காதல் தீ -06

Chellammal Bharathi | 21 Nov 2025 | Share

           வளைகாப்பு வீட்டிற்கு தங்களது தோட்டத்தில் இருந்து வாழைப்பழத்தாரை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த உதி,” பளார் ” என சத்தம் கேட்கவும் வேகமாக உள்ளே நுழைந்து என்ன என்று பார்க்க….அப்பொழுது தான் தீரன் மகியை அறைந்து இருந்தான். 

         அடுத்து மகி என்ன செய்வாள் என்பதை நன்றாக அறிந்த உதியன் விரைவாக மகியின் அருகில் செல்ல நினைத்தான். ஆனால் அதற்குள் மகி, தனக்கு தீரன் குடுத்த அடியை இரண்டாக திருப்பி குடுத்து இருந்தாள். 

        தான் குடுத்த அறையில் அழுவாள் என்றெண்ணி அசட்டையாக இருந்த தீரன், மகியிடம் இருந்த வந்த இரண்டு அறையை எதிர்பார்க்கவில்லை. 

          ஒன்றிற்கு இரண்டாக அறை வாங்கிய அதிர்ச்சியில் தீரன் மகியை பார்க்க…..விழாவில் இருந்த அனைவரும் பேரதிர்ச்சியுடன் மகிழ்விழியை பார்த்து நின்றனர். மகி செய்த செயலில் உதி தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான். 

         தன்னை வியப்புடன் பார்க்கும் தீரனை நோக்கிய மகி, “என்ன? ஷாக்கா இருக்கா? தப்பு யார் மேல னு தெரியாம என்னைய அடிச்சது உன் தப்பு… தப்பு என் மேல இல்லாம இருக்குறப்ப நான் ஏன் அமைதியா இருக்கனும்? அத்தோட நீ அடிச்சதும் நான் அழுவேன்னு நினைச்சியாடா வெண்ண? அன்போ …அடியோ… எனக்கு குடுக்குறத அப்பிடியே திருப்பி இரண்டு மடங்கா குடுக்குறதுதான் என் பழக்கம்… எப்பிடி என் அடி? “என தீரனின் விழிகளை நேர் கொண்டு நோக்கினாள் மகி. 

           மகியின் பிசிறில்லாத பேச்சும்… அவளின் நேருக்கு நேரான பார்வையும்… அவள் நிமிர்ந்து நின்ற விதமும் தீரனை ஏதோ செய்ய… இருந்தாலும் கோபத்தை விடாமல், “ஏய்… யார பாத்து டா சொல்லுற? வயசுல பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கனும் னு உன்னைய பெத்தவங்க உனக்கு சொல்லி குடுக்கலயா? ” என்றான். 

         “ஏன்? உன்னைய பெத்தவங்க அடுத்த வீட்டு பொண்ண டி போட்டு சொல்ல கூடாது உனக்கு சொல்லி குடுக்கலயா? நீ என்ன குடுக்குறியோ அது தான் உனக்கு கிடைக்கும்… ஜாக்கிரதை…. ” என தீரனை விரல் நீட்டி எச்சரித்தாள் மகி. 

         தன்னை இதுவரை யாரும் எதிர்த்து பேசாமல் இருந்த ஊரில்… தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்ற ஊரில் ஒரு சிறு பெண் தன்னை தவறென்று விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்ததும் தீரனின் நெஞ்சில் இருந்த மலையளவு கர்வம் பொடி பொடியாய் நொறுங்கியது. 

        மகியும் தீரனும் உறுமும் புலிகளாய் சீற்றம் கொண்டு ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என பார்வையாலே ஒருவர் மற்றொருவரை வதம் செய்து கொண்டு நின்றிருந்தனர். 

        அப்பொழுது அங்கிருந்த தீரனின் தாய் கருப்பாயி, தீரனின் கையை பிடித்து இழுத்து, “அந்த பொண்ணு மேல எந்த தப்பும் இல்லய்யா….இங்க என்ன நடந்தது னு பொறுமையா கேளு… “என தனது சாந்தக்குரலில் கூற…”என்னம்மா சொல்லுற… என்னதான் நடந்து இருந்தாலும் வயசுல பெரியவங்கள கை நீட்டி அடிக்கிறது தப்பு ம்மா… அதுவும் யாருன்னே தெரியாதவ லாம்…. “என குரலில் கோபத்தை உமிழ்ந்தான் தீரன். 

         “அப்ப நீ செஞ்சது மட்டும் சரியாய்யா? “கருப்பாயி. 

