காதல் தீ -14

Chellammal Bharathi | 26 Nov 2025 | Share

            விடிந்ததிலிருந்து சிங்கம்புணரி கிராமமே ஊர் நடுவே கூடி இருக்க…அந்த பஞ்சாயத்து கூட்டத்தின் நடுவே நடுநாயகனாக தீரன் நின்றிருந்தான். அப்பொழுது தான் பஞ்சாயத்து பற்றி கேள்விப்பட்டு விரைவாக அங்கு வந்து சேர்ந்தார் தீரனின் தந்தை சிதம்பரம்.

          “என்னடா இங்க சத்தம் போட்டுட்டு இருக்க? ஒரு மரியாதை கூட இல்லாம… “என தீரனை அதட்டியபடியே வந்தார் சிதம்பரம்.

          தன்னை அதட்டியவரை முறைப்புடனே பார்த்து நின்றான் தீரன்.

            “என்னடா முறைக்கிற? “சிதம்பரம்.

             “இவருக்கு வேற வேலை இல்லை….”என நினைத்துக்கொண்டு பார்வையை அவரிடம் இருந்து திருப்பினான் தீரன். அப்பொழுது அவனது பார்வையில் மகியும் உதியனும் சிரித்தபடி பேசிக்கொண்டிருப்பது விழுந்தது. “இங்க இவ்ளோ அமளி துமளி நடக்குது… இதுக ரெண்டும் என்னத்த அப்பிடி பேசி சிரிக்குதுக… “என மகியை கூர்ந்து நோக்கினான் தீரன்.

              “டேய் எரும… அப்பிடி என்ன டா பாத்துட்டு இருக்க? “என உதியனை உலுக்கினாள் மகி.

              “தூரிகா… “என ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்தபடி பதிலுரைத்தான் உதி.

                “தூரிகாவா? யார்ரா அந்த பொண்ணு? எனக்கு தெரியாம உனக்கு கேர்ள் ப்ரண்ட்? “என உதியனின் பார்வையின் திசையில் மகியும் பார்த்தாள்.

            அங்கு தெருவின்  ஒரு ஓரத்தில் குட்டி குட்டி பசங்களுடன் கோலி குண்டு அடித்து விளையாடிக்கொண்டிருந்தாள் தூரிகா.

               “ஹே… அந்த பாவாடை சட்டையில ரெட்டை ஜடை போட்டுட்டு சின்னபுள்ள மாதிரி விளையாடிட்டு இருக்கே ஒரு பொண்ணு… அதுவா உன் தூரிகா? “மகி.

             “எதேய்… என் தூரிகாவா? “என அதிர்ந்து மயக்க நிலையில் இருந்து வெளிவந்து மகியை பார்த்தான் உதியன்.

            “ஆகான்… நீ அவள பார்த்த பார்வை எனக்கு அப்பிடித்தான் தோனுச்சு…. அப்ப இல்லையா? “மகி.

            “அடி பைத்தியம்… அவளே குழந்தை மாதிரி விளையாடிட்டு இருக்கா… நான் அத பாத்துட்டு இருந்தேன் பக்கி… உடனே கதை கட்டிறாத…. “உதி.

             “அப்பிடியா ஸார்? ரைட் விடு…. அந்த பொண்ணு யாரு மச்சான்? அந்த நண்டு பார்ட்டியா? “மகி.

              “ஆமா… என்னைய சோத்துலயும் சேத்துலயும் அடிச்சவ… “என புன்னகையுடனே கூறினான் உதியன்.

              “ஆங்… சேத்துல அடி வாங்குனது தெரியும்… இது என்னடா சோத்துல அடி? இது எப்ப? “மகி.

              “எல்லாம் நேத்து தான்…. நான் சாய்ந்திரம் சொல்லலாம் னு நினைச்சேன்…நீதான் வேப்பிலை அடிக்கிற மாதிரி இருந்தியே… நான் எங்க சொல்லுறது? ஆமா… நீ ஏன் நேத்து ஒரு மாதிரி இருந்த ?”உதி.

             “அதெல்லாம் ஒன்னுமில்லை… நீ கதை ய சொல்லு…”மகி.

             “என்னமோ நடந்து இருக்கு…ம்ம்…கவனிச்சுக்கிறேன்… “எனக்கூறி விட்டு நேத்து நடந்தவற்றை கூறினான் உதியன். அதை கேட்ட மகி சத்தம் போட்டு சிரிக்க…பஞ்சாயத்தில் உள்ள ஒரு சிலர் மகியை வித்தியாசமாக பார்த்தனர். மகியை வித்தியாசமாக பார்ப்பதை உணர்ந்த உதி, அவளை சற்று தள்ளி தனியே அழைத்து சென்றான்.

