காதல் தீ -22

Chellammal Bharathi | 02 Dec 2025 | Share

            உச்சிப்பொழுது வேளையில் குயில்களும் குருவிகளும் கூக்குரலிட்டு தங்கள் போக்கில் பறந்து கொண்டிருக்க… பசுமை போர்த்திய வயல் வெளிகளுக்கு நடுவே பறவைகளின் சத்தங்களோடு மகியின் அழுகை சத்தமும் இணைந்து ஒலித்தது. மகியின் கண்ணீர் ஒருபுறம் சந்தோஷத்தை அளித்தாலும் எப்பொழுதும் திமிர் கலந்த கம்பீரமாக திரிந்த தன் தோழி அழுவதை உதியனால் தாங்கி கொள்ள முடியவில்லை. 

               “அம்மு அழாதடி…. அவனுக்கு எதுவும் ஆகல… அவன் நல்லா தான் இருக்கான்… ” உதியன். 

                “பொய் சொல்லாத…. இங்க பாரு எவ்ளோ ரத்தம்… ” மகி. 

               “நிஜமா தான்டி… தீரன் அண்ணனுக்கு எதுவும் ஆகல… அண்ணே… நடிச்சது போதும்… எந்திரிண்ணே… ” உதியன். 

                உதியன் கூறிய அடுத்த நொடி தன் அரைக்கண்ணை திறந்தான் தீரன். அவன் கண் விழிப்பதை விழிகளில் நீர் வழிய விழி விரித்துப் பார்த்தாள் மகி. 

                “எப்பிடிடா என்னைய கண்டுபிடிச்ச? நான் நடிக்கிறேன்னு… ” என மகியின் மடியில் இருந்து நன்றாக எழுந்தபடி கேட்டான் தீரன். 

               “அதுவா….ஒத்த ஆளால உன்னைய அடிச்சு கீழ தள்ள முடியாது னு இந்த சிங்கம்புணரி முழுசும் தெரியும்….அத்தோட, நாங்க பதறி இங்க ஓடி வர்றப்ப உன்னைய கொல்ல வந்தவனோட உடம்பு மரத்துல சாஞ்சு, அவன் தலை லைட்டா தொங்கி போய் இருந்துச்சு… மகி அடிச்ச ஒத்த அடியிலேயே சுருண்டு விழுந்துட்டான் அவன்…அதான் எனக்கு செம டவுட்… இரத்த வாடைக்கு உன் மூக்குல ஈ வந்து உக்காந்தப்போ நீ லைட்டா மூக்க அசைச்சு உன்னைய காட்டி குடுத்துட்ட அண்ணே….ஏற்கனவே மனசும் உடம்பும் சோந்து போய் இருந்ததுனால மகி இதெல்லாம் கவனிக்கவே இல்ல….ஆனா ,இதுல எனக்கு என்ன பெரிய சந்தேகம்ன்னா…நேத்து வரைக்கும் உன்னைய பொறுக்கி னு சொல்லி என் கூட சண்டை போட்டவ… இப்ப உனக்காக பதறி வர்றா…இத்தனை வருஷமா கண்ணீர் வராத மகியோட கண்ணுல கண்ணீர் வந்து இருக்கு…. என்ன ஆச்சு இவளுக்கு? ” உதியன். 

              “ஏன்? மகிக்கு ஏன் கண்ணீர் வராது? அவ்ளோ தைரியசாலியா உன் ப்ரண்ட்? “தீரன். 

              “அவளுக்கு அது ஒரு பிரச்சினை அண்ணே… அவ ஏழு வயசுல ஒரு ஆக்ஸிடன்ட் ஆனுச்சு… வெளிக்காயம் எதுவும் இல்லை… ஆனா அவளோட கண்ணீர் சுரபி தன்னோட கட்டுப்பாட்ட மீறி அதுவா ஸ்டாப் ஆகிருச்சு… அதுல இருந்து இத்தனை வருஷமா அவளுக்கு கண்ணீரே வந்தது இல்லையாம்… ஒரு நாள் பல்லவி அம்மா சொன்னாங்க… எவ்ளோ துக்கம் வந்தாலும் அவளுக்கு கண்ணீர் வராது… ஆனா இப்ப உன்னால அவளோட அந்த பிரச்சினை சரி ஆகிருச்சு… ” உதியன். 

