தீரனையும் உதியனையும் ஏமாற்றிய சந்தோஷத்தில் விசிலடித்தபடி துள்ளிக்குதித்து தூரிகையுடன் வீட்டை நோக்கி ஓடினாள் மகி.
“தீரன் அண்ணே, உனக்கு நிஜமாலும் மச்சானா க்கா? “தூரிகை.
“அவங்க அப்பா வ உனக்கு தெரியுமா? “மகி.
“ஓஓ… நல்லா தெரியுமே… சிதம்பரம் அப்பாவ தெரியாம போகுமா? “தூரிகை.
“ஆங்… உங்க சிதம்பரம் அப்பா தான் அவர மாமா னு கூப்பிட சொன்னாங்க… அவரு எனக்கு மாமா னா.. அவரு மகன் எனக்கு மச்சான் தான? “மகி.
“ஆமா… “தூரிகை.
“அதான் உங்க தீரன் அண்ணன மச்சான் னு சொன்னேன்… இது தப்பா? “மகி.
“தப்பே இல்ல க்கா… “என சிரித்தாள் தூரிகை.
“சரி….வேகமா வா…செண்பகம் இன்னக்கி கோழி குழம்பு வச்சு இருக்கு போல… வாசனை தூக்கலா வருது….”என தூரிகையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள் மகி.
“ம்மா…. ம்மா…இங்க பாரேன்…நான் ஒரு குட்டி தங்கச்சிய கூட்டிட்டு வந்து இருக்கேன்…”எனக் கூவினாள் மகி.
மகியின் குரலைக்கேட்டு உள் அறையில் இருந்து வெளிவந்த செண்பகம், தூரிகையை பார்த்து , “வாம்மா… “என அவளை வரவேற்று விட்டு, “இது யாரு மகி? “என மகியிடம் வினவினார்.
“இவளா? இவ தான் உங்க மகன சோத்துலயும் சேத்துலயும் அடிச்ச வீராங்கனை… பேரு தூரிகை….அவன அடிச்ச ஒரே காரணத்துனாலயே இப்ப என்னோட தங்கச்சியா மாறிட்டா…” மகி.
“என்ன சொல்லுற அம்மு? ஓஓ… அதான் துரை நேத்து அந்த கோலத்துல வீட்டுக்கு வந்தாரோ? அந்த கிறுக்கன் உன்னைய என்ன மா பண்ணுனான்? “செண்பகம்.
“இருங்க… இருங்க…நான் சொல்லுறேன்… “என நடந்த அத்தனையும் கூறினாள் மகி.
அதைக்கேட்ட செண்பகம், “மொசரக்கட்டை இவ்ளோ பேசி இருக்கானா? வரட்டும் இன்னக்கி… நீ பயப்படாத மா… அவன் இனி உன் கிட்ட வம்பு வச்சுக்க மாட்டான்…நான் கண்டிச்சுக்கிறேன்… உன் அப்பா பேரு என்ன மா? என்ன படிக்கிற? “என்றார்.
“அப்பா பேரு கலியமூர்த்தி…. லெவன்த் படிக்கிறேன் ம்மா…” தூரிகை.
“பயப்படாத….இது உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ….”செண்பகம்.
“அம்மா னா அம்மா தான்…. சரி இன்னக்கி கோழி குழம்பா? வாசனை மூக்க துளைக்குது…என்ன ஸ்பெஷல் இன்னக்கி? “என தன் மூக்கால் வாசனை பிடித்துக்கொண்டே கேட்டாள் மகி.
“அது வந்து அம்மு…இப்ப நீ எனக்கு தூரிகைய கூட்டி வந்து சந்தோஷபடுத்துன மாதிரி…நான் ஒருத்தவங்கள கூட்டி வந்து உன்னைய சந்தோஷப்படுத்தப் போறேன்…அவங்களுக்காகத் தான் இந்த கோழி குழம்பு….”செண்பகம்.
“பார்ரா…யாரு செண்பகம் அந்த விஐபி?” மகி.
“ம்ம்…அது நான் தான்டி….”என மகியின் பின்னால் ஒரு குரல் கேட்டு திரும்பி பார்த்தாள்.
“யம்மோவ்… நீ எப்ப ம்மா இங்க வந்த? உன்னைய யாரு கூட்டி வந்தது? எங்க உன் புருஷன்? அவர் இல்லாம நீ வெளில வர மாட்டியே? ரெண்டு பேரும் ஜோடியா தான கிளம்புவீங்க… இந்திரா… யோவ் இந்திரா… “எனக் கத்தினாள் மகி.
“எடு செருப்ப நாயே… அம்மா அப்பா ங்கிற மரியாதை கொஞ்சங்கூட இல்ல… எல்லாம் அந்த மனுஷன் குடுக்குற இடம்.. ” என மகியின் தாய் பல்லவி சிடுசிடுத்தார்.
“இப்ப எதுக்கு என் மகளயும் என்னையும் திட்டுற? எங்கள திட்டலனா உனக்கு பொழுது போகாதே…”என்றபடி உள்ளிருந்து வந்தார் மகியின் தந்தை இந்திரன்.