             “ஏன்டி இப்பிடி கெக்கபிக்கே னு சிரிக்கிற? சரி இப்ப நீ சொல்லு …நேத்து நீ ஏன் ஒரு மாதிரி இருந்த? அண்ணே வீட்ல என்ன நடந்துச்சு?”உதி.

              உதியன் கேட்டதும், சிரித்துக்கொண்டிருந்த மகிக்கு நேற்றைய நினைவு தாக்க… அனிச்சை செயலாக தீரனை திரும்பி பார்த்தாள். அப்பொழுது சரியாக தீரனும் அவளைத்தான் பார்த்தபடி இருந்தான். இருவரின் பார்வையும் மோதிக்கொள்ள…இருவருக்குள்ளும் நேற்றைய நினைவு முகிழ்ந்தது.

              நேற்றைய நினைவின் தாக்கத்தில் இருவருமே அரை நொடியில் தங்கள் பார்வையை விலக்கி கொண்டனர். மகி அமைதியாக இருக்கவும், மகியின் பார்வையை தொடர்ந்தவன்….அவள் தீரனை பார்ப்பதை அறிந்து கொண்டான் உதி.

              “ஹே… கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடி….அத விட்டுட்டு தீரன் அண்ணன பாத்துட்டு நிக்கிற… அப்ப என்னமோ நடந்து இருக்கு….”உதி.

           “ஆங்….ஒன்னுல்ல….”என்றவாறு சிதம்பரம் தன்னை மாமா என அழைக்க சொன்னது வரை கூறினாள் மகி.

             “அடி பாவி… அங்க போயும் அவர் கிட்டயே வாயடிச்சுட்டு வந்து இருக்க? கொளுப்பாடி உனக்கு? அவரு ஏதோ நல்லவரா இருந்ததால இப்பிடி நல்லவிதமா பேசி இருக்காரு… வேற யாராச்சும் இருந்து இருந்தா, உன்னைய தூக்கி போட்டு மிதிச்சு இருப்பாங்க… “என ஒரு தோழனாய் தன் தோழியை கண்டித்தான் உதியன்.

          “சரி…. நீ பொறுமையா எனக்கு அட்வைஸ் பண்ணு… நான் போய் கொஞ்ச நேரம் கோலி குண்டு விளையாடிட்டு வர்றேன்… “மகி.

           “இப்ப நீ எதுக்குடி அங்க போற? இங்க பஞ்சாயத்த பாக்கலயா? “உதி.

            “எனக்கு விளையாடனும்னு ஆசையா இருக்கு…ஸோ… போறேன்… இந்த பஞ்சாயத்த பாத்து என்ன பண்றது? ஒரு அடி இல்ல… உதை இல்ல… வெறும் வாயில தான் வடை சுட்டுட்டு இருக்கானுக… நான் விளையாட போறேன்… எவனுக்காச்சும் மண்டை உடைஞ்சா என்னைய கூப்பிடு… வரட்டா நண்பா… “என சிட்டாக பறந்தாள் மகி.

             “ஐயோ கடவுளே… இவள இவ வீட்ல கொண்டு போய் சேக்குற வரைக்கும் இன்னும் நான் என்னென்ன சித்திரவதை அனுபவிக்க போறேனோ? “என தனக்குள்ளே புலம்பிக்கொண்டு பஞ்சாயத்தை கவனிக்க ஆரம்பித்தான் உதியன்.

             மகியின் பார்வையை சந்தித்த தீரன் நிலைதடுமாறிக் கொண்டிருந்தான். “ஐயோ… என்னைய இப்பிடி இம்சை பண்றாளே… “என மகியின் மீது காரணம் இன்றி கோப பட்டான் தீரன். ஒருவாறு தன்னை நிலைபடுத்திக்கொண்டு பஞ்சாயத்தில் நடப்பதை கேட்க ஆரம்பித்தான் தீரன்.

              “இப்ப முடிவா என்ன தான் சொல்ல வர்றீங்க? “என பஞ்சாயத்தாரிடம் கத்திக்கொண்டிருந்தார் சிதம்பரம்.

              “இந்த மாதிரி ஊருக்கு அடங்காம சுத்திட்டு திரியுற தீரன இனியும் சும்மா விட முடியாது…. “என்றார் ஒரு பெரியவர்.

                “அதுக்கு இப்ப என்ன பண்ண போறீங்க? “என ஆத்திரத்தை உள்ளடக்கிய குரலில் வினவினான் தீரன்.

