காதல் தீ -24

Chellammal Bharathi | 03 Dec 2025 | Share

          தனது உடையை மாற்றுவதற்காக தூரிகையின் வீட்டை அடைந்த மகியும் உதியனும் வீட்டின் வெளியே நின்றவாறு, “தூரி… தூரி.. ” என அழைத்தனர். 

            வீடு பூட்டப்படாமல் இருக்க.. உள்ளே யாரும் இருப்பதற்கான அடையாளம் ஏதும் இல்லாமல் இருந்தது. 

              உதி வெளியிலேயே நின்றபடி மகியை மட்டும் உள்ளே அனுப்பினான். 

                 “தூரி… தூரி… எங்க இருக்க நீ? “எனக் கத்தியபடி வீட்டிற்குள் நுழைந்தாள் மகி. 

              வீட்டில் உள்ள பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்க… அதை பார்த்து பதட்டத்துடன் வேகமாக தூரிகையை தேடினாள் மகி. 

              ஒரு இடத்தில் மூலையில் மேலாடையின்றி முடிகள் கலைந்து உதடு கிழிந்து இரத்தம் கசிந்தபடி… தலையில் அடிபட்டு இரத்தம் வெளியேறியபடி பேச்சு மூச்சில்லாமல் அழகோவிய தூரிகை அலங்கோலமாய் கிடந்தாள். 

            தூரிகையின் நிலமையை பார்த்து அதிர்ந்த மகி, நிலமையை உணர்ந்து சுற்றும் முற்றும் தேடி தூரிகையின் உடையை எடுத்து அவளுக்கு அணிவித்து விட்டு வெளியே வந்து உதியனை கண்ணீருடன் வேகமாக அழைத்தாள் மகி. 

             மகியின் கண்ணீரையும் பதட்டத்தையும் கண்டவன், விரைவாக உள்ளே ஓடினான் உதியன். அங்கு சரிந்து கிடந்த தூரிகையை பார்த்து நெஞ்சில் பூகம்பம் தோன்ற நிலைகுத்தி நின்றான் உதியன். 

              நேரம் ஆக ஆக தூரிகையின் நிலமை மோசமாவதை உணர்ந்த மகி, “உதி….டேய் உதி… ” என உதியனை உலுக்கினாள் மகி. 

              உடல் முழுவதும் நகக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த தூரிகையை கண்டவன் என்ன செய்வது என்று தெரியாமல் அடித்து வைத்த சிலையென உறைந்து நின்ற உதியனின் கண்ணில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்தபடி இருந்தது. மகி உலுக்கியதும், “என்ன அம்மு இது? “என உடைந்து கதறினான் உதியன். 

             மகிக்கும் கண்ணீர் கட்டுக்கடங்காமல் வந்தாலும் இந்த ஈனச்செயலை செய்தவனின் உயிரை உலுக்கி எடுக்கும் வெறி உள்ளுக்குள் பிறக்க…உலைக்களமாய் நெஞ்சம் தகிக்க…நெஞ்சத்தில் கொதித்த கோப அக்னியில் கண்ணீர் ஆவியாக மறைய… கதறும் உதியனுக்கு ஒரு அறை விட்டாள் மகி. 

             “இது அழுகுற நேரமா நாயே? அவள தூக்கு…ஹாஸ்பிடல்ல அவள சேத்து ஆகனும்… அழாத….அழுறத முதல்ல நிறுத்து…” என பெண் சிங்கமாய் மகி கிளர்ந்தெழுந்து கூற….மகுடிக்கு கட்டுப்படும் பாம்பாய் கலைந்த ஓவியமாய் கிடந்த தூரிகையை கையில் ஏந்தினான் உதியன். 

            தூரிகையை கையில் ஏந்திய அடுத்த நொடி உதியனின் கரம் முழுவது குருதியில் மூழ்க…அதை உணர்ந்த உதியன், “அம்மு….என்னால முடியலடி…” என தூரிகையை கையில் ஏந்தியபடி மண்டியிட்டு கதறி அழுதான் உதியன். 

