உதியனும் தீரனும் எதிர் எதிரே பைக்கில் கடந்து செல்லுகையில் உதியன் தீரனை கண்டு புன்னகைக்க… “யார் பெத்த புள்ளையோ இந்த கெட்டவன் கிட்ட மாட்டிக்க போகுது… “என நினைத்தவாறு மகி தீரனை பார்த்தாள்.
அதே நேரம் எதார்த்தமாக உதட்டை ஈரப்படுத்திக்கொண்டே உதியனை நோக்கி புன்னகைத்தவன், அடுத்து மகியை பார்த்தவன், “யார் பெத்த புள்ளையோ இந்த ராங்கிக்காரிக்கிட்ட மாட்டி சீரழிய போகுது… “என நினைத்தவாறு அவர்களை கடந்து சென்றான் தீரன்.
தீரனின் செய்கையை கண்டவள், அவன் தன்னை பார்த்து தான் உதட்டை கடித்து தன்னை கேவலப்படுத்துகிறான் என்றெண்ணி, “பொறுக்கி… “என வெறுப்புடன் சற்று சத்தமாகவே முனுமுனுத்தாள் மகி.
அதைக்கேட்ட உதி, “யாரடி பொறுக்கி னு சொல்லுற? “என்றான்.
தீரனின் மீது வெறுப்பில் இருந்தவள் பட்டென்று “உன் அண்ணன தான்… ” எனக் கூறினாள் மகி.
மகி கூறிய பதிலைக்கேட்ட உதி துணுக்குற்று சட்டன்ப்ரேக் போட்டு பைக்கை நிறுத்தினான் உதியன். அதில் சுதாரிக்காமல் இருந்த மகி வண்டியில் இருந்து தடுமாறி விழப்போக…சட்டென சுதாரித்து உதியனின் தோளை பற்றி தன்னை நிலைப்படுத்திக்கொண்டாள் மகி.
“இப்ப எதுக்கு டா இப்பிடி சட்டன்ப்ரேக் போட்ட? இந்நேரம் கீழ விழுந்து இருப்பேன்… “மகி.
“இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னடி சொன்ன? “உதியன்.
“என்ன சொன்னேன்? “மகி.
“தீரன் அண்ணன பொறுக்கி னு சொன்னியே? “உதியன்.
“ஆமா… சொன்னேன்.. அதுக்கு என்ன இப்ப? அதுக்காக என்னைய கீழ தள்ள பாப்பியா? “மகி.
“அப்ப நீ நிஜமாலும் அண்ணன பொறுக்கி சொல்லி இருக்க? “உதியன்.
“ஆமா டா வெண்ண… அவன் பொறுக்கி தான்… “என கோபத்தில் கத்தினாள் மகி.
“மகி…. அவ்ளோதான் லிமிட் உனக்கு… அண்ணன பத்தி உனக்கு என்ன தெரியும்? அவர பொறுக்கி னு சொல்லுற? சும்மா ஏதாவது அவர திட்டனும் னு இப்பிடிலாம் சொல்லாத… “உதியன்.
“உனக்கு என்னைய விட உன்னோட அந்த பொறுக்கி அண்ணன் தான் பெருசா? “மகி.
“மறுபடி மறுபடி அவர அப்பிடி சொல்லாத… எனக்கு கெட்ட கோபம் வரும்… “உதியன்.
“நான் அப்பிடித்தான் சொல்லுவேன்….திரும்ப திரும்ப சொல்லுவேன்… ஏன்னா அவன் பொறுக்கி தான்… “என கோபத்தில் அறிவிழந்து கத்தினாள் மகி.
“மகி… என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு… திரும்ப திரும்ப அப்பிடி சொல்லாத னு சொல்லுறேன் ல… “என பொறுமையை இழுத்து பிடித்து பேசினான் உதியன்.
“உனக்கு என்னைய விட அவன் தான் பெருசா போயிட்டான் ல… அப்ப நான் யாரோவா? “மகி.
