61…
” ரஷி…. என்ன சைரன் சத்தம் மாதிரி கேக்குது? யாருன்னு தெரியலயே”
“வா நன்னி போய் பாப்போம்” இருவரும் நஸ்ரினை அலட்சியம் செய்து விட்டு வாசலை நோக்கி விரைந்தனர். நேராய் உள்ளே வந்த ரஹ்மான், சுல்தானா பாட்டியை பார்த்ததும்.
“பாட்டி வணக்கம் நான்”
“சப் இன்ஸ்பெக்டர் தானே? தேனுகா கேசை நீங்க தான விசாரிக்கிறீங்க? வாங்க சார் , வாங்க உக்காருங்க . அஞ்சு நாளைக்கு முன்னால ஹாஸ்பிட்டல்ல வச்சுத் தான் உங்கள பாத்தேனே?”
“நன்னி, அக்கா வந்துட்டாங்க” வாசலுக்கு ஓடினாள் ரஷிதா. ஜூனைத்தின் கார் வந்து போர்டிகோவில் நிற்க , பின் கதவைத் திறந்து வைத்து தேனுகா இறங்குவதற்கு உதவி செய்தா.ள்
“அக்கா…..வெல்கம் பேக்க்”…..
கையில் பையை எடுத்துக்கொண்டு இன்னொரு பக்க கதவைத் திறந்து கொண்டு ஆயிஷா இறங்கினார்.
“ரஷி…. என்ன போலீஸ் ஜீப் வந்துருக்கு ? யாரு வந்திருக்காங்க?”
“அக்கா கேசை விசாரிக்கிற இன்ஸ்பெக்டராம் மாமு .. உள்ள நன்னி கூட பேசிக்கிட்டு இருக்காங்க”
“ஓ அவரா? சரி நான் போய் அவரு கிட்ட பேசிட்டு இருக்கேன், நீங்க அவள கூட்டிட்டு வாங்க” வேகமாக உள்ளே சென்றான் ஜூனைத்.
“ஹலோ சார்”
“ஹலோ ஜூனைத்”
“உக்காருங்க சார் , இன்னைக்குத் தான் தேனுகாவை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வரணும். அதான் ஹாஸ்பிட்டல் போயிருந்தேன். ராதிம்மா… சாருக்கு ஏதாவது குடிக்க கொண்டு வாங்க. என்ன சார் சாப்பிடறீங்க? காஃபி ஆர் டீ இல்லனா கூல் ட்ரிங்க்?”
” நோ தாங்க்ஸ்…..ஒரு முக்கியமான விஷயத்த உங்க கிட்ட சொல்லிட்டு போகத் தான் வந்தேன் , அந்த மாடசாமியை அரஸ்ட் பண்ணியாச்சு”
“சூப்பர்ர்ர்ர்ர். ரொம்ப தாங்க்ஸ் சார்.. இவ்ளோ சீக்கிரம் நீங்க அவனை அரஸ்ட் பண்ணுவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல. யூ ஹாவ் டன் எ க்ரேட் ஜாப் சார்”
“ஆனா அவன் நான் இதை செய்யவே இல்லனு ஊனி அடிச்சு சொல்றான். பொலிட்டிக்கல் லெவல்ல நிறைய பேர தெரிஞ்சு வச்சுருக்கான்
அதனால ஏ.சி. சார் பாத்து டீல் பண்ண சொல்லிருக்காரு.. இல்லனா அடிக்கிற அடியில இந்நேரம் அவன் எல்லா உண்மைகளையும் கக்கிருப்பான்”
“பாத்து வா தேனு….மெதுவா”
“ஆயிஷாம்மா எனக்கு ஒண்ணும் இல்ல , முன்ன விட இப்ப ரொம்பவே பெட்டராவே பீல் பண்றேன்:….
“வா வா தேனு . சார் அவ தான் தேனுகா , எங்க ஜூனைத் மனைவி ”
“ஹலோ மேடம் ஹவ் ஆர் யூ?”
“ஐ அம் ஃபைன் நீங்க எப்படி இருக்கீங்க சார்?”
“என்ன மேம் , நீங்க தான் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி ஒரு மேஜர் ஆப்ரேஷனை பாத்துட்டு வந்திருக்கீங்க அதனால நான் உங்கள ஹவ் ஆர் யூனு கேக்கலாம் தப்பில்ல. ஆனா நீங்க ஏன் என்னை கேக்குறீங்க?”
” நோ சார் அது அப்படி இல்ல, நம்மள யாராவது நல்லா இருக்காங்களான்னு கேட்டா பதிலுக்கு நம்ம கேப்போமே இது அது மாதிரி ”
” அக்கா ஏன் நிக்குறீங்க? உக்காருங்க உக்காந்து பேசுங்க”
“இல்ல ரஷி அவ ரெஸ்ட் எடுக்கட்டும்” ஆயிஷா சொல்ல சரி தொந்தரவு செய்ய வேணாமென்று நினைத்தார் ரஹ்மான்.
“நான் உங்கள பத்தி டிபார்ட்மெண்ட்ல நிறைய கேள்விப்பட்டு இருக்கேன், நீங்க ரொம்ப நேர்மையான லாயர்னு நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கேன். உங்கள மீட் பண்ணினதுல ரொம்ப சந்தோஷம் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க”
“தாங்க் யூ சார்….. கேஸ்?:…
“அதப்பத்தி நான் உங்க ஹஸ்பெண்ட் கிட்ட பேசிக்கிறேன் நீங்க போங்க”
“ஓகே சார்” தலையாட்டிய தேனுகாவை தன்னறைக்கு அழைத்துச் சென்றார் ஆயிஷாம்மா. ரஷிதாவும் கூடவே ஓடிப் போய் விட்டாள்.
“சரி ஜூனைத் நான் கிளம்பறேன்”
“ஓகே சார், அவனை சீக்கிரம் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அப்பத் தான் எங்க எல்லாருக்கும் நிம்மதி”
” கண்டிப்பா… நான் போயிட்டு வர்றேன் , பாட்டி வரேன்” ரஹ்மான் வெளியேற, ஜூனைத்தும் அவனை வழியனுப்ப வாசல் வரை சென்றான். அப்போது தான் உள்ளே வந்த தாத்தா ரஹ்மானைக் கண்டதும் புருவம் உயர்த்தினார்.
“ராதா, மாடசாமிய விசாரிச்சு அரஸ்ட் பண்ணிட்டாராம் அதை சொல்லிட்டுப் போக வந்தாரு”
“ஓ….அப்படியா ? ரொம்ப நன்றி சார். உங்கள மாதிரியே எல்லா போலீசும் இருந்துட்டா நாட்டுல லா அண்ட் ஆர்டர் ப்ராப்ளமே இருக்காது. அன்னைக்கே கேக்கணும்னு நினைச்சேன், உங்க முகம் எனக்கு ரொம்ப பரிச்சயமானதா இருக்கு ஆனா…. எப்படினு தான் புரியல கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க சார், உங்க அத்தா பேரு என்ன ? உங்க சொந்த ஊரு?”
“இதுல தப்பா நினைக்க ஒண்ணுமே இல்லங்க… எனக்குமே உங்கள பாத்தா மனசுக்கு நெருக்கமான ஆள் மாதிரி தான் தோணுது. என் அத்தா பேரு அஹமது, திருநெல்வேலி பேட்ட தான் என் சொந்த ஊரு. உங்க பேரு என்னங்க?”
“டேய்ய்ய்ய் ஜாகீர் பேரன் ரஹ்மானா ? நீ நான் தான்டா இப்ராஹிம், உங்க ராதாவோட ஃப்ரண்டு என்னைப் பத்தி உன் கிட்ட ஏதாவது சொல்லிருக்கானா அவன்?”
” ரா….ராதா”…. சந்தோஷத்தில் கூவி பாய்ந்து அவரைக் கட்டிக்கொண்டான் சப் இன்ஸ்பெக்டர் ரஹ்மான் .”எங்க ராதாவும் அத்தாவும் உங்களப் பத்தி சொல்லாத நாளே இல்ல. பாரீஸ் பக்கம் தான் வீடு பேரை சொல்லி விசாரிச்சு பாருன்னு பல தடவை சொல்லிருக்காங்க”
“சுல்தானா சுல்தானா, இங்க வா” தாத்தா அலறுவதைக் கண்டு வேகமாக வாசலுக்கு வந்த பாட்டி, ரஹ்மானை அணைத்தபடி அவர் நின்றிருந்ததைக் கண்டு குழம்பினார்.
“சுல்தானா , இது நம்ம ஜாகீர் பேரன் .. அதான் நம்ம அஹமதோட மகன் ரஹ்மான், ரஹ்மான் ஷெரிஃப் “
“தம்பீஈஈஈ.. நீயா? எப்படிப்பா இருக்க?” வாஞ்சையுடன் அவன் தலையை
வருடி விட்டார்.
” ஜூனைத் , இவன் நமக்கு ரொம்ப முக்கியமான ஆளு… நம்ம குடும்பத்தில ஒருத்தன் . உனக்கு ஒரு அண்ணனோ இல்ல தம்பியோ இருந்திருந்தா அவனுக்கு இந்த வீட்ல எவ்வளவு உரிமை இருக்குமோ அதே உரிமை இவனுக்கும் இருக்கு. நான் சென்னைக்கு வர்றதுக்கு முன்னால திருநெல்வேலில இருந்தப்போ, பிசினஸ்ல நொடிச்சுப் போயி ரொம்ப கஷ்ட ஜீவனம்.. மூணு பிள்ளைகளோட ரொம்ப சிரமப்பட்டேன் . என் நண்பன் ஜாகீர் தான் அப்ப எனக்கு உதவினான். அவனோட பையன் தான் அஹமது. அஹமதும் உன் அத்தா ரஃபீக் ரொம்ப தோஸ்த்துங்க . ரஃபீக் கு கல்யாணம் முடிஞ்ச கையோட சென்னை பக்கம் வந்துட்டேன் . ரொம்ப நாள் கடிதப் போக்குவரத்து , அப்புறம் ஃபோன்ல பேச்சுனு ஓடுச்சு .. அஹமது ஒரு தடவை நம்ம வீட்டுக்குலாம் வந்திருக்கான். அப்ப தான் சொன்னான் எனக்கு ஆம்பள பிள்ள பிறந்துருக்கு அத்தானு… அப்ப பாத்தது தான், அடுத்தடுத்து லெட்டர் எழுதுறதும் குறைஞ்சு போச்சு. நெம்பரும் கனக்ட் ஆகல . அப்படியே அந்த உறவு விட்டுப் போயிருமோனு பயந்தேன்.. பரவாயில்ல… இப்ப நீ என் கண்ணுல பட்டுட்ட”
“என்ன ராதா, நாங்க மட்டும் தான் உங்களுக்கு உதவி செஞ்ச மாதிரி சொல்றீங்க? நாங்க பண்ணினத விட நீங்க தான் நிறைய”…
“வாசல்ல நின்னு பேசினது போதும் , முதல்ல உள்ள வா… இன்னக்கி நம்ம வீட்டுல தான் நீ சாப்பிட்டு போற , சரியா? ஜாகீர் எப்படி இருக்கான்?” பேசிக் கொண்டே அவனை உள்ளே அழைத்துப் போனார் தாத்தா. தன் நண்பருடன் ஃபோனில் அளவளாவி , ரஹ்மானை திகட்ட திகட்ட அன்பு மழையில் நனைய வைத்துத் தான் அனுப்பினார் தாத்தா.
அன்று மாலை
ஆயிஷாவின் அறை
தேனுகாவை ரஷிதாவிடம் ஒப்படைத்து விட்டு குளிக்க சென்றுவிட்டார் ஆயிஷா.
“அக்கா ஏன் உக்காந்துருக்கீங்க? படுத்துக்கங்க”
“இல்ல ரஷி கொஞ்ச நேரம் போகட்டும் , அப்புறமா படுத்துக்குறேன்”
“பாக்கவே ரொம்ப டயர்டா இருக்கீங்களே, ஜூஸ் போட்டுட்டு வர்றேன் குடிக்கிறீங்களா கா? கொஞ்சம் தெம்பா இருக்குமில்ல?”
“வேணாம் டி, இப்பத் தான் பாட்டி ஒரு பெரிய டம்ளர் நிறைய தந்தாங்க ”
“தேனு….. இப்ப எப்படி இருக்கு? கொஞ்சம் பரவால்லயா? நீ மதியம் வந்தப்பவே உன்னை வந்து பாத்தேன், நல்லா தூங்கிட்டு இருந்த… அதான் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு பேசாம போயிட்டேன்”அறை வாசலில் நின்றபடி உள்ளே எட்டிப் பார்த்தார் தாத்தா.
” ஏன் தாத்தா அங்கயே நிக்குறீங்க? உள்ள வாங்க தாத்தா” உள்ளே நுழைந்தவர் ரஷிதாவிடம் திரும்பி,
“ரஷி, தேனுவ மேல கூட்டிட்டுப் போய் ஜூனைத் ரூம்ல விட்டுட்டு வந்துரு. தேனு, இனிமே நீ மேல் ரூம்ல ஜூனைத் கூட இருந்துக்க மா”…
“தாத்தா ஏன் ? நான் ரஷி கூட இருக்கேன் அது தான் எனக்கு கம்ஃபர்ட்டபிளா இருக்கும்”
“உன்னோட கேஸ் முடியுற வரை தான நீ இங்க இருக்கப் போற? எந்த ரூம்ல இருந்தா என்ன”….
“தாத்தா….. அது”
“இந்த ஒரு விசயத்துலயாவது என் பேச்ச கேளுமா” இப்ராஹிம் தாத்தா சொன்னது தேனுகாவை சுட்டுவிட மௌனம் காத்தாள்.
“என்னமா அமைதி ஆகிட்ட ? நான் சொல்றத கேப்பியா?”
………….
“அதிக நாள்லாம் இல்லமா, அந்த மாடசாமிய அரஸ்ட் பண்ணியாச்சு. கேஸ் கோர்ட்டுக்கு வந்து , அவனுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கிற வரைக்கும் நீ இங்க இருந்தா போதும். அதுக்கப்புறம் நீ விரும்புற மாதிரி இங்க இருந்து
போயிரு உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன் . எங்களுக்கு நீ எந்த வித பயமும் இல்லாம நிம்மதியா இருக்கணும் அதுக்காகத் தான் சொல்றேன் சரியா?”
“சரிங்க தாத்தா”…..
“போ , அங்க போய் படுத்துக்க, ரஷி கூட்டிட்டுப் போ” என்றவர் அறையை விட்டு வெளியேறினார்…
– தொடரும்
No comments yet.