              இத்தனை வருடங்களாக தேக்கி வைத்திருந்த கண்ணீரை தனக்காக வெளிக்கொண்டு வந்தவளை அன்புடன் மகியின் தலையை வருடினான் தீரன். 

                அதுவரை தீரன் நன்றாக எழுந்து நின்று உதியனுடன் பேசிக்கொண்டிருப்பதை என்னவென்று புரியாத ஒரு உணர்வு குவியலுடன் தீரனை விழி அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தவள் அவனின் தொடுதலில் சுய உணர்விற்கு வந்தாள் மகி. 

                மகியின் உடம்பில் இருந்த காயங்களையும் அவள் ஆடை இருந்த நிலையையும் கண்டவன், “உனக்கு என்ன ஆச்சு மகி? உனக்கு எப்பிடி என்னய இவன் கொல்ல வந்தது தெரியும்? நான் இவனோட கூட்டாளி தான் வரப்போறான் னு நினைச்சேன்… ” தீரன். 

                மகியின் மன நிலையை உணர்ந்த உதியன், மகிக்கு நடந்த அத்தனையும் விரிவாக கூறினான். 

         “உனக்கு என்ன அண்ணே ஆச்சு? அது ஏன் உங்க ரெண்டு பேரையும் சேத்து கொலை பண்ண நினைக்கிறாங்க? உனக்கு எதிரி இருக்கு னு வச்சுக்கிட்டாலும்… மகி எப்பிடி இதுல சம்பந்தப்பட்டா? அவள ஏன் கொல்லப்பாக்குறாங்க? ” உதியன். 

               “எனக்கும் இவனுக யாருனு தெரியல டா… எப்போதும் போல வயலுக்கு தண்ணி பாச்ச வரப்பு வெட்டிட்டு இருந்தேன்… அப்ப இவன் என்னைய கட்டையால பின்னாடி அடிச்சுட்டான்… லைட்டா வலிச்சாலும் மயக்கம் போட்ட மாதிரி விழுந்துட்டேன்…. அப்ப தான் அவன்   உங்களுக்கு ஃபோன் பண்ணி இருப்பான் போல… ஃபோன் பண்ணி அவன் கூட்டாளிய வர சொன்னதும், அந்த கேனையனையும் பாத்துருவோம் னு இவன அடிச்சு மயக்கமாக்கி வர்றவனுக்கு சந்தேகம் வரக்கூடாது னு மரத்தடியில உக்காந்து இருக்குற மாதிரி செட் பண்ணி நானும் மயங்கி கிடக்குற மாதிரி கிடந்தேன்.. ஆனா அவனுக்கு பதிலா நீங்க தான் வந்தீங்க.. ” தீரன். 

                  “மகி தான் பாவம்… ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டா… ” என்றவாறு உதியன் மகியை பார்க்க, அவள் இன்னும் அதே நிலையில் தீரனையே பார்த்தபடி இருந்தாள். 

                “அம்மு… அம்மு… என்ன ஆச்சு டி? “என உதியன் மகியை உலுக்க… “ஆங்… எனக்கு ஒன்னும் இல்லை… இப்ப நான் ஏன் இவனுக்காக அழுதேன்? “என மழலையாக தன் நண்பனிடம் கேட்டாள் மகி. 

               “அந்த ஆராய்ச்சி லாம் வீட்டுக்கு போய் பண்ணிக்கலாம்… முதல்ல உன் காயத்த கவனிக்கனும் அம்மு… ” உதியன். 

              “முதல்ல உன் சட்டைய கழட்டி அவளுக்கு குடுடா.. இப்பிடியே அவள ஊருக்குள்ள கூட்டிட்டு போகாத… ” தீரன். 

               அதைக்கேட்ட மகி, வெடுக்கென திரும்பி தீரனை பார்க்க… அவன் கண்ணில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை அக்கண்களை தொடர்ந்து பார்க்க விடாமல் செய்ய… மெல்ல தலை குனிந்தாள் மகி. 

                “என்னைய பாதுகாக்க இவன் யாரு? ப்ராடு… பொறுக்கி… “என மனதினுள் திட்டியவள் எழுந்து அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள் மகி. 

