“இந்த ராட்சசிய ப்ரண்டா வச்சுக்கிறதுக்கு எங்காவது கிணத்துல குதிச்சுறலாம்…. சரியான இம்சை… “என மகியை திட்டியவாறு தூரிகையை தேடி சென்று கொண்டிருந்தான் உதி.
சிறிது தொலைவில் மூன்று குட்டி சிறுமிகளுடன் இணைந்து கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள் தூரிகை.
“பார்ரா… இன்னும் சின்ன புள்ள மாதிரி பண்ணிட்டு திரியுது இந்த பொண்ணு…. “என நினைத்துக்கொண்டு அருகில் சென்றான் உதி.
அருகில் நிழலாடுவதை உணர்ந்த தூரிகை நிமிர்ந்து பார்த்தாள். “அய்யோ… இந்த மலைக்குரங்கு இங்கயும் வந்துருச்சா? “என நினைத்தவாறு “இப்ப உங்களுக்கு என்ன வேணும்? ஏன் என்னைய பாலோ பண்ணிட்டு வர்றீங்க? “என நிலத்தில் விழுந்த மீனென துள்ளினாள்.
“எதேய்… பாலோ பண்றேனா? இவள….. “என முனுமுனுத்துக்கொண்டு, “உன்னைய கட்டிக்கலாம் னு தான் உன் பின்னாடியே வர்றேன்… “என மகி கூறியதை மறந்து மீண்டும் வம்பிழுத்தான் உதி.
“என்ன? நான் இப்ப தான் லெவன்த் படிக்கிறேன்…. ஸ்கூல் படிக்கிற புள்ளைய கல்லியாணம் பண்ணுனா போலீஸ் வந்து புடிச்சுட்டு போயிரும்… “என அப்பாவியாக மொழிந்தாள் தூரிகை.
“ஹை…இங்க பாருடா…அப்ப என்னைய கல்லியாணம் பண்ண உனக்கு சம்மதமா? “உதி.
“இப்பிடிலாம் என் கிட்ட பேசாதீங்க…என் அய்யன் கிட்ட சொல்லிருவேன்….”என தன் ஜடையை திருகியவாறு பயத்துடன் கூறினாள் தூரிகை.
“சரி….நானே வந்து வீட்ல பொண்ணு கேக்குறேன்….என்ன சமைச்சு சாப்பிடுறீங்க எல்லாரும்? “உதி.
“சோறா? நான் தர மாட்டேன்…”என தீவிரத்துடன் சாப்பாட்டை உதியன் பறித்து விடுவானோ என்ற பயத்தில் சாப்பாடு வைத்து இருந்த பாத்திரத்தை அவனிடம் காட்டாமல் மறைக்க முயன்றாள் தூரிகை.
“அட மகியோட ஜெராக்ஸா இந்த புள்ள? “என மனதினுள் சிரித்துக்கொண்டான் உதி. தூரிகை மறைப்பதை பார்த்த உதியனுக்கு அதை பறிக்க ஆவல் பிறக்க… தூரிகையிடம் இருந்து பறிக்க அவளது கையை பிடித்து இழுத்தான். தூரிகையும் விடாமல் சாப்பாட்டை தன் பக்கம் இழுக்க… ஒரு கட்டத்தில் உதியனுடன் மல்லுக்கட்ட முடியாமல் தூரிகை சோர்வடைய அதை பயன்படுத்தி உதியன் வேகமாக இழுத்ததில் சாப்பாடு வைத்திருந்த பாத்திரம் எகிறி அவனின் முகத்தில் பட… உள்ளே இருந்த சாப்பாடு அனைத்தும் உதியனின் முகத்தில் அபிஷேகமாக வழிந்தது.
சாப்பாடு பறி போன கோபத்தில் தூரிகை உதியனை உறுத்து விழிக்க… “சேத்துலயும் அடி வாங்கியாச்சு… சோத்துலயும் அடி வாங்கியாச்சு… “என நினைத்தவாறு தன் முகத்தில் வழிந்த சாப்பாட்டை நாவினால் சுவைக்க ஆரம்பித்தான்.
தன்னை சாப்பிட விடாமல் செய்து விட்டு அவன் மட்டும் முகத்தில் வழிந்த சாப்பாட்டை சுவைப்பதை கண்ட தூரிகை, அருகில் இருந்த குச்சியை எடுத்து உதியனுக்கு நாலு அடி போட்டாள்.
“யம்மா… இந்தா பொண்ணே… எதுக்கு இப்ப என்னைய அடிக்கிற? “என வலி தாங்க முடியாமல் கத்தினான் உதி.
“அதான் நீ நண்டு தர மாட்டேன் னு சொல்லிட்டியே… அப்புறம் எதுக்கு என் பின்னாடியே வந்து என் சாப்பாட்ட இப்பிடி கொட்டிவிட்ட? “என கோபத்துடன் கேட்டாள் தூரிகை.