தன் தந்தையை பார்த்ததும், “அப்பா… “என்றவாறு இந்திரனை தாவி அணைத்துக்கொண்டாள் மகி.
“எப்பிடி டா இருக்க? “என தன் மகளை பாசத்துடன் பார்த்தார் இந்திரன்.
அவருக்கு பதில் சொல்ல மகி வாய் திறந்த நொடி, “அடியேய்… என்ன இது ட்ரெஸ்? எத்தனை தடவ படிச்சு படிச்சு சொன்னேன்.. இந்த ட்ரெஸ்ஸ எல்லாம் அங்க கொண்டு போகாத.. ஒழுங்கா பாவாடை தாவணி எடுத்துட்டு போ னு தான சொன்னேன்.. இத போட்டுக்கும் ஊரு சுத்திட்டு வந்து இருக்க…எவ்ளோ திமிரு… ” என்றவாறு கையில் கிடைத்த ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு மகியை துரத்தினார் பல்லவி.
“இப்ப இந்த லாங் ஸ்கர்ட் ட்ரெஸ் க்கு என்ன குறைச்சல் னு என்னைய அடிக்க வர்ற? வயசான காலத்துல என் கூட ஏன் இப்படி ஓடி பிடிச்சு விளையாட ஆசைப்படுற பல்லவி? இன்னும் இளமை ஊஞ்சலாடுது னு நினைப்போ? “என்றவாறு பல்லவியிடம் சிக்காமல் ஓடினாள் மகி.
ஓடிய மகி, எதிரே உதியனும் தீரனும் வருவதை கண்டவள் “டேய் உதியா… என்னைய காப்பாத்து… ஒரு ஆபத்தான மிருகம் என்னைய துரத்திட்டு வருது… “எனக் கத்தியவாறு உதியனின் பின்னே சென்று ஒளிந்தாள் மகி.
அதிர்ச்சியில் இருந்து ஒருவாறு மீண்டு உதியனுடன் வந்த தீரன், மகியின் அலறலைக்கேட்டு திகைத்தான்.
“ஹேய்… என்ன ஆச்சுடி? யாரு உன்னைய துரத்துறது? “என்றவாறு தனது முதுகின் பின்னே ஒளிந்த மகியை முன்னே இழுத்தான் உதியன்.
“டேய் உதி… அவள விட்டுறாத… “என்றவாறு கையில் பிரம்போடு வந்தார் பல்லவி.
பல்லவியை எதிர்பார்க்காத உதியன், “ம்மா.. நீங்க எப்பிடி? எப்ப ம்மா வந்தீங்க? இவ என் கிட்ட எதுவும் சொல்ல ல… “என்றான்.
“அட… நாங்க வர்றது இவளுக்கே தெரியாதே…. “பல்லவி.
“வந்ததும் வராததுமா இவள ஏன் இப்படி அடிக்க தொறத்துறீங்க? “உதி.
“நீ இந்த கழுதைக்கு சப்போர்ட் பண்ணிட்டு வராத… ஏழு கழுதை வயசாகுது, இன்னும் அப்பா அம்மாவ பேரு சொல்லி கூப்பிடுது…. இங்க வந்து இந்த ட்ரெஸ்ஸ போடாத னு சொன்னேன்… இதத்தான் போட்டுட்டு சுத்துறா… இவள அடிக்காம கொஞ்ச சொல்லுறியா? இதுல நான் ஆபத்தான மிருகமாம்… ” என படபடவென பொரிந்தாள் பல்லவி.
“வந்த இடத்துல எப்பிடி இருக்கனும் னு அவளுக்கு நல்லாத் தெரியும்….நீ ஏன் அவள சின்ன குழந்தை மாதிரி ட்ரீட் பண்ற பவி? “இந்திரன்.
மகியின் தாய் தந்தையர் பேசியதை கேட்ட தீரன், “இவளோட இந்த வாய் எங்க இருந்து வந்தது னு இப்பத்தான தெரியுது….அவ அம்மாவ போலவே பேசுறா… அவங்க அப்பா வளர்ப்பு போல….”என எண்ணிக்கொண்டான்.
“வெளிலயே நின்னு பேசிட்டு இருக்காம உள்ள வாங்க எல்லாரும்….டேய்….தீரா….வா வா….”என அனைவரையும் உள்ளே அழைத்தார் ராசேந்திரன்.
“ஆமா… ஆமா… நமக்கு சோறு தான் முக்கியம்….கோழி குழம்பு வேற…..நான் போய் கொட்டிக்கிறேன் ப்பா…பல்லவி,நீ மட்டும் பொறுமையா மெதுவா வா….நீ முன்னாடி வந்தா எனக்கு ஒத்த கறி கூட கிடைக்காது….எல்லாத்தையும் நீயே முழுங்கிருவ….”என உள்ளே ஓடி மறைந்தாள் மகி. அதற்கு மேல் அங்கு நின்றால் பல்லவியின் நெற்றிக்கண்ணில் பட்டு பொசுங்கி இருப்பாள்.