          “ம்மா… நான் என்ன பண்ணேன்? இவளுக்குலாம் பரிஞ்சு பேசிட்டு இருக்கீங்க… இவ அப்பா அம்மா இவளுக்குலாம் என்ன சொல்லி குடுத்து வளத்தாங்கலோ…. சரியான திமிர் புடிச்சவ… “தீரன். 

         தீரன் பேச பேச.. கை கட்டி புன்னகையுடன் அவனை பார்த்து இருந்தவள், அவன் பேசி முடித்ததும் கல கல வென வாய் விட்டு நகைத்தாள் மகி. 

         ஒரு நொடி மகியின் சிரிக்கும் கன்னக்குழியில் விழுந்தவன், அடுத்த நொடியில் தெளிந்து எழுந்தவன்… “என்னடி நக்கலா சிரிக்கிற? ” என மகியிடம் எகிறினான் தீரன். 

         “என் வாய்… நான் சிரிப்பேன்.. உனக்கு எங்க டா வலிக்குது? “என அந்த டா வில் அழுத்தம் கொடுத்து பேசினாள் மகி. 

          “பாத்துக்கம்மா… இந்த ராங்கிக்காரிக்கு தான் பரிஞ்சு பேசிட்டு வந்தியா? “தீரன். 

         “நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா தீரா… நீ முன்ன பின்ன தெரியாத அந்த பொண்ண டி போட்டு சொன்னா… சுயமரியாதை உள்ள எந்த பொண்ணும் திருப்பி டா தான் சொல்லும்…. முதல்ல இங்க நடந்துச்சு தெரியுமா? உன் சித்திக்காரி என்ன பேசுனா னு தெரியுமா? “என சற்று கோபமாக தீரனை அதட்டிய கருப்பாயி நடந்ததை ஒவ்வொன்றாக கூறினார். 

         நடந்ததை தன் தாயின் வாயிலாக தெரிந்து கொண்ட தீரன், தன் சித்தியை நன்றாக முறைத்தான். 

        “உனக்கு எத்தனை தடவ சொன்னாலும் அறிவே வராதா சித்தி? சை… ஸாரி அண்ணி… ” என தன் சித்தியை முறைத்தவன் பயந்து நடுங்கி நிற்கும் வளைகாப்பு பெண்ணின் அக்காவிடம் மன்னிப்பு கோரினான் தீரன். 

          “என் கிட்ட ஏன் தம்பி ஸாரி கேக்குறீங்க? அந்த பாப்பா கிட்ட கேளுங்க… “என புன்னகையுடன் கூறினாள் அந்த பெண். 

         “ஆமா ய்யா… அந்த பொண்ணுக்கிட்ட ஒழுங்கா மன்னிப்பு கேளு.. “கருப்பாயி. 

         ” அந்த திமிர்க்காரிக்கிட்ட நான் மன்னிப்பு கேக்கனுமா? அதான் ஒரு அடிக்கு ரெண்டு அடியா என்னைய அவ அடிச்சுட்டாளே… ” என மனதினுள் அவளை எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொண்டு முகத்தை விளக்கெண்ணை குடித்தது போல் வைத்துக்கொண்டு மகியின் புறம் திரும்பினான் தீரன். 

         மகி நின்றிருந்த இடம் காலியாக இருந்தது .தீரனிடம் பேசிய நேரத்தில் மகி அங்கிருந்து புறப்பட்டு சென்றதை யாரும் கவனிக்கவில்லை.

         “ஹே… எங்கடா அந்த பொண்ணு? கோப பட்டு போயிருச்சோ? “கருப்பாயி. 

          “போனா போகட்டும்… விடும்மா… நீங்க பங்கஷன கவனிங்க… “தீரன். 

          “விடனுமா? ஒரு பொம்பள புள்ளைய கை நீட்டி அடிச்சு இருக்க நீ…. நீ வேணுனா இங்கயே இரு… நான் தேடி போறேன் அந்த பொண்ண… “என கூறியவாறு மகியை தேடி வெளியில் வந்தார் கருப்பாயி. 

           “போ… எனக்கென்ன? நான் சாப்பிட போறேன்…. ஏழு வகை சாப்பாடு… “என விட்டேற்றியாக கூறி விட்டு விழா வீட்டிலேயே தங்கி விட்டான். 

         அதை கேட்ட கருப்பாயி தலையில் அடித்துக் கொண்டு மகிழ்விழியை தேடியவாறு சென்றார். 