            இருவரின் நிலையை பார்த்து நெஞ்சம் உடைந்தாலும்… தூரிகையின் நிலை மகியின் நெஞ்சை உலுக்கி எடுக்க…உதியனின் ஃபோனை எடுத்து ஆம்புலன்ஸ் க்கு அழைத்து தூரிகையையும் உதியனையும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றாள் மகி. 

          உதியனின் கரத்தில் இருந்து பிரித்து தூரிகையை ஸ்ட்ரெக்ச்சரில் வைக்க போராட வேண்டி இருக்க…உதியனுக்கு மீண்டும் ஒரு முறை அறைந்து அவனின் கரத்தில் இருந்து பிரித்து சிகிச்சைக்கு உள்ளே அனுப்பினாள் மகி. 

           “அம்மு….அம்மு…அவ குழந்தைடி….”என மகியை கட்டிக்கொண்டு உதியன் அழுவதை மருத்துவமனையில் இருந்த அனைவரும் கண்டு இரக்கம் கொண்டனர். 

          “அவளுக்கு ஒன்னும் ஆகாது… சரி ஆகிருவா உதி…நீ அழாத….” என உதியனின் தலையை கோதிவிட்டபடி ஆறுதல் மொழிந்தாள் மகி. 

           “எப்பிடி அம்மு…..யார் அம்மு? இப்பிடி சீரழிக்க மனசு வந்து இருக்கு… ” என சிறு குழந்தையென தேம்பி தேம்பி அழுதான் உதியன். 

           உதியனின் கண்ணீர் மகியின் நெஞ்சை உருக்க… இருந்தும் இறுகியபடி உதியனின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்து, “ஏய்…இங்க பாரு…என்னைய பாரு… இப்ப அழுது என்ன ஆக போகுது? அவளுக்கு ஒன்னும் ஆகாது… முதல்ல அந்த நாயி யாருனு கண்டுபிடிக்கனும்… அத பத்தி யோசி… இப்பிடி உக்காந்து அழுகாத… என்னையவும் தீரனையும் கொல்ல வந்து இருக்கானுக… தூரிக்கு இந்த நிலைமை…முதல்ல உங்க ஊருல என்ன நடக்குது னு யோசி… ” என பேசினாள் மகி. 

            மகியின் கூற்றில் இருந்த உண்மையை உணர்ந்த உதியனின் கண்ணீர் தன்னாலே நின்றுவிட்டது. அருகில் இருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்து தலையில் கை வைத்து யோசிக்க ஆரம்பித்தான் உதியன். 

           உதியன் யோசிக்க ஆரம்பித்ததும் உதியனின் ஃபோனில் இருந்து தீரனை அழைத்தாள் மகி. 

              “ஹலோ… தீரா… தூரிக்கு ரொம்ப சீரியஸா இருக்கு… யாரோ ரேப் பண்ணி இருக்காங்க… சீக்கிரம் வா… ” என மகி கூறியதும் பஞ்சாயத்தில் நின்ற தீரன் யார் பேச்சையும் கருத்தில் கொள்ளாமல் யாரிடமும் எதையும் கூறாமல் தனது பல்சரில் ஹாஸ்பிடலை நோக்கி பறந்தான். 

              “இதுவரைக்கும் இப்பிடி எதுவும் நடந்ததே இல்லையே… கொலை….ரேப்….எவனோ புதுசா நம்ம ஊருக்குள்ள புதுசா நுழைஞ்சு இருக்கான்…நம்ம கையில இருக்குறவன வச்சு தான் எல்லாம் கண்டுபிடிக்கனும்… ” என சிந்தனையிலும் பல்சரிலும் பறந்தபடி ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தான் தீரன். 

