” எனக்கூறியபடி கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றார் கலியமூர்த்தி. 

               தனது தந்தை கூறியதில் உச்சகட்ட அதிர்ச்சி அடைந்த தூரிகை, தன் முன்னே நின்றிருக்கும் இருவரையும் பயத்துடன் பார்த்தாள். 

              “செம அழகா இருக்க பாப்பா… உன் மேல எனக்கு ரொம்ப நாளா ஒரு கண்ணு….” என்றபடி இருவரில் ஒருவன் தூரிகையை நெருங்க….மற்றொருவன் சிரித்தபடி வீடியோ எடுக்க ஆரம்பித்தான். 

                  தூரிகையின் கண்ணீரோ…..அவளது கதறல்களோ அவனை சிறிதும் அசைக்கவில்லை. தூரிகையின் எதிர்ப்பை எல்லாம் தூசியாக தட்டிவிட்டபடி தூரிகையின் தலையில் அடித்து மயக்கமாக்கி தனது சதை வெறியை தீர்த்துக்கொண்டான் அவன். 

                 அரை மயக்கத்தில் இருந்த தூரிகை நரக வேதனையை அனுபவித்து சிறிது சிறிதாக முழுதாக மயங்கி சரிந்தாள். 🌺

                மகியின் நினைவில் அனைத்தும் காட்சிகளாக ஓட… அந்த சம்பவம் தனக்கே நிகழ்ந்தது போல் உயிர் வேதனையை அனுபவித்தாள். 

              உதியன் கூறியதை கேட்ட பஞ்சாயத்தார் அனைவரும் திகைத்து இருந்தனர். 

                “நானா? நான் இல்லை…எனக்கு அந்த பொண்ண யாருன்னே தெரியாது….” என படபடப்புடன் கூறினான் அப்புதியவன். 

                “எல்லாம் எங்களுக்குத் தெரியும் குரு…தூரி எங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டா….உன்னோட அந்த கூட்டாளி பத்ரமா இருக்கான்னு நினைச்சுட்டு இருக்கியா? அவன் இந்த உலகத்த விட்டு போய் ரொம்ப நேரம் ஆச்சு…” என புதியவனான குருவின் பின்னால் நின்று அவன் காதில் கூறினான் தீரன். 

               தீரன் கூறியதை கேட்ட குரு.. பயத்தில் வெடவெடத்து நின்றான். 

                “நம்ம ஊருல எவ்ளோ பிரச்சனை வந்து இருந்தாலும் யாரும் பொண்ணுங்கள தப்பா தொட்டது இல்ல….இவன புடிச்சு உச்சி வெயில்ல கட்டிப்போடுங்க….பாதிக்கப்பட்ட அந்த பொண்ணு இவன் தான்னு சொல்லட்டும்….அப்புறம் இவன போலீஸ் ல புடிச்சு குடுக்கலாம்….அப்புறம் தீரா, நம்ம ஊருக்குனு ஒரு பாரம்பரியம் இருக்கு…நீ கட்டிக்க போற பொண்ணாவே இருந்தாலும் இந்த பொண்ணு கூட சுத்துனது  தப்பு …இங்க வாங்க ரெண்டு பேரும்….” என குருவை உச்சி வெயிலில் கட்டி போட சொல்லிவிட்டு தீரனையும் மகியையும் முன்னே அழைத்தார் ஊர் பெரியவர். 

                   “அய்யோ…”என இருவரும் ஒருவர் மற்றவரை பார்த்து முறைத்தபடி முன்னே வந்து நின்றனர். 

                  ஒரு மஞ்சள் கயிறை எடுத்து தீரனிடம் அளித்து, “உங்க ரெண்டு பேருக்கும் உள்ள உறவோட அடையாளமா தீரா நீ இத இந்த பொண்ணு கையில கட்டு… ” என்றார் பெரியவர்.

                  தீரன் திகைத்து தனது தந்தையை பார்த்தான். மகியும் திகைத்து தனது தந்தையை பார்த்தாள். 

                 இருவரும் தங்களது பெற்றோரை பார்ப்பதை பார்த்த ஊர் பெரியவர், “புள்ளைங்கள பெத்த உங்களுக்கும் இது சம்மதம் தான? ” என வினவினார். 

                 “இத விட்டா ரெண்டு பேரையும் ஒன்னு சேக்க முடியாது… ” என எண்ணிய சிதம்பரமும் இந்திரனும் தங்களது சம்மதத்தை சிரிப்பில் வெளிப்படுத்தினர். 

