காதல் தீ -18

Chellammal Bharathi | 29 Nov 2025 | Share

               “நல்லவன்னு நினைச்சா… பொறுக்கியா இருந்து இருக்கான்… ச்சீ… இங்க பாரு மகி…. இனி அவன் கிட்ட பேச்சு வச்சுக்கிட்ட…உன்னைய மிக்ஸி ல  போட்டு அரைச்சுருவேன் அரைச்சு… “என தனக்குள் பேசிக்கொண்டு வந்த மகியை தூரிகை எதிர்கொண்டாள் .

            “என்னக்கா? முகம் ஒரு மாதிரி இருக்கு? என்ன ஆச்சு? “தூரிகை. 

            “ஆஆ… ஒன்னுல்ல டா…. நீ நல்லா சாப்பிட்டியா? “மகி. 

            “நான் நல்லா சாப்பிட்டேன் க்கா…. உங்க ப்ரண்ட் தான் என்னைய பாத்து முறைச்சுட்டே இருந்தாங்க… “என முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூறினாள் தூரிகை. 

            தூரிகை கூறிய விதத்தில் சிரிப்பு வர… “அந்த நாயி பச்சையா சைட் அடிச்சுட்டு இருந்து இருக்கு…. அத இந்த அப்பாவி முறைக்குது னு சொல்லுது… விளங்கிரும்…. “என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் மகி. 

             “அந்த லூசு பார்வையே அப்பிடித்தான் தூரி மா… “என சிரித்தவாறு தூரிகையின் தோள் மீது கை போட்டு கொண்டு செண்பகத்திடம் வந்தாள் மகி. 

            “எப்பிடிமா என் தங்கச்சி? ” என செண்பகத்திடம் கேட்டாள் மகி. 

            “உன்னைய மாதிரி இல்லாம…. அவ பொண்ணு மாதிரி இருக்கா….. “பல்லவி. 

            “நான் உன் கிட்ட கேக்கல பல்லவி…. நீ கொஞ்ச நேரம் அந்த காவாய க்ளோஸ் பண்ணிகிட்டு இரு… “மகி. 

             “பாத்தியலாங்க… பெத்த அம்மாக்கிட்ட பேசுற மாதிரியா பேசுறா? எல்லாம் நீங்க குடுக்குற செல்லம்… “பல்லவி. 

            “அவ நம்ம கிட்ட தான அப்பிடி பேசுறா? விடேன் பவி….”இந்திரன். 

             “பல்லவி கிடக்கு… நீ சொல்லு ம்மா… தூரிகை எப்பிடி? “மகி. 

               “அவளுக்கு என்ன? ராசாத்தி….ரொம்ப அமைதியான பொண்ணு…இவ போற வீடு குடுத்து வச்சது…”என தூரிகையை நெட்டி முறித்தார் செண்பகம். 

              “ம்க்ஹூம்… எல்லாரும் நல்லா கேட்டுக்கங்க பா… என் தங்கச்சி…என் தூரி பாப்பா….கல்லியாணம் பண்ணிட்டு போற வீடு குடுத்து வச்சதாம்…செண்பகம் அம்மாவே சொல்லுறாங்க… “என தீரனுடன் பேசிக்கொண்டிருந்த உதியனின் காதில் விழுமாறு சத்தமாக கூறினாள் மகி. 

           மகி கூறியதை கேட்ட உதியன், அடித்து பிடித்து அவர்களிடம் வந்து இணைந்தான். அவன் பரபரப்பாக வந்ததை அனைவரும் வித்தியாசமாக பார்க்க… மகி, உதியனை பார்த்து நக்கலாக சிரித்தாள். 

              மகி சிரிப்பதை கண்டு முறைத்தவன், “ஆகா… இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது? “என தீவிரமாக யோசித்து.. “அது… மகி ஏதோ சத்தமா கத்தினா… அதான் ஏதோ னு பயந்து வந்தேன்… “என அசடு வழிய சமாளித்தான் உதியன். 

              “இந்த வங்குரங்கு சொல்லுறது நம்புற மாதிரி இல்லையே… “என ஆராய்ச்சியாக உதியனை உற்று நோக்கினாள் தூரிகை. 

              “அய்யையோ… இந்த குட்டிச்சாத்தான் என்ன நம்மள இப்பிடி உத்து பாக்குது… ஒருவேளை கண்டுபிடிச்சுருவாளோ… “என நினைத்தவாறு, “காப்பாத்துடி ராட்சசி… “என மகியிடம் கண்களால் கெஞ்சினான் உதியன். 

            தன் நண்பனின் மீது இரக்கம் கொண்டவள் சிரித்தவாறு… “நாங்க போய் தூரிகைய அவங்க வீட்டுல விட்டுட்டு வர்றோம்… “என்றாள் மகி. 

              “நாங்க னா யாரு? “பல்லவி. 

                “நானும் உதியும் தான்… “மகி. 

                “அவன உயிரோட கொன்னுரு… பாவம் அவன்… உன் கிட்ட மாட்டிக்கிட்டு ரொம்ப கஷ்ட்டப்படுறான்… “பல்லவி. 