“ஆமாடி… எனக்கு என் அண்ணன் தான் முக்கியம்… அவரு தான் எனக்கு பெருசு… அவர பத்தி உனக்கு என்ன தெரியும் னு இப்பிடி அவர, அவன் இவன் மரியாதை இல்லாம பேசுறதும் இல்லாம பொறுக்கி னு சொல்லுற… அவரு என்ன உன் கைய பிடிச்சு இழுத்தாரா? உன்னைய இல்ல… எந்த பொண்ணையும் அவரு திரும்பி பாக்க மாட்டாரு… ஏன்னா… அவரு பொண்ணுங்கள மதிக்கிறவரு… இன்னொரு தடவ இப்பிடி பேசுன நான் மனுஷனா இருக்க மாட்டேன்… “என உக்கிர மூர்த்தியாக பேசினான் உதியன்.
“ஆமாடா… அவன் என் கைய புடிச்சி தான் இழுக்கல…ஆனா அதுக்கு மேலே பண்ணுனான்…. அவன் ஒரு பொறுக்கி தான்… “என மகி கத்திய அடுத்த நொடி அவளின் கன்னத்தில் உதியனின் கரம் இடியென இறங்கியது.
“எது எதுல விளையாடுறது னு ஒரு விவஸ்த்தை இல்ல? பிச்சுருவேன்டி… வாய அடக்கி பழகு… “உதியன்.
“ஒரு பொண்ணு இந்த மாதிரி விஷயத்துல விளையாடுவாளா மிஸ்டர் உதியன்? “என விழிகளில் தேங்கிய கண்ணீருடன் கேட்டுவிட்டு உதியன் அடித்ததில் தீயென எரிந்த கன்னத்தில் கை வைத்தபடி அவனை கடந்து வீட்டிற்கு நடந்தாள் மகி.
மகியின் கேள்வியிலும் அவளின் விழிகளில் இருந்த நேர்மையிலும் திகைத்து, “ஒருவேளை இவ சொல்லுறது உண்மையா இருக்குமோ? “என்றெண்ணிய அடுத்த நொடி, “இல்ல…கண்டிப்பா தீரன் அண்ணே அப்பிடிபட்டவர் இல்ல…இவ ஏதோ தப்பா புரிஞ்சுட்டு பேசுறா….”என தீர்மானித்தான் உதியன்.
மகி தற்பொழுதைய மனநிலையை உணர்ந்த உதியன், அவளை தொல்லை செய்யாமல் அவள் பின்னாடியே பைக்கை தள்ளியபடி நடந்தான் உதியன்.
மௌனமாகவே வீடு வந்து சேர்ந்த இருவரும் எதுவும் பேசாமலயே அவரவர் சிந்தனையில் மூழ்கினர்.
“இவன் எப்பிடி நம்மள நம்பாம போகலாம்? இது மாதிரி விஷயத்துல பொய் சொல்லுற அளவுக்கு கேவலமான பொண்ணா நான்? அவன் என்னைய பாத்து எப்பிடிலாம் கேவலமா சைகை செஞ்சு காமிச்சான்… பொறுக்கி…இங்க இருந்து நான் போறதுக்குள்ள உனக்கு ஒரு பாடத்த சொல்லி குடுத்துட்டு போறேன் டா தீரா… என் கிட்ட உன் பொறுக்கித்தனத்த காமிக்கிறியா? இந்த மகிழ்விழி யாருனு உனக்கு காட்டுறேன் டா….”என தன் அறையில் அமர்ந்து தீரனை அரைத்துக் கொண்டிருந்தாள் மகி.
இப்பொழுது திட்டும் தான் ,தான் பஞ்சாயத்தில் தீரனுக்கு ஆதரவாக சிறுவர்களை செயல்படுத்த வைத்தோம் என்பதையோ அப்பொழுது நல்லவனாக தெரிந்தவன் இப்பொழுது கெட்டவனாக எவ்வாறு தெரிகிறான் என்பதை யோசிக்க மறந்தாள் மகி. தவறான புரிதலில் தான் தவறு செய்வதை உணர மறுத்தாள் மகி.
“என்ன தைரியம் இருந்தா அண்ணன இவ தப்பா பேசுவா? வர வர ரொம்ப ஓவரா பண்றா… என்னமோ இவ தான் உலகத்தோட ஒட்டு மொத்த பொண்ணுகளோட பிரதிநிதி மாதிரி பண்றா….”என மகியை நினைத்து பொறுமினான் உதியன்.