அப்பொழுதுதான் தான் விசயம் நினைவிற்கு வந்து நிதானத்திற்கு வந்தான் உதியன். அத்துடன் தூரிகை தன்னை ஒருமையில் அழைப்பதையும் குறித்துக்கொண்டான்.
“அது….அது…ஸாரி…”உதி.
“எதுக்கு என் சாப்பாட்ட கொட்டுனதுக்கா? “தூரிகை.
“அதுக்கும் தான்….வயல்ல உன் கிட்ட அப்பிடி பேசி இருக்க கூடாது… நான் சும்மா விளையாட்டுக்குத்தான் உன் கிட்ட அப்பிடி பேசுனேன்….மத்தபடி என் மனசுல அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்ல….நான் அப்பிடி பட்ட பையனும் கிடையாது…”உதி.
“ஸாரி கேக்க வந்தவங்க ஸாரி கேட்டுட்டு போக வேண்டியது தானே? எதுக்கு திரும்ப என் கிட்ட வம்பு இழுக்குற? “தூரிகை.
“ஹி ஹி ஹி… அது என்ன னு தெரியல… உன்னைய பாத்ததும் திரும்ப வம்பு இழுக்கனும் னு தோனிருச்சு… “உதி.
“தோனும்… தோனும்… என் அய்யன் கிட்ட சொன்னா…உன் தோல உரிச்சு தொங்க விட்டுருவாரு… ஜாக்கிரதை… “என ஒரு விரல் காட்டி மிரட்டினாள் தூரிகை.
அவள் மிரட்டுவது சிறு குழந்தை செய்யும் குறும்பு போலவே உதியனுக்கு தோன்ற…சிரித்துக்கொண்டான் அவன். உதியன் சிரிப்பதை பார்த்தவள், “ஏய்… என்ன சிரிக்கிற? இரு இரு உன்னைய என் அய்யன் கிட்ட சொல்லி குடுக்குறேன்… “என மீண்டும் விரல் ஆட்டி மிரட்டினாள் தூரிகை.
அதை பார்த்த உதியனுக்கு மீண்டும் சிரிப்பு வர… வந்த சிரிப்பை தனக்குள் புதைத்துக்கொண்டு, “சரி…ஸாரி பாப்பா… மன்னிச்சுரு….சும்மா விளையாட்டுக்குத்தான் பண்ணேன்…இனி நீ யாரோ… நான் யாரோ…உன் வழியில இனி நான் வர மாட்டேன்… வரட்டா… “என கூறி விட்டு தூரிகையை திரும்பி பார்க்காமல் அங்கிருந்து கிளம்பினான் உதியன்.
திரும்பி பாராமல் செல்லும் உதியனையே கண் சிமிட்டாமல் பார்த்தாள் அப்பாவை. “அக்கா… அக்கா….அந்த அண்ணே பேரு என்ன? “என பக்கத்தில் இருந்த குட்டி வாண்டு தூரிகையிடம் கேட்க… அப்பொழுதுதான் தூரிகையிற்கு தான் அவன் பெயரை கூட கேட்காமல் விட்டது நினைவிற்கு வந்தது.
“அச்சோ… தெரியலயே டி பொண்ணுவண்டு…”என தன் தலையில் குட்டிக்கொண்டாள் தூரிகை.
“என்னக்கா நீயி… தேடி வந்து மன்னிப்பு கேட்டுட்டு போறாங்க….அவங்க பேர தெரிஞ்சு வச்சுக்கிறது இல்லையா? “என்றாள் பொண்ணுவண்டு என அழைக்கப்பட்ட அச்சிறுமி.
“விடுடி… இப்ப அவன் பேர தெரிஞ்சு நாம என்ன பண்ண போறோம் ?அவனுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை….அவன் யாரோ …நாம யாரோ… வா நாம வீட்டுக்கு கிளம்புவோம்….அய்யன் இந்நேரம் தேடிட்டு இருக்கும்….”என்றவாறு தன் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டாள் தூரிகை.
செல்லும் அவளை விதி பார்த்து விழுந்து விழுந்து சிரித்தது…. காலம் தூரிகைக்கு என்ன வைத்திருக்கிறதோ????
“யம்மா… யம்மாவோவ்…. “என வீட்டின் வெளியே நின்று கத்தினான் உதியன்.
“ஏன்டா பிச்சக்காரன் மாதிரி வீட்டுக்கு வெளிய நின்னு கத்திட்டு இருக்க? “என்றபடி வீட்டின் வெளியே வந்தார் செண்பகம்.
“ஹி ஹி ஹி….நல்ல வேளை பிச்சக்காரன் னு நினைச்சு பழைய சோத்த எடுத்துட்டு வராம இருந்தியே… நான் போய் குளிச்சுட்டு வர்றேன்… சாப்பாட்ட எடுத்து வை… கொல பசி… “என்று கூறியவாறு குளிக்க கிளம்பினான் உதி.