                  “கொஞ்சம் பொறுமையா இரு தீரா… அவங்க சொல்ல வர்றத சொல்ல விடு… “என தீரனை அடக்கினார் சிதம்பரம்.

                 “இன்னும் என்னப்பா பொறுமையா இருக்குறது? ஊரு ஆத்துல மணல் அள்ளுனவனுங்கள நடு ராத்திரியில நான் போய் புடிச்சுட்டு வருவேனாம்… அப்ப எல்லாரும் நல்லா இழுத்து போத்தி தூங்கிட்டு… இப்ப வந்து அது நொட்டை இது நொட்டை னு சொல்லிட்டு இருக்குறத நான் அமைதியா கேட்டுட்டு இருக்கனுமா? அதுக்காக என்னைய பாராட்டனும் னு லாம் நான் சொல்லல… தப்பு பண்ணுனவங்களுக்கு தண்டனை குடுக்காம… என்னைய புடிச்சு எதுக்கு குற்றவாளி மாதிரி பாத்துட்டு இருக்காங்க? “தீரன்.

                “தீரா… நீ சின்ன பய… கொஞ்சம் வார்த்தைய கவனமா விடு… பெரியவங்க பேசிட்டு இருக்காங்கல்ல…”சிதம்பரம்.

                “பெரியவங்க சின்னவங்கலாம் வயசுல இல்ல பெரியப்பா….மனசுல… நல்ல எண்ணத்துல…நியாயமா நடக்குறதுல இருக்கு….”என கூட்டத்தில் ஒருவன் குரல் கொடுத்தான்.

               “டேய் என்னடா ஆளாளுக்கு துள்ளிட்டு இருக்கீங்க? அப்புறம் எங்களுக்கு என்ன மரியாதை? இந்த பஞ்சாயத்துக்கு என்ன மரியாதை? “என பஞ்சாயத்தாரில் ஒருவர்  அதட்டினார்.

             “டேய்… எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க… பெரியவங்க என்ன சொல்ல வர்றாங்க னு கொஞ்சம் காது குடுத்து கேளுங்களேன்டா… டேய் தீரா சொல்லுடா… எல்லாரும் உன் பேச்ச தான கேக்குறானுக… “சிதம்பரம்.

              “டேய்… கொஞ்சம் அமைதியா இருங்க பசங்களா… இந்த பஞ்சாயத்து என்ன தான் சொல்லுது னு பாத்துறலாம்… “என தன் மீசையை முறுக்கியவாறு நின்றான் தீரன்.

             “தீரன் பண்ணுனது சரியாவே இருந்தாலும்… அவன் பண்ணுனது நியாயம் இல்ல… அந்த மூணு பேர அடிக்க இவனுக்கு என்ன உரிமை இருக்கு? இதுல மட்டும் இல்ல…. ஊருல நடக்குற ஒவ்வொரு பிரச்சனையிலயும் தீரன் பய சம்பந்தம் இல்லாம இல்ல… ஏதாவது ஒரு வம்பு பண்ணிட்டே இருக்கான் தீரன்… இவன இதுக்கு மேலயும் சும்மா விட முடியாது… “என பஞ்சாயத்து தலைவர் கூறிக்கொண்டிருக்க… இடையில் புகுந்தான் உதியன்.

               “சும்மா நிறுத்துங்க… என்னமோ தீரன் அண்ணே தப்பு பண்ணிட்டாங்க தப்பு பண்ணிட்டாங்க னு சொல்லிட்டு இருக்கீங்க… அவரு அப்பிடி என்ன தப்பு பண்ணிட்டாரு? உங்க பொண்ண கைய புடிச்சி இழுத்தாரா? ஏதாவது திருடுனாரா? இல்ல உங்க தலையில கல்ல தூக்கி போட்டாரா? தப்பு பண்ணுறவங்கள தட்டி கேக்குறாரு… அவ்ளோதான்…அதுக்கு இப்பிடி மனசாட்சியே இல்லாம பேசிட்டு இருக்கீங்க… “என கத்தினான் உதியன்.

               “உங்கள மாதிரி நாலு எழுத்து படிக்க சொல்லி சொல்லிக்குடுக்குறான் ல… அதான் அவன் பண்ற பெரிய தப்பு… அப்பிடி வெளிய போய் படிச்சதுனால தான நேத்து பொறந்த நீ லாம் இப்பிடி பஞ்சாயத்து முன்னாடி வந்து நின்னு பேசிட்டு இருக்க… போடா அங்குட்டு…”என உதியனை விரட்டினார் ஒரு பெரியவர்.