           மகிழ்விழியை தேடியபடி வந்த கருப்பாயி… ஒரு வயல்காட்டின் நடுவில் வரப்பில் உட்கார்ந்து காலை ஆட்டியபடி மேயும் வாத்துகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மகியை கண்டார். மகியை கண்டவர் புன்னகையுடன் அவளை நெருங்கி அவளுடன் வரப்பில் அமர்ந்தார். 

          தன்னருகில் நிழலாடவும் யாரென பார்த்தவள், தீரனின் அம்மா என அறிந்தவள் அமைதியாக அசையாமல் இருந்தாள் மகி. 

          புன்னகையுடன் மகியை தலையை பாசத்துடன் தடவியவர், “உன் பேரு என்ன டா கண்ணு? ” என வினவினார். 

          கருப்பாயின் குரலில் இருந்த அமைதி மகியையும் சாந்தப்படுத்த… மகியும் புன்னகையுடன் “மகி… மகிழ்விழி ம்மா… “என்றாள். 

         “மகிழ்விழி… பார்ரா… பேரு அழகா இருக்கே… “என தன் தாயை பின் தொடர்ந்து வந்து ஒரு மரத்தடியில் ஒளிந்து நின்றிருந்த தீரன் மனதினுள் நினைத்துக்கொண்டான். 

           “மகிழ்விழி… உன்னைய மாதிரியே உன் பேரும் அழகா இருக்குடா கண்ணு…. “கருப்பாயி. 

           அதற்கு அமைதியான புன்னகையை பரிசளித்தவள் மௌனமாக இருந்தாள் மகி. “அம்மாடி… என் புள்ளை அவசரப்பட்டு உன்னைய அடிச்சு இருக்க கூடாது மா…. என் புள்ளை சார்பா நான் உன் கிட்ட மன்னிப்பு கேக்குறேன் மா… மனசுல எதையும் வச்சுக்காதடா கண்ணு…. ” கருப்பாயி. 

           “இந்த அம்மாவ என்ன தான் பண்றது? போயும் போயும் இவ கிட்டலாம் மன்னிப்பு கேக்குது… “என மனதினுள் மகியை வெறுப்புடன் நினைத்துக்கொண்டு ஒளிந்து நின்றிருந்தான் தீரன். 

           “அய்யோ அம்மா…. நீங்க ஏன் என்கிட்ட போய் மன்னிப்பு அது இது னு பெரிய வார்த்தைலாம் பேசுறீங்க….அந்த பல்சர் பால்பாண்டி செஞ்சதுலாம் நான் மறந்துட்டேன்… “மகி. 

          “பல்சர் பால்பாண்டியா? அது யாரு கண்ணு? “கருப்பாயி. 

           “உங்க தவத்திரு புதல்வன் தான்… வேற யாரு? “என கண்ணடித்து புன்னகையுடன் கூறினாள் மகி. 

         “அடிக்கழுதை…. என் மகனுக்கு பாத்து பாத்து அனழேந்தி தீரன் னு பேரு வச்சா… நீ பல்சர் பால்பாண்டி ங்கிற? “என சிரித்துக்கொண்டு மகியின் காதை பிடித்து திருகினார் கருப்பாயி. 

         “அனழேந்தி தீரனா? ஃபயரா உங்க பையன்? “என சிரித்தாள் மகி. மகி சிரித்தாலும் அவளின் முகத்தில் இருந்த வாட்டத்தை கண்ட கருப்பாயி, “ஏன்டா முகம் வாடி போய் இருக்கு? என் பையன் அடிச்சது வலிக்குதாடா? “என்றார். 

          “ஹா ஹா ஹா…இந்த கேள்விய உங்க பையன் கிட்ட கேளுங்க ம்மா….அவருக்குத்தான் கன்னம் ஜிவ்வுனு இருக்கும்…..அவரு அடிச்சது சும்மா சுள்ளான் கடிச்சது மாதிரி தான் இருக்கு… “மகி. 

          “உன்னைய….வாலு… வாலு….அப்புறம் ஏன்டா முகம் வாடி போய் இருக்கு? “கருப்பாயி. 

          “அட போங்கம்மா… வளைகாப்பு வீட்டுல ஏழு வகை சாப்பாடாம்….நான் இது வரைக்கும் இப்பிடி சாப்பிட்டதே இல்ல….ரோசப்பட்டு வந்துட்டேன்….இப்ப ரோசத்த விட்டுட்டு எப்பிடி போறது னு யோசிச்சிட்டு இருக்கேன் “மகி. 