              அப்பொழுது மகியின் மேலாடையை கவனித்த உதி, தீரன் கூறுவது சரிதான் என தன் சட்டையை கழற்றி தன் தோழியின் தோள் மீது போர்த்தி விட்டான். 

               “ஏன்டா? ” மகி. 

                “சண்டையில உன் ட்ரஸ் முதுகுல கிழிஞ்சு இருக்கு அம்மு… ” உதியன். 

                அதைக்கேட்ட மகி திடுக்கிட்டாள். தன் ஆடை கிழிந்ததை கூட உணராமல் தீரனுக்காக ஓடி வந்து பல ஆண்டுகளாக கண்ணீரே சிந்தாமல் அவனுக்காக சிந்தியதை எண்ணி துணுக்குற்றாள் மகி. 

                “என்ன யோசனை அம்மு? அண்ணே தான் பாத்து சொன்னாங்க… நான் கூட கவனிக்கலடி… அண்ணே பொறுக்கி இல்ல அம்மு…. ” உதி. 

               அதைக்கேட்டவள் நன்றாக தன் நண்பனை முறைத்து விட்டு திரும்பி தீரனை நோக்கினாள் மகி. 

                   தீரன், அங்கு ஒருத்தி இருப்பதையே கருத்தில் கொள்ளாமல் மயக்கமாகி இருக்கும் அவன் கை கால்களை கட்டத்தொடங்கினான். அவன் செய்கையை கண்டவள், “உதி… என்னைய கொல்ல வந்தவன அப்படியே விட்டுட்டு வந்துட்டோமே… ” என்றாள் மகி. 

                 “என் ப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லி அவன கட்டி ஊரு நடுவுல கொண்டு வந்து கட்ட சொல்லி இருக்கேன்… அவனுக பாத்துப்பானுக… நீ வா பர்ஸ்ட்.. ஹாஸ்பிடல் போகலாம்…. இங்க மீதிய அண்ணே பாத்துப்பாங்க… ” உதி. 

                    “இப்பிடியேவா? இப்பிடியே நான் வர மாட்டேன்… ” மகி. 

                     “ஏனாம்? ” என அதுவரை அவர்களது உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த தீரன் கேட்டான். 

                    “உன் கிட்ட நான் எதுவும் பேசல… “என கோபமாக மறு மொழி அளித்தாள் மகி. 

                   “ஓஓஓ…. என் மேல இப்ப கோப படுற நீங்க தான்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தீரா… தீரா …னு எனக்காக அழுதீங்க… அதுக்கு பேரு என்ன? இதுல என்னைய பொறுக்கி னு வேற சொல்லிட்டு திரியுற நீ… ” தீரன். 

                     ” நீ பொறுக்கி தான்… ” என கத்தினாள் மகி. 

                      “அப்பிடி என்னடி நான் பொறுக்கித்தனம் பண்ணிட்டேன்? ” என மேலும் எகிறினான் தீரன். 

                     “அன்னக்கி நீ உதி வீட்ல வச்சு உன் உதட்ட கடிச்சு அசிங்கமா சைகை காட்டல? அதே போல பைக்ல எதிர வர்றப்பயும் செய்யல? ” என கோபத்தில் முகம் சிவக்க கேட்டாள் மகி. 

                   அதைக்கேட்டதும் தீரனின் கோபம் பனிமலையென குளிர்ந்தது. “ஐயோ… அது எதார்த்தமா செஞ்சது… உன்னைய பாத்து செய்யல… அத்தோட அன்னக்கி நடந்தது ஒரு ஆக்ஸிடன்ட்… நீ இப்படி ஏதாவது நினைச்சு வருத்தப்படுவ னு தான் அன்னக்கே உன் கிட்ட பேசனும் னு நினைச்சேன்… ஆனா அது முடியல… அது உன்னைய ஹர்ட் பண்ணி இருந்தா ஸாரி மகி… “என  தீரன் தன்மையாக பேச… மகியின் வேகம் சற்று குறைந்தது. 

                “அப்புறம் அன்னக்கி உதி கிட்ட, நான் உங்களுக்கு குடுத்ததுக்கு பதிலா தான் அப்பளப்பொறிக்கு பணம் குடுத்ததா சொன்னீங்க? அது என்ன? ” மகி. 