                “ஏன் அண்ணி அம்முவ அப்பிடி சொல்லுறீங்க? அம்மு சமத்து… இவன லேசு னு நினைச்சுறாதீங்க… இவன் நிறைய பண்ணுவான்.. நிறைய பேசுவான்… “என உதியனை முறைத்தார் செண்பகம். 

                “அய்யையோ… இந்த அம்மாக்கு எல்லாம் தெரிஞ்சுருச்சு போலயே… இந்த ராட்சசி தான் போட்டுக் குடுத்துருப்பா… போச்சு… போச்சு…”என மைண்ட் வாய்ஸில் பேசியவாறு நின்றிருந்தான் உதியன். 

              “எல்லாம் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க தான்… “ராசேந்திரன். 

               “சரி… சரி… பேசிட்டே நிக்காம புள்ளைய வீட்டுக்கு கூட்டிட்டு போங்க… “செண்பகம். 

              “சரி ம்மா…. வா தூரி நாம போகலாம்… டேய் நல்லவனே… வாடா… “என உதியனை இழுத்துக்கொண்டு சென்றாள் மகி. தூரிகையுடன் அவளது வீட்டை நோக்கி உதியனின் பைக்கில் மூவரும் புறப்பட்டனர். 

             உதியன் சென்றதும், “அப்போ நானும் கிளம்புறேன் சித்தி… “என செண்பகத்திடம் கூறினான் தீரன். 

             “நீ ஏன் தீரா உடனே கிளம்புற? இங்க வா… மகியோட அப்பா அம்மா கிட்ட நாலு வார்த்தை பேசிட்டு இரு… நான் அம்மாக்கு குழம்பு எடுத்து தர்றேன்… எடுத்துட்டு போ… “செண்பகம். 

             “ஏன் சித்தி? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… “தீரன். 

              “நீ இரு தீரா… இதோ வர்றேன்… “என சமையக்கட்டுக்குள் நுழைந்தார் செண்பகம். 

                “அட சும்மா உக்காரு பா…உன்னைய நாங்க கடிச்சு தின்னுற மாட்டோம்… “இந்திரன். 

              பல்லவி எதுவும் கூறாமல் அமைதியாக தீரனை அளவெடுத்துக்கொண்டிருந்தார். பல்லவியின் அளவெடுக்கும் பார்வையை உணர்ந்த தீரன், “இப்ப எதுக்கு இந்த அம்மா நம்மள ஆராய்ச்சி பார்வை பாக்குது? “என நினைத்தவாறு வெளியில் சிரித்து வைத்தான். 

              “உனக்குத் தெரியுமா தீரா? நம்ம மகிக்கு மாப்ளை பாத்து இருக்காங்க… அவ படிப்பு முடிஞ்சதும் சீக்கிரமே மகிக்கு டும் டும் தான்… “என சந்தோஷமாக கூறினார் ராசேந்திரன். 

              “என்ன? ராங்கிக்காரி க்கு கல்லியாணமா? “என நினைத்தவாறு “இப்பவே ஏன் மகிக்கு கல்லியாணம் பண்றீங்க? ஏதாவது லவ்வா? “என்றான் தீரன். 

              “யாரு? நான் பெத்த அந்த சாத்தானா லவ் பண்ண போகுது? லவ்வுனு சொன்ன அத்தனை பேரையும் அடிச்சு தோலை உறிச்சு தொங்க விட்டுட்டா… இந்த சாத்தான எந்த பையன் லவ் பண்ணுவான்? இது பெரியவங்க நாங்க பாத்த வரன்… “பல்லவி. 

               பல்லவி கூறியதை கேட்ட தீரன், “எல்லாரையும் அடிச்சுட்டாளா? “என சிரித்துக்கொண்டே தன் கன்னத்தை தடவினான். 

               “ஆமா… நீங்களும் அவ கிட்ட அடி வாங்கிட்டீங்க னு கேள்விபட்டேன்.. ஸாரி தம்பி… மன்னிச்சுருங்க… பொண்ண தைரியமா வளக்குறேன்னு இந்த மனுஷன் இப்பிடி அடாவடியா வளத்து இருக்காரு… ஸாரி தம்பி… அதெல்லாம் மனசுல வச்சுக்காதீங்க… “பல்லவி. 

               “அய்யோ அம்மா… நீங்க ஏன் ஸாரி கேக்குறீங்க? நான் அதெல்லாம் அப்பவே மறந்துட்டேன்… அதோட தப்பு பண்ணுனது நான் தான் ….”தீரன். 

               “இது என்ன அம்மானு கூப்பிடுறீங்க? அத்தை னு சொல்லுங்க… “பல்லவி. 

                “சரிங்க அத்தை…மாப்பிள்ளை என்ன படிச்சு இருக்காங்க? இது மகிக்கு தெரியுமா? “தீரன். 

                “மகிக்கு இன்னும் இந்த விஷயம் தெரியாது… மாப்பிள்ளை எம் எஸ் சி அக்ரிக்கல்ஜர் முடிச்சு இருக்காரு… “என தீரனை பற்றி தீரனிடமே கூறினார் பல்லவி. 