          “அட இவ்ளோதானா? இரு… நான் போய் எடுத்துட்டு வர்றேன்….”என கூறியபடி எழுந்தார் கருப்பாயி. 

          “நீங்க இருங்கம்மா….இன்னும் கொஞ்சம் நேரத்துல சாப்பாடே என்னைய தேடி வரும்….”என புன்னகைத்தாள் மகி. 

         மகி கூறுவது புரியாமல் திரு திரு வென கருப்பாயி முழிக்க…..அப்பொழுது, “மகி….மகி… “எனக்கத்தி கொண்டு கையில் சாப்பாடு அடங்கிய இலையுடன் உதியன் விரைவாக நடந்து வந்து கொண்டிருந்தான். 

           அதை கேட்ட மகி, கருப்பாயி யை பார்த்து கண்ணடித்து…”பாத்தீங்களா…..சாப்பாடு என்னைய தேடி வருது….”கூறினாள். 

         “அடி லூசே….சாப்பிடாம எதுக்குடி வந்த? “என சாப்பாட்டுடன் வந்து மகியின் முன்னே அமர்ந்து  மகிக்கு சாப்பாடு ஊட்ட ஆரம்பித்தான் உதி. 

          “இவள டி போட்டு கூப்பிட்டதுக்கு தான அந்த குதி குதிச்சா… இப்ப இவன் மட்டும் டி சொல்லலாமா? ” என மனதிற்குள் திட்டினான் தீரன். 

           “வலிக்குதா அம்மு? “என மகிக்கு உணவூட்டிக்கொண்டே மறுகையால் அவளின் கன்னத்தை பாசத்துடன் குரல் தழும்ப கேட்டான். 

           “எரும… ஒழுங்கா சாப்பாடு ஊட்டு டா.. பசிக்குது… அத விட்டுட்டு ஓவரா பாசத்த பொழியாத… “என வாய்க்குள் சாப்பாட்டை வைத்துக்கொண்டு உலறினாள் மகி .

        உதியும் எதுவும் பேசாமல் சின்ன சிரிப்புடன் உணவை மகிக்கு ஊட்டி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் உதியனை போலவே கையில் சாப்பாடு அடங்கிய இலையுடன் செண்பகமும் அவர் பின்னே துண்டை உதறிக்கொண்டு ராசேந்திரனும் வரப்பில் வேக வேகமாக வந்தனர். 

         “தங்கப்புள்ள… தீரன் தம்பி உன்னைய அடிச்சுருச்சாம்லோ… அந்த தம்பி ரொம்ப நல்ல தம்பி தான்டா அம்மு… மனசுல எதையும் வச்சுக்காதடா… “என செண்பகம் கூறி கொண்டு தான் கொண்டு வந்த சாப்பாட்டையும் மகிக்கு ஊட்ட ஆரம்பித்தார். 

             மூவரும் மகியின் மேல் வைத்திருக்கும் அன்பை கண்ட கருப்பாயி மன நிறைவுடன் அங்கிருந்து கிளம்பினார். தீரன் ஒளிந்து இருந்த மரத்தின் அருகே வந்த கருப்பாயி, “ஒளிஞ்சு இருந்தது போதும் தீரா…..வெளில வா…”என்றார். 

           டன் கணக்கில் அசடு வழிய…..”எப்பிடி ம்மா கண்டு புடிச்ச? “என சிரித்தபடி ஒளிந்து இருந்த இடத்தில் இருந்து வெளி வந்தான் தீரன். 

             “தாய் அறியாத சூல் ஏதாவது இருக்கா என்ன? “கருப்பாயி. 

              “ஹி ஹி ஹி ஹி….நீ வீட்டுக்கு போம்மா…..நான் வயலுக்கு கிளம்புறேன்…”என தன் தாயின் முகம் பார்க்காமல் அசடு வழிய சமாளித்து விட்டு திரும்பி பார்க்காமல் புறப்பட்டு சென்றான் தீரன். 

              தீரனின் தடுமாற்றத்தை பார்த்த கருப்பாயி, “இந்த அடங்காத காளைய அடக்க மகி தான் சரியான பொண்ணு….”என மனதினுள் நினைத்து கொண்டு திரும்பி தூரத்தில் சிரிப்புடன் உதியனை கிண்டல் செய்து கொண்டு செண்பகத்திடம் செல்லம் கொஞ்சி கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்த மகியை அன்புடன் பார்த்தார் கருப்பாயி. 

                            (காதல் தீ பரவும்…) 

                             -செல்லம்மாள் பாரதி

    No comments yet.