              மகியையும் உதியையும் தேடியபடி ஹாஸ்பிடலின் உள்ளே வந்த தீரனை மகி முதலில் கண்டுவிட்டு , அதுவரை நெஞ்சை உறுதியாக வைத்திருந்தவள் கண்கள் கலங்க… “தீரா… ” என கதறியபடி ஓடி வந்து தீரனின் நெஞ்சில் அடைக்கலம் புகுந்தாள் மகி. 

               தன்னை ஓடி வந்து அணைக்கும் மகியை திகைப்புடன் நோக்கியவன், சூழ்நிலையின் விளைவால் வந்து அணைக்கிறாள்… என புரிந்து மகியை ஆதரவாக அணைத்தவாறு, “என்ன ஆச்சுடி ?” என்றான் தீரன். 

              அதுவரை நெஞ்சில் அழுத்தி இருந்த பாரம் குறைய… ஆதரவாக ஒரு தோள் கிடைத்ததும் அழுது மொத்தமாக தீரனின் நெஞ்சில் இறக்கி வைத்தாள் மகி. 

              “அழாத மகி….என்ன ஆச்சு? உதியனுக்கு என்ன ஆச்சு? ” என மகியின் முதுகை தட்டிக்கொடுத்து கேட்டான்  தீரன். 

              தீரனின் நெஞ்சில் சாய்ந்தவாறு கண்ணீர் சிந்தியபடி, நடந்த அத்தனையும் மெதுவாக கூறினாள் மகி. மகி நடந்ததை கூற …கூற… தீரனின் உடல் இறுகியது. 

               ஒரு கையால் மகியை ஆதரவாக அணைத்தவாறு மறுகையை கோபத்துடன் இறுக்கியவாறு….”இந்த ஊருக்குள்ள என்ன தான் நடக்குது? ” என அடிக்குரலில் உறுமினான் .

            தீரனின் குரலில் சற்று தெளிவடைந்த மகி, கண்ணீரை துடைத்தபடி தீரனை விட்டு விலகினாள். தீரன் வந்ததையோ…மகி ஓடிச்சென்று அவனை அணைத்ததையோ… தீரன் கோப பட்டதையோ எதையும் உணராமல் தூரிகையின் குருதி தன் கைகளில் வழிய… தன் தலையில் கை வைத்தபடி யோசனையில் மூழ்கி இருந்தான் உதியன். 

             மகி, தன்னை விட்டு விலகியதும் அவளை தன் கையணைப்பில் வைத்தவாறு மகியுடன் உதியனை நோக்கி  சென்றான் தீரன். 

             கைத்தாங்கலாக மகியை உதியின் அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தவன், மெதுவாக உதியனின் தோளை தொட்டான் தீரன். தீரனின் தொடுதலில் மெதுவாக நிமிர்ந்து தீரனை பார்த்த உதியன், “அண்ணே… தூரி… ” என தூரிகைக்கு சிகிச்சை நடக்கும் அறையை நோக்கி கை காட்டினான். 

                “ஒன்னுல்லடா… எல்லாம் சரி ஆகிரும்… ” என உதியனை ஆதரவாக அணைத்தான் தீரன். 

              அந்நேரம் டாக்டர் வெளியே வர, மூவரும் அவசரமாக டாக்டரை சூழ்ந்தனர்.

                 “டாக்டர்… என்ன ஆச்சு? ” மகி. 

                 “தூரி இப்ப சரி ஆகிட்டா தான டாக்டர் ?” உதியன். 

                  “உயிருக்கு ஆபத்து இல்ல ஸார்… கொஞ்சம் என் ரூம் க்கு வாங்க… ” என டாக்டர் அழைத்துவிட்டு தனது அறையை நோக்கி நடந்தார். 

                டாக்டரின் பின்னே மூவரும் அவரது அறைக்குள் பதட்டத்துடன் நுழைந்தனர். 

               “உக்காருங்க….” என கூறி விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார் டாக்டர். 

               “தூரிக்கு என்ன ஆச்சு டாக்டர்? ” மகி. 