மகியை அடித்ததில் குற்ற உணர்வு ஏற்பட… மனது கேளாமல் மகியை சென்று பார்த்தான் உதியன். கன்னத்தில் கை வைத்தபடி யோசனையில் மூழ்கி இருந்த தன் தோழியின் தோள் மீது கை வைத்து ,”ஸாரி டி.. “என்றான்.
ஆழ்ந்த சிந்தனையில் இருந்த மகி, உதியனின் தொடுதலை உணர்ந்தவள், அவன் ஸாரி சொல்வதை செவி மடுத்தவள் ,”எதுக்கு? “என்றாள்.
“உன்னைய அடிச்சதுக்கு.. ஸாரிடி… நீயும் அப்பிடி பேசி இருக்க கூடாது… “உதியன்.
“அப்ப அடிச்சதுக்குத்தான் ஸாரி கேக்குற? “மகி.
“ஆமாம்… நீ ஏன் அப்பிடி பேசுன? உனக்கும் அண்ணனுக்கும் என்ன பிரச்சினை? அன்னக்கி அவர் வீட்டுல இருந்து வந்தப்போ ஒரு மாதிரி இருந்தியே? என்ன ஆச்சு? “உதியன்.
“ஒன்னுல்ல… “மகி.
“சொல்லுடி… சொன்னா தான தெரியும்… “உதியன்.
“இட்ஸ் மை பர்ஸ்னல்… “மகி.
“எனக்கு கூட தெரியக்கூடாத பர்ஸ்னலா ?”உதியன்.
“என்னய விட உனக்கு உன் அண்ணன் முக்கியமா இருக்கான் ல… அதுபோல இது என்னோட பர்ஸ்னல்… “மகி.
“அம்மு… ஸாரி டி… “உதியன்.
“கொஞ்சம் என்னைய தனியா விடுறியா? “மகி.
“ஸாரி அம்மு… நான் போறேன்…”என முகம் வாடியபடி அங்கிருந்து சென்றான் உதியன்.
வீட்டிற்கு வரும் வழியில் எதிரில் மகியை பார்த்தவன், அவளது நினைவிலேயே வீட்டிற்குள் நுழைந்தான் தீரன்.
“எப்ப போனவன் எப்ப தம்பி வர்ற? “என்றபடி தீரனின் எதிரே வந்தார் கருப்பாயி.
“பஞ்சாயத்துல இருந்து நேரா உதி வீட்டுக்கு போயிட்டேன் ம்மா… “என்றவாறு பஞ்சாயத்தில் நடந்த அத்தனையும் தன் தாயிடம் விவரித்தான் தீரன்.
அனைத்தையும் வியப்புடன் கேட்ட கருப்பாயி “மகி ரொம்ப நல்ல புள்ள ல தீரா… ” என்றார்.
“ஆமா…. நல்ல புள்ள தான்… அந்த நல்ல புள்ளைக்கு சீக்கிரமே கல்லியாணம் ஆக போகுது…. அவளோட அப்பா அம்மா ஊருல இருந்து வந்து இருக்காங்க… அவங்க தான் சொன்னாங்க… செண்பக சித்தி உனக்காக அவங்களுக்கு வச்ச கோழி குழம்பு குடுத்து விட்டுச்சு… இந்தா புடி…. “தீரன்.
“மாப்பிள்ளை யாரு னு சொன்னாங்களா? “என்று ஒரு வித பயம் கலந்த எதிர்பார்ப்புடன் கேட்டார் கருப்பாயி.
“நான் கேக்கல ம்மா….அவங்களே பத்திரிக்கை வைக்கிறப்ப சொல்லுவாங்க… நம்மள லாம் கூப்பிட்டு இருக்காங்க… செம டயர்டா இருக்கு ம்மா… நான் போய் தூங்குறேன்.. உதி வீட்டுலயே சாப்பிட்டுட்டேன்.. நீ சாப்பிடு… “என்றபடி தனது அறையில் சென்று மெத்தையில் விழுந்தான் தீரன்.
“தம்பி தீரா… நான் உன் கிட்ட ஒன்னு சொல்லனும்… “என்றபடி தீரனின் பின்னே சென்றார் கருப்பாயி.