                   அவர்களின் சிரிப்பை பார்த்த பெரியவர், “அப்புறம் என்ன தீரா.. கட்டு.. ” என அதட்டினார். 

                 உச்சகட்ட வெறுப்பில் மகியை முறைத்தவாறு மகியின் கையில் மஞ்சள் கயிறை கட்டினான் தீரன். என்னவென்று புரியாத உணர்வுடன் வெறித்தபடி நின்றிருந்தாள் மகி. 

                 “இங்கயே… ஊரு முன்னாடி உங்களுக்கு நிச்சயம் ஆகிருச்சு… கல்லியாண பொண்ணு இனி கல்லியாணம் முடிஞ்சா தான் ஊர் எல்லைய தாண்ட முடியும்… தீரா… கல்லியாணம் ஆக போகுது… இனியாச்சும் கோபத்த குறைச்சுட்டு பொறுப்பா இரு… ” என பெரியவர் கூறி விட்டு பஞ்சாயத்தை கலைத்து சென்றார். 

               ஊர் மக்கள் கலைந்து சென்றதும், சீற்றத்துடன்  அங்கிருந்து புறப்பட்டான் தீரன். அவனின் கோபத்தை அறிந்த மற்ற அனைவரும் அவன் பின்னே சென்றனர். உதியனும் ,அசையாமல் நின்று கொண்டிருந்த மகியை இழுத்துக்கொண்டு  தீரன் பின்னே சென்றான். 

                 சூறாவளியாய் வீட்டிற்குள் நுழைந்த தீரன், அனைத்துப் பொருட்களையும் சீற்றம் தாங்காமல் தூக்கி போட்டு உடைத்தான். 

                 தீரனின் கோபத்தை கண்ட கருப்பாயி பயத்தில் சுவற்றோடு ஒன்றி நின்றார். அந்நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த சிதம்பரம், “தீரா….என்ன இது? ” என அதட்டினார். 

                அவரின் பின்னே உதியனை ஒட்டியபடி வந்த மகியை கண்டவன், “நான் அத்தனை தடவ சொன்னேன்…எங்காவது கேட்டியா நீ? இப்ப பாரு எதுல வந்து நிக்கிது னு… அறிவில்ல…திமிர்…திமிர்… அவ்வளவும் திமிர்…” என கோபம் தாங்காமல் மகியை இழுத்து அறைந்தான் தீரன். 

                   “தீரா….” என சிதம்பரம் அதட்ட….”மிருகமா நீ? ” என கருப்பாயியும் தீரனை அதட்டினர். 

                    “புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும்….நீங்க யாரு குறுக்க வர ?அதான் ஊர் முன்னாடியே எனக்கு இவள கல்லியாணம் பண்ண வச்சுட்டீங்களே…” என நக்கலாக தனது பெற்றோரைப் பார்த்து கேட்டான் தீரன். 

                   “அப்ப நான் கேக்கலாம் ல…” என்ற மகியின் குரலை கேட்டு திரும்பிய தீரனின் கன்னத்தில் பலமாக இறங்கியது மகியின் கரம். 

                   “நீ கை நீட்டி அடிப்ப… அத நான் வாங்கிட்டு சும்மா இருக்கனுமா? ” மகி. 

                     “பாத்தீங்களா… பொண்ணா இவ? ராங்கிக்காரி….இவளலாம் என்னால கல்லியாணம் பண்ணிக்க முடியாது…” தீரன். 

                      “நீ என்ன டா சொல்லுறது? உன்னையலாம் , நான் மட்டும் இல்ல….எவளும் கல்லியாணம் பண்ணிக்க மாட்டா….இன்னக்கி நைட்டே தூரிய கூட்டிட்டு நான் என் வீட்டுக்கு போறேன்…” என தீரனை முறைத்தபடி கூறினாள் மகி. 

                   மகியை பார்வையால் பொசுக்கியபடி தீரனும் முறைத்து நின்றான். இருவரும் எதிரெதிரே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் ஒருவர் மற்றவரை பார்வையால் எரித்துக்கொண்டு நின்றனர். 

                 இவர்கள் இருவரின் சண்டையை பார்த்த இருவரின் பெற்றவர்கள், “ஹைய்யோ…இப்பிடி முட்டிக்கிட்டு நிக்கிறவங்கள எப்பிடி ஒன்னு சேக்குறது? “என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டனர். 

                                   (காதல் தீ பரவும்….)

                             -செல்லம்மாள்பாரதி 

                 

                 

    No comments yet.