              “அந்த பொண்ண யாரோ வல்கரா ரேப் பண்ணி இருக்காங்க… அவங்க உடம்புல அவ்ளோ காயம்…. ரொம்ப போராடி இருக்காங்க… அடிச்சு துன்புறுத்தி இருக்காங்க… அவங்க உடம்பு நார்மலுக்கு ஆக ஆறு மாசத்துக்கு மேல ஆகும்… ஆனா… அவங்க மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க… அவங்க மென்டலி நார்மல் ஆக உங்க எல்லாரோட கையில தான் இருக்கு…..இன்னும் ஒரு வாரம் அவங்க அப்ஸர்வேஷன் ல இருந்து ஆகனும்….” டாக்டர். 

              டாக்டர் கூறியதை கேட்டதும் உதியன் உடைந்து அழுக….மகி அவனை ஆதரவாக கண்ணீருடன் அணைத்துக்கொண்டாள். 

              கனத்த இதயத்துடன் மூவரும் டாக்டர் அறையை விட்டு வெளியே வந்தனர். உதியனும் மகிழ்விழியும் ஓடிச்சென்று தூரிகையை பார்க்க …மருத்துவ உபகரணங்களுடன் தூரிகை ஆழ்ந்த மயக்கத்தில் இருப்பதை பார்த்ததும் கண்கள் கலங்க வெளியில் வந்தாள். உதியன் மட்டும் நெஞ்சம் கலங்க தூரிகையை விழியில் நிரப்பிக்கொண்டான். தீரன் உள்ளே வந்து மெதுவாக உதியனை வெளியே அழைத்து வந்தான். 

                மகிழ்விழியின் காயங்களுக்கு மருந்திட்டு கொண்டு மருத்துவமனை வளாகத்தில் வந்து மூவரும் கனத்த இதயத்துடன் அமர்ந்தனர்.

               மூவரிடையே நிலவிய மௌனத்தை மெதுவாக மகி கலைத்தாள். 

             “தூரி யோட நிலைமைக்கு காரணமானவன கண்டுபுடிக்கனும்… ” மகி. 

            “ஆமா…. தூரியோட அப்பா எங்க ?” தீரன். 

              அப்பொழுதுதான் அவரின் நினைவு மகிக்கும் உதியனுக்கும் வர, ” நாங்க வீட்டுக்கு போனப்ப அவர் அங்க இல்ல… அவளுக்கு அம்மா இல்ல… அப்பா மட்டும் தான் னு சொல்லி இருக்கா… தாய் இல்லா குழந்தைனு அவ அப்பா தூரி என்ன கேட்டாலும் வாங்கி தருவாரு னு சொல்லி இருக்கா… ” மகி. 

               “தூரிக்கு அம்மா இல்லையா ?” என அதிர்ச்சியுடன் கேட்டான் உதியன். 

                 “ஆமா… அவங்க அப்பா பேரு கூட.. கலியமூர்த்தி னு சொல்லி இருக்கா… ” மகி. 

                 “கலியமூர்த்தியா? இரு நம்ம பசங்க கிட்ட சொல்லி ஊருக்குள்ள அவர் எங்க னு பாக்க சொல்லுவோம்….தூரி யோட பக்கத்து வீட்ல யாரையாவது தெரியுமா? ” தீரன். 

                “இல்ல அண்ணே … அவ வீடு வயலுக்கு நடுவுல இருக்கு… பக்கத்து வீடு னு எதுவும் இல்லை…. வயல் தான்… ஊர விட்டுட்டு வயலுக்குள்ள வந்து வீடு கட்டிட்டு இருந்து இருக்காங்க…. “உதியன். 

               “நம்ம ஊருல எந்த நாயிக்கு இவ்ளோ தைரியம் வந்து இருக்கும்? ” என தாடையை தடவியவாறு தீரன் யோசித்தான். 

                அப்பொழுதுதான் காலையில் நடந்த கொலை முயற்சி நினைவிற்கு வர, “பஞ்சாயத்து என்ன ஆச்சு அண்ணே? ” என்றான் உதியன். 