              “அதான…. உடனே இப்பிடி சொல்லி அடக்கிருங்க…. நல்லா இருக்கு உங்க நியாயம் தர்மம்…. “உதியன்.

             “கூட கூட வாய் பேசிட்டு இருந்த அடிச்சு வாய உடைச்சுருவேன் பாத்துக்க… “என்றார் மற்றொரு பெரியவர்.

                “ஏய்… பெருசு அவ்ளோதான் உனக்கு மரியாதை….நாங்களும் பொறுத்து போனா….ரொம்ப தான் பேசுற….”என கூட்டத்தில் ஒருவன் குரல் கொடுக்க…ஆற்று மணல் அள்ளிய விவகாரம் பெரியவர்கள் இளைஞர்கள் சண்டையாக மாறியது.

              அனைவரையும் அமைதிபடுத்த சிதம்பரம் மிகவும் கஷ்ட்டப்பட்டார். பஞ்சாயத்தில் ஒரே கைகலப்பாக இருக்க….விளையாடிக்கொண்டிருந்த மகியின் கவனம் பஞ்சாயத்தின் புறம் திரும்பியது. “இவனுக ஒரு முடிவுக்கு வர மாட்டானுக போலயே….”என முனுமுனுத்தவாறு தன் விளையாட்டை தொடர்ந்தாள் மகி.

                ஒருவழியாக அனைவரையும் கட்டுக்குள் வர செய்து அமைதிபடுத்தினார் சிதம்பரம். “இழுத்துக்கும் இருக்காம உங்க முடிவ சீக்கிரம் சொல்லுங்க….”என பஞ்சாயத்தாரை பார்த்து கூறினார் சிதம்பரம்.

              “ஆத்து மணல திருடுனவங்கள அடிச்சு தீரனே அவங்களுக்கு தண்டனை குடுத்துட்டாதால….அவங்கள விட்டுறனும்…யோசிக்காம முந்திரிக்கொட்டை மாதிரி அவனுங்க அடிச்சு மண்டைய உடைச்ச குற்றத்துக்காக 5000 பணமும்…..இனிமே இது மாதிரி அடாவடித்தனம் பண்ண மாட்டேன் னு ஊர் முன்னாடி தீரன் எழுதிக்கொடுக்கனும்….”என பஞ்சாயத்தார் ஒரு மனதாக தீர்வு கூறினர்.

               “அடப்போங்கடா நீங்களும் உங்க பஞ்சாயத்தும்….”என ஊர் இளைஞர்கள் சிடுசிடுத்தபடி நின்றனர்.

               “என்னால இத ஏத்துக்க முடியாது…..நேத்து நைட்டே திருடுன அவனுக கைய உடைச்சு விட்டு இருக்கனும்…ஊர் பஞ்சாயத்து பாத்துக்கனும் னு கொண்டு வந்து அவனுங்க கட்டிப்போட்டேன் ல….நான் பண்ணுனது தப்பு தான்….”என தீரன் கூறி முடிக்கையில், தீரன் கட்டிப்போட்டிருந்த நால்வரும் கதரும் சத்தம் கேட்டு அனைவரின் கவனமும் அந்நால்வரையும் கட்டிப்போட்டிருந்த மரத்தின் திசையை நோக்கி திரும்பியது.

                உதியனுக்கு மட்டும் மகியின் நினைவு வர….”ஐயோ…மகி… “என தலையில் கை வைத்தான்.

               அதைக்கேட்ட தீரன், “ஏன்டா? அவனுங்களால மகிக்கு ஏதாவது பிரச்சனையா? “என்றான்.

              “அட நீ வேற ண்ணே ….கதறுறது அவனுங்க தான… மகியால தான் அவனுங்களுக்கு பிரச்சினை….என்ன பண்ணி வச்சு இருக்காளோ….”எனக்கூறிவிட்டு கூட்டத்தை வேகமாக விலக்கி கொண்டு முதல் ஆளாய் அந்நால்வரை நோக்கி ஓடினான் உதியன்.

              “ங்கே…இவன் என்ன உலறிட்டு போறான்? “என உதியனை பின்தொடர்ந்து தீரனும் சென்றான்.

               அங்கு தீரனின் கண் முன் தெரிந்த காட்சியில், “இந்த புள்ள பொண்ணா? இல்ல பேயா? ” என அதிர்ந்து நின்றான் தீரன்……

                                  (காதல் தீ பரவும்….)

                           -செல்லம்மாள்பாரதி

    No comments yet.