62….
தேனுகாவின் மொபைல் அழைத்தது. எடுத்து யார் என பார்த்தாள். லாயர் கோவிந்தன் சார்.
” ஹலோ சார்”
” தேனுகா என்னமா , உன்னை ஒரு வாரமா ஆளே காணோம் ?ஒரு ஃபோன் கூட இல்ல? உடம்பு எதும் சரியில்லயா?”
“எஸ் சார்” என்ற தேனுகா நடந்த சம்பவத்தை ரத்ன சுருக்கமாக சொல்லி முடித்தாள்.
“அவ்ளோ திமிரா அந்த நாய்க்கு? இப்ப உனக்கு எப்டி இருக்கு?”
“ஆமா சார், அவன சும்மா விடக் கூடாது விடவே கூடாது. இப்ப கொஞ்சம் பரவாயில்ல சார்”
“இல்லமா .. அவன விட மாட்டேன், அவன் மேல கேஸ் ஃபைல் பண்ணியாச்சு இந்நேரம் அவன் வீட்டுக்கு கோர்ட் நோட்டீஸ் போய்ருக்கும், உன்னை குத்துன கேஸ்ல கூட ஆதாரம் இல்லைனு சொல்லி அவனால தப்பிக்க முடியும் ஆனா ப்ரித்வி கேஸ்ல அவனால தப்பிக்கவே முடியாது”
“கேக்க சந்தோஷமாத் தான் இருக்கு. ஆனா அட் தி எண்ட் ஆஃப் த டே அவன் சட்டத்துல உள்ள ஓட்டைகளை வச்சு தப்பிக்க வாய்ப்பிருக்கு. இந்த முறை அவன் தப்பிச்சுரக் கூடாது சார்”
“நோ சான்ஸ் மா….உன் ஹஸ்பண்ட் தான் ஐ விட்னஸா இருக்குறாரே? அவரு இருக்கும் போது நமக்கு என்ன பயம்? வந்து சாட்சி சொல்லிருவார்ல?”
“சொல்லிருவாரு சார்”
“சரிம்மா உன் ஹஸ்பண்ட்கு கோர்ட்ல இருந்து சம்மன் வந்ததும் சொல்லு. உடம்ப பாத்துக்க”
“ஓகே சார்”
” பாய்மா”…… அவர் ஃபோனை கட் செய்து விட , ஜூனைத் உள்ளே வந்தான்.
“தேனுகா… உனக்கு சாப்பாடு ரஷி இங்கயே எடுத்துட்டு வந்திருவாளாம் . நீ கீழ இறங்கி வர வேணாம்னு ராதிமா சொல்ல சொன்னாங்க”
” சரி… நீங்க சாப்பிட்டீங்களா ?”
“ம்ம்ம்ம்ம்”
” கோவிந்தன் சார் பேசினாரு”
“என்னவாம்?”
“ப்ரித்விய வெட்டுன கேஸ்ல மாடசாமிக்கு எதிரா கோர்ட்ல கேஸ் ஃபைல் பண்ணியாச்சாம். நீங்க சாட்சி சொல்லப் போறதால உங்களுக்கு கோர்ட்ல இருந்து சம்மன் வரும்னு சொன்னாரு, அது வந்ததும் கால் பண்ண சொன்னாரு”
” சரி”
“வீட்டுக்கு சம்மன் வரும் போது அதை யாராவது பாத்தா”….
” இங்க வராது உங்க லாயர் சார் கிட்ட ரவி வீட்டு அட்ரஸ் தான் குடுத்துருக்கேன்”
“அப்பாடா….நல்ல காரியம் செஞ்சீங்க இதை வேற நான் யோசிச்சுக்கிட்டே இருந்தேன். இப்பத் தான் ரிலாக்ஸ்டா இருக்கு எனக்கு”
“ம்ம்ம்ம்ம்ம்”
“தேங்க்ஸ் ஜூனைத்”….. அவளை நிமிர்ந்து பார்த்தான்
“இல்ல……சாட்சி சொல்ல சம்மதம் சொன்னீங்கள்ல அதுக்குத் தான்”
“நான் பாட்டு கேக்கப் போறேன் தேனுகா சும்மா நொய் நொய்னு பேசாம இருக்கியா” அவன் முகத்தில் அடித்தாற் போல் சொல்ல, அவள் முகம் வாடி விட்டது.
“சரி நான் பேசல, டிஸ்டர்ப் பண்ணல, நீங்க பாட்டே கேளுங்க”.. ஜூனைத் தன் ஃபோனையும் இயர்ஃபோனையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.
கையில் சாப்பாட்டு தட்டோடு டைனிங் டேபிளில் இருந்து கிளம்பினாள் ரஷிதா.