                 “அதுவா? ” என பஞ்சாயத்து கூட்டியதில் இருந்து… அதை பாதியில் விட்டுவிட்டு இங்கு ஓடி வந்தது வரை விரிவாக கூறினான் தீரன். 

                 “அப்போ என்னைய கொல்ல வந்தவன் ஓடிட்டானா? இப்ப எப்பிடி யாருனு கண்டுபிடிக்கிறது? ” மகி. 

                  “அதான் என்னைய கொல்ல வந்தவன் பஞ்சாயத்துல சிக்கி இருக்கான் ல… அவன வச்சு விசாரிப்போம்… அப்புறம் மகி, நான் சொல்லுறத நல்லா மண்டையில ஏத்திக்கோ…. அவன் கொல்ல வந்தது என்னைய மட்டும் தான்… நீ இதுக்குள்ள வரவே இல்லை… நீ வேற ஊரு பொண்ணு… நீ இந்த பிரச்சனைக்குள்ள வந்தா விஷயம் வேற மாதிரி திசை மாறிரும்…. அதுனால உண்மைய சொல்லுறேன் னு போர் கொடி தூக்கிறாத… சில சின்ன உண்மைகள மறைச்சா தான் பல பெரிய உண்மைகளை கண்டுபுடிக்க முடியும்… ஸோ நீ கொஞ்சம் அமைதியா இருக்கனும்… சரியா? எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்… ” தீரன். 

               அதை கேட்டு பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டி வைத்தாள் மகி. 

               “மண்டைய ஆட்டுனா மட்டும் பத்தாது…. செய்யனும்…. “தீரன். 

                “சரி….தூரி… ?”என தீரனை கேள்வியாக நோக்கினாள் மகி. 

               “அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்… முதல்ல நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் உங்க அப்பா அம்மா கிட்ட உங்க முகத்த காட்டிட்டு வாங்க…. காலையில இருந்து உங்கள காணோம் னு பயந்துட்டு இருப்பாங்க… ” என தீரன் கூறிக்கொண்டிருக்கையில் அவனின் ஃபோன் ஒலிக்க… அதை எடுத்து காதில் வைத்தான் தீரன். 

               “டேய்… தீரா… என்ன ஆச்சு? அவ்ளோ அவசரமா எங்க ஓடுன? இங்க என்னெல்லாமோ நடந்துருச்சு… ” என மறுமுனையில் தீரனின் தந்தை சிதம்பரம் படபடத்தார். 

              “அப்பா…. நம்ம ஊருக்குள்ள புதுசு புதுசா நிறைய நடக்குதுப்பா… அந்த கொலைகாரன விட்டுறாதீங்க… ” தீரன். 

             “என்ன டா சொல்லுற? இங்க நான் எவ்வளவோ சொல்லி பாத்தேன்… பஞ்சாயத்து பெரியவங்க நீ பஞ்சாயத்துல இருந்து பயந்து ஓடி போய்ட்ட… உன் மேல தான் தப்பு னு சொல்லி அவன விட்டுட்டாங்க தீரா… ” சிதம்பரம். 

             “என்னது? அவன விட்டுட்டீங்களா? ” என மிதமிஞ்சிய கோபத்தில் கர்ஜித்தான் தீரன். 

                மறுநாள் காலையில் சிங்கம்புணரி கிராம பஞ்சாயத்தை கூட்டி இருந்தாள் மகிழ்விழி. நீதி கேட்டு வந்த கண்ணகி என ஆக்ரோஷத்துடன் ஊர் பஞ்சாயத்து நடுவே நின்றிருந்தாள் மகிழ்விழி. அவளை காட்டுத்தீ கோபத்துடன் பார்த்திருந்தான் தீரன். 

                                  (காதல் தீ பரவும்…)

                             -செல்லம்மாள்பாரதி 

    No comments yet.