                “எவ்வளவு படிச்சு இருந்தாலும் நல்ல குணமா னு பாத்துருங்க அத்தை… “தீரன். 

                 “அதெல்லாம் நாங்க பாத்து பேசிட்டே இருக்கோம் மருமவனே… பையன் தங்கம்… “என சிரிப்புடன் தீரனிடம் கூறினார் இந்திரன். 

               “மருமகனா? “என சந்தேகமாக வினவினான் தீரன். 

                “முறைப்படி மருமகன் தான தீரா…. “ராசேந்திரன். 

               “ஓஓஓ… மாமா ,அத்தை ங்கிறது னால மருமகன் னு சொல்லுறாரு போல.. “என நினைத்தவாறு, “சரிங்க மாமா… “என்றான் தீரன். 

              “எப்ப கல்லியாணம் னு சொல்லுங்க மாமா… குடும்பத்தோட வந்துர்றேன்… “தீரன். 

                “நீங்க இல்லாம மகிக்கு கல்லியாணம் நடக்காது… “என புன்னகையுடன் கூறினார் பல்லவி. 

                  “யாரு பெத்த புள்ளையோ… இந்த ராங்கிக்காரிக்கிட்ட மாட்டி சீரழிய போகுது… அய்யோ பாவம்… “என நினைத்தவாறு செண்பகம் அளித்த பாத்திரத்தை வாங்கிக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்று வீட்டிற்கு கிளம்பினான் தீரன். 

              “அந்த பாவ பட்ட ஜீவன் நீதான்டா லூசு.. “என விதி அவனை பார்த்து சிரித்தது…

                  💖💖💖💖💖💖💖

          தூரிகையை அவள் வீட்டில் விட்டுவிட்டு தீரனின் வீடு வழியே வந்தவர்களை வாசலில் நின்ற கருப்பாயி பார்த்து விட்டு உதியனையும் மகியையும் உள்ளே அழைத்தார். 

             கருப்பாயி யின் அழைப்பை மதித்தவர்கள் தீரனின் வீட்டில் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தனர். 

               “என்ன டா உதி? இந்த பக்கம் வர்றதே இல்ல நீ? “கருப்பாயி. 

                “அவன் ரொம்ப பிஸி ப்ளாக் பியூட்டி… “என்றவாறு ஊஞ்சலில் அமர்ந்து ஆட தொடங்கினாள் மகி. 

               “இந்த பெரியம்மாவ பாக்க வர கூட நேரம் இல்லாம அப்பிடி என்ன டா பிஸி? “என உதியனின் கன்னத்தில் அடித்தார் கருப்பாயி. 

              “அப்பிடிலாம் ஒன்னும் இல்ல பெரியம்மா… இந்த ராட்சசி சும்மா சொல்லுறா… “உதியன். 

               “அவன் கிடக்குறான் விடு ப்ளாக் பியூட்டி… நீ ஏன் அவசரமா கூப்பிட்ட? என்ன விசயம்? “மகி. 

               “பாத்தியா… மறந்துட்டேன்… நம்ம தீரனுக்கு ஒரு பொண்ணு பாத்து இருக்கேன் டா கண்ணு…. “கருப்பாயி. 

               “வாவ்… அண்ணனுக்கு கல்லியாணமா? சூப்பர்.. சூப்பர்… பொண்ணு எப்பிடி? “உதியன். 

              “பொண்ணு அப்பிடியே மகாலட்சுமி… ரொம்ப நல்ல பொண்ணு…. “கருப்பாயி. 

             “அய்யோ… யாரு பெத்த புள்ளையோ… இந்த டைனோஸர் கிட்ட மாட்ட போகுது…. பாவம் அந்த பொண்ணு… “என நினைத்தவாறு, “ரொம்ப சந்தோஷம் ப்ளாக் பியூட்டி… சீக்கிரம் கல்லியாண சாப்பாட போடுங்க… “என்றாள் மகி. 

              “அய்… தீரன் அண்ணனுக்கு கல்லியாணம்… இத நான் உடனே அம்மா கிட்ட சொல்லியே ஆகனுமே… வா மகி சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்… “என மகியை அழைத்துக்கொண்டு கருப்பாயி யிடம் விடைபெற்று கொண்டு பைக்கில் புறப்பட்டான் உதியன். 

               செல்லும் வழியில் தீரனின் பல்சர் அவர்களை கடக்க…. அப்பொழுது தீரனை மகி பார்க்க… தீரனும் மகியை பார்த்தான்… 

            “பாவம் அந்த பொண்ணு… “என மகியும்… “பாவம் அந்த பையன்…. “என தீரனும் அவர்களுக்காக அவர்களே வருத்தப்பட்டனர்…. 

                இருவருக்கும் உண்மை தெரிந்தால் என்ன நடக்கும்??? 🤔🤔🤔

                            (காதல் தீ பரவும்….) 

                            -செல்லம்மாள்பாரதி 

             

    No comments yet.