தனது வீட்டிற்கு கிளம்பிய தீரனை இழுத்து பிடித்து சாப்பிட வைத்தான் உதியன்.
“இது தான் எங்க தீரன்….நான் சொன்னேன் ல….”என தீரனை இந்திரனுக்கும் பல்லவிக்கும் அறிமுகப்படுத்தினார் செண்பகம்.
“ஓஓ… இந்த தம்பி தான் தீரனா? “என்றவாறு பல்லவியும் இந்திரனும் தங்களது பார்வையை அர்த்தத்துடன் பரிமாறிக்கொண்டனர்.
“இப்ப எதுக்கு ஃபயர இந்த பார்வை பாக்குறாங்க நம்மள பெத்த புண்ணிய ஆத்மாக்கள்…”என சிந்தித்தவாறு கறியை நன்றாக வாய்க்குள் திணித்தாள் மகி.
மகியின் தாய் தந்தையருக்கு ஒரு புன்னகையை பதிலளித்து விட்டு சாப்பிட ஆரம்பித்தான் தீரன்.
அனைவரும் சாப்பிட்டு விட்டு அமர்ந்து பேசியபடி இருந்தனர். அப்பொழுது செண்பகம் மகியை அழைத்து அவளிடம் வெற்றிலையை அளித்து அனைவருக்கும் கொடுக்குமாறு கூறினார்.
தனது பெற்றோர்களுக்கு அளித்து விட்டு தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த உதியன் மற்றும் தீரனை நோக்கி நகர்ந்தவளின் காதில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.
“மகி ய எப்பிடி நீ சமாளிக்கிற? அவங்க அப்பா அம்மா கிட்டயே இப்பிடி வாயடிக்கிறா…”தீரன்.
“அவ ஒரு குழந்தை அண்ணா….குழந்தைய எப்பிடி சமாளிப்போமோ அப்பிடித்தான் அவள பாத்துக்கிறேன்….என்ன கோபம் வந்தா யாருக்கும் அடங்க மாட்டா….”உதியன்.
“என்ன? என்னைய பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க மச்சான்ஸ்? “என சிரிப்புடன் கேட்டாள் மகி.
“எங்களுக்கு வேற வேலை இல்லை… அதான்….”தீரன்.
“அதான் பாத்தாலே தெரியுதே….”என நக்கலாக சிரித்துவிட்டு வெற்றிலையை அவர்களிடம் வைத்துவிட்டு நகர்ந்தாள் மகி.
“அவ வாங்குன அப்பளபொறிக்கு நீங்க ஏன்ணே காசு குடுத்தீங்க? அவள தவிக்க விட்டு இருக்கனும்….பிசாசு… “என மகியை பார்த்து பழிப்பு காட்டியவாறு கேட்டான் உதியன்.
“அதுவா….அவ எனக்கு ஒன்னு குடுத்தா…..அதுக்காகத்தான் பணம் குடுத்தேன்….”என மகி அன்று வயலில் அளித்த அறிவுரையை எண்ணி கூறினான் தீரன்.
“இவனுக்கு நாம என்ன குடுத்தோம்? “என சிந்தித்தவாறு மகி, தீரனை பார்க்க…அவன் அப்பொழுதுதான் வெற்றிலையை மென்றுகொண்டே தனது உதடை எதார்த்தமாக ஈரப்படுத்திக்கொண்டே மகியை பார்த்து சிரித்தான்.
தீரன் கூறிய சொற்களும் அவனது செய்கையும் அவன் வீட்டில் நடந்த நிகழ்வை நினைவுப்படுத்த…அதைத்தான் இப்பொழுது சொல்லிக்காட்டுகிறான் என தவறாக புரிந்து கொண்டாள் மகி. “தான் முத்தம் கொடுத்ததிற்காக தான் அவன் பணம் கொடுத்து இருக்கிறான்… “என தவறாக புரிந்து கொண்ட மகியின் இதயம் அவமானத்தால் வெதும்பியது.
“ச்சீ… இவன் இவ்ளோ கேவலமானவனா? “என தீரனை பற்றி தவறாக புரிந்து கொண்டு கண்கள் கலங்க உள்ளே ஓடினாள் மகி.
இதை அறியாத தீரன், உதியனுடன் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தான். உள்ளே நுழைந்த மகி, “ச்சீ… இனிமே இவன் கிட்ட பேசவே கூடாது…பொறுக்கி..”என நினைத்து தன்னிரக்கத்தால் கண்ணீர் சிந்தினாள் மகி.
அங்கு, மகியின் பெற்றோர்களோ “தீரன் நல்ல பையனா தான் இருக்கான்….நம்ம மகிக்கு பொருத்தமா இருப்பான்… நீங்க சொன்ன மாதிரியே பேசி முடிச்சுற வேண்டியது தான்…”என செண்பகத்திடம் கூறிக் கொண்டிருந்தனர்….
(காதல் தீ பரவும்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.