                “ஹா ஹா ஹா… அதுவா… அன்னக்கி இதே வயல்ல வச்சு எனக்கு ஒரு லெக்சர் குடுத்தல்ல… அதத்தான் விளையாட்டுக்கு சொன்னேன்… எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா கேக்குற பொண்ணு னு உன்னைய சந்திச்ச முத சந்திப்பிலயே எனக்கு புரிய வச்சுட்ட நீ…. இதையும் என் கிட்ட நேரா கேட்டு சண்டை போட்டு இருக்கலாம் ல…. ” தீரன். 

                    “நாம தான் ஒரு வேளை தப்பா புரிஞ்சுக்கிட்டோமோ…” என யோசித்தவள்…..”ஸாரி….” என மெல்லியதாக ஆனால் உறுதியாக கூறினாள் மகி. 

                 மகிக்கு ஒரு புன்னகையை பதிலளித்த தீரன், அதுவரை இருவரும் பேசியதை திகைத்து பார்த்துக்கொண்டிருந்த உதியனை பார்த்து, “என்னடா? அப்பிடி பாக்குற? ” என்றான். 

              “சப்டைட்டிலே இல்லாம கொரியன் சீரியல் பாத்த மாதிரி இருக்கு… சப்டைட்டில் ப்ளீஸ்… ” என்றான் உதியன். 

             ” அடிங்க… அடிச்சேன்னா மண்டை கலங்கிரும்… ஒழுங்கா இவள ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போடா… ” என பேச்சை மாற்றினான் தீரன். 

             “நானா கூட்டிட்டு போக மாட்டேன்ங்குறேன்? அவ தான வர மாட்டேன்ங்குறா… நீங்க ரெண்டு பேரும் தான் ராசி ஆகிட்டீங்களே… நீங்க கொஞ்சம் சொல்லுங்க… இப்பலாம் நான் சொல்லுறதையும் கேக்குறது இல்ல… என்கிட்ட எதையும் சொல்லுறதும் இல்ல… ” உதி. 

             உதியனின் வருத்தம் புரிந்தவள், நடந்ததை கூற இது நேரமில்லை என… “நான் இப்பிடி இவனோட சட்டையையும் இவன் சட்டையே இல்லாம வந்தா… அதுவே பெரிய பிரச்சினை ஆகும்… “என்றாள் மகி. 

             மகியின் கூற்றில் இருந்த உண்மையை உணர்ந்த ஆடவர் இருவரும் “என்ன செய்வது? ” என யோசித்தவாறே நின்றனர். 

                “இங்க இருந்து பக்கம் தான் தூரி வீடு… அவ வீட்டுக்கு போய் அவளோட  ட்ரஸ் ஏதாவது வாங்கி  போட்டுட்டு அப்பிடியே ஹாஸ்பிடல் போகலாம்… ” மகி. 

                 “இது நல்ல ஐடியா… நான் இவன தூக்கிட்டு ஊருக்குள்ள போறேன்…நீங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துருங்க…பஞ்சாயத்துல வச்சு இவன விசாரிக்கலாம்… ” தீரன். 

               “சரி அண்ணே…” என்றவாறு மகியை அழைத்துக்கொண்டு தூரிகை வீடு நோக்கி உதியன் செல்ல….தன்னை கொல்ல வந்தவனை தூக்கிக்கொண்டு ஊருக்குள் நடக்க ஆரம்பித்தான் தீரன். 

                 💖💖💖💖💖💖

          தூரிகையின் வீட்டை அடைந்தவர்கள், வீடு திறந்து இருக்க….வீட்டில் யாரும் இருப்பது போல் தெரியாமல் போக….மகியை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு உதியன் வெளியே நின்றான். 

               “தூரி..தூரி….” என அழைத்தவாறு உள்ளே நுழைந்த மகி, உள்ளே தூரிகை இருந்த நிலையை கண்டு பதறி வெளியே வந்து உதியனை அழைத்து உள்ளே சென்றாள் மகி.

                 வீட்டின் உள்ளே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாள் தூரிகை…..

                                  (காதல் தீ பரவும்….)

                             -செல்லம்மாள்பாரதி 

    No comments yet.