“ஏய்ய் எங்கடி போற?” வழி மறிப்பது போல் நின்றார் நிஷா…
“வழி விடும்மா அக்காவுக்கு சாப்பாடு கொண்டு போறேன்”
“ஏன்? நீ என்ன அவளுக்கு சேவகம் பண்ற வேலைக்காரியா?”
“அம்மா , அவங்க பாவம் ..ஆப்ரேஷன் பண்ணின உடம்பு .. அடிக்கடி மேலயும் கீழயும் ஏறி இறங்குனா கஷ்டமா இருக்கும்னு தான் நன்னி என்னை எடுத்துட்டுப் போக சொன்னாங்க”
” ஓ…..அப்படின்னா உன் நன்னியே போய் குடுக்கட்டும் , நீ ஏன் போற?” அறையை விட்டு வெளியே வந்த ஜூனைத்தின் காதுகளில் கீழே நடந்த உரையாடல்கள் விழ, வேகமாக இறங்கி வந்தான் “ரஷி…. ப்ளேட்ட குடு”
” மாமு”….
“குடும்மா…..சொல்றேன்ல?”
“இந்த அறிவு முன்னாடியே இருந்துருக்கணும் , ஏன் நீ சாப்பிட்டு போகும் போதே எடுத்துப் போயிருக்கலாம்ல ?என் மக எதுக்கு அவளுக்கு வேலை செய்யணும்?”
“மன்னிச்சிருங்க மாமி , தப்பு என் மேல தான் , விடுங்க . இனி ரஷியை தேனுவுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி யாரும் சொல்ல மாட்டாங்க. ரஷி அப்படி யாராவது சொன்னாலும் நீ என்னால செய்ய முடியாதுன்னு சொல்லிரு”
“மாமு…..நீங்க என் மேல ஏன் கோபப் படுறீங்க ? நான் என்ன தப்பு செஞ்சேன்? அக்காவுக்கு உதவி செய்யறதுல எனக்கு சந்தோஷம் தான்”
” எனக்கு யார் மேலயும் எந்த விதமான கோபமும் இல்ல ரஷி” சொல்லிவிட்டு தட்டோடு மாடிப் படிகளில் ஏறி தன்னறைக்கு சென்றான் தட்டை தேனுகாவிடம் நீட்டினான்.
“சாப்பிட்டுட்டு இங்கயே கை கழுவிரு”
“இல்லங்க ப்ளேட்டையும் கீழே எடுத்துட்டுப் போய் நானே கழுவி வச்சுருறேன் நோ ப்ராப்ளம்”
“சரி கழுவி வச்சுரு அப்ப இனிமே நீ கீழயே போய் சாப்பிட்டுக்க”
” ஏன் ஜூனைத் ?உங்களுக்கு வேலை வைக்கிறேனா?”
“என்னை சார்ந்தவங்களுக்கோ இல்ல என்னை சேர்ந்தவங்களுக்கோ தான என்னால உதவி செய்ய முடியும் ஹூ ஆர் யூ?”….
“கரக்ட் தான் ஜூனைத்”
“ம்ம்ம்ம் சாப்பிடு”
நான் கோப முகம் காட்டினாலாவது என் மேல இருக்குற அன்பை நீ புரிஞ்சுக்கிருவன்னு நினைச்சுத் தான் இந்த மாதிரியெல்லாம் செஞ்சு உன்னை ஹர்ட் பண்றேன். நீ ஹர்ட் ஆகுறன்னு எனக்கும் தெரியுது .அதை நீயே வாய் விட்டு சொன்னாத் தான் என்ன? ஏதேதோ காரணங்கள் சொல்லி என்னை அவாய்ட் பண்ணத் தான் பாக்குறியே தவிர கொஞ்சம் கூட உன் கருத்துல இருந்து மாற மாட்டியா தேனுகா? பாப்போம்.. இந்த ஹைட் அண்ட்..சீக் கேம் இன்னும் எத்தன நாளக்கி தான் தொடரப் போகுதுன்னு
நினைத்தபடி அறையை விட்டு வெளியேறி விட்டான் ஜூனைத்…..
காலேஜ்….அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மண்ட் அருகே இருந்த அந்த பெரிய வேப்ப மரத்தினடியில் அமர்ந்திருந்தனர் விக்ரமும், அஷோக்கும்.
“மச்சி நாளைக்குத் தான ரஷிதா பேகமோட பர்த் டே?”
“ஆமா”….
“எப்டி டா அவ கிட்ட உன்னோட லவ்வை சொல்லப் போற?”