“ஏன்டா… பாக்குறதுக்கும் பிச்சக்காரன் மாதிரி சேத்துல உருண்டு புரண்டு வந்து இருக்க? என்னடா பண்ணிட்டு வந்து இருக்க? “செண்பகம்.
“ம்ம்….எல்லாம் உன் அருமை மக…அந்த குட்டி வானரத்தால தான்…எங்க அந்த ராட்சசி ?”உதி.
“அவ உன்னய என்னடா பண்ணுனா? அவ தீரன் வீட்டுக்கு போய் இருக்கா….” செண்பகம்.
“எதேய்… அங்க எதுக்கு போய் இருக்கா இவ? திருப்பி எதுவும் வம்பு பண்ண போய் இருக்காளா? “என பதறினான் உதி.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை.. நீ பதறாம போய் குளிச்சுட்டு வா முதல்ல….”செண்பகம்.
“குளிச்சுட்டு முதல்ல சாப்பிடனும்….பசி உயிர் போகுது…இவ அண்ணே வீட்டுல போய் என்ன பண்ணிட்டு இருக்காலோ? அவள சமாளிக்கிற அளவுக்கு உடம்புல தெம்பு இல்ல…சாப்பிட்டா தான் அவ பண்ணி இருக்குற சேட்டைய சமாளிக்க தெம்பு வரும்…” என புலம்பியபடி குளிக்க சென்றான் உதி.
விரைவாக குளித்து விட்டு சாப்பிட்டு கொண்டே, “எதுக்கும்மா அவ அங்க போய் இருக்கா? “என்றான் உதி.
“அதுவா… உன் கருப்பாயி பெரியம்மா வந்துச்சு… அதுக்கு நம்ம அம்முவ ரொம்ப பிடிச்சு இருக்கு போல… அதான்… அம்முவ சாப்பிட வீட்டுக்கு கூட்டிட்டு போய் இருக்கு… “செண்பகம்.
“ஓஓஓ… நான் கூட பயந்துட்டேன்… தீரன் அண்ணே கூட சண்டை போட எதுவும் போய் இருக்காளோ னு… “உதி.
“ஏன்டா பைத்தியம்… அம்மு என்ன வீடு தேடி போய் சண்டை போடுறவளா? ஆமா.. நீ ஏன் சேத்துல குளிச்சுட்டு வந்த? “செண்பகம்.
“அத… உன் அம்மு வந்ததும் அவக்கிட்டயே கேட்டுக்க… “உதி.
“போய் ரொம்ப நேரம் ஆச்சு டா.. இன்னும் காணோம்.. சாப்பிட்டு போய் அவள பாத்து கூட்டி வாடா… “செண்பகம்.
“அங்க போய் இவ என்ன என்ன பண்ணுறாளோ? “உதி.
“ரொம்ப பண்ணாத டா… அம்மு ரொம்ப நல்ல பொண்ணு… எதுவும் தப்பா பண்ண மாட்டா… “செண்பகம்.
“ஆமா… உன் அம்முவ நீதான் பாராட்டனும்… அவ குரங்கு சேட்டைய பத்தி உனக்கு இன்னும் தெரியல… “உதி.
“இப்பிடி… அம்முவ பத்தி பேசிட்டு இருந்த… அப்புறம் சோத்துல உப்ப அள்ளி கொட்டிருவேன்…. “செண்பகம்.
“ஏற்கனவே நீ சமைச்ச சாப்பாடு அப்பிடித்தான் இருக்கு… “உதி.
“ஏன்டா திருட்டு கழுதை… அதை அரைபானை சோத்த ஒத்த ஆளா தின்னுட்டு சொல்லாதடா… “என உதியனை அடிக்க கை ஓங்கினார் செண்பகம்.
சிரித்துக்கொண்டே தாயிடம் சிக்காமல் எழுந்து கை கழுவ ஓடினான் உதியன். “நான் போய் மகிய கூட்டிட்டு வந்துர்றேன் ம்மா… “என தாயிடம் கூறி விட்டு வெளியே வந்தான் உதியன்.
“சீக்கிரம் போய் பாத்துட்டு வாடா… “செண்பகம்.
தீரன் வெளியே வந்த பொழுது… மகி அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளை பார்த்த உதி, “யப்பா…வந்துட்டியா? உன்னைய தேடி நானே தீரன் அண்ணே வீட்டுக்கு வரலாம் னு நினைச்சேன்… “என்றான்.
உதி கூறியது எதுவும் கருத்தில் கொள்ளாமல்… எதையோ பார்த்து மிரண்டது போல் திகைத்தபடி நடந்து உள்ளே சென்றாள் மகி….
அங்கு தீரனும் எதையோ பார்த்து பயந்தது போல் திகைத்து அமர்ந்து இருந்தான்….
அப்பிடி என்ன நடந்து இருக்கும்???
(காதல் தீ பரவும்.. .)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.