“என்ன ம்மா? சொல்லு… “தீரன்.
“அது… அம்மா உனக்கு பொண்ணு பாத்து இருக்கேன்… “கருப்பாயி.
“சரி ம்மா… நான் சொன்ன மாதிரி தான பொண்ணு பாத்து இருக்க? பொண்ண உனக்கு புடிச்சு இருந்தா எனக்கு ஓகே ம்மா… “தீரன்.
“பொண்ணு யாரு னு கேக்க மாட்டியா? “கருப்பாயி.
“யாரா இருந்தா என்ன ம்மா? நீ எனக்கு ஏத்தது போல தான் பாத்து இருப்ப… “தீரன்.
“இருந்தாலும்… “கருப்பாயி.
“சரி… சொல்லு…. பொண்ணு யாரு? “தீரன்.
“நம்ம மகி தான் ப்பா… “கருப்பாயி.
“என்ன ம்மா உலறுர ?அவங்க அப்பா அம்மா அவளுக்கு வேற மாப்பிள்ளை பாத்து இருக்காங்க… நீ இப்பிடி சொல்லுற… அத்தோட அந்த ராங்கிக்காரி யலாம் என்னால கல்லியாணம் பண்ணிக்க முடியாது… “என கோபமாக உரைத்தான் தீரன்.
“அது… அந்த மாப்பிள்ளையே நீதான்… “என மெதுவாக கூறினார் கருப்பாயி.
“என்ன? எல்லாரும் சேந்து நாடகமாடுறீங்களா? அந்த ராங்கிக்காரி… என் பொண்டாட்டி யா? முடியாது… முடியவே முடியாது… எல்லாம் அந்த ராங்கிக்காரி தான் ப்ளான் பண்ணி இருப்பா… அவள… “என கோபத்துடன் மீண்டும் தனது பல்சரை எடுத்துக்கொண்டு உதியனின் வீட்டை நோக்கி சென்றான் தீரன்.
“ஏய் மகி… அடியேய் ராங்கிக்காரி… வெளிய வாடி…. “என உதியனின் வீட்டின் நடுவே நின்று கத்தினான் தீரன்.
தீரனின் சத்தத்தை கேட்டு அனைவரும் வெளியே வர… மகியும் உதியனும் வெளியே வந்தனர்.
மகியை பார்த்த தீரன் கோபத்துடன், “நீ எவ்ளோ பெரிய நாடகக்காரி னு இப்ப தான் தெரியுது… நடிச்சு என் அம்மாவ மயக்குனதும் இல்லாம அப்பிடியே என்னைய மயக்கி கல்லியாணம் பண்ணிக்கலாம் னு பாக்குறியா? “எனக் கத்தினான்.
” நாக்க அடக்கி பேசுங்க… இல்ல… மரியாதை கெட்டுரும்… “மகி.
“பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு என்னடி ஓவரா துள்ளுற? “தீரன்
“நீங்க எத பத்தி பேசுறீங்கன்னே தெரியல… கொஞ்சம் தெளிவா சொல்லுங்க… “மகி.
“என்னப்பா ஆச்சு? இப்ப எதுக்கு இவ்ளோ கோபமா இருக்க? “செண்பகம்.
“நீங்க பேசாதீங்க.. எல்லாருமா இவளோட சேந்து நடிக்க ஆரம்பிச்சுட்டீங்க… பேசாம போயிருங்க… “தீரன்.
“இப்ப என்னத்துக்கு வந்து இப்பிடி பைத்தியம் மாதிரி தையதக்கா னு குதிச்சுட்டு இருக்கீங்க? “மகி.
“நடிக்காதடி… நாடகக்காரி… “தீரன்.
“அடச்சீ…. வாய மூடு டா… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன…. கன்னம் பழுத்துரும்… “மகி.
“என் கன்னம் பழுக்குமா? இப்ப உன் கன்னம் எப்பிடி பழுக்குது னு பாருடி… “என்றவாறு மகியை இழுத்து அறைந்தான் தீரன்.
தீரன், மகியை அறைந்த அடுத்த நொடி, “என் ப்ரண்ட அடிக்க நீ யாருடா? “என்றவாறு தீரனை அடித்திருந்தான் உதியன்……
(காதல் தீ பரவும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.