“அதுக்கெல்லாம் செம்மயா ஒரு ப்ளான் போட்டு வச்சிருக்கேன் டா , நாளைக்கு மார்னிங் அவளுக்கு விஷ் பண்ணிட்டு அப்படியே ஈவ்னிங் நம்ம ஐஸ் க்ரீம் பார்லர்ல ட்ரீட் குடுன்னு சொல்லி கூட்டிட்டுப் போகணும் . அங்க ஈவென்ட் மேனேஜ்மெண்ட் ஆட்கள வச்சு கேக் கட்டிங் ப்ளான் பண்ணிருக்கேன்”
“ஈவன்ட் மேனேஜ்மெண்ட்டா? என்னடா சொல்ற? அப்ப பிரம்மாண்டமான பர்த் டே செலிப்ரேஷனா இருக்கும் போலயே?”
“ஆமாடா, அப்ப தான் அவ மனச என்னால கேட்ச் பண்ண முடியும்”
“ம்ம்ம் ஜமாய்ய்ய் ஜமாய்ய்ய்”
“எப்படா நாளைய பொழுது விடியும்னு இருக்கு எனக்கு”
“பொறுடா……உன் அவசரத்துக்கு வானம் விடியுமா என்ன ? ஏன்டா, உன்னோட இந்த ப்ளான் ரஷிதா ஃப்ரண்ட் ப்ரியாவுக்கு தெரியுமா?”
“தெரியாதுடா . அவ கொஞ்சம் ரூல்ஸ் பேசற டைப் மாதிரி தெரியுது, அது மட்டுமில்லாம எனக்கு அவட்ட சொல்லணும்னு தோணவும் இல்லடா. அவட்ட சொன்னேன்னு வையேன், என் மேல இன்ட்ரஸ்ட்டடா இருக்குற ரஷி மனசை மாத்த ட்ரை பண்ணுவாளோனு ஒரு பயம் எனக்கு”
“விக்ரம்ம்ம்ம்ம்ம்ம்ம்”…… முதுகுக்குப் பின்னால் ஒரு கோபக்குரல் கேட்க சட்டென திரும்பினர் விக்ரமும் அஷோக்கும். அனல் கக்கும் விழிகளால் அவனை முறைத்தபடி ரஷிதா.
“விக்ரம் , என்ன பேசிட்டு இருக்கீங்க? நீங்க பேசினது எல்லாமே நான் கேட்டுட்டேன் , அப்ப இத்தன நாள் இந்த எண்ணத்தோட தான் என் கூட பழகிருக்கீங்க இல்லயா?”
“அய்யயோ….ரஷி அப்டி எல்லாம் இல்ல நான் நான்”….
” வாய மூடுங்க” சற்று நெருங்கி வந்தவள், அவனை நேராய் பார்த்தாள். “என்ன சொன்னீங்க? உங்க மேல நான் இன்ட்ரஸ்ட்டடா இருக்கேனா? அப்படினு யார் சொன்னாங்க?”
……………
“உங்களத் தான் கேக்குறேன்”
“ரஷி கோவப்படாதம்மா…..நான்”
“இங்க பாருங்க என் மனசுக்குள்ள நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. உங்கள இது நாள் வரைக்கும் நல்ல ஃப்ரண்டா தான் பாத்தேன், இன்னைல இருந்து உங்க முகத்துல கூட முழிக்க மாட்டேன்”
” ரஷி….ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேளு. உன் மனசுல உள்ளத தைரியமா சொல்லு. எதுக்காகவும் பயப்படாத .. என்னைப் பிடிக்காம, என் மேல ஒரு க்ரஷ் இல்லாம தான் என்னை நீ ஸ்பெஷல் பர்சன்னு சொன்னியா? அண்ணானு கூப்டாம இருந்தியா? எங்க அம்மா உங்க கிட்ட பேசாதன்னு சொன்னாலும் நான் பேசிக்கிட்டே தான் இருப்பேன்னு சொன்னியா? பதில் சொல்லு”…
“அல்லாஹூ…..தூய்மையான நட்போட நான் சொன்ன எல்லாத்தயுமே நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க”
“சும்மா சப்ப கட்டு கட்டாத . நீ உங்க வீட்டு ஆட்களுக்கு பயந்து தான் ஒத்துக்க மாட்டேங்குற”
“நான் உங்கள அண்ணானு சொல்லாதது தான உங்களுக்கு தப்பா போயிருச்சு ?இப்ப சொல்றேன்… அண்ணா.. அண்ணா… அண்ணா… போதுமா? மனசுல லவ் இருக்கிற எந்த பொண்ணும் தான் விரும்புற பையன பாத்து இப்படி சொல்ல மாட்டா.. நான் உங்கள லவ் பண்ணலனு இப்ப உங்களுக்கு புரியுதாண்ணா? இனி என் வழியில வராதீங்கண்ணா”…..
– தொடரும்…
No comments yet.