காதல் தீ -20

Chellammal Bharathi | 30 Nov 2025 | Share

            “கருப்பாயி… அடியேய் கருப்பாயி…. “என சிதம்பரம் உலுக்க, தன் கனவுலகில் இருந்து வெளிவந்தார் கருப்பாயி. 

             “எவ்ளோ நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன்… தீரன் ரூம் முன்னாடி நின்னுட்டு அவன பாத்துட்டு அப்பிடி என்ன யோசனை? என்ன ஆச்சு? “சிதம்பரம். 

            “அப்ப எல்லாம் கனவா? ” என மெதுவாக தனக்குள் கேட்டுக்கொண்டார் கருப்பாயி. 

            “கனவா? நின்னுட்டே என்னடி கனவு காணுற? இப்ப என்ன ஆச்சு? “சிதம்பரம் .

             “என்னங்க கொஞ்சம் குடிக்க தண்ணி குடுக்குறீங்களா? “என திகைப்பில் இருந்து மீண்டவாறு கூறினார் கருப்பாயி. 

            “இப்ப என்ன ஆச்சு உனக்கு? சரி… வா… இப்பிடி வந்து உக்காரு… இந்தா தண்ணி… இத முதல்ல குடி… “என தன் மனைவியை அமர வைத்து அவரை தண்ணீர் குடிக்க வைத்தார் சிதம்பரம்.

              “இப்ப சொல்லு… என்ன ஆச்சு அப்பிடி? “சிதம்பரம். 

               “அதுவந்துங்க….”என்றவாறு தான் மனக்கண்ணில் கண்டதை கூறினார் கருப்பாயி. 

              “அட பைத்தியமே….அவன் வந்த உடனே தூங்க போய்ட்டான்… நீயா ஏதாவது நினைச்சு பயப்படாத… “சிதம்பரம். 

               “இல்லங்க….அவனுக்கு இன்னும் மகிய பொண்ணு பாத்த விஷயம் தெரியாது… தெரிஞ்சா இப்பிடித்தான் போய் சண்டை போடுவானா? மகி யோட அப்பா அம்மா மகிக்கு மாப்பிள்ளை பாத்து இருக்குறதா இவன் கிட்ட சொல்லி இருக்காங்க… அந்த மாப்பிள்ளையே இவன் தான்னு தெரிஞ்சா என்ன பண்ணுவான்? “கருப்பாயி. 

            “அப்பிடிலாம் தீரன் கோப பட மாட்டான்… நீ பயப்படாத.. “சிதம்பரம். 

             “இல்லங்க… அவன் அமைதியான பொண்ணா பாக்க சொல்லி இருக்கான்.. மகிக்கும் அவனுக்கும் எப்ப பாரு சண்டையா தான் இருக்கு… இவன் கிட்ட எப்பிடிங்க விஷயத்த சொல்லுறது? நான் கண்டது போல மகிய அறைஞ்சுருவானா? “கருப்பாயி. 

             “ஹா ஹா ஹா ஹா… அதான் நம்ம உதி ,தீரன அறைஞ்சுருவான் ல… ரெண்டுக்கும் சரியா போயிரும்… “சிதம்பரம். 

            “ப்ச்….விளையாடாதீங்க… நானே பயத்துல இருக்கேன்…”கருப்பாயி. 

             “சின்ன குழந்தை மாதிரி பயப்படாத டி… மகிய பத்தி தீரன் கிட்ட நான் பேசுறேன்  நீ கவலைப்படாதே… நிம்மதியா போய் தூங்கு….போ… ” சிதம்பரம். 

             “என்னவோ போங்க… இவன் என்ன பண்ண போறானோ னு பயமா இருக்கு… நான் கண்டது மாதிரி நிஜத்துலயும் நடந்துச்சுனா அவ்ளோதான்… “கருப்பாயி. 

              “நீதானடி தீரனுக்கு மகி தான் சரியா இருப்பா னு சொன்ன… அப்ப நீ எல்லாத்தையும் சமாளிச்சு தான் ஆகனும்… நானே சொல்லுறேன், தீரனுக்கு மகிய விட வேற எந்த பொண்ணும் சரியா இருக்காது… இவனுக்கு மகி தான் சரியான ஜோடி… “சிதம்பரம். 

              “சரி… நான் போய் நாளைக்கி நம்ம சம்பந்திக்கிட்ட பேசிட்டு வரேன்… நேரம் இருந்தா நீங்களும் வாங்க… ரெண்டு பேரும் போய்ட்டு வரலாம்… “கருப்பாயி. 

              “சரி.. போகலாம்… இப்ப நீ தூங்கு… “என தன் மனைவியை சமாதானப்படுத்தி உறங்க வைத்து விட்டு தானும் உறங்கினார் சிதம்பரம். 

               💖💖💖💖💖💖💖💖

          இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் அதிகாலையில் சற்று கண்ணயர்ந்த உதியனை எழுப்பினார் ராசேந்திரன். 

               “உதி… டேய்… உதி …”ராசேந்திரன். 

                “என்னப்பா ?” என தூக்க கலக்கத்தில் கேட்டான் உதியன். 

                “எந்திரிடா… “ராசேந்திரன். 

                “இப்ப என்ன அவசரம்? எதுக்கு இப்ப என்னைய எழுப்புறீங்க? “என அரைக்கண்ணை திறந்தான் உதியன். 

                “அடக்கூறுகெட்டவனே… எந்திரிடா முதல்ல… கண்ண தொறந்து பாரு… “ராசேந்திரன். 

                 “இப்ப என்ன ஆச்சு? “என சலித்தபடி கண்களை நன்றாக திறந்தான் உதியன். 

                 “அம்முவ காணோம் டா… “என அசால்ட்டாக உதியனின் தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டார் ராசேந்திரன். 

                தன் தந்தையின் கூற்றில் அதிர்ந்தவன், பிறகு நிதானித்துக்கொண்டு “பதறாதீங்க… அவ எங்கேயும் போய் இருக்க மாட்டா…. இங்க தான் எங்காவது பக்கத்துல போய் இருப்பா… வந்துருவா.. “உதியன். 

                “இவ்ளோ காலையில எங்கடா போய் இருக்க போறா? உன் கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டால… உன் கிட்ட ஏதாவது சொன்னாளா? “ராசேந்திரன். 

               “என் கிட்ட எதுவும் சொல்ல லயே… “என தலையை சொறிந்தபடி எழுந்து வெளியில் வந்தான் உதியன். வெளியில் அனைவரும் பதட்டத்துடன் இருப்பதை பார்த்து விட்டு, “இப்ப ஏன் இப்படி பயப்படுறீங்க? அவ எங்கேயும் போய் இருக்க மாட்டா… வந்துருவா… அவளுக்கு புடிச்சதா ஏதாவது சமைச்சு வைங்க… நான் போய் தேடி கூட்டிட்டு வர்றேன்… “உதியன். 

                “உதி…. உனக்கும் அம்முக்கும் ஏதாவது சண்டையா? “செண்பகம். 

               “ஏம்மா இப்பிடி கேக்குறீங்க? சண்டைலாம் எங்களுக்குள்ள வராது… “என்ற உதியனின் நினைவில் நேற்று மகியை அடித்தது நினைவிற்கு வந்தது. அதில் உதியனின் முகம் லேசாக வாட்டமுற… அதை சரியாக பார்த்துவிட்டார் செண்பகம். 

                  “நீதான் அம்முவ ஏதோ பேசி இருக்க… நேத்து அவளோட முகமே சரியில்லை… தூங்கி எந்திரிச்சா சரி ஆகிருவா னு விட்டுட்டேன்… இப்ப அவளையே காணோம்… சொல்லுடா… அம்முவ என்ன பேசுன? “செண்பகம். 

                “நா ஒன்னும் பேசல ம்மா… “என்ற உதியனின் குரல் உள்ளே சென்றிருந்தது. 

                “விடுங்க… அதான் அவன் எதுவும் பண்ணல னு சொல்லுறான் ல… அவளா தான் எங்காவது போய் இருப்பா… “இந்திரன். 

                “அதான… அவ அடுத்தவங்க பேசுறத எப்பயும் காதுல வாங்கிக்கவே மாட்டாளே….அவளா தான் போய் இருப்பா… உதிய ஏன் திட்டுறீங்க? ” பல்லவி. 

  

                 “இருங்க அண்ணி… ஏதோ நடந்து இருக்கு இவங்களுக்குள்ள…நீ பேசல, சரி….அப்புறம் எப்பிடி அவ கன்னம் வீங்குனுச்சு? “என பார்வையில் கூர்மையை ஏற்றினார் செண்பகம். 

                “அம்மா…..அது வந்து….”என தயங்கினான் உதியன். 

                 “உண்மைய சொல்லு….என்ன நடந்துச்சு? அம்முவ யாரு அடிச்சது? செண்பகம். 

                 “அது….நான் தான் ம்மா…..ஸாரி….”உதியன். 

                 “எதுக்குடா அம்முவ அடிச்ச ? “என கோபத்துடன் உதியனை அடிக்க கை ஓங்கினார் செண்பகம். 

             உதியனை அடிக்க வந்த செண்பகத்தை, “உதியனே அடிச்சு இருக்கான்னா… அவ என்ன தப்பு பண்ணி இருப்பா னு யோசிங்க… இவன மட்டும் தப்பு சொல்ல கூடாது… மொதல்ல அவ எங்க போய் இருக்கா னு பாப்போம்… “என தடுத்தவாறு கூறினார் பல்லவி. 

               “ஒழுங்கா மகி எங்க இருந்தாலும் தேடி கூட்டி வர்ற….போ…”என கோபத்துடன் பேசினார் செண்பகம். 

              “சரிம்மா….”என்றபடி சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு உதியன் வெளியே புறப்பட்ட நொடி, ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான். 

               “மகிக்கா எங்க கூட தான் ஆத்துல மீன் புடிச்சுட்டு இருக்காங்க…நீங்க காணோம் னு தேடுவீங்களாம்….உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க அக்கா….” என கூறி விட்டு ஓடி மறைந்தான் அச்சிறுவன். 

               “கழுதை… காலங்காத்தால சொல்லாம கொள்ளாம போய் இருக்கு பாருங்க… வரட்டும் இன்னக்கி… “என்றவாறு தனது பிரம்பை எடுத்து பார்த்து கொண்டார் பல்லவி. 

              “புள்ளைய ஏன் திட்டுற ? நாம தேடுவோம் னு பொறுப்பா சொல்லி விட்டு இருக்கா. அத நினைச்சு சந்தோஷப்படு… சும்மா எப்ப பாரு புள்ளைய திட்டிட்டு இருக்க? “இந்திரன். 

              “அவள திட்டுனா உங்களுக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துருமே…”என கழுத்தை நொடித்துக்கொண்டு மகிக்காக சமைக்க உள்ளே சென்றார் பல்லவி. 

                உதியனை முறைத்துக்கொண்டே செண்பகமும் சமைக்க உள்ளே சென்றார் .சிறிது யோசித்த உதியன் ,மகிக்கு ஏதாவது வாங்கி வந்து அவளை சமாதானம் படுத்தலாம் என்றெண்ணி விரைவாக கிளம்பி வெளியே சென்றான். அவன் அரக்க பரக்க கிளம்பி செல்வதை ஒரு வித சிரிப்புடன் பார்த்துக்கொண்டே செய்தித்தாளை வாசிக்க ஆரம்பித்தனர் ராசேந்திரனும் இந்திரனும். 

            உதியன் வெளியே கிளம்பி சென்ற சில நொடிகளில் சிதம்பரமும் கருப்பாயியும் வீட்டிற்குள் நுழைந்தனர். 

             “வாங்க… வாங்க… “என இருவரையும் வரவேற்று அமர வைத்தார் ராசேந்திரன். 

             “நல்லவேளை… மகியும் உதியனும் வீட்ல இல்ல… இல்லனா நாம ப்ரீயா பேச முடியாது… என்ன ரெண்டு பேரும் சேந்து வந்து இருக்கீங்க? ஏதாவது முக்கியமான விசயமா? “இந்திரன் .

            “அத ஏன் கேக்குறீங்க சம்பந்தி? நேத்து நைட் ஃபுல்லா இவ புலம்பல் தாங்க முடியல…”என்றவாறு நேற்று தன் மனைவி கண்ட கனவை விரிவாக கூறினார் சிதம்பரம். 

             “இதே தான் எனக்கும் பயமா இருக்கு… மகிக்கிட்ட விஷயத்தை சொன்னா எப்பிடி ரியாக்ட் பண்ணுவான்னே தெரியல… “என்றவாறு உள்ளிருந்து ஹாலுக்கு வந்தார் பல்லவி. 

             “அதுக்கு என்ன பண்றது? ரெண்டு பேரும் சேந்தா நல்லா இருக்கும் னு பெரியவங்க நாம நினைக்கிறோம்… அவங்க கிட்ட பேசி பாப்போம்… அதுக்கு மேல நடக்குறது கடவுள் கையில இருக்கு….”ராசேந்திரன். 

                “எங்களுக்கு மாப்பிள்ளைய ரொம்ப பிடிச்சு இருக்கு….இது போல பையன் கிடைக்க மகி குடுத்து வச்சு இருக்கனும்…..இந்த சம்பந்தம் அமைஞ்சா ரொம்ப நல்லா இருக்கும்… “பல்லவி. 

                 “எங்களுக்கும் மகிய ரொம்ப பிடிச்சு இருக்கு…..அதனால தான் செண்பகம் மூலமா உங்கள பத்தி விசாரிச்சு உங்கள இங்க வர சொன்னோம்…எங்கள மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றி ங்க… “கருப்பாயி. 

                “அட.. நாங்களா தேடி இருந்தா கூட இப்பிடி ஒரு பையனும்…இப்பிடி ஒரு குடும்பம் அமைஞ்சு இருக்காது…..நம்ம பிள்ளைங்க என்ன சொல்லுறாங்க னு பாப்போம்…” இந்திரன். 

             பெரியவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கையில் உதியன் ஒரு பெரிய பார்சலோடு உள்ளே வந்தான். 

              “வாங்க பெரியப்பா….வாங்க பெரியம்மா.. “என தீரனின் அப்பா அம்மா வை வரவேற்றபடி அந்த பார்சலை மகியின் அறையில்  வைத்துவிட்டு மீண்டும் விரைவாக வெளியே கிளம்பினான் உதியன். 

              “வந்ததும் வராததுமா திரும்ப எங்கடா கிளம்புற? “எனக் கத்தினார் செண்பகம். 

               “என் ப்ரண்ட்ட பாக்க…”எனக் கூறி விட்டு நிற்காமல் சென்றான் உதியன். 

                “இவ்ளோ வேகமா ஓடுறான்…”என அனைவரும் சிரித்தனர். 

                 💖💖💖💖💖💖💖💖

          அங்கு ஆற்றங்கரையில் சிறுவர்களோட சிறுமியாக துள்ளி குதித்து ஆடியபடி ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தாள் மகி. 

              மனம் ஒரு மாற்றத்தை வேண்ட, விடியும் பொழுதே வீட்டை விட்டு வெளியே கிளம்பி விட்டாள் மகி. சுற்றும் முற்றும் ரசித்தபடி நடந்து சென்றுக்கொண்டிருக்கையில் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருப்பதை கண்டவள் அவர்களுடன் ஐக்கியமாகி விட்டாள். 

             மகி சிரிப்புடன் விளையாடிக்கொண்டிருப்பதை ஒருவன் வன்மத்துடன் கவனித்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவன் யாரையோ அலைபேசியில் அழைத்து ,”அவ இங்க தான் இருக்கா… கூட நாலஞ்சு சின்னபுள்ளங்கள தவிர வேற யாரும் இல்ல….இவ கூட சுத்திட்டு திரியுற அந்த பயலக்காணோம்… அவ மட்டும் தான் இருக்கா… இன்னும் கொஞ்ச நேரத்துல இவள முடிச்சுருவேன்… நீ அவன முடிச்சுரு… ரெண்டு பேரும் இன்னக்கே செத்துறனும்…..”எனக் கூறி விட்டு அலைபேசியை அணைத்தான் அவன். 

               விளையாடிய களைப்பில் மகிக்கு பசி எடுக்க, சிறுவர்களிடம் கூறி விட்டு தனியாக வீட்டிற்கு கிளம்பினாள் மகி. அவளின் பின்னே ஒரு நைலான் கயிறையும் ஒரு சிறிய கத்தியையும் எடுத்துக்கொண்டு மகி பின்னால் நடக்க ஆரம்பித்தான் அவன். 

             அதே நேரத்தில் வயலில் தனியாக வரப்பு வெட்டிக்கொண்டிருந்த தீரனின் தலையில் ஒருவன் பலமாக தாக்கினான்…. 

                                (காதல் தீ பரவும்…) 

                           -செல்லம்மாள்பாரதி